முதுகுவலியா…?

ஆண்களை விட பெண்களே முதுகுவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மாதவிலக்கு மற்றும் பிரசவ காலத்தில் முதுகுத்தண்டில் இயல்பான நிலையில் வேறுபாடு உருவாவதே இதற்கு காரணம்.

முதுகுவலி பிரச்சினை தீர நாம் கடைபிடிக்க வேண்டியவை…

முதுகுத் தசையில் ஏற்படும் வலியை குறைக்க ஐஸ்கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

படுக்கையில் இருந்து எழும்போது விருட்டென்று எழுந்திருக்கக்கூடாது. பொருட்களைத் தூக்கும் போது உடலை டென்சனாக முறுக்காதீர்கள். தோள் உயரத்திற்கு மேல் தூக்குவதைத் தவர்க்கவும். ஒரே பக்கமாக அதிக எடையைத் தூக்காதீர்கள். நீண்ட நேரம் கால்களை விறைப்பாக வைத்தபடி நிற்காதீர்கள்.

ஹை-ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும். நாற்காலியில் அமர்ந்து வேலை பார்க்கும் போது அதிகமாக சாய்ந்து கொண்டும், அதிகமாக முன்னோக்கி குனிந்து கொண்டும் செயல்படாதீர்கள். படுக்கை தரமானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும். ஓய்வு எடுக்கும் போது முதுகைத் தளர்வாக வைத்துக் கொள்ளலாம்.

சில நேரங்களில் அசைய முடியாதவாறு வலி ஏற்படும். தசை பிடிப்பு தான் அதற்கு காரணம். அதுபோன்ற நேரங்களில் மசாஜ் செய்வதும், வலி நிவாரணியைத் தடவுவதும் வலியை போக்கும். முதுகு வலிக்கு அதிகமாக ஓய்வு எடுப்பது தான் சிறந்தது. என்றாலும் ரத்த ஓட்டத்திற்காக நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது.

உட்கார்ந்து வேலை செய்கிறவர்களுக்கு முதுகுவலி ஏற்படும். இவர்கள் எடையை ஒரே சீராக பராமரிக்க வேண்டும். உடற்பயிற்சியை மேற்கொள்வதும் அவசியம். ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்க கூடாது.

%d bloggers like this: