Advertisements

Daily Archives: ஜூன் 15th, 2010

எக்ஸெல் தொகுப்புக்குப் பதிலாக

உங்களிடம் எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு இல்லையா? கட்டணம் செலுத்தி அதனை வாங்கிப் பயன்படுத்தாமல் வேறு வழிகளில் என்ன செய்யலாம் என்று எண்ணுகிறீர்களா?  எக்ஸெல் தொகுப்பிற்கான இலவச புரோகிராம்கள் குறித்து தகவல்களைத் தருகிறேன்.
1. கூகுள் ஸ்ப்ரெட்ஷீட்ஸ் (Google Spreadsheets): கூகுள் டாக்ஸ் என்ற குடும்பத்தின் ஒரு உறுப்பினர். இணைய இணைப்பில் இதனைப் பெற்று, புதிய ஸ்ப்ரெட் ஷீட்டைத் தயார் செய்திடலாம். ஏற்கனவே தயார் செய்த எக்ஸெல் ஒர்க்ஷீட்டினை, அப்லோட் செய்து, அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அங்கேயே வைத்து எடிட் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரிலும் பதிந்து கொள்ளலாம். இதற்கு உங்களுக்குத் தேவையானதெல்லாம், ஒரு நல்ல இன்டர்நெட் இணைப்பும் பிரவுசருமே. இதனைப் பெற http://docs.google.com/ /என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
2. ஸோஹோ ஷீட்ஸ் (SohoSheets):  இதுவும் கூகுள் தருவது போலத்தான். இணைய இணைப்பில் இலவசமாகக் கிடைக்கிறது. ஒர்க் ஷீட்களை உருவாக்கி, மற்றவர்களுடன் பகிர்ந்து, திருத்தி என எத்தகைய முறையில் வேண்டுமானாலும் செயல்படலாம். ஒரே நேரத்தில் ஓர் ஒர்க்ஷீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர் செயல்பட ஸோஹோ ஒர்க்ஷீட் அனுமதிக்கிறது. இதனைப் பெற http://sheet.zoho.com/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
3.எடிட் கிரிட் (EditGrid): ஒரு ஆன்லைன் ஸ்ப்ரெட் ஷீட் சர்வீஸ் என இதனை அழைக்கலாம். இதில் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் அனைத்து அம்சங்களும் உள்ளன. அனைவருடன் பகிர்ந்து கொண்டு, பதிப்பிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. சிலவற்றில் இது எக்ஸெல் தொகுப்பின் தன்மை யையும் மிஞ்சுகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.editgrid.com/


4. நம்சம் (Num Sum): ஆன்லைனில் எளிய, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஸ்ப்ரெட்ஷீட்களை இது தருகிறது. இதன் மூலம் சோஷியல் ஸ்ப்ரெட் ஷீட்களை நீங்கள் உருவாக்கலாம். இந்த வசதியைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தளம் உள்ள முகவரி http://numsum.com/

5.சிம்பிள் ஸ்ப்ரெட்ஷீட் (Simple Spreadsheet): ஜாவா ஸ்கிரிப்ட், எச்.டி.எம்.எல்., சி.எஸ்.எஸ். மற்றும் பி.எச்.பி. யில் எழுதப்பட்ட, இணையத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இதில் பார்முலாக்கள், வரைபடங்கள், நியூமெரிக் பார்மட்கள், கீ போர்டு நேவிகேஷன் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் டேட்டா படிவம் ஜாவா ஸ்கிரிப்ட்டில் எழுதப்பட்டுள்ளது. இந்த இலவச சாப்ட்வேர் தொகுப்பினைப் பெற http://www.simplegroupware.de/cms /Spreadsheet/Home என்ற முகவரிக்குச் செல்லவும்.


6. விக்கி கால்க் (WikiCalc): ஒர்க் ஷீட் ஒன்றின் கால்குலேஷன்கள் அனைத்தையும் இதில் மேற்கொள்ளலாம். இதன் மூலம் இணைய தளங்களையும் உருவாக்கலாம். அனைவரும் எடிட் செய்திடும் வகையில் ஸ்ப்ரெட் ஷீட்களையும் உருவாக்கலாம். இதனை http://www.softwaregarden.com/products/wikicalc//என்ற முகவரியில் பெறலாம்.


7. இஸட் க்யூப்ஸ் கால்சி (Zcubes Calci): CALCI என்பது இணையத்தில் கிடைக்கும் ஒரு கால்குலேஷன் இஞ்சின். ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைக் காட்டிலும் அதிகம் பயனுள்ள விஷயங்களைத் தன்னிடத்தில் வைத்துள்ள புரோகிராம் இது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளிவிபர கணக்கீடுகள், அறிவியல் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட, ரெடிமேட் டெம்ப்ளேட்டுகளைக் கொண்டுள்ளது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:
மேலே தரப்பட்டவை எல்லாம் இணையத்தில், இணைய அடிப்படையில் இயங்குபவை. இவற்றை டவுண்லோட் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்திட வேண்டிய தேவை இல்லை. அப்படியே இணைய இணைப்பில் இயக்கலாம். பைல்களை மட்டும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கலாம்.
டெஸ்க் டாப் அடிப்படையில் சில ஸ்ப்ரெட் ஷீட்கள் நமக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு சுருக்கமாகத் தருகிறேன்.


1.ஓப்பன் ஆபீஸ் கால்க் (Open Office Calc): டெஸ்க் டாப் அடிப்படையில் இயங்கும் ஸ்ப்ரெட் ஷீட் அப்ளிகேஷன் புரோகிராம். ஓப்பன் ஆபீஸ் தொகுப்பின் ஒரு பகுதி. மைக்ரோசாப்ட் எக்ஸெல் தொகுப்பின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் மிக நவீனமான டேட்டா பைலட் (Data Pilot) என்னும் அப்ளிகேஷனையும் இது இயக்குகிறது. இதன் மூலம் நிறுவனங்களின் டேட்டா பேஸ் அமைப்பிலிருந்து டேட்டாக்களைப் பெற முடியும். அந்த டேட்டாக்களைப் பெற்று, இதன் மூலம் கையாண்டு, அர்த்தமுள்ள தகவல்களைப் உருவாக்க முடியும். இதனைப் பெற http://www.openoffice.org /product/calc.html என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


2. ஐ.பி.எம். லோட்டஸ் சிம்பனி ஸ்ப்ரெட் ஷீட்ஸ் (IBM Lotus Symphony Spreadsheets): பலவகையான ஸ்ப்ரெட் ஷீட்களை இதன் மூலம் உருவாக்கலாம். புதிய ஒர்க்ஷீட் அமைக்கலாம்; பழையதைத் திருத்தலாம். பலவகையான டெம்ப்ளேட்டுகள் இதில் தரப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு http://symphony.lotus.com/software/ lotus/symphony/home.nsf /product_sse என்ற முகவரிக்குச் செல்லவும்.

3. அபிகஸ் (Abykus): வர்த்தகம்,கல்வி மற்றும் ஆய்வு சம்பந்தமான ஸ்ப்ரெட் ஷீட்களை இதில் உருவாக்க முடியும். இதில் புள்ளிவிபரங்களை ஆய்வு செய்திட தனி கட்டமைப்பு உள்ளது. கணக்கு, மேட்ரிக்ஸ், நிதி, காலக் கணிப்பு, கோ ஆர்டினேட் ஜியாமெட்ரி, 3 டி கிராபிக் டிஸ்பிளே செயல்பாடுகள் கிடைக்கின்றன. ஒரே நேரத்தில் அனைத்து செல்களையும் அடக்கிய 32 ஒர்க்புக்குகளை இதில் இயக்கலாம். மேலும் தகவல்களுக்கு http://www.abykus.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

4. ஜிநியூமெரிக் (Gnumeric): ஜிநியூமெரிக் அல்லது ஜி நோம் ஆபீஸ் ஸ்ப்ரெட் ஷீட், ஜிநோம் டெஸ்க்டாப் அப்ளிகேஷனைச் சேர்ந்தது. எந்த அப்ளிகேஷனில் உருவான ஸ்ப்ரெட் ஷீட்டினையும் இதில் இணைத்துக் காணலாம். எடிட் செய்திடலாம்.

5. ஸ்ப்ரெட் 32 (Spread32): இது ஒரு சிறிய ஸ்ப்ரெட் ஷீட் புரோகிராம். ஆனால் 256 columns x 65536 rows x 255 sheets களுடன் சக்கை போடு போடுகிறது. 300 செயல்பாடுகளுக்கு மேலானவற்றிற்கு பார்முலாக்கள் கிடைக்கின்றன. மேலும் தகவல்களுக்கு http://www.xtort.net/officeandproductivity/floppyoffice/ / என்ற முகவரிக்குச் செல்லவும்.

Advertisements

உயிர்சத்து – வைட்டமின் B

உடலுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் உடலின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் வைட்டமின் ‘B’ பற்றி அறிந்து கொள்வோம்

வைட்டமின் ‘B’ நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்தாகும். உடலின் வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் இதன் பங்கு அதிகம். வைட்டமின் ‘B’ கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளன.

வைட்டமின் ‘B1’ (Thiamine)

வைட்டமின் ‘B2’ (Riboflavin)

வைட்டமின் ‘B3’ (Niacinamide)

வைட்டமின் ‘B5’ (Pantothenic acid)

வைட்டமின் ‘B6’ (Pyridoxine)

வைட்டமின் ‘B7’ (Biotin)

வைட்டமின் ‘B9’ (Folic acid)

வைட்டமின் ‘B12’ (Cyanocobalamin)

வைட்டமின் ‘B’ ன் பொதுவான பயன்கள்

உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் உதவுகிறது.

எலும்பு, தசை இவற்றின் உறுதிக்கு வைட்டமின் ‘B’ பயன்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது.

மூளையின் சுறுசுறுப்புக்கும், செயல்பாட்டிற்கும் வைட்டமின் ‘B’ அதிகம் உதவுகிறது.

நரம்புகளுக்கு புத்துணர்வூட்டி செயல்பட வைக்கிறது. இரத்த சோகை எனும் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைக்கிறது. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

உணவு செரிமானத்தில் அதிக பங்கு வகிக்கிறது.

இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீர்களை பிரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. அறிவு வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் அதிகம் உதவுகிறது.

வைட்டமின் ‘B1’

இந்த உயிர்ச்சத்து உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது. இதயத்தை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்தக் குழாய்களிலுள்ள அடைப்புகளை நீக்கி பலம் கொடுக்கிறது. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கிறது. இந்த உயிர்ச்சத்து மனித உடலுக்கு தினமும் 50 மி.கி. அளவு தேவைப்படுகிறது. அதற்கு அதிகமானால் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட வைட்டமின் ‘ஆ1’ கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, உருளைக் கிழங்கு, முட்டை, ஆரஞ்சு இவற்றில் அதிகளவு உள்ளது. அசைவ உணவுகளில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் ‘B2’

உடல் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது. இது நுண்ணூட்டச் சத்தாகும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. சராசரியாக ஒரு மனிதன் தினமும் உணவின் மூலம் 1.2 மி.கி. அளவு உட்கொள்ள வேண்டும். வைட்டமின் ‘ஆ2’ பால், வெண்ணெய், முட்டை, அகத்திக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, தக்காளி, காளான் மற்றும் மஞ்சள் நிறங்கொண்ட பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் ‘B3’

இது மனித உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்தாகும். தினமும் 40 மி.கி. – 50 மி.கி. அளவு உடலுக்குத் தேவைப்படுகிறது. வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உண்ட உணவு செரிப்பதற்கும், அவற்றிலுள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. மன அழுத்தத்தைப் போக்கும் தன்மை கொண்டது. நினைவாற்றலை அதிகரிக்கும். இவை புரதச் சத்து நிறைந்த உணவுகளில் அதிகம் காணப்படுகிறது.

முட்டை, பால், நெய், சோயா பீன்ஸ், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘B5’

இவை சருமத்தைப் பாதுகாப்பதுடன், தலைமுடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் உயிர்ச்சத்தாகும். நரம்புகளை வலுப்படுத்தி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. உடலில் இன்சுலின் அளவை சீராக சுரக்கச் செய்து, சர்க்கரை நோயிலிருந்து விடுபட வைக்கிறது. இது பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகளில் அதிகம் உள்ளது. நன்கு வேகவைத்த உணவுகளில் இச்சத்து வெளியேறி விடுகிறது.

வைட்டமின் ‘B6’

மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. இவை காய்கறிகள், வாழைப்பழம், முந்திரி, பாதாம் பருப்பு, இவைகளில் அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘B7’

கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்குகிறது. குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பச்சைக் கீரைகள், சமைக்காத உணவுகள் மற்றும் அசைவ உணவுகளில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் ‘B9’

செல்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இரும்புச்சத்தை உறிஞ்ச முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தச் சோகையைப் போக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கருவில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது. இந்த உயிர்ச்சத்து மீன்களில் அதிக அளவு உள்ளது. பழங்கள், காய்கறிகள், கீரைகளிலும் உள்ளது.

வைட்டமின் ‘B12’

மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கவும், ரத்தச் சோகையைப் போக்கவும் இந்த உயிர்ச்சத்து மிகவும் பயன்படுகிறது.

நரம்பு மண்டலத்தை சிராக்கி செயல்பட வைக்கிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், வேகவைக்காத உணவுகள், மீன் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘B’ குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

வைட்டமின் ‘B1’

வைட்டமின் ‘B1’ குறைபாட்டால் பெரி பெரி என்ற நோய் உண்டாகிறது.

உடலின் எடை குறைந்து போகும். நரம்புகளின் செயலிழப்பு காரணமாக கை, கால் மறத்துப் போகும். உடலெங்கும் வலி உண்டாகும். ஞாபக மறதி அதிகரிக்கும். மூளை அடிக்கடி சோர்வாகும். உடல் எப்போதும் சோர்வுடனேயே இருக்கும். இரத்தச் சோகை ஏற்படும். சருமத்தில் அதிக சுருக்கங்கள் தோன்றும். நகங்கள் வெளுத்து காணப்படும். விரல், மணிக்கட்டுப் பகுதிகளில் வலி ஏற்படும். இதய துடிப்பானது சில நேரங்களில் அதிகரித்தும், சில நேரங்களில் குறைந்தும் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும்.

வைட்டமின் ‘B2’

வைட்டமின் ‘B2’ குறைந்தால் நாக்கு வெடித்து காணப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அடிக்கடி ஜலதோஷம், தும்மல் உண்டாகும்.

வைட்டமின் ‘B3’

வைட்டமின் ‘B3’ குறைந்தால் வயிற்றுப்போக்கு உண்டாகும். நினைவாற்றல் குறையும். சில நேரங்களில் வாந்தி, மயக்கம் ஏற்படும். பெல்லகரா (Pellgra) என்ற நோயின் பாதிப்பு உண்டாகும்.

வைட்டமின் ‘B5’

வைட்டமின் ‘B5’ குறைந்தால் சரும பாதிப்பு உண்டாகி,சருமத்தில் புண்கள் ஏற்படும். தோலில் சுருக்கம் உண்டாகும். தலைமுடி உதிர்தலும் இதன் குறைபாடுதான். சர்க்கரை வியாதி உண்டாக வாய்ப்புள்ளது.

வைட்டமின் ‘B6’

வைட்டமின் ‘B6’ குறைந்தால் இரத்தச் சோகை ஏற்படும். பற்கள் உறுதியிழக்கும். மன அழுத்தம் உண்டாகும். அதிக தாகம், இரத்த அழுத்தம் உண்டாகும்.

வைட்டமின் ‘B7’

வைட்டமின் ‘B7’ குறைந்தால் கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் சிறுகுழந்தைகள் வரை வளர்ச்சி பாதிக்கப்படும்.

வைட்டமின் ‘B9’

வைட்டமின் ‘B9’ போலிக் அமிலக் குறைபாட்டில் தாய்க்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் இரத்த சோகை உண்டாக்கும். மூளை அதிக சோர்வடைந்து ஞாபக சக்தியைக் குன்றச் செய்யும்.

வைட்டமின் ‘B12’

வைட்டமின் ‘B12’ குறைபாட்டால் இரத்தசோகை உண்டாகும், நரம்புத் தளர்வு உண்டாகும். நினைவாற்றல் குறையும். பெரும்பாலும் இந்நோய் முதியவர்களை அதிகம் தாக்கும். சில சமயங்களில் பக்கவாதம் கூட ஏற்பட வாய்ப்புண்டு.

வைட்டமின் ‘B’ சத்து குறைவு சோதனை மூலம் கண்டறியப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று இயற்கை முறையில் உணவு முறையைக் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கியம் பெறலாம்.

சிறந்த 10 ஐ.டி., பதவிகள் என்னென்ன

சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து வேலை வாய்ப்பு சந்தை வெகு வேகமாக மீண்டு வருகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பணி வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் நாம் கேட்டு வருகிறோம். குறிப்பாக இந்தப் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐ.டி., துறையிலும் நம்பிக்கைக் கீற்று தென்பட ஆரம்பித்துவிட்டது. ஆனால் ஐ.டி., யில் பொறியியல் படித்துவிட்டு வெளியேறும் பல மாணவர்களுக்கு ஐ.டி., துறையில் எந்தப் பதவியில் இணைவதன் மூலம் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஐ.டி., துறையில் உள்ள நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஐ.டி., துறை சார்ந்த கன்சல்டன்சி நிறுவன நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் இத்துறை சார்ந்த முதல் 10 பதவிகள் பற்றிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.

எத்திக்கல் ஹேக்கர்
கம்ப்யூட்டர் தொடர்புடைய ஒருவரின் ரகசியங்களைத் திருடி, தவறுகளுக்குப் பயன்படுத்துவர்களை ‘ஹேக்கர்ஸ்’ என்று கூறுகிறார்கள். இப்படி கம்ப்யூட்டர் ரகசியங்களைத் திருடி குற்றம் புரிபவர்களைக் கண்டுபிடிப்பதற்கென்று ‘சைபர் கிரைம்’ துறையும் தற்போது செயல்பட்டு வருகிறது. ஹேக்கர்களைக் கண்டுபிடிக்கும் துறையை எத்திக்கல் ஹேக்கர் துறை என்று கூறுகிறார்கள். இந்தத் துறையில் சிறப்பு பெற விரும்புபவர்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன், புரொகிராமிங், டிசைன் ஆகிய பிரிவுகளில் திறன் பெற்றவர்களாக இருத்தல் அவசியம்.

சிஸ்டம்ஸ் மேனேஜர்
ஒரு நிறுவனத்தின் நடைமுறையில் தொழில் நுட்பத்தை திறமையாக செயல்படுத்துவதில் இவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். இதனாலேயே இவர்களை நிறுவனத்தின் தூண் என்று கூறுகிறார்கள். ஒரு நிறுவனத்தில் தொழில் நுட்ப அம்சங்களைப் பற்றி திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல், செயல்படுத்துதல் என்ற பணிகளை இவர்கள் செய்கிறார்கள். பல்வேறு துறை வாரியாக கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் இந்தப் பதவிக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது.

நெட்வொர்க் இன்ஜினியர்
ஒரு நிறுவனத்திலுள்ள கம்ப்யூட்டர் களை இன்டர்நெட்டுடன் இணைத்தல், இதற்குத் தேவைப்படும் ரவுட்டர், மோடம், பயர் வால் ஆகியவற்றை கான்பிகர் செய்தல் போன்ற பணிகளை இவர்களே மேற்பார்வையிடுகிறார்கள். இன்றைய நிறுவனங்களின் சூழலில் அங்கு நடைபெறும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து
அதிகரித்து வருவதால் நெட் வொர்க்கிங்கின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே எதிர்காலத்தில் நெட்வொர்க்கிங்கின் தேவையும், நெட்வொர்க் மேனேஜர்களின் தேவையும் அதிகரிக்கும்.

பேர்ம்வேர் இன்ஜினியர்
இன்று நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு எலக்ட்ரானிக் உபகரணத்திலும் ‘சிப்’பின் பயன் கட்டாயத் தேவையாகியுள்ளது. கம்ப்யூட்டரிலுள்ள ஹார்டுவேர் கருவிகளில் பொருத்தமான சாப்ட்வேர்களை நிறுவுவதன் மூலம் மட்டுமே ஒவ்வொரு கருவியும் இதர கருவிகளுடன் தகவல் பரிமாறிக் கொள்வது உறுதிப் படுத்தப்படுகிறது. இதற்கான ஆணி வேராக இருப்பவர்கள் இவர்களே. அல்கோரிதம்களை ஆராய்தல், ஒட்டுமொத்த பேர்ம்வேரின் செயல்பாட்டை அதிகப்படுத்துதல் போன்ற தலையாய பணிகளை இவர்களே செய்கிறார்கள்.

வெப் அனலிஸ்ட்
டிஜிட்டல் மீடியா மற்றும் இன்டர் நெட்டின் உபயோகம் அதிகரித்து வரும் இன்றைய நவீன யுகத்தில் வெப் அனலிஸ்ட்டுகளின் பணியும் தலையாய பங்கு வகிக்கிறது. பல்வேறு தொழில் சார்ந்த இணைய தளங்களை ஆராய்ந்து நிறுவனத்தின் முடிவெடுக்கும் தளத்தைக் கட்ட இவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அவ்வப்போது தேவைப்படும் முக்கிய முடிவுகளை எடுக்க இவர்களே உதவுகிறார்கள்.

டிசைன் இன்ஜினியர்
ஒரு வடிவத்தின் உள்ளார்ந்த அம்சங்களை வடிவமைத்து உபகரணங்களுக்கு வடிவம் கொடுப்பவர்களையே டிசைன் இன்ஜினியர் என்று கூறுகிறார்கள். இதற்கு இவர்கள் இஅஈ, Nஙீ, இஅகூஐஅ போன்ற சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி மாதிரிகளை இவர்களே வரைகிறார்கள். சிப்களை வடிவமைப்பதற்கு தற்போது டி.சி.எஸ்., விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் ஆர்வம் செலுத்தத் துவங்கிவிட்டன. இந்தியாவில் டிசைன் இன்ஜினியரிங் துறை அபரிமிதமாக வளரும் என்று கார்ட்னர் நிறுவனம் கணிக்கிறது. இவ்வளவு பிரகாசமான சூழ்நிலை இருந்த போதும் இந்தியாவிலுள்ள பொறியியற் கல்லூரிகள் ஆண்டுக்கு 250 முதல் 300 பேரை மட்டுமே வி.எல்.எஸ்.ஐ., என்ற வெரி லார்ஜ் சிஸ்டம் இன்டக்ரேஷன் பிரிவில் பயிற்றுவிக்கின்றன. இந்தத் துறையில் இணைய அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷனில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். இத்துடன் கணிதம், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் நல்ல திறனும், கம்ப்யூட்டர் தொடர்புடைய பல்வேறு லாங்வேஜ்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஓபன் சோர்ஸ் ஸ்பெஷலிஸ்ட்
ஓபன் சோர்ஸ் ஸ்பெஷலிஸ்டுகள் சோர்ஸ் கோடுகளை அனைவரும் சோதிக்கத் தக்க ஓபன் சோர்ஸ் தொழில் நுட்பத்தில் பணிபுரிகிறார்கள். இதன் மூலமாக அதிகபட்ச நம்பிக்கைக்குரிய, பாதுகாப்பான மற்றும் அதிகத் திறன் வாய்ந்த அப்ளிகேஷன்களைப் பெற முடிந்துள்ளது.

ஹெல்த் ரெகார்ட்ஸ் சிஸ்டம்ஸ் மேனேஜர்
பல்வேறு பொதுமக்கள் சார்ந்த திட்டங்களிலும், சேவைகளிலும் மருத்துவ ஆவணங்களை முறைப்படி சேமிப்பது சவாலான வேலையாக உள்ளது. இதனை முறைப்படி சேமிக்காத நிலையில் எதிர்பாராத மற்றும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது கண்கூடான ஒன்றாகும். இதனாலேயே ஹெல்த் ரெகார்ட்ஸ் சிஸ்டம்ஸ் மேனேஜர்களுக்குத் தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டு வருகிறது. அடுத்த 12 மாதங்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெல்த் ரெகார்ட்ஸ் சிஸ்டம்ஸ் மேனேஜர்களுக்கான தேவை ஏற்படும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது.

பிஸினஸ் பிராசஸ் இன்ஜினியர்
ஒரு நிறுவனத்தின் தொழில்ரீதியான செயல்களை நிறுவனத்திற்குள்ளும் தொழிலரங்க அளவிலும் ஆராய்ந்து வடிவமைத்தல் மற்றும் மறுவடிவமைக்கும் பணியைச் செய்பவர்கள் இவர்களே. இந்த ஆண்டு இவர்களுக்கு மிகவும் நிறைவளிக்கும் ஆண்டாக இருக்கும் என்ற கணிப்பு நிலவுகிறது. தொழில் ரீதியான முக்கிய அம்சங்களையும், ஐ.டி., துறை சார்ந்த தொழில் நுட்ப அம்சங்களையும் சரியான விகிதத்தில் பிணைப்பதன் மூலம் வெற்றிக்கான அடிகோலிடுபவர்களும் இவர்களே. இதன் காரணமாக நிறுவனங்களில் இந்தப் பிரிவினர் மிக முக்கியப் பதவிகளைப் பெற முடியும் என்று துறைசார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கெபாசிட்டி மேனேஜர்
ஒரு நிறுவனத்தின் கம்ப்யூட்டர் சர்வரின் செயல்திறன், கொள்ளளவு ஆகியவற்றுடன் இருக்கும் மொத்த ஆதாரங்களின் பயன்பாடு ஆகியவற்றை கண்டறிபவர்கள் கெபாசிட்டி மேனேஜர்கள்தான். இவற்றுடன் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் குறித்த எதிர்காலத் தேவை, சாதக பாதகங்களைப்பற்றிய திட்டமிடலையும் இவர்களே செய்கிறார்கள். நிறுவனத்தின் செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் முக்கியமான பணி என்பதால் இந்தப் பிரிவினருக்கு நல்ல கிராக்கி நிலவுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஈஸி டூப்ளிகேட் பைண்டர்

பைல்களை நாம் அடிக்கடி நகலெடுத்துப் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றை அழிக்க மறந்துவிடுவோம். இமெயில் அனுப்புகையில், அவசரமாகத் திறந்து பயன்படுத்த, டெஸ்க் டாப்பில் வைத்து இயக்குவதற்காக எனப் பல காரணங்களால், ஒரே பைல் தன் நகல்களுடன் ஹார்ட் டிஸ்க் இடத்தினை அடைத்துக் கொண்டு இருக்கும். குறிப்பாக எங்கு சென்றாலும், ஆடியோ பாடல் பைல்கள் நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் அவற்றின் நகல்களை ஹார்ட் டிஸ்க்கின் பல இடங்களில், டைரக்டரிகளில் வைத்திருப்போம்.
ஹார்ட் டிஸ்க் இட நெருக்கடியை உணர்கையில் மட்டுமே, அடடா! இந்த டூப்ளிகேட் பைல்களை தவிர்த்திருக்கலாமே என்று ஆதங்கப்படுவோம். ஆனால், இப்போது பைல் ஒன்றின் டூப்ளிகேட் நகல்களை எப்படித் தேடிக் கண்டு பிடிப்பது? இந்த வேலையை நமக்காக மேற்கொண்டு செய்வதற்குப் பல புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் சிறந்த ஒரு புரோகிராம் Easy Duplicate Finder ஆகும்.
இது போன்ற மற்ற புரோகிராம் களிடமிருந்து, இதனை வித்தியாசப் படுத்திக் காட்டும் அம்சம் இதன் வேகமாகும். மிகவும் துல்லியமாக பைல் ஒன்றின் நகலைக் வேகமாகக் கண்டறிகிறது. கண்டறிவதுடன் மட்டுமின்றி, அவற்றைப் படித்து அறியும் வகையில் பட்டியலிட்டு தருகிறது. டூப்ளிகேட் பைல்களை பைட், பைட்டாக ஒப்பிட்டுக் கண்டறிகிறது. இதன் ஸ்கேன் செய்திடும் வகையும் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பிட்ட போல்டர்களில் மட்டும் டூப்ளிகேட் பைல்களைத் தேடுமாறும் இதனை அமைக்கலாம். சிஸ்டம் பைல்களையும் போல்டர்களையும் சேதப்படுத்துவது இல்லை. டூப்ளிகேட் பைல்களை நம் அனுமதியுடன் ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்புகிறது. இதற்கு யூனிகோட் சப்போர்ட் தரப்பட்டுள்ளதால், மற்ற மொழிகளில் பைல் இருந்தாலும் கண்டறிகிறது.
இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.easyduplicatefinder.com /files/easy_duplicate_setup.exe

சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்கு பின் திரும்பியது ஜப்பான் விண்கலம்

பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ஜப்பானில் “ஹயபுசா’ விண்கலம் ஏழாண்டுகளுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளது.

பூமியிலிருந்து 30 கோடி கிலோமீட்டர் தூரத்தில் “இட்டோகவா’ என்ற சிறிய கிரகம் உள்ளது. இந்த கிரகத்தை பற்றி ஆராய்ச்சி செய்ய “ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சி’ கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் ” ஹயபுசா’ என்ற விண்கலத்தை அனுப்பியது. இட்டோகவா கிரகத்தில் உள்ள மண்ணையும் கல்லையும் கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் தோன்றிய விதத்தை கண்டறிய முடியும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் நம்பினர். இட்டோகவா கிரகத்திலிருந்து மண்ணையும், கல்லையும் சேகரித்துக் கொண்டு ஹயபுசா விண்கலம் நேற்று முன்தினம் பூமிக்கு திரும்பியது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரத்தருகே உள்ள ஊமரா என்ற இடத்தில் தரையிறங்கிய ஹயபுசா விண்கலம், இட்டோகவா கிரகத்திலிருந்து 18 கிலோ மண்ணை உலோக உரைக்குள்( கேப்சூல்) பாதுகாப்பாக வைத்து எடுத்து வந்துள்ளது. பல்வேறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹயபுசா விண்கலம் மூன்று ஆண்டு காலம் தாமதமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. ஹயபுசா கொண்டு வந்துள்ள இட்டோகவா கிரக மண் மாதிரி மூலம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் சில உண்மைகள் தெரிய வரும் என ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பலம் தரும் பலாக்கொட்டை


நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.
பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான் பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது. 100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.
பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,
உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும்.
பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

`டி.வி.க்கு அப்புறந்தான் நீங்க!’

இன்று இல்லத்தரசிகள் டி.வி. நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அது எந்த அளவுக்கு என்றால் `டி.வி.க்கு அப்புறந்தான் நீங்க’ என்று சொல்லும் நிலைக்கு வளர்ந்துவிட்டது என்கிறது ஒரு ஆய்வு.

இங்கிலாந்தில் இது தொடர்பான ஆய்வு நடந்தது. அப்போது பத்தில் ஒருவர் டி.வி.க்கு அப்புறந்தான் மற்றவர்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களுக்கு கணவன், மனைவி, குழந்தைகள், உறவுகள் இவர் களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

ஆய்வில் 11 சதவீதம் பேர், டி.வி. நிகழ்ச்சிகள் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும், நேரத்தை வீணாக்குவதாகவும் கருத்து தெரிவித்தனர். மற்றொரு பத்து சதவீதம் பேர் டி.வி.தான் எங்களுக்கு உயிர், மற்றதெல்லாம் அப்புறம்தான் என்கின்றனர். டி.வி.யை கொஞ்ச நேரம் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்ப்போம் என்றும் முன்றாம் தரப்பினர் கூறினர்.

10-ல் நான்குபேர் வேலைப்பளுவில் இருந்து டி.வி. `ரிலாக்ஸ்’ தருவதாகவும், பயனுள்ள விஷயங்களை தெரிந்து கொள்ள உதவுவதாகவும் கூறினார்கள்.

டி.வி. நிகழ்ச்சியை சந்தைப்படுத்தும் இயக்குனர் ஒருவர் கூறும்போது, `தொலைக்காட்சியானது பொழுதுபோக்கு, பயனுள்ள விஷயங்கள், சந்தைப் பொருட்கள் விவரம் என பலவற்றையும் தருவதால் வீட்டின் ஒரு அங்கமாக மாறி உள்ளது’ என்றார்.

ஆனால் விஞ்ஞானிகளோ `ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகிறார்கள்’ என்கிறார்கள். `இவர்கள் பெரும்பாலும் புற்றுநோய் மற்றும் இதய வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று எச்சரித்தனர்.

முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி.வி. பார்த்தவர்கள் வெகுவிரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று எச்சரித்தது நினைவிருக்கலாம்!