Daily Archives: ஜூன் 6th, 2010

தொடர்ந்து 11,000 கி.மீ., பறக்கும் அபூர்வ பறவை

உண்ணாமல், உறங்காமல், ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ., பறக்கும், “காட்விட்’ என்ற பறவை, உயிரியல் வல்லுனர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அலாஸ்காவின் தெற்கு கடற்கரை பகுதியில், கடந்த 1976ம் ஆண்டு ராபர்ட் இ கில் என்ற உயிரியல் வல்லுனர், பறவைகள் இடம் பெயரும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, “காட்விட்’ என்ற பறவையினத்தை அவர் கூர்ந்து கவனித்தபோது, அதன் நடவடிக்கைகள் பெரும் வியப்பில் ஆழ்த்தின. நீண்ட பயணத்தின் மூலம் இடம் பெயர்ந்த அப்பறவை, பயணக் களைப்பினால் உற்சாகம் இழக்காமலும், பருத்தும் காணப் பட்டது. எனவே, ராபர்ட் அந்த பறவையின் இடம்பெயரும் தன்மை குறித்து தொடர்ந்து ஆராயத் துவங்கினார். இந்தப் பறவைகள் குளிர்காலத் தில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு வருகின்றன. இப்பகுதிகளுக்கு வர, கடல் மற்றும் நிலத்தைத் தாண்டி நீண்ட பயணம் மேற்கொள்கின்றன. இந்த பயணக் காலத்தில் அவை, உணவு உட்கொள்வதில்லை; ஓய்வு எடுப்பதில்லை. ஆனால், உடல் எடை மட்டும் அதிகரிக்கிறது. பறவை ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன், ராபர்ட், “காட்விட்ச்’ பறவையின் உடலில், “சேட்டிலைட் டிரான்ஸ் மிட்டர்’களை அமைத்தார். அந்த, “டிரான்ஸ் மிட்டர்’ ராபர்ட் டின் கம்ப்யூட்டருக்கு, பறவை பறக்கும் திசையிலிருந்து சிக்னல்களைக் கொடுத்தபடி இருந் தது. அந்த பறவை பறக்கத் துவங்கியது. அப்பறவை, ஒன்பது நாட் களில் 11 ஆயிரம் கி.மீ., பறந்தது. “இந்த பறவைகளின் நீண்ட தூர பயணம் மிகப்பெரிய சாதனை, இதை விவரிக்க வார்த் தைகளே இல்லை’ என, ராபர்ட் தெரிவித்துள்ளார்.

செய்தி துணுக்குகள் 6.6.2010

தாமரை வடிவில் கேரளாவில் கோவில்!
கேரளாவில், தலைநகர் திருவனந்தபுரம் அருகே தாமரை பூ வடிவில் பிரமாண்ட கோவில் ஒன்று தயாராகி வருகிறது.
திருவனந்தபுரம் நகருக்கு வெளியே சாந்திகிரி என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தை உருவாக்கியவர் கருணாகர குரு. 1999ல் இவர் மரணமடைந்தார். ஆசிரமத்தில் தியானம் செய்த இடத்திலேயே, அவர் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தின் மேல், இந்த தாமரை வடிவ கோவில் தயாராகி வருகிறது.
மொத்தம் 91 அடி உயரம் கொண்ட இந்த தாமரை கோவில், வரும் செப்டம்பர் மாதம் தயாராகி விடும். அதே மாதத்தில் 12ம் தேதி கருணாகர குருவின் பிறந்த நாள். அன்று முதல் இந்த கோவில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படும்.
ராஜஸ்தானில் இருந்து, கொண்டு வரப்பட்ட வெள்ளை நிற மார்பிள் கற்கள் மூலம், 21 தாமரை இதழ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 12 இதழ்கள் மேல் நோக்கியும், ஒன்பது இதழ்கள் கீழ் நோக்கியும் உள்ளன. மார்பிள் தாமரையை தாங்கி நிற்கும் தூண் களுக்கான கிரானைட் கற்கள், கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த கோவில் அமைக்க 30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி மற்ற வசதிகளை ஏற்படுத்த மேலும் 20 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
* * *
ஒநாய் மனிதன்!
மனிதர்களுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முடி வளர்ந்தால் எப்படி இருக்கும்? கரடி போல இருப்பரா அல்லது ஓநாய் போல இருப்பரா? ஓநாய் போல் தான் தோற்றம் அளிப்பர் என்கின்றனர் டாக்டர்கள்.
படத்தில் காணப்படும் இந்த நபரைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஓநாய் மனிதன் என்றே கிண்டல் செய்கின்றனர். இவர், நம் நாட்டைச் சேர்ந்தவர்தான். இவரது பெயர் பிருத்விராஜ் பட்டீல். வயது 20 தான் ஆகிறது. மும்பை நகரில் வசிக்கிறார். இவர் முகம் முழுவதும் முடி வளர்ந்து விட்டது. தினமும் இரண்டு முறை ஷேவ் செய்யா விட்டால், ஓநாய் முகம் போல் மாறி விடும். இது ஒரு வினோத நோய் என்கின்றனர் டாக்டர்கள். உலகம் முழுவதிலும் இவரைப் போல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 50 பேர் உள்ளனர்.
இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும்; ஆனால், அதற்கு அதிக செலவாகும். வலி கடுமையாக இருக்கும். லேசர் மூலம் சிகிச்சை அளித்து முடி வளர்வதை டாக்டர்கள் தடுப்பர். இப்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக டாக்டர்கள், புது ஊசி மருந்தை கண்டுபிடித்துள்ளனர். வழுக்கையை ஏற்படுத்தும் அந்த ஊசியை, இவரைப் போல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தினால், உடலில் முடி வளர்வது தடுக்கப்படும் என்கின்றனர்.
* * *
அதிசய குதிரை; எடை வெறும் 3 கிலோ!
மூன்று கிலோ எடை கூட இல்லாத மிகவும் குட்டியான குதிரை ஒன்று பிறந்துள்ளது.
மெரிக்காவில் நியூஹாம்ஷயர் நகருக்கு அருகே உள்ள பர்ன்ஸ்டட் என்ற ஊரில், ஒரு பண்ணையில் குதிரை ஒன்று சமீபத்தில் குட்டியை ஈன்றது. அந்த குட்டி, பிறக்கும் போது வெறும் ஆறு பவுண்ட் (2 கிலோ 700 கிராம்) தான் எடை இருந்தது. அதன் உயரம் வெறும்
14 அங்குலம் தான். பிறந்த குழந்தை போல் தோற்றம் அளித்த இந்த குதிரை, “பொம்மை குதிரை’ போல இருக்கிறது. இந்த குதிரைக்கு, “ஐன்ஸ்டீன்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தில், “தம்பிலினா’ என்ற குதிரை, மிகக்குட்டி குதிரை என இடம் பெற்றுள்ளது. அந்த குதிரையின் எடை, மூன்று கிலோ 900 கிராம். “மனிதர்களில் குள்ளர்கள் பிறப்பதைப் போல், தம்பிலினா குதிரை குள்ளமாக பிறந்துள்ளது. ஆனால், ஐன்ஸ்டீன் குதிரையோ அப்படிப்பட்டதல்ல; அது குட்டி குதிரை…’ என்கின்றனர் குதிரை பண்ணையாளர்கள்; எது உண்மையோ…
“விரைவில் ஐன்ஸ்டீன் குதிரையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வைப்பேன்!’ என்கிறார் இந்த குதிரையின் உரிமையாளர் டாக்டர் ரசேல் வேக்னர்.

* * *
திருமண வரவேற்பில் வசூல்!
பணம் பண்ணுவதில் குறியாக இருப்பவர்கள் கிரிக்கெட் வீரர்கள். விளையாட்டு போட்டியின் போது அணிந்து இருக்கும் சர்ட், ஷூ, தொப்பி முதல் எல்லாவற்றிற்கும் விளம்பரதாரர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து விடுவர். இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் ÷ஷாயப் மாலிக்; இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர். சமீபத்தில், ஐதராபாத்தில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமண வரவேற்பு லாகூர் நகரில் நடந்தது. அந்த வரவேற்பு நிகழ்ச்சிகளை தனியார், “டிவி’க்கள் ஒளிபரப்ப வேண்டும் என்றால், தனக்கு 3.5 கோடி ரூபாய் கட்டணம் தர வேண்டும் என, நிபந்தனை விதித்தார். மேலும், அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே, வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தார். அவரது ரசிகர்கள் சிலர், அழைப்பிதழ்களை பிளாக் மார்க் கெட்டில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினர். இன்னும் எது, எதற்கெல்லாம் பணம் வசூலிப்பரோ கிரிக்கெட் வீரர்கள்?
* * *
பி.டி., கத்தரி மட்டுமல்ல…
இயற்கையாக விளையும் காய்கறி, தானியங்களை, அதன் மரபணுவை மாற்றி விளைய வைப்பது தான் இப்போது அமெரிக்கா போன்ற நாடுகளின் அடுத்த குறி. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் விவசாயத்தை அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகள், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தான் இதன் உண்மையான நோக்கம்.
பி.டி., கத்தரி, விற்பனைக்கு விடப்படலாம் என்ற தகவல் வந்ததும், அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்ந்தது. கடைசியில் அரசு பணிய வேண்டியதாகி விட்டது. என்றாலும், பி.டி., கத்தரியை மட்டுமல்ல, பி.டி., தக்காளி, பி.டி., உருளை என்று மரபணு மாற்றப்பட்ட, மக்காச்சோளம், தினைப்பயிர், தர்பூசணி போன்றவற்றை உருவாக்கும் ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. வெளிநாடுகள் அளித்த ஆய்வுக் குறிப்பின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள விவசாய ஆராய்ச்சி பல்கலைகழகங்கள், மையங்களில் ஒத்திகை நடந்து கொண்டு தான் இருக்கிறது. எதிர்காலத்தில், மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், தானியங்கள் வரத்தான் போகின்றன என்பது மட்டும் உறுதி.
* * *
முதல் முதலாக…
தற்போது நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நாட்டில் 1881ல் மவுரிய வம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்த மவுரியர் ஆட்சி காலத்தில் தான் முதல் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது.
*முதல் முதலாக கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ரவிக்குளத்தில் தான் தேசிய பூங்கா துவங்கப்பட்டது. இதுதான் மாநிலத்திலேயே மிகப்பெரிய தேசிய பூங்காவாக இப்போதும் உள்ளது. இதன் பரப்பளவு 97 சதுர கி.மீ., இப்பூங்கா ஒன்று தான் வரையாடுகள் சரணாலயமாக உள்ளது.
* இந்தியாவில் முதல் முதலாக நோபல் பரிசு வென்ற பெண் மதர் தெரசா தான். சமாதானத்திற்கான நோபல் பரிசு அவருக்கு 1979ல் வழங்கப்பட்டது. உலகில் நோபல் பரிசு வென்ற முதல் பெண், மேரி கியூரி. இவருக்கு 1903ல் நோபல் பரிசு, இயற்பியல் துறைக்காக வழங்கப்பட்டது.
*முதல் முதலாக இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கியது இந்தியர் அல்ல. அவர் ஆங்கிலேயர் என்றால் நம்ப மறுப்பவர்கள் உண்டு; ஆனால், அது தான் உண்மை. அவர் பெயர் ஏ.ஓ.ஹியூம். அவர் பிரிட்டிஷ் – இந்தியா நிர்வாகத்தின் கீழ் ஊழியராக பணியாற்றியவர்.
*கேரளாவில் பதவி வகித்த முதல் அமைச்சர்களில் குறைந்த வயதில் முதல்வராக பணியாற்றியவர் தற்போதைய மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தான்.
*நவ., 21,1963ல் திருவனந்தபுரம் அருகே தும்பா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து முதல் முதலாக ராக்கெட் விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. நாட்டின் முதல் விண்வெளி ஆய்வு மையமான ஐ.எஸ்.ஆர்.ஓ. ஆக., 15, 1969ல் அமைக்கப்பட்டது.

வாதக் காய்ச்சலை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

வாதக் காய்ச்சலிலின் தன்மை பற்றிய அடிப்படை அறிவை பொதுமக்களுக்கு ஊட்டுவதுதான் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது. இந்த
விழிப்புணர்வின் மூலமாக தொடக்க நிலையிலேயே இந்த நோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சையை அளித்து குழந்தைகளுக்கு ஏற்படும் இதயம்
தொடர்புடைய பாதிப்புகளை ஓரளவுக்குத் தடுக்க முடியும்.
அதாவது தொண்டை அழற்சி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும் முதல் நிலையிலேயே இந்த நோயைக் கண்டறிந்து உரிய நேரத்தில்
தக்க மருத்துவ முறைகளை மேற்கொண்டால் குழந்தைகளின் மூட்டுகளும், இதயமும் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.வாதக் காய்ச்சல் நோயைத் தடுக்க தேசிய அளவில் நன்கு செயல்படக்கூடிய சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள, செவிலியர்கள கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்தக் குழுவின் மூலமாக இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பெரும்பாலும் பள்ளியில் படிக்கும் பருவத்தில்தான் குழந்தைகள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பள்ளிப் பருவக்
குழந்தைகளுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலமாக இதைப் பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
அதோடு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியையும் ஒரு சிறிய சுகாதார நிலையமாக (MINI PRIMARY CENTRE) மாற்ற வேண்டும்.
குறிப்பிட்ட பள்ளிப் பகுதியில் வாழும் மருத்துவர் அங்கு படிக்கும் குழந்தைகளின் சுகாரத் தேவைகளைக் கவனிக்க அந்தப் பள்ளியைத் தத்து
எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மருத்துவர் வாரத்துக்கு ஒருநாள் பள்ளிக்குழந்தைகளைப் பரிசோதித்து நோயின் தொடக்கநிலையிலேயே
அதைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தக்க மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மேலை நாடுகளில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளின் அடிப்படை சுகாதாரத் தேவைகளைக் கவனித்துக் கொள்ள ஒரு செவிலியரை
(Nurse) முழு நேரப் பணியாளராக பள்ளி செவிலியர் (School Nurse) என்ற பெயரில் நியமிப்பார்கள். இதுபோன்ற முறையை நம் நாட்டில் உள்ள
பள்ளிகளிலும் பின்பற்றலாம். இன்னொரு முயற்சியையும் செய்து பார்க்கலாம். பொதுத் தொண்டில் ஆர்வம் உள்ள சில குறிப்பிட்ட ஆசிரியர்களை
ஒவ்வொரு பள்ளியிலும் தேர்ந்தெடுக்க வேண்டும். நோய் தடுக்கும் முறைகள் பற்றி அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளின் நோய் நிலையைப் பற்றி, பள்ளிக்கு வரும் மருத்துவருக்குத் தகவல்கள் அளிக்க வேண்டியது குறிப்பிட்ட ஆசிரியர்களின்
கடமை.இவ்வாறு மருத்துவர்களோடு ஆசிரியர்களும் இணைந்து செயல்பட்டு வாதக் காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான
போராட்டத்தில் இறங்க வேண்டும்.
மேற்சொன்ன அத்தனை முயற்சிகளும் செவ்வனே செயல்படுத்தப்படும்பட்சத்தில் வாதக் காய்ச்சல் என்ற கொடுமையான நோயின் பிடியில்
இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிவிட முடியும் என்பது என் நம்பிக்கை.

நீரின்றி அமையாது ஆரோக்கியம்

இயற்கை மருத்துவம் பல அங்கங்களைக் கொண்டது. அதில் ஒன்றுதான் நீர் மருத்துவம்.

மனித உடல் பஞ்சபூதங்களின்கூட்டாகவும், அண்ட கோளங்களின் பிம்பமாகவும் அமைந்திருக்கிறது. மனித உண்ணும் உணவை ஒதுக்கிவிட்டு நீர், காற்று, சூரிய ஒளி ஆகிய இம்மூன்றை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்தால், மனித உடல் அழிந்துவிடாமல் நீண்ட நாள் வாழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு ஆதாரமாக விளங்குவது நீர் மருத்துவம்! நிலவுலகம் தோன்றி சுமார் 60 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. நிலத்தில் முதன் முதலில் உயிரினம் நீரிலிருந்துதான் தோன்றியது. நீரில்தோன்றிய உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியால்தான் மனிதன் நிலத்துக்கு வந்தடைந்தான்.

பரிணாம வளர்ச்சியில் மேலும் வளர்ந்து மனிதன் தோன்றினான். மனிதனின் ஆதி உணவு நீர் என்பதால், நீர் மனித உடலைப் பாதுகாக்கும் என்றநம்பலாம். நீர் மருத்துவம் மனித உடலையும் உயிரையும் பாதுகாக்கும் என்பதற்கு இதுவே போதிய ஆதாரமாக இருக்கிறது.

நீர்தான் நம்மை வாழவைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் அறிந்து கொண்டிருந்தனர். அதனாலேயே ‘நீரின்று அமையாது உலகு’ என்னும் கருத்து உருவாயிற்று. நீரை உணவாகக் கொள்ள நேர்ந்தால் மனித உடம்புக்கு மருந்து என்பதே தேவையிருக்காது (Let water be  yoîr diet, yoî need no midicine).
நாம் அருந்தும் உணவு உடலை விட்டு முற்றிலும் அகன்று போகக் கூடியதாக இருக்க வேண்டும். நீர் போன்றிருக்கும் பால்கூட, அருந்தியதும்

உடலைவிட்டு முற்றிலும் அகன்று போகாமல், பாலில் கலந்துள்ள சத்துப்பொருட்களை விட்டுவிட்டுச் செல்லும். அருந்தியதும் அற்றுப் கோக் கூடிய பொருள், நீர் உணவு மட்டுமே.

அருந்தக்கூடியதும், அருந்திய பின் உடலைவிட்டு முற்றிலும் அற்று நீங்கக்கூடியதுமாகிய தன்மையுடையது நீர் மட்டுமே என்பதால், தொடர்ந்து  நீராகிய உவை அருந்திக் கொண்டிருந்தால், இயல்பாக உண்ணக்கூடிய உணவு வகைகளைத் தள்ளிவிடலாம்.

உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் போன்றவற்றுடன் சேர்ந்த உணவு வகைகளை உண்பதைத் தவிர்த்துவிட்டால், மனித உடம்புக்கு மருந்து என்பதே தேவைப்படாது. நீர் உணவு முறையானது, சைவ சித்தாந்த நெறிமுறையான அட்டாங்கயோகத்தில் பிராணயாமம் என்னும் ‘பிராண சக்தியில் வாழ்தல்’ என்னும் முறையைக் குறிக்கிறது.

கொண்டும் இருக்கிறது. நீர் உணவும் குடல் சுத்தியும் மனிதன் வயிற்றிலுள்ள இரைப்பை, ஆண்டுக்கணக்காக ஓய்வில்லாமல் உணவுப் பொருள்களை, அரைத்துக் கொண்டும் செரிமானம் செய்து என்றாவது ஒரு நாள் இரைப்பைக்கு ஓய்வு கொடுக்கின்றார்களா? உணவுப் பொருளைச் சமைக்கின்ற பாத்திரங்களைக் கழுவிக் காயவைப்பதைப்போல, இரைப்பையைக் கழுவிக் காயவைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களா? தினந்தோறும் உணவுப்பொருள்களை அரைத்துக் கொண்டிருக்கும் இரைப்பையில் எங்காவது மூலை முடுக்கில் தங்கிவிடுகின்ற உணவுத்துண்டுகள் அழுகி நாற்றமெடுத்து, கொடிய நோய்களை உருவாக்குகிறது.

நல்ல தரமான, உயர்ந்தவகையான உணவுகளை உட்கொண்டாலும் உணவுப் பொருட்கள் இரைப்பையில் தங்கிவிடும் வாய்ப்புண்டு. அது நாள் ஆக ஆக அழகி நோயைத் தரும் என்பதனால், இரைப்பையைக் கழுவி காயவைத்துக் கொண்டு வந்தால், நோயிலிருந்து விடுபடலாம். குடலைக்

கழுவிக் காயவைக்கும் போது, செரிமானத்துக்காகச் சுரக்கின்ற அமிலப்பைகள் புத்துணர்வடைகின்றன. அதன் செயல்திறன் கூட்டப்படுகிறது.

குடல் சுத்தமாகச் சுத்தமாக உடம்பிலுள்ள குப்பையும் கொழுப்பும் அகற்றப்படும். ரத்த நாளங்கள் சுத்தமாகும். உடம்பின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் நீரால், உடம்பின் உட்புறத்தையும் சுத்தம் செய்யலாம். உடம்பைச் சுத்தம் செய்யப் பயன்படும் நீரையே உணவாகவும் உட்கொள்ளலாம். சுத்திமுறை முதலில் அசைவ உணவாகிய மாமிச உணவை ஒதுக்கிவிட வேண்டும். பால்கூட அசைவ உணவு வகையைச் சேர்ந்ததுதான். ஆகையினால், பால்குடிப்பதையும் நிறுத்திவிட வேண்டும். குடல் சுத்திக்கு, பாக்டீரியா நீக்கப்பட்ட நீரையோ அல்லது கொதித்து ஆறவைத்த நீரையோ பயன்படுத்தலாம்.

காலையில் படுக்கையில் இருந்து கொண்டும், எழுந்த பின்பும் காபி, டீ போன்ற பானவகைகளைக் குடிப்பதையும் நிறுத்த வேண்டும். அதிகாலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் உலாவிவிட்டு, காலைக் கடன்களை முடித்துவிட்டு, வயிறு நிறையும் அளவுக்குச் சுமார் ஒன்றரை லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

நீர் குடித்தபோது காலை 6 மணி என்று வைத்துக் கொண்டால் சுமார் 8 அல்லது 9 மணியளவில் துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறும். அந்நாற்றம், இதுநாள்வரை எப்போதும் வந்திருக்காது. நீர் குடலைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறது என்பதை அப்போதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அதற்கு அடுத்ததாக மலம் கழியும். மீண்டும் முன்பு குடித்த அளவு நீரை அளவு அருந்த வேண்டும். மீண்டும் மலம் கழியும்.

அப்போது வயிற்றிலும் குடலிலும் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். இதை நாமே உணரலாம்- குடலுக்குள் மலம் இருக்கிறது என்று உணர்ந்தால், இடது கையால் வயிற்றின் வலப்புறத்தை அமுக்க வேண்டும். அப்போது சிறுநீர்ப் பையிலுள்ள சிறுநீர் முழுவதும் வெளியேறும். அடுத்து வலது கையால் வயிற்றின் இடப்புறத்தை அமுக்கினால் அசனவாய் திறந்து குடலில் மிச்சம் மீதியாக இருக்கின்ற மலக்கழிவு முழுவதும் வெளியாகிவிடும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால், இரைப்பையும் குடலும் சுத்தமாகிவிடும். உடம்பிலுள்ள அசுத்தப் பொருள்கள் பெரும்பகுதி வெளியேறிவிடும். குடல் சுத்தமாகச் சுத்தமாக உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்படுவதை உணரலாம். நீர் உணவு காலை, நண்பகல், இரவு என்று வேளைக்கு வேளை வகை வகையான உணவுகளையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்ட கண்ட பண்டங்களையும் பணியாரங்களையும் தின்று உடலைக் கெடுத்துக் கொண்டு, வாழ்நாளைக் குறைத்துக் கொள்ளாமல், இயற்கை உணவாகிய நீர் உணவை அருந்தி வந்தால் உடம்பில் நோய் அண்டாது, நீண்ட நாள் வாழலாம்.

காலையில், காலைக் கடன்களை முடித்து பல் துலக்கிய பின்பு காபி, டீ முதல் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது. அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பசி எடுக்கும் போதெல்லாம் தண்ணீரையே குடிக்கவேண்டும்.
உடம்பிலுள்ள நச்சுத்தன்மைகள் சிறுநீர் மூலம், மலக் குடல் மூலம் வெளியேறிவிடும்.

தொடக்கக் காலத்தில் எவ்வளவு நேரம் நீர் மட்டுமே அருந்திக் கொண்டு இருக்க முடியுமோ அதுவரை இருக்கவும். அதிகமாகப் பசி எடுக்கும்போது, சாதாரணமான உணவு வகைகளை உட்கொள்ளலாம். சாதாரண உணவு வகைகளை உண்ணும்போது, கொழுப்பு சேர்த்த பொருள்களை நீக்கிவிட வேண்டும். வேண்டிய அளவுக்கு வேகவைத்த காய்கறிகளைக் குறைந்த அளவு உப்பு சேர்த்து உண்ணலாம். சப்பாத்தி, முட்டை கோஸ் சாப்பிடலாம். தொடக்கக்காலத்தில் ஒரு வேளை உணவைக் குறைத்துக் கொண்டு நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு பழகப் பழக நீர் உணவுக்கு ஏற்றாற்போல் உடம்பின் தன்மைகள் மாறிவிடும். அதன்பிறகு இரண்டு வேளை உணவிலிருந்து ஒரு வேளை உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு, நீர் உணவு முறையை மேற்கொண்டு வந்தால், அவரவர் உடல் எடையைப் பொறுத்து, அதற்கு ஏற்றார்போல் உடல் எடை குறையும். பின்பு உடல் எடை குறைவது நின்று விடும். எவ்வாறென்றால், அவரவர் உடல் எடையில் எவ்வளவு நச்சுப்பொருள்கள் உள்ளனவோ அவை வெளியேறும் போது உடல் எடை குறையும். நச்சுப்பொருள் இன்றி தூய்மையான உடலைப் பெறுகின்றபோது எடை குறைவது நின்றுவிடும்.

எடை குறைவது நின்றுவிட்டால், உடல் தூய்மையாகிவிட்டது என்று பொருள். தொடர்ந்து நீர் அருந்திக் கொண்டு வந்தால், உடல் ஒரே மாதிரியாக இருக்கும். எந்த மாற்றமும் ஏற்படாமல் நிலையாக இருக்கும். உடலிலிருந்து நோய்கள் அனைத்து நீங்கிவிடும். உப்புச்சத்து உடலிலிருந்து நீங்கிவிட்டால், கண்பார்வை மேலோங்கிக் கூர்மையாகும், பற்கள் வளமாகும். வியர்வை தோன்றாது. துர்நாற்றம வீசாது.

குளிக்க வேண்டும். பல் துலக்க வேண்டும். மலம் கழிக்க வேண்டும் என்னும் நிலை ஏற்படாது. கழிவுகள் உடம்புக்குள் இல்லையென்றான பின்பு கழிவுகள் வருவது எப்படி?

உணவை எத்தனை வேளை உண்கிறோமோ அதற்குத் தகுந்தவாறே நன்மைகள் கிடைக்கும். உணவு உண்பது குறையக்குறைய நன்மைகள் பெருகும்.

மூன்று வேலை உணவை உண்பவர் நோயாளியாக இருப்பர். இரண்டு வேளை உண்பவர் வாழ்க்கை இன்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பர். ஒருவேளை உணவை உண்பவர்யோகியாக இருப்பர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சரி, நீங்கள் சொன்னபடி நீர் உணவுமுறையை உண்டு வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை அமையுமா என்று கேட்கிறீர்களா? ஆம். அதற்கு உதாரணமாக சிலரின் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.

ஜைன மதத்தைச் சார்ந்த ஐகஐமுனி சுவாமிஜிக்கு அப்போது வயது 65. அவர் 1997ஆம் ஆண்டு மே முதல் நாள் முதல் 1998 ஆம் ஆண்டுஏப்ரல் 30ஆம் நாள் வரை 365 நாள்கள் நீர் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தார். நீர் உணவையும் இரண்டு, மூன்று வேளை உண்ணாமல், ஒரு

வேளை மட்டுமே அருந்தியிருக்கிறார். மருத்துவர்கள் சோதித்துப் பார்த்தபோது, அவருக்கு எந்தக் குறைபாடும் இல்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

நீர் உணவு முறையை சுமார் எட்டு ஆண்டுகள் ஆய்வு செய்தவர் கோவையைச் சார்ந்த திரு.எஸ்.வெங்கடேசன் என்பவர். இவர் ஒரு பொறியாளர். 93 கிலோ எடை கொண்டவர். 13.7.94 இல் நீர் இவர் முறையைத் தொடங்கியிருக்கிறார். 4.4.95&ல் இவரின் எடை 62

கிலோவாகக் குறைந்திருக்கிறது. சுமார் 9 மாதங்கள், ஒரு வேளை உணவை மட்டும் உண்டு, மற்ற வேளைகளில் நீர் அருந்திக் கொண்டு,

25.10.94 முதல் 7.11.94 வரை இமயமலையிலுள்ள கங்கை உற்பத்தியாகும் கோமுகம் சென்று வந்துள்ளார். அப்பயணத்தின்போது, 18

கிலோமீட்டர் தூரம், மலையேற்றப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
நீர் உணவுமுறைக்கு ஆதாரமாக மேலும் ஒரு தகவல் கிடைக்கிறது. அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நீர் உணவு முறையைப் பற்றி அறிவியல்

முறைப்படி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சார்ந்த மெக்கானிக்கல் என்ஜினியர், ஹுராரத்தன் மேனக் (வயது 64) என்பவர், 441 நாட்கள் உணவு எதுவும்

உண்ணாமல் சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றை மட்டுமே உண்டு சுறுசுறுப்பாக இருந்ததை ஆய்வுத் திட்டம் பி.ஸி.வி என்று பெயர் சூட்டி

ஆய்வு செய்தார்கள். முதற்கட்ட ஆய்வில், ‘மனிதன் உயிர் வாழ மிக மிகக் குறைந்த அளவு உணவே போதும்’  என்று தங்கள் ஆய்வு முடிவை

அறிவித்திருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் வாழந்திருந்த சித்தர்களும் முனிவர்களும் மேற்கொண்டு வந்திருந்த ‘நீர் உணவு’ முறை நாகரிக

வளர்ச்சியின் காரணத்தினாலும் மேலை கீழை நாடுகளின் பழக்க வழக்கங்களின் படையெடுப்பினாலும் கடைப்பிடிக்கப்படாமல் தடைப்பட்டு

வந்துள்ளது. இதனால், இயற்கையான வாழ்க்கை முறையிலிருந்து செயற்கையான வாழ்க்கையில் மோகம் கொண்டு நோய்க்கு இடமளித்துஅல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
குடலைக் கழவி உடலை வளர்க்கும் நீர் உணவு முறையால் இரைப்பைக்கு ஓய்வு கிடைக்கிறது. பழைய திசுக்கள் மாறி, புதிய திசுக்கள்

வளர்கின்றன. உணவுக்குழாய் தூய்மையாகிறது. கல்லீரல் போன்ற செரிமான உறுப்புகள், சிறுநீரகங்கள், வியர்வை நாளங்கள் புத்துணர்வு

பெறுகன்றன. நுரையீரலில் தேங்கியிருக்கும் கார்பன் போன்ற கழிவுகள் வெளியேறுகின்றன.

உடம்பிலுள்ள உள்ளுறுப்புகள் அனைத்தும் தன்னைத் தானே அக சுத்தி செய்து கொள்கின்றன. உடற்பருமன், சர்க்கரை நோய், வயிற்றுப்புண்,இரைப்பு, இளைப்பு, நாட்பட்ட தோல் நோய், நரம்பு நோய்கள், பெண்களுக்கு மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளும் நீங்குகின்றன.
உடம்பில் நோய் எதிர்ப்பாற்றல் மிகுகிறது. அதனால் ஆட்கொல்லி நோய்களான புற்று, எய்ட்ஸ் போன்ற நோய்களையும் இல்லாமல் செய்யும்

நிலை ஏற்படுகிறது. உடலில் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் இளமையும் பொலிவும் வந்தடைகிறது. பட்டினிச்சாவு தடுக்கப்பகிறது. நீண்ட நாள் வாழவழி கிடைக்கிறது.
பஞ்சபூதங்களில் அடுத்ததாக நாம் காற்றைக் கவனிக்கலாம்.

உங்களுக்கு 20 20 தெரிந்திருக்கும். 10-10-10 தெரியுமா?

இது கிரிக்கெட் இல்லை. முடிவெடுப்பதற்கான ஓர் உத்தி. சமீபத்தில் வெளியாகியிருக்கும் 10-10-10 என்கிற புதிய புத்தகத்தில் இதனை விரிவாக அறிமுகப்படுத்தியிருப்பவர் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர், மேலாண்மை நிபுணர், ஆலோசகர் சூஸி வெல்ஷ்.
சூஸி ஏற்கெனவே சர்வதேச வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். தன்னுடைய கணவர் ஜாக் வெல்ஷûடன் இணைந்து இவர் எழுதிய வின்னிங் புத்தகம் கடந்த பல ஆண்டுகளாக பெஸ்ட்செல்லர்ஸ் வரிசையில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது.
10-10-10 உத்தியின் விசேஷம், அதன் எளிமை.
பொதுவாக முடிவெடுக்கும் உத்திகள் அனைத்தும், அலுவலகச் சூழலில் பிஸினஸ் முடிவுகளை எடுப்பதற்காகப் பயன்படுகிறவை. அதனால்தான் பெரும்பாலான மேனேஜ்மென்ட் கல்லூரிகளில் இவற்றைக் கட்டாயப் பாடமாக வைத்துச் சொல்லித் தருவார்கள். ஆனால் 10-10-10 அப்படி உச்சியில் ஏறி உட்கார்ந்து கொள்வதில்லை இந்தச் சுலபமான உத்தியை நீங்களும் நானும், இன்னும் சாõரண பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் சிரமமில்லாமல் பயன்படுத்த முடியும்.
முடிவெடுப்பதற்கு மட்டுமல்ல, பொதுவாகவே எந்த ஒரு முக்கியமான வேலையையும் தொடங்குவதற்கு முன்னால் இந்த 10-10-10 ஃபார்முல்லாவைச் சில விநாடிகள் சிந்திக்கப் பழகினால், அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பதைத் தவிர்க்கலாம். நிதானமாக எல்லாக் கோணங்களில் இருந்தும் யோசித்துச் செயல்படலாம்.
கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். முதலில் 10-10-10ன் அர்த்தம், 10 நிமிடங்கள், 10 மாதங்கள், 10 வருடங்கள்.
இப்போது உங்களுக்குச் செம பசி. வீட்டில் ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று தேடுகிறீர்கள். கிச்சன் காலியாகக் கிடக்கிறது. இனிமேல் ஏதாவது சமைத்தால்தான் உண்டு. அதுவரை பசி பொறுக்கமுடியுமா? தெரியவில்லை.
சரி, ஃப்ரிட்ஜைத் திறந்து பார்ப்போம். ஆஹா இதோ ஒரு சாக்லெட் கிடக்கிறது. கடித்தால் உடனடி எனர்ஜி!
கொஞ்சம் பொறுங்கள். அதற்கு முன்னால், 10-10-10 ஃபார்முலாவைப் பயன்படுத்தி யோசித்துவிட்டு அதன்பிறகு அந்த சாக்லெட்டைத் கடியுங்கள் என்கிறார் சூஸி வெல்ஷ்.
முதலில் 10 நிமிடங்கள். அதாவது, இந்த சாக்லெட்டைச் சாப்பிடுவதன்மூலம் அடுத்த பத்து நிமிடங்களில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய உடனடிப் பலன்கள் என்ன? பசி தீரும் நிம்மதியாக வேறு வேலையைப் பார்க்கப் போகலாம்!
அடுத்த 10 மாதங்கள் இப்போது இந்த சாக்லெட்டைச் சாப்பிட்டுவிட்டால் பத்து மாதம் கழித்து என்ன ஆகும்?
சாக்லெட்டில் கொழுப்புச்சத்து மிகுதி என்பது நமக்குத் தெரியும். ஆகவே பத்து மாதங்களில் இந்த சாக்லெட்டினால் நம் உடலில் சில கிராம் கூடுதல் கொழுப்பு சேரும். இது குறுகிய காலக் கண்ணோட்டம்.
கடைசியாக 10 வருடங்கள், இந்த சாக்லெட்டைக் கடிப்பதன் மூலம் பத்து வருடங்களில் (அதாவது நீண்ட கால நோக்கில்) என்ன விளைவுகளை எதிர்பார்க்கலாம்?
ஆரோக்கியமாகச் சாப்பிடாமல் எந்நேரமும் சாக்லெட் தின்று கொண்டிருந்தால், அதன் மூலம் நம் வாழ்க்கை முறையே மாறிப்போகலாம். பல வியாதிகள் தேடிவரலாம். நம் வாழ்நாள் குறையலாம்.
பசிக்கு ஒரு சாக்லெட்டைப் பிரித்துத் தின்பதால் உங்கள் ஆயுள் குறைந்துவிடுமா என்றால் இல்லை. ஆனால், இப்படி ஒவ்வொரு நாளும் சாக்லெட் தின்றுகொண்டிருந்தால் நிச்சயமாக அதற்கு இப்படி ஒரு நீண்ட கால விளைவு இருக்கும்தானே? அதை ÷ யாசிக்காமல் இப்போது சாக்லெட்டைக் கடிப்பது புத்திசாலித்தனமில்லையே!
இதைத்தான் சூஸி வெல்ஷின் புத்தகம் அழகாகச் சுட்டிக்காட்டுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலுக்கும் உடனடி குறுகிய கால நீண்ட காலப் பலன்கள் உண்டு. அவற்றை 10-10-10 ஃபார்முலாவின்மூலம் சிந்தித்துப் பார்காமல் எதையும் செய்யாதீர்கள் என்பதுதான் இந்தப் புத்தகம் சொல்கிற மையக் கருத்து.
முக்கியமான விஷயம் இந்த ஃபார்முலா சாக்லெட்டுக்கு மட்டுமில்லை (வேறு எதற்கும் பொருந்தக்கூடியது உதாரணமாக ஒருவருக்கு கல்யாணத்துக்குப் பெண் பார்க்கிறார்கள், அவர் தன்னுடைய வருங்கால மனைவியை முடிவெடுப்பதற்கு 10-10-10 கோணத்தில் யோசிக்கலாம். இன்னொருவர் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாமா, வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கு இதனைப் பயன்படுத்தலாம். இப்படி எங்கேயும் எப்போதும் பொருந்தக்கூடிய பொதுத்தன்மை இதற்கு உண்டு.
ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் 10 நிமிடம், 10 மாதம், 10 வருடம் என்று யோசித்துக் கொண்டிருப்பது கொஞ்சம் வெட்டி வேலையாகத் தோன்றலாம். ஆனால், இதைத் தொடர்ச்சியாகச் செய்து பழகிவிட்டால், வண்டி ஓட்டுவதுபோல, நீச்சலடிப்பதுபோல இதுவும் நம் மூளையில் ஒரு சிந்தனை உத்தியாகப் பதிந்துவிடும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த உத்தியைப் பழக்கிக் கொடுப்பது முக்கியம் என்கிறார் சூஸி.
ஒரு மாணவர் தன்னுடைய முதல் சிகரெட்டைப் பற்றவைக்கும்போது அல்லது முதன்முறையாக வகுப்புக் கட் அடிக்கும்போது அவர் 10-10-10 ஃபார்முலாவை யோசிக்கப் பழகியவராக இருந்தால் போதும். அதனால் உடனடியாகக் கிடைக்கும் சிகிச்சைவிட நீண்ட கால நோக்கில் தான் இழக்கக்கூடிய ஆரோக்கியம், நல்ல வாய்ப்புகள் போன்ற விஷயங்களை யோசித்துப் பார்த்து அந்த சிகரெட்டைக் கீழே போட வாய்ப்புகள் அதிகம்.
அடிப்படையில் 10-10-10 என்பது நம்முடைய ஒவ்வொரு செயலின் விளைவுகளையும் முழுமையாக உணர்ந்து செயல்படுவதற்குத் தூண்டும் சிறப்பான சிந்தனை உத்தி. சிக்கலில்லாத இந்த வழிமுறையைச் சரியானபடி பயன்படுத்திப் பழகினால் 10 நிமிடம் 10 மாதம் 10 வருடம், ஏன் 10 தலைமுறைகளுக்குக்கூட பயன்படும்படி வாழலாம்.
10-10-10 பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://www.suzywelch101010.com/

காரை இயக்க செல்போன் போதும்!

ஐபோன் நிறுவனத்தின் புதுமையான முயற்சி இது. வெந்நீர் போடுவது, கார் சாவியாக பயன்படுத்துவது என்று பல வேலைகளுக்கு செல்போனை அறிமுகப்படுத்திய ஐபோன் தற்போது காரை இயக்கும் வகையில் புதிய ஐபோனை அறிமுகப்படுத்தி உள்ளது.

நிசான் நிறுவனத்தின் `லீப்’ மாடல் காரை ஐபோன் முலம் இயக்கலாம். எப்போதாவது காரைவிட்டு இறங்கியபிறகு கொஞ்சம் நகர்த்தி விட்டால் தேவலை என்று தோன்றினால் காரில் ஏறி ஸ்டார்ட் செய்ய வேண்டாம். செல்போனால் இயக்கி காரை நகர்த்திவிடலாம்!

தாய்ப்பால் அவசியம்!

இன்றைய பெண்களில் பலர் வேலைக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும்கூட அவர்களில் பலர் வேலைக்கு செல்கிறார்கள்.

அவ்வாறு வேலைக்கு செல்லும்போது குழந்தையை இன்னொருவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

வேலைக்கு சென்று 8-10 மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வந்தவுடன், குழந்தைக்கு அவசரம் அவசரமாக தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.

இதற்கிடையில், தொடர்ந்து 8-10 மணி நேரம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால், அவர்களது மார்பில் பால் கட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் மார்பில் வலி எடுத்து அவதிக்குள்ளாகும் நிலையும் உள்ளது. மேலும், தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இதுபோன்ற சிக்கலில் உள்ள வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை மிகவும் சுத்தமான பாத்திரத்தில் பிழிந்தெடுத்து சேகரித்து, அதை இறுக்கமாக முடி விடுங்கள். பின்னர் அதை, பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் தாய்ப்பாலை 6-8 மணி நேரம் வரையே வைத்து பாதுகாப்பதுதான் உகந்தது. பிரிட்ஜ் வசதி இல்லாதவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தினுள் தாய்ப்பால் கொண்ட பாத்திரத்தை
வைக்கலாம்.வீட்டில் குழந்தையை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பாக எடுத்து வைத்த தாய்ப்பாலை சுத்தமான கரண்டி முலம் குழந்தைக்கு பசி எடுக்கும்போது ஊட்டிவிடலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

`செக்’எழுதும்போது … `செக்’ பண்ண வேண்டிய விஷயங்கள்!

பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் விஷயம், காசோலை எனப்படும் `செக்’.

ஆனால் காசோலை எழுதும்போது சில விஷயங்களில் கவனமாயிருக்க வேண்டும். அவை பற்றி…

1. `செக்’கில் வார்த்தைகள், எண்களுக்கு இடையே ஏதும் இடைவெளி இல்லாமல் இருப்பது முக்கியம். அது, தொகையிலும், `செக்’ எடுக்கப்படுவரின் பெயரிலும் திருத்தம் ஏதும் செய்ய முடியாமல் தடுக்கும். தொகையை எழுத்தால் எழுதும்போது `ஒன்லி’ என்று எழுதுவதுடன், பெயர், தொகைக்கு அடுத்து ஒரு கோடிடப்பட வேண்டும்.

2. ஒரு காசோலையின் மேல் இடது முலையில் இரண்டு குறுக்குக் கோடிலாம். அதற்கு இடையில், `அக்கவுண்ட் பேயி ஒன்லி’ அல்லது `ஏ/சி பேயி ஒன்லி’ என்ற வார்த்தைகளைச் சேர்க்கலாம். குறுக்குக் கோடிட்ட `செக்’கில், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரின் அக்கவுண்டுக்குத்தான் தொகை வரவாகும். குறுக்குக் கோடிடுவதன் முலம், `செக்’கை தொலைத்துவிட்டால் ஏற்படக்கூடிய இழப்பை நீங்கள் தவிர்க்கலாம்.

3. காசோலையில் நீங்கள் மாற்றம் ஏதும் செய்ய நேரிட்டால், அது உங்களால் செய்யப்பட்டது என்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதற்கு, மாற்றம் செய்யப்பட்ட இடத்தில், உங்களின் முழு கையொப்பத்தை இட வேண்டும்.

4. காசோலையில் உள்ள உங்களின் கையெழுத்து, வங்கியில் உள்ள உங்களின் கையெழுத்து மாதிரியைப் போன்றே இருக்க வேண்டும். கையெழுத்து மாறியிருந்தால், அது வங்கியால் ஏற்கப்படாது.

5. ஒவ்வொரு `செக்’கிலும் அதன் அடிப்புற வெள்ளைப் பகுதியில், `எம்ஐசிஆர்’ எனப்படும் 9 இலக்க `மேக்னட்டிக் இங்க் கேரக்டர் ரெகக்னிஷன்’ கோடு இடம்பெற்றிருக்கும். அதேபோல, அனைத்து காசோலைகளிலும், `ஐஎப்எஸ்சி’ எனப்படும் `இண்டியன் பைனான்சியல் சிஸ்டம் கோடு’ என்ற 11 இலக்க `ஆல்பா நியூமரிக் கோடு’ இடம்பெற்றிருக்க வேண்டும் என அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வண்டு வடிவில் வடிவேலன்!

முருகப் பெருமான் பூலோகத்தில் நான்கு அவதாரம் எடுத்ததாக, பூந்துறைப்பூராணம் எனும் புராணத்தில் உள்ள குமாரசருக்கம் எனும் பகுதி தெரிவிக்கிறது.

ஒர சமயம் கைலாய மலையில் பரமசிவனும் பார்வதிதேவியும் ஏகாந்தமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர் பார்வதிக்கு தனிமையில் பிரணவோபதேசம் செய்தார். அச்சமயம் அங்கு வண்டுவடிவில் உருமாறி வந்த முருகப்பெருமான், அந்த பிரணவ தத்துவத்தை இருவருக்குமிடையில் இருந்து கேட்டார்.

அதனைக் கண்டுபிடித்து கோபம் கொண்ட பரமன் முருகப்பெருமானிடம், நாங்கள் பேசிய ரகசிய மந்திரோபதேசத்தை என் அனுமதி இன்றி நீ மறைந்திருந்து கேட்டதால், பூலோகத்திற்குச் சென்று அந்தணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற மனிதர்களின் வருணங்கள் நான்கிலும் ஒவ்வொரு பிறவி எடுத்து வாழ்ந்துபின் சாப விமோசனமடைந்ததும் இவ்வுலகம் சேர்வாயாக என்று சாபமிட்டாராம்.

அதன்படியே முருகப்பெருமான் மண்ணுலகில் நான்கு வருணங்களிலும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பின் சிவலோகம் சேர்ந்தார் என்கிறது அந்தப் புராணம்.

திருஞானசம்பந்தர்:

முதலாவதாக முருகன், சீர்காழியில் அந்தணர் குலத்தில் திருஞான சம்பந்தராக அவதரித்தார்.

உக்கிர குமார பாண்டியன்:

இரண்டாவதாக மதுரை மாநகரில் க்ஷத்ரியர் குலத்தில் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் உக்கிரகுமார பாண்டியனாக அவதாரம் செய்தார்.

சாமிநாதன்: மூன்றாவதாக சுவாமிமலையில் வைசியர் குலத்தில் ஓர் இல்லத்தில் சுவாமிநாதன் என்ற பெயரில் அவதரித்து சித்துகள் பல நடத்தினார்.

செல்வக்குமாரன்: நான்காவதாக கொங்கு நாட்டில் உள்ள முத்தூர் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்து செல்வக்குமாரன் எனப் பெயர் பெற்று பின்பு பூந்துறை தலத்திற்கு வந்து பசுக்கூட்டங்களை மேய்த்து சேமூரில் வாழ்ந்து மக்களின் துயர் நீக்கி பின்பு சிவத்தில் ஐக்கியமானார்.

இவ்வாறு கூறுகிறது பூந்துறைப் புராணம்.