விண்வெளியில் புதிய ஆய்வு: அடியெடுத்து வைத்தது இந்தியா

விண்வெளி ஆய்வில், மற்றொரு புதிய முயற்சியில் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது. ஹவாய் தீவில் செயல்படுத்தப்படும், “தர்ட்டி மீட்டர் டெலஸ்கோப்’ (டிஎம்டி) திட்டத்தில் பார்வையாளராகச் சேர்ந்துள்ளது. வானியல் ஆய்வில் அடுத்த தலைமுறை ஆய்வுக்கூடம் தான் இந்த பிரமாண்டமான டி.எம்.டி., திட்டம்.வரும் 2018ம் ஆண்டில் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் இத்திட்டத்தில் முதல் நடவடிக்கையாக பார்வையாளராகச் சேர்ந்துள்ள இந்தியா, பின்னர் பங்குதாரராக மாறும்.

இந்த திட்டத்தின் மூலம் வானியல் ஆய்வில் மிக நவீன ஆய்வுக்கூடம் உருவாகி விடும். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருதிவிராஜ் சவான், “டிஎம்டி’ திட்டத்தில் இந்தியா சேர்ந்துள்ள விவரத்தை அறிவித்தார்.டி.எம்.டி.,யின் அறிவியல் ரீதியான செயல்பாடுகள், ஹவாயின் மவுனா கியா பகுதியில், 2018ம் ஆண்டில் செயல்படத் துவங்கும். தற்போதுள்ள பெரிய டெலஸ்கோப்புகளில் பொருட்களை பார்ப்பதை விட, மூன்று மடங்கு பெரிய அளவில் பொருட்களை பார்க்கும், புதிய டெலஸ்கோப் இந்தத் திட்டம் மூலம் உருவாக்கப்படும்.

%d bloggers like this: