Monthly Archives: ஜூன், 2010

ஆரோக்கியமான காய்கறிகள்

வெண்டைக்காய் : குளிர்ச்சியான தன்மை கொண்டது. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி’, `பி’ மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

கத்தரிக்காய் : இதில் பல வண்ணங் கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன.

அவரைக்காய் : இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை விரும்பி சாப்பிடலாம்.

புடலங்காய் : நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளை போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது.

சுரைக்காய் : இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். இதன் விதைகள் வீரிய விருத்தியை ஏற்படுத்தும்.

எக்ஸெல் டிப்ஸ்-29.6.2010

என்டர் செய்வதனைக் கேட்க:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நீங்கள் டேட்டா என்டர் செய்திடுகையில், அவை என்ன என்று உங்களுக்கு, சொல்லிக் காட்டப்படும் வசதி, எக்ஸெல் தொகுப்பில் உள்ளது. அதனை எப்படி இயக்கலாம் மற்றும் நிறுத்தலாம் என்று பார்க்கலாம். உங்களிடம் எக்ஸெல் 2003 தொகுப்பிருந்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் மூலம் இந்த வசதியினை இயக்கவும் நிறுத்தவும் செய்திடலாம்.
1. View | Toolbars | Text to Speech  என்ற வழியில் சென்று தேர்ந்தெடுக்கவும். அல்லது Tools | Speech | Show Text to Speech Toolbar எனச் செல்லவும்.
2. இங்கு இந்த டூல்பாரில் வலது கோடியில் உள்ள Speak on Enter டூலினைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள், ஆன் செய்யப்பட்டு, ஒலி அளவு சற்று அதிகமாக வைக்கப்பட்டிருந்தால், இந்த வசதி இயக்கப்பட்டதாக ஒலிக்கப்படும். ஒவ்வொரு முறை ஒரு செல்லில் டேட்டா அமைக்கப்பட்டு, அந்த செல்லை விட்டுச் செல்கையில், அது என்ன என்று ஒலிக்கப்படும்.
பார்முலா ஒன்றினை அமைத்தால், அதன் முடிவு அறிவிக்கப்படும்.
இந்த வசதியின் இயக்கத்தினை நிறுத்த, மீண்டும் Speak on Enter ல் கிளிக் செய்து நிறுத்தலாம். அப்போது இந்த வசதி நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவிப்பு கிடைக்கும். இதன் பின் நீங்கள் மௌனமாக எக்ஸெல் ஒர்க்ஷீட்டினை இயக்கலாம்.


எக்ஸெல் : பார்முலாக்கள்
பார்முலாக்கள் இல்லாமல் ஒரு எக்ஸெல் ஒர்க்ஷீட்டை உருவாக்க மாட்டோம். இந்த பார்முலாக்களை அமைக்கையில் சில எளிய அடிப்படை விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக ரேஞ்ச். அதாவது அந்த பார்முலாவின் கணக்கீடு எந்த பரப்பில் வேலை செய்ய இருக்கிறது என்பதே இது. ஒர்க்ஷீட் பரப்பளவு செல்களில் தான் குறிப்பிடப்படுகிறது. ஒரு செல்லிலிருந்து இன்னொரு செல் வரை குறிப்பிடுகையில் அதனை ரேஞ்ச் எனலாம். இந்த ரேஞ்சினைக் குறிப்பிடுகையில், ஒர்க்ஷீட்டில் கமா, கோலன் (இரு புள்ளி) ஸ்பேஸ் எனப் பலவகைகளைப் பயன்படுத்துகிறோம். நம் வாசகர்கள் பலர் தொலைபேசியில், நான் சரியாகத்தான் பார்முலாவை எழுதி உள்ளேன். ஆனால் அது பிழை என்கிறது எக்ஸெல்; அல்லது விடை தவறாக உள்ளது என்பார்கள். இதற்குக் காரணம் இவற்றின் அடிப்படை இயக்கத்தினை நாம் தவறாகப் புரிந்து கொள்வதுதான்.
இந்த குறியீடுகள் நாம் வாக்கியங்களுக் கிடையே அமைக்கப்படும் குறியீடுகள் அல்ல. அவற்றை இங்கு வேறு பொருளில் பயன்படுத்துகிறோம். அவற்றைப் பார்ப்போமா!
( : ) : கோலன். இந்த குறியீடு தனியான ஒரு பரப்பெல்லையைக் குறிக்கிறது. அதாவது ரேஞ்ச். இங்கு A1:C2 என்று பார்முலாவில் அமைத்தால், அது A1 முதல் C2 வரையிலான செல்களைக் குறிக்கிறது.
(,) : கமா என்னும் காற்புள்ளி இரண்டு ரேஞ்ச் செல்கள் இணைந்ததைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக A1:C2 B1:B4 என்பது A1 முதல் C2 வரையிலான ரேஞ்சையும் பி1 முதல் பி4 வரையிலான ரேஞ்ச் செல்களையும் இணைந்த தொகுதியைக் குறிக்கிறது. இது போன்ற இணைப்பு செல்களைக் குறிப்பிடுகையில் கவனமாகக் கண்காணித்துக் கொள்வது நல்லது. நீங்கள் விரும்புகின்ற வகையில் பார்முலா செயல்படுகிறதா என்பதனைக் கவனிக்க வேண்டும்.
இறுதியாக ஸ்பேஸ் என்னும் இடைவெளி செல் ரேஞ்ச்களில் குறுக்கிடும் செல்களை மட்டுமே குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக A1:C2 B1:B4 எனக் குறிப்பிட்டால் இந்த இரு ரேஞ்ச் செல்களும் எங்கு குறிக்கிடுகின்றனவோ அந்த செல்கள் மட்டுமே பார்முலாவில் இயக்கப்படும்.
இங்கு எடுத்துக் காட்டுக்களில் செல்களின் பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன. ஆனால் பார்முலா இயங்கும் போது அவற்றின் மதிப்புகள் கணக்கிடப்படும். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எத்தனை செல்கள்?
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் வேலை செய்கையில், பலமுறை செல்களைத் தேர்ந்தெடுத்து பணி செய்திட வேண்டியுள்ளது. எத்தனை செல்களை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதனை நாம் அறிந்தால், அதனைக் கொண்டு சரியாகத் தேர்ந்தெடுத்துள்ளோமா என்பதனை உறுதி செய்திடலாம். இந்த தகவலை அறிந்து கொள்ள எக்ஸெல் வழி ஒன்றைத் தருகிறது.
செல்களைத் தேர்ந்தெடுக்க மவுஸ் மற்றும் கீ போர்டினைப் பயன்படுத்தலாம். ஒரு சிலர் கீ போர்டிலிருந்து கைகளை எடுத்து மவுஸைத் தேடிப் பயன்படுத்த வேண்டுமா என்ற எண்ணத்துடன் ஷிப்ட் கீயுடன் அம்புக்குறி கீகளைப் பயன்படுத்தி செல்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்போது Name பெட்டியில் எத்தனை செல்கள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளன என்று காட்டப்படும். இதில் பிரச்னை என்னவென்றால், ஷிப்ட் கீயிலிருந்து விரலை எடுத்தவுடன், Name பாக்ஸ் காலியாகிவிடும். அதில் இருந்த எத்தனை செல்கள் என்ற தகவல் தொடர்ந்து கிடைக்காது. இதனைச் சமாளிக்க மீண்டும் ஷிப்ட் கீயையும் அம்புக்குறி கீயினையும் அழுத்தலாம். உடன் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களின் எண்ணிக்கையுடன் ஒன்று சேர்த்துக் காட்டப்படும். மீண்டும் எதிர்முனை அம்புக் குறி கீயினை அழுத்த, தேவையான செல்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப் படுவதுடன், எத்தனை செல்கள் என்ற தகவலும் சரியாகக் காட்டப்படும்.


கடவுளாக வரம் கேட்ட சனி பகவான்

இந்த உலகில் ஒளிப்பெறச் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவருக்கு உஷாதேவி, சாயாதேவி என்ற இரு மனைவிகள். சனீஸ்வர பகவான் சாயாதேவியின் புதல்வன் ஆவார்.

சூரியனுக்கும், சுவர்கலா தேவிக்கும் இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். மகன்களுக்கு வைவஸ்தமனு, இமய தர்மராசன் என்றும், மகளுக்கு யமுனை என்றும் பெயர் சூட்டினர். சூரியனுடன் சுகவர்கலா தேவி இல்லறம் இனிது நடத்தினாலும் அவளுக்கு சூரியனுடன் இல்லறம் நடத்த போதிய சக்தி இல்லை. அவளுக்கு சக்தி குறைந்துகொண்டே வந்தது. இதனால் அவள் தவம் செய்ய யோக கானகம் புறப்பட்டாள்.

சூரியனின் மனைவியான சுவர்க்கலா தேவிக்கென்று சிவசக்தி இருந்தது. தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு சாயாதேவி என்று பெயர் சூட்டினாள்.

தான் இழந்த சக்தியை பெற தவம் மேற்கொள்ள தயாரான அவள், சாயாதேவியிடம், `நீ என்னை போன்றே சூரியனுக்கு மனைவியாக இருந்து என் முன்று குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வர வேண்டும்’ என்று கூறினாள்.

அவளது வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி, `சூரியனுக்கு மனைவியாக தங்கள் சொற்படியே நடக்கின்றேன். ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை’ என்று கூறினாள். அதற்கு சுவர்க்கலா தேவி உடன்பட்டாள்.

தொடர்ந்து, அவள் தன்னை யார் என்று அறியாத வண்ணம் குதிரை வடிவம் கொண்டு தவம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் சாயா தேவி, சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த தொடங்கினாள்.

அப்போது சூரியனுக்கு சாயாதேவி முலமாக முன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் கிருதத்வாசி, கிருதவர்மா ஆகிய இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் ஆவார்கள். இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வர பகவானாக மாறினார். அவரது சகோதரி தபதி, நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.

சனி பகவான் கருமை நிறம் கொண்டவர். அவரது செயல்கள் எல்லாம் சூரியனுக்கு எதிராக இருந்ததால் இருவருக்கும் பகை உணர்வு ஏற்பட்டது. சனி பகவானுக்கு சர்வேஸ்வரரான சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது. தான் ஒரு சர்வேஸ்வர நிலையை அடைய வேண்டும் என்று தாயாரிடம் அனுமதி பெற்று காசிக்கு சென்றார் சனி பகவான்.

அவர் காசியில் லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்து பல ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவரது பக்தியை கண்டு மெய்சிலிர்த்து போன சிவபெருமான் பார்வதி சமேத ராக காட்சி அளித்தார்.

அப்போது சிவபெருமான் சனிபக வானை நோக்கி, `உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு சனி பகவான், `எனக்கு என் தந்தையை விட அதிக பலத்தையும், பார்வையையும் தர வேண்டும்’ என்றார்.

மேலும், `உடன் பிறந்தவர்கள் உயர்நிலைக்கு சென்றுவிட்டனர். நான் அவர்களை விட பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் ஆக வேண்டும்’ என்றும், `இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு அருள வேண்டும்’ என்றும் வரம் கேட்டார் சனிபகவான்.

அவரது வேண்டுகோளை ஏற்ற ஈஸ்வரன், அவருக்கு `சனீஸ்வரர்’ என்ற பெயர் விளங்க அருள் பாலித்தார்.

பெயர் பெற்று விட்டால் மட்டும் போதுமா?

நவக்கிரகங்களில் தான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் தன் பார்வை பட்டால் மற்றவர்கள் எல்லா பலமும் இழந்து விடவேண்டும் என்றும் ஈசனிடம் வரம் கேட்டார் சனி பகவான்.

சிவபெருமான், சனிபகவானின் இந்த வேண்டுகோளையும் ஏற்று, நவக்கிரகங்களில் அதிக பலத்தையும், விண்ணுலகம், மண்ணுலகம் அனைத்தையும் அவரது ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சிபுரியும் பெருமைக்கு உரிய கடவுளாக்கினார்.

அமெரிக்காவின் புதிய சட்டத்தால் பி.பி.ஓ., துறைக்கு பாதிப்பா?

அமெரிக்காவின் கால் சென்டர் பணிகள் பெரும்பாலும் வெளி நாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில் புதிய சட்ட வரையறையை அமெரிக்கா விரைவில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சட்ட வரையறையை அமெரிக்க செனெட்டர் சார்லஸ் ஷுமர் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளார். இதன் மூலம் பி.பி.ஓ., பணிகளுக்காக நாட்டைவிட்டு வெளியே செல்லும் அழைப்புகளுக்கு 25 சதவிகித வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்தக் கொள்கை முடிவு இந்திய பி.பி.ஓ., துறையை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று இந்திய ஐ.டி.,யின் மைய அமைப்பான நாஸ்காம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய பி.பி.ஓ., துறையின் மொத்த வருவாயில் 61 சதவிகிதம் அமெரிக்காவை மையமாகக் கொண்டது. அமெரிக்காவிலிருந்து வரும் இந்தக் கால்களை இந்தியாவிலுள்ள நொய்டா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற இடங்களிலுள்ள பி.பி.ஓ., மையங்கள் பார்த்துக் கொள்கின்றன. இருந்தாலும், அமெரிக்காவின் புதிய சட்ட வரையினால் இந்திய பி.பி.ஓ., துறைக்கு பாதிப்பில்லை என்று நாஸ்காம் கூறுகிறது.
இந்திய பி.பி.ஓ., துறையில் உள்ளே வரும் அழைப்புகளால் 600 கோடி நிதி புரள்கிறது. இதில் அமெரிக்காவிலிருந்து வரும் அழைப்புகளின் மதிப்பு வெறும் 18 கோடி மட்டும்தான். இதனால்தான் இந்திய பி.பி.ஓ., துறைக்கு பாதிப்பில்லை என்ற அறிவிப்பை நாஸ்காம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள புதிய சட்டத்தின் படி குறிப்பிட்ட அளவு கால்-சென்டர் பணிகள் அமெரிக்காவிலேயே செய்யப்பட வேண்டும் என்பதோடு, ஏற்கெனவே வெளியே அவுட் சோர்சிங் செய்யப்பட்ட சில பணிகளை மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பக் கொண்டு வரவேண்டும் என்ற சாராம்சமும் உள்ளது. இந்தப் பணிகளில் ஈடுபடும் கம்பெனிகள் காலாண்டிற்கு ஒரு முறை மொத்த வாடிக்கையாளர் அழைப்புகள் மற்றும் இவற்றில் அவுட்சோர்சிங்கில் வந்த அழைப்புகள் போன்ற புள்ளி விபரங்களைத் தருமாறு நிர்ப்பந்திக்கப்பட உள்ளன.
வச்சோவியா, சிட்டி பாங்க், பாங்க் ஆப் அமெரிக்கா, ஜி.இ., மார்கன் ஸ்டான்லி போன்ற நிதி நிறுவனங்களும், டெஸ்கோ போன்ற ரீடெயில் நிறுவனங்களும், வெரைசான் மற்றும் ஏ.டி. அண்டு டி., போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும், ஹெச்.பி., மற்றும் டெல் போன்ற கம்ப்யூட்டர் நிறுவனங்களும் தங்கள் பேக்-ஆபிஸ் பணிகளுக்கு இந்திய பி.பி.ஓ., நிறுவனங்களை பெரிதும் சார்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை புதிய நிர்ணயத்தால் யாருக்கு லாபம்?

பெட்ரோல் விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவு, எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கவே செய்யும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசு, அதன் விலை நிர்ணயத்தில் இனி தலையிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது. இதனால், பெட்ரோலுக்கான விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பெட்ரோலுக்கு தனிநபர் கொடுக்கும் விலையில் ஒரு ரூபாயில், 29 பைசா மத்திய அரசு வருவாயாகவும், 16 பைசா மாநில அரசு வருவாயாகவும் போக, மீதமுள்ள 55 பைசா முழுவதும் எண்ணெய் நிறுவனங்களுக்குப் போய்விடும். இது மாநிலங்களின் வரிகளுக்கு ஏற்ப சில காசுகள் மட்டும் மாறுபடும்.

டில்லியும், ஆந்திரமாநிலமும் அதிக வரிவிதிக்கும் மாநிலங்கள். இங்கு சராசரியாக மத்திய, மாநில அரசுகள் வரி என்ற கணக்கில் ஒரு ரூபாய்க்கு 45 பைசா வரியாகும். அதாவது, டில்லியில் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 51 ரூபாய் 43 பைசாவுக்கு விற்கப்படுகிறது. இதில் 14 ரூபாய் 78 பைசா மத்திய அரசுக்கு வரியாகப் போய்விடும். டீசலை பொருத்தவரையில், ஒரு ரூபாயில் 12 பைசா மத்திய அரசுக்கும், 16 பைசா மாநில அரசுக்கும், 72 பைசா எண்ணெய் நிறுவனங்களுக்கும் கிடைக்கும். அதாவது தற்போதைய விலையான லிட்டர் 40 ரூபாய் 10 பைசாவில், மத்திய அரசுக்கு நான்கு ரூபாய் 74 பைசா கிடைக்கும். மாநில அரசுக்கு ஆறு ரூபாய் 35 பைசா கிடைக்கும். மீதமுள்ள 29 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்களுக்குத்தான்.

பெட்ரோல் விலை இனி பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யும் நடைமுறை வரக்கூடும். அப்போது பெட்ரோல் விலையில் ஏற்றம், இறக்கத்திற்கு ஏற்ப விலைமாற்றம் இருக்கும். ஆனால், மத்திய அரசின் வரிவிதிப்பில் ஒரே மாதிரி இருப்பதால் அதிக அளவு இழப்பு ஏற்படாது. ஆனால், மாநிலங்கள் உற்பத்தி நிலை மீதான வரிவிதிப்பு அடிப்படையில் வரி விதிப்பை மேற்கொள்கின்றன. அதனால் ஏற்படும் பாதிப்பு நுகர்வோர் கையைப் பிடிக்கும். மேலும், மாநிலங்களில் வெவ்வேறு விகிதங்களில் பெட்ரோலுக்கு விற்பனை வரி விதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 33 சதவீதமும், குறைந்தபட்சமாக 24.7 சதவீதமும் உள்ளன. தமிழகத்தில் 30 சதவீதம் உள்ளது.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, சமீபத்தில் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பெட்ரோல் விலை உயரும்போதெல்லாம், தற்போதைய விற்பனை வரியால் பெரும் சுமையை மக்கள் சுமக்க நேரிடுவதால் விற்பனை வரியைக் குறைக்க வேண்டும். நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், மத்திய அரசு எக்சைஸ் வரிவிதிப்பில் அதிக லாபம் காணும் போது, மாநில அரசுகள் எப்படி தங்கள் வருவாயை இழக்கும் என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக விலை ஏறும் போது வரிஅளவு விகிதமும் உயரும் என்கிற போது, அதனால் லாபம் தானே. ஆகவே மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பு என்ற அம்சம் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில் கிடைக்கும் வரவு ஆகும். ஆகவே எண்ணெய் கம்பெனிகளுக்கும் இந்த விலை உயர்வால் மேலும் வரவு அதிகரிக்கும். இதனால் நுகர்வோருக்கு எந்தப் பலனும் இல்லை.இதுவரை, அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்டதைப் போல, இனி தனியார் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் விற்பனையில் தீவிரமாக ஈடுபட ஆரம்பிக்கும். இது வரை அரசு கட்டுப்பாட்டில் பெட்ரோல் விலை நிர்ணயம் இருந்ததால், கட்டுபடியாகும் விலை இல்லை என்ற காலங்களில் இந்தக் கம்பெனிகள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடிவைத்திருந்தனர்.இனி பெட்ரோல் சர்வதேச நடைமுறை விலைக்கு விற்கலாம் என்பதால் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து தங்கள் கிளைகளைத் திறந்து தீவிரமாக வர்த்தகத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

வகை வகையாய் வைரஸ்கள்


1.ADWARE: கம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும், நமக்குத் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும். Trackng cookies என்பவையும் இதில் சேரும்.


2. BACKDOOR SANTA: : இணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவீர்கள். அப்போது அதே புரோகிராம், உங்களை அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு, நீங்கள் செல்லும் இணைய தளங்கள், நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.  Alexa மற்றும்  Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs சென்று அதனை நீக்கவும்.


3. BHO: இதனை விரித்தால்  Browser Helper Object என்று கிடைக்கும். நீங்கள் உங்கள் பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில பி.எச்.ஓ.க்கள் நமக்கு உதவுபவை. ஆனால் சில புரோகிராம்கள், நம்மை இணையத்தில் திசை திருப்பி, பாலியல் தளங்களில் கொண்டு சென்றுவிடும். உங்கள் கம்ப்யூட்டரை இது ஹைஜாக் செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். சில ட்ரோஜன் வைரஸ்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கும்.


4.  BLENDED THREAT: கம்ப்யூட்டரில் அதிக பட்ச சேதம் விளைவிக்கும் தாக்குதல். வைரஸ் மற்றும் வோர்ம் இணைந்து செயல்படுவது போல இயங்கும். இது இமெயில் வழியே வைரஸை பரப்பும். Nடிட்ஞீச் என்பது இத்தகைய தாக்குதல் ஆகும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் புரோகிராமினை வேகமாகப் பரவிவிடும்.


5. BOTNETS: குழுவாக நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, ஹேக்கர்கள் கைப்பற்றியபின் இவ்வாறு அழைக் கின்றனர். ஹேக்கர்கள் இவற்றைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள். அந்த நெட்வொர்க் ஒரு ரோபோ  (“robot network”)போலச் செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.


6.  BROWSER HIJACKER: இந்த புரோகிராம், நாம் பிரவுசர் மூலம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். மீண்டும் நாம் இயங்கிய தளங்களுக்கு வர முடியாது. அது மட்டுமின்றி, நம் பிரவுசர் செட்டிங்குகளையும் மாற்றிவிடும். நம் ஹோம் பக்கத்தை மாற்றிவிடும். நாமாக அதனை பழையபடி மாற்றினால், மீண்டும் அது செட் செய்திடும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்துவிடும்.


7.  ADWARE COOKIES: : பொதுவாக குக்கிகள் என்பவை, சில இணைய தளங்களால், நம் கம்ப்யூட்டரில் பதியப்படும் சிறிய பைல்கள். இவை உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை அந்த இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய தளங்கள் Adware tracking cookies பதிந்துவிடுகின்றன. இவை நீங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் விளம்பரங்களை அந்த தளங்கள் உங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.  Adware Cookies எப்போதும் மோசமானவை என்று கருத முடியாது. ஆனால் நிச்சயம் இவை உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைச் சிறிது மந்தப்படுத்தும்.


8. DIALERS: ஒருவகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம். இது நம் அனுமதியின்றி, நம் மோடம் மூலமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் சில இணைய தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். பாலியல் தளங்களுக்குத்தான் பெரும்பாலும் இவை தொடர்பு அளிக்கின்றன. தொலைபேசி வழியாக இன்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில் தொலைபேசி வழி இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாகத் தகவல் இல்லை.


7. GRAYWARE: இது தனிப்பட்ட ஒரு தொல்லை தரும் வைரஸாகத் தெரியவில்லை. பொதுவாக தடை செய்யப்பட வேண்டிய, நம் பணியை நாசம் செய்யக் கூடிய சிறிய புரோகிராம்களை இந்த சொல் கொண்டு அழைக்கலாம். மேலே சொல்லப்பட்ட அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த பெயரில் அடங்கும்.


8. KEYLOGGERS: நாம் கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும் அப்படியே அவை எந்த கீகள் என்று பதிந்து, இந்த புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும். நம் குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள், எந்த தளங்களுக்குச் செல்கிறார்கள் என்று கண்டறிய, இதனை நாம் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த புரோகிராம்கள் பதியப்படுகின்றன. சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும்.


9. MALWARE: Malicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம்.


10. STALKING HORSE: : இவை பிரபலமான புரோகிராம் களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கும். கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிக்கப்படும். ஆனால் நம் வேலைகளின் தன்மை குறித்து, புரோகிராம் தந்த நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பி, பின் விளம்பரங்களை அனுப்பி வைக்கும்

கடல்நீரில் உப்பு வந்தது எப்படி?

வெப்பக்கோளமாக இருந்த பூமியில், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து பெய்த மழையால் தான் கடல் உருவானது என்று கூறப்படுகிறது. பாறைகளில் இருக்கும் உப்பு, மழைநீரால் கரைக்கபட்டு, ஆற்றுநீரால் அடித்து வரபட்டு கடலில் வந்து கலந்தது; அதன்பிறகு ஆவியாதல் முலம் கடலநீர் மேலே சென்றுவிட, உப்பு மட்டும் கடலிலேயே தங்கி விட்டது; இதுபோல் லட்சக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றதால் கடலில் அதிகளவு உப்பு சேர்ந்து விட்டது என்றே கருதபட்டது.

ஆற்று நீரில் அதிகளவு இருப்பதோ, கால்சியம் மற்றும் பை-கார்பனேட் உப்பு. கடலில் அதிகளவு இருபது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு. அதாவது அடிபடையில் ஆற்றுரில் உள்ள உப்பும், கடல்நீரில் உள்ள உப்பும் வெவ்வேறானவை. எனவே, கடலநீரில் காணப்படும் சோடியம் குளோரைடு உப்பு எங்கிருந்து வந்தது?

பூமி, முதலில் பாறைக்குழம்புக் கோளமாக எரிமலைகளுடன் இருந்தது. அதன்பின்னர் படிபடியாகக் குளிர்ந்ததால், பல்வேறு அடுக்கு பாறைகளுடன் புவி ஓடு உருவானது. பாறைக்குழம்பில் இருந்து பாறைத் தட்டுகள் உருவானபோது, நீர் தனியே பிரிந்து பூமிக்கு மேல் வந்ததால் தான் கடல் உருவானது.

ஆதிகாலத்தில் எரிமலைகளின் முலமாக பூமிக்குள் இருந்து சோடியம் குளோரைடு உப்புகள், வாயு வடிவில் பூமிக்கு மேல் வந்ததால் தான் கடலநீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உப்பு இருக்கிறது. இக்கருத்துக்கு ஆதாரமாக பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் வியாழன் கிரகத்தின் துணைக்கிரகமான `இயோ’ விளங்குகிறது.

பூமியில் உள்ள எரிமலைகளை விட, இயோவின் மேற்பரப்பில் அதிக வெப்பமுள்ள எரிமலைகள் காணபடுகின்றன. இந்த எரிமலைகளில் இருந்து சோடியம் மற்றும் குளோரைடு உள்பட உப்பு முலபொருட்கள் வாயு வடிவில் பீய்ச்சியடித்துக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாகின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாரல் ஸ்ட்ரோபில் என்ற ஆராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

1974-ம் ஆண்டு பாபிரவுன் என்ற ஆராய்ச்சியாளர், இயோவின் வாயு மண்டலத்தில் மெலிதான சோடியம் மேகங்கள் இருப்பதை தொலைநோக்கி முலம் கண்டறிந்து அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பு பல ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியபட வைத்தது. காரணம், இயோவின் மேற்பரப்பில் எங்குமே உப்பு படிவங்கள் இல்லை. முதன்முறையாக எரிமலைகளின் முலம் உப்பு வாயுக்கள் பீய்ச்சியடித்துக் கொண்டிருபதை டாரல் கண்டுபிடித்ததன் முலம், பல்வேறு புதிர்களுக்கு விடை கிடைத்திருக்கிறது.

அதிக வெப்பநிலையில் பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் இயோவில், உப்பு எரிமலைகள் இருப்பதைபோல், நம் பூமியும் முதலில் பாறைக்குழம்புக் கோளமாக இருந்தபோது எரிமலைகளில் இருந்து சோடியம் குளோரைடு வெளிவந்தது தெளிவாகிறது. எனவேதான், கடல்நீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உள்ளது.

அர்த்தமுள்ள இந்துமதம்(கவியரசு கண்ணதாசன்)-2

2. ஆசை

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது.
சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.
அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது.

`வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. `போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.

ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.

ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது.

ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது.

சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.

என் ஆசை எப்படி வளர்ந்ததென்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.

சிறு வயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா?” என்று ஏங்கினேன்.

கொஞ்ச நாளில் கிடைத்தது.

மாதம் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.

“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.

அதுவும் கிடைத்தது, வேறொரு பத்திரிகையில்.

பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.

அதுவும் கிடைத்தது.

மனது ஐநூறுக்குத் தாவிற்று.

அது ஆயிரமாக வளர்ந்தது.

ஈராயிரமாகப் பெருகிற்று.

யாவும் கிடைத்தன.

இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!

எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.

`இவ்வளவு போதும்’ என்று எண்ணுகிற நெஞ்சு, `அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?

அதுதான் இறைவன் லீலை!

ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.

குற்றங்களும் பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல் போய்விடுகின்றன.

அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது.

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.

ஆசையை மூன்றுவிதமாகப் பிரிக்கிறது இந்து மதம்.

மண்ணாசை!

பொன்னாசை!

பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.

ஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்தது.

பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!

“இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.

நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.

அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றவாளிகளே.

மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கி இருக்கிறது.

சிறைச்சாலையில் இருந்துகொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான்.

ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.

அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை; நிலையற்ற பொருள்

களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” என்பது திருக்குறள்.

ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லை. அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?

அதனால்தான் `தாமரை இலைத் தண்ணீர் போல்’ என்று போதித்தது இந்து மதம்.

நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு, பாபமும் குறைவு.

ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்குப் பணமாகத் தெரியாது.

இருநூறு எதிர்பார்த்து உனக்கு ஐநூறு கிடைத்தால், நிம்மதி வந்துவிடுகிறது.

“எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்; வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதென்றால் ஓடுகிறானே, ஏன்?

அது ஆசை போட்ட சாலை.

அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையில் இருக்கிறது.

போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்; அப்போது அவனுக்குத் தெய்வ ஞாபகம் வருகிறது.

அனுபவங்கள் இல்லாமல், அறிவின் மூலமே தெய்வத்தைக் கண்டுகொள்ளும்படி போதிப்பதுதான் இந்துமதத் தத்துவம்.

`பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.

வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இந்துமதம் மேற்கொண்டிருக்கிறது.

இந்துமதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல. அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.

அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கே அல்லா மல் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.

உலகத்தில் எங்கும் நிர்பந்தமாகத் திணிக்கப்படாத மதம், இந்து மதம்.

உன் உள்ளம் நிர்மலமாக, வெண்மையாக, தூய்மையாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகவே அது `திருநீறு’ பூசச் சொல்லுகிறது.

உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமாக இருக்கிறது என்பதற்காகவே, `குங்குமம்’ வைக்கச் சொல்கிறது.

`இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது `மாங்கல்யம்’ சூட்டுகிறது.

தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒரு பெண் கிளறி விடக் கூடாது என்பதற்காவே, அவளைத் `தலை குனிந்து’ நடக்கச் சொல்கிறது.

யாராவது ஆடவன் தன்னை உற்று நோக்குகிறான் என்பதைக் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மூடிக் கொள்கிறார்களே, ஏன்?

ஏற்கெனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே, ஏன்?

எந்தவொரு `கவர்ச்சி’யும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டி விடக்கூடாது என்பதால்.

ஆம்; ஆடவன் மனது சலனங்களுக்கும், சபலங்களுக்கும் ஆட்பட்டது.

கோவிலிலே தெய்வ தரிசனம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது.

அதை மீட்க முடியாத பலவீனனுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.

“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி.

கூடுமானவரை மனிதனைக் குற்றங்களில் இருந்து மீட்பதற்கு தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.

அந்தக் குற்றங்களில் இருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது.

அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.

இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப் போன பின்புதான், அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.

ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்துமதம் என்பது வெறும் `சாமியார் மடம்’ என்ற எண்ணம் விலகிவிடும்.

நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்ள, உன் தாய் வடிவில் துணை வருவது இந்துமதம்.

ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்?

“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில் அமிழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்” என்கிறார்.

“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடி கொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.”

“அதுபோல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது.”

“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகிவிடுகிறது” என்றார்.

அடக்கியாள்வதன் பெயரே வைராக்கியம்.

நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்

நம் அன்றாட சமையலில் எண்ணெய்யின் பயன்பாடு பற்ற உங்களுக்கு சொல்லத் தெரியவேண்டியதில்லை. எண்ணெய் இல்லாத சமையலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நம் சமையல் முறையில் அசைக்கமுடியாத இடம் பிடித்திருக்கிறது எண்ணெய்.
சமையல் கலைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய தகவல்கள் எல்லாம் மாறி மருத்துவப் புத்தகத்துக்கு வந்துவிட்டதா என நினைக்காதீர்கள். எண்ணெய் பற்றி இங்கு பேசுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
நாம் பயன்படுத்துகிற எண்ணெய்க்கும் இதய நலனுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. எண்ணெய் பற்றி சில விஷயங்களைச் சொன்னால்தான் உங்களால் அந்தத் தொடர்பு பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
எண்ணெய்யைச் சமையலில் பயன்படுத்துவதற்கு அடிப்படைக் காரணம் என்ன?
நாம் சாப்பிடும் உணவுக்கு அது சுவையையும், நறுமணத்தையும் கூட்டுகிறது.
சமையல எண்ணெய்களை ஆற்றலின் பெட்டகம் என்று சொல்லலாம். மிகவும் குறைந்த அளவில் அதிக வெப்ப ஆற்றலைத் தரக்கூடியது எண்ணெய்.
கொழுப்பில் கரையும் தன்மையுள்ள உயிர்ச்சத்துகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகச் செயல்படுகிறது.
உணவுக் குழல், இரைப்பையில் உள்ள மென் திசுக்களைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கத் துணை புரிகிறது.
மேலே சொன்னவை போன்ற பல காரணங்களுக்காகத்தான் எண்ணெய்யை நாம் உபயோகிக்கிறோம்.
நம்மில் பலர் எண்ணெய்யும், கொழுப்பும் வேறு வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் எண்ணெய் என்பது திட நிலையில் உள்ள கொழுப்பு. கொழுப்பு என்பது திட நிலையில் உள்ள எண்ணெய் (A fat is a solid oil and an oil is a liquid fat). கொழுப்பும், எண்ணெய்யும் புறத்தோற்றத்தில்தான் வித்தியாசப்படுகின்றனவே தவிர, வேதியியல் மூலக்கூறு அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.
பொதுவாக ஒரு மனிதனுக்குத் தினமும் தேவைப்படும் சக்தியானது 1800 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். இந்த மொத்தக் கலோரிகள் தேவையில் சுமார் 4 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சமையல் எண்ணெய்யைப் பாதுகாப்பாக அன்றாடம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது 72 கலோரிகள் அளவு வெப்பத்தைத் தரக்கூடிய சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். கிராம் அளவில் கணக்கிட்டால் 9 கிராம் அளவு உள்ள எண்ணெய் போதும்.
சமையலுக்கு எந்த எண்ணெய்யைப் பயன்படுத்துகிறோம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அந்தந்த மாநிலத்தில் பயிர் செய்யும் எண்ணெய் வித்துகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டே இது தீர்மானிக்கப்படுகிறது.
வட மாநிலங்களில் கடுகு எண்ணெண்யையும், தென் மாநிலங்களில் தேங்காய் எண்ணெய், நெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களையும் காலம் காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். 17&ம் நூற்றாண்டுக்குப் பிறகு போர்ச்சுகீசியர்களின் உபயத்தால் கடலை எண்ணெய்யைப் பயன்படுத்தி வருகிறோம். அண்மையில் சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், தவிட்டு எண்ணெண், பருத்திகொட்டை எண்ணெய் போன்ற எண்ணெய்களையும் சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்.
பொதுவாக சமையல் எண்ணெய்யின் தன்மை, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஒரு எண்ணெய்யில் எந்த அளவு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளனவோ அதை அடிப்படையாகக் கொண்டு செறிவுற்ற, கொழுப்பு செறிவற்ற என எண்ணெய் வகைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். கொழுப்பு எந்தவிதமான சிதைவு மாற்றங்களும் இல்லாமல் கெட்டியான நிலையில் இருக்கும்.
வெண்ணெய், நெய், விலங்கினங்களின் கொழுப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை செறிவுற்ற கொழுப்புச் சில உதாரணங்கள். இவற்றில் தேங்காய் எண்ணெய்யும், பாமாயிலும் திரவ நிலையில் இருந்தாலும், வேதியியல் அடிப்படையில் செயல்படும் போது மற்றவகையான சேறிவுற்ற கொழுப்புபோலவே இருக்கும்.
இந்தக் கொழுப்பு வகையில் வருகிற சமையல் எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிக்க கவனம் தேவை. ஏனென்றால், இவ்வகையான சமையல் எண்ணெய்கள் ஓரளவு நன்மை தந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் இதயம் மற்றும் இதயம் தொடர்புடைய ரத்தக் குழாய்களுக்குப் பலவகையான சிக்கல்களை காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடும்.
இவ்வகையான சமையல் எண்ணெய்கள் தோலுக்குத்தான் சிறந்தவை. இதயத்துக்கு அல்ல என்று சொல்வதுண்டு (Oil is good for the skin but bad for the heart).
அளவுக்கு அதிகமாக தினசரி சமையலில் செறிவுற்ற எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் இதயத்தில் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இதயத் தமனிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இவ்வகையா எண்ணெண் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ராலாக அளவுக்கு அதிகமாகச் சேர்ந்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாகப் படியும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள்விட்டத்தை முழுமையாக அடைப்பதால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபட்டு இதயத் தமனி நோய் ஏற்படுகிறது.
செறிவுய்ய கொழுப்பு (Unsaturated Fat)
கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்கள் முழுமையாக இல்லாமல், குறைவான அளவில் இருக்கும் கொழுப்பு வகை எண்ணெய்களை செறிவற்ற கொழுப்பு எண்ணெய் (Unasturated Fatty oils) என்று சொல்வார்கள்.
ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவற்றைப் பொதுவாக மியூஃபா எண்ணெய் என்றும் பியூஃபா எண்ணெய் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
பியூஃபா கொழுப்பு
கார்பன் சங்கிலித் தொடரில் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையானது ஒன்றுக்கு மேல் குறைவாக இருந்தால் அவ்வகையை பியூஃபா என்பது (PUFA) எண்ணெய் என்று சொல்வார்கள். (பியூஃபா என்பது Poly Saturated Fatty Acid  என்பதன் சுருக்கம்).
பியூஃபா எண்ணெய்யை ஒமேகா&3 இன்றியமையா கொழுப்பு அமிலம் (Omega-6 Essential Fatty Acid) என்றும் பலவகைகளாகப் பிரித்துள்ளனர்.
பெயருக்கு ஏற்றார்போல் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. நம் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவது இவைதான்.
ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் உள்ள செல்களைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இவ்வகை அமிலங்கள், பிராஸ்டாகிளாண்டென் (Prosta Glanden) என்ற ஹார்மோன் சுரக்கத் துணைபுரிகிறது.
ரத்த உறைவைத் தடுக்கவும் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக் கொள்ளவும், நோய் தடுக்கும் ஆற்றல் அதிகமாகவும் இவை துணை புரிகின்றன. இதயத்தைப் பாதுகாப்பதிலும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
ஒமேகா கொழுப்பு அமிலங்களை, தேவையான அளவில் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உற்பத்தியை கல்லீரல் அதிகமாக்குகிறது. நன்மைதரும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள் பகுதியில் படியும் கொழுப்புத் துகள்களை அகற்றி, ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதால்தால் இவற்றை ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. எனவே ரத்தத்தில் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவதால் இதயத் தமனி அடைப்புகளில் இருந்து இதயத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.
ஒமேகா&3 கொழுப்பு எண்ணெய்கள், மீன் வகை உணவுகளிலும், சோயா, மொச்சையில் இருந்து தயாரிக்கப்படம் எண்ணெய்யிலும் மிக அதிகமாக உள்ளன. இதுபோல் ஒமேகா&6 கொழுப்பு எண்ணெய்கள், சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய் போன்றவற்றில் மிக அதிகமாக உள்ளது.
ஒரு தனி மனிதனின் அன்றாட எண்ணெய்த் தேவையில் பியூஃபா வகை கொழுப்பு, மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.
மியூஃபா கொழுப்பு
கொழுப்பு அமில சங்கிலித் தொடரில் ஒரு இணை ஹைட்ரஜன் அணுக்கள் குறைந்தால் அவ்வகையான சமையல் எண்ணெய்களை மியூஃபா எண்ணெய்கள் என்று சொல்வார்கள். MONO UNASATURATED FATTY ACID  என்பதன் சுருக்கம்தான் மியூஃபா (mufa)  என்பதாகும்.
மியூஃபா வகைக் கொழுப்பாலும் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.
நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களின் அமைப்பைச் சிதைவுறாமல் நிலை நிறுத்துகிறது.
நமது ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது.
நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கத் துணைபுரிகிறது.
மியூஃபா வகை கொழுப்பு கடுகு எண்ணெய்யிலும், கடலை எண்ணெய்யிலும் அதிக அளவில் உள்ளது.
எண்ணெய்யில் பல வகைகள் இருந்தாலும், இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil)  சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் நம் நாட்டுச் சூழலுக்கு இந்த எண்ணெய் ஒத்துவருவதில்லை. மேலும் இதன் மனமானது நம்முடைய சுவைக்கு ஏற்றதாகவும் இல்லை. நம் நாட்டில் பெரும்பாலும் பலவகையான சாலடுகள் தயாரிக்கத்தான் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
உலக அளவில் ஆலிவ் எண்ணெய் சிறந்ததாகக் கருதப்பட்டாலும் நம் நாட்டு மக்களின் சுவைக்கு ஏற்ப, நமது அன்றாடத் தேவைக்கு ஏற்ப, நமது சமையல் முறைக்கு ஏற்ப நமது உடல் நலத்துக்கு ஏற்ப, குறிப்பாக இதயத்தின் நலம் காக்கும் தன்மையுள்ள சிறந்த சமையல் எண்ணெய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தொன்று தொட்டு நம் நாட்டில் பலவகையான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தாலும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் சில சிறப்புத் தன்மைகளும் சில தீய தன்மைகளும் இயற்கையாகவே ஒரு சேர இருக்கும். எனவே நாம் அன்றாட சமையலுக்கு ஒரு குறிப்பிட்ட சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவதால், முழுமையான பயனைப் பெற இயலாது.
எனவே நம் நாட்டில் பயன்படத்தும் சிறந்த சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அன்றாட சமையலுக்கு ஏற்றபடி கலவையாகப் பயன்படுத்துவதுதான் சரியான வழிமுறை.
செறியுற்ற கொழுப்பு என்றும் பியூஃபா கொழுப்பு என்றும் மியூஃபா கொழுப்பு என்றும் சமையல் எண்ணெய் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த மூன்று வகையான கொழுப்பு வகைகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கக்கூடிய எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை 1: 1 : 1 என்ற அளவில் தினசரி சமையலுக்கு அளவாகப் பயன்படுத்தினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
அதாவது நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றை இதயத்துக்கு ஏற்ற சிறந்த எண்ணெய்களாக நாம் தேர்வு செய்யலாம். இந்த எண்ணெய்களைத் தினசரி சமையலுக்கு மாறி மாறி தனித்தனியாக பயன்படுத்தலாம். அல்லது இந்த மூன்று எண்ணெய்களையும் 1: 1: 1:  என்ற சம அளவில் கலந்து தினமும் சமையலுக்குப் பயன்படுத்துவதால் இதயத்தின் நலனைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு மூன்று வகையான எண்ணெய்களையும் கலந்த கலவை எண்ணெய் இனிமையான எண்ணெய் (ஷிஷ்மீமீt ஷீவீறீ) என்று அழைக்கப்படுகிறது.
சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது உடல் அமைப்பு அன்றாட உடல் உழைப்பு, நமது அன்றாட தேவை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய்யை அளவோடு பயன்படுத்தினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இந்தக் கணக்கைப் பற்றிக் கவலைப் படாமல், சுவைக்காக அளவுக்கு அதிகமாக எண்ணெய்களைப் பயன்படுத்துவது இதய நலனைப் பெரிதும் பாதிக்கக்கூடும். An oil is an oil is an oil.

சபாரி பதிப்பு 5

ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய சபாரி பிரவுசரின் பதிப்பு 5 னை அண்மையில் வெளியிட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான பதிப்புகள் வெளியாகியுள்ளன. எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி இது வந்துள்ளது. இதில் தரப்பட்டுள்ள புதிய சிறப்புகளைப் பார்க்கலாம்.
1. சபாரி ரீடர்: இந்த புதிய பதிப்பில் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இணைய தளங்கள் தரும் தேவையற்ற பாப் அப்கள்விலக்கப்படுகின்றன. இணைய தளங்களைப் பார்வையிடுகையில் ரீடர் பட்டன் என்பதனை அழுத்தி விட்டால், மேலே சொன்னபடி நாம் எந்த இடையூறும் இன்றிப் பார்க்கலாம்.
2. எச்.டி.எம்.எல். சப்போர்ட்: எச்.டி.எம்.எல்.5 ஜியோ லொகேஷன் உட்பட பல எச்.டி.எம்.எல். 5 சார்ந்த தொழில் நுட்பங்களை, இந்த பிரவுசர் சப்போர்ட் செய்கிறது.
3. அதிக வேகம்: இந்த பிரவுசரில் நிட்ரோ இஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதுவரை உள்ள பிரவுசிங் வேகத்தைக் காட்டிலும் இது கூடுதல் வேகம் கொண்டதாக உள்ளது. ஓர் இணைய தளத்தில் உள்ள லிங்க்குகளுக்கான, இணைய முகவரிகளைக் கண்டு தளங்களை மிக வேகமாகத் தருகிறது.
4. பிங் சர்ச்: ஐ போனில் உள்ளதைப் போல, சபாரியில் பிங் சர்ச் பார் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள யாஹூ மற்றும் கூகுள் உடன் இவை தரப்பட்டுள்ளன.
சபாரி பிரவுசர் இயக்க, விண்டோஸ் எக்ஸ்பி (எஸ்.பி.2) குறைந்த பட்சம் தேவை. மெமரி 250 எம்பியாவது இருக்க வேண்டும். ப்ராசசர் குறைந்தது 500 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்க வேண்டும். மேக் சிஸ்டத்தில் இயங்க Mac OS X Leopard 10.5.8 அல்லது Mac OS X Snow Leopard® 10.6.2 தேவை.
ஆப்பிள் நிறுவனம் இந்த பிரவுசர் தான் அதிக வேகத்தில் இயங்கும் முதன்மை பிரவுசர் என்று அறிவித்துள்ளது. (பார்க்க: http://www.apple.com/safari/download//) இந்த பிரவுசரை மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி, அதன் மூலம் இந்த தகவலைத் தந்துள்ளது ஆப்பிள் நிறுவனம். விண்டோஸ் இயக்கத்தில் இதனை இயக்கி, கிடைத்த வேக முடிவுகளை ஆப்பிள் தந்திருந்தால், இதனை ஏற்றுக் கொள்ளலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.