Daily Archives: ஜூன் 16th, 2010

ஸீகேட் வழங்குகிறது 3 டெரா பைட் டிஸ்க்

ஹார்ட் டிஸ்க் தயாரித்து விற்பனைக்கு வழங்குவதில் முன்னணியில் இயங்கும், ஸீகேட் நிறுவனம் இந்த ஆண்டில் 3 டெராபைட் கொள்ளளவுடன், பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஹார்ட் டிஸ்க்குகள் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் மட்டுமே இணைத்து இயக்க முடியும். மேலும் அதற்கேற்ற வகையில் மற்ற ஹார்ட்வேர் பிரிவுகள் அப்கிரேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தற்போது 2 டெரா பைட் டிஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இவை விநாடியில் 6 ஜிபி பிட் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகம் உடையவை. 30 ஆண்டுகளுக்கு முன் ஹார்ட் டிஸ்க் அளவு 2.1 டெரா பைட் என்பது வரையறுக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த அளவு அதிகப்படுத்தப்படுகிறது.
இது குறித்து ஸீகேட் நிறுவன தயாரிப்பு பிரிவின் நிர்வாகி பார்பரா கூறுகையில், இந்த புதிய 3 டெரா பைட் டிஸ்க், நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கி சோதனை செய்யப்படும் என்றார். ஏனென்றால், நிறுவனங்கள் தான் டேட்டாவினை அதிக அளவில் கையாண்டு, தொடர்ந்து அதிக கொள்ளளவில் டிஸ்க்குகளை கேட்டு வருகின்றன. அவர்களுக்கு வழங்கும்போதுதான், புதிய டிஸ்க்கின் திறன் முழுமையாக சோதனை செய்யப்படும் என்றார். இந்த ட்ரைவ் 3.5 அகலத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இதனை 2.5 அங்குல அகலத்திலும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கம்ப்யூட்டரைச் சற்று கவனிப்போம்

கம்ப்யூட்டரில் தான் இனி வாழ்க்கை என்று ஆகிவரும் இந்த நிலையில், அதனை அவ்வப்போது சரி செய்து, உள்அமைப்பையும் ட்யூன் செய்வது இன்றியமை யாததாகிறது. இல்லையேல் என்றாவது ஒரு நாள், திடீரென நின்று நம்மைத் திணறடித்துவிடும்.
பலமுறை இங்கு எழுதப்பட்டது போல, பைல்கள் பேக் அப், அப்ளிகேஷன் சாப்ட்வேர் அப்டேட்டிங், ஆண்ட்டி வைரஸ் புதுப்பித்தல், பயர்வால் அமைத்தல் என்பவற்றை எல்லாம் நாம் இப்போது வழக்கமாக மேற்கொள்ள பழகிக் கொண்ச்டோம். ஆனாலும் இன்னும் பலர் சற்று சோம்பேறித்தனமாகவும், நம் கம்ப்யூட்டருக்கு அது எல்லாம் ஆகாது என்றும் போலியான தன்னம்பிக்கையுடன், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர். இதற்குக் காரணம் நம் அன்றாட வாழ்க்கையில், கம்ப்யூட்டருக்கென சற்று வியர்வை சிந்தி உழைக்க நாம் தயாராய் இல்லை என்பதே.
இப்படிப்பட்டவர்களுக்காக சில டிப்ஸ்களை இங்கு காணலாம்.
நீங்கள் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், இப்போது உள்ள விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளில், சிஸ்டமே மேற்கொள்ளும் சில விஷயங்களை, நாமாகத்தான் விண்டோஸ் எக்ஸ்பியில் மேற்கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்வது, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், தானாக மேற்கொள்ளப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விண்டோஸ் எக்ஸ்பியில் நாம் தான் இதனை மேற்கொள்ள வேண்டும். எந்த ட்ரைவினை டிபிராக் செய்திட வேண்டுமோ, அதன் மீது ரைட் கிளிக் செய்து Properties, Tools, Defragment Now என்று சென்று டிபிராக் செய்திடலாம். இப்போது வரும் ஹார்ட் டிஸ்க்குகளின் கொள்ளளவு மிக அதிகமாக இருப்பதால், சிறிய ஹார்ட் டிஸ்க்குகளில் டிபிராக் செய்து கிடைக்கும் வசதிகள், பெரிய அளவில் இதில் கிடைப்பதில்லை. எனவே நீங்கள் புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால், அதில் பெரிய அளவிலான கொள்ளளவில் ஹார்ட் டிஸ்க் இருந்தால், டிபிராக் குறித்து அவ்வளாவாகக் கவலைப்பட வேண்டியதில்லை.
அடுத்ததாக நாம் கவனமாகச் செயல்பட வேண்டிய பிரிவு, பைல்களை பேக் அப் செய்திடும் பணி. திடீரென நாம் அவ்வப்போது பணியாற்றும் பைல்கள் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், இவை எவ்வளவு முக்கியம் என்று உணர்வீர்கள். பேக் அப் செய்திட எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் அல்லது ட்ரைவ் இமேஜஸ் என்று போவதைக் காட்டிலும், இணையத்தில் கிடைக்கும் ஸ்டோரேஜ் தளங்களைப் பார்வையிட்டு அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பேக் அப் காப்பிகளை வைத்துப் பாதுகாக்கலாம். போட்டோ பைல்களைச் சேமிக்க பேஸ்புக் ஆல்பம், ப்ளிக்கர், பிகாஸா வெப் ஆல்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
டாகுமெண்ட் பைல்கள் என்றால், நாம் அப்போது நம் சொந்த மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் டாகுமெண்ட்களுக்கு அன்றாடம் பேக் அப் அவசியம். இவற்றின் அளவு ஜிபி அளவிலேயே இருக்கும். டெரா பைட் அளவிற்கு இருக்காது. எனவே இந்த பேக் அப் வசதிக்கும், ஆன்லைன் ஸ்டோரேஜ் உகந்தது.
சிஸ்டத்தில் இயங்குகின்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்திடுவது இன்னொரு பாதுகாப்பான வழியாகும். சில தொகுப்புகள் தாங்களாகவே அப்டேட் செய்து கொள்கின்றன. விண்டோஸ் சிஸ்டம் தானாகவே அப்டேட் செய்து கொள்ளும். பிரவுசர், ஆபீஸ் தொகுப்புகள், பிடிஎப் ரீடர் ஆகியவையும் அப்டேட் ஆகும். அல்லது நாம் தான் அவற்றை அப்டேட் செய்திட வேண்டும். இதனால் இவற்றிற்கு மால்வேர் தொகுப்புகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் அனைத்தும் Automatically download and install என்ற வசதியைப் பெற்றிருக்கின்றன.
இந்த அப்ளிகேஷன்கள் அனைத்தும் அப்டேட் ஆகி உள்ளனவா என்றும் சோதிப்பது நல்லது. சில வாரங்களுக்கு முன் எழுதப்பட்ட filehippo என்ற பைலினை டவுண்லோட் செய்து இயக்கலாம். இதனை http://www.filehippo.com/updatechecker/ என்ற தளத்திலிருந்து பெறலாம். இது ஒரு அப்டேட் செக்கர் பைல். அப்டேட் செய்யப்படாத அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைக் கண்டறிந்து, அவற்றிற்கான தொடர்புகளை உங்களுக்குக் காட்டும். இவற்றில் எல்லாவற்றிலும் முக்கியமானது ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தான். இதனை அவ்வப்போது அப்டேட் செய்வது மிக மிக முக்கியம். காலக் கெடு வரை காத்திராமல், அவ்வப்போது அப்டேட் செய்திடலாம். மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், கம்ப்யூட்டர் இயக்கங்கள் முடக்கப்படுகையில், சற்றும் பதட்டப்படாமல் நம் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது உறுதி.

வேர்ட் டிப்ஸ்

கோடு போட்டு அழகு பார்க்க :
வேர்டில் நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் இடை இடையே அழகாய்க் கோடுகளை அமைத்துப் பார்க்கலாம். இந்த கோடுகளை அமைக்கப் பல சுருக்கு வழிகளை நமக்கு வேர்ட் தொகுப்பு தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பல கோடுகளை மிகவும் அழகாக அமைக்கலாம்.
இடது பக்கமிருந்து வலது பக்கத்திற்குஎளிமையான ஒரு கோடுஅமைக்க மூன்று மைனஸ் (–) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டுங்கள். கோடு ஒன்று வரையப்படும். மூன்று சமன் (=)அடையாளங்களை அமைத்து என்டர் தட்டினால் இரட்டைக் கோடு கிடைக்கும். இதே போல டில்டே (நு) அடையாளம் அலை அலையாய் ஒரு கோட்டினை அமைக்கும். இதே போல (#) மற்றும் வேறு அடையாளங்களை அமைத்து பரீட்சித்துப் பார்க்கவும். இந்த கோடுகளை வேண்டாம் என எண்ணினால் எப்படி நீக்குவது? கோட்டுக்கு மேலாக கர்சரைக் கொண்டு வரவும். பின் கண்ட்ரோல் + க்யூ அழுத்தவும். கோடு வரைவதில் இந்த ஏற்பாடு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கவில்லை என்றால் உள்ளே செட்டிங்ஸ் மாறி இருக்கலாம். இதனை மாற்ற Tools மெனு திறக்கவும். பின் அதில் Auto corrections என்ற பிரிவைத் திறக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Auto format as you type என்ற பிரிவில் Border Lines பாக்ஸுக்கு எதிராக டிக் அடையாளத்தை அமைக்கவும்.
அழகான வடிவங்களில் டேபிள்கள்:
வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், டேபிள் எனப்படும் அட்டவணைகள் பலவற்றை நாம் அமைக்கிறோம். தகவல்களை அதனைப் பார்ப்போர் எளிதாகவும், விரைவாகவும் புரிந்து கொள்ள இவை உதவுகின்றன. பல பாராக்களில் சொல்ல வருவதை ஒரு சிறிய டேபிளில் டேட்டாவை அமைப்பதன் மூலம் காட்டிவிடலாம். இந்த டேபிளை அமைக்க ஆரம்பத்தில் நாம் டேபிள் மெனு சென்று, நெட்டு வரிசைகளையும், படுக்கை வரிசைகளையும் தேவைப்படும் அளவில் அமைத்து அமைக்கிறோம். சாதாரண கோடுகளில் இவை அமைக்கப்படுகின்றன. இவற்றை வண்ணமயமாகவும் அழகான வடிவங்களிலும், கட்டங்களிலும் இன்னும் பல வகைகளிலும் அமைக்கலாம். இதற்கான விருப்பத்தேர்வுகளை (ஆப்ஷன்ஸ்) டேபிள் மெனுவிலேயே தரப்படுகின்றன. இவற்றை பெற்று எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
முதலில் ஒரு டேபிளை உருவாக்குங்கள். பின் கர்சரை அந்த டேபிள் உள்ளே வைத்து Table மெனு சென்று அதில் Table AutoFormat என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இங்கு பல பிரிவுகளில் டேபிள் எப்படி தோற்றமளிக்கும் எனக் காட்டப்படும். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய டேபிள் அதே தோற்றத்தில் அமைவதைக் காணலாம். டேபிள்களுக்கான நிறைய ஸ்டைல்கள் உங்களுக்கு ஆப்ஷனாகக் காட்டப்படும். இதனால் உங்களின் டேபிள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுவதனைக் காணலாம். குறிப்பாக இவற்றை பிரிண்ட் எடுக்கும்போது இவை அமைக்கப்படும் விதத்தைக் கண்டு அசந்து போவீர்கள்.
டேபிளில் பேக் ஸ்பேஸ் / டெலீட் கீகள்
வேர்டில் அட்டவணை ஒன்றைத் தயாரித்துள்ளீர்கள். இதில் செல்கள், நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை முற்றிலுமாக அழிக்க என்ன செய்கிறீர்கள்? அழிக்க வேண்டியதைத் தேர்ந்தெடுத்த பின்னர் டெலீட் கீயினை அழுத்துகிறீர்களா? என்ன நடக்கிறது? அழிய மறுக்கிறதா? இதற்குத்தான் மெனு வழி இருக்கிறதே. டேபிள் தேர்ந்தெடுத்து எந்த வகை வரிசையோ அதனைத் தேர்ந்தெடுத்து டெலீட் கொடுத்தால்தான் அழிந்து விடுமே என்று நீங்கள் எண்ணுவது தெரிகிறது. ஆனால் இத்தனை படிகள் தாண்டவேண்டுமே என இன்னொருவர் கூறுவதும் கேட்கிறது. இதற்கு மாற்று கீயாக (மருந்தாக) இன்னொரு கீ உள்ளது. அதுதான் பேக் ஸ்பேஸ் கீ. தேவையான வரிசைகளைத் தேர்ந்தெடுத்து பேக் ஸ்பேஸ் கீ அழுத்தினால் வரிசைகள் நீக்கப்படும். டேட்டா முதற்கொண்டு அனைத்தும் அழிந்துவிடும்.
காலமும் நேரமும்:
நம் கையிலா காலமும் நேரமும் உள்ளது என்று சிலர் அலுத்துக் கொள்வார்கள். வெளியே எப்படியோ! வேர்டில் இவை நம் கைகளில் தான் இருக்கின்றன. எப்படி? எந்த வேர்ட் டாகுமெண்ட்டிலும் Alt + Shift + D அழுத்தினால் அன்றைய தேதி உடனை கர்சர் உள்ள இடத்தில் அமைக்கப்படும். Alt + Shift + T அழுத்தினால் அப்போதைய நேரம் அமைக்கப்படும்.
வேர்ட் டேபிள் டெக்ஸ்ட்:
வேர்ட் டாகுமெண்ட்களில், டேபிள்களை உருவாக்குகையில், சில செல்களில் எழுத்துக்களை வழக்கத்திற்கு மாறாக அமைக்க விரும்புவோம். எடுத்துக் காட்டாக, வழக்கமாக சொற்களை படுக்கை வரிசையில் அமைப்போம். மாறாக நெட்டு வரிசையில் எழுத்துக்களை அமைத்து, சொற்களை அமைக்க எண்ணுவோம். இந்த வகையிலும் அமைக்க வழி உள்ளது. அதனை இங்கு காணலாம்.
1. எந்த செல்லில் உள்ள சொல் அமைப்பை மாற்ற விரும்புகிறீர்களோ, அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லவும். அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்குள்ள சொல் தவறாக டைப் செய்யப்பட்டிருந்தால், ஸ்பெல்லிங் தவறு இருந்தால், அதற்கான சரியான சொல் பட்டியலிடப்படும். இதை விலக்கி காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது காண்டெக்ஸ்ட் மெனு (Context Menu) கிடைக்கும்.
2. காண்டெக்ஸ்ட் மெனுவில் Text Direction என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட் டைரக்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் மூன்று வகைகளில் கட்டம் கிடைக்கும். படுக்கையாக, கீழிருந்து மேலாக மற்றும் மேலிருந்து கீழாக என இவை காட்டப்படும். எந்த பிரிவு உங்களுக்கு விருப்பமாக உள்ளதோ, அதனைத் தேர்ந்தெடுத்தால், அதேபோல டெக்ஸ்ட் அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கும் போது செல் நீளம் அதற்கேற்றபடி அமையும். பெரும்பாலும் நீட்டிக்கப்படலாம். எனவே இதனை ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
3. அனைத்தும் உங்கள் விருப்பப்படி அமைந்து விட்டால், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். உங்களிடம் வேர்ட் 2007க்கு முந்தைய தொகுப்பு இருந்தால், Tables and Borders டூல் பார் மூலம் இதனை மேற்கொள்ளலாம். இந்த டூல்பாரில் Change Text Direction என்ற பிரிவில் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் வகையில், கோணத்தில் இதனை அமைக்கலாம்.
வேர்ட் 2007 தொகுப்பினை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், ரிப்பன் லே அவுட் டேப் மூலம் இதனை மேற்கொள்ளலாம். ரிப்பனில் லே அவுட் டேப் தேர்ந்தெடுக்கப்படுவதனை உறுதி செய்து கொள்ளவும். இங்கு கிடைக்கும் Alignment குரூப்பில் உள்ள Text Direction என்பதில் கிளிக் செய்து, இந்த மாற்றத்தை அமைக்கலாம். இங்கும் நாம் விரும்பும் வகையில், டெக்ஸ்ட் அமையும் வரை கிளிக் செய்து, பின் ஓகே கிளிக் செய்து செட் செய்திடலாம்.
கமெண்ட்ஸ் மொத்தமாக நீக்கம்:
சிலர் வேர்ட் டாகுமெண்ட்களில், நிறைய கமெண்ட்ஸ் அமைப்பார்கள். அதன் அடிப்படையில் திருத்தங்களை மேற்கொண்டு, மற்றவர்களுக்குக் காட்டுவார்கள். மொழி பெயர்ப்பு டாகுமெண்ட்கள், நிறுவனங்களில் தயாரிக்கப்படும் டாகுமெண்ட்கள், இந்த வகையில் அமைக்கப்படும். இறுதியில் இந்த கமெண்ட்களை நீக்க வேண்டும். ஒவ்வொன்றாகச் சென்று நீக்கலாம். ஆனால் டாகுமெண்ட் பெரிதாக இருந்தால், இது சற்று சிரமமான காரியம். இதற்கு வேர்ட் தொகுப்பு தரும் பைன்ட் அண்ட் ரீபிளேஸ் டூல் வழி தருகிறது.
1. டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு பின்னர் கண்ட்ரோல் + எச் (Ctrl+H) அழுத்தவும். இப்போது பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தில் ரீபிளேஸ் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டம் கிடைக்கும்.
2. இதில் Find What என்ற பாக்ஸில் சீச் என டைப் செய்திடவும். (இதில் உள்ள கேரட் (சீ) சிம்பல் எண் 6க்கான கீயை ஷிப்ட் உடன் அழுத்திப் பெறலாம்)
3. அடுத்து Replace With பாக்ஸ் காலியாக இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
4. அடுத்து Replace With என்பதில் கிளிக் செய்தால், அனைத்து கமெண்ட்ளும் நீக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.

மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம் : அபுதாபிக் கட்டடம் பெற்றது கின்னசில் இடம்

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள “கேபிடல் கேட்’என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்கு “கேபிடல் கேட்’என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன.

அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதை கட்டுவதற்கு, 10 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகை உடல் நலத்துக்குப் பகை

புகை உடல் நலத்துக்குப் பகை என்பது நமக்கு நன்கு தெரியும். ஆனாலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைதவிடாமல் பிடித்துக் கொண்டு இதயத்தைப்பாழ்படுத்துகிறோம். புகைப்பிடித்தல், உடலில் உள்ள பலவகையான உறுப்புகளுக்குக் கேடு விளைவிப்பதோடு இதயத்தையும், இதயம்
தொடர்புடைய ரத்தக் குழாய்களையும் கடுமையாகச் சிதைத்துவிடுகின்றன.
புகைக்கும்போது வெளிவரும் புகையில் பலவகையான நச்சுப் பொருள்கள் இருந்தாலும், இதயத்துககு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று
முக்கியப் பொருள்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். நார், நிக்கோடின், கார்பன் மோனாக்ஸைடு ஆகியவையே அந்த மூன்று பொருள்கள்.
சிகரெட்டை புகைக்கும்போது சுமார் இரண்டு மில்லி கிராம் அளவுள்ள நிக்கோடின் நம் உடலுக்குள் செல்கிறது. புகையிலையில் அடங்கியுள்ள
நிக்கோடின் ரத்த அழுத்தத்தை மிகைப்படுத்துவதோடு அல்லாமல் இதயத் துடிப்பின் அளவையும் அதிகமாக்குகிறது. இதன் விளைவாக இதயத்
தசைகளின் உயிர்வெளி (ளிஙீசீநிணிழி) தேவையானது மிகவும் அதிகரிக்கிறது. மேலும் உடலின் புறப்பகுதிகளில் உள்ள ரத்தக் குழாய்களையும்
நிக்கோடின் குறுக்கிவிடுகிறது. இதனால் அங்கு செல்லும் ரத்தத்தின் அளவும் குறைந்து விடுகிறது. நிக்கோடினால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் இருக்க சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்ஸைடாலும் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சிகரெட் புகையில் சாதாரணமாக சுமார் 2 முதல் 4 சதவீத அளவில் கார்பன் மோனாக்ஸைடு (Car Monoxide) என்ற வாயு உள்ளது. கார்பன
மோனாக்ஸைடு வாயுவானது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களுடன் (Haemoglobin) இணைந்து கார்பாக்ஸி ஹீமோ குளோபின் (Carboxy Hameoglobin) என்று மாறுகிறது. சாதாரணமாக ஒரு மனிதனின் ரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோகுளோபின் ஒன்று முதல் இரண்டு சதவீதம் என்ற அளவில்தான் இருக்க
வேண்டும். ஆனால் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களின் ரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோ குளோபின் அளவு 6 சதவீதத்துக்கு மேல் அதிகமாகிவிடும்.
ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன் மோனாக்ஸைடின் அளவு அதிகமாகும்போது இதயத் தசைகள் இயங்குவதற்குத்
தேவையான ரத்தத்தின் அளவானது அதிகரிப்பதால் இதயத் தமனி 20 மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.
ஏற்கெனவே பலவகையான தவறான உணவுப் பழக்க வழக்கங்களின் காரணமாக இதயத் தமனிகள் தடித்து நெகிழும் தன்மையை
இழந்துவிடுகின்றன. இந்த நிலையில் 20 மடங்கு அதிகமான ரத்தத்தைப் பெற இதயத் தமனிகள் அதிகமாக உழைக்கும்போது அவை
மட்டுமல்லாது இதயமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
புகைப் பிடித்தல் போலவே அது அருந்தும் பழக்கமும் இதய நலனுக்கு எதிராகச் செயல்படும். வில்லன்தான், எதில் ஹைட்ராக்ஸைடின் மற்றொரு பெயர்தான் ஆல்கஹால். விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின், பீர் என பலவகைகளில் ஆல்கஹால்
பருகப்படுகிறது. ஒவ்வொரு வகையிலும் ஆல்கஹாலின் அளவு மாறுபடும்.
ஒரு மனிதன் மது அருந்திய சில நிமிடங்களில் அதில் உள்ள ஆல்கஹால், இரைப்பை மற்றும் சிறுகுடல் வழியாக அவனுடைய ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
ரத்தத்தில் ஆல்கஹால் கலந்த பிறகு அங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதோடு முளையைச் சுற்றியுள்ள
நீரிலும், சிறுநீரிலும் கலக்கிறது. நுரையீரலில் இருந்து வெளியேறும் காற்றோடு கலந்து சுவாசத்திலும் மது வாடையை ஏற்படுத்துகிறது.
இறுதியாக ஆல்கஹாலை கல்லீரல் சிதைவு அடையச் செய்கிறது.
மது அருந்துபவர்களுக்கு அதிகமாக வியர்ப்பதையும், முகம் சிவந்து காணப்படுவதையும் கவனித்திருப்பீர்கள். நமது உடலில் உள்ள
புறப்பகுதிகளில் தோலுக்கு அடியில் பல வகையான ரத்தக் குழாய்கள் உள்ளன. மது அருந்தும்போது தோலுக்கு அடியில் உள்ள பல்வேறு ரத்தக்
குழாய்கள் விரிவடைகின்றன. இதனால்தான் வியர்வை ஏற்படுவதோடு முகமும் சிவந்து போகிறது. மதுவை உற்சாக பானம் என்று சொல்வதுகூட ஒருவகையில் உண்மைதான். ஒரு கிராம் மது 7.1 கலோரி அளவுள்ள ஆற்றலை உடலுக்கு
அளிக்கிறது. சக்தியையும், போதையையும் தருகிறதே என தொடர்ச்சியாக மது அருந்தும்போதுதான் அது இதயத்துக்குப் பெரும் ஆபத்தாக
முடிகிறது.
மது குடிப்பதால் அதிகமாகப் பாதிக்கக்கூடிய உறுப்புகளில் முதன்மையானது இதயம். மது இதயத் தசைகளில் உள்ள செல்களைத் தாக்கி
நாளடைவில் அவற்றை முழுமையாகச் சிதைத்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாக மது குடிப்பதால் இதயத் தசைகள் வலுவிழந்து காலப்போக்கில்
மாரடைப்பு ஏற்படுவதற்கான வாசலையும் திறந்துவிடுகிறது.
நீண்டநாள்களாக தொடர்ந்து மது குடிப்பதால் இதயத் தசை நோய் (Cardio Myopathy) என்ற பாதிப்பு இதயத்துக்கு ஏற்படுகிறது. இந்த நோயின்
காரணமாக இதயத் தசைகள் Myocardium) சுருங்கி, இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பல பகுதிகளுக்குச் செலுத்தும் தன்மையை
இழந்துவிடுகின்றன. இதனால் உடலின் பல பகுதிகளுக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் அவை பாதிக்கப்பட நேர்கிறது.
அடிக்கடி மது குடிப்பவர்களுக்கு இதயத் துடிப்பும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறது. இதயத்தின் துடிப்பு, ஒரே சீராக இல்லாமல் ஒழுங்கற்று
துடிக்கத் தொடங்கும். இதனால் இதயத் துடிப்பின் எண்ணிக்கையும் வழக்கமான அளவைவிட அதிகரிக்கிறது. இத்தகைய நிலையை இதய மிகு
துடிப்பு நிலை (Tachy cardia) என்கிறார்கள். இதைத் தொடர்ந்து சீராக இயங்க வேண்டிய இதயம், சில சமயங்களில் இதய உதறலாகவும் மாறக்கூடும்.
இதயச் செயலின்மை என்பது உடலில் உள்ள பல்வேறு திசக்களுக்குத் தேவையான ரத்தத்தை இதயத்தால் அனுப்ப இயலாத நிலை (Congestive
Heart Failure). ஏற்கனவே இதயச் செயலின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக மது குடித்தால் அவர்களது பிரச்சனை இன்னும்
தீவிரமாகிவிடும். எனவே இதயத்தின் நலனைக் காக்க வேண்டும் என்றால் புகையையும், மதுவையும் கண்டிப்பாகத் தவிர்த்துவிட வேண்டும்.

நுரையீரல்

மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயுப் பரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வதும் இதன் மற்ற பணிகளாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிஜனை உள் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன்-டை- ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் 22,000 முறை மூச்சு விடுகிறான். கிட்டத்தட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறான்.

நுரையீரலின் செயல்பாடு

நுரையீரல் எவ்வாறு தன்னுடைய பணியை திறம்பட செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று மூச்சுக் குழாய் (Trachea) வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக் குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்குச் செல்கிறது. நுரையிரலுக்குள் நுழைந்தவுடன் மூச்சுக்குழல் ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும். பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு கிளைகள் என நிறைய பிரிவுகள் ஒரு மரத்தின் பெரிய கிளையிலிருந்து பரந்து பிரிந்து சின்னச்சின்ன தளிர்கள் வருவதுபோல் பிரிகின்றன. அதனாலேயே இதனை மூச்சுமரம் (Respiratory tree) என்று அழைக்கின்றோம். முதல் நிலை மூச்சுக் குழல் (Primary bronchi), இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக் குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச் சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி அறைகளுக்குள் இந்த குழல்கள் நீட்டிக் கொண்டிருக்கும். இவற்றை காற்று நுண்ணறைகள் (Alveoli) என்று அழைக்கிறோம். நாம் இழுக்கும் மூச்சுக்காற்று மூச்சு மரம் வழியாக காற்று நுண்ணறைகளுக்குள் வந்துவிடும்.

உடலில் பல பாகங்களிலும் இருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தம் இதயத்தின் வலது வெண்டிரிக்கலை அடையும். அங்கிருந்து நுரையீரல், தமணி மூலம் நுரையீரலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரல் தமணியும், வலது கிளை, இடது கிளை, என்று இரண்டாகப் பிரிந்து இரண்டு நுரையீரலுக்கும் செல்கிறது. இதுவும் பலமுறை கிளைகளாகப் பிரியும். இப்படிப் பிரியும்போது காற்று நுண்ணறைகளின் பக்கத்தில் தமணிகளின் மிக மிகச் சிறிய கிளைகள் அமைந்திருக்கும். இந்தச் சின்ன தமணிக் கிளைகள்தான் தந்துகிகள் (Capillaries) எனப்படுகிறது.

காற்று நுண்ணறை பக்கத்திலேயே தந்துகிகள் இரண்டின் சுவர்களும் மிக மிக நுண்ணியவையாக இருக்கும். அடுத்தடுத்து நுண்ணறைக்குள் காற்று நிறைந்திருக்கும் தந்துகிக்குள் ரத்தம் நிறைந்திருக்கும்.

வெளியிலிருந்து மூச்சுக்குழல் மூலம் உள்ளிழுக்கப்பட்ட காற்றில் நிறைய ஆக்ஸிஜன் இருக்கும். எனவே, நுண்ணறைக்குள்ளும் அதே அளவு ஆக்ஸிஜன் இருக்கும். தந்துகியில் உள்ள ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு குறைவு. கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகம். உடலுக்கு வேண்டாத உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மற்ற சில பொருட்களும் தந்துகியில் உண்டு.

இந்த நிலையில் நுண்ணறை – தந்துகி சுவர்களின் வழியாக ஒரு பரிமாற்றம் நடக்கிறது. நுண்ணறையில் அடர்த்தியாக இருக்கும் ஆக்ஸிஜன் தந்துகிக்குள் பாயும். தந்துகியில் அடர்த்தியாக இருக்கும் கார்பன்டை ஆக்ø-ஸடு நுண்ணறைக்குள் பாயும். இதுதான் வாயுப் பரிமாற்றம் (Exchange & gases). இதைத்தான் ரத்த சுத்திகரிப்பு என்று அழைக்கிறோம்.

ஆக்ஸிஜன் ஊட்டப்பட்ட ரத்தம் நுரையீரலிலிருந்து சிரைகள் மூலமாக இதயத்தின் இடது வெண்டிரிக்கிளுக்குள் எடுத்துச் செல்லப் படுகிறது. அங்கிருந்து மீண்டும் உடலின் பல பாகங்களுக்கு தமனிகள் மூலம் இந்த சுத்த ரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.

நுரையீரலைச் சுற்றி இரண்டு உறைகள் உள்ளன.

1. வெளிப்படலம் (Outer pleura)

2. உள்படலம் (Inner pleura)

இந்த இரண்டு படலங்களுக்கும் இடையே ஒரு இடம் உண்டு. அதற்கு ஃப்ளூரல் இடம் என்று பெயர். இதனுள் மிகச் சிறிய அளவு ஃப்ளூரல் திரவம் இருக்கும். இந்தத் திரவம்தான் சுவாசத்தின் போது நுரையீரல்களின் அசைவினால் உராய்வு ஏற்படாமல் தடுக்கிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தி சீராக வைப்பதே முகுளப்பகுதி. அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 18 முதல் 20 சுவாசம் என சீராக வைப்பது மூளையில் உள்ள முகுளத்தின் வேலை.

மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான். எப்போதும் நுரையீரலுக்குள்ளே இருந்துகெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர்.

பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். இதுபோல் மூச்சுக் குழாய்களில் மேல் சிலியா என்ற பொருள் இருக்கும். இதுவும் மிக நுண்ணிய தூசியைக் கூட அகற்றிவிடும்.

இது மூச்சுக் குழாய்களில் வரும் தூசியை மேல்நோக்கி திருப்பி அனுப்பிவிடும். நாம் அறியாமலே சில சமயங்களில் அதை விழுங்கிவிடுவோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள்ளே நுழைந்தால் இருமல், தும்மல் முதலியவற்றால் வெளியேற்றப் பட்டுவிடும்.

நுரையீரலின் பணிகள்

காற்றில் உள்ள ஆக்ஸிஜனை (ஆக்ஸிஜன்= உயிர்வளி, பிராணவாயு) இரத்தத்தில் சேர்ப்பதும், இரத்ததில் உள்ள கார்பன்-டை ஆக்ஸைடை (கரியமில வாயு) பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.

இதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருந்து இதயத்தை அதிர்வுகளிலிருந்து காப்பாற்றுகிறது.

சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது, வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வது போன்ற உடலுக்கு உயிர்தரும் வேலைகளை நுரையீரல் செய்து வருகிறது.

நுரையீரல் பாதிப்பு

உலகில் இலச்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு அதாவது சிலிகா, ஆஸ்பெட்டாஸ், கந்தகம், போன்றவற்றைப் பயன்படுத்தும் தொழிற் சாலைகளில் பணி புரிபவர்களின் நுரையீரல்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.

புகைபிடிப்பது

புகை பிடிக்கும்போது நிறைய கரித் துகள்கள் (Carbon particles) நுரையீரலுக்குள் சென்று அங்கேயே படிந்து விடுகின்றன. இதனால் ஆக்ஸிஜன்- கார்பன்டை ஆக்ஸைடு பரிமாற்றம் தடைபடுகிறது. மற்றும் சிகரெட், சுருட்டு, இவற்றிலுள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து கனிமப் பொருள்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, ரத்தக் குழாய்களின் அடைப்பை உண்டாக்குகிறது. புகைப் பழக்கத்தால் மூச்சுக்குழல் அலர்ஜி, காற்றறைகளின் சுவர்கள் சிதைந்துபோதல், எம்ஃபசிமா, நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உண்டாகின்றன. புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, பக்கத்தில் இருப்பவர்களுக்கும் (Passive smoking) இதே தீங்குகள் நேரிடும்.

நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்

இருமல்

மூச்சு வாங்குதல்

மூச்சு இழுப்பு

நெஞ்சுவலி

ஹீமாப்டிஸிஸ் (இருமும்போது ரத்தம் வெளியேறுதல்)

நுரையீரலைத் தாக்கும் சில முக்கிய நோய்கள்

மூச்சுக்குழாய் அலர்ஜி(Bronchitis), நுரையீரல் அலர்ஜி (Pneumonia), காற்றறைகள் சிதைந்து போதல்(Emphysema), மூச்சுக்குழல்கள் சுருங்கிக் கொள்ளுதல் (Asthma).

நுரையீரலை பாதுகாக்க சில எளிய வழிகள்

· தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது மூக்கில் துணியைக் கட்டிக்கொள்வது (Mask) நல்லது.

· பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைப்பிடிப்பது.

· புகைப் பிடிப்பதை தவிர்ப்பது

· உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிடுவது

இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த காற்று அதிகம் இருப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலும் அதிகம் இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் மினரல் வாட்டர் பாட்டிலைப் போல் ஆக்ஸிஜனை பாக்கெட்டுகளில் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்நிலை மாற சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், பசுமை நிறைந்த பகுதிகளாகவும் மாற்றினாலே போதும்.. ஆரோக்கிய வாழ்வைப் பெற்றிட முடியும்.

பொய் சொல்வதில் போட்டி

“யார் அதிகம் பொய் சொல்கிறார்கள்?”

இப்படி ஒரு போட்டி வைத்தால் ஆண்கள்தான் ஜெயிப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. புளுகு மன்னர்களைப் பற்றிய இந்த ஆய்வை லண்டனைச் சேர்ந்த அறிவியல் அருங்காட்சியகம் நடத்தியது. இதில் ஆண்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 பொய் சொல்கிறார்கள் என்று தெரியவந்தது. பெண்களும் உத்தமம் கிடையாது, அவர்கள் ஒரு நாளைக்கு இரு வேளைகளில் பொய் சொல்கிறார்களாம்.

`நீங்கள் பொய் சொல்வீர்களா?’ என்று கேட்டபோது, பெண்கள் 82 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டார்கள். ஆண்கள் 70 சதவீதம் பேர்தான் ஒத்துக்கொள்கிறார்கள். பெண்கள் பொதுவாக வெளியில் சாப்பிட்டால் வீட்டில் வாய்திறக்க மாட்டார்கள் என்பதுதான் அவர்கள் சொல்லும் பொய் என்று தெரியவந்தது. ஆனால் ஆண்களின் பொய்ப்பட்டியல் கொஞ்சம் நீளமானது.

`செல்போனில் சிக்னலே கிடைக்கல’, `நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன் கவனிக்கலே’, `நான் சிக்னல்ல மாட்டிக்கிட்டேன்’, `சாரி, உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்’, `நீ ரொம்ப மெலிஞ்சிட்டே’, `நான் இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்’, இதெல்லாம் ஆண்கள் சொல்லும் பொய்ப்பட்டியல். இவற்றில் பெரும்பாலான பொய்கள் தன் மனைவியிடம் சொல்லப்படுகிறது என்கிறது ஆய்வு.

இல்லத்தரசிகளே உஷார்!