நோயின்றி வாழும் வாழ்க்கை

விலங்குகளுக்கும் பிற உயிர்களுக்கும் பகுத்துணரும் அறிவு இல்லை. அத்தகைய அறிவு மனிதருக்கு மட்டுமே உள்ளது. பகுத்துணரும் ஆற்றலும் அறிவும் உடைய மக்கள் நூறு ஆண்டுகள் மட்டுமல்ல, அதற்கு மேலும் இருநூறு முந்நூறு ஆண்டுகள் வாழ்தல் வேண்டும்.
இருநூறு முந்நூறு ஆண்டுகள் வாழ்வது எளிது என் கூறுவதற்கு எடுத்துக்காட்டாக சீனர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் சாதாரணமாக எளிய வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறக்கின்றவர்கள் அனைவரும் இறக்கின்றவர்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று;  அதற்காக, இறந்து வாழ்வதைவிட இருந்து வாழ்வதே அறிவுக்கு உகந்தது.
பகுத்தறிவு பெற்ற மனிதர்கள் மெய்யறிவும் பெறப்பெற்றால், நோயின்றி நீண்ட நாள் வாழலாம்.  தாய் தந்தையரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட அழகிய உடம்பாகிய வீடு பழுதுபடாமல் பாதுகாப்பதுடன், அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டும் வந்தால், அந்த வீடு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும். உயிர் குடியிருக்கும் வீட்டைப் பாழாக்கிவிட்டு, மனம் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்குப் பகுத்துணரும் அறிவு இருந்தும்பயன் என்ன?
அலுவலகத்துக்கும் தொழிற்பேட்டைக்கும் சென்று வருவதற்காக வாங்குகின்ற மோட்டார் வாகனம் சிறிது பழுதானால் கூட பழுதுபார்க்க வேண்டும் என்று பலரும் ஓடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் உடம்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதாகவோ நோய் வருவதுபோல் தோன்றினாலோ உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றுவதில்லை. மாறாக, எல்லாம் சரியாகிவிடும். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அசட்டையின் காரணத்தினால், மீளாத துயரத்துக்கு ஆளானோர் அனேகம்.
குடியிருக்க வீடு கட்டுகிறோம். வெயிலுக்கும் மழைக்கும் காற்றுக்கும் அஞ்சி கூரை அமைக்கிறோம் வீட்டுக்குள்ளிருக்கும்பொருளை வேறு எவரும் கவர்ந்து செல்லாதிருக்க கதவடைத்துப் பூட்டி வைக்கின்றோம். அது மட்டும் போதாதென்று வேலியும் மதிற்சுவரும் அமைக்கின்றோம். இத்தனை இருந்தும் பாதுகாப்பில்லை என்றறிந்து காவலுக்கு ஆள் அமர்த்துகிறோம்
அத்தகைய வீட்டில் குடியிருக்கும் நம் உடம்பை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணவேட்£மா?
உடம்பைப் பாதுகாக்கவும் உடம்பை வளர்க்கவும் அறியும் அறிவைப் பெற்றவர்க்கே, நோயில்லா வாழ்வு கிட்டும்.
நீண்ட நாள் வாழ்ந்தவர் என்று சொல்லக் கூடியவரெல்லாம் நோயை அண்டவிடாது வாழ்ந்தவர் என்று கூறலாம்.
நோய் வருவதற்கான காரணங்கள் பல; அவற்றுள் மிக மிக முக்கியமானவற்றை இங்கே பட்டியல் இடுக்கின்றேன். நன்றாகச் சூரிய ஒளி கிடைக்காத இடங்களில் குடியிருப்பது, குளிர்காலத்திலும் வெப்பக்காலத்திலும் உடம்பைப் பாதுகாக்கத் தவறுவது, தூய்மையில்லாத நீரில் குளிப்பது உணவு தயாரிப்பது, வீட்டிலும் வீட்டுக்கு அருகிலும் குப்பைகளையும் கூளங்களையும் அழுக்குகளையும் சகதிகளையும் சேமித்து வைப்பது, நச்சு நீருள்ள மீன், இறைச்சி, கோழியிறைச்சி போன்றவற்றை உண்பது, தூய்மையில்லாத உணவுவிடுதி, நடைபாதைக் கடைகளில் உணவு உண்பது, களிம்பு, துரு முதலிய நஞ்சுள்ள பாத்திரங்களை உணவு தயாரிக்கப் பயன்படுத்துவது, உடம்பின் நிலையறியாமல் அடிக்கடி நீராடுவது, பல நாள் நீராடாமல் இருப்பது, தூய ஆடை அணியாமல் அழுக்கு ஆடை அணிவது, உடம்புக்குத் தேவையான பயிற்சி செய்யாதது, தொற்று நோய் உள்ளவர்களோடு நெருங்கிப் பழகுவது, தவறான முறையில் தகாத உடலுறவுகள் மேற்கொள்வது, நோயுற்ற மகளிரை மருவுவது, ஓயாமல் ஏதேனும் ஒரு மருந்தை உண்டு கொண்டிருப்பது, பசித்த போது உணவு உண்ணாமல் பசியாத போது உணவு உண்பது, உடம்புக்கும் மூளைக்கும் ஓய்வு தராமல் இருப்பது போன்றவையெல்லாம் நோய்களை வரவழைக்கின்றவையாகும்.
ஒரு முறை ஒரு நோய் வந்தால், வந்த நோய் என்ன காரணத்தினால் வந்தது என்று அறிந்துகொண்டு, அந்த முறையில் மீண்டும் அந்நோய் வராமல் தடுக்கின்ற அறிவும் அது சார்ந்த கல்வியும் பெற்றாக வேண்டும்.
நோய் வந்தால் முதலில் பாதிக்கக் கூடியதாக இருக்கும் உறுப்புகள் மலக் குடலும் இரைப்பையுமாகும். நஞ்சை உருவாக்கும்மலம், குடலில் பல நாள்கள் இருந்தால், அதிலிருந்து உருவாகும் நஞ்சு ரத்தத்தில் கலந்து நோயாகும். மலக்குடலில் தேங்கும் அசுத்தங்களை அன்றைய போதே அகற்றிவர வேண்டும். மலக்குடலிலுள்ள மலச்சக்¬கைகளைத் தினந்தோறும அகற்றிக் கொண்டுவந்தால், பெரும்பாலான நோயிலிருந்து உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மலக்குடலிலுள்ள சக்கைகளை வெளியேற்றவும் அக்குடலில் வளர்ந்திருக்கும் நோய்ப்புழுக்களைச் சாகடிக்கவும் உப்பு கலந்த நீரை எருவாய் (குதம்) வழியாகச் செலுத்தலாம். அதனால், நோய்ப்புழுக்கள் மடிவதுடன் மலக்குடலும் சுத்தமாகும். அம்முறையைச் செய்ய இயலாதவர்கள், ஆண்டுக்கு இரண்டு முறை பேதிக்கு மருந்து சாப்பிட்டு உடலைத் தூய்மை செய்யலாம்.
மலக்குடலைச் சுத்தம் செய்த பின்பு இரைப்பையைக் காய வைக்க வேண்டும். அதற்கு, நாள் முழுவதும் எந்தவகை உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும். எவ்வளவு நேரம் உணவு உண்ணாமல் இருக்க முடியுமோ அவ்வளவுநேரம் இருந்தால், உடல் தூய்மையாகும்.
மலக்குடலையும் தீனிப்பையும் சுத்தம் செய்யச் செய்ய உடம்பிலிருந்த நோய்கள் மெல்ல மெல்ல அகன்று விடும்.
இவ்வாறு செய்து குடல் தூய்மையான பின்பு, காலையில் இஞ்சிச் சாறு அருந்த வேண்டும். உச்சி வேளையில் சுக்கு காசயம் அருந்த வேண்டும். இரவு படுக்கும் முன் கொட்டை நீக்கிய கடுக்காய்த்தோலைப் போட்டுக் காய்ச்சிய நீரைப் பருக வேண்டும். இவ்வாறு, தினந்தோறும் செய்து கொண்டு வந்தால், உடம்பில் நோய் என்பதேஇருக்காது. உடல் வளமாகவும் வலிமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

2 responses

  1. could we used to eat only juice which contains total energy for living
    This is the one of treatment for reduce weight and illness

%d bloggers like this: