`டி.வி.க்கு அப்புறந்தான் நீங்க!’

இன்று இல்லத்தரசிகள் டி.வி. நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அது எந்த அளவுக்கு என்றால் `டி.வி.க்கு அப்புறந்தான் நீங்க’ என்று சொல்லும் நிலைக்கு வளர்ந்துவிட்டது என்கிறது ஒரு ஆய்வு.

இங்கிலாந்தில் இது தொடர்பான ஆய்வு நடந்தது. அப்போது பத்தில் ஒருவர் டி.வி.க்கு அப்புறந்தான் மற்றவர்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களுக்கு கணவன், மனைவி, குழந்தைகள், உறவுகள் இவர் களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

ஆய்வில் 11 சதவீதம் பேர், டி.வி. நிகழ்ச்சிகள் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும், நேரத்தை வீணாக்குவதாகவும் கருத்து தெரிவித்தனர். மற்றொரு பத்து சதவீதம் பேர் டி.வி.தான் எங்களுக்கு உயிர், மற்றதெல்லாம் அப்புறம்தான் என்கின்றனர். டி.வி.யை கொஞ்ச நேரம் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்ப்போம் என்றும் முன்றாம் தரப்பினர் கூறினர்.

10-ல் நான்குபேர் வேலைப்பளுவில் இருந்து டி.வி. `ரிலாக்ஸ்’ தருவதாகவும், பயனுள்ள விஷயங்களை தெரிந்து கொள்ள உதவுவதாகவும் கூறினார்கள்.

டி.வி. நிகழ்ச்சியை சந்தைப்படுத்தும் இயக்குனர் ஒருவர் கூறும்போது, `தொலைக்காட்சியானது பொழுதுபோக்கு, பயனுள்ள விஷயங்கள், சந்தைப் பொருட்கள் விவரம் என பலவற்றையும் தருவதால் வீட்டின் ஒரு அங்கமாக மாறி உள்ளது’ என்றார்.

ஆனால் விஞ்ஞானிகளோ `ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகிறார்கள்’ என்கிறார்கள். `இவர்கள் பெரும்பாலும் புற்றுநோய் மற்றும் இதய வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று எச்சரித்தனர்.

முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி.வி. பார்த்தவர்கள் வெகுவிரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று எச்சரித்தது நினைவிருக்கலாம்!

%d bloggers like this: