Daily Archives: ஜூன் 5th, 2010

இயற்கை மருத்துவம்

உலகில் பல்வேறு வகையான மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என ஒவ்வொரு வரும் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மருத்துவமுறையை நாடுகின்றனர். சமீபகாலமாக ‘இயற்கை மருத்துவம்’ என்னும் புதிய மருத்துவமுறை, உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.
இயற்கை மருத்துவம் என்றால்…? தாவரங்கள் ஊசி போடுமா…? மரங்கள் மருந்து தடவுமா…? என்றெல்லாம் கேலியாகக் கேட்கலாம். ஆனால் இயற்கை மருத்துவத்தின் தாத்பர்யம் அதுவல்ல.
மதின் ஆரோக்கியமாக வாழவும், அவனது உடலில் ஏற்படும் பிரச்னை களைச்சரி செய்யவும் இயற்கையிலேயே எண்ணற்றத் தீர்வுகள் இருக்கின்றன.
மருத்துவ மாத்திரைகளை நம்பி வாழும் நவநாகரிக மனிதனுக்கு வேண்டுமானால் இயற்கை மருத்துவம் என்பதும், அதன் தாத்பர்யங்களும் புதிதாக, புதிராக இருக்கலாம். ஆனால் ஆதி மனிதனுக்கு இது ஒன்றும் புதிதான விஷயமல்ல.
மனிதன் படைக்கப்பட்ட புதிதில் இயற்கையோடு கை கோத்துக்கொண்டுதான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். அப்போது அவனது வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆதிமனிதனின் ஆரோக்கியத்திலும் எந்தக் குறையும் இல்லை. அதில் குறைபாடு ஏற்பட்டாலும் இயற்கையில் இருந்தே அவனது பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்தது.
நாகரிகமும் விஞ்ஞானமும் வளர வளர மனிதன் இயற்கையில் இருந்து விலக ஆரம்பித்தான். பிரச்னைகளுக்கான தீர்வுகளை மனிதன், தனது லதாரமான இயற்கையில் தேடாமல், செயற்கையாக உருவாக்க ஆரம்பித்தான். அதில் அவனுக்கு வெற்றியும் கிடைத்தது. அந்த வெற்றியின் காரணமாக இயற்கையே வெல்லமுடியும்’ என்கிற ஆசையும்,நம்பிக்கையும் அவனிடத்தில் உருவாகின. அதன் விளைவாகக் கண்டுபிடிப்புகள் பெருகின. இயந்திரங்கள் அதிகரித்தன. மனிதன், இயற்கையில் இருந்து முற்றிலுமாக அந்நியப்பட்டுப் போனாள்.
இயந்திரங்களின் பெருக்கத்தால் காற்று, நீர், அண்டவெளி, மண் போன்ற இயற்கையின் செல்வங்கள் அனைத்தும் மாசடைந்தன. அதன் விளைவாக, மனிதன், விலங்கு, பறவை, தாவரங்கள் மற்றுமுள்ள உயிரினங்கள் அனைத்தும் தத்தம் இயல்புக்கு மாறான தோற்றங்கொண்டு, நோய்களைப் பெற்றுக் கொண்டன.
தமிழ் மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும்போது, மொத்தமுள்ள நோய்களின் எண்ணிக்கை 4448 என்று தெரிய வருகிறது. அக்கணக்கு சுமார் ஆயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. இப்போது இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும். ஆனால், இன்றைய மருத்துவர்களை நோய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால், விழிக்கின்றனர். தினந்தோறும் புத்தம்புதிய நோய்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகம் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், பல நோய்களுக்கு மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தான் சோகம்.
வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டிய உயிரினம், நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கிறது. எந்த மருந்தாவது, எந்த நோயைத் தீர்த்து வைக்காதா? என்ற ஏக்கம் அனைத்து உயிரினங்களின் முகத்திலும் தெரிகிறது.
விலங்குகளையும் பறவைகளையும் தாவரங்களையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் மனித இனத்தையாவது காப்பாற்றியாக வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றது, மருத்துவம். அதனால்தான் பல்வேறு மருத்துவமுறைகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு வாகளைக் கையாண்டு மனிதன் தன்னைத் தாக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் கண்டுபிடித்தான். அத்தகைய வழிகள் தான் சித்தா, ஆங்கிலம், ஆயுர்வேதம் எனப் பிரிந்தன.
இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த பழங்கால மனிதன், ஆராக்கியம் பாதிக்கப்படாத வகையில் தனது வாழக்கை முறையை அமைத்துக் கொண்டான். அதையும் மீறிஉடல் நிலை பாதிக்கப்பட்டபோது, இயற்கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டே அவற்றைச் சரிசெய்து கொண்டான். அவனது வாழ்க்கை முறையையும், தனக்குத்தானே அவன் செய்து கொண்ட சிகிச்சைகளையும் ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தித்தான் இயற்கை மருத்துவம் உருவாக்கப்பட்டது.
இயற்கையிலிருந்து உருவான என்பதால்தான் மற்ற மருத்துவமுறைகளைவி விட, இது மேலானதாகவும், சிறந்ததாகவும் கருதப்படுகிறது. பரம்பரை நோய், ஓட்டு நோய், தொற்று நோய், உணவு நோய், உடை நோய், உறவு நோய், உவகை நோய் போன்ற எல்லாவிதமான நோய்களில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக்¢கொள்ளும் வழிமுறைகளைச் சொல்வதுதான் இயற்கை மருத்துவம்.
தற்போது பூமியில் நிலவிவரும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் உருவாகிற நோய்ப்பெருக்கம் மனித இனத்துக்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது. தன்னையும் தன்னினத்துச் சந்ததிகளையும் பாதுகாக்கும் வல்லமையை இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கிறது. இயற்கை மருத்துவம் அந்த வல்லமையைத்தான் உலகுக்குப் புரிய வைக்கிறது.
உண்மையில் இயற்கை மருத்துவத்தின் அடிப்படை என்ன?
மனிதன் உயிர் வாழவதற்கு வேண்டிய முதன்மை உணவாக சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவை உள்ளன. இவை இருக்கும் வரை, மனித உடல் இயங்குவரை பட்டினி என்பதே இருக்காது-. மனிதன் உண்ணும் உணவெல்லாம், மனித உடலுக்குத் தேவைப்படாதவை. சூரிய சக்தியே உலகிலுள்ள உயிர்கள் அனைத்துக்கும் தேவையான முதன்மை உணவு. அதுவே, ஆற்றலின் இருப்பிடம்.
இம்மண்ணில் பட்டினியால் இறப்போரைவிட, முறையட்ட உணவுப்பழக்கதால் இறப்போரின் எண்ணிக்கையே அதிகம். உணவுப்பழக்கத்தால், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் உண்டாகும் நச்சுகளை வெளியேற்றத் தெரியாமலும் பலர் இறக்கிறார்கள்.
உணவுப்பொருள்களினால் உடம்பில் ஏற்படும் நச்சுத்தன்மையை வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்தி, உடல் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாக்கும் முறையே காய சுத்தி அல்லது அக சுத்தி எனப்படுகிறது. காய சுத்தி முறையைக் கற்றவர்களுக்குப் பட்டினி என்பதே கிடையாது.
மேலே சொல்லப்பட்டவை அனைத்துமே இயற்கை மருத்துவத்தின் கூறுகளே. காயசுத்தி முறையில் உடலைச் சுத்தம் செய்து, சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றை உண்டு வாழந்து ஆரோக்கியத்தைப் பராமரிப்பதே இயற்கை மருத்துவத்தின் மையமான அம்சம்.
பெருவாழ்வு ரகசியம்
நியாயமாகப் பார்த்தால் மனிதன் 300 ஆண்டுகள் வாழ வேண்டும். பழங்கால மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதற்குரிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சமைக்காத இயற்கை உணவை உண்டுவாழும் முயல் இனத்தில், முயல்குட்டி, பிறந்த 3 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. முயலின் வாழ்நாள் 60 மாதங்கள்.
ஆட்டுக்குட்டி, 6 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. ஆட்டின் வாழ்நாள் 120 மாதங்கள். பசு மாட்டின் கன்று, ஓர் ஆண்டில் பருவத்துக்கு வந்து கன்று போடுகிறது. பசுவின் வாழ்நாள் 240 மாதங்கள்.
மனித இனம் 15 ஆண்டுகளில் பருவம் எய்தி குழந்தை பெறத் தயாராவதால், மனித இனத்தின் வாழ்நாள் 3600 மாதங்களாக இருக்க வேண்டும்.
முயல்: 20*3=60/12=5 ஆண்டுகள்
ஆடு: 20*6=120/12=10 ஆண்டுகள்
பசு: 20*12=240/12=20 ஆண்டுகள்
மனிதன்: 20*180=3600/12=300 ஆண்டுகள்
மனிதனும் விலங்கும் பருவம் எய்தும் காலத்தைக் கொண்டு ஆயுள்காலம் கணிக்கப்படுகிறது. இதுவே இயற்கை நியதியாகக் கருதப்படுகிறது.
உணவாகக் கருதப்படும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றின் இயல்புநிலை மாறாமல், ஆவியில் வேகவைத்து உண்டால் நீண்ட நாள் வாழலாம். ஆனால், நாம் அப்படிச் செய்வதில்லை. முறையற்ற உணவுப் பழக்கத்தையே நாம் பின்பற்றுகிறோம்.
நமது உணவில் பெரும்பான்மையாக இடம்பெறும் தாளித்த, வறுத்த உணவுகள் நமது வாழ்நாளைக் குறைக்கின்றன. அதோடு அசுத்தமான காற்றும் அசுத்தமான குடிநீரும் வாழ்நாளைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
மேலும் புகை, மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு 60 வயதுக்கும் குறைவாகவே வாழ்நாள் அமைகிறது. இவற்றையெல்லாம் மீறி நாம் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழவேண்டும்.

3ஜி – தொலைதொடர்பில் இன்னொரு மைல்கல்

அதோ! இதோ! என்று இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருந்த 3ஜி மொபைல் சேவை ஏலம் முடிந்துவிட்டது. 34 நாட்களில் 183 சுற்றுகளில் இந்த ஏலம் நடத்தப்பட்டது. அரசுக்கு ஏலத்தொகையாக, எதிர்பார்த்ததைக் காட்டிலும் இரண்டு மடங்காக, ரூ.67,710 கோடி கிடைக்க உள்ளது.
அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் ஏர்செல் தலா 13 மண்டலங்களுக்கு உரிமை பெற்றுள்ளன. அடுத்தபடியாக ஐடியா 11, டாட்டா மற்றும் வோடபோன் தலா 9 மண்டலங்களிலும், எஸ் டெல் 3 மண்டலங்களிலும் இயங்க உரிமை பெற்றுள்ளன. இந்தியா முழுவதும் இயங்க எந்த ஒரு நிறுவனமும் ஏலம் எடுக்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் பார்தி ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இந்த உரிமையைப் பெற்றுள்ளன. உரிமை பெற்றவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வரும் செப்டம்பரில் ஒதுக்கப்பட்டு, இந்த ஆண்டு தீபாவளிப் பரிசாக மக்களுக்கு 3ஜி பயன்பாடு கிடைக்கலாம்.
ஏற்கனவே பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள், 2008 ஆம் ஆண்டு முதல் 3ஜி சேவையினை வழங்கி வருகின்றன.
ஒவ்வொரு மண்டலத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பரேட்டர்கள் இயங்கப் போவதால், இந்த மொபைல் சேவைப் பிரிவிலும், வாடிக்கையாளர் களே ராஜாவாக இருக்கப் போகின்றனர்.
அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் 3ஜி சேவை கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவெங்கும் பரவும். முதலில் மும்பை மற்றும் டில்லி போன்ற வர்த்தக மெட்ரோ நகரங்களில் இது நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெற்று இயங்கும். அந்த நேரத்தில் மற்ற நகரங்களில் இந்த சேவை வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற வசதிகளுடன் கிடைக்கும்.
பின்னர் போகப் போக மல்ட்டிமீடியா சங்கதிகளான, ஆடியோ, வீடியோ, சினிமா, மொபைல் வழி பிராட்பேண்ட், டிஜிட்டல் கல்வி, மருத்துவம், வேளாண்மை என அனைத்து பிரிவுகளிலும் இந்த சேவை மக்களுக்குப் பயன்படும் விதத்திலும், பொழுது போக்கும் வகையிலும் கிடைக்க இருக்கும்

டைட்டானிக் பயணத்தை முழுமையாக்கும் “டைட்டானிக் 2′

டைட்டானிக் கப்பல் மூழ்கி, நூறு ஆண்டுகள், நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில், டைட்டானிக் நினைவு சுற்றுலா கப்பலை இயக்க, பிரிட்டன் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இங்கிலாந்திலிருந்து, 1912ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, பயணத்தை துவங்கிய, டைட்டானிக் சுற்றுலா கப்பல், ஏப்ரல் 15ம் தேதி, அட்லாண்டிக் சமுத்திரத்தில், பயணித்தபோது, பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த பயங்கர விபத்தில், சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் என, மொத்தம் 2,223 பேரில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,578 பேர், கடலில் மூழ்கி பலியாகினர். நடுக்கடலில் தத்தளித்த மீதமிருந்தோர், கடும் முயற்சிக்கு பின் மீட்கப்பட்டனர். டைட்டானிக் சுற்றுலா கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம், உலக வரலாற்றில், கருப்பு தினமாக கருதப்படுகிறது. டைட்டானிக் கப்பல் மூழ்கி, 2012ம் ஆண்டுடன், நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்நினைவு தினத்தையொட்டி, டைட்டானிக் பயணம் செய்த, அதே பாதையில், டைட்டானிக் நினைவு சுற்றுலா கப்பலை, (டைட்டானிக் 2) இயக்க, பிரிட்டனை சேர்ந்த, பிரபல மைல்மார்கன் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இக்கப்பல், 2012ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, சவுத்ஆம்டன் நகரில், தனது பயணத்தை துவக்கவுள்ளது.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினமான, ஏப்ரல் 15ம் தேதி அன்று, அதே இடத்தில், நினைவு சுற்றுலா கப்பல் நிலை நிறுத்தப் படுகிறது. இரவு 2.20 மணிக்கு, நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், பயணத்தை தொடரும் கப்பல், ஏப்ரல் 20ம் தேதி, நியூயார்க் நகரை சென்றடையும். டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த போது, உயிரிழந்தவர்களின், குடும்ப உறுப்பினர்கள் பலர், விபத்து குறித்தும், இறந்தவர்களின் அனுபவங்கள் குறித்தும், விளக்குவர். கப்பலில் பயணம் செய்வதற்கான, முன்பதிவு துவங்கியுள்ளது.

வாஷிங் மெஷினை தொங்க விடலாம்!

இல்லத்தரசிகளின் வேலைப்பளுவைக் குறைத்த பல கருவிகளில் வாஷிங்மெஷினும் ஒன்று. துணியை துவைத்து உலர்த்தி தரும் வாஷிங்மெஷின்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இடநெருக்கடி அதிகரித்து வரும் இந்த காலத்தில் இதற்கு மாற்று வழியாக சுவரில் தொங்கப் போட்டுக் கொள்ளும் வகையில் வாஷிங்மெஷின் வந்துள்ளது. இதற்குகூட இடமில்லையென்றால் குளியலறைத் தொட்டியில் ழுழ்கவைத்துவிடலாம் அல்லது தாழ்வான பள்ளம் தோண்டி வைத்துக் கொள்ளலாம்.

ஷைன் என்ற நிறுவனம் இத்தகைய நவீன வாஷிங் மஷினை வடிவமைத்துள்ளது.

5999 முறை தோற்ற எடிசன்!

பள்ளிக்கு சென்று பாடம் படிக்காத விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், சுயமாக படித்து முன்னுக்கு வந்தார். மிக அதிக எண்ணிக்கையில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர் என்ற பெருமை எடிசனுக்கு மட்டுமே உண்டு. மின் விளக்குக்கு எந்த உலோகக் கலவை இழை உகந்ததாக இருக்கும் என்பதை கண்டறிய கிட்டத்தட்ட ஆறாயிரம் முறை வெவ்வேறு உலோக இழைகளைக் கொண்டு போராடினார்.

இதுகுறித்து எடிசன் கூறும்போது, “முதல் சோதனையே எனக்கு வெற்றிதான். ஏனெனில் அதுதான் இரண்டாவது சோதனையை செய்யத் தூண்டியது. விளக்குக்கு சரியான மின்னிழையைக் கண்டுபிடிக்க எனக்கு ஒரு முயற்சிதான் தேவைப்பட்டது. ஆனால் அதற்கு எந்தெந்த உலோக இழைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்குத் தான் 5999 முறை தேவைப்பட்டது. மேலும் 5999 உலோக இழைகளை மின் விளக்குக்கு பயன்படுத்த முடியாது என்பதையும் கண்டுபிடித்துள்ளேன்” என்றார்.

ஒரு சமயம் ஒரு விருந்தினரின் வீட்டில் நடைபெற்ற தொடர் நிகழ்ச்சியைப் பார்க்கும்படியான கட்டாயம் ஏற்பட்டது. அது அவருடைய மனதைக் கவரவில்லை என்பதால் பெரிதும் சலிப்புற்றார் எடிசன். அவர் வெளியே புறப்பட முயற்சி செய்யும்போதெல்லாம் யாராவது ஒருவர் அவர் கையைப் பிடித்து பேசியபடி ஹாலுக்குள் அழைத்துச் சென்றபடி இருந்தனர். ஒருவழியாக கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி இறுதியில் கதவோரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

அப்போது மிகவும் உற்சாகமாக வந்த ஒருவர் எடிசனிடம், “நீங்கள் இங்கே வந்திருப்பது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுடன் இருப்பது எங்களுக்கு நீங்கள் அளித்த கவுரவம். அடுத்து நீங்கள் என்ன கண்டுபிடிக்கப் போகிறீர்கள்” என்றார்.

அதற்கு “இங்கிருந்து எப்படி வெளியேறுவது என்று கண்டுபிடிக்கவிருக்கிறேன்!”என்று சட்டென பதில் கூறினார் எடிசன்.

புகை ஆண்மைக்கு பகை!

புரதச்சத்து, வைட்டமின் `ஈ’ மற்றும் `பி காம்ப்ளக்ஸ்’ குறைவான உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

இதேபோல், அளவுக்கு அதிகமாக சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கும் ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு காரணம், சிகரெட்டில் உள்ள நிகோட்டின். இது உயிரணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, அவை ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறதாம்.

நீங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் புகை ஊதித்தள்ளுபவர் என்றால், இப்போதே குட்-பை சொல்லிவிடுங்கள் சிகரெட்டிற்கு!

மாரடைப்பு

மாரடைப்பு. மக்களையும், மருத்துவ உலகையும் இன்றைக்கு ஒரு சேரக கவலையில் ஆழ்த்தியிருக்கிற மிக முக்கியமான பிரச்சனை.
முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மாரடைப்பு வரும் என்கிற நிலை இருந்தது. ஆனால் சமீப காலமாக 35 வயது
இளைஞர்கள்கூட திடீரென மாரடைப்பால் இறந்து போகிறார்கள்.
பொருளாதார அளவில் முன்னேறிய நாடுகளில் இப்போதும் மாரடைப்பு என்பதுது முதியவர்களின் மருத்துவப் பிரச்சனையாகவே கருதப்படுகிறது.
ஆனால் நம் நாட்டில் இந்தப் பிரச்சனைக்னு இளைஞர்கள்தான் இன்றைக்கு அதிகம் இலக்காகிறார்கள். போட்டி நிறைந்த சூழல், மனஅழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய வேலை என இதன் பின்னணியில் பலவிதமான காரணிகள் இருக்கின்றன. காரணகளைப் பற்றி ஆராயும் முன்பு,மாரடைப்பு தொடர்பாக பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.இதயம் இயங்குவதற்குத் தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காததால் இதயத் தசைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மடிந்துபோகும் நிலைமை மாரடைப்பு என்கிறார்கள். இத்தகைய நிலைக்கு அடிப்படைக்காரணம். இதயத்துக்கு ரத்தத்தை அளிக்கும் இதயத் தமனிகள்
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அடைபடுகின்றன. அல்லது குறுகிவிடுகின்றன. இதய மருத்துவர்கள் இதை மயோகார்டியல்
இன்பார்க்ஷன் (Myocordial Infarction) என்கிறார்கள்.
மாரடைப்புக்கான காரணங்கள் அவற்றின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு முதல் நிலைக் காரணங்கள் (PRIMARY RISK FACTORS)
இரண்டாம் நிலைக் காரணங்கள் (SECONDARY RISK FACTORS). என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ரத்த மிகு அழுத்த நோய் (Hypertension) ரத்த மிகு கொலஸ்ட்ரால் நிலை (Hyper chole‡terol) அளவுக்கு அதிகமாகப் புகைப் பிடித்தல், நீரழிவுநோய் ஆகியவை மாரடைப்புக்கான முதல் நிலைக் காரணங்களாக இருக்கின்றன.
ஒரு குடும்பத்தில் தாயோ அல்லது தந்தையோ ஏற்கெனவே மாரடைப்புக்கு ஆளாகியிருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மற்ற
குடும்பத்தில் உள்ளவர்களைவிட மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் உடல் உழைப்பு இல்லாதவர்களும்,
போதுமான உடற்பயிற்சி இல்லாதவர்களும் மற்றவர்களைவிட இந்தப் பிரச்சனைக்கு உளிதில் இலக்காகிறார்கள். மன உளைச்சலால் (Stress) அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கும் மாரடைப்பு திடீரென ஏற்படக்கூடும். போதுமான அளவு ஓய்வு இல்லாமல் குறுகிய காலத்தில் வாழக்கையின் வசதிகளையும், வாய்ப்புகளையும் அடைய வேண்டும் என்ற ஆசையில் கடுமையாக உழைக்கும் ஏ வகை ஆளுமை உடையவர்கள் (A type personality) மற்றவர்களைவிட விரைவாக மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். உடல் பருமன (Obecity) உடையவர்கள் மது குடிப்பவர்கள் ஆகியோருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறது. மேலே சொன்னவை எல்லாம் இரண்டாம் நிலைக் காரணங்கள். நெஞ்சுப் பகுதியில் கடுமையான வலி ஏற்படுவதுதான்
மாரடைப்புக்கான முக்கியமான அறிகுறி. முதலில் மார்பின் அடிப்பகுதியை இறக்குவதபோல் கடுமையான வலி ஏற்படும். இவ்வாறு ஏற்படும்
வலி அதிகமாகி இடது கை பக்கமாகப் பரவக்கூடும். சில சமயங்களில் இந்த வலி கழுத்துப்பகுதி கீழ் தாடை வரை மேல் நோக்கி பரவக்கூடும்.
மாரடைப்பின் முன் அறிவிப்பாக கடுமையான மூச்சுத் திணறலும் இருக்கும்.
நாடித்துடிப்பில் (Pîl‡e) மோசமாக வீழ்ச்சி அடையும். மாரடைப்பின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தால் நோயாளி சில சமயங்களில்
தன்னுடைய சுய நினைவைக்கூட இழக்கக்கூடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வீட்டில் ஒருவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் உறவினர்கள் அல்லது அருகில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பார்ப்போம்.
முதலில் எந்த நிலையில், எந்தச் சிரமமும் இல்லாமல் எளிதாக மூச்சுவிட இயலுமோ அந்த நிலைக்கு பாதிக்கப்பட்டவரை மிகவும் கவனமாக மாற்றுங்கள்.
அவர் அணிந்திருக்கும் ஆடை, கழுத்து, நெஞ்சு, இடுப்பு போன்ற பகுதிகளில் மிகவும் இறுக்கமாக இருந்தால் தளர்த்துங்கள்.
அச்சத்தைத் தரும் வகையிலும், இடையூறு தரும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்களை சுற்றி தேவையில்லாமல் கூட்டம் கூடாதீர்கள்.
பாதிக்கப்பட்டவரைத் தேவையில்லாமல் நடக்கவிடாதீர்கள். இதனால் பாதிப்புதான் அதிகமாகும்.
பாதிக்கப்பட்டவர் சுய நினைவோடு இருந்தால் ஏற்கெனவே இந்தப் பிரச்சனைக்காக மருத்துவர் பரிந்துரை செய்திருந்த நைட்ரேட் (Nitrate) வகை
மருந்தை நாக்கின் கீழ் வைத்துச் சொல்லுங்கள்.
அந்த மருந்தாலும் நெஞ்சுவலி முழுமையாக நிற்கவில்லை என்றால், பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மிகவும்
பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள்.
தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்.
பாதிக்கப்பட்டவருக்கு நெஞ்சு வலி ஏற்படுவதற்கும், அவரை நல்ல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கும் இடைப்பட்ட நேரம் மிகவும்
முக்கியமானது. அதனால்தான் அந்த நேரத்தை பொன்னான நேரம் (Golden Hoîr‡) என்று சொல்கிறார்கள். அந்த காலக்கட்டத்தை உறவினர்கள்/ நண்பர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு விரைந்து செயல்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றால் உயிரிழப்பைத் தடுக்க/ தவிர்க்க முடியும்.
ஆனால் இந்தப் பொன்னான நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதில்நம்நாட்டைப் பொறுத்தவரையில் பல நடைமுறைச்
சிக்கல்கள் இருக்கின்றன.
அண்மையில் பெங்களூரூவைச் சேர்ந்த அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில் நம் நாட்டில் மாரடைப்புக்கு ஆளான நோயாளிகளுக்கு குறிப்பாக வறுமையில் வாடும் நோயாளிகளுக்கு வசதிகள் நிறைந்த பாதுகாப்பான ஆம்புலன்ஸ் வண்டி கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டி இருக்கிறது.
இதன் காரணமாக மாரடைப்புக்கு ஆளானவர்களை சாதாரண வாகனத்திலோ அல்லது அரசுப் பொது வாகனத்திலோ மிகவும் காலதாமதமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடிகிறது. வீண் உயிர் இழப்புகளும் தவிர்க்க முடியாதாகிவிடுகிறது. இந்தியாவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல குறைந்தது மூன்று மணி நேரம் ஆகிறது என்று கணக்கிட்டுள்ளனர்.
ஆனால் மேலை நாடுகளில் ஒரு இதய நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஒரு மணி நேரம்தான் ஆகிறது. இந்த வித்தியாசத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளைத் தீவிரமாக ஆராய வேண்டும். அப்போதுதான் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
மாரடைப்புக்கான காரணங்கள் ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் சில குறிப்பிட்ட சூழல்கள், அதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திவிடுகின்றன.
இந்த வகையில் ஆறு காரணிகளைப் பட்டியலிட்டுள்ளனர்.
மாரடைப்பை அதிகப்படுத்தும் ஆறு காரணிகள் சில ஆண்டுகளுககு முன், ஹால்வர்டு, பாஸ்டன் போன்ற பல்கலைக்கழககங்களைச் சார்ந்த மருத்துவ ஆய்வு வல்லுநர்கள் மாரடைப்பு தொடர்பான சில அரிய உண்மைகளை நமக்கு அளித்துள்ளனர். மன இறுக்கமானது (Stress) மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது அவற்றுள்
ஒன்று. ஒருவர் கடுமையான மன இறுக்கத்துக்கு (Emotional ‡te‡‡) ஆளாகும்போது இதயத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மன
இறுக்கத்தின் காரணமாக முதலில் இதயத்தின் கீழ் அறைகள் கடுமையான அதிர்வுக்கு ஆளாகின்றன. இரண்டாவதாக இதயக் கீழ் அறைகள்
ஒழுங்கற்ற துடிப்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த நிலையை சீரற்ற மின் இடி (Achoatic Electrical Storm)  என்கிறார்கள்.
இதயத்தில் ஏற்படும் சீரற்ற மின் தாக்குதலானது இதயக் கீழ் அறைகளின் சீரான இயக்கத்தை சீரற்ற இயக்கமாக மாற்றுகிறது. இதைத் தொடர்ந்து
இதயக் கீழ் அறைகள் சீராக விரிந்து சுருங்கும் நிலை மாறி, வெறும் சீரற்ற உதறல்களாக மாறுகின்றன. இதனால் இதயக் கீழ் அறைகளால்
ஒழுங்காக உடலுக்குத் தேவையான ரத்தத்தை அனுப்ப இயலாது. இதன் விளைவாக உடலின் பல பாகங்களுக்கு ரத்தம் அனுப்பப்படும் இயக்கம்
பாதிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் உள்ள பல்வேறு மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும் இதய நோய்ப் பிரிவுகளிலும் நிகழ்ந்த ஆய்வு முடிவுகள் மற்ற
பருவங்களைவிட கடுமையான குளிர் காலத்தில் மாரடைப்பக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளன.
இதற்கு விஞ்ஞான ரீதியாக ஒரு விளக்கமும் சொல்லப்படுகிறது.
புறச் சூழலில் வெப்பம் குறைந்து குளிர் அதிகமாகும்போது தோலின் அடிப்பாகத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி உடல் வெப்பத்தை வெளியே
செல்லவிடாமல் உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைக்கத் துணைபுரிகின்றன.
இந்த நடவடிக்கையின்போது இதயத்துக்கு ரத்தத்தை அளிக்கும் இதயத் தமனிகள் சுருங்குவதால் இதயம் இயங்குவதற்கு தேவையான ரத்தம்
கிடைக்காமல் போய் மாரடைப்பு ஏற்படுகிறது.
சாதாரண காலங்களைவிட கடுமையான வெய்யில் காலங்களில் தோலின் புறப்பகுதி வழியாக நீரானது அதிக அளவில் வியர்வையாக வெளியே
செல்வதால் ரத்தத்தின் அளவு குறைந்துவிடுகிறது. இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இரவில் கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதுகூட மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்று
கண்டறிந்துள்ளார்கள்.
இங்கிலாந்து நாட்டில் திடீரென மாரடைப்புக்கு ஆளாகி இறந்தவர்கள் பலரின் உடலைப் பிரோதப் பரிசோதனை (Post Mortem) செய்தபோது பல
அரிய உண்மைகள் கிடைத்தன. இறந்தவர்களில் 100 பேர் இறப்பதற்கு முந்தைய இரவில் கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளை அளவுக்கு
அதிகமாகச் சாப்பிட்டிருந்தது பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கொழுப்புச் சத்து மிகுந்த உணவுக்கும் மாரடைப்புக்கும் என்ன தொடர்பு?
இந்தக் கேள்விக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் மருததுவமனையைச் சேர்ந்த மருத்துவர் பால்பிரேயன் இப்படி பதில் சொல்கிறார். இரவில் நேரம் கழித்து
கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிடுகிறோம். இரவின் பெரும்பகுதியை நாம் தூக்கத்தில் கழிக்கிறோம். தூக்கத்தின்போது,
கொழுப்புச் சத்துகள் பல்வகையான வேதியியல் மாற்றங்களை அடைகின்றன. அதன் பிறகு அவை ரத்தத்தில் கலக்கின்றன.
ஏற்கெனவே பல வகையான சிதைவு மாற்றங்களையும், கடினத் தன்மையையும் அடைந்த இதயத் தமனிகளின் உள்பகுதியில் கொழுப்புத்துகள்கள் படியும்போது இதயத் தமனிகளின் உள் விட்டம் மிகவும் சுருங்கிவிடுகிறது. எனவே ரத்தத்தில் உள்ள நுண் பொருள்கள் அவற்றின் வழியே செல்ல இயலாமல் தடைபட்டுவிடுகின்றன. இதனால் இதயத் தசைகளுக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் மாரடைப்பு ஏற்படுகிறது.
மேற்சொன்ன பிரேதப் பரிசோதனையில் இன்னொரு உண்மையும் தெரியவந்தது. மாரடைப்பால் இறந்தவர்களில் பலர் அதற்கு முந்தைய நாள்
இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தனர் என்பதுதான் அது.
மாலைப் பொழுதிலோ அல்லது இரவிலோ அளவுக்கு அதிகமாக மது குடிப்பது. இரவில் மாரடைப்புக்கு வழிவகுக்கும் என இங்கிலாந்து மருத்துவ
வல்லுநர்கள் கூறுவதை ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த இதய மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுகளின் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
கனடா நாட்டில் உள்ள மானிடோமா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இதய மருத்துவ வல்லுநர்கள் மாரடைப்பு தொடர்பாக சில புதுமையான
உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளனர்கள். மாரடைப்புக்கு ஆளாகி இறந்தவர்களில் 75 சாவீதத்தினர் திங்கள் கிழமையில், அதாவது வாரத்தின்
முதல் நாளில்தான் இந்த பாதிப்புக்கு இலக்காகி இருக்கிறார்கள்.
இதற்கான காரணம் என்ன?
வார விடுமுறைக்குப் பின் மீண்டும் பணிக்குத் திரும்பும் போது ஒருவரின் உடலில் பலவகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதோடு அவரின்
மன இறுக்கமும் அதிகமாகிறது. இவ்வகையான இறுக்கமானது இதயக் கீழ் அறைகளைப் பாதித்து ஒழுங்கற்ற துடிப்பையும் ஏற்படுத்துகிறது.
இதன் விளைவாக உடலுக்குத் தேவையான ரத்தத்தை இதயம் அனுப்ப முடியாமலும், தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெற இயலாமலும்
பாதிப்புக்குள்ளாகி மாரடைப்பில் போய் முடிகிறது என்று இதற்கான காரணத்தை விளக்குகின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
அதிகாலைப் பொழுதில்தான் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த
ஜேம்ஸ் ஈ முதல்வர் என்ற மருத்துவ வல்லுநர் மாரடைப்புக்கென ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது என்கிறார். அதிகாலையில் இருந்து நண்பகல்
வரையிலான காலம்தான் மாரடைப்புக்கான காலம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
உலகின் பல நாடுகளிலும் உள்ள குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா ஆகியவற்றைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இதயமருத்துவர்கள், மாரடைப்பு தொடர்பாக தங்களின் ஆய்வுஅறிக்கைகளை ஜேம்ஸ் ஈ முதல்வரிடம் அளித்தனர். அவற்றை ஆராய்ந்து விரிவான
ஆய்வறிக்கை ஒன்றை அளித்தார் முல்லர். அந்த அறிக்கையில் உலகின் பல பாகங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் மற்ற நேரங்களைவிட
காலைப்பொழுதில்தான் அதிகமாக மாரடைப்புக்கு ஆளாகிறார்கள் என்று தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாதக்காய்ச்சல் நோய்

குழந்தைகளைப் பாதித்து இதயத்தின் வால்வுகளைச் சிதைக்கும் கொடிய தொற்றுநோய்களில் முதன்மையானது வாதக் காய்ச்சல் நோய் (Rheumatic Disease) நம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கு மேற்பட்டோர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். வாதக் காய்ச்சல் நோய், குழந்தைகளை சுமார் 5 வயது முதல் 15 வயதுக்குள் தாக்கும்.
குழந்தைகளை மட்டுமல்லாது சில சமயங்களில் பெரியவர்களையும் இந்த நோய் தாக்குகிறது.
தொண்டைப் பகுதியில் உள்ள டான்சில்ஸ் (TONSILS) என்ற உறுப்புகளின் அழற்சியாகவே குழந்தைகளிடத்தில் வாதக் காய்ச்சல் நோய் தன் தாக்குதலைத் தொடங்குகிறது. தொடக்க நிலையில் தொண்டை அழற்சி, காய்ச்சல், மூட்டு விக்கம் போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன. இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தவுடன் தொடக்க நிலையிலேயே தக்க மருத்துவ முறைகளின் மூலம், இதைக் கட்டுப்படுத்திவிட வேண்டும்.
இல்லையென்றால் இதயம் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.
எல்லாவகையான வைரஸ்களும், பாக்டீரியாக்களும் வாதக் காய்ச்சல் நோயை
ஏற்படுத்தக்கூடும் என்றாலும் குறிப்பாக ஸ்ட்ரெப்டோகாக்கை (Streptococci) என்ற ரத்தத்தைச் சிதைக்கும் தன்மையுள்ள நுண்ணுயிர்தான் இந்தக் காய்ச்சலை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மக்களின் வாழ்க்கைத்தரம், குடியிருக்கும் வீட்டின் சுகாதார நிலை, சுற்றுச்சூழலின் தன்மை, சாப்பிடும் உணவின் தன்மை போன்றவை வாதக் காய்ச்சல் நோய்க்கான முகாந்திரத்தை அமைத்துக் கொடுக்கின்றன. போதிய காற்றோட்டம், போதிய சூரிய வெளிச்சம் இல்லாத நெருக்கடியான குடியிருப்புகளில் வாழ்வது வாதக் காய்ச்சல் நோய்க்குக் காரணமான நுண்ணுயிர்களை நன்றாகச் செழித்து வளர்ந்து பெருகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
இதுபோல் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிட முடியாத மக்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் வாதக் காய்ச்சல் நோய் வரவாய்ப்புகள் அதிகம் உண்டு.சரி, காரணங்களைப் பற்றி பேசிவிட்டோம்.
வாதக் காய்ச்சலை நுண்ணுயிரிகள் எப்படி ஏற்படுத்துகின்றன என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மேலே சொன்ன வழிகளில் வெளியில் இருந்து உடலுக்குள் நுழைய நுண்ணுயிர்கள் முயற்சிக்கின்றன. நமது உடலில் உள்ள நுழைவாயிலில் பல வகையான தற்பாதுகாப்பு
அமைப்புகள் உள்ளன. அவை நுண்ணுயிர்கள் உள்ளே நுழையமுடியாத வகையில் அவற்றை அழிக்க முயற்சிக்கின்றன. இத்தகைய தற்பாதுகாப்புப் பணியில் தைமஸ் (Thymàv) போன்ற பலசுரப்பிகளுக்கு முக்கியமான பொறுப்பு உண்டு.
இந்தச் சுரப்பிகள் நோயை உண்டாக்கும் தீய நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மையுள்ள
ஆன்டிபாடிஸ் (ANTIBODIES) எனப்படும் எதிர்ப்பொருள்களை உற்பத்தி செய்கின்றன.
இவ்வகையான எதிர்ப்பொருள்கள்தான் தொண்டையில் உள்ள தீமை தரும் நுண்ணுயிர்களை அழிக்கும் போராட்டத்தில் இறங்குகின்றன. இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற ஒரு புத்திசாலித்தனமாக அணுகுமுறையை நுண்ணுயிர்கள் பின்பற்றுகின்றன.வாதக் காய்ச்சலை  ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் மூலக்கூறுகளின் அமைப்பும், நமது உடலில் உள்ள மூட்டுத் திசுக்களிலும் இதய வால்வுகளின் திசுக்களிலும் உள்ள மூலக்கூறுகளின் அமைப்பும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன.
இதனால் நமது உடலில் உள்ள எதிர்ப்பொருள்கள் நுண்ணுயிர்களை மட்டும் அழிப்பதோடு அல்லாமல் அதே போன்ற மூலக்கூறு அமைப்புகளைக் கொண்ட திசுக்களையும் அழித்துவிடுகின்றன. அந்த வகையில் இதயத்தின் வதல்வுகளில் உள்ள திசுக்களையும் தவறாக அழித்துவிடுகின்றன. இதன் விளைவாக நமது உடலில் உள்ள இதயத்தின் வால்வுகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக வாதக் காய்ச்சல் நோயால் ஈரிதழ் வால்வும் (Miˆral Valve), மகாதமனி (Aorˆa) என்ற மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. இதயத்தில் உள்ள நான்கு வால்வுகள்தான் இதயத்தின் தூய்மையான ரத்தத்தின் போக்கைக் கட்டுப்படுத்த மிகவும் துணையாக உள்ளன.
இவை இரண்டு வகைகளில் பாதிக்கப்படுகின்றன. முதலாவதாக இதய வால்வுகள் நன்கு செயல்பட வேண்டும் என்றால் இந்த வார்வுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் நார்த்தசைகள் நன்கு விரிந்து செயல்பட வேண்டும்.
ஆனால் வாதக்காய்ச்சல் நோயானது இந்த வால்வுகளை சிதைத்து அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைக் கெடுத்துவிடுகிறது. வால்வுகள் சிதைவடைவதால் தங்களின் நெகிழும் தன்மையை இழந்து சுருங்கிப்போய்விடுகின்றன. இதைத்தான் வால்வுகளின் குறுக்கம் (Sˆenoviv) என்கிறார்கள். இவ்வாறு வால்வுகளின் குறுக்கம் காரணமாக ரத்த ஓட்டமானது தடைபட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.
சில சமயங்களில் வாதக் காய்ச்சல் நோயானது இதய வால்வுகளைச் சிதைத்து வால்வுகளின் இதழ்களை அளவுக்கு மீறி விரிவடையச் செய்கின்றன. இதனால் ரத்தக் குழாய்களுக்கு மொத்த ரத்தமும் செல்லாமல் இதய அறையில் லேசாகக் கசிந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக ரத்தக் குழாய்களுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். இவ்வாறு வால்வுகள் விரிவடையும் நிலையை வால்வுகளின் செயலற்ற தன்மை (INCOMPETENCE) என்பார்கள்.
இந்தியாவில் வாதக் காய்ச்சல் நோய் என்பது மிகப்பெரிய மருத்துவப் பிரச்சனையாக
உருவெடுத்திருக்கிறது. அதோடு மக்களின் வாழ்க்கைத்தரம், உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழலின் தன்மை, தட்பவெப்ப நிலை இவற்றை அடிப்படையாகக் கொண்ட சமுதாய பொருளாதாரத் தொடர்புடைய பிரச்சனையாகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது. ஏனெனில் இந்த நோய் ஏற்படுவதற்கான காரணிகள் நம் நாட்டில் அதிகமாக உள்ளன. அதனால்தான் இந்தியாவில் மட்டம் ஒரு சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாதக் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
உலக அளவில் குழந்தைகளில் எண்ணிக்கையில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
பெரும்பான்மையான குழந்தைகள் போதுமான சுகாதார வசதிகளும், கழிப்பறை வசதிகளும், காற்றோட்டமும் இல்லாத, மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நெருக்கடியான சூழலில் வாழ்கிறார்கள். போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவும், தூய்மையான நீரும் கிடைக்காத நிலையும் அவர்களின் ஆராக்கியத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுகின்றன.
மேலும் பெரியம்மை, போலியோ எனப்படும் இளம் பிள்ளைவாதம், கக்குவான் இருமல் போன்ற குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்கும் தடுப்பு ஊசிகளைப்போல், வாதக்காயச்சல் நோயைத் தடுக்கும் தடுப்பு ஊசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இன்னொரு பிரச்சனை என்னவெனில் வெறும் மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கும் சிகிச்சை முறையைக் கொண்டு வாதக் காய்ச்சலை முழுமையாகத் தடுக்க முடியாது. சுகாதாரப்பராமரிப்பு, குடிநீரின் தன்மை போன்ற பலவகையான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பன்முக வடிவம் கொண்ட சமூகப் பொருளாதார முகங்கள் கொண்ட சிகிச்சை முறையால்தால் இதை முழுமையாகக் குணப்படுத்த முடியும். எனவே இதைத் தடுக்க தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசிய அளவிலான திட்டம் மிகவும் இன்றியமையாதது.

தினமும் இஞ்சி சேர்த்தால் உடல் வலி குறைந்து விடும்

தினசரி உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் வலி உட்பட பல்வேறு தசை வலிகளை நீக்கி விடும் என்று அமெரிக்க ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இஞ்சியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததுதான். எனினும், சளி, இருமல், அஜீரணம் ஆகியவற்றை இஞ்சி சரி செய்யும் என்பது பொதுவான மருத்துவ பயன்கள். அவற்றுக்கு மேல் இஞ்சியின் செயல்பாடு பற்றி ஜார்ஜியா பல்கலைக்கழக உணவியல் பிரிவு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதன் முடிவு பற்றி பேராசிரியர் ஓ கானர் கூறியதாவது:
இஞ்சியின் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரூபிக்கப்பட்டவை. உடல் எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்றும் ஆற்றலும் இஞ்சிக்கு உள்ளதை சமீபத்தில் எலிகளிடம் நடத்திய சோதனையில் அறிந்தோம். தவிர, உணவில் சேர்த்து கொதிக்க வைக்கப்படும் இஞ்சியால் உடல் வலிகளைக் குறைக்க முடியும் என தெரிய வந்துள்ளது.
இஞ்சியை பச்சையாக உணவில் சேர்த்து சிலருக்கு 11 நாட்கள் அளித்து வந்தோம். இன்னொரு குழுவினருக்கு கொதிக்க வைத்த இஞ்சியை அதே 11 நாட்கள் கொடுத்து வந்தோம். அதன் பிறகு நடத்திய சோதனையில் சூடுபடுத்தப்பட்ட இஞ்சியை உணவில் சேர்த்தவர்களது உடல் வலிகளுக்கு நிவாரணம் கிடைத்தது தெரிய வந்தது.
குறிப்பாக கடினமான வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்படும் தசை வலிகளை இஞ்சி குறைப்பது ஆய்வில் உறுதியானது. தினமும் உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வோருக்கு உடல் வலிகளை 25 சதவீதம் குறைக்க முடியும் என்றார்.
அமெரிக்க ஆய்வு தகவல்.

முதுகுவலியா…?

ஆண்களை விட பெண்களே முதுகுவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மாதவிலக்கு மற்றும் பிரசவ காலத்தில் முதுகுத்தண்டில் இயல்பான நிலையில் வேறுபாடு உருவாவதே இதற்கு காரணம்.

முதுகுவலி பிரச்சினை தீர நாம் கடைபிடிக்க வேண்டியவை…

முதுகுத் தசையில் ஏற்படும் வலியை குறைக்க ஐஸ்கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

படுக்கையில் இருந்து எழும்போது விருட்டென்று எழுந்திருக்கக்கூடாது. பொருட்களைத் தூக்கும் போது உடலை டென்சனாக முறுக்காதீர்கள். தோள் உயரத்திற்கு மேல் தூக்குவதைத் தவர்க்கவும். ஒரே பக்கமாக அதிக எடையைத் தூக்காதீர்கள். நீண்ட நேரம் கால்களை விறைப்பாக வைத்தபடி நிற்காதீர்கள்.

ஹை-ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும். நாற்காலியில் அமர்ந்து வேலை பார்க்கும் போது அதிகமாக சாய்ந்து கொண்டும், அதிகமாக முன்னோக்கி குனிந்து கொண்டும் செயல்படாதீர்கள். படுக்கை தரமானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும். ஓய்வு எடுக்கும் போது முதுகைத் தளர்வாக வைத்துக் கொள்ளலாம்.

சில நேரங்களில் அசைய முடியாதவாறு வலி ஏற்படும். தசை பிடிப்பு தான் அதற்கு காரணம். அதுபோன்ற நேரங்களில் மசாஜ் செய்வதும், வலி நிவாரணியைத் தடவுவதும் வலியை போக்கும். முதுகு வலிக்கு அதிகமாக ஓய்வு எடுப்பது தான் சிறந்தது. என்றாலும் ரத்த ஓட்டத்திற்காக நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது.

உட்கார்ந்து வேலை செய்கிறவர்களுக்கு முதுகுவலி ஏற்படும். இவர்கள் எடையை ஒரே சீராக பராமரிக்க வேண்டும். உடற்பயிற்சியை மேற்கொள்வதும் அவசியம். ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்க கூடாது.