இது என்ன தெரிகிறதா?

எலுமிச்சம் பழத்தின் மேல் ஏதோ `பரு’ இருப்பதுபோல் தோன்றும் இந்தக் காட்சி என்னவென்று தெரிகிறதா?

சூரியனுக்கு முன்பாக சர்வதேச விண்வெளி நிலையம் இருக்கும் காட்சிதான் வித்தியாசமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூரியனோடு ஒப்பிடும்போது `கடுகு’ அளவாவது சர்வதேச விண்வெளி மையம் தெரிகிறது. நிஜத்தில் சூரியனோடு அதை ஒப்பிடவே முடியாது. ஏனெனில் சூரியன் பூமியைவிடவும் லட்சக்கணக்கான மடங்கு பெரியது. படத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அருகில் அதைவிட சிறிய புள்ளியாக தெரிவது சமீபத்தில் விண்வெளிக்குச் சென்ற அட்லாண்டிஸ் விண்கலமாகும்.

விண்வெளி புகைப்பட நிபுணர் `தியரி லிகால்ட்’ இந்தப் படத்தை கிளிக் செய்தார். இதற்காக மற்றொரு விண்வெளி ஓடத்தில் பயணம் செய்யப்பட்டது. இந்த விண்கலமும், அட்லாண்டிஸ் விண்கலமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் 54 விநாடி நேரத்தில் மட்டுமே இந்தக் காட்சி தெரியும். சரியாக அந்த நேரத்தில் படம் கிளிக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

%d bloggers like this: