தொடர்ந்து 11,000 கி.மீ., பறக்கும் அபூர்வ பறவை

உண்ணாமல், உறங்காமல், ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ., பறக்கும், “காட்விட்’ என்ற பறவை, உயிரியல் வல்லுனர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அலாஸ்காவின் தெற்கு கடற்கரை பகுதியில், கடந்த 1976ம் ஆண்டு ராபர்ட் இ கில் என்ற உயிரியல் வல்லுனர், பறவைகள் இடம் பெயரும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, “காட்விட்’ என்ற பறவையினத்தை அவர் கூர்ந்து கவனித்தபோது, அதன் நடவடிக்கைகள் பெரும் வியப்பில் ஆழ்த்தின. நீண்ட பயணத்தின் மூலம் இடம் பெயர்ந்த அப்பறவை, பயணக் களைப்பினால் உற்சாகம் இழக்காமலும், பருத்தும் காணப் பட்டது. எனவே, ராபர்ட் அந்த பறவையின் இடம்பெயரும் தன்மை குறித்து தொடர்ந்து ஆராயத் துவங்கினார். இந்தப் பறவைகள் குளிர்காலத் தில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு வருகின்றன. இப்பகுதிகளுக்கு வர, கடல் மற்றும் நிலத்தைத் தாண்டி நீண்ட பயணம் மேற்கொள்கின்றன. இந்த பயணக் காலத்தில் அவை, உணவு உட்கொள்வதில்லை; ஓய்வு எடுப்பதில்லை. ஆனால், உடல் எடை மட்டும் அதிகரிக்கிறது. பறவை ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன், ராபர்ட், “காட்விட்ச்’ பறவையின் உடலில், “சேட்டிலைட் டிரான்ஸ் மிட்டர்’களை அமைத்தார். அந்த, “டிரான்ஸ் மிட்டர்’ ராபர்ட் டின் கம்ப்யூட்டருக்கு, பறவை பறக்கும் திசையிலிருந்து சிக்னல்களைக் கொடுத்தபடி இருந் தது. அந்த பறவை பறக்கத் துவங்கியது. அப்பறவை, ஒன்பது நாட் களில் 11 ஆயிரம் கி.மீ., பறந்தது. “இந்த பறவைகளின் நீண்ட தூர பயணம் மிகப்பெரிய சாதனை, இதை விவரிக்க வார்த் தைகளே இல்லை’ என, ராபர்ட் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: