உணவிலும் `கலர்’ அவசியம்!

இயற்கையில் கிடைக்கும் காய்கறி, பழங்களை கலர் கலராக சாப்பிடுவது, குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடிக்கும். அப்படி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள்.

சிலருக்கு குறிப்பிட்ட காய்கறிகள் மிகவும் பிடிக்கும். அதற்காக, அந்த காய்கறிகளை மாத்திரம் அடிக்கடி வாங்கி வந்து சமைத்து சாப்பிடுவார்கள். இப்படி, ஒரே நிறத்தில் உள்ள காய்கறியை சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் பற்றாக்குறை ஏற்படும் என இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

சமையலில் காய்கறிகளை பயன்படுத்தும்போது ஒரே வகையான காய்கறியாக எடுத்துக்கொள்ளாமல் கேரட், பீட்ரூட், தக்காளி, முட்டைகோஸ், முள்ளங்கி என்று எல்லா காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பழங்களிலும் குறிப்பிட்ட பழங்களை மட்டும் சாப்பிடாமல் ஆப்பிள், திராட்சை, மாம்பழம், பலாப்பழம், வழைப்பழம் என்று எல்லா பழங்களுக்குமே முக்கியத்துவம் தர வேண்டும்.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், மதிய உணவில் குறைந்தது 7 வெவ்வேறு இயற்கை வண்ணம் கொண்ட உணவுப் பொருட்கள் இருப்பது மிகவும் நல்லது. இவ்வாறு உணவு உட்கொண்டு வரும்போது, அதிக அளவிலான உயிர்ச்சத்துகள் நமக்கு கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

அவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட நோய்களை வராமல் தடுப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

%d bloggers like this: