Daily Archives: ஜூன் 30th, 2010

1.7.2010 முதல் செயல்படுத்தப்படும் தென்னக இரயில்வேயின் புதிய கால அட்டவணை மற்றும் புதிய,நீட்டிக்கப்பட்ட இரயில்களின் பட்டியல்(southern railway new timetable)

இணைய ஆபீஸ் அப்ளிக்கேஷன் ரெடி

மைக்ரோசாப்ட் இணையவெளியில் தன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஆபீஸ் தொகுப்பினை, அதிகாரபூர்வமாக சென்ற வாரம் வெளியிட்டுள்ளது. கூகுள் மற்றும் ஸோஹோ நிறுவனங்கள் இந்த வகையில் வெகு காலமாக முன்னேறி வருவதால், தான் பின் தங்கிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மிக வேகமாக, ஆபீஸ் தொகுப்பு இணையத்தில், கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் ஆகிய தொகுப்புகள் பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் யாவரும் இதனை அணுகிப் பயன்படுத்தலாம். இந்த இணைய தொகுப்பு பிரிட்டன், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்டாலும், மற்ற நாட்டில் உள்ளவர்களும் பயன்படுத்தும் வகையில் இது கிடைக்கிறது.
இந்த தொகுப்புகளைப் பயன்படுத்த அனுமதி பெறுவதுடன், 25 ஜிபி ஆன்லைன் ஸ்பேஸ் ஒவ்வொருவருக்கும் தரப்படுகிறது.  ஆபீஸ் 2010 தொகுப்பிற்கு இணையான ஒரு சாதனம் இது என்றும், கம்ப்யூட்டர், போன் மற்றும் பிரவுசர் வழியாக யாரும் இதனைப் பயன்படுத்தலாம் என்றும்  மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
ஆபீஸ் தொகுப்புகளில் ஒன்றில் உருவாக்கப்பட்ட பைல்கள் எதனையும், இந்த இணைய தொகுப்பிலும் எடிட் செய்து சேவ் செய்து பயன்படுத்தலாம். நம் கம்ப்யூட்டர்களிலும் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.  உங்களுடைய பைல் பழைய ஆபீஸ் பதிப்புகளில் உருவாக்கப் பட்டிருந்தாலும், அந்த பதிப்புக்கான எடிட்டிங் வசதியை, இந்த ஆன்லைன் ஆபீஸ் தொகுப்பு தருகிறது.  இணையத்தில் இவ்வாறு செயல்படுவதால், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர், டாகுமெண்ட் அல்லது பைல் ஒன்றை எடிட் செய்திடலாம்.
இதன் யூசர் இன்டர்பேஸ் மிகவும் எளிமையாகவும், நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் செயல்படுவது போல அனுபவத்தினைத் தருவதாகவும் உள்ளது. இந்த இணைய ஆபீஸ் தொகுப்பு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் மட்டும் இயங்கும் என எண்ண வேண்டாம்.  குரோம், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களிலும் மிக நன்றாக இது இயங்குகிறது. ஆனால் ஒரே ஒரு குறை. ஆபீஸ் புரோகிராமில் எடிட் பட்டன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே செயல்படுகிறது. புதிதாக வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்புடன் முழுமையாக இணைந்து செயல்படும் வகையில், இந்த இணைய தொகுப்பும் இருக்கின்றது.
இனி, என் கம்ப்யூட்டரில் ஆபீஸ் தொகுப்பு இல்லை என்று யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. இணையத் தொடர்பு மட்டும் இருந்தால் போதும். இணைய வெளியிலேயே, ஆபீஸ் தொகுப்பினைப் பெற்று இயக்கலாம். பைல்களை உருவாக்கலாம். மற்றவர்களுடன் சேர்ந்து எடிட் செய்து சீர் படுத்தலாம்.  Office Web Apps என அழைக்கப்படும் இதனைப் பெற http://office.live.com// என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். முதலில் உங்களுக்கு விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இல்லையேல் உடனே உருவாக்கிக் கொண்டு பின் இதற்குச் செல்லவும்.


பவர் பாய்ண்ட்டில் கிராபிக்ஸ்

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனில் கிராபிக்ஸ் ஏதேனும் பயன்படுத்தினால் அதற்கான ஆப்ஜெக்டை ச் சரியான இடத்தில் வைத்திட வேண்டும். இல்லை என்றால் உங்களின் திறமை அவ்வளவுதானா? என்று மற்றவரை எண்ண வைத்துவிடும். அதற்கான சில வழிமுறைகள் இங்கே தரப்படுகின்றன.
1.கிரிட் – ஐ எப்போதும் பயன்படுத்துங்கள்: கிரிட் என்பது நெடுவிலும் படுக்கையாகவும் நம் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் கோடுகள் ஆகும். இந்த கோடுகளுக்கு அருகே எந்த பொருளை/படத்தை வைத்தாலும் கோடுகள் அருகே பொருட்கள் இழுக்கப்படும். ஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது போல செயல்படும். இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல் திரையின் குறுக்கே கண்ட இடத்திற்குச் செல்லும். இந்நிலையில் சீர் செய்திட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
முதலில் கிரிட் கோடுகளைக் காட்டவும் மறைக்கவும் உள்ள பட்டனைத் (Show/Hide Grid) தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட் (Standard) டூல் பாரில் உள்ளது. அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9  (Shift + F9) பட்டனைத் தட்டவும். தற்காலிகமாக கிரிட்–ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் ஆல்ட் பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது.
2. கைட் லைன்களின் (Guidelines) உதவி: ஆப்ஜெக்ட் ஒன்று நெட்டு வரிசையிலோ அல்லது படுக்கைவசத்திலோ அமர வைக்க வேண்டும் என்றால் ஸ்கிரீனில் கோடுகளை ஏற்படுத்தி பயன்படுத்துங்கள். இதற்கு Alt + F9 கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும். உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும். இந்த கோடுகளின் உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின் நீங்கள் எப்போது Alt + F9 அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும். இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். இது உங்களுக்குப் போதவில்லையா? கண்ட்ரோல் (Ctrl) அழுத்தி எந்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை என்றால் அதனை எப்படி நீக்குவது? மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே விட்டுவிடவும்.
நீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம். மவுஸ் பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது தெரியுமா? நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப் பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண் குறிக்கிறது. இந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்கினால் நீங்கள் எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும் என்றால் இழுக்கும்போது ஷிப்ட் (Shift) கீயை அழுத்தவும். எடுத்துக்காட்டாக ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக் கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில் உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.
3. கிரிட் மற்றும் கைட்லைன் செட் செய்யும் வழி: Ctrl + G கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும், கிடைக்காதபடியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் ஆல்ட் கீ அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம்.
4. துல்லிதமான அளவில் அமைத்திட: ஆப்ஜெக்ட் ஒன்றை, மிகத் துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு அல்லது நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல வேண்டுமோ அதற்கான ஆரோ கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால் ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ (Ctrl) அழுத்தி சம்பந்தப்பட்ட ஆரோ கீயினை அழுத்தவும்.

5. ஆப்ஜெக்டை இரு திசையில் வேகமாக நகர்த்த: ஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட் (குடடிஞூt) கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல மாறுபக்கத்திலும் செய்ய முடியாது.

போனஸ் டிப்ஸ்: ஆப்ஜெக்ட் ஒன்றை இழுக்கையில் அதனை இன்னொரு காப்பியும் செய்திட வேண்டும் என்றால் இtணூடூ கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டுமென்றால் Ctrl மற்றும் Shift கீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.

இதயநலம் காக்கும் உடற்பயிற்சிகள்

உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயானிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது.
பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன. இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் எத்தகைய நன்மைகளை அளிக்கின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
இதயம் வலுவான தசைகளால் ஆன விசை அமைப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதயம் நன்கு செயல்பட வேண்டும் என்றால், தமனிகளின் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ரத்தம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுவாக இருந்து இதயத்தை நன்றாக இயங்க வைக்க முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க ஒருவரின் வயது உடல் அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப உடற்பயிற்சிறைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்பதைப் பார்க்கும் முன்பு உடலுக்கு எந்த வகையில் அவை உதவுகின்றன என்பதைப் பார்த்தவிடலாம்.
உடற்பயிற்சியின் பயன்கள்.
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது, ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. இந்த இக்கட்டான நிலையை ஈடுகட்டும் வகையில் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க மாற்று ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்தக் குழாய்களை இணை ரத்தக்குழாய்கள் (Collateral Circulation) என்று சொல்வார்கள்.
அதெல்லாம் சரிதான். உடற்பயிற்சிக்கும் இந்த இணை ரத்தக் குழாய்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது.
இந்த இணை ரத்தக் குழாய்கள் இதயம் உருவாகும்போதே உருவாகிவிடுகின்றன. ஆனால் முக்கியமான வேலைகளை முதன்மை ரத்தக் குழாய்களே முழுநேரமும் செய்துவிடுவதால் இணை ரத்தக் குழாய்கள் செயலற்றுத்தான் காணப்படும். அவசர காலத்தில் தானே நமது சேவை தேவை என்ற அலட்சியத்தில் இவை அளவில் சுருங்கியும், வளைந்தும், நெளிந்தும் காணப்படும். அந்த நிலையில் திடீரென முதன்மை ரத்தக் குழாய்கள் செயலற்றுப் போகும்போது இவை விழிப்படைந்து வேலை செய்ய சற்று நேரம் பிடிக்கும்.
ஆனால் இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது, இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு, மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத் தமனிகள் முழுமையாக அடைபட்டு இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான். அன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்குகின்றன. அதோடு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது.
இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை அதிக அழுத்தத்துடன் வரும் ரத்தமானது ஓரளவுக்கு அகற்றுகிறது. இதன் மூலமாக மாரடைப்புக்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதயத் தமனி நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும்.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சரிவர இயங்க வேண்டும் என்றால் தேவையான உயிர்வளி, சத்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். ரத்தத்தின் மூலமாகவே இவை செல்களைப் போய்ச் சேருகின்றன. அன்றாடம் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகமாக்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு ரத்தக் குழார்களை விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடவும் துணைபுரிகின்றன.

இதயத்துக்கு ஏற்ற உடற்பயிற்சிகள்
உடலின் உயிர்வளித் தேவையைப் பெருக்கும் உடற்பயிற்சிகளை உயிர் வளி பெருக்கும் உடற்பயிற்சிகள் (Aerobic Exercise) என்று சொல்வதுண்டு.
இத்தகைய உடற்பயிற்சிகளின் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான உயிர்வளியைப் பன்மடங்காக பெருக்க முடியும். இதனால் இதயமானது தனக்குத் தேவையான ரத்தத்தையும், சத்துகளையும் பெற முடியும்.
பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (Jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உல் அமைப்பு, ஓய்வு நேரம், உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.

நடைப்பயிற்சி
நடைப்பயிற்சியில் Trekking, Leiú§re Walking, Race Walking, Power Malking என பலவகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு எந்த வகைப் பயிற்சி ஒத்துவருகிறதோ அதைத் தொடர்ச்சியாகச் செய்து வர வேண்டும்.
மற்ற வகையான உடற்கயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும். இப்பயிற்சியை மேற்கொள்ள ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும்.
எளிமையான உடற்பயிற்சியாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் நன்மைகள் பல. அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் எடையைக் குறைக்க துணை புரிவதோடு தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. மேலும் இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
நடைப்பயிற்சியில் ஏற்படும் முழுப்பயனைப் பெற வேண்டும் என்றால், தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்றாடம் நடக்கும் தூரத்தைப் படிப்படியாக உடலின் ஆற்றலுக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும். நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது நடக்கும் இதயத் துடிப்பின் அளவானது நிமிடத்துக்கு 100&க்கு மேல் இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் 10,000 காலடிகள் (Sˆepv) நடக்க வேண்டும் என இதய மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாம் அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே.
நடைப்பயிற்சியின் அவசியத்தை இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லியும் சிலர், நடப்பதற்கு எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என புலம்புவார்கள். அவர்களுக்கு சில அறிவுரைகள்…
நீங்கள் டி.வி.பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்றால் டி.வி. சேனல்களை மாற்ற ரிமோட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எழுந்து சென்று நேரிடையாக மாற்றலாம்.
காய்கறி மார்க்கெட்டுக்கும், பலசரக்குக் கடைக்கும் செல்ல இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்.
உங்கள் அலுவலகம், மூன்றாவது அல்லது நான்காவது மாடியில் இருந்தால் லிஃப்ட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாடிப்படிகளில் ஏறிச் செல்லலாம்.
நீங்கள் அலுவலகத்துக்கு பஸ்ஸில் செல்பவராக இருந்தால் அலுவலகத்தில் இருந்து பஸ்ஸில் வீட்டுக்குத் திரும்பி வரும்போது இரண்டு ஸ்டாப்புக்கு முன்னால் இறங்கி நடந்து வாருங்கள்.
நீங்கள் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் பழக்கம் உடையவர் என்றால் கோயிலில் பிரகாரங்களை நன்கு சுற்றி வாருங்கள்.

மெல்லோட்டம்
மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள். உடலுக்கு ஏற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப்பயிற்சியும் மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள் தங்களை மாரடைப்பில் இருந்து காத்துக்கொள்ள தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கிறார்கள்.
மெல்லோட்டத்தின் பயன்கள்
இதயமானது சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவானது சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.
இதய ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் வலுவாக்குகிறது.
ரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.
ரத்தமிகு அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவானது அதிகமாவதால், இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால், மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.

மெல்லோட்டத்துக்கான விதிமுறைகள்
விதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.
நம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.
மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால்  உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.
மெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.

சைக்கிள் பயிற்சி
இதயத்துக்கு உகந்த, உயிர்வளியைப் பெருக்கும் உடற்பயிற்சிகளில் சிறந்தது சைக்கிள் பயிற்சி. இது, குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த எளிமையான உடற்பயிற்சியாகும்.
அமெரிக்காவில், பால் டட்லி ஒயிட் என்ற மருத்துவர் சைக்கிள் பயிற்சியில் ஒரு மிகப்பெரிய புரட்சியைச் செய்திருக்கிறார். உடல் நலத்துக்கான சைக்கிள் பயிற்சி (Cycling for Health) என்ற நல இயக்கத்தைத் தொடங்கியதோடு அல்லாமல், இந்த இயக்கத்தின் விளைவாக, அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் கார்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும் இவர் காரணமாக இருந்தார்.
அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் அங்கு வரும் மக்கள் பயன்படுத்துவதற்காக சைக்கிள்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் தங்களுடைய உடல் நலத்தைப் பேணுவதற்காகப் பல மணிநேரம் இயற்கையான சூழலில், திறந்த வெளியில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது வழக்கமாகும்.
பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் சைக்கிள் பயிற்சியைப் பல வகையான நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். உடல் பருமன், ரத்தமிகு அழுத்த நோய், குடல் இறக்கம், மூட்டுச்சிதைவு நோய், வாதக் காய்ச்சல் நோய், முதுகுத் தண்டுவடம் நழுவுதல், கால் பெரு நரம்பு அழற்சி போன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையில், சைக்கிள் பயிற்சியையும் ஒரு முக்கியமான அம்சமாக வைத்திருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் சைக்கிள் பயிற்சியை ஒருவகையான மருத்துவமுறையாகக் கையாள்கிறார்கள். சிலவகையான நோயாளிகளுக்கு அவர்கள் தங்கள் உடல் நலத்தை மீண்டும் பெற சைக்கிள் பயிற்சியைப் பரிந்துரைக்கிறார்கள். மேலும் நீண்டநாள்களாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் வலுவிழந்த தசைகள் மீண்டும் உயிர்பெற, சைக்கிள் பயிற்சியை அளிக்கின்றனர்.
ஹாலந்து நாட்டில் உள்ள பள்ளிகளில் சைக்கிள் பயிற்சியை விளையாட்டுக் கல்வியில் ஒரு பாடமாக வைத்துள்ளனர். தினமும் பள்ளி நேரத்தில் மாணவ& மாணவிகள் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இத்தகைய முயற்சியின் காரணமாக நடல் நலக்குறைவால் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ& மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகச் சொல்கின்றனர்.
அன்றாடம் சிலமணி நேரம் மேற்கொள்ளும் சைக்கிள் பயிற்சியானது, இதயத் தசைகளை நன்கு வலுவாக்குவதோடு அல்லாமல், இதயத் தசைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைப் பன்மடங்கு அதிகமாக்குகிறது என்கிறார் பால் டட்லி ஒயிட்.

நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சயாலும் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.
நீச்சல், முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும்.
உடல் ஊனமுற்றவர்களுக்குக்கூட இது மிகச்சிறந்த உடற்பயிற்சி.
உடலை வலுவாக்கவும், கிடைத்த வலுவைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகிறது.
நீச்சல் பயிற்சி, உடலில் உள்ள பலவகையான உள் உறுப்புகளுக்கும் நரம்பு அமைப்புகளுக்கும் வலுவை அளிக்கிறது.
குறைந்த காலத்தில் உடலில் உள்ள பலவகையான தசைகளுக்கு நல்ல வலுவை அளிக்கிறது.
உடலின் தேவையற்ற, அதிகமான எடையைக் குறைக்க துணை புரிகிறது.
நீச்சல் பயிற்சியின்போது நீர் உடலுக்கு இயற்கையின் தடுப்பாற்றலை அளிக்கிறது.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும்.
நீச்சலானது உள்ளத்துக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாத மனப்பக்குவத்தையும், எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்யும் மனப்பக்குவத்தையும் அளிக்கிறது.
நீச்சல் பயிற்சியின் சிறப்புகள்
நீச்சல், கவலையை மறக்க மிகச்சிறந்த மருந்தாகும். ஏனென்றால், நீந்தும்போது கவனம் முழுவதும் நீச்சலில் ஒரு முகப்படுவதால், மனிதன் தன்னுடைய கவலையை மறக்க நீச்சல் துணைபுரிகிறது.
நீச்சல், முதுகெலும்புப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்பெறச் செய்வதோடு, முதுகெலும்பு அமைப்புகளை வலுப்படுத்த துணைபுரிகிறது.
கடல் நீரிலும், ஆற்று நீரிலும் இயற்கையாகப் பொதிந்திருக்கும் அயனிகள, உடலுக்கு நன்மை அளிப்பதாக மருத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர்.
நீச்சல், உடலில் உள்ள மேற்புறத் தசைகளுக்கு மட்டுமின்றி உடலின் கிழ்ப்புறப் பகுதியில் உள்ள தசைகளுக்கும் ஒரே சமயத்தில் நல்ல பயிற்சியைத் தரக்கூடியது.
இதயத் தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் உதவி செய்கிறது.

அர்த்தமுள்ள இந்துமதம்(கவியரசு கண்ணதாசன்)-துன்பம் ஒரு சோதனை

துன்பம் ஒரு சோதனை

வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது. குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.

இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும், அழிவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான். நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

முதற்கட்டம் வரவு என்றால், அடுத்த கட்டம் செலவு.

முதற்கட்டம் வறுமை என்றால், அடுத்த கட்டம் செல்வம்.

முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்த கட்டம் துன்பம்.

முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம். இறைவனது தராசில் இரண்டு தட்டுகளும் ஏறி ஏறி இறங்குகின்றன.

`இடுக்கண் வருங்கால் நகுக; அதனை

அடுத்தூர்வ தஃதொப்ப தில்’ என்றான் வள்ளுவன்.

எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.

அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை.

பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது.

இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை.

அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதாரர் ஆனார் ஒருவர். ஆன மறுநாளே, அவரை `அரிசி சாப்பிடக் கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

சீனாவில் மாசேதுங் புரட்சி நடந்தபோது பல ஆண்டுகள் காடுமேடுகளில் ஏறி இறங்கினார். மனைவியைத் தோளில் தூக்கிக் கொண்டு அலையக்கூட வல்லமை பெற்றிருந்தார்.

புரட்சி முடிந்து, பதவிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் நோயில் படுத்தார்.

ரஷ்யாவில் லெனின் கதையும் அதுதான். புரட்சி நடக்கும்வரை லெனின் ஆரோக்கியமாகவே இருந்தார். பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே படுக்கையில் விழுந்தார்; சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார்.

எனது தி.மு.க. நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான உழைப்பாளிகள். ரயிலிலும் கட்டை வண்டிகளிலும், கால்நடையாகவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச் சாலைக்குப் போவார்கள்.

அப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது.

அவர்கள் பதவிக்கு வந்து நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டுவிட்டது.

எனது நண்பர் ஒருவர் படமெடுத்தார். முதற்படமே அபார வெற்றி. அளவு கடந்த லாபம்.

அடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி. இன்னும் அவர் எழ முடியவில்லை.

இன்னொரு பட அதிபர்…

ஊமைப்படக் காலத்திலிருந்து தொழிலில் இருக்கிறார். ஆரம்பக் கட்டத்தில் பல படங்கள் அவருக்குக் கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரமப்பட்டு சென்னைக்கு வந்து ஒரு படம் எடுத்தார்.

அவரது `வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

அந்தப் படம் அமோகமாக ஓடியது.

ஒரு புது நடிகையை நட்சத்திர நடிகையாக்கிற்று.

அது தெலுங்கிலும் வெற்றி; இந்தியிலும் வெற்றி. அது முதல் அவர் தொட்டதெல்லாம் வெற்றி.

பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்? கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.

ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!

ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு.

இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.

நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.

எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான் என்று பொருள்.

எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.

`ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டொன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும்

ஒன்றை

நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல்’

என்பது முன்னோர் பழமொழி.

`கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக்

காஞ்சிரங்காய் ஈந்தேன்

முற்பவத்தில் செய்தவினை’

இதுவும் அவர்கள் சொன்னதே.

உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திலே ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின்பக்கம் விழுந்தால் அவனது சோதனை.

மேடும் பள்ளமுமாக வாழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சியில்லை. ஒரேயடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்து பயங்கரமான சரிவு காத்திருக்கிறது.

என் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால், என் எழுத்து வண்டி இருபத்தைந் தாண்டு காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதைத்தான் `சகட யோகம்’ என்பார்கள்.

வீழ்ச்சியில் கலக்கமோ எழுச்சியில் மயக்கமோ கொள்ளாதே!

`அடுத்த பாதை என்ன, பயணம் என்ன’ என்பது, உனக்குத் தெரியாது; `எல்லாம் தெய்வத்தின் செயல்’ என்றார்கள் நம் முன்னோர்கள்.

`ஆண்டவனின் அவதாரங்களே ஆண்டவன் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.

தெய்வ புருஷன் ஸ்ரீராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று தெரியவில்லையே!

அதனால் வந்த வினை தானே, சீதை சிறையெடுக்கப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்!

சத்தியதெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாகவில்லையே!

அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்!

முக்காலமும் உணர்ந்த கவுதமனுக்கே, பொய்க் கோழி எது, உண்மைக் கோழி எது என்று தெரியவில்லையே!

அதனால்தானே அகலிகை கெடுக்கப்பட்டதும், சாபம் பெற்றதும்.

ஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு, இந்தக் கதைகளை நமது இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள்.

துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைகள் என்றும், அவற்றுக்காகக் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி வைத்தார்கள்.

இந்தக் கதைகளை `முட்டாள் தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.

ஆனால், முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள் அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதில்லை.

நான் சொல்ல வருவது, `இந்து மதத்தின் சாரமே உனது லவுகிக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது’ என்பதையே.

துன்பத்தைச் சோதனை என்று ஏற்றுக்கொண்டுவிட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது?

அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும்படி நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.

தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள் முட்டாள்களல்ல.

கஷ்டத்திலும் நேர்மையாக இரு.

நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.

உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்.

தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது.

லேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன்

பெர்சனல் கம்ப்யூட்டிங் உலகம் மாறி வருகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் விற்பனை அறிக்கைகளை வைத்துப் பார்க்கையில், டெஸ்க் டாப் விற்பனை பின்னுக்குச் செல்கிறது. லேப்டாப் அதன் இடத்தைப் பிடித்துள்ளது. கம்ப்யூட்டர் என்றால் அது லேப்டாப் தான் என்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விற்பனையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எடுத்துச் செல்ல எளிதாக இருப்பதாலும், விலை குறைந்து இருப்பதாலும், கம்ப்யூட்டர் செயல்பாட்டு எதிர்பார்ப்பில் சிலவற்றை தியாகம் செய்து, மக்கள் நெட்புக் கம்ப்யூட்டரினைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர்.

இவை எல்லாவற்றைக் காட்டிலும், இவற்றின் இடத்தை ஸ்மார்ட் போன்கள் பிடித்து வருகின்றன. இவற்றின் இயக்கம் முற்றிலும் ஒரு கம்ப்யூட்டர் போலவே இருப்பதால், கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனாலேயே இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள், பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை, ஸ்மார்ட் போனுக்கு இணைவாக உருவாக்கி வெளியிட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்துபவருக்குப் பணம் செலவானாலும், நேரத்தின் அருமை கருதி, பலரும் ஸ்மார்ட் போன்களைக் கம்ப்யூட்டரின் இடத்தில் பயன்படுத்தத் தொடங்கி வருகின்றனர்.

இந்த மூன்று சாதனங்களுக்குமான விற்பனை விலையில் வேறுபாடு அப்படி ஒன்றும் அதிக அளவில் வித்தியாசமானதாக இல்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆஹா! இப்படிச் சொன்னால் எப்படி! எதனை நாங்கள் வாங்க வேண்டும் எனப் பட்டியலிட்டால் தானே, ஒரு முடிவு எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறீர்களா! இதோ நம் வேலை அடிப்படையில் இவற்றின் நிறை, குறைகளைப் பார்க்கலாம். இவை எல்லாமே மொபைல் சாதனங்கள் என்ற அடிப்படையில் வருகின்றன. கைகளில் எடுத்துச் சென்று, எந்த இடத்திலும் நம் கம்ப்யூட்டர் வேலைகளை நாம் மேற்கொள்ள முடியும்.

1. நிறுவன, அலுவலக வேலைகள்: நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள நிறுவன, அலுவலக வேலைகளுக்கு நீங்கள் கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்துகிறீர்களா! பெரிய வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஒர்க் ஷீட்கள், மல்ட்டிமீடியா காட்சித் தொகுப்புகள், உங்கள் நிறுவனத்திற்கென அமைத்துத் தரப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம்கள் ஆகியன உங்கள் பணியை நிர்ணயம் செய்கின்றனவா? இந்த சாதனங்கள் உங்களுக்கு எப்படி பயன்படும் என்று பார்க்கலாம்?

இத்தகைய வேலைகளுக்கு ஒரு முழுமையான லேப்டாப்தான் சிறந்த தேர்வாக அமையும். அதிக சக்தியுடன் கூடிய சி.பி.யு., ராம் மெமரி, எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருந்து இடர்களைத் தாங்கும் சக்தி லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கே உள்ளது. ஆனால் ஒரு நல்ல பிசினஸ் லேப்டாப், மற்ற இரண்டு சாதனங்களின் விலையைக் காட்டிலும் இரு மடங்காக இருக்கும்.

இந்த வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் கொஞ்சம் இடவசதி குறைவான கீ போர்ட், திரை மற்றும் திறன் குறைந்த சிபியு, ராம் மெமரி, அலுவலகப் பயன்பாட்டிற்கு இதனைத் தேர்ந்தெடுக்கத் தடையாய் உள்ளன. இத்தகைய வேலைகளில் ஈடுபடுவோருக்கு ஸ்மார்ட் போன் ஒன்று நிச்சயம் தேவையாய் இருக்கும். ஆனால் அது லேப்டாப் கம்ப்யூட்டரில் கிடைக்கும் வேகத்தினைத் தருவதில் இன்னும் பின்தங்கியே உள்ளது. எனவே இந்த பணியில் ஈடுபடுபவர்கள், நல்ல திறன் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றையும், ஸ்மார்ட் போன் ஒன்றையும் தங்களுக்கென வாங்கிக் கொள்ளலாம்.

2. வீடுகளிலும் மாணவர்களிடமும்: பெரிய அளவில் நிறுவன வேலைகள் இல்லாதவரா? மாணவரா? இந்த இருவகையினரும் வெளியே அலைந்து திரிந்து தங்கள் நாளைக் கழிப்பவர் என்றாலும், ஒரு நிறுவன ஊழியர் அளவிற்குக் கம்ப்யூட்டர் தேவை இருக்காது. குறிப்பாக மாணவர்களுக்கு நோட்ஸ் எடுக்க, இணையம் பார்க்க, பிரசன்டேஷன் காட்சிகள் அமைக்க, கட்டுரைகளை எழுத எனப் பல கல்வி சார்ந்த வேலைகளைத் தாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று கனமான தாகவும், புத்தகங்கள் மற்றும் பைகளுடன் தூக்கிச் செல்லச் சற்று சிரமமானதாகவும் இருக்கும். எனவே இவர்கள் நெட்புக் கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் திரை, கீ போர்டு இவர்களின் வேலையை அவ்வளவாகப் பாதிக்காது. ஏனென்றால் இவர்களின் பணி சற்றுப் பொறுமையாக மேற்கொள்ளும் வகையில் அமையும். இவர்களுக்கு ஸ்மார்ட் போன் நல்ல துணைவனாக இருந்தாலும், கற்பனை மற்றும் உழைப்பின் அடிப்படையில் அமைக்கப்படும் திட்டங்களுக்கு அது உதவாது.

3. இணைய உலா வர: இணையத்தில் எதனையேனும் திடீர் திடீரெனப் பார்க்க வேண்டியதிருக்கும். யாரேனும் நண்பர் போன் செய்து, உனக்கு ஒரு பைல் அனுப்பி உள்ளேன். பார்த்து உடன் பதில் அனுப்பு என்பார். அல்லது இந்த இணைய தளத்தில் புதிதாக ஒன்றின் விலை வந்துள்ளது. வாங்கி மாற்றிவிடலாமா? என்பார். அப்போது நீங்கள் வீட்டில் இருந்து வெளியே இருக்கலாம். இணையத் தொடர்பிற்கென லேப் டாப் கம்ப்யூட்டரைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா? இணைய உலா மேற்கொள்ள, நெட்புக் கம்ப்யூட்டர்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்டதாக அமையும். ஆனால் ஸ்மார்ட் போன்கள், நெட்புக் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதலாகப் பயன்களைத் தரும். இவை எப்போதும் இணையத் தொடர்பினை மேற்கொள்ளத் தயாராய் இருக்கும். எனவே இதற்கு ஸ்மார்ட் போன் தான் சிறந்தது.

6.சமுதாயத் தளங்கள் தொடர்பு: சோஷியல் நெட்வொர்க் என்னும் இணையத் தொடர்புகளை மேற்கொள்வது, தற்போது பெரும்பாலோரால் மேற்கொள்ளப்படும் தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. தங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டு, நிகழ்வுகளை அவ்வப்போது மேம்படுத்த, இந்த சமுதாய தளங்கள் உதவுகின்றன. இந்த வகையில் ட்விட்டர், பேஸ்புக், லிங்க்டு இன் மற்றும் போர் ஸ்குயர் போன்ற தளங்கள் இயங்குகின்றன. இதற்கு மிகவும் உதவுவதும் பயன்படுவதும் ஸ்மார்ட் போன்களாகும். லேப்டாப் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விரைவாக விரித்து இயக்குவதில் இதில் பின்வாங்குகின்றன. ஆனால் போட்டோக்களை அனுப்ப, அவற்றை எடிட் செய்திட, ரியல் டைம் சேட் செய்திட, ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும் நெட்புக் கம்ப்யூட்டர்களே கை கொடுக்கின்றன. எனவே இந்த தேவைகளுக்கும் நெட்புக் கம்ப்யூட்டர்களே நமக்குச் சிறந்த சாதனமாக உள்ளன.

மேலே கூறப்பட்ட தேவைகள் அனைத்துமே பலருக்கு இருக்கலாம். எந்த வகை தேவைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கணக்கிட்டு அதற்கான சாதனத்தை வாங்குவதே சிறந்தது.