மாரடைப்பு

மாரடைப்பு. மக்களையும், மருத்துவ உலகையும் இன்றைக்கு ஒரு சேரக கவலையில் ஆழ்த்தியிருக்கிற மிக முக்கியமான பிரச்சனை.
முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மாரடைப்பு வரும் என்கிற நிலை இருந்தது. ஆனால் சமீப காலமாக 35 வயது
இளைஞர்கள்கூட திடீரென மாரடைப்பால் இறந்து போகிறார்கள்.
பொருளாதார அளவில் முன்னேறிய நாடுகளில் இப்போதும் மாரடைப்பு என்பதுது முதியவர்களின் மருத்துவப் பிரச்சனையாகவே கருதப்படுகிறது.
ஆனால் நம் நாட்டில் இந்தப் பிரச்சனைக்னு இளைஞர்கள்தான் இன்றைக்கு அதிகம் இலக்காகிறார்கள். போட்டி நிறைந்த சூழல், மனஅழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய வேலை என இதன் பின்னணியில் பலவிதமான காரணிகள் இருக்கின்றன. காரணகளைப் பற்றி ஆராயும் முன்பு,மாரடைப்பு தொடர்பாக பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.இதயம் இயங்குவதற்குத் தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காததால் இதயத் தசைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மடிந்துபோகும் நிலைமை மாரடைப்பு என்கிறார்கள். இத்தகைய நிலைக்கு அடிப்படைக்காரணம். இதயத்துக்கு ரத்தத்தை அளிக்கும் இதயத் தமனிகள்
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அடைபடுகின்றன. அல்லது குறுகிவிடுகின்றன. இதய மருத்துவர்கள் இதை மயோகார்டியல்
இன்பார்க்ஷன் (Myocordial Infarction) என்கிறார்கள்.
மாரடைப்புக்கான காரணங்கள் அவற்றின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு முதல் நிலைக் காரணங்கள் (PRIMARY RISK FACTORS)
இரண்டாம் நிலைக் காரணங்கள் (SECONDARY RISK FACTORS). என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ரத்த மிகு அழுத்த நோய் (Hypertension) ரத்த மிகு கொலஸ்ட்ரால் நிலை (Hyper chole‡terol) அளவுக்கு அதிகமாகப் புகைப் பிடித்தல், நீரழிவுநோய் ஆகியவை மாரடைப்புக்கான முதல் நிலைக் காரணங்களாக இருக்கின்றன.
ஒரு குடும்பத்தில் தாயோ அல்லது தந்தையோ ஏற்கெனவே மாரடைப்புக்கு ஆளாகியிருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மற்ற
குடும்பத்தில் உள்ளவர்களைவிட மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் உடல் உழைப்பு இல்லாதவர்களும்,
போதுமான உடற்பயிற்சி இல்லாதவர்களும் மற்றவர்களைவிட இந்தப் பிரச்சனைக்கு உளிதில் இலக்காகிறார்கள். மன உளைச்சலால் (Stress) அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கும் மாரடைப்பு திடீரென ஏற்படக்கூடும். போதுமான அளவு ஓய்வு இல்லாமல் குறுகிய காலத்தில் வாழக்கையின் வசதிகளையும், வாய்ப்புகளையும் அடைய வேண்டும் என்ற ஆசையில் கடுமையாக உழைக்கும் ஏ வகை ஆளுமை உடையவர்கள் (A type personality) மற்றவர்களைவிட விரைவாக மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். உடல் பருமன (Obecity) உடையவர்கள் மது குடிப்பவர்கள் ஆகியோருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறது. மேலே சொன்னவை எல்லாம் இரண்டாம் நிலைக் காரணங்கள். நெஞ்சுப் பகுதியில் கடுமையான வலி ஏற்படுவதுதான்
மாரடைப்புக்கான முக்கியமான அறிகுறி. முதலில் மார்பின் அடிப்பகுதியை இறக்குவதபோல் கடுமையான வலி ஏற்படும். இவ்வாறு ஏற்படும்
வலி அதிகமாகி இடது கை பக்கமாகப் பரவக்கூடும். சில சமயங்களில் இந்த வலி கழுத்துப்பகுதி கீழ் தாடை வரை மேல் நோக்கி பரவக்கூடும்.
மாரடைப்பின் முன் அறிவிப்பாக கடுமையான மூச்சுத் திணறலும் இருக்கும்.
நாடித்துடிப்பில் (Pîl‡e) மோசமாக வீழ்ச்சி அடையும். மாரடைப்பின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தால் நோயாளி சில சமயங்களில்
தன்னுடைய சுய நினைவைக்கூட இழக்கக்கூடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வீட்டில் ஒருவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் உறவினர்கள் அல்லது அருகில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பார்ப்போம்.
முதலில் எந்த நிலையில், எந்தச் சிரமமும் இல்லாமல் எளிதாக மூச்சுவிட இயலுமோ அந்த நிலைக்கு பாதிக்கப்பட்டவரை மிகவும் கவனமாக மாற்றுங்கள்.
அவர் அணிந்திருக்கும் ஆடை, கழுத்து, நெஞ்சு, இடுப்பு போன்ற பகுதிகளில் மிகவும் இறுக்கமாக இருந்தால் தளர்த்துங்கள்.
அச்சத்தைத் தரும் வகையிலும், இடையூறு தரும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்களை சுற்றி தேவையில்லாமல் கூட்டம் கூடாதீர்கள்.
பாதிக்கப்பட்டவரைத் தேவையில்லாமல் நடக்கவிடாதீர்கள். இதனால் பாதிப்புதான் அதிகமாகும்.
பாதிக்கப்பட்டவர் சுய நினைவோடு இருந்தால் ஏற்கெனவே இந்தப் பிரச்சனைக்காக மருத்துவர் பரிந்துரை செய்திருந்த நைட்ரேட் (Nitrate) வகை
மருந்தை நாக்கின் கீழ் வைத்துச் சொல்லுங்கள்.
அந்த மருந்தாலும் நெஞ்சுவலி முழுமையாக நிற்கவில்லை என்றால், பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மிகவும்
பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள்.
தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்.
பாதிக்கப்பட்டவருக்கு நெஞ்சு வலி ஏற்படுவதற்கும், அவரை நல்ல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கும் இடைப்பட்ட நேரம் மிகவும்
முக்கியமானது. அதனால்தான் அந்த நேரத்தை பொன்னான நேரம் (Golden Hoîr‡) என்று சொல்கிறார்கள். அந்த காலக்கட்டத்தை உறவினர்கள்/ நண்பர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு விரைந்து செயல்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றால் உயிரிழப்பைத் தடுக்க/ தவிர்க்க முடியும்.
ஆனால் இந்தப் பொன்னான நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதில்நம்நாட்டைப் பொறுத்தவரையில் பல நடைமுறைச்
சிக்கல்கள் இருக்கின்றன.
அண்மையில் பெங்களூரூவைச் சேர்ந்த அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில் நம் நாட்டில் மாரடைப்புக்கு ஆளான நோயாளிகளுக்கு குறிப்பாக வறுமையில் வாடும் நோயாளிகளுக்கு வசதிகள் நிறைந்த பாதுகாப்பான ஆம்புலன்ஸ் வண்டி கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டி இருக்கிறது.
இதன் காரணமாக மாரடைப்புக்கு ஆளானவர்களை சாதாரண வாகனத்திலோ அல்லது அரசுப் பொது வாகனத்திலோ மிகவும் காலதாமதமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடிகிறது. வீண் உயிர் இழப்புகளும் தவிர்க்க முடியாதாகிவிடுகிறது. இந்தியாவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல குறைந்தது மூன்று மணி நேரம் ஆகிறது என்று கணக்கிட்டுள்ளனர்.
ஆனால் மேலை நாடுகளில் ஒரு இதய நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஒரு மணி நேரம்தான் ஆகிறது. இந்த வித்தியாசத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளைத் தீவிரமாக ஆராய வேண்டும். அப்போதுதான் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
மாரடைப்புக்கான காரணங்கள் ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் சில குறிப்பிட்ட சூழல்கள், அதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திவிடுகின்றன.
இந்த வகையில் ஆறு காரணிகளைப் பட்டியலிட்டுள்ளனர்.
மாரடைப்பை அதிகப்படுத்தும் ஆறு காரணிகள் சில ஆண்டுகளுககு முன், ஹால்வர்டு, பாஸ்டன் போன்ற பல்கலைக்கழககங்களைச் சார்ந்த மருத்துவ ஆய்வு வல்லுநர்கள் மாரடைப்பு தொடர்பான சில அரிய உண்மைகளை நமக்கு அளித்துள்ளனர். மன இறுக்கமானது (Stress) மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது அவற்றுள்
ஒன்று. ஒருவர் கடுமையான மன இறுக்கத்துக்கு (Emotional ‡te‡‡) ஆளாகும்போது இதயத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மன
இறுக்கத்தின் காரணமாக முதலில் இதயத்தின் கீழ் அறைகள் கடுமையான அதிர்வுக்கு ஆளாகின்றன. இரண்டாவதாக இதயக் கீழ் அறைகள்
ஒழுங்கற்ற துடிப்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த நிலையை சீரற்ற மின் இடி (Achoatic Electrical Storm)  என்கிறார்கள்.
இதயத்தில் ஏற்படும் சீரற்ற மின் தாக்குதலானது இதயக் கீழ் அறைகளின் சீரான இயக்கத்தை சீரற்ற இயக்கமாக மாற்றுகிறது. இதைத் தொடர்ந்து
இதயக் கீழ் அறைகள் சீராக விரிந்து சுருங்கும் நிலை மாறி, வெறும் சீரற்ற உதறல்களாக மாறுகின்றன. இதனால் இதயக் கீழ் அறைகளால்
ஒழுங்காக உடலுக்குத் தேவையான ரத்தத்தை அனுப்ப இயலாது. இதன் விளைவாக உடலின் பல பாகங்களுக்கு ரத்தம் அனுப்பப்படும் இயக்கம்
பாதிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் உள்ள பல்வேறு மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும் இதய நோய்ப் பிரிவுகளிலும் நிகழ்ந்த ஆய்வு முடிவுகள் மற்ற
பருவங்களைவிட கடுமையான குளிர் காலத்தில் மாரடைப்பக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளன.
இதற்கு விஞ்ஞான ரீதியாக ஒரு விளக்கமும் சொல்லப்படுகிறது.
புறச் சூழலில் வெப்பம் குறைந்து குளிர் அதிகமாகும்போது தோலின் அடிப்பாகத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி உடல் வெப்பத்தை வெளியே
செல்லவிடாமல் உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைக்கத் துணைபுரிகின்றன.
இந்த நடவடிக்கையின்போது இதயத்துக்கு ரத்தத்தை அளிக்கும் இதயத் தமனிகள் சுருங்குவதால் இதயம் இயங்குவதற்கு தேவையான ரத்தம்
கிடைக்காமல் போய் மாரடைப்பு ஏற்படுகிறது.
சாதாரண காலங்களைவிட கடுமையான வெய்யில் காலங்களில் தோலின் புறப்பகுதி வழியாக நீரானது அதிக அளவில் வியர்வையாக வெளியே
செல்வதால் ரத்தத்தின் அளவு குறைந்துவிடுகிறது. இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இரவில் கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதுகூட மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்று
கண்டறிந்துள்ளார்கள்.
இங்கிலாந்து நாட்டில் திடீரென மாரடைப்புக்கு ஆளாகி இறந்தவர்கள் பலரின் உடலைப் பிரோதப் பரிசோதனை (Post Mortem) செய்தபோது பல
அரிய உண்மைகள் கிடைத்தன. இறந்தவர்களில் 100 பேர் இறப்பதற்கு முந்தைய இரவில் கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளை அளவுக்கு
அதிகமாகச் சாப்பிட்டிருந்தது பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கொழுப்புச் சத்து மிகுந்த உணவுக்கும் மாரடைப்புக்கும் என்ன தொடர்பு?
இந்தக் கேள்விக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் மருததுவமனையைச் சேர்ந்த மருத்துவர் பால்பிரேயன் இப்படி பதில் சொல்கிறார். இரவில் நேரம் கழித்து
கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிடுகிறோம். இரவின் பெரும்பகுதியை நாம் தூக்கத்தில் கழிக்கிறோம். தூக்கத்தின்போது,
கொழுப்புச் சத்துகள் பல்வகையான வேதியியல் மாற்றங்களை அடைகின்றன. அதன் பிறகு அவை ரத்தத்தில் கலக்கின்றன.
ஏற்கெனவே பல வகையான சிதைவு மாற்றங்களையும், கடினத் தன்மையையும் அடைந்த இதயத் தமனிகளின் உள்பகுதியில் கொழுப்புத்துகள்கள் படியும்போது இதயத் தமனிகளின் உள் விட்டம் மிகவும் சுருங்கிவிடுகிறது. எனவே ரத்தத்தில் உள்ள நுண் பொருள்கள் அவற்றின் வழியே செல்ல இயலாமல் தடைபட்டுவிடுகின்றன. இதனால் இதயத் தசைகளுக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் மாரடைப்பு ஏற்படுகிறது.
மேற்சொன்ன பிரேதப் பரிசோதனையில் இன்னொரு உண்மையும் தெரியவந்தது. மாரடைப்பால் இறந்தவர்களில் பலர் அதற்கு முந்தைய நாள்
இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தனர் என்பதுதான் அது.
மாலைப் பொழுதிலோ அல்லது இரவிலோ அளவுக்கு அதிகமாக மது குடிப்பது. இரவில் மாரடைப்புக்கு வழிவகுக்கும் என இங்கிலாந்து மருத்துவ
வல்லுநர்கள் கூறுவதை ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த இதய மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுகளின் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
கனடா நாட்டில் உள்ள மானிடோமா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இதய மருத்துவ வல்லுநர்கள் மாரடைப்பு தொடர்பாக சில புதுமையான
உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளனர்கள். மாரடைப்புக்கு ஆளாகி இறந்தவர்களில் 75 சாவீதத்தினர் திங்கள் கிழமையில், அதாவது வாரத்தின்
முதல் நாளில்தான் இந்த பாதிப்புக்கு இலக்காகி இருக்கிறார்கள்.
இதற்கான காரணம் என்ன?
வார விடுமுறைக்குப் பின் மீண்டும் பணிக்குத் திரும்பும் போது ஒருவரின் உடலில் பலவகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதோடு அவரின்
மன இறுக்கமும் அதிகமாகிறது. இவ்வகையான இறுக்கமானது இதயக் கீழ் அறைகளைப் பாதித்து ஒழுங்கற்ற துடிப்பையும் ஏற்படுத்துகிறது.
இதன் விளைவாக உடலுக்குத் தேவையான ரத்தத்தை இதயம் அனுப்ப முடியாமலும், தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெற இயலாமலும்
பாதிப்புக்குள்ளாகி மாரடைப்பில் போய் முடிகிறது என்று இதற்கான காரணத்தை விளக்குகின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
அதிகாலைப் பொழுதில்தான் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த
ஜேம்ஸ் ஈ முதல்வர் என்ற மருத்துவ வல்லுநர் மாரடைப்புக்கென ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது என்கிறார். அதிகாலையில் இருந்து நண்பகல்
வரையிலான காலம்தான் மாரடைப்புக்கான காலம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
உலகின் பல நாடுகளிலும் உள்ள குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா ஆகியவற்றைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இதயமருத்துவர்கள், மாரடைப்பு தொடர்பாக தங்களின் ஆய்வுஅறிக்கைகளை ஜேம்ஸ் ஈ முதல்வரிடம் அளித்தனர். அவற்றை ஆராய்ந்து விரிவான
ஆய்வறிக்கை ஒன்றை அளித்தார் முல்லர். அந்த அறிக்கையில் உலகின் பல பாகங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் மற்ற நேரங்களைவிட
காலைப்பொழுதில்தான் அதிகமாக மாரடைப்புக்கு ஆளாகிறார்கள் என்று தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

%d bloggers like this: