ஸீகேட் வழங்குகிறது 3 டெரா பைட் டிஸ்க்

ஹார்ட் டிஸ்க் தயாரித்து விற்பனைக்கு வழங்குவதில் முன்னணியில் இயங்கும், ஸீகேட் நிறுவனம் இந்த ஆண்டில் 3 டெராபைட் கொள்ளளவுடன், பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஹார்ட் டிஸ்க்குகள் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் மட்டுமே இணைத்து இயக்க முடியும். மேலும் அதற்கேற்ற வகையில் மற்ற ஹார்ட்வேர் பிரிவுகள் அப்கிரேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தற்போது 2 டெரா பைட் டிஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இவை விநாடியில் 6 ஜிபி பிட் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகம் உடையவை. 30 ஆண்டுகளுக்கு முன் ஹார்ட் டிஸ்க் அளவு 2.1 டெரா பைட் என்பது வரையறுக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த அளவு அதிகப்படுத்தப்படுகிறது.
இது குறித்து ஸீகேட் நிறுவன தயாரிப்பு பிரிவின் நிர்வாகி பார்பரா கூறுகையில், இந்த புதிய 3 டெரா பைட் டிஸ்க், நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கி சோதனை செய்யப்படும் என்றார். ஏனென்றால், நிறுவனங்கள் தான் டேட்டாவினை அதிக அளவில் கையாண்டு, தொடர்ந்து அதிக கொள்ளளவில் டிஸ்க்குகளை கேட்டு வருகின்றன. அவர்களுக்கு வழங்கும்போதுதான், புதிய டிஸ்க்கின் திறன் முழுமையாக சோதனை செய்யப்படும் என்றார். இந்த ட்ரைவ் 3.5 அகலத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இதனை 2.5 அங்குல அகலத்திலும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

%d bloggers like this: