Daily Archives: ஜூன் 18th, 2010

ஓப்பன் ஆபீஸ் – புதிய அம்சங்கள்

மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக அனைத்து வசதிகளையும் கொண்டதாக ஓப்பன் ஆபீஸ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் வகையை சேர்ந்ததனால், பலரும் புதிய வசதிகளை இதற்கு அளிக்கப் பாடுபட்டு வருகின்றனர். அவற்றில் சில புதிய வசதிகளை இங்கு காண்போம்.
1. ரிப்பன் ஸ்டைல் இன்டர்பேஸ்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஆபீஸ் தொகுப்பில் வழக்கமான தன் பட்டியல் வகை இன்டர்பேஸை விட்டு விட்டு, ரிப்பன் இன்டர்பேஸ் வகைக்குத் தாவிய போது, பலரும் முகம் சுழித்தனர். இது எல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுப்பா என்று முணுமுணுத்தவர்களும் உண்டு. சில நாட்கள் ரிப்பனைக் கஷ்டத்துடன் கிளிக்கியவர்கள், காலப்போக்கில், வழக்கம் போல, அதனையே எளிதானதும், விரைவானதுமானது என்ற முடிவிற்கு வந்தனர். இதனைப் பின்பற்றி ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் ரிப்பன் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இது ரிப்பன் ஸ்டைல் இன்டர்பேஸ் 3.3 என அழைக்கப்படுகிறது.
2.ரைட் கிளிக்கில் தெசாரஸ்: நீங்களும் என்னைப் போல் எழுத்தாளர் என்றால், உங்களுக்கு டாகுமெண்ட் ஒன்றை உருவாக்குகையில் அதற்கான டூல்களெல்லாம், எளிதாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். ஓப்பன் ஆபீஸில் இப்போது காண்டெக்ஸ்ட் மெனு தரப்பட்டு, தெசாரஸ் போன்ற சமாச்சாரங்கள், எந்த விதமான அலைச்சல் இன்றி கிடைக்கின்றன.
3. பைண்ட் பார்: பெரிய டாகுமெண்ட்களில் நாம் தேடி அறிய வேண்டியது நிறைய உள்ளன. இதனால் ஓப்பன் ஆபிஸ் தொகுப்பில் இப்போது தேடி அறிவதற்காக ஒரு குறிப்பிட்ட டூல் பார் தரப்பட்டுள்ளது.
4. கால்க் ஷீட் டேப்கள் தனி வண்ணத்தில்: இது பலருக்கு மிகச் சாதாரண விஷயமாக இருக்கலாம். கால்க் ஸ்ப்ரெட் ஷீட்டில் இவற்றை அமல்படுத்திப் பார்க்கையில் அதன் திறன் தெரிகிறது.
மேலே விளக்கமாகத் தரப்பட்டவையுடன், கம்ப்யூட்டர் இணைய வடிவமைப்பில் ஈடுபடுபவர்களுக்கான விஷயங்களும் தரப்பட்டுள்ளன. டிஸ்ட்ரிபியூடட் எஸ்.சி.எம்., எஸ்.வி.ஜி. இம்போர்ட்டர், பிளாஷ் அனிமேஷன் போல செயல்பாட்டிற்கான தொழில் நுட்பம், நிறைய எழுத்துவகைகள்,டெம்ப்ளேட்கள், கிளிப் ஆர்ட் பைல்கள் மற்றும் பல பில்டர்கள், ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் இப்போது கிடைக்கின்றன.
தொடர்ந்து பலரும் ஓப்பன் ஆபீஸ் தொகுப்பிற்கான, மேம்படுத்தும் தொழில் நுட்ப அடிப்படையில் சாதனங்களை அமைத்து வழங்கி வருகின்றனர். நிச்சயமாய் ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு, எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் போல மக்களிடம் வரவேற்பைப் பெறும்.

எக்ஸெல் : ஷார்ட் கட் கீகள்

எப் 1: ஹெல்ப் டாஸ்க் பேன் என்னும் உதவிக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பைத் திறக்கும்
எப்1 + கண்ட்ரோல்: ஹெல்ப் கட்டத்தைத் திறக்கவும் மூடவும் செய்திடும்.
எப்2 : ஆக்டிவாக இருக்கிற செல்லினுள் உள்ள டெக்ஸ்ட்டை எடிட் செய்திட உதவுகிறது.
எப்2 + ஷிப்ட் : எடிட் செய்திடும் செல்லுக்கான கமெண்ட் பாக்ஸ் எழுத உதவுகிறது.
எப்2 + ஆல்ட்: சேவ் அஸ் டயலாக் பாக்ஸைத் திறக்க உதவுகிறது.
எப்3+ஷிப்ட்: இன்ஸெர்ட் பங்சன் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்3 + கண்ட்ரோல்: டிபைன் நேம் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்3+கண்ட்ரோல்+ஷிப்ட்: கிரியேட் நேம் டயலாக் பாக்ஸைத் திறக்கும்
எப்4: கடைசியாகக் கொடுத்த கட்டளையைத் திரும்ப இயக்கும்.
எப்4 +கண்ட்ரோல்: ஒர்க்புக் விண்டோவை மூடும்
எப்4 + ஆல்ட் : எக்ஸெல் தொகுப்பை மூடும்
எப்5 : கோ டு டயலாக் பாக்ஸினைத் திறக்கும்
எப்5 + கண்ட்ரோல் : ஒர்க்புக் விண்டோவின் முதல் அளவில் திரும்பக் கொண்டு வரும்
எப்6 : ஹெல்ப் டாஸ்க் கட்டத்திற்கும் அப்ளிகேஷன் விண்டோவிற்குமாகத் தாவுவதற்கு இந்த கீ.
எப்6+ஷிப்ட்: பிரிக்கப்பட்ட ஒர்க் ஷீட்டில் முந்தைய கட்டத்திற்குச் செல்லலாம்
எப்6+கண்ட்ரோல்: ஒன்றிற்கும் மேலான ஒர்க் புக் திறந்திருக்கும் வேளையில் அடுத்த ஒர்க் புக்கிற்குத் தாவும்.
எப்7: ஸ்பெல்லிங் திருத்தும் கட்டம் கிடைக்கும்
எப்7 + கண்ட்ரோல்: ஒர்க் புக் விண்டோ மேக்ஸிமைஸ் ஆகாத போது அதனை நகர்த்தும்
எப்8: எக்ஸ்டென்டட் மோடினை இயக்கும், நிறுத்தும்.
எப்9: திறந்திருக்கும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் உள்ள ஒர்க் ஷீட்டுகளைக் கணக்கிடும்.
எப்9+ஷிப்ட்: திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒர்க் ஷீட்டினைக் கணக்கிடும்
எப்9+கண்ட்ரோல் : ஒர்க்புக் விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.
எப்10: மெனுபாரினைத் தேர்ந்தெடுக்கும். ஓப்பன் மெனு மற்றும் அதன் சப் மெனுவினை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுக்கும்.
எப்10 + கண்ட்ரோல்: மினிமைஸ் செய்யப்பட்ட விண்டோவினைத் திறக்கும்
எப்11: அப்போது ரேஞ்சில் உள்ள டேட்டாவிற்கான சார்ட்டை உருவாக்கும்.
எப்11+ ஷிப்ட்: புதிய ஒர்க்ஷீட்டைத் தேர்ந்தெடுக்கும்.
எப்11+ ஆல்ட்: விசுவல் பேசிக் எடிட்டர் மற்றும் அதற்கு முன்பு இருந்த ஒர்க்ஷீட்டிற்கு இடையே தாவும்.
எப்11+ஆல்ட்+ஷிப்ட்: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப்ட் எடிட்டரைத் திறக்கும்.
எப்12: சேவ் அஸ் டயலாக் பாக்ஸினைத் திறக்கும்
எப்12+ஷிப்ட்: செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக்கினை சேவ் செய்திடும்
எப்12+கண்ட்ரோல்: ஓப்பன் டயலாக் பாக்ஸினைத் திறந்திடும்.
எப்12+கண்ட்ரோல்+ஷிப்ட்: பிரிண்ட் டயலாக் பாக்ஸினைத் திறந்திடும்.
எக்ஸெல்: பேஸ்ட் பட்டன்:
எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்றும் இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட்டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டிருக்கும். உங்கள் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.

கற்ப மூலிகை கற்பூரவள்ளி

காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.

சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு.

நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்ற வள்ளுவரின் வாக்குப்படியும், சித்தர்களின் கூற்றுப்படியும், நோய் வந்ததற்கான காரணங்களை அறிந்து அந்த நோயினை தீர்க்கும் வழியினை கண்டுபிடித்து அதை சீர் செய்து மீண்டும் நோய் ஏதும் உடலை அணுகாதவாறு காக்க மக்களுக்கு சித்தர்கள் சொன்ன வழிமுறைதான் காய கற்ப முறையாகும்.

கற்ப முறையில் 1 மண்டலம் மூலிகைகளை சாப்பிட்டு வந்தால், நோய் என்னும் காலன் நம்மை நெருங்காமல் என்றும் புத்துணர்வுடனும், இளமையுடனும் வாழலாம்.

நாம் ஒவ்வொரு இதழிலும் ஒரு கற்ப மூலிகையைப் பற்றி அறிந்து வருகிறோம்.

இந்த இதழில், கற்பூர வள்ளியின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.

கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

கற்புரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.

கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.

குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க

சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.

கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .

கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும்.

இதனை தொட்டிகளில் வளர்த்து அதன் முழுமையான பயன்களைப் பெற்று நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

விரும்பினால் மழை வரும்!

விஞ்ஞானம் ஏற்கனவே செயற்கை மழை பெய்விக்கும் முறையை கண்டுபிடித்திருந்தது. குறிப்பிட்ட அளவில் பெரிதான இயற்கை மேகத்திரள் இருந்தால்தான் இந்த முறையில் மழை பெய்விக்க முடியும்.

தற்காலத்தில் காலம் தவறி பெய்துவரும் மழை, தண்ணீரின் அவசியத்தை நன்கு உணர வைத்திருக்கிறது. எனவே விரும்பிய நேரத்தில் மழையை வரவழைக்க வேறு வழி உண்டா? ஆராய்ந்த விஞ்ஞானிகள் தற்போது முக்கியக் கட்டத்தை எட்டி உள்ளனர். அதாவது செயற்கையாக மேகத்தை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் மழையை விரும்பும் நேரத்தில் வர வழைக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. அவர்கள் ஆய்வகத்தில் மேகத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இதற்காக மைனஸ் 24 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நீர் நிரம்பிய கொள்கலன் வழியாக அகச்சிவப்புக் (இன்பிராரெட்) கதிர்களைச் செலுத்தினார்கள். அப்போது நீர்த்திவலை ஆவியாகி மேகம் உருவானது. இதை சாதாரண கண்களாலும் பார்க்க முடிந்தது. ஆய்வக நிலையில் மட்டுமல்லாது வெளிப்பரப்பிலும் இந்த சோதனை வெற்றி பெற்றது.

ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஜெரோம் காஸ்பாரியன் கூறியதாவது:-

லேசர் கதிரானது அணுக்களில் உள்ள எலக்ட்ரானை ஒடுக்குவதன் முலம் `ஹைட்ராக்சைல்’ என்ற வேதிப்பொருள் அதிகஅளவில் உருவாவதை ஊக்குவிக்கிறது. இது தொடர்ந்து வினைபட்டு சல்பர் மற்றும் நைட்ரஜன்-டை-ஆக்சைடு உருவாகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் நீர் முலக்கூறுகள் அடர்த்தி குறைந்து நீராவி நிலைக்குச் சென்று மேகம் உற்பத்தியாகிறது. இதை கண்கூடாகப் பார்க்கலாம்.

எங்கள் ஆய்வில் விண்வெளியில் 60 மீட்டர் உயரத்தில் மேகம் உருவாக்கிக் காட்டப்பட்டது. 50 மைக்ரோமீட்டர் (ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கு என்பதுதான் மைக்ரோமீட்டராகும்) அகலமுள்ள நீர் முலக்கூறு அடர்த்தி குறைந்து ஆவியாகும்போது 80 மைக்ரோமீட்டராக விரிவடைகிறது. எனவே குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி அதிகமாக மேகத்திரளை ஏற்படுத்த முடியும்”

இவ்வாறு அவர் கூறினார்.

இனி, வள்ளுவன் வாக்குபோல “பெய்” என்க… பெய்யும் மழை!