Daily Archives: ஜூன் 11th, 2010

மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!

மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும், கூடுதலான வருமானத்திற்காகவும் கணவரை போலவே வேலைக்கு செல்லும் பெண்கள் இன்றைய சூழ்நிலையில் அதிகம். வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகளை அவர்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவிகள் நிலைதான் தலைகீழ்! கணவன் உற்சாக

படுத்தியதால் சாதித்தவர்களும் இவர்களில் உண்டு; கணவன் கண்டுகொள்ளாததால் ஏதோ வாழ்ந்துவிட்டு போனவர்களும் உண்டு.

அதனால், குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் மனைவியரின் மனதிற்குள் என்னென்ன திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன என்பதை அறிய வேண்டிய பொறுப்பு கணவர்களுக்கு வேண்டும்.

அதற்காக ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. யதார்த்தமான சூழ்நிலையில் கூட மனைவியின் திறமை பளிச்சிடலாம்.

`மிதத்தல் விதி’யை கண்டுபிடித்த ஆர்க்கிமிடிஸ் யதார்த்தமான சூழ்நிலையில் தான் அதை கண்டறிந்தார். அவர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் சைரகூஸ். புதிதாக தங்கக் கிரீடம் ஒன்று செய்து, அதை, தான் அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்பது மன்னரின் ஆசை. சில நாட்களில் தங்கக் கிரீடத்தை தயார் செய்து கொடுத்தனர், அமைச்சர்கள்.

தன்னுடைய விருப்பபடிதான் அந்த கிரீடம் தயார் செய்யபட்டு இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள விரும்பிய மன்னன், அந்த தங்கக் கிரீடத்தின் ஒட்டுமொத்த அளவையும் தெரிந்து கொள்ள ஆசைபட்டார். ஆனால், அவருக்கு அதை எப்படி அளவெடுப்பது என்று தெரியவில்லை. அதுபற்றி யோசித்தவருக்கு குழப்பம்தான் மிஞ்சியது.

உடனே, ஆராய்ச்சியாளர் ஆர்க்கிமிடிசை வரவழைத்தார். நடந்த விஷயத்தை சொன்னார். மன்னர் சொன்னபடி பல நாட்கள் யோசித்து… யோசித்து… அவரும் குழம்பி போனதுதான் மிச்சம். கிரீடத்தின் வெளி அளவுகளை வேண்டுமானாலும் அளந்து விடலாம், மொத்த கொள்ளளவையும் எப்படி கண்டுபிடிப்பது என்று பரிதவித்தார்.

ஒருநாள் குளியலறையில் நீர் நிரப்பபட்டு இருந்த தொட்டிக்குள் அமர்ந்து குளிக்க ஆரம்பித்தார் ஆர்க்கிமிடிஸ். அப்போது சிறிதளவு தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறி கொட்டியது. அப்போதுதான் அவரது முளையில் அந்த ஐடியா பளிச்சிட்டது. தங்கக் கிரீடத்தின் மொத்த கொள்ளளவை கண்டுபிடிக்க உதவிய `மிதத்தல் விதி’யை கண்டறிந்தார்.

அந்த மகிழ்ச்சியில், குளியலறையில் இருந்து எழுந்த ஆர்க்கிமிடிஸ், தான் ஆடையின்றி இருப்பதைக்கூட மறந்து மகிழ்ச்சியில் மன்னரின் சந்தேகத்திற்கு தீர்வு சொல்ல ஓடினார் என்ற தகவலும் உண்டு.

ஆக, பல நாட்கள் குழம்பித் திரிந்த ஆர்க்கிமிடிஸ், ர் நிரம்பிய தொட்டியில் குளித்ததால்தான் மிதத்தல் விதியை கடறிந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு யதார்த்தமாகவே அமைந்தது.

இதேபோன்று அமைந்தது தான், உலகின் மிகபெரிய இந்துக் கோவிலான அங்கோர்வாட் கோவிலை கண்டறிந்த சூழ்நிலையும்.

கம்போடியாவின் காடுகளுக்குள் அமைந்திருந்த இந்த பிரமாண்ட கோவில் கி.பி.1860-ம் ஆண்டு வெளிலக வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, பட்டுபூச்சி சேகரிப்பதை பொழுதுபோக்காக கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி முகோட் என்பவர் கம்போடியா காடுகளுக்குள் நுழைந்தார்.

ஒருநாள் அவரது பார்வையில் வினோதமான பட்டுபூச்சி தென்பட்டது. அதை பிடித்தே தீருவது என்று அதை பின்தொடர்ந்து ஓடினார். அந்த பட்டுபூச்சி அவரை காட்டுக்குள் வெகுதூரம் அழைத்துச் சென்று விட்டது.

ஒருகட்டத்தில் பட்டுபூச்சியை பிடிக்க முடியாமல் போனவர், இடிபாடுகள் நிறைந்த இடத்திற்குள் சிக்கிக்கொண்டார். அடர்ந்த காட்டுக்குள் எப்படி கட்டிடங்கள் இருந்து, இடிந்துபோன சுவடுகள் இருக்க முடியும்? என்று யோசித்தவர், பட்டுபூச்சியை மறந்து, அந்த இடிபாடுகள் பற்றி ஆராய ஆரம்பித்துவிட்டார்.

அந்த ஆராய்ச்சியின் பயனாக, 38 சதுர மைல் பரப்பளவில் அமைந்த உலகிலேயே மிகபெரிய பண்டைய கோவிலான அங்கோர்வாட் கோவிலையும், அந்த நகரையும் கண்டுபிடித்தார்.

ஹென்றி முகோட்டுக்கு முன்பே இந்த பகுதி இடிபாடுகள் பற்றி அறிந்த சிலர், அதை குறிப்புகளாக மாத்திரம் எழுதி வைத்திருந்தனர். ஆனால், `முயற்சி திருவினையாக்கும்’ என்பதை நி ருபித்தவர் ஹென்றி முகோட் தான். அதிர்ஷ்டம் எப்போதாவது ஒருமுறைதான் கதவைத் தட்டும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், மீண்டும் அதிர்ஷ்டம் வராது என்பார்கள். அதுபோன்றதுதான், சாதனை படைக்க தேவையான சூழ்நிலைகளும்.

அதுபோன்ற சூழ்நிலைகளை ஒவ்வொரு கணவன்மார்களும், தங்களது மனைவியருக்கு ஏற்படுத்திக் கொடுத்தால், இல்லத்தரசிகளும் சாதனை அரசிகளாக ஜொலிப்பார்கள்.   என்ன செய்யலாம்? சில பெண்கள் குடியிருக்கும் வீட்டை அழகாக அலங்கரித்து வைத்திருப்பார்கள். இவர்களிடம் கற்பனை நிறையவே கொட்டிக்கிடக்கும். அதை, எப்படி வெளியில் உபயோகிப்பது என்று தெரியாமல், வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களை சரியாக ஊக்கபடுத்தினால், `இன்டீரியர் டெகரேஷன்’ எனப்படும் உள்அரை அலங்காரத்தில் ஜொலிப்பார்கள். சிலர், தங்களது கற்பனைக்கு ஏற்ற பொருட்களை, குபையில் வீசப்படும் பொருட்களை பயன்படுத்தியே உருவாக்கி விடுவார்கள். இவர்களை கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெறும் இடங்கள், கைவினை பொருட்கள் விற்கபடும் ஷோ ரும்களுக்கு அழைத்துச் சென்று ஊக்கபடுத்தினால் இன்னும் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். அந்த துறையில் தொழிலதிபராக வரக்கூடிய வாய்புகளும் உண்டு. சில இல்லத்தரசிகள் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள். வேலைக்கு செல்லாத காரணத்தால் அவர்களது திறமைகள் அவர்களுக்குள்ளாகவே முடங்கிபோய் கிடக்கும். இவர்களிடம் ஆங்கில பேச்சாற்றல் திறன் இருந்தால், `ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பு நடத்தவோ, அல்லது பிற பாடங்களுக்கு `டியுஷன்’ எடுக்கவோ ஊக்குவிக்கலாம். இன்றைய பெரும்பாலான இல்லத்தரசிகள் எம்ராய்டரிங், டெய்லரிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எம்ராய்டரியில் எவ்வளவோ லேட்டஸ்ட் டிசைன்கள் வந்துவிட்டன. அந்த டிசைன் ஆடைகள், படங்கள் போன்றவற்றை இவர்களுக்கு வாங்கிக்கொடுத்து ஊக்குவிக்கலாம். டெய்லரிங்கிலும் அப்படித்தான். எந்தவொரு வித்தியாசமான ஆடைக்கும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உண்டு. அதனால், அவர்களது கற்பனையை மெருகூட்டும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். அவ்வப்போது மனைவியை சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்விப்பது, அவரது மனதில் புதிய ஆரோக்கியமான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும். எதற்கும் ஒரு அங்கீகாரம் கொடுத்தால், உடனே உற்சாகம் பிறந்துவிடும். உங்கள் மனைவி செய்யும் சின்னச்சின்ன சாதனைகளைக் கூட பிரமாதமாய் வரவேற்றிடுங்கள். உங்களது இந்த வரவேற்பு, அவரை பல சாதனைகளைச் செய்யத் தூண்டும்.

நிட்ரோ பி.டி.எப். ரீடர்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர், இப்போது தங்களுடைய பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க, அடோப் பிடிஎப் ரீடருக்குப் பதிலாக, வேறு பி.டி.எப். ரீடர்களைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதற்குக் காரணம், பல வைரஸ் புரோகிராம்கள், அடோப் நிறுவன அப்ளிகேஷன் புரோகிராம்களைக், குறிப்பாக அடோப் பி.டி.எப். ரீடர் தொகுப்பினைப் பயன்படுத்தியதுதான். இதற்கு வேறு காரணங்களும் இருந்தன. இந்த புரோகிராம்களில், பிடிஎப் பைல்கள் வேகமாக இறங்கின. சிறப்பான கூடுதல் வசதிகளும் தரப்பட்டன. இவற்றில் பிரபலமானவை பாக்ஸ்இட் ரீடர், சுமத்ரா மற்றும் பிடிஎப் எக்சேஞ்ச் வியூவர் ஆகும்.
அண்மையில் இன்னுமொரு பிடிஎப் ரீடர் தொகுப்பினைக் காண நேர்ந்தது. இதன் பெயர் நிட்ரோ பிடிஎப் ரீடர் (Nitro PDF Reader). இதுவும் மற்ற பிடிஎப் ரீடர்களைப் போல இலவசமாகவே கிடைக்கிறது. இது மற்றவற்றைக் காட்டிலும் வேகமாகவே இயங்குகிறது. இதில் தரப்படும் எடிட்டிங் மற்றும் சேவிங் வசதிகள் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு உள்ளது.இதன் அனைத்து ஆப்ஷன்களும், அதன் ஹெடரிலேயே தரப்பட்டுள்ளதால், அவற்றை அணுகிப் பெறுவது எளிதாகிறது.இதில் எடிட் செய்யப்படும் பிடிஎப் பைல்கள், மற்ற பிடிஎப் ரீடர் புரோகிராமிலும் படிக்க முடிகிறது. இந்த புரோகிராம் http://www.nitroreader.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் இயக்கத் தொகுப்புகளுக்கென இது உருவாக்கப்பட்டுள்ளது. அவசியம் இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.

மகிழ்ச்சியை தருபவர் யார்?

மகிழ்ச்சியைத் தேடி ஒவ்வொருவரும் எங்கெங்கோ செல்கின்றனர். சினிமா, பார்க், பீச், சர்க்கஸ், சுற்றுலா என்று அவர்கள் செல்லாத இடமே இல்லை. உண்மையில் மகிழ்ச்சி எங்கு உள்ளது என்று ஆராய்வோமானால், கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு, அதைத் தேடி ஊர் முழுக்க அலைந்த கதையாகத் தான் இருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியாக யார் தான் இருக்கிறார்கள்? மகிழ்ச்சியும், துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. எல்லா செயலையும் அழகுணர்ச்சியுடன் செய்யும் போது தான் அதை நாம் நன்றாக செய்ய முடிகிறது. அப்படி செய்யும் போது தான் அவன் அந்த துறையில் ஒரு உன்னத கலைஞனாகிறான்.

ஒரு கலைஞனுக்கு முக்கியத் தேவை தன்னம்பிக்கை. தன்னால் இந்தக் காரியத்தை எல்லாம் சாதிக்க முடியுமா? என்ற அவநம்பிக்கை ஒருவருக்கு இருந்தால் அவரால் சாதிக்கவே முடியாமல் போய் விடும். தன் ஆற்றல் மீது முழு நம்பிக்கை கொண்டு இடைவிடாமல் உழைப்பவர்களாலேயே நிச்சயம் சாதிக்க முடியும்.

பிறர் தன்னை விமர்சிப்பதற்கு முன் தானே தன்னை விமர்சித்துக் கொள்ள வேண்டும். தனக்குத் திருப்தி ஏற்படுகின்ற வரை எழுதுகிறவன் சிறந்த எழுத்தாளனாகிறான். தன் மனம் நிறைவு பெறும் வரை படம் வரைகிறவன் ஓவியனாகிறான். தானே ஒரு இசையைக் கேட்டு, மெய்மறக்கும் வரை, மனமொன்றி பாடுகிறவன் இசைக்கலைஞனாகிறான்.

எந்த ஒரு கலைஞனுக்கும் தூண்டுகோலாக இருப்பது அவனது சுய திருப்தியே. எந்த ஒரு கலைஞனுக்கும் உன்னதமான பரிசு என்பது ரசிகர்களின் பாராட்டுக்கள் தான். விமர்சனத்தைக் கண்டு அஞ்சாதவனே உண்மையான கலைஞனாகிறான். தொடர் தோல்வியால் துவளும் போது சிலர் கலையை விட்டு விட்டு ஓடி விடுகின்றனர். உலக மக்களின் விருப்பத்தை ஒரு பொருட்டாக கருதாமல், தனது திறமையை திறம்பட வளரப்பவன் காலபோக்கில், உலக மக்களின் விருப்பமாகவே மாறிவிடுகிறான்.

நாம் நம்மை கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொண்டு பிறரை ஏமாற்ற முயன்றால், வசமாக மாட்டிக் கொள்ள நேரும். நம்மை விடக் கெட்டிக்காரர்கள் உலகில் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.

நாம் ஒருவரிடம் உதவியை பெறும்போது நமது தேவையை மட்டும் கருதிக்கொண்டு உதவியைக் கேட்கக்கூடாது. நமக்கு உதவுபவர் எந்த தகுதியில் இருக்கிறார் என்பதையும் புரிந்து அவரிடம் உதவி பெற வேண்டும். உலகில் வாழும் அனைவரையும் தன் சகோதர, சகோதரிகளாக பாவிக்கிறவரால் தான் மனம் தளராமல் பிறருக்கு உதவி செய்ய முடியும்.

உழைத்து வாழும் போது தான் ஒரு மனிதனுக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கிறது. உழைப்பை போல சிறந்த நண்பன் உலகில் எவரும் இல்லை என்றே சொல்லலாம். புன்முறுவல், துணிவு, நம்பிக்கை, நாணயம், ஒற்றுமை போன்றவைகளைக் கொண்டு சிறப்பாக தொழில் செய்பவர்களையே உலகம் வியந்து போற்றுகிறது. `எல்லாம் என் தலையெழுத்து’ என்று அழுது கொண்டு எந்த ஒரு தொழிலையும் செய்பவர்களை யாரும் விரும்புவதில்லை. அவர்கள் முன்னேறுவதுமில்லை. எப்படி இருந்தார்களோ, அப்படியே தான் இருப்பார்கள். நம்மிடம் எது இல்லையோ, அதை மற்றவர்களுக்குத் தர முடியாது. அழுது கொண்டே இருப்பவர்களால் மற்றவர்களுக்கு எந்த ஒரு மகிழ்ச்சியையும் தந்து விட முடியாது. அப்படி என்றால், மகிழ்ச்சியை யாரால் தர முடியும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுங்கள். மகிழ்ச்சியானவர்களால் இந்த உலகம் பெரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.

வண்ணமயமான வாழ்க்கை வேண்டுமா?

சூரியனின் ஒளி, வெளிப்பார்வைக்கு வெண்மை நிறம்போலத் தோன்றும். அது, எல்லா நிறங்களையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. சூரிய
ஒளியில் ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு என்னும் ஏழு நிறங்கள் உள்ளன. இந்நிறங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே
எடுத்து அது அதற்குரிய அளவின்படி சேர்த்துக் குழைத்தால், இறுதியில் வெண்மை நிறம் தோன்றுவதைக் காணலாம்.
சூரியவொளியில் ஏழு நிறங்கள் அடங்கியிருப்பதை அறிந்த முன்னோர்கள், அதனை வெளிப்படையாகக் கூறாமல், அறைத்துக் கூறினார்கள்.

சூரியன் பவனி வருகின்ற தேரில் ஏழு குதிரைகள் பூட்டியிருப்பதாகக் கூறியுள்ளது, சூரியவொளியில் ஏழுவண்ணங்கள் இருப்பதைக் குறிப்பதாகும்.
சூரியனின் தேருக்கு ஒரு சக்கரம் மட்டுமே என்பது, உலகம் என்பதையும் அது உருண்டு கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பதாகும்.

மனிதவுடம்பிலுள்ள புறவுறுப்புகளும் அகவுறுப்புகளும் ஏழுவகை நிறங்களோடு கூடியிருக்கின்றன. உடல் உறுப்புகள் செழிப்பதாகவும்

செம்மையாகவும் இருக்கும் போது, உறுப்புகளின் நிறங்களும் செம்மையாக இருக்கும். உறுப்புகள் நோய்க்குள்ளாகும்போது, உறுப்புகளின் நிறமும்
குன்றிவிடும்.

உறுப்புகள் இழந்த நிறத்தை மீண்டும் பெற வேண்டுமானால், உறுப்புகள் அடைந்த பிணி போக வேண்டும், பிணி போக வேண்டுமானால்,
நோய்க்குரிய மருந்துண்ண வேண்டும். நோய் எந்த நிறத்தைக் கொண்டதோ அந்த நிறத்து மருந்து அந்த நோயைத் தீர்க்கக் கூடியது.
செயற்கைப் பொருள்களைப் பாதுகாக்க பூசப்படுகின்ற நிறம் வெளுத்துவிட்டால், மீண்டும் நிறம் பூசுவதைப் போல உறுப்புகளைப் பாதுகாக்கும்
நிறம் ஒளியிழந்துவிட்டால், மீண்டும் உறுப்புகள் நிறம்பெறச் செய்ய அதற்குரிய நிற நீரைப் பருக வேண்டும்.நிற நீர் என்பது, நிறம் கலந்த நீரல்ல.
சூரியவொளி இயற்கைப் பொருள்களால் ஆனது. அது போல், உடம்பினது உறுப்புகளும் இயற்கைப் பொருள்களானது என்பதால், இயற்கையான
நிறத்தையேஉறுப்புகளுக்கு ஏற்ற வேண்டும்.பல நிறமுடைய கண்ணாடிக் குப்பிகளில் சுத்தமான தெனி நீரைநிரப்பி, சூரியவொளியில்
வைத்தெடுத்து, அந்த நீரைப் பருகி வந்தால், உடம்பில் குறைந்துபோன நிறம் மீண்டும் ஒளிபெறும். உறுப்புகள் இழந்த நிறத்தை மீண்டும் பெற்று
அழகுடன் விளங்கும்.சூரியவொளி நிறம் ஏழு எனச் சொல்லப்பட்டாலும் அவை ஏழும் இரண்டு நிறங்களுள் அடங்கும். அவை இரண்டும் சிவப்பு,
நீலம் ஆகும். இவ்விரண்டு நிறங்களின் சேர்க்கையால் பல நிறங்கள் தோன்றுகின்றன.
உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆற்றல்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்தால் அவை வெப்பம், தட்பம் என்னும் இரண்டு அடங்கும்.
பருப்பொருளை நுண்ணியதாக்கி விரிவடையச் செய்வது, சூடு. இது வெப்பம். நுண்ணிய பொருளை ஒருங்கு திரட்டுவது, குளிர்ச்சி. இது தட்பம்.
வெட்பமும் தட்பமும் தம்மில் மிகாமலும் குறையாமலும் ஒத்து நிற்குமானால், உலகமாகிய பேருடம்பும் உடலாகிய சிற்றுடம்பும் சிதைந்து
போகாமல் நிலைத்து நிற்கும். அவ்வாறல்லாமல், ஒன்று மிகுந்தும் ஒன்று குறைந்தும் இருக்குமானால், உலகமும் உடம்பும் நிலைகுலந்து
போகும்.

உலகத்துக்கும் உடலுக்கும் வெப்பத்தைத் தருவது, சூரியன். தட்பத்தைத் தருவது, சந்திரன்.சூரியனைப் பூமி சுற்றுவதனாலும் பூமியைச் சந்திரன்
சற்றுவதனால் தட்பமும் வெப்பமும் தம் நிலையிலிருந்து மாறாமல் நிலை நிறுத்தப்படுகின்றன. சூரியனின் ஒலியலையும் சந்திரனின்
ஒலியலையும் உடம்புக்கு வேண்டிய அளவு சூட்டையும் குளிர்ச்சியையும் அளிக்கின்றன.உடம்புக்குத் தேவையான வெப்பத்துக்கும் தட்பத்துக்கும்
நிறத்துக்கும் என்ன தொடர்பு என்பதைப் பார்க்கலாம்.சிவப்பு நிறம் வெப்பத்தையும் நீல நிறம் குளிர்ச்சியையும் கொண்டவை. தட்பமும்
வெப்பமும் சமமாக இருக்கும் போது, உடம்பில் நீலமும் சிவப்பும் சமமாகவே இருக்கும்.
உடம்பில் சூடு மிகுந்து காணப்பட்டால் சிவப்பு நிறம் மிகுந்திருக்கும். குளிர்ச்சி மிகுந்திருந்தால் நீல நிறம் மிகுந்திருக்கும்.சிவப்பு நிறம்
மிகுதியானால், வெப்பு நோய் (அம்மை நோய்) இளைப்பு, எலும்புருக்கி, நீரிழிவு, சொறிசிரங்கு முதலியன உண்டாகும். பித்தம் பெருகும். உண்ட
உணவு செரிக்காது. மயக்கம், கிறுகிறுப்பு, மஞ்சள்சாமாலை முதலிய நோய்கள் ஏற்படும்.நீல நிறம் மிகுதியானால் கோழை கட்டும். உடம்பு
அளவுக்கு மேல் பருமனாகும். திமிர்ப்பு உண்டாகும். கால், கைகளில் பிடிப்பு ஏற்படும். செரியாமை, நீர்க்கட்டு, சளி, ஈளை, இருமல், இளைப்பு
முதலிய நோய்களைத் தோற்றுவிக்கும்.இங்ஙனம், இந்நிறங்கள் சமநிலை கெடும்போது உடம்பில் பலவகை நோய்களை உருவாக்கும்.
மனித உடம்பு பருவுடம்பு, நுண்ணுடம்பு என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. பருவுடம்பும் அதன் உறுப்புகளும் அவற்றில் பரவியிருக்கும்
நிறங்களையும் முதலாகக் கொண்டே அவற்றினால் உண்டாகும் விளைவுகளும் இருக்கும்.நுண்பொருள்கள் பருப்பொருளின் முதலாகும்.

பருவுடம்பை இயக்குவது நுண்ணுடம்பு. நுண்ணுடம்பை இயக்குவது, உயிர். பருவுடம்பில் நோய் ஏற்பட்டால், அந்நோய் நுண்ணுடம்பையும்
பாதிக்கும். நோய்கள், பருவுடம்பில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கும். அதனால் பருவுடம்புக்கே மருத்துவம் காண்பார், பலர்.
பருவுடம்பில் காணக்கூடிய நோய்க்கு முதலாக இருப்பது நுண்ணுடம்பை அடைந்திருக்கும் நோயேயாகும். நுண்ணுடம்பிலுள்ள நோயை நீக்க
எண்ணுவோர் ஒரே சிலரே.
நுண்டம்பின் நோயை நீக்கக் கூடியது நுண்ணிய முறைகளே. நுண்ணுடம்பு உயிரின் இயக்கத்தினால் இயங்குகிறது. உயிரின் வலிமையைக்
கொண்டே நுண்ணுடம்பின் நோயை நீக்க முடியும். ஆகவே, உயிரின் வலிமையை வலுப்படுத்த வேண்டும்.உலகிலுள்ள ஆற்றல்கள் அனைத்தும்
தட்பவெப்பங்களுக்குள் அடங்கும் என்றும் அவற்றின் நிறங்களெல்லாம் சிவப்பு நீலம் ஆகிய இரண்டினுள் அடங்கும் எனக் கண்டோம்.தட்ப
வெப்பங்களினால் உண்டாகக்கூடிய நோய்களைப் போக்குவதற்கான வழி, அவற்றின் நிறங்களை இடைவிடாது அகக்கண்ணால் கண்டு, நினைவில்
பதியச் செய்வதேயாகும்.உயிரல்லாத வெற்று நிறங்களை நினைப்பதனால், அவற்றை நினைக்கும் உயிரும் நுண்ணிய ஆற்றல்
பெறாமலாகிவிடும். எனவே, வெற்று நிறங்களை நினைவில் எண்ணுவதால் எந்தப் பலனும் ஏற்படாது.
பேரறிவும், பேரருளும், பேராற்றலும் உடைய பேருயிரை பேருடம்பு உடையதாகக் கருதிக்கொண்டு, அந்த அருளுடம்பின் வலப்புறத்தில்
செந்நிறமும் இடப்புறத்தில் நீல நிறமும் விளங்குவதைக் கண்டு கொள்ள வேண்டும். அவ்வாறு கண்டு கொண்டதை நினைவில் நிலைகுலையாது
பதியவைத்துக் கொண்டால், கிடைத்தற்குரிய நன்மைகளும் நலன்களும் வந்து சேரும்.வெப்பமான செந்நிறத்தை உடம்பின் வலது புறத்திலும்,
குளிர்ச்சியான நீல நிறத்தை உடம்பின் இடது புறத்திலும் கண்டுநினைவை ஒரு நிலைப்படுத்திவந்தால், இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டிய
எல்லா இன்பங்களும் பெறுவது எளியதாகிவிடும்.இதனையே மெய்ந்நூல்கள் ஆண் பெண் இணைந்த அம்மையப்பர் வடிவமெனக் கூறுகின்றன.
இத்தகைய சிவப்பு, நீல நிற வழிபாட்டினால், நுண்ணுடம்பிலுள்ள நோய்கள் தீரும்.இதுவரை நிறங்களின் மூலத்தைக் கண்டோம். இனி, பிற
நிறங்களின் பொதுக்குணங்களைக் காண்போம்.மனித உடலில் சிறியதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. அவற்றுள்
முதன்மையானவை ஏழு.

முதலாவது சக்கரம், முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. அதற்கு மூலாதாரம் என்று பெயர். இரண்டாவது சக்கரம், தொப்புளின்
அருகில் உள்ளது. அது சுவாதிட்டானம்.மூன்றாவது சக்கரம், வயிற்றின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. அது, மணிப்பூரகம்.
நான்காவது சக்கரம், நெஞ்ப் பகுதியில் உள்ளது. அது அநாகதம்.ஐந்தாவது சக்கரம், தொண்டைக்குழியில் உள்ளது. அதற்கு, விசுத்தி என்று பெயர்.
ஆறாவது சக்கரம், நெற்றிப் பகுதியில் மூக்கின் அடியில் உள்ளது. அது ஆக்ஞை ஆகும். ஏழாவது சக்கரம், தலையின் உச்சியில் உள்ளது. அதுவே
தலைமைச் சக்கரம். அது சகஸ்ராரம் ஆகும்.இந்தச் சக்கரங்கள் ஏழும் சூரிய ஒளியில் அமைந்திருக்கும் (Vibgyor) ஏழு வண்ண நிறங்களும்
முறையே, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ, ஊதா ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
ஒரு சக்கரம் சரியாக இயங்கவில்லையானால், அந்தச் சக்கரத்தோடு தொடர்புடைய உள்ளுறுப்புகள் பலவீனமாகும். உடம்பில் நோய் உருவாகும்.
எண்ணங்களும் உணர்வுகளும் சக்கரங்களின் கட்டுப்பாட்டினாலேயே இயங்குகின்றன.எந்தச் சக்கரம் எந்தெந்த உறுப்புகளோடு தொடர்பு
கொண்டுள்ளது என்பதை அறிந்து, அந்தந்த உறுப்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை, குறைபாடுகளை, நோய்களை சரிசெய்யலாம்.
மூலதாரச் சக்கரம் இதற்குரிய நிறம் சிவப்பு. மூலாதாரச் சக்கரம் பலவீனமாக இருந்தால், எதிலும் நாட்டமிருக்காது. உடம்பில் சக்தி அற்ற
நிலையுண்டாகும். செய்யும் தொழிலில் தவறுகள் ஏற்படும். மனத்தடுமாற்றம், பயம், சிற்றின்பக் குறைபாடு, கருப்பைக் கோளாறு,
மக்கட்பேறின்மை போன்றவை காணப்படும்.மூலதாரச் சக்கரத்தை முறையாகச் செயல்படச் செய்தால் மேற்கண்ட குறைபாடுகளைச் சரி
செய்யலாம். இக்குறைபாடுகளைச் சரி செய்வதற்கு சிவப்பு நிறத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்தால், குறைபாடுகள் குறைந்துவிடும்
நாளடைவில் அவை முற்றிலும் தீர்த்துவிடும்.
மூலாதாரச் சக்கத்தில் குறைபாடுகள் ஏதுமில்லாமல் இருந்து சிவப்பு வண்ணத்தைப் பயன்படுத்திக் கொண்டு வந்தால் மனதில் மகிழ்ச்சியும்
உற்சாகமும் ஏற்படும். மன வலிமையுண்டாகும். இன்ப உணர்வுகளைத் துண்டிவிடும் காதலுணர்வு மிகுந்து விடும்.சுவாதிட்டானச்
சக்கரம்இதற்குரிய நிறம் ஆரஞ்சு. சுவாதிட்டானச் சக்கரம் பலவீனமாகவோ குறைபாடு உடையதாகவோ இருந்தால், கற்பனைத் திறனும்
படைப்புத்திறனும் குறையும். சுயநல எண்ணம் அதிகரிக்கும். பிறருடனான உறவுகள் தடைப்படும். நட்பு, காதல், பாசம் போன்ற உணர்வுகள்
பலவீனமாகும். எதையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் இருக்காது.இக்குறைபாடுகளுக்கு சுவாதிட்டானச் சக்கரம் சரியாக
இயங்காததே காரணமாகும். அதன் இயக்கத்தைச் சீர் செய்ய ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஆரஞ்சு நிறமும் சிவப்பு நிறத்தின் அடிப்படையயைக் கொண்டுள்ளது என்பதால், மூலாதாரச் சக்கத்திரனால் கிடைக்கக் கூடிய நன்மைகளும்
சுவாதிட்டானச் சக்கரத்தினால் கிடைக்ககூடிய நன்மைகளும், ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும்.சிவப்பும், ஆரஞ்சும்
மகிழ்ச்சியைத் தூண்டக்கூடிய வண்ணடம் என்பதால் இந்நிறங்களைப் பயன்படுத்துகின்றவர்கள், உற்சாகமாகக் காணப்படுவார்கள்.
மணிப்பூரகம்இதற்குரிய நிறம் மஞ்சள், வயிற்றின் உள்ளே இருக்கும் கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, கணையம், வயிறு, குடல்கள், சிறுநீரகங்கள்
ஆகிய உறுப்புகள் மணிப்பூரகத்தின் ஆளுமையினால் இயங்குகின்றன.இந்த உறுப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இயக்குவது, மஞ்சள்
நிறம்.மணிப்பூரகச் சக்கரம் வலுவாக இருக்கும்போது, நுண்ணிறவு வளரும். நல்லதையும் தீயதையும் பகுத்தறியும் ஆற்றல் வளரும்.
மஞ்சள் என்பது ஞானத்தின் குறியீடு. மணிப்பூரகம் உயர் நிலையை அடையும்போது, அது தங்க மஞ்சள் நிற அதிர்வுகளை ஈர்க்கத்
தொடங்குகிறது. அதனால், நுண்ணறிவும் பகுத்தணரும் ஆற்றலும் உருவாகிறது.
மஞ்சள் வண்ணம், பிறருடனான உறவுகளைச் சீர்செய்யும்; வலுப்படுத்தும். மனம் விட்டுப் பேசத்தூண்டும். கலகலப்பும் உற்சாகமும் இருக்கும்.
படிக்கும் அறைகளில் மஞசள் வண்ணமிருந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வின்போதும் மஞ்சள் ஆடையை அணிந்து கொண்டால் நல்ல
முறையில் தேர்வு எழுத முடியும்.படிப்பதில் குறைபாடு அடையவர்கள் மஞ்சள் நிறத்தை அதிகம் பயன்படுத்தினால், அந்தக்
குறைபாடுகளிலிருந்து மீளலாம்.மனச்சோர்வும் மன அழுத்தமும் உள்ளவர்கள் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தக்கூடாது. மணிப்பூரகம்
வலுவிழந்திருந்தால், புதியன கற்கும் ஆவல் இருக்காது. மனம் அலைபாயும், மந்தத் தன்மை இருக்கும். புத்திக் கூர்மையும் நினைவாற்றலும்
குறைந்து காணப்படும். இக்குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டுமானால், மஞ்சள் நிறத்தை அணிந்து கொள்ள வேண்டும்.அனாகதம்
இச்சக்கரத்தை இயக்கும் நிறம், பச்சை, அனாகதம், இதயத்துடன் தொடர்புடையது என்பதால், இச்சக்கரம் வலுவிழந்திருந்தால், எபரிடமும் அன்பு,
பாசம் இல்லாத நிலை தோன்றும், எண்ணத்திலும் செயிலும் ஞானம் இராது. தனக்குத்தானே ஓர் அரணை உருவாக்கிக் கொள்ளும் நிலை
உருவாகும்.
நுண்கலைகளில் நாட்ட முடையவர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பச்சை வண்ணத்தைப் பயன்படுத்திக் கொண்டு வந்தால், தங்கள்
திறமையைப் பன்மடங்கு வளர்த்துக் கொள்ளலாம்.மேலும், அமைதியும் சாந்தமும் தேவைப்படுகின்ற இடங்களில் பச்சை நிறத்தைப்
பயன்படுத்தலாம்.பச்சை வண்ணம் தீட்டப்பட்ட பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் மனவளர்ச்சியும் உடல்வளர்ச்சியும் அதிகரிக்கும்.
ஓய்வு அறைகள், மனசல மருத்துவமனைகளில், காப்பகங்களில் பச்சை வண்ணம் தீட்டலாம்.பச்சை நிறத்தினால், இதயத் துடிப்பு சீராகும்.
பச்சை நிறம் புதன் கிரகத்தின் நிறம் என்பதால், புதன் கிரகத்தின் நிறம் என்பதால், புதன் கிரகத்தின் அதிர்வலைகளும் அதிலிருந்து வெளிவரும்
சக்தி அலைகளும் பச்சை வண்ணத்தின் அதிர்வு அலைகளால் பெறக்கூடும்.
தொடர்ந்து பச்சை நிறத்தைப் பயன்படுத்தி வந்தால் உணவுப் பொருட்களால் ஏற்படுகின்ற ஒவ்வாமைகள் முற்றிலும் மறைந்துவிடுவதுடன்,
ஒவ்வாமைகளால் ஏற்படக்கூடிய ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய்கள் குறைந்து கொண்டே வரும். நாளடைவில் முற்றிலும் குணமாகிவிடும்.
தொழில் செய்பவர்கள் பச்சை நிறத்தைப் பயன்படுத்தி, வந்தால், அவர்கள் தங்கள் தொழில் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். பச்சை
நிறத்தைப் பயன்படுத்தும்போது, கற்கும் திறன் வளரும்.பச்சை நிறத்தைப் பயன்படுத்துபவர்களிடத்தில் சில தனித்தன்மை இருக்கும். அவர்கள்
குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் அன்பும், பிணைப்பும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
விசுத்தி
இச்சக்கரம் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. பேச்சுத்திறன், கேட்கும் திறன். அறியும் திறன், தொண்டையிலுள்ள தசைகள், குரல்நாண்கள்,
காது நரம்புகள் ஆகியவை விசுத்திச் சக்கரத்தின் ஆளுமையில் உள்ளன.விசுத்திச் சக்கரத்தின் செயல்பாடுகள் குறைந்து காணப்பட்டால்,
தொண்டை நோய், டான்சில்ஸ், மூச்சிரைப்பு, படபடப்பு, தூக்கமின்மை, தைராய்டு, நமைச்சல், அலர்ஜி, காமாலை, பால்வினை நோய்கள், தலைவலி,
வழுக்கை, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் உருவாகலாம்.விசுத்திச் சக்கரத்தின் இயங்குத்தன்மையில் ஏற்படுகின்ற
குறைபாடுகளால் உண்டாகக்கூடிய நோய்கள் அனைத்தையும் நீல நிறத்தைப் பயன்படுத்துவதன் மூலம் குணப்படுத்தலாம்.
நீல நிறம் குளிச்சியைத் தரும். அதனால், தூக்கத்தைத் தரும் மனமும் உடலும் அமைதி அடையும்.நீண்ட தூரப் பயணங்களின்போது வாகன
ஓட்டிகள் நீல வண்ண ஆடைகளை அணியக்கூடாது. நீல நிறத்தைக் கொண்ட ஆபரணங்களையும் அணியக்கூடாது. நீல நிறம், தூக்கத்தை
வரவழைக்கும் என்பதால், நீல நிறத்தை அணிந்து கொள்ளும் வாகன ஓட்டிகளால், விபத்துக்கள் நேர வாய்ப்புகள் உண்டு.
நீல நிறம் அமைதியைத் தரும் என்பதால், சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய தொழிற்கூடம், விளையாட்டுக் களம், ஓட்டுநர்கள் நீல நிறத்தைப்
பயன்படுத்தக்கூடாது.

நீல நிறத்தின் ஆற்றலை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் குழு. அக்குழுவின் ஆடைகள் நீல நிறத்தில் இருப்பதனால்
அடிக்கடி தோல்வியைச் சந்திக்க நேரிடுகிறது. சுறுசுறுப்புக்கு சிவப்பு, மஞ்சள், ஆரஞசு நிறங்களே ஏற்றதாகும்.ஆக்ஞை இச்சக்கரம் மிகமிக
உன்னதமான உயர்நிலைச்சக்கரமாகும். இதன் நிறம் இண்டிகோ ஆகும்.ஆக்ஞை சக்கரத்தின் வலிமையினால் தான் மனிதன் ஞான நிலையை
அடைகிறான். ஆற்றல்களை மேலோங்கச் செய்வதில் ஆக்ஞை சக்கரம் முதன்மை பெறுகிறது.ஆக்ஞை சக்கரத்தின் ஆளுமையால் உடலிலும்
மனத்திலும் ஏற்படக்கூடிய மாசுக்கள் அகற்றப்படுகின்றன. மனத்தில் பதியும் தீய எண்ணங்கள் அகற்றப்படுகின்றன.கற்பதைத்திறனையும்
படைப்பாற்றலையும் மேலோங்கச் செய்கிறது. சிந்திக்கும் திறனை வளர்த்து, மனத் தெளிவை உருவாக்குகிறது. எல்லையற்ற அன்பும், தெய்வீகத்
தன்மையையும் ஞானத்தையும் தருகிறது.
ஆக்ஞை சக்கரத்துக்கு மூன்றாவது கண் என்னும் பெயரும் உண்டு. மூன்றாவது கண் திறக்கும்போது, முக்காலமும் அறியும் சக்தி பிறக்கிறது.
எதிர்மறையான விளைவுகளைத் தருகின்ற அனைத்தையும் எரிக்கும் தன்மை கொண்டது.இண்டிகோ நிறத்தை அணிகின்றவர்கள் அழிக்கும்
தன்மையைப் பெறுவார்கள். அதனால், பல வெற்றிகளையும் அடைவார்கள். பழங்காலத்து மன்னர்களில் பலர் இண்டிகோ நிறத்தில் மேலங்கி
அணிந்து கொண்டு போர்க்களம் சென்றதாகவும், வெற்றிகள் பெற்றதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.இண்டிகோ நிறத்தினால், பீனியல் சுரப்பி,
பாரா தைராய்டு, மத்திய நரம்பு மண்டலம், மூளையின் கீழ்ப்பகுதி, கண், காது, மூக்கு, நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவை நன்கு செயல்படும்.

சகஸ்ராரம்
இதுவே அனைத்து சக்கரங்களுக்கும் தலைமைச் சக்கரமாகும். இச்சக்கரத்தின் நிறம் ஊதா.இண்டிகோ, ஊதா ஆகிய இரண்டு நிறங்களும் தனிச்
சிறப்புகள் கொண்டவை. இவை இரண்டும் ஞானத்தின் நிறமாகக் கருதப்படுகின்றன. மனிதனின் நிலையை உயர்த்தும் நிறமாகக்
கருதப்படுகின்றன.உயிர் உருவாகும்போது, இந்தச் சக்கரத்தின் வழியாகவே உயிர்ல உள்ளே நுழைகிறது. அதே போல், இந்தச் சக்கத்தின் வழியாக
உயிர் வெளியேறினால், அந்த உயிருக்கு, மறுபிறவி கிடையாது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.பிறப்பிலிருந்து இறப்புவரை இச்சக்கரம்
திறந்தே இருக்கும். பிற சக்கரங்களுக்கு ஏற்படுகின்ற தடைகளோ, தேக்கமோ வலிமை குன்றுதலோ இதற்கு ஏற்படாது. ஊதா நிறத்தின்
அதிர்வுகளால் சகஸ்ராரத்தின் வலிமை மேலும் அதிகரிக்கும்.சகஸ்ராரச் சக்கரம் விரிய விரிய ஞான நிலை உருவாகும். ஞானம் என்பது
பிரபஞ்சத்திலிருந்து பெறப்படுவது. அதனைப் பெற்றுத்தரும் சக்கரம் சகஸ்ராரம் ஆகும். சக்கரத்தின் நிறமும் ஞான நிறம் என்று கருதப்படுகிறது.
ஊதா நிறத்தை அணிவதனால் சிறுநீரக நோய்கள், எலும்பு நோய்கள், நரம்பு நோய்கள், ளை நோய்கள், தோல் நோய்கள், புற்று நோய்கள், வயிற்று
நோய்கள் போன்றவை குணமாகும். சதாரணமானவர்களும் ஊதா நிறத்தை அணிவதன் மூலம் படைப்பாற்றல் கொண்டவர்களாக ஆக முடியும்
என்பது நிரூபணமாகி இருக்கிறது.

அட்டவணை

கிழமைகள் சக்கரங்கள் நிறங்கள் காய்கறிகள் கனிகள் ரத்தினங்கள்

செவ்வாய் மூலாதாரம் சிவப்பு பீட்ரூட் சிவப்பு பவழம்
திராட்சை
பிளம்
மாதுளம்
ஸ்ட்ராபெரி
சாஸ்ஸரி

சுவாதி ஆரஞ்சு பப்பாளி ஆரஞ்சு ஆம்பர் கற்கள்
தர்பூசனி மாம்பழம்

ஞாயிறு மணிப்பூரகம் மஞ்சள் மக்காச் எலுமிச்சை புஷ்பகாரம்
சோளம் வாழைப்
மஞ்சள் பழம்
முட்டை அன்னாசிப்
பருப்பு பழம்
வகைகள் பலாப்பழம்

புதன் அநாகதம் பச்சை பீன்ஸ் பச்சை மாலர்சைட்
கொத்தவரை வாழை பச்சை ஜேட்
பச்சை பச்சை
மிளகாய் ஆப்பிள்
மாங்காய் பேரிக்காய்
பட்டாணி நெல்லிக்காய்
கீரைகள்
சௌசௌ
சிறுபயறு
காரமணி
வியாழன் விசுத்தி நீலம் கடல் பிளம்பழம் டர்குவாய்ஸ்
உணவுகள் நீலடோபாஸ்
சனி ஆக்ஞை இண்டிகோ கத்தரிக்காய் நாவல் சபையர்
பிளம்ஸ் முட்டைகோஸ்
சில வகை
கீரைகள்
திராட்சை

கேது சகஸ்ராரம் ஊதா கத்தரிக்காய் திராட்சை அமீதிஸ்ட்
நாவல்
முட்டைகோஸ்

முக்கியமாக, நாடாளுபவர்களும், உயர் பதவிகளில் இருப்பவர்களும் கற்பிக்கும் நிலையிலுள்ளவர்களும் ஊதா நிறத்தை உபயோகித்தால்,

அவர்களின் செயலில் ஞானம் இருக்கும். அன்பு இருக்கும். தெளிவு இருக்கும் புகழ் கிடைக்கும்.
உடம்பிலுள்ள ஏழு சக்கரங்களின் ஆளுமைகளால் பெறக்கூடிய நன்மைகளை மேலும் அதிகரிக்க அது அதற்குரிய நிறங்களைப் பயன்படுத்துவதன்

மூலம் பெறலாம் எனக் கண்டோம்.

குறைகள் இருந்து அக்குறைகளைப் போக்கக்கூடிய நிறங்களை அறிந்து சீர் செய்து கொள்வது போல், எந்தக் குறைபாடும் இல்லாத நிலையில்

எந்த நிறத்தை அணியலாம் என்றால், ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையது என்பதாலும், ஒவ்வொரு கிரகமும்

ஒவ்வொரு சக்கரத்துடன் தொடர்பு உடையது என்பதாலும், அந்தந்த கிழமைக்கு உரிய நிறத்தை அந்தந்த நாளில் பயன்படுத்திக்கொண்டு வந்தால்,

அனைத்து விதமான நன்மைகளும் அடையப் பெறலாம் என்பது துணிவு.
ஞாயிறு & ஆரஞ்சு; திங்கள் & வெண்மை; செவ்வாய் & ரத்த சிவப்பு; புதன் & பச்சை; வியாழன் & மஞ்சள்/சந்தனம்; வெற்றி & சாம்பல்; சனி &

கருநீலம்.

ஆடை அணிவதைப் போலவே, உணவில் சேர்க்கப்படுகின்ற காய்கனிகளையும் அந்தந்த கிழமைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்திப் பயன்பெறலாம்.
நிறங்களுக்கு மாற்றாக, உயர்வகைக் கற்களை அணியலாம் எந்தவகையில் இருந்தாலும் நிறங்கள் அது அதற்குரிய கதிரலைகளை

வீசிக்கொண்டிருக்கும். அவற்றினால், உடல் சக்கரங்கள் வீறுகொள்வதுடன், உடம்பில் உண்டாகிய குறைபாடுகள் களையப்படும்.
உடல் ஆரோக்கியத்தில் நிறங்களின் பங்களிப்பு எத்தகையது என்று புரிந்து கொண்டிருப்பீர்கள். இயற்கையில் பொதிந்துள்ள இத்தகைய

ரகசியங்களை எல்லாம் பழங்கால மனிதன் நன்கு அறிந்து வைத்திருந்தான். அதனால்தான் அவனால் உடல்நலத்தோடு நெடுங்காலம் வாழ

முடிந்தது. ஆதி மனிதன் யற்கைப் புரிந்து கொண்டதற்கு எடுத்துக்காட்டாக சில உதாரணங்களைச் சொல்கிறேன் பாருங்கள்.

உங்கள் கம்ப்யூட்டரை நம்புகிறீர்களா!

இதென்ன கேள்வி? நம் கம்ப்யூட்டரை நாம் நம்பாமல் யார் நம்புவது என்று எண்ணுகிறீர்களா? மேலே படியுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு வேலையும் மேற்கொள்ளாமல், லாக் இன் செய்துவிட்டு பேசாமல் வேறு ஒரு புத்தகத்தினைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது என்ன நினைக்கிறீர்கள்? கம்ப்யூட்டரில் ஒன்றுமே நடக்கவில்லை என்றுதானே? உங்கள் சி.பி.யு.வின் செயல் நடவடிக்கைகளைக் காட்டும் சிறிய விளக்கு ஒன்று இருக்குமே, அதைப் பாருங்கள். அவ்வப்போது பளிச்சிட்டுக் கொண்டு இருக்கும். அப்படியானால் என்ன பொருள்? அது ஏதோ வேலையில் ஈடுபடுகிறது என்றுதானே!
ஆம், நீங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுமே வேலை செய்திடாமல் இருக்கையில், சிபியு சும்மா இருப்பதில்லை. அது ஏதேனும் சில வேலைகளில் ஈடுபடுகிறது. அது என்ன என்று அறிய வேண்டுமா?
விண்டோஸ் சிஸ்டம் இயக்கம் என்பது மிக எளிமையான ஒன்று இல்லை. நீங்கள் எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் இயக்காத போது, அது வேறு சில செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளது.
உங்கள் ஹார்ட் ட்ரைவினை எது அணுகுகிறது? உங்கள் சிபியு அதற்கு என்ன பதில் கொடுக்கிறது? என்பதனை நாம் சோதனை செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான், ஏதேனும் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் நடைபெறுகிறதா? நம் பெர்சனல் தகவல்கள் ஒதுக்கப்பட்டு, வேறு ஒரு இடத்திற்கு அனுப்பப்படுவதற்கு சேமித்து வைக்கப்படுகிறதா என்பதெல்லாம் தெரியும்.
இந்தக் கோணத்துடன், இன்டர்நெட் தளங்களைப் பார்வையிட்ட போது எனக்கு கிடைத்தது ஓர் அருமையான புரோகிராம். அதன் பெயர் What’s My Computer doing? கிடைத்த தளத்தின் முகவரி http://www.itsth.com/en/produkte/Whatsmycomputerdoing.php இந்த தளத்தில் இருந்து இந்த புரோகிராமினை இலவசமாக டவுண்லோட் (480 கேபி) செய்து கொள்ளலாம். இதனை இயக்கத் தொடங்கியவுடன், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கை எந்த புரோகிராம்கள் அணுகுகின்றன என்பதையும், அவை சிபியுவில் என்ன வேலைகளை மேற்கொள்கின்றன என்பதையும் காட்டும்.
இந்த புரோகிராமில், உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் செயலை அப்படியே நிறுத்தி வைத்துக் காட்டும் பட்டன் (Freeze) ஒன்று தரப்பட்டுள்ளது. சந்தேகப்படும் எந்த புரோகிராமின் இயக்கத்தினையும், இந்த பட்டனை அழுத்தி நிறுத்தி, அதன் இயக்கம் குறித்த அனைத்து தகவல்களையும் பெறலாம். புரோகிராம் எந்த ட்ரைவிலிருந்து இயங்குகிறது, அந்த எக்ஸிகியூடபிள் பைலின் தேதி, கம்ப்யூட்டரில் பதிந்த தேதி, பைல் சிக்னேச்சர் எனப்படும் அதன் அடையாளக் குறியீடு,பிரச்னைகள், பைலின் பதிப்பு எண் ஆகியவற்றைக் காணலாம். இந்த பட்டன் போக மேலும் இரு பட்டன்கள் உள்ளன. இவற்றின் மூலம், நாம் சந்தேகப்பட்டு பார்க்கும் அந்த புரோகிராமின் ப்ராப்பர்ட்டீஸ் பார்க்கலாம். புரோகிராம் இருக்கும் அந்த போல்டரைத் திறந்து கவனிக்கலாம். புரோகிராமினை மூடலாம் (ஒரு சில கம்ப்யூட்டரில் இது மட்டும் இயலவில்லை; காரணம் தெரியவில்லை). கம்ப்யூட்டரிலிருந்து நீக்கலாம். அல்லது இந்த புரோகிராமில் வைரஸ் உள்ளதா என வைரஸ் டோட்டல் போன்ற ஆன்லைன் புரோகிராம்கள் மூலம் செக் செய்திடலாம்.
இருப்பினும் ஒரு சில வைரஸ் புரோகிராம்கள், இதிலும் சிக்காமல் தங்கள் வேலைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அது எப்போதாவது தான் நடக்கும். எனவே உங்கள் கம்ப்யூட்டரில், உங்களுக்குத் தெரியாமல், ஏதேனும் புரோகிராம்கள் இயங்குவதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உடனே இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் 7 உட்பட அனைத்து புரோகிராம்களிலும் இது இயங்கும்.