Daily Archives: ஜூன் 26th, 2010

அர்த்தமுள்ள இந்துமதம்(கவியரசு கண்ணதாசன்)- உறவு

உறவு

`மனிதன், சமுக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்.

காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் `ஊர்’ என்று அழைக்கப்பட்டது.

அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் `நகரம்’ என்றழைக்கப்பட்டது.

தனி மனிதர்கள் `சமுக’மாகி விட்டார்கள்.

தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.

அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாகக் கருதப்பட்டுத் தருமங்களாயின.

கணவன் மனைவி உறவு, தாய் தந்தை பிள்ளைகள் உறவு, தாயாதிகள் பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.

தந்தைவழித் தோன்றல்களெல்லாம் `பங்காளி’களாகவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் `சம்பந்தி’களாகவும், தாய்வழித் தோன்றல்கள் `தாயாதி’களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.

வார்த்தைகளைக் கவனியுங்கள்.

தந்தைவழி பங்குடையவன் என்பதாலே `பங்காளி’யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் `தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

`சகோதரன்’ என்ற வார்த்தையே `சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.

சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகி விட்டன.

இந்த உறவுகளுக்குள்ளும், பொதுவாகச் சமு கத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அவையும் சட்டங்களாகி விட்டன.

இந்தச் சட்டங்களே நமது சமுகத்தின் கவுரவங்கள்; இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.

இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும், நிம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.

ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?

இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.

“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை” என்பது இந்துமதத் தத்துவம்.

பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.

பெற்ற தந்தையைப் பிச்சைக்கு அலையவிடும் மகன் இருக்கின்றான்.

கட்டிய தாரத்தையும் பட்டினி போடும் கணவன் இருக்கிறான்.

தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கிடக்கும் பிள்ளை இருக்கிறான்.

கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.

ச முக மரபுகள் இவற்றை ஒழுக்கக் கேடாகக் கருதவில்லை.

முதலில் நமது சமு கங்களுக்கு, `இவையும் ஒழுக்கக் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.

கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளிப் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்க முடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.

அந்த உறவு அந்த இரவுக்கு மட்டுமே!

அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையிலிருந்து விலகியதும், வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம். அந்தப் பிணைப்பு கூலிக்காகவே!

ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்குவது போல் சில உறவுகள், சொந்த வீட்டில் வாழ்வது போல் சில உறவுகள்.

ஆயிரம் வாசல் இதயம்! யாரோ வருகிறார்கள். யாரோ போகிறார்கள்!

வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்; வறண்டால் ஒதுங்குகிறார்கள்; செத்த பின் ஒப்புக்காக அழுகிறார்கள்.

இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர் ஆத்மா தாக்கப்படும் போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.

பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.

அது மனிதனாயினும் சரி, நாய் பூனையானாலும் சரி.

எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது.

கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்குக் கட்டுப் போடும் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம், சோதனையில் கூடவே வரும் நட்பு உறவு பூர்த்தியாகி விடுகிறது.

“அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வா ருறவல்லர் அக்குளத்திற்

கொட்டியு மாம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவா ருறவு!” என்றார் அவ்வையார்

இதற்குப் புராணத்திலிருந்து ஒரு பகுதியை உதாரணம் காட்டி விரிவுரை தருகிறார், திருமுருக கிருபானந்த வாரியார். அதை அவருடைய வாசகத்திலேயே தருகிறேன்.

`இடர் வந்த காலத்தில்தான் சிநேகிதர், பந்துக்கள் முதலியவர்களுடைய அன்பைத் திட்டமாக அளந்தறியலாம். நமக்கு வரும் இடர்தான், சிநேகிதரையும் உறவின் முறையினரையும் அளக்கும் அளவுகோல். ஆதலால் அக்கேட்டிலும் ஒரு பயன் உளது’ என்றார் பொய்யில் புலவர்.

கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.

இது சம்பந்தமாக, தருமபுத்திரர் வினவ, பீஷ்மர் கூறிய வியாக்கியானத்தை எடுத்துக் காட்டுவோம்.

காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், விடமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்பட்டு மானைத் தேடிப் போனான். அங்கு ஒரு பெரிய வனத்தில் மான்கள் அருகிலிருக்கக் கண்டு, மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன், ஒரு மானையடிக்கக் குறிவைத்துக் கூரிய பாணத்தை விடுத்தான். தடுக்க முடியாத அந்தப் பாணம் குறி தவறியதால், அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த மரத்தின் மீது பாய்ந்தது. கொடிய விடந்தடவிய கணையினால் மிக்க வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும் இலைகளும் உதிர்ந்து உலர்ந்து போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கியிருந்த அத்தருவானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்துகளில் வெகுநாள்களாக வசித்திருந்த ஒரு கிளி, அம்மரத்தின் மேலுள்ள பற்றினால் தன்னிருப்பிடத்தை விடவில்லை. நன்றியறிவுள்ளதும் தருமத்தில் மனமுள்ளதுமாகிய அந்தக் கிளி வெளியிற் சஞ்சரியாமலும், இரையெடாமலும், களைப்புற்றும், குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே உலர்ந்தது. மரஞ்செழிப்புற்றிருந்த போது அதனிடஞ் சுகித்திருந்தது போல், அது உலர்ந்து துன்புறும்போதும் அதனை விட்டுப் பிரியாமல் தானுந்துன்புற்றிருந்தது. அந்தக் கிளியின் உயர்ந்த குணத்தை நன்கு நோக்குங்கள்.

சிறந்த குணமுள்ளதும், மேலான சுபாவமுள்ளதும் மனிதர்க்கு மேற்பட்ட நல்லொழுக்கமுடையதுமான அக்கிளி, அம்மரத்தைப் போலவே சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தேவேந்திரன் திகைப்படைந்தான். `திரியக் ஜாதிகளுக்கு இல்லாத கருணையை இந்தப் பட்சி அடைந்திருப்பது எவ்வகை?’ என்று நினைத்தான்; பிறகு, `இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எல்லாப் பிராணிகளிலும் குணம், குற்றம் எல்லாம் காணப்படுகின்றன’ என்ற எண்ணமும் இந்திரனுக்கு உண்டாயிற்று.

இங்ஙனமெண்ணிய இந்திரன், மானிட உருவெடுத்து ஓர் அந்தணன் வடிவமாகப் பூமியில் இறங்கி, அந்தப் பட்சியைப் பார்த்து, “ஓ பட்சிகளிற் சிறந்த கிளியே! உன் தாயாகிய தா யி உன்னால் நல்ல சந்ததியுள்ளவளாக ஆகிறாள். கிளியாகிய உன்னை நான் கேட்கிறேன். உலர்ந்துபோன இந்த மரத்தை ஏன் விடாமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.

இமையவர் தலைவனாம் இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட்ட கிளியானது அவனுக்குத் தலைவணங்கி நமஸ்காரம் புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு, நான் தவத்தினால் உன்னைத் தெரிந்து கொண்டேன்” என்று சொல்லிற்று. தேவேந்திரன் “நன்று! நன்று” என்று கூறி `என்ன அறிவு’ என்று மனத்திற்குள் கொண்டாடினான்.

இவ்வாறு சிறந்த செய்கையுள்ளதும், தருமத்தையே முக்கியமாகக் கொண்டதுமாகிய அந்தக் கிளியைப் பார்த்து இந்திரன், தான் கேட்பது பாபமென்று தெரிந்திருந்தும் கேட்கத் தொடங்கினான்.

“அறிவிற் சிறந்த பறவையே! இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து, பறவைகளுக்கு ஆதரவற்ற இம்மரத்தை ஏன் காக்கிறாய்? இது பெரிய வனமாயிருக்கிறதே! இலைகளினால் முடப்பட்ட பொந்துகளும் சஞ்சரிக்கப் போதுமான இடமுள்ள இன்னும் அழகான மரங்களும் அநேகம் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சி
யடைந்து, சக்தியற்று, இரசம் வற்றி ஒளிகுன்றிக் கெட்டுப் போன இந்நிலையற்ற மரத்தைப் புத்தியினால் ஆராய்ந்து பார்த்து விட்டு விடு.”

அமேரேசனுடைய இந்த வார்த்தையைக் கேட்டு தர்மாத்மாவான அந்தக்கிளி, மிகவும் நீண்ட பெருமுச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று:

“மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாவராலும் வெல்ல முடியாத தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைத் தெரிந்து கொள். அநேக நற்குணங்கள் பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமைப் பருவத்தில் நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்படாமல் இருந்தேன். மழை, காற்று, பனி, வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இத்தருவில் சுகித்திருந்தேன்.

வலாரியே! தயையும் பக்தியுமுள்ளவனாக வேறு இடம் செல்லாமலிருக்கும் என் விடயத்தில் அனுக்கிரகம் வைத்து என் பிறவியை ஏன் பயன்படாமற் செய்கின்றாய்? நான், அன்பும் பக்தியுமுள்ளவன். பாவத்தைப் புரியேன். உபகாரிகள் விடயத்தில் தயை செய்வதுதானே தருமத்திற்கு முக்கியமான இலக்கணம். தயை செய்வதே நல்லோர்களுக்கு எப்போதும் மனத்திருப்தியை உண்டாக்குகிறது. எல்லாத் தேவர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே, நீ தேவசிரேட்டர்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே! வெகுகாலமாக இருந்த மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை அடுத்துப் பிழைத்தவன், கெட்ட நிலைமைக்கு வந்தவுடன், அதை எப்படி விடலாம்?”

எக்காலமு மிப்பாதப மெனதாமென வைகி

முக்காலே முதிருங்கனி முசியாது கர்ந்தேன்

இக்காலமி தற்கிவ்வண மிடைறு கலந்தாற்

சுக்காதகல் வதுவோவுணர் வுடையோர்மதி தூய்மையே!

– மகாபாரதம்

இவ்வாறு கூறிய, பொருளடங்கியதும், அழகுடையதுமாகிய கிளியினது வசனங்களால் மகிழ்வுற்ற இந்திரன், அதன் நன்றியறிவையும் தயையையும் எண்ணித் திருப்தியுற்று, தருமம் தெரிந்த அக்கிளியைப் பார்த்து, “ஒரு வரம் கேள்!” என்று சொன்னான்.

அன்பர்காள்! அக்கிளியானது தன் நன்மையைக் குறித்து வரம் கேட்கவில்லை. அதனுடைய பெருங்குணத்தை உற்று நோக்குங்கள்!

எப்போதும், பிறர் நோவாமையைப் பெரிதாகக் கருதிய அந்தக் கிளி, “ஏ தேவர் கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்துத் தழைத்து ஓங்க வேண்டும்!” என்றது.

அப் பறவையினுடைய உறுதியான பக்தியையும் நிரம்பின நல்லொழுக்கத்தையும் அறிந்து களிப்புற்ற இந்திரன் உடனே அம்மரத்தின் மீது அமிர்தம் பொழிந்தான். அதனால் அத்தரு, கனிகளும், இலைகளும், கிளைகளும் உண்டாகித் தழைத்தது.

கிளியினுடைய உறுதியான பக்தியால் அம்மரம் முன்னைக் காட்டிலும் மிகவும் நன்றாகச் செழித்தது.

நன்றியறிவு, தயை இந்தக் குணங்களின் பயனாகிய அச்செய்கையினால் கிளியும் அத்தருவில் இனிது மகிழ்ந்திருந்தது. தன் ஆயுள் முடிந்த பிறகு இந்திரலோகத்தை அடைந்தது.

நோயின்றி வாழும் வாழ்க்கை

விலங்குகளுக்கும் பிற உயிர்களுக்கும் பகுத்துணரும் அறிவு இல்லை. அத்தகைய அறிவு மனிதருக்கு மட்டுமே உள்ளது. பகுத்துணரும் ஆற்றலும் அறிவும் உடைய மக்கள் நூறு ஆண்டுகள் மட்டுமல்ல, அதற்கு மேலும் இருநூறு முந்நூறு ஆண்டுகள் வாழ்தல் வேண்டும்.
இருநூறு முந்நூறு ஆண்டுகள் வாழ்வது எளிது என் கூறுவதற்கு எடுத்துக்காட்டாக சீனர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் சாதாரணமாக எளிய வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறக்கின்றவர்கள் அனைவரும் இறக்கின்றவர்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று;  அதற்காக, இறந்து வாழ்வதைவிட இருந்து வாழ்வதே அறிவுக்கு உகந்தது.
பகுத்தறிவு பெற்ற மனிதர்கள் மெய்யறிவும் பெறப்பெற்றால், நோயின்றி நீண்ட நாள் வாழலாம்.  தாய் தந்தையரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட அழகிய உடம்பாகிய வீடு பழுதுபடாமல் பாதுகாப்பதுடன், அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டும் வந்தால், அந்த வீடு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும். உயிர் குடியிருக்கும் வீட்டைப் பாழாக்கிவிட்டு, மனம் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்குப் பகுத்துணரும் அறிவு இருந்தும்பயன் என்ன?
அலுவலகத்துக்கும் தொழிற்பேட்டைக்கும் சென்று வருவதற்காக வாங்குகின்ற மோட்டார் வாகனம் சிறிது பழுதானால் கூட பழுதுபார்க்க வேண்டும் என்று பலரும் ஓடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் உடம்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதாகவோ நோய் வருவதுபோல் தோன்றினாலோ உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றுவதில்லை. மாறாக, எல்லாம் சரியாகிவிடும். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அசட்டையின் காரணத்தினால், மீளாத துயரத்துக்கு ஆளானோர் அனேகம்.
குடியிருக்க வீடு கட்டுகிறோம். வெயிலுக்கும் மழைக்கும் காற்றுக்கும் அஞ்சி கூரை அமைக்கிறோம் வீட்டுக்குள்ளிருக்கும்பொருளை வேறு எவரும் கவர்ந்து செல்லாதிருக்க கதவடைத்துப் பூட்டி வைக்கின்றோம். அது மட்டும் போதாதென்று வேலியும் மதிற்சுவரும் அமைக்கின்றோம். இத்தனை இருந்தும் பாதுகாப்பில்லை என்றறிந்து காவலுக்கு ஆள் அமர்த்துகிறோம்
அத்தகைய வீட்டில் குடியிருக்கும் நம் உடம்பை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணவேட்£மா?
உடம்பைப் பாதுகாக்கவும் உடம்பை வளர்க்கவும் அறியும் அறிவைப் பெற்றவர்க்கே, நோயில்லா வாழ்வு கிட்டும்.
நீண்ட நாள் வாழ்ந்தவர் என்று சொல்லக் கூடியவரெல்லாம் நோயை அண்டவிடாது வாழ்ந்தவர் என்று கூறலாம்.
நோய் வருவதற்கான காரணங்கள் பல; அவற்றுள் மிக மிக முக்கியமானவற்றை இங்கே பட்டியல் இடுக்கின்றேன். நன்றாகச் சூரிய ஒளி கிடைக்காத இடங்களில் குடியிருப்பது, குளிர்காலத்திலும் வெப்பக்காலத்திலும் உடம்பைப் பாதுகாக்கத் தவறுவது, தூய்மையில்லாத நீரில் குளிப்பது உணவு தயாரிப்பது, வீட்டிலும் வீட்டுக்கு அருகிலும் குப்பைகளையும் கூளங்களையும் அழுக்குகளையும் சகதிகளையும் சேமித்து வைப்பது, நச்சு நீருள்ள மீன், இறைச்சி, கோழியிறைச்சி போன்றவற்றை உண்பது, தூய்மையில்லாத உணவுவிடுதி, நடைபாதைக் கடைகளில் உணவு உண்பது, களிம்பு, துரு முதலிய நஞ்சுள்ள பாத்திரங்களை உணவு தயாரிக்கப் பயன்படுத்துவது, உடம்பின் நிலையறியாமல் அடிக்கடி நீராடுவது, பல நாள் நீராடாமல் இருப்பது, தூய ஆடை அணியாமல் அழுக்கு ஆடை அணிவது, உடம்புக்குத் தேவையான பயிற்சி செய்யாதது, தொற்று நோய் உள்ளவர்களோடு நெருங்கிப் பழகுவது, தவறான முறையில் தகாத உடலுறவுகள் மேற்கொள்வது, நோயுற்ற மகளிரை மருவுவது, ஓயாமல் ஏதேனும் ஒரு மருந்தை உண்டு கொண்டிருப்பது, பசித்த போது உணவு உண்ணாமல் பசியாத போது உணவு உண்பது, உடம்புக்கும் மூளைக்கும் ஓய்வு தராமல் இருப்பது போன்றவையெல்லாம் நோய்களை வரவழைக்கின்றவையாகும்.
ஒரு முறை ஒரு நோய் வந்தால், வந்த நோய் என்ன காரணத்தினால் வந்தது என்று அறிந்துகொண்டு, அந்த முறையில் மீண்டும் அந்நோய் வராமல் தடுக்கின்ற அறிவும் அது சார்ந்த கல்வியும் பெற்றாக வேண்டும்.
நோய் வந்தால் முதலில் பாதிக்கக் கூடியதாக இருக்கும் உறுப்புகள் மலக் குடலும் இரைப்பையுமாகும். நஞ்சை உருவாக்கும்மலம், குடலில் பல நாள்கள் இருந்தால், அதிலிருந்து உருவாகும் நஞ்சு ரத்தத்தில் கலந்து நோயாகும். மலக்குடலில் தேங்கும் அசுத்தங்களை அன்றைய போதே அகற்றிவர வேண்டும். மலக்குடலிலுள்ள மலச்சக்¬கைகளைத் தினந்தோறும அகற்றிக் கொண்டுவந்தால், பெரும்பாலான நோயிலிருந்து உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மலக்குடலிலுள்ள சக்கைகளை வெளியேற்றவும் அக்குடலில் வளர்ந்திருக்கும் நோய்ப்புழுக்களைச் சாகடிக்கவும் உப்பு கலந்த நீரை எருவாய் (குதம்) வழியாகச் செலுத்தலாம். அதனால், நோய்ப்புழுக்கள் மடிவதுடன் மலக்குடலும் சுத்தமாகும். அம்முறையைச் செய்ய இயலாதவர்கள், ஆண்டுக்கு இரண்டு முறை பேதிக்கு மருந்து சாப்பிட்டு உடலைத் தூய்மை செய்யலாம்.
மலக்குடலைச் சுத்தம் செய்த பின்பு இரைப்பையைக் காய வைக்க வேண்டும். அதற்கு, நாள் முழுவதும் எந்தவகை உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும். எவ்வளவு நேரம் உணவு உண்ணாமல் இருக்க முடியுமோ அவ்வளவுநேரம் இருந்தால், உடல் தூய்மையாகும்.
மலக்குடலையும் தீனிப்பையும் சுத்தம் செய்யச் செய்ய உடம்பிலிருந்த நோய்கள் மெல்ல மெல்ல அகன்று விடும்.
இவ்வாறு செய்து குடல் தூய்மையான பின்பு, காலையில் இஞ்சிச் சாறு அருந்த வேண்டும். உச்சி வேளையில் சுக்கு காசயம் அருந்த வேண்டும். இரவு படுக்கும் முன் கொட்டை நீக்கிய கடுக்காய்த்தோலைப் போட்டுக் காய்ச்சிய நீரைப் பருக வேண்டும். இவ்வாறு, தினந்தோறும் செய்து கொண்டு வந்தால், உடம்பில் நோய் என்பதேஇருக்காது. உடல் வளமாகவும் வலிமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

10 தூக்கம்

உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி. தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம்.
சான்றோர்கள், துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள் உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.
விதியாவது! மண்ணாவது! என்று, துண்டை விரித்துப் போட்டுக் கொண்டு படுக்கின்றவர்களுக்கும், படுத்த அடுத்த நிமிடத்தில் ‘அம்மனோ சாமியோ! என்று ஆனந்த ராகத்தில் இசையமைத்து குறட்டை விடுபவர்களுக்கும் நோய் நீங்கும். எந்த வித நோயும் வராது, உடலும் நலமாக இருக்கும்.
தூங்குவதற்கான என்பது, சாலை விதி போல, கண்ணை விழித்துக் கொண்டு செயலாற்றுவதல்ல. படுக்கும்போது, எந்தத் திசையில் தலை வைக்க வேண்டும், கையை காலை எப்படி வைக்க வேண்டும். எப்படி படுக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படிச் சுதந்திரமாக மகிழச்சியாக இருப்பானோ, அத்தகைய மகிழச்சியைத் தருகிறது, கிழக்கு.
வேலை செய்வதற்காகவோ வேறு காரணத்துக்காகவோ பிறந்த ஊரை வட்டு வேறு ஒரு ஊருக்கு வந்து வாழக்கை நடத்துகின்றவனுக்குக் கிடைக்கக் கூடிய மகிழச்சியைத் தருவது, மேற்கு.
பிறந்த ஊர், குடிபெயர்ந்த ஊர் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, மனைவியின் ஊராகிய மாமியார் ஊரில் வந்து தங்கும்போது மாப்பிள்ளைக்குக்கிடைக்கும் சுகத்தைத் தருகிறது, தெற்கு.
எவர் வீட்டுக்குப் போனாலும் அவர் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று சொல்வதைப் போல, எந்தத் திசையில் படுத்தாலும் படுக்கலாம்! வடக்குத் திசையில் மட்டும்தலைவைத்துப் படுக்கக் கூடாது.
பூமியின் வடமுனையிலிருந்து தென்முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக் கொண்டிருக்கும. உறங்கும்போது வடக்கில் தலை இருந்தால், மூளைப் பகுதி அந்தக் கதிரிழுப்பு விசையால் ஓய்வு பெறுவது குறைந்துவிடும். எனவேதான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்கிறார்கள்.
குறிப்பாக, நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவாகக் குணமாக வேண்டும் என்பதற்காகவும் திசைகளைப் பற்றி தெரிவித்துள்ளார்கள்.
கிழக்கு சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது என்று மருத்துவம் நூலார் கூறியுள்ளனர்.
நோயின்றி இருப்பதுடன் சுகமாகவும் நலமாகவும் இருக்க விரும்பின்றவர்கள் தங்களுக்குப் பிடித்த திசையில் படுக்கலாம்.
தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். வலுவுண்டாகும். ஆகையால், நேரந்தவறாமல் தூங்க வேண்டும்.
தூங்குவதற்கு ஏற்ற படுக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘இலவம் பஞ்சில் துயில்’ என்று கூறப்பட்டிருப்பதை நினைவில் கொள்வது நலம்.
படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.
இடது புறமாக ஒருக்களித்து தூங்கும்போது, வலது புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்கும். வலப்புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று செல்லும்போது, நல்ல தூக்கம் வரும். உடம்புக்குத் தேவையான வெப்பம்கிடைக்கும்.
இதது புறமாக ஒருக்களித்துப் படுக்கும் நோயாளிக்கு நோய் விரைவாகக் குணமாகும்.
எக்காரணத்தைக் கொண்டும் கவிழ்ந்து குப்புறமாகவோ மல்லாந்தோ படுக்க கூடாது. ஏனென்றால், இரவு நேரத்தில்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை கூடி கற்களை உருவாக்குகின்றன. குறிப்பாகக் குப்புறப்படுக்கும் போதே சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.
எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகலில் துஹங்கினால், உடம்பிலுள்ள வெப்பம் தணியாமல் வாத நோய்கள் உருவாகும்.
இரவில் தூங்கினால், பூமி குளிர்ச்சி அடைவதுபோல, உழைப்பினால், உடம்பில் ஏற்பட்ட வெப்பம் நீங்கி, உடல் குளிர்ச்சியாகும்.

விண்வெளியில் புதிய ஆய்வு: அடியெடுத்து வைத்தது இந்தியா

விண்வெளி ஆய்வில், மற்றொரு புதிய முயற்சியில் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது. ஹவாய் தீவில் செயல்படுத்தப்படும், “தர்ட்டி மீட்டர் டெலஸ்கோப்’ (டிஎம்டி) திட்டத்தில் பார்வையாளராகச் சேர்ந்துள்ளது. வானியல் ஆய்வில் அடுத்த தலைமுறை ஆய்வுக்கூடம் தான் இந்த பிரமாண்டமான டி.எம்.டி., திட்டம்.வரும் 2018ம் ஆண்டில் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் இத்திட்டத்தில் முதல் நடவடிக்கையாக பார்வையாளராகச் சேர்ந்துள்ள இந்தியா, பின்னர் பங்குதாரராக மாறும்.

இந்த திட்டத்தின் மூலம் வானியல் ஆய்வில் மிக நவீன ஆய்வுக்கூடம் உருவாகி விடும். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருதிவிராஜ் சவான், “டிஎம்டி’ திட்டத்தில் இந்தியா சேர்ந்துள்ள விவரத்தை அறிவித்தார்.டி.எம்.டி.,யின் அறிவியல் ரீதியான செயல்பாடுகள், ஹவாயின் மவுனா கியா பகுதியில், 2018ம் ஆண்டில் செயல்படத் துவங்கும். தற்போதுள்ள பெரிய டெலஸ்கோப்புகளில் பொருட்களை பார்ப்பதை விட, மூன்று மடங்கு பெரிய அளவில் பொருட்களை பார்க்கும், புதிய டெலஸ்கோப் இந்தத் திட்டம் மூலம் உருவாக்கப்படும்.

படங்கள், போட்டோக்கள் விதம் விதமாய்ப் பெற

படங்கள், போட்டோக்கள் விதம் விதமாய்ப் பெற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இமேஜ் கிராபிக்ஸ் வரைகலைஞர்களுக்கான போட்டோக்கள் மற்றும் படங்களைத் தரும் ஓர் அருமையான இணைய தளம் ஒன்றைக் காண நேர்ந்தது. இந்த தளத்தின் பெயர் Open Photo. இது ஒரு போட்டோக்களின் இருப்பு நிலையம் என்றே கூறலாம். வியக்கத்தக்க பல போட்டோக்கள், கலைப் படங்கள் இதில் காட்டப்படுகின்றன. போட்டோக்களின் வகை (Categories) குறித்து இதில் தேடி, படங்களைப் பெறலாம். ஏதேனும் ஒரு போட்டோவில் கிளிக் செய்தால், அந்த வகைப் படங்கள் நமக்கு நிறையக் காட்டப்படும். பெரும்பாலும் இலவசமாக டவுண்லோட் செய்யக் கூடிய வகையில் தான் இவை இங்கு தரப்படுகின்றன. கட்டணம் செலுத்திக் கிடைக்கும் படங்களும் இதில் உள்ளன. இந்த தளம் காட்டும் Categories டேப்பில் கிளிக் செய்தால், அனைத்து வகைகளும் அவற்றின் பெயருடன் பட்டியலிடப்படுகின்றன. தேவையான வகையினைத் தேடிப் பார்த்து, போட்டோக்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு இமேஜில் கிளிக் செய்திடுகையில், அதன் வலது பக்கத்தில், அந்த படத்திற்கான உரிமம் குறித்த தகவல்கள் காட்டப் படுவதனைக் காணலாம். வெவ்வேறு வகையான உரிமங்கள் தரப்பட்டு, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் காட்டப்பட்டுள்ளன.
நம் இணைய தளங்கள், பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைடுகள் மற்றும் நாம் தயாரிக்கும் சொந்த வாழ்த்து அட்டைகளில் பயன்படுத்த இந்த தளத்தில் பலவகையான படங்களைக் காணலாம். எதற்கும் ஒரு முறை சென்று பார்த்து நல்லதெனத் தெரிந்தால், புக் மார்க் செய்து பயன்படுத்துங்கள். இந்த தளத்தின் முகவரி:  http://www.openphoto.net


த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி’யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படாதா!

ஆண்களை மட்டுமே இதய நோய்கள் பாதிக்கும் என்ற கருத்து பொதுவாக மக்களிடம் மட்டுமன்றி மருத்துவர்களிடையேயும் நீண்ட காலமாக நிலவி வந்தது. ஆனால் சமீபகாலமாகத்தான் இந்தக் கருத்து மாறியிருக்கிறது.
பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படாது என்ற கருத்து உருவானதற்குச் சமூக ரீதியாகவும் காரணங்கள் இருக்கின்றன.
பெண்கள் என்றால் மென்மையான இயல்புடையவர்கள் என்ற சமுதாயப் பார்வை இருந்தது. இதன் காரணமாக கடினமான உழைப்புக்கு ஆண்களும், மென்மையான வேலைகளுக்குப் பெண்களும் நியமிக்கப்பட்டார்கள். இதனால் மென்மையான வேலைகளைச் செய்யும் பெண்கள் இதய நோய்க்கு ஆளாக வாய்ப்பில்லை என்ற தவறான கருத்து நிலவி வந்தது.
இத்தகைய தவறான கருத்துக்கு ஆதரவு தரும் விதமாக ஒரு மருத்துவ ஆராய்ச்சியின் முடிவும் அமைந்துவிட்டது. 1950&ம் ஆண்டுகளில் இதய நோய்களைப் பற்றி நீண்ட காலமாக ஒரு மிகப்பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. இது பர்மிங்ஹாம் ஆய்வு என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆய்வு ஆண்களை மட்டுமே இதய நோய்கள் பாதிக்கும் என்றும் பெண்கள் இயற்கையாகவே இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு பெற்றுள்ளனர் என்றும் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளிப்படுத்தின. இதை உண்மையென்றே உலகில் உள்ள மருத்துவர்கள் நீண்ட காலமாகக் கருதி வந்தனர். ஆனால் காலப்போக்கில் பெண்களின் வாழ்க்கைத் தரத்திலும் சமூக அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த இரண்மு கருத்துகளையும் தகர்த்து எறிந்துவிட்டன.
இன்றைக்குப் பெண்கய் கடுமையான உடல் உழைப்பைத் தரக்கூடிய எல்லாவகையான வேலைகளையும் செய்கிறார்கள். எனவே பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படாது என்ற பழைய கொள்கை தகர்க்கப்பட்டுவிட்டது. ஆண்களைப்போலவே எல்லாவிதமான வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுவதால் அவர்களும் இதய நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்பதை அனைவரும் இன்றைக்கு உணர்ந்திருக்கின்றனர்.
அதோடு ரத்தமிகு அழுத்த நோய் இதயத் தமனி நோய்கள் ஆகியவற்றால் பெண்களும் பரவலாகப் பாதிக்கப்படுவதை மருத்துவ உலகமும் உணர்ந்து கொண்டது. ஆனால் இதய நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் வகையில் பெண்களின் உடலில் ஒரு விசேஷ அம்சம் உள்ளது.
பெண்கள் பருவமடைந்த காலத்தில் இருந்து மாதவிலக்கு முற்றுப் பெறுவதுவரை  உள்ள இடைப்பட்ட காலத்தில் பெண்களின் உடலில் பெண் இள ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் தொடர்ந்து சுரக்கிறது. பெண்மை தொடர்புடைய பலவகையான நிகழ்வுக்குக் காரணமான இந்த ஹார்மோன், பெண்களை இதய நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இந்தப் பாதுகாப்பானது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும் காலகட்டத்தில்தான் கிடைக்கிறது. சுரக்க முழுமையாக நின்ற பிறகு பாதுகாப்பு கிடைப்பதில்லை.
பெண்களுக்கு மாரடைப்பு வராது என்ற தவறான கருத்தும் இன்றைக்கு மாறியிருக்கிறது. மாரடைப்பு ஆண்களை இளமைப் பருவத்திலும் பெண்களை நடுத்தர வயதிலும் பாதிக்கிறது. மாதவிலக்கு முற்றுப்பெற்ற பெண்கள். ஆண்களுக்கு இணையாக மாரடைப்புக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
குழந்தை பெறும் பருவ காலங்களில் இதய நோய்களில் இருந்து இயற்கையான பாதுகாப்பு கிடைத்தாலும் உலக அளவில் இதய நோய்களுக்கு ஆளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கையானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகப் பல புள்ளிவிவரங்களை கூறுகின்றன. மற்றவகை நோய்களைவிட இதய நோய்களால் இறக்கும் பெண்களின் குறிப்பாக 65 வயதுக்கு உள்பட்ட பெண்களின் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளது.
பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஓரளவு பாதுகாப்பு அளித்தாலும் இளம் வயதில், நடுத்தர வயதில், குழந்தை பெறும் பருவ காலங்களில், மாரடைப்புக்கு ஆளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
பெண்களின் வாழ்க்கை நிலையும், சமூக நிலையும் பெருமளவு மாறியிருப்பதே இதற்குக் காரணம். கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் பெண்கள் தற்போது அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர். தற்காலப் பெண்கள் நம்முடைய பாரம்பரியமான உணவு பழக்க வழக்கங்களை மறந்து மேலை நாட்டு உணவு வகைகளை அதிக அளவு சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். அன்றாட உணவில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு உணவு வகைகளையும், இனிப்பு வகை உணவுகளையும், உப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
உடலின் எடையை ஒரே சீராக வைத்துக் கொள்ளாமல் இடைப்பெருக்கம், உடல் பருமன் ஆகியவற்றுக்கு ஆளாதும் ஒரு முக்கியக் காரணம். அன்றாட வாழ்க்கையில் பலவகையான மன இறுக்கத்துக்கும், மன உளைச்சலுக்கும் அடிக்கடி ஆளாதல், வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்பச் சுமை மற்றும் அலுவலகப் பணிச்சுமையை ஒருசேர சுமத்தல் நீரழிவு நோயால் பாதிக்கப்படுதல் போன்ற காரணங்களாலும் பெண்கள் இதய நோய்களுக்கு ஆளாகின்றனர்.
தற்காப்பு முறைகள்
வயது, உயரம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு உங்கள் எடையை (ஙிவிமி-ஙிஷீபீஹ் விணீss மிஸீபீமீஜ்) ஒரே சீராக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ரத்த அழுத்தத்தின் அளவை அவ்வப்போது சோதித்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருந்தால் தக்க மருந்துகள், தக்க உணவு முறைகள் மூலமாகக் கட்டுப்படுத்துங்கள்.
30 வயதைக் கமந்த பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறையாவது தங்களுடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைச் சோதித்துக் கொள்ளுங்கள். அளவு அதிகமாக இருந்தால் அதற்கேற்ப தக்க மருந்துகள் மூலம் தொடக்க நிலையிலேயே அவற்றைக் கட்டுப்படுத்துவது நல்லது.
உடலுக்கு எந்தவித இயக்கமும் கொடுக்காமல் இருந்தாலும் இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்ள் அதிகரித்துவிடும். எனவே அன்றாடம் உங்கள் வயதுக்கு ஏற்ப, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், சைக்கிள் பயிற்சி போன்ற ஏதாவது ஒன்றில் அரைமணி நேரம் ஈடுபடுங்கள்.
மன இறுக்கம், மன உளைச்சல் போன்றவை இதயப் பாதிப்புக்கு வழிவகுக்கும் முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். இதைப்போக்க மனத்துக்கு மகிழ்ச்சியூட்டும். நல்ல பொழுதுபோக்குகளை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட நேரத்தை அவற்றுக்காக ஒதுக்குங்கள்.

வேர்டில் டெக்ஸ்ட் திருத்த பலமுனை வழிகள

வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், நாம் பலமுறை அதனைத் திருத்தவும், திருத்தியவற்றில் மாற்றங்களை மேற்கொள்ளவும் விரும்புவோம். ஆனால் எப்போதும் நாம் என்ன முன்பு திருத்தினோம் என்பதையும் வேர்ட் காட்டினால் நல்லது என விருப்பப்படுவோம். இதற்காக ஒவ்வொரு திருத்தத்திற்கும், பைலின் ஒரு பதிப்பை, வெவ்வேறு பெயர்களில் வைத்துக் கொள்ள முடியாது. இந்த வசதிகளை உள்ளடக்கிய டூல் ஒன்று வேர்டில் தரப்பட்டுள்ளது. அதன் பெயர் Reviewing toolbar. இந்த டூல் பார் தரும் வசதிகளையும், அதன் பயன்களையும் இங்கு பார்க்கலாம்.
இன்னும் வேர்ட் 97 மற்றும் வேர்ட் 2000 பயன்படுத்துபவர்களுக்கு:
1. இந்த டூல்பாரை இயக்கத்திற்குக் கொண்டு வர, வியூ (View)  மெனுவிலிருந்து டூல்பார்ஸ்(Toolbars) தேர்வு செய்து, அதில் Reviewing என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதனை உறுதி செய்திடவும். பொதுவாக இது வேர்ட் டாகுமெண்ட்டில் ரூலருக்கு மேலாகக் காட்டப்படும். 2. ரிவியூவிங் டூல்பார் நான்கு வகைப் பணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: Comments:  இது முதல் ஐந்து டூல்களாகும். இவற்றின் மூலம் நாம் குறிப்புகளை அமைக்கலாம், திருத்தலாம் மற்றும் நீக்கலாம். குறிப்புகள் ஊடாக முன்னும் பின்னும் வேகமாகச் சென்று இவற்றைக் கையாளலாம். அடுத்து Track Changes. இது அடுத்த ஐந்து டூல்களைக் கொண்டுள்ளது. டெக்ஸ்ட்டில் செய்த மாற்றங்களைக் கட்டமிட்டுக் காட்டும். ஒரு மாற்றத்திற்கு முன்னதாகவும், அடுத்தும் மேற்கொண்ட மாற்றத்தினையும் காட்டும். மாற்றங்களை ஒதுக்கித் தள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் வழிகளைத் தரும்.
மூன்றாவது டூல் Highlighting . பார்மட்டிங் டூல்பாரில் உள்ள அதே ஹைலைட்டிங் டூல் பார் தான் இது. இதுவும் ரிவியூவிங் டூல்பாரில் இணைக்கப்பட்டுள்ளது. அதே செயல்பாட்டினை இதன் மூலமும் மேற்கொள்ளலாம்.
அடுத்த டூல் பார் குரூப் Miscellaneous  இது அவுட்லுக் தொகுப்பிற்கு டெக்ஸ்ட்டை அனுப்புகிறது. இதன் மூலம் ஒரு டாகுமெண்ட்டை சேவ் செய்து இமெயில் மூலம் அனுப்பலாம்.
வேர்ட் 2002 தொகுப்பிலிருந்து, மைக்ரோசாப்ட் வேர்ட் ரிவியூவிங் டூல் பாரில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆனால் நோக்கங்களும் வேலைப்பாடும் மாறாமல் இருந்தன. அவற்றைப் பார்க்கலாம்.
1. Display: முதலாவதாகத் தரப்பட்டுள்ள இரண்டு டூல்களின் தொகுதி. இவை இரண்டுமே கீழ் விரி பட்டியலாகத் தரப்பட்டுள்ளன. நீங்கள் டெக்ஸ்ட்டில் செய்த மாற்றங்களில் எந்த வகை மாற்றங்கள் காட்டப்படுகின்றன என்பதை, இந்த டூல் கட்டுப்படுத்துகிறது.
2. அடுத்தது Track Changes: மேலே சொன்ன வகையில், டெக்ஸ்ட்டில் ஏற்படுத்திய மாற்றங்களைக் காட்டி, அவற்றை மேற்கொள்ளவும், நீக்கவும் உதவுகிறது.
3. Comments: இந்த வகையில் ஒரே ஒரு டூலினைக் கொண்டுள்ளது. டாகுமெண்ட்டில் ஏற்படுத்தும் குறிப்புகளைக் கட்டுப்படுத்திக் கையாளும் வசதியினைத் தருகிறது.
4.Track Changes Control: இதன் மூலம் மாற்றங்கள் அனைத்தையும் மொத்தமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
5. Reviewing Pane: ஒரு தனிப் பிரிவினை திரையின் கீழ் இந்த டூல் உருவாக்கிக் காட்டவும் மறைக்கவும் செய்திடும். இதில் நாம் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து கூடுதல் தகவல்கள் காட்டப்படும்.
வேர்ட் 2007ல் வழக்கமான இந்த ரிவியூவிங் டூல்பாரின் தோற்றத்தினை, மைக்ரோசாப்ட் மாற்றியுள்ளது. இவற்றை ரிவியூ டேப் ரிப்பன் மூலம் பெறும்படி அமைத்துள்ளது. பெரும்பாலான டூல்கள் Comments and Tracking என்ற இரண்டு பிரிவுகளில் கிடைக்கும்படி தந்துள்ளது.