உடலைக் காக்கும் கற்பங்கள்

கற்பம் என்பது உடலைக் காக்கும் மருந்து அல்லது உடலைக் கற்போல் மாற்றுகின்ற மருந்து எனலாம். கற்பம் உண்டவர் நீண்டநாள் வாழ்வார்

என்றும் கற்பம் உண்டவர் நோயற்று இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
கற்பம் எல்லாப் பொருளினும் சிறந்தது. அல்லது எல்லா முறையினும் சிறந்தது என்று சொல்லலாம்.
மரணத்தை எண்ணியெண்ணி அஞ்சியஞ்சி வாழவேண்டிய உலகத்தில், உடல் அழியாமல் இருக்க நூற்றெட்டுக் கற்பங்கள் இருக்கின்றன.

அவற்றில் ஏதேனும் ஒன்றை உண்பவரின் நரையும் திரையும் நீங்கிவிடுவதுடன், நீண்டநாள் வாழமுடியும் என்று திருமந்திரத்தில்

உரைக்கப்பட்டுள்ளது.
மரணத்தை வென்று நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு வழியும் குறையும் இருக்கின்ற போது, மரண பயம் எதற்கு? சாதாரணமாக, இஞ்சியையும்,

கடும்பகலில் சுக்கையும், மாலையில் கடுக்காயையும் கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், உடல் சுத்தியாகும். விந்து இறுகும்.
நான் ஒன்றுமே செய்ய மாட்டேன். ஓடுகின்ற ஓட்டத்தில் கிடைப்பதையெல்லாம் தின்று கொண்டிருப்பேன்! என்றால், உடலைப் பாதுகாக்க யார்

வருவார்?
முக்கடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியன. முதிர்ந்த எருக்கங்கட்டையை வேருடன் கொண்டுவந்து நிழலில் உலரவைத்துப் பொடி

செய்துகொண்டு, ஒரு நெல்லளவு சுக்குத் தண்ணீரில் உண்டால், வாதப் பிணிகள் நீங்கிவிடும். திப்பிலித் தண்ணீரில் உண்டுவந்தால் கபநோய்கள்

விலகிவிடும். இம்முறையும் கற்பமுறைதான். இவற்றை ஒரு மண்டலம் உண்ண வேண்டும்.
கற்பங்கள் மிகவும் எளிய முறைகளாலானது. மூவகை நோயையும் குணப்படுத்துவதுடன் உடலைக் காக்கும் அரண் போல இருப்பவை. அவற்றை

முறையாக உண்டு வந்தால், நோய் என்பதே இருக்காது. வாழ்வு செழிப்பாகும்.
நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் அனைவரும் கற்பம் அருந்தலாம். நீண்டநாள் வாழ்ந்து மரணத்தை வென்று

நிலைத்திருந்த சித்தர்களால் கண்டறியப்பெற்ற முறைகளில் மிகச்சிறந்த முறை கற்ப முறை.
தூதுவளை, கீரை வகைகளில் ஒன்று. இதன் சிறப்பை அறியாமல் துவையலும் பொரியலும் செய்து தின்று கொண்டிருக்கின்றோம்.
மனிதனுக்குக் கண் எவ்வளவு முக்கியமான உறுப்பு என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. கண் கெட்டுவிட்டால், வாழ்வில் என்ன இருந்து

என்ன பயன்?
திருக்குளத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றித் தூய்மை செய்து, நன்னீர்க்குளமாக மாற்றுவதைப் போல, கண் என்னும் குளத்தில்

படிந்துள்ள பித்த நீரினால், பார்வைக் கோளாறு, ஸாறை, திமிரம் போன்ற குறைபாடுகள் தோன்றுகின்றன. கண் தூய்மையானால்

இக்குறைபாடுகள் நீங்கிவிடும். கண்ணத் தூய்மையாக்குகிறது தூதுவளை கற்பம்.
தூதுவளையைக் கறி, வற்றல், ஊறுகாய், கீரை என்னும் முறைப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால், கண் தூய்மையாவதுடன்

கண்ணொளி கூடும். பகலில் காண்கின்ற பொருள்களை இரவிலும் காணலாம்.
ரத்த சுத்தி
உடல் தூய்மைக்கும் நீண்ட ஆயுளுக்கும் ரத்தம் இன்றியமையாதது. ரத்தம் தூய்மையாக இல்லாமல் உடல் உறுப்புகள் தூய்மையாக இருந்தாலும்

பயனில்லை. இப்போது மருத்துவ வளர்ச்சியின் காரணத்தினால், ரத்த மாற்றுச் சிகிச்சையும் நடைபெறுகறது. அத்தகைய இடர்ப்பாட்டுக்கெல்லாம்

இடந்தராமல், ரத்தத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது, நம் கடமை.
உடலில் நோய் கண்டானால், அந்நோய் ரத்தத்தையும் பாதிக்கிறது. அதனால், ரத்ததைச் சோதித்து உடலில் தோன்றிய நோய்களை

அறிகின்றார்கள். எனவே, ரத்தத்தின் தூய்மைக்கும் உடல் தூய்மைக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நம்பலாம். ரத்தத்தில் தோன்றிய

நோய்க்கிருமிகளை அழிப்பதே மருத்துவத்தின் தலையாயப் பணியாக இருந்துவருகிறது. உடலில் நோய் இருந்தால் உடலில் துர்நாற்றம் வீசும்.

தோலில் நிற மாற்றம் தோன்றும். இதற்கெல்லாம் காரணமாக இருப்பதும் ரத்தத்தில் இருக்கும் நோய்க்கிருமிகளேயாகும்.
ரத்தத்தைத் தூய்மை செய்ய ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை.
ஆடுகளும் மாடுகளும் தின்னக்கூடிய தாவரங்களே ரத்தத்தைத் தூய்மை செய்யப் போதுமானவை என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான்

ஆகவேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை.
‘கரிசாலை, குப்பைமேனி, கரந்தை, வல்லாரை, நீலி, பொற்றலை, செருப்படை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வெருகடி

அளவு, தினமும் தேனில், ஒரு மண்டலம் உண்டு வந்தால், உடலில் உள்ள நோய்களெல்லாம் போகும். ரத்தம் தூய்மையாகும். நோய்க்கிருமிகள்

அழிந்துபோகும்.
உடல் பவளம் போலச் சிவந்து, மணம் வீசும். கண்ணொளி தோன்றும். இரவும் பகல் போலக் காட்சியளிக்கும். விண்மீன்களைக் காணும்

அளவுக்குக் கண்ணின் பார்வை கூர்மையாகும்.

மரணத்தை வெல்க மரணம் என்பது இயற்கை. மரணத்தை மாற்றிக் காண்பதே சித்தர்கள் கண்டறிந்த கற்பங்களின் சாதனை. கற்பங்களே மரணத்தை வெல்லும்மருந்து என்றார்கள்.
திருமூலர் முதலாகச் சித்தர்கள் கூறிய கற்பங்களில் வேம்புக் கற்பம் மரணத்தை வெல்லும் கற்பமாக விளங்குகிறது.
நூறாண்டு கடந்த வேம்பின் பட்டையைக் கொண்டு வந்து நிழலில் உலர்த்திக் கொள்ளவும். பின்னர் இடித்துச் சூரணம் செய்து கொள்ளவும்.

அத்துடன், ஐந்து பங்களவு கருங்குன்றிச் சாற்றைச் சேர்த்து வெயிலில் வைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் நான்கில் ஒரு பங்கு கற்கண்டு

சேர்த்து உட்கொள்ள வேண்டும். இப்படி ஒரு மண்டலம் உண்ண வேண்டும்.

பயன்: உடல் வைரம் போலாகும். கண்ணில் ஒளியுண்டாகும். ஊழ்வினை துன்பங்கள் நீங்கும். நோயில்லாமல் நீண்ட காலம் உடல் நிலைத்திருக்கும். நரம்பு முறுக்கேறி உறுதியுடன் இருக்கும். நரையும் திரையும் போகும்.
கருங்குன்றிச் சாறு கிடைக்காவிட்டால், கரிசாலை, மல்லிகை இவற்றின் சாறு சேர்த்து ஏழு முறை வெயிலில் வைத்து எடுத்து

வைத்துக்கொண்டு, குறிஞ்சித் தேனில் வெருகடி அளவு சாப்பிட்டாலும் பயன் ஒன்றாகவே இருக்கும்.

மரணத்தை வெல்ல இதைவிடவும் எளிய மருந்து வேறு என்ன இருக்கும்? வாழ்வது எளிது. வாழ்க்கைக்குத் தேவையான செயல்முறைகளைத்தெரிந்து கொள்வது எல்லாவற்றையும் விடவும் எளிது.
காயாதி கற்பம்

‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’. தலையில்லாவிட்டால் உடல் வெறும் முண்டம்தான் என்று தலையைச் சிறப்பித்துக் கூறக் காணலாம். தலையைத் தலைமைச் செயலகம் என்றும் கூறுவதுண்டு. உடம்பில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உத்தரவு அளிப்பது தலையே.

தலை நலமாக இருந்தால் உடல் நலமாக இருக்கும். பொதுவாக, உடம்பில் 4448 நோய்கள் தோன்றுவதாகக் குறிப்பிடுகிறது. தமிழ் மருத்துவம், அவற்றுள், தலையில் மட்டும் 1008 நோய்கள் தோன்றுவதாகச் சித்தர் நாக முனிவர் குறிப்பிடுகிறார். தலையென்பது, கண், காது, மூக்கு, தொண்டை, வாய், நாக்கு, பல், உதடு, அன்னம், மூளை, கபாலம், ஈறு, உள்நோக்கு, கண்டம், நெற்றி, புருவம்,கழுத்து, உச்சி ஆகிய உறுப்புகளைக் கொண்டது. இத்தனை உறுப்புகளையும் நலமாக வைத்திருந்தால்தான் வாழ்க்கை நலமாக இருக்கும். ஒரு நோய் வந்தாலே கோடிக் கணக்கில்செலவாகும்போது, இத்தனை நோய்களையும் தீர்க்க வேண்டுமானால் எத்தனை கோடி வேண்டும்? என்று மலைத்திட வேண்டாம். தலை உறுப்புகளில் தோன்றும் அனைத்து நோய்களையும் போக்கி, மீண்டும் அந்நோய்கள் தோன்றமலிருக்க தலையை இரும்புபோல் உறுதியாகச் செய்கிறது, காயாதி கற்பம். கற்பம் என்றால், கல்தூண் போலச் செய்வது என்று பொருள்.மனித உடல் பஞ்ச பூதங்களினால் ஆனது. உடலில் அமைந்திருக்கும் வாத பித்த ஐய நாடிகள் மூன்றும் பஞ்சபூதச் சேர்க்கையினால்இயங்குகிறது. பஞ்சபூதங்களின் சேர்க்கையில் மாற்றம் ஏற்படும்போது நோயுண்டாகிறது. அந்நோய்களுக்கும் பஞ்சபூதமே மருந்தாக அமைகிறது. பஞ்ச பூதம் ஒன்றுகூடினால் உடம்பு பளிங்குபோல ஒளிவீசுகிறது. அத்தகைய பஞ்சபூதங்களின் கலவையே காயாதி கற்பம். கற்பம் அருந்துவது நோய்க்காக மட்டுமல்ல! நோய்த் தடுப்புக்கும், உடலை உறுதி செய்வதற்கும் இது ஏற்றது. நெல்லிக்காய், மிளகு, கடுக்காய், மஞ்சள், வேம்பின் வித்து ஆகிய இவை ஐந்தும் மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களின்கூறுகளாகும்.
பஞ்சபூதங்கள் உடம்பிலும் உலகிலும் மண்5, நீர்&4, தீ&3, காற்று&2, ஆகாயம்&1 என்னும் விகிதத்தில் இருக்கின்றன.
இதன் அடிப்படையில்
நெல்லிக்காய் & மண் – 11/2 பங்கு & 600 கிராம்
மிளகு & நீர்- 1 1/4 பங்கு & 500 கிராம்
கடுக்காய் & தீ -1 பங்கு 400 கிராம்
மஞ்சள் & காற்று – 3/4 பங்கு & 300 கிராம்

வேம்பு வித்து & ஆகாயம்- 1/2 பங்கு & 200 கிராம்

என்னும் அளவில் எடுத்துக் கொண்டு, கடுக்காயை உடைத்து விதையை நீக்கி விட்டு சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, ஐந்து பொருள்களையும் சுத்தம் செய்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.ஓர் ஆழாக்கு பசும்பாலில் ஒரு மேசைக்கரண்டி அளவு காயாதிக் கற்பப் பொடியைச் சேர்த்துக் கலந்து காய்ச்சவும். இளஞ்சூட்டில் தலைக்குத்தேய்க்கவும். குளிக்கும்போது சாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. வெந்நீரில் குளிக்கவும். ஒரு தேக்கரண்டி உள்ளுச்சாப்பிட்டால் வயிற்று சுத்தமாகும்.
இவ்வாறு, வாரம் இருமுறை செய்து வந்தால், தலை நோய் தீரும்; கபாலம் உறுதியாகும்; கண்ணொளி தோன்றும்; இளநீரை மாறும். இது அரியமருந்து.

ஒரு மறுமொழி

  1. thank you very much for u r information. this is very useful to e=me and my family.thank you very much for u.

%d bloggers like this: