வேர்ட் டிப்ஸ்-27.6.2010

அட்டவணை செல்களை இணைக்கவும் பிரிக்கவும்:
வேர்டில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். திடீரென்று ஏதேனும் ஓர் இடத்தில் இந்த இரண்டு செல்களையும் பிரித்துக் காட்டுவதற்குப் பதிலாக இணைந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? இதை மெர்ஜ் செல் (Merge Cells) என்று கூறுகிறார்கள். எப்படி இந்த செல்களை மட்டும் இணைப்பது? என்று யோசிக்கிறீர்களா?
அதே போல ஏதேனும் ஒரு செல்லை சிறு பிரிவுகளாக அமைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? இது ஸ்பிளிட் செல் என்று அழைக்கப்படுகிறது. இவற்றை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
முதலில் செல்களை இணைப்பது, (மெர்ஜ் செய்வது) எப்படி என்று பார்ப்போம். இங்கு இணைப்பது என்பது இரண்டு அல்லது அதற்கும் மேலே உள்ள செல்களின் இடையே உள்ள கோடுகளை எடுத்து ஒரே பெரிய செல்லாக அமைப்பது. முதலில் எந்த செல்களை மெர்ஜ் செய்திட வேண்டுமோ அவற்றை செலக்ட் செய்திடவும். மவுஸ் பட்டனை அழுத்திப் பிடித்து தேவையான செல்கள் செலக்ட் ஆகும் வரை வைத்திருந்து பின் விடுவிக்கவும். இப்போது அந்த செல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். பின் டேபிள் (Table) மெனு சென்று (Merge Cells) என்ற ஆப்ஷனை மவுஸால் தட்டவும். அல்லது டேபிள் மீதாக ரைட் கிளிக் செய்து அதில் Merge Cells ன்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இப்போது பல செல்கள் ஒன்றாக இணைந்து ஒரே கட்டமாக ஆவதனைப் பார்க்கலாம்.
இனி அடுத்து ஸ்பிளிட் செய்வது குறித்துப் பார்ப்போம். மெர்ஜ் செல் என்ற செயல்முறைக்கு நேர் எதிரானதுதான் ஸ்பிளிட் செய்வது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பிரித்து அமைப்பதுதான் ஸ்பிளிட் செல் ஆகும். இதில் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்பிளிட் ஆகும் போது சில வேளைகளில் டேபிள் பெரிதாகும். ஏனென்றால் ஒரு செல் குறைந்த பட்சம் ஓர் அளவில் இருக்க வேண்டும். பிரிக்க வேண்டிய செல்களை முன்பு கூறியபடி செலக்ட் செய்திடவும். அதன்பின் Split Cells என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கும் டேபிள் மெனு சென்று Split Cells ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். அல்லது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Split Cells மீதாகக் கிளிக் செய்திடவும். இப்போது ஸ்பிளிட் செல் விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள செல்லின் உள்ளாக எத்தனை படுக்கை வரிசை (number of rows) மற்றும் நெட்டு வரிசை (number of columns) இருக்க வேண்டும் என்பதனைத் தரவும். பிறகு அந்தக் கட்டத்தில் ஓகே கிளிக் செய்திடவும்.
வேர்டில் காப்பி – ஒரு புது வழி:
வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்கிக் கொண்டிருக்கையில், எதனையேனும் காப்பி செய்திட நாம் கிளிப் போர்டு காப்பி வழியைப் பயன்படுத்துகிறோம். காப்பி செய்திட வேண்டிய டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுத்த பின்னர், அதனைக் காப்பி செய்திடுகையில் அது கிளிப் போர்டுக்குச் செல்கிறது. பின் அதனை நாம் விரும்பும் இடத்தில் ஒட்டுகிறோம். அடுத்து ஒன்றை மீண்டும் காப்பி செய்கையில், கிளிப் போர்டில் ஏற்கனவே காப்பி செய்யப்பட்டது நீக்கப்பட்டு, புதிய டெக்ஸ்ட் அமர்ந்து கொள்கிறது.
இது போன்ற சூழ்நிலையில், கிளிப் போர்டில் இருப்பதனை நீக்காமல், மேலும் ஒரு டெக்ஸ்ட்டை காப்பி செய்து, இன்னொரு இடத்திற்கு நகர்த்தவோ அல்லது ஒட்டவோ விரும்பினால் என்ன செய்யலாம்?
அதற்கான வழி ஒன்றினை வேர்ட் தருகிறது. இதன் மூலம் கிளிப் போர்டின் உதவி இல்லாமல், ஒன்றை காப்பி செய்து ஒட்டலாம்.
1. எந்த டெக்ஸ்ட்டை காப்பி செய்திட வேண்டுமோ அதனை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. அடுத்து ஷிப்ட் + எப் 2 கீகளை அழுத்த வேண்டும். ஸ்டேட்டஸ் பாரில் Copy to where? என்ற செய்தி காட்டப்படும்.
3. அடுத்து கர்சரின் இடைச்செருகும் பாய்ண்ட்டரை, எந்த இடத்தில் காப்பி செய்திடும் டெக்ஸ்ட்டை ஒட்ட வேண்டுமோ, அங்கு எடுத்துச் சென்று அமைத்திட வேண்டும்.
4. பின் என்டர் தட்டினால், டெக்ஸ்ட் காப்பி செய்யப்பட்டு, அங்கு ஒட்டப்படும். இந்த வேலை நடைபெறுகையில், ஏற்கனவே காப்பி செய்யப்பட்டு கிளிப் போர்டில் உள்ள டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட் அங்கேயே இருக்கும்.
எத்தனை சொற்கள் இதுவரை?
வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் எத்தனை சொற்களை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள் என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து அவ்வப்போது இதனை செக் செய்திட வேண்டுமா? இதற்கு View | Toolbars   என்று சென்று அதில்  Word Count என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டூல்பாரை அப்படியே மவுஸால் அழுத்திப் பிடித்து ஏற்கனவே இருக்கும் டூல்பாரின் வலது பக்கத்திற்குக் கொண்டு சென்று உங்கள் திரையின் மேலாக விட்டுவிடவும். வேர்ட் கவுண்ட் டூல் பார் அங்கேயே இருக்கும். எத்தனை சொற்களை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று காட்டும் விண்டோ வினையும் நீங்கள் உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம். இதற்கு Tools | Customize | Toolbars என்று சென்று கிடைக்கும் விண்டோவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் இருக்கும்போது அளவை மாற்றும் பணியை மேற்கொள்ளலாம். இனி எப்போது சொற்களின் எண்ணிக்கை தெரிய வேண்டும் என்றாலும் டூல்பாரில் உள்ள Recount பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் தெரிந்து கொள்ளலாம்.

%d bloggers like this: