ஆனந்தம் தரும் அரோமாதெரபி

வாட்டி வதைக்கும் இந்த வெயிலில் வெளியில் சென்று வந்தாலே முகம் கறுத்துவிடும். உடலில் வெளியேறும் வியர்வைகளால் துர்நாற்றம். கண்ட முகப்பூச்சுகளை பூசி முகத்தை கெடுத்து கொண்டதாக அலுத்து கொள்ள வேண்டும். அதற்காகவே வந்துள்ளது அரோமாதெரபி.
அரோமா என்பது நறுமணத்தையும், தெரபி என்பது சிகிச்சையையும் குறிக்கும். இந்த வாசனை மருத்துவம் மூலம் அழகுகலை என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா, எகிப்து, சீனா போன்ற நாடுகளில் காணப்பட்டுள்ளது. முக்கிய சில தாவரங்கள், பூக்கள், வாசனை மற்றும் மூலிகை பொருட்களை காய்ச்சி வடிகட்டி அதலிருந்து கிடைக்கும் ஆயிலை எடுத்து பயன்படுத்துவதாகும். இந்த ஆயிலை நமது தோலில் மேற்புறம் தேய்க்கும் போது, தோலின் மூன்று அடுக்குகளில் உறிஞ்சப்பட்டு அதை காக்கிறது. அதன் மணம் மூளையை அடைத்து புத்துணர்ச்சியை கொடுக்கும். தோல், கூந்தல், உடல் மற்றும் மணத்திற்கு புதிய பரிணாமத்தை தருவதாக கூறுகிறார் அரோமாதெரபிஸ்ட் ஷானாவாஸ். மதுரை நரிமேட்டில் ஹைடெக் என்ற பெயரில் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அவர் கூறியதாவது:
பூக்கள், மூலிகைகள், மரப்பட்டைகள், பழங்கள், வாசனை பொருட்களை காய்ச்சி வடித்து நீர்மமான அந்த கரைப்பான்களில் இருந்து ஆயில் பெறப்படுகிறது. அந்த ஆயில் சரும பிரச்னைகளை குணப்படுத்தும். அறிவியல் வல்லுனர்களும் இதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்துள்ளனர். இந்த ஆயில் கிருமிநாசினியாகவும், வாசனை
திரவியமாக, நுண்கிருமிகளை அழித்து சரும அழகை பாதுகாப்பதாக பயன்படுத்தப் படுகிறது. நன்கு பயிற்சி பெற்ற அரோமாதெரபிஸ்ட் சிபாரிசுபடி, சில ஆயில்களை உட்கொள்ளலாம்.
அரோமாதெரபி ஆயில்களை சருமம், உடல், கேசம், மனநிலை பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் சாதாரண, ஆயில், டிரை சரும பேஷியல், பிக்மென்ட் நீக்குதல், பொடுகு மற்றும் கேசப்பராமரிப்பு, பரு நீக்குதல், கண்களை சுற்றிய கருவளையம் நீக்குதல் போன்றவைகளை எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் குணப்படுத்த முடியும், “சன் அலர்ஜிக்கு’, வெயிலில் போய் வந்த பின் “கிரேப்வாஷ்’ 2 துளி எடுத்து, முகத்தில் தடவி, 2 நிமிடங்களுக்கு பின் தண்ணீரில் முகம் கழுவினால், வெயிலால் கறுப்பாக ஆன முகம் பளபளபாகும், இது திராட்சை பழ கொட்டையிலிருந்து எடுக்கப்படுவது. திராட்சை பழத்தில் முகம் கழுவவும் செய்யலாம் என்கிறார். மேலும் விவரங்கள் அறிய இவரை 98650 95818, 98946 78392 என்ற எண்களுக்கு ஒரு “ஹலோ’ சொல்லலாம்.

%d bloggers like this: