பொய் சொல்வதில் போட்டி

“யார் அதிகம் பொய் சொல்கிறார்கள்?”

இப்படி ஒரு போட்டி வைத்தால் ஆண்கள்தான் ஜெயிப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. புளுகு மன்னர்களைப் பற்றிய இந்த ஆய்வை லண்டனைச் சேர்ந்த அறிவியல் அருங்காட்சியகம் நடத்தியது. இதில் ஆண்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 பொய் சொல்கிறார்கள் என்று தெரியவந்தது. பெண்களும் உத்தமம் கிடையாது, அவர்கள் ஒரு நாளைக்கு இரு வேளைகளில் பொய் சொல்கிறார்களாம்.

`நீங்கள் பொய் சொல்வீர்களா?’ என்று கேட்டபோது, பெண்கள் 82 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டார்கள். ஆண்கள் 70 சதவீதம் பேர்தான் ஒத்துக்கொள்கிறார்கள். பெண்கள் பொதுவாக வெளியில் சாப்பிட்டால் வீட்டில் வாய்திறக்க மாட்டார்கள் என்பதுதான் அவர்கள் சொல்லும் பொய் என்று தெரியவந்தது. ஆனால் ஆண்களின் பொய்ப்பட்டியல் கொஞ்சம் நீளமானது.

`செல்போனில் சிக்னலே கிடைக்கல’, `நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன் கவனிக்கலே’, `நான் சிக்னல்ல மாட்டிக்கிட்டேன்’, `சாரி, உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்’, `நீ ரொம்ப மெலிஞ்சிட்டே’, `நான் இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்’, இதெல்லாம் ஆண்கள் சொல்லும் பொய்ப்பட்டியல். இவற்றில் பெரும்பாலான பொய்கள் தன் மனைவியிடம் சொல்லப்படுகிறது என்கிறது ஆய்வு.

இல்லத்தரசிகளே உஷார்!

%d bloggers like this: