`செக்’எழுதும்போது … `செக்’ பண்ண வேண்டிய விஷயங்கள்!

பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் விஷயம், காசோலை எனப்படும் `செக்’.

ஆனால் காசோலை எழுதும்போது சில விஷயங்களில் கவனமாயிருக்க வேண்டும். அவை பற்றி…

1. `செக்’கில் வார்த்தைகள், எண்களுக்கு இடையே ஏதும் இடைவெளி இல்லாமல் இருப்பது முக்கியம். அது, தொகையிலும், `செக்’ எடுக்கப்படுவரின் பெயரிலும் திருத்தம் ஏதும் செய்ய முடியாமல் தடுக்கும். தொகையை எழுத்தால் எழுதும்போது `ஒன்லி’ என்று எழுதுவதுடன், பெயர், தொகைக்கு அடுத்து ஒரு கோடிடப்பட வேண்டும்.

2. ஒரு காசோலையின் மேல் இடது முலையில் இரண்டு குறுக்குக் கோடிலாம். அதற்கு இடையில், `அக்கவுண்ட் பேயி ஒன்லி’ அல்லது `ஏ/சி பேயி ஒன்லி’ என்ற வார்த்தைகளைச் சேர்க்கலாம். குறுக்குக் கோடிட்ட `செக்’கில், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரின் அக்கவுண்டுக்குத்தான் தொகை வரவாகும். குறுக்குக் கோடிடுவதன் முலம், `செக்’கை தொலைத்துவிட்டால் ஏற்படக்கூடிய இழப்பை நீங்கள் தவிர்க்கலாம்.

3. காசோலையில் நீங்கள் மாற்றம் ஏதும் செய்ய நேரிட்டால், அது உங்களால் செய்யப்பட்டது என்ற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதற்கு, மாற்றம் செய்யப்பட்ட இடத்தில், உங்களின் முழு கையொப்பத்தை இட வேண்டும்.

4. காசோலையில் உள்ள உங்களின் கையெழுத்து, வங்கியில் உள்ள உங்களின் கையெழுத்து மாதிரியைப் போன்றே இருக்க வேண்டும். கையெழுத்து மாறியிருந்தால், அது வங்கியால் ஏற்கப்படாது.

5. ஒவ்வொரு `செக்’கிலும் அதன் அடிப்புற வெள்ளைப் பகுதியில், `எம்ஐசிஆர்’ எனப்படும் 9 இலக்க `மேக்னட்டிக் இங்க் கேரக்டர் ரெகக்னிஷன்’ கோடு இடம்பெற்றிருக்கும். அதேபோல, அனைத்து காசோலைகளிலும், `ஐஎப்எஸ்சி’ எனப்படும் `இண்டியன் பைனான்சியல் சிஸ்டம் கோடு’ என்ற 11 இலக்க `ஆல்பா நியூமரிக் கோடு’ இடம்பெற்றிருக்க வேண்டும் என அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

%d bloggers like this: