Daily Archives: ஜூன் 10th, 2010

பேஸ்புக் வைரஸ் எச்சரிக்கை

சென்ற வாரம் பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பலர் ஏமாற்றப்பட்டு, ஒரு விளம்பர சதிக்கு ஆளானார்கள். உலகெங்கும் உள்ள பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.
பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு, அதில் உள்ள உறுப்பினர் ஒருவர் அனுப்புவது போல மெசேஜ் ஒன்று வருகிறது. அதில், இந்த இடத்தில் கிளிக் செய்தால், இதுவரை நீங்கள் பார்க்காத பாலியியல் படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு லிங்க் கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோ காட்சிக்கு ‘distracting beach babes’ என்று பெயர் தரப்பட்டுள்ளது. சிறிய அளவில், அரைகுறை ஆடையுடன், ஒரு படம் காட்டப்படுகிறது. இதனால் கவனம் திருப்பப்பட்டவர்கள், இந்த படத்தில் கிளிக் செய்கையில், படம் இயக்கப்படாமல் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு, இந்த படம் இயக்குவதற்கான சாப்ட்வேர் உங்களிடம் இல்லை என்றும், அதற்கான சாப்ட்வேர் பெற இங்கு கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. பின்னர் வருமானம் கிடைக்கும் விளம்பர அட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பதியப்படுகிறது. அத்துடன் மற்ற பேஸ்புக் நண்பர்களுக்கு இதே முறையில் செய்தி அனுப்பப்படுகிறது. ஏறத்தாழ 50 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் தளம், தன் தளத்தின் பாதுகாப்பு வழிகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும். இது போல ஏதேனும் பொய் விளம்பரங்கள் கிடைக்கையில், தகுந்த எச்சரிக்கை செய்திகளை அனைவருக்கும் அனுப்ப வேண்டும். ஏற்கனவே இந்த அப்ளிகேஷனுக்கான லிங்க்கில் கிளிக் செய்தவர்கள், தங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இதனை நீக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.
பேஸ்புக் தளத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகையில் அது குறித்து ஆய்வு செய்து தகவல்களைத் தரும் சோபோஸ் குரூப் (Sophos) http://www.facebook.com/pages/Sophos/28552295016 என்ற முகவரியில், தள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும், தகவல்களையும் தந்துள்ளது.

இதயத் தமனி நோய்கள்

பெரியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இதயப்
பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்.
இதயத்தமனி நோய்கள்தான் பெரியவர்களை அதிக அளவில் பாதிக்கின்றன. இதயம், தான் இயங்குவதற்குத் தேவையான ரத்தம், உயிர்வளி,
ஹார்மோன்கள், உயிர்சத்துகள் ஆகியவற்றை வலைபோல் பின்னியுள்ள மூன்று வகையான ரத்தக் குழாய்களின் மூலமாகப் பெறுகின்றன. இந்த
வகையான ரத்தக் குழாய்களைத்தான் இதயத் தமனிகள் (CORONARY ARTERIES) என்கிறோம்.இந்த ரத்தக் குழாய்களின் வழியாக ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடினால்தான் இதயம் நன்கு செயல்பட முடியும். இதயம் ஒவ்வொரு
முறையும் சுருங்கி விரிந்து செயல்படும்போது நமது உடலில் உள்ள மொத்தம் 50 டிரில்லியன் ( Trillion) செல்களுக்குத் தேவையான ரத்தத்தை
ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள ரத்தக் குழாய்களின் மூலமாகச் செலுத்துகின்றன.நமது உடலில் உள்ள கை, கால்கள் போன்ற புறப்பகுதிகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள், மிக நுண்ணிய குழல்களாக மாறுகின்றன. இந்த நுண்
குழல்கள், ஒரு மில்லி மீட்டர் உள்விட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் ஒரு பகுதி என்ற அளவில்தான் இருக்கும். இன்னும் சில பகுதிகளில்
நுண்குழல்களானது தலைமுடியின் குறுக்கு விட்டத்தில் நூறில் ஒரு பங்கு என்ற அளவில் மிக மிக நுண்ணியதாக இருக்கின்றன.
எந்த வகையான தீய பழக்கவழக்கங்களும் இல்லாமல்ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனின் இதயத் தமனிகள் மெனபானத்தை
உறிஞ்சப்பயன்படும் குழல் அளவிலும் (DRINKING STRAWS) நெகிழ்ந்து விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாகவும், ரத்தம் தங்கு
தடையில்லாமல் செல்லும் வகையிலும் இருக்கும்.
சாதாரண நிலையில் இப்படி நன்றாகச் செயல்படும் இதயத் தமனிகள் பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளாகி சிதைவடையக்கூடும். இதனால்
அவற்றின் நெகிழ்ந்து விரியும் தன்மையும் பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சரிவர நடைபெறாத நிலை உருவாகும். இதன் விளைவாக இதயத்தின்
இயக்கமும் ஆரோக்கியமாக இருக்கிறது. இத்தகைய நிலையைத்தான் இதயத்தமனி நோய்கள் (CORONARY HEART DISEASES) என்கிறோம்.
இதயத்தமனி நோய்கள் ஏற்பட பலவகையான காரணங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் முக்கியமானவையாக ரத்தமிகு அழுத்த நோய் (Hyperˆenvion) உடல் பருமன் (Obaviˆy) அன்றாட உணவில் கொழுப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுதல், ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு அதிகமாதல் போன்றவற்றைச் சொல்லலாம்.
நன்றாகச் செயல்படும் இதயத் தமனிகளைத் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், போதுமான உடற்பயிற்சி செய்யாமை இருப்பது,
புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், மன இறுக்கம் போன்றவற்றால் நாமும் கொஞ்சம், கொஞ்சமாகச் சிதைத்து வருகிறோம்.
இதயத்தமனிகளில் உண்டாகும் சிதைவு மாற்றங்கள் சில நாள்களிலோ அல்லது சில வாரங்களிலோ ஏற்படுவதில்லை. படிப்படியாக பல
ஆண்டுகளாக உடலில் ஏற்படும் ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இந்தப் பாதிப்பு உருவாகிறது. ரத்தக் குழாய்களின் வெளிப்பகுதிகளில் நடைபெறும்
இவற்றை நாம் முழுமையாக உணர முடிவதில்லை. திடீரென ஒரு நாள் நம்முடைய மார்புப் பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும்
போதுதான் அதன் கொடுமையை உணர்கிறோம்.
இதயத் தமனிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக விளங்குவது ரத்தமிகு அழுத்த நோய். இந்த நோயால்
பாதிக்கப்பட்டவர்களின் இதயம் ஒவ்வொரு முறையும் அளவுக்கு அதிகமான அழுத்தத்தோடு ரத்தத்தைக் குழாய்களின் வழியே அனுப்பும். இந்த
அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தமனிகளின் வெளிப்பகுதிகளில் சிதைவு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் தமனிகள்
சிதைவடைவதால் அவற்றின் வெளிப்பகுதிகளில் அழற்சி (INFLAMATION) ஏற்படுகிறது. இதன் விளைவாக தமனிகளின் உள்பட்டமானது
காலப்போக்கில் கொஞ்சம், கொஞ்சமாகக் குறுகிவிடுகிறது. ஒருவர் அடிக்கடி புகைப்பிடிப்பவனாக இருக்கும்பட்சத்தில் அவருடைய இதயத்
தமனிகள் மேலும் சிதைவடைவதோடு நெகிழும் தன்மையை இழந்து சுருங்கிவிடுகின்றன. இதனால் இதயத் தமனிகளில் ரத்த ஓட்டம் கொஞ்சம்,
கொஞ்சமாகத் தடைபடுகிறது.
இவ்வாறு இதயத் தமனிகளில் ரத்த ஓட்டத்தைத் தடை செல்வதில் கொலஸ்ட்ராலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அடர்த்தி அதிகமான
கொழுப்புப் புரதம் (High Denviˆy Lipo proˆein-HDL) என கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உண்டு. இவற்றில் எல்.டி.எல். வகை
கொலஸ்ட்ரால்தான் இதயத் தமனிகள் அடைப்பில் முக்கியமான வில்லனாகச் செயல்படுகிறது.அதனால்தான் இவ்வகையான கொலஸ்ட்ரால், தீமை தரும் கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் தீமை தரும் கொலஸ்ட்ராலின்
அளவு அதிகமாகும்போது கெட்டியான கஞசி போன்ற பிசுபிசுப்பான பொருள்கள் உருவாகின்றன. இவை அளவுக்கு அதிகமாக உற்பத்தி
செய்யப்படும் போது இதயத் தமனிகளின் உள்பகுதியில் படிந்து அவற்றின் உள்விட்டத்தின் அளவைக் குறைக்கின்றன.
ஏற்கெனவே இதயத் தமனிகள் நெகிழும் தன்மையை இழந்து தடித்து உள்விட்டமானது சுருங்கிப்போன நிலையில் இருக்கின்றன. இதபோதாதென்று கஞ்சி போன்ற பிசுபிசுப்பான பொருள்கள் ஒட்டுவதால் ரத்தக் குழாய்களின் சுருக்கம் மிகவும் அதிகமானிறது. இதனால் சீரான ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
மேலும் ரத்தத்தின் மூலகங்களான தட்டகங்கள் நார்ப் பொருள்கள், சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவை ஒன்றாகக் குழுமி, ஒரு
பெரிய ரத்தக் கட்டியாக உருவாகி, இதயத் தமனியை முழுமையாக அடைத்துவிடுகின்றன. இதன் விளைவாக இதயத் தசைகள் இயங்குவதற்குத்
தேவையான ரத்தத்தைப் பெற இயலாது மடிகின்றன. இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.

1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்

ஓராயிரம் டிவிடிக்களில் பதியப்படும் டேட்டாவினைக் கொள்ளக் கூடிய டிஸ்க் ஒன்றைத் தயாரிக்க முடியும் என்ற முடிவிற்கு, ஜப்பானிய விஞ்ஞானிகள் வந்துள்ளனர். டோக்கியோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும், வேதியியல் பேராசிரியர் ஷின் இச்சி ஒக்கோஸி இந்த சிடி தயாரிப்பதற்கான டைட்டானியம் ஆக்ஸைடின் புதிய கிறிஸ்டல் வடிவத்தினைக் கண்டுபிடித்துள்ளார். அடுத்த சந்ததியின், டேட்டா பதிந்திடும் மெட்டலாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். மெட்டலுக்கும் செமி கண்டக்டருக்கும் இடையே ஆன் – ஆப் பணியினை அதிவேகத்தில் இதன் மூலம் மேற்கொள்ள முடியும். இதனால் டேட்டா பதிவதும் படிப்பதும் கூடுதல் வேகத்தில் நடைபெறும் என்றார்.
அவரின் தலைமையில் பணியாற்றும் விஞ்ஞானிகள், ஐந்து முதல் இருபது நானோ மீட்டர் அளவில், இதற்கான உலோகப் பொருளைத் தயாரித்துள்ளனர். (ஒரு நானோ மீட்டர் என்பது, ஒரு மீட்டரின் விட்ட அளவில் 500 கோடி முதல் 2000 கோடிகளில் ஒரு பங்காகும்) இந்த சிறிய மெட்டல் கிறிஸ்டல் துணுக்கினைப் பயன்படுத்தி, டிஸ்க் தயாரிக்கையில், அதில் தற்போதைய புளு ரே டிஸ்க்கில் கொள்ளக் கூடிய டேட்டாவினைப் போன்று, ஆயிரம் மடங்கு டேட்டாவினைக் கொள்ளும். (புளு ரே சிடியின் ஒரு லேயரில், வழக்கமான டிவிடியில் கொள்ளும் டேட்டாவினைப் போல ஐந்து மடங்கு டேட்டா பதிய முடிகிறது)
தற்போது டைட்டானியம் ஆக்ஸைட் கொண்டுதான் புளு ரே, டிவிடி மற்றும் சாதாரண சிடிக்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மெட்டல் மலிவான விலையில் உலகெங்கும் கிடைக்கிறது. முகத்திற்கு போடும் டால்கம் பவுடரிலும், வெள்ளை வண்ண பெயிண்ட்டிலும் இது பயன்படுத்தப்படுகிறது என்றால், அதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மையினை நாம் உணரலாம். அதே மெட்டலில் இருந்து பெறும், கிறிஸ்டல் பயன்படுத்தி சிடிக்கள் தயாரிப்பதும் எளிதாகும்.