Daily Archives: ஜூலை 1st, 2010

குடிக்கிறார்கள் பெண்கள் கெடுக்கிறார்கள் உடலை…!

சுமா (பெயர் மாற்றபட்டுள்ளது) தனியார் நிறுவனத்தில் உயரதிகாரி. அன்று மது விருந்தில் கலந்து கொண்டாள். மிகவும் கட்டுபாடாக வளர்ந்த பெண் என்பதால் எதையும் தொடாமல் இருந்தாள். ஆனாலும் அவள் குடித்த குளிர்பானத்தில் ஏதோ கலந்திருக்க… அதன் கிறக்கம் மிகவும் பிடித்து போனது. அதன்பின்னர் கொஞ்சம் மது குடிக்க… புதிதாக சாப்பிட்டதால் உடல் தாங்க முடியாமல் மெல்ல மெல்ல சுயநினைவை இழந்தாள்.

அவள் கவிழித்து பார்த்தபோது அருகில் ஒரு ஆடவன் நிர்வாண நிலையில் கிடந்தான். விக்கித்து நின்றாள் சுமா… என்னாச்சு… எப்படி இங்கே…. யார் என்னிடம்..? இப்படி பல கேள்விகள் மனதை குடைய… தலைவலியால் மண்டையும் குடைய… அப்படியே சரிந்து விழுந்தாள்… அதற்கபுறம்… அவளுடைய வாழ்க்கை…?

இப்படித்தான் பல பெண்கள் ச்சும்மா… ஜாலிக்காக… மதுவை தொட… விடாது கருப்பாக அது தொற்றிக் கொள்கிறது. பொதுவாக ஆண்களுக்கும், பெண்களுக்கு உடல் ரீதியாக நிறைய வித்தியாசங்கள் உண்டு… ஆண்கள் குடிக்கிறார்கள் என்பதற்காக பெண்களும் மதுவை குடிக்க ஆரம்பித்தால் அவர்களுடைய உடல்நிலை மிக மோசமாகும்.

மது குடிக்கும் பெண்களுக்கு முகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதற்கு முக்கிய காரணம் கல்லீரலில் ஏற்படும் பிரச்சினைகள். ஆண்களை விட பெண்களின் கல்லீரல் ஆல்கஹால் தாக்கத்தின் காரணமாக விரைவில் கெட்டுவிடும். ஆல்கஹாலின் தாக்கத்தால் கல்லீரல் சுருங்கி, கொழுப்பு அதிகமாகி விடுவதால், என்சைம்களில் அதிக சிக்கல் உண்டாகும். ஆண்களைவிட பெண்களுக்கு கொழுப்பு அதிகம் என்பதால், வெகுவிரைவில் கல்லீரல் கெட்டு, ரத்தத்திலும் மதுவின் தன்மை அதிகம் கலந்து விடும். சில நேரங்களில் மரணம் ஏற்படும் அபாயமும் உண்டு.
ஆல்கஹாலும்… இதயமும்…

மதுவின் தாக்கம், பெண்களுக்கு கல்லீரலோடு, இதயத்தையும் சேர்த்து தாக்கும். பெண்களுக்கு மன அழுத்தமும், மதுவின் தாக்கமும் ஒன்றுசேர, இதயநோய் அழையா விருந்தாளியாக வந்து பாடாய் படுத்தும். மது குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயத்தை பலவீனபடுத்தும். இதனால் ரத்த அழுத்தத்தை தாங்காமல் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் வீங்கும்.

சிலருக்கு அழுத்தம் அதிகமாகும்போது வெடித்து விடும் அபாயமும் உண்டு. இல்லாவிட்டால் இதயத்தில் அழுத்தம் தாங்காமல் ஓட்டை விழும். தேவையில்லாமல் இதயம் அதிகமாக துடிப்பதும், இல்லாவிட்டால் மெதுவாக துடிப்பதும் இதயநோய்க்கான அறிகுறிகள். மேலும் உடல் எடை அதிகரித்து, அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிப்படையும்.
ஆல்கஹாலும்… இனபெருக்கத் திறனும்…

அமெரிக்க மெடிக்கல் அசோசியேஷன் சார்பில் வெளிவரும் மருத்துவ இதழில் `மது குடிக்கும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கும்’ என்று கூறியிருந்தனர். அதாவது தினமும் முன்று கப் ஆல்கஹாலை குடிக்கும் பெண்களுக்கு 41 சதவீதம் மார்பக புற்று நோய் அதிகமாக தாக்கும் என்று எச்சரித்தனர்.

மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது இந்திய பெண்கள் குடிக்கும் மதுவின் அளவு குறைவுதான் என்றாலும், வெளிநாட்டு பெண்களின் உடல் மதுவை தாங்கும் அளவுக்கு இந்திய பெண்களின் உடல் தாங்காது. நம்முடைய பாரம்பரியத்தின் காரணமாக நமது நாட்டின் பெண்களின் உடல் ஆல்கஹாலை எதிர்த்து போராடாது. மது அருந்தும் பெண்களின் இன பெருக்க திறனும் பாதிக்கபடும். அதாவது தினமும் மது குடிக்கும் பெண்களுக்கு, ஆல்கஹாலின் தாக்கத்தால் மாதவிலக்கு ஒழுங்காக வராது.

அப்படியே வந்தாலும், வலி அதிகமாக இருக்கும். இல்லாவிட்டால் குறிபிட்ட நாட்களில் வராமல் நாட்கள் தள்ளி போகலாம். இதனால் வயிற்று பிரச்சினைகளும் ஏற்படும். நடுத்தர வயது பெண்களுக்கு மெனோபாஸ் சிக்கல்களும் ஏற்படும். தினமும் குறைந்த அளவே குடிக்கும் பெண்கள் என்றாலும், டாக்டரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பின்னாளில் பிரச்சினை பெரிதாகிவிடும்.

ஆல்கஹாலும்… மூளையும்…

இயல்பாகவே பெண்களுக்கு அனைத்து உணர்ச்சி நரம்புகளும் எப்போதும் துடிப்புடன் இருக்கும். அதனால் தான் அவர்கள் இன்பமோ, துன்பமோ, இரக்கமோ, அரக்க குணமோ அதை உடனுக்குடன் வெளிபடுத்தி விடுவார்கள். எதைம் தாங்கி, அமைதியாக இருக்கும் பக்குவம் ஒரு சில பெண்களுக்கு மட்டுமே உண்டு. இதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கு உள்ள முளையின் அமைப்பு. தினமும் ஆல்கஹாலை உடம்புக்குள் செலுத்தும்போது பெண்களின் முளை மற்றும் நரம்புகள் பாதிக்கபட்டு, மன அழுத்தம், மறதி, திடீர் பதட்டம், திடுக்கிடுதல் போன்ற உணர்ச்சிகள் மேலோங்கும் என்று ஸ்டான்போர்டு மருத்துவ பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். போதைக்கு அடிமையாகும் பெண்களுக்கு, ஆண்களை போன்று முகமும் இறுகி காணப்படும்.
ஆல்கஹாலும்… எலும்புகளும்…

எலும்புகள் அனைத்துமே, கால்சியம் சத்துகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் சத்து அவசியம் தேவை.

மது அருந்தும் பெண்களின் எலும்பின் உறுதி பலவீனமாகி, முட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக மது குடிக்கும் வயதான பெண்களுக்கு இந்த பிரச்சினை மிக அதிகமாகத் தோன்றும். ஆங்கிலேய பெண்களை விட இந்திய பெண் களுக்கு எலும்புகள் உறுதியாக இருந்தாலும், ஆல்கஹாலின் தாக்கத்தால் படிபடியாக அவை செயலிழக்க ஆரம்பித்து விடும். மேலும் எலும்பு மஜ்ஜைகளில் இருக்கும் ரத்தத்தில் நல்ல கொழுப்பையும் ஆல்கஹால் அரித்து விடும் என்பதால், மதுவை அறவே தவிர்ப்பது மிகவும் நல்லது.

நல்லதை பழக்கிக்கொள்ளுங்கள்

நாம் நினைக்கும்போது நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு குறிப்பது, குளியல் முறைக்கு மாறானது மட்டுமல்ல, அதனால் எந்தப் பயனும் கிடையாது.
எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்போல, எப்படிக் குளிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.
நாம் தினந்தோறும் குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அதிகாலையில் குளிக்க வேண்டும். அதுதான் நல்லது. நதியிலும், நீர் நிலையிலும் குளித்தால் நன்மை உண்டு. நதியும் நீர் நிலையும் இல்லாத நகர வாசிகள் 8’ஜ்3′ என்னும் அளவுடைய நீர்த் தொட்டியில் நீரைவிட்டு அதில் குளிக்க வேண்டும்.
சித்திரை வைகாசி மாதங்களில் சூரியன் உதயமாகி (5 நாழிகை) மணிக்குள் குளிக்க வேண்டும்.
ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சூரிய உதயத்துக்குப் பின் (4 நாழிகை) மணிக்குள் குளிக்கவேண்டும்.
மார்கழி, தைமாதங்களில் (2 நாழிகை) மணிக்குள்ளும் மாசி, பங்குனி மாதங்களில் (3 நாழிகை) மணிக்குள்ளும் குளிக்க வேண்டும்.
நோயற்ற வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் இவ்வாறு குளித்துவந்தால், உடல் நலம் பெற்று வாழ்வார்கள்.
குளிக்கும்போது, எண்ணெயைப் பாதத்தில் தேய்த்துக் கொண்டு குளித்தால், கண்களில் உள்ள குறைபாடுகள் நீங்கும்.
கண்களில் எண்ணெய் விட்டுக் கொண்டு குளித்தால், காதுகளில் உள்ள குறைபாடுகள் நீங்கும்.
தலைக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு குளித்தால், உடம்பிலுள்ள அனைத்துக் குற்றங்களும் நீங்கும்.
குளிக்கும்போது, இரண்டு மூன்று மாவிலைக் கொத்துகளை வேகும் அளவுக்குக் காய்ச்சி ஆற வைத்து, அந்த நீரை குளியல் தொட்டியில் ஊற்றி, தண்ணீர் ஊற்றி அதில் அமர்ந்து குளித்தால், உடலுக்குத் தேவையான நன்மைகள் தானே கிடைக்கும். குளிக்கும் போது, தண்ணீரை முதலில் தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். தலையில் ஊற்றும் தண்ணீல் உடல் முழுவதும் நனையுமாறு ஊற்றிக் குளிக்க வேண்டும் இது, குளிக்க வேண்டியமுறை. இதைச் செய்ய முடியாது. இதைச் செய்ய முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் நலமாக வாழ முடியாது.
நடை! நடை! நடை!
வைகறை துயில் எழு என்ற சொல்லைக் கேட்கும்போதே மனத்துக்குள் ஒரு கசப்பு. அதிகாலை தூக்கத்தானே சுகமானது. அந்தச் சுகத்தையும் கெடுத்துவிட்டால்?
காலையில் எழுந்திரு! சூரிய நமஸகாரஞ் செய்! நடைப் பயிற்சி செய்! யோகாசனஞ் செய்! என்று, ஊரெங்கும் உபதேச மொழிகளே உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எத்தனை பேர் அதை கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நடைப்பயிற்சி செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நள்ளிரவில் வீட்டுக்கு வந்து விடியும் முன்னே எழுந்து வேலைக்குப் போகின்றவர்களால் எப்படி நடைப்பயிற்சி செய்ய முடியும்?
உள்ளம் செய்யும் தவத்தைப்போல உடல் செச்யும் தவம் நடைப்பயிற்சி! நடைப் பயிற்சி செய்யச் செய்ய உடல் உறுதி பெறும். உள்ளுறுப்புகளின் இயக்கம் சீராகும்.
நடைப் பயிற்சி செய்பவர்களுக்கு உடம்பு சுமையாகத் தோன்றாது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். எப்போது எல்லா நேரத்திலும் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. நடைப்பயிற்சிக்கும் விதி இருக்கிறது. அதற்குரிய நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் நல்ல பயன் உண்டாகும்.
நடை பயிற்சி செய்தால் உடல் எடை குறையும். இளைஞர், முதியவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாரும் நடைப் பயிற்சி செய்யலாம்.
‘எப்போதெல்லாம் நடைபயிற்சி செய்யலாம்?’ என்பது பொதுவாக எழுப்பப்படுகிற கேள்வி.
சூரிய உதயத்துக்கு முன்பும் சூரிய மறைவுக்குப் பின்பும் நடைப்பயிற்சி செய்தால், உடலின் உள்ளுறுப்புகள் சீராக இயங்கும். புத்துணர்வு பெறும்.
சூரிய உதயத்துக்குப் பின்பும் சூரிய மறைவுக்கு முன்பும் நடைப் பயிற்சி செய்தால் அது தசைப்பகுதியை மட்டுமே வலுவாக்கும். சூரிய உதயத்துக்கு முன்பு நடைப்பயற்சி செய்பவர்கள் கற்கள் பதிந்த பாதைகளில் அல்லது கற்கள் நிறைந்த பாதைகளில் நடக்க வேண்டும்.
சூரிய மறைவுக்குப் பின்பு நடைப்பயிற்சி செய்பவர்கள் புல்தரையில் அல்லது புற்கள் நிறைந்த வெளிகளில் நடக்க வேண்டும்.
கற்கள் நிறைந்துள்ள பாதைகளில் நடக்கும்போது காலின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள பதின்மூன்று வர்மப் புள்ளிகள் அமுக்கப்படுகின்றன. அதனால், உறக்கத்துக்குப்பின் செயல்பட வேண்டிய மிகமிக முக்கியமான உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்படத் தூண்டப்படுகின்றன.
பகல் முழுவதும் பணியாற்றிவிட்டு ஓய்வெடுக்க வேண்டிய உறுப்புகளை மீண்டும் தூண்டக் கூடாது என்பதனால், சூரிய மறைவுக்குப் பின் புற்களின் மீது நடந்தால், வர்மப் புள்ளிகளுக்கு ஒத்தடம் இடப்படுவதுபோல அமைதி கிடைக்கும். உள்ளுறுப்புகளுக்கு அமைதி கிடைத்தால், இரவுப் பொழுது இனிமையானதாக இருக்கும்.
அவ்வாறு அல்லாமல், வெயிலில் நடைப்பயிற்சி செய்தால், நடைப்பயிற்சி உடற்பயிச்சியாக, உடம்பின் வெளிப்புறத்திலுள்ள தசைகள் நரம்புகளுக்குக் கொடுக்கப்படுகின்ற பயிற்சியாகவே இருக்கும்.
வெயிலில் செய்யப்படுகின்ற பயிற்சியினால் உடம்பிலுள்ள கொழுப்புச் சத்து குறையும். கலோரிகள் அதிகம் தேவைப்படும். உடல் எடை குறையும். மனத்தளர்ச்சி உண்டாகும். பயிற்சிக்குப்பின் ஓய்வும் தேவைப்படும்.
நடந்து செல்பவர்கள், சூரியன் தலைக்கு மேலே உச்சியில் இருக்கும் போது, தன்னுடைய நிழலின் நீளம் ஒரு அடி அளவு இருக்கும்போது, வெயிலில் நடக்க கூடாது.
அதேபோல், ஈரமான மண்ணில் நடக்கக் கூடாது! அதனால், நோய்க்கிருமிகள் பாதத்தில் படிந்து நோயை உருவாக்கலாம்.
உணவு உண்ணும்முறை
உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும்.
நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப்பயன்படுகின்றன.
உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு & ரத்தப் பெருகச் செய்கிறது.
இனிப்பு & தசை வளர்க்கிறது.
புளிப்பு & கொழுப்பை உற்பத்தி செய்கிறது.
கார்ப்பு & எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது.
கசப்பு & நரம்பை பலப்படுத்துகிறது.
உவர்ப்பு & உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது.
உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
துவர்ப்பு : உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
இனிப்பு : மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும்.
பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.
புளிப்பு : அணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது னீளவுக்கு னீதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும்.
எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
காரம் : பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.
கசப்பு : பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.
உவர்ப்பு : அனைவரும் வரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு.
உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பி, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.
இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும்.
ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது.
கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்தட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
எப்போதும் உணவ உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.
எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும்.
உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.
படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்டபின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.
உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்பம் குறைபாடுகளுக்குஏற்ப மனம் இருக்கும். நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும்.
நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள்.
உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.
‘உண்பது நாழி’ என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது.
வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழக்கையை« இகழ்ந்தது போலாகும்.
ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். சில போதில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போதில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.
உணவு பற்றிப் பேசும்போது, உணவு வைக்கப்படும் பாத்திரங்கள் பற்றியும் சொல்லியாகவேண்டும்தானே….? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

மிதந்து கொண்டே தூங்கும் விலங்குகள்

எல்லா உயிரினங்களுக்கும் தூக்கம் அவசியமான ஒன்று. தூக்கத்தின் முலம் தான் புத்துணர்ச்சி கிடைக்கிறது. முதல்நாள் இரவு நன்றாகத் தூங்கினால் தான், மறுநாள் சுறுசுறுப்போடு வேலை செய்ய முடியும். ஒவ்வொரு உயிரினங்களின் தன்மையை பொறுத்து, தூங்கும் முறைகள் வேறுபடுகின்றன. நீரில் மிதந்து கொண்டே தூங்கும் விலங்குகளை பற்றி இங்கு காண்போம்.

கடல் புறாக்கள், கடல் நீரில் மிதந்து கொண்டே தூங்கும் தன்மைடையது. வாத்துகளும், அன்ன பறவைகளும் தண்ணீரில் மிதந்து கொண்டே தான் தூங்கும். `சூட்டிடர்ன்’ என்ற பறவையும் நீரில் மிதந்து கொண்டே தூங்கும். ஆனால், அது சில நிமிடங்கள் மட்டுமே அவ்வாறு தூங்க முடியும். ஏனெனில், அதன் சிறகுகளுக்கு நீர் ஒட்டாத தன்மை குறைவு. நீண்டநேரம் மிதந்தால் தண்ணீரில் சிறகுகள் ஊறிபோய், பறவை நீரில் ழுழ்கிவிடும்.

நீர் யானை முக்கு மட்டும் வெளியே தெரிம்படி நீரில் மிதந்து கொண்டே தூங்கும். குளிர்பிரதேசங்களில் இரவு நேரத்தில் திடீரென நீர் உறைந்து விடுவதால், நீரில் மிதந்து கொண்டே தூங்கும் விலங்குகள் பனிக்கட்டிக்குள் மாட்டிக் கொள்வதும் உண்டு.

தொல்லை தரும் டச் பேட்

லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாய் இருப்பது, அதில் இயங்கும் டச் பேட் தான். கீ போர்டில் விரல்களை நகர்த்துகையில் பெருவிரலோ அல்லது உள்ளங்கையோ, டச் பேடில் பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறிச் சென்று, நாம் டைப் செய்வதனை வைக்கக் கூடாத இடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கும். வேலையை நிறுத்தி, எந்த எழுத்தில் இருந்து இந்த வேதனை என்று பார்த்து, அதனை அழித்துப் பின் மீண்டும் பழைய இடத்திற்குக் கர்சரைக் கொண்டு வந்து இயங்க வேண்டும். இந்த பிரச்னை வராமல் இருக்க, ஒரு சிலர் உள்ளங்கைகளைச் சற்று தூக்கிப் பிடித்தவாறே கீ போர்டில் டைப் செய்வதனைப் பார்க்கலாம். இது மிகவும் மோசமான விளைவினைத் தரும். தொடர்ந்து வலி உண்டாகும்.

இந்த பிரச்னைக்குத் தீர்வாக சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஒன்றாக டச் பிரீஸ்  (Touch Freeze)   உள்ளது. இது ஒரு எளிய, இலவச புரோகிராம் Windows NT/2000/XP/ Vista/7 ஆகிய அனைத்து சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


இதனை டவுண்லோட் செய்து, லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிந்துவிட்டால் போதும். எந்த செட்டிங்ஸ் வேலைகளையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. விண்டோஸ் இயங்கத் தொடங்கியவுடன் தானாக இயங்கி, நமக்கு டச்பேடினால் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளும். இயங்குவதற்கு 768 கேபி அளவே மெமரி எடுத்துக் கொள்கிறது. டெக்ஸ்ட்டை கீ போர்டில் டைப் செய்கையில், டச்பேட் இயக்கத்தினை முடக்கி வைக்கிறது.

இந்த புரோகிராம் இல்லாமலும் டச் பேட் இயக்கத்தினை நிறுத்தலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் இதற்கென கண்ட்ரோல் பேனல் சென்று, மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ் ஐகானைக் கிளிக் செய்து டிவைஸ் செலக்ட்  (Device Select) டேப் தேர்ந்தெடுத்து,  “Disable Touch Pad when USB Pointing Device is present” என்பதில் டிக் அடையாளத்தை மேற்கொள்ள வேண்டும். இது சற்று சுற்று வழி. மேலும் டச் பேட் வேண்டும் எனில் மீண்டும் சென்று மாற்ற வேண்டும்.

மாற்றாக எப்போதும் டச் பேட் வேண்டாம் எனில், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் டச் பேட் செட்டிங்ஸ் சென்று  “Disable Device” என்பதனை இயக்கி வைக்கலாம். மீண்டும் வேண்டும் என்று விரும்பும்போது, ஒவ்வொரு முறையும் சென்று இயக்க வேண்டும். டெல், எச்.பி, சோனி வயோ ஆகிய நிறுவனங்கள் தரும் லேப்டாப் கம்ப்யூட்டரின் சில மாடல்களில் டச் பேடினை முடக்க சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்தே தரப்படுகின்றன. டச் பேட் செட்டிங்ஸ் சென்று இவற்றைக் கண்டு இயக்கலாம். ஏசர் லேப்டாப்பின் சில மாடல்களில்  Fn+F7 என்ற கீகளை அழுத்தினால், டச் பேட் முடக்கப்படும். பின் மீண்டும் தேவை என்றால், மீண்டும் இந்த கீகளை அழுத்தி இயக்கத்தினைத் தொடக்கி வைக்கலாம். இந்த சுற்று வேலைகளை எல்லாம் டச் பேட் பிரீஸ் தவிர்க்கிறது. இந்த இலவச புரோகிராமினை டவுண்லோட் செய்திட  http://code.google.com /p/touchfreeze/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.