Daily Archives: ஜூலை 2nd, 2010

பாத்திரங்களாலும் உண்டு பலன்

உணவு, நீர், தானியங்கள், தயிர், மோர், நெய், சாறு, எண்ணெய் போன்ற பொருள்களைச் சேமிக்கவும், சமைக்கவும் பாத்திரங்கள் தேவைப்படுகின்றன.
பயன்படுத்தப்பட்டு வருகின்ற பாத்திரங்கள் காலத்துக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்துள்ளன.
உலோகங்கள் கண்டறியபட்டாத காலத்தில் மண், கல், பீங்கான், மரப்பட்டை, மூங்கில், பரங்கி, சுரக்காய், தேங்காய், திருவோடு, இலைகள் போன்றவை பாத்திரங்களாகப் பயன்பட்டன.
பின்னர் உலோகங்கள் கண்டறியப்பட்டன. தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமனியம், இரும்பு, வெண்கலம், எவர்சில்வர் முதலியவை பயன்படுத்தப்பட்டன. தற்போது, காகிதம், பிளாஸ்டிக் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
எளிதாகக் கிடைக்க வேண்டும்; பயன்படுத்தும்போது இலகுவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, புத்தம்புது பாண்டங்கள் தோன்றின.
செல்வந்தர்களும், மன்னர் போன்றவர்களும் விலை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களைச் சேர்த்துக்¢கொண்டனர்.
உதாரணமாக, தங்கம், வெற்றி பாத்திரங்கள் ஏழை எளிய மக்களால் பயன்படுத்த முடிவதில்லை. வருவாய் குறைந்தவர்கள், மட்பாண்டமோ, அலுமினிய பாத்திரமோ பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
பாத்திரங்களைப் பயன்படுத்தும் முன் அவற்றினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கருத்திற் கொண்டால், உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும்.
பயன்கருதாது பயன்படுத்துவோர் ஏராளம். மாவீரன் நெப்போலியன், தான் உணவு உண்பதற்காக அலுமினியத்தினால் செய்யப்பட்டு தட்டு வைத்திருந்தாராம். அன்றைய காலத்தில் அலுமினியம் விலை மதிப்புடையதாக இருந்திருக்கிறது. இன்றைக்கு அது ஏழைகளின் பாத்திரமாக ஆகியிருக்கிறது.
பாத்திரங்களினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளைக் குறிப்பிட வரலாற்று நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடலாம்.
மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தார். அப்போரில், ஈடுபட்ட போர் வீரர்கள் தீராத வயிற்று வலியினால் அவதியுற்றனர். ஆனால் போர்ப் படைத்தளபதிகள் எவ்வித நோயும் இல்லாமல் நலமுடனே இருந்தார்கள்.
அதற்குக் காரணம், படைவீரர்களெல்லாம் நீர் அருந்துவதற்காக வெள்ளீயத்தினாலான குவளைகளைப் பயன்படுத்தினர். படைத்தளபதிகளோ வெள்ளியினாலான குவளைகளைப் பயன்படுத்தினர்.
வெள்ளிக் குவளையைப் பயன்படுத்தியவர்களுக்கு எந்த நோயுமில்லை. வெள்ளீயத்தைப் பயன்படுத்தியவர்கள் வயிற்று வலியால் அவதியுற்றனர்.
படைவீரர்களுக்கு ஏற்பட்ட வயிற்று நோயினால், போரிட போதிய வீரர்கள் இல்லாமல் போயினர். அதனால், மாவீரர் அலெக்சாண்டர் தன்னாட்டுக்குத் திரும்ப நேர்ந்தது.
ஆகவே, பாண்டங்களைப் பயன்படுத்துமுன் அதனால் உண்டாகக்கூடிய நன்மை தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
அறிவியல் ஆய்வின்படி, வெள்ளியில் நோய்களை உண்டாகக்கூடிய 650 நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை உள்ளது. மேலும் ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்தஞ்செய்ய 0.1 கிராம் வெள்ளியே போதுமானது. தண்ணீரிலுள்ள நுண்கிருமிகளை வெள்ளி தூய்மைப் படுத்துவதால், பாலை வெள்ளிப் பாத்திரத்திலிட்டு அருந்துவதால் பாலின் மூலம் பரவும் நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட வெள்ளியில் பாத்திரங்களைச் செய்துகொண்டு, அதில் உணவுகளை உட்கொண்டால் பெரும்பகுதி நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
வெள்ளி விற்கும் விலையில் வெள்ளிப் பாத்திரங்களை எப்படிப் பயன்படுத்துவது என்கிறீர்களா? விடுங்கள் கவலையை, அடுத்ததைப் பார்க்கலாம்.
செம்பு பாத்திரம்
தமிழர் நாகரிகம் செம்பு நாகரிகத்தில் தொடங்கியதாகக் கூறுவர். செம்பு அதிக அளவில் கிடைக்கப் பெற்றதால் தேவையான கருவிகளும் பாத்திரங்களும் செம்பினால் செய்து கொண்டனர்.
சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள் அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பய்னபடுத்தியுள்ளனர். அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்துவதனால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்று இன்றைய அறிவியலார்கள் கண்டறிந்துள்ளனர்.
தண்ணீரைச் சேமித்து வைப்பதற்காகவும் செம்புப் பாத்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார்கள்.
சித்தர்களும், முனிவர்களும் பயன்படுத்தி வந்த கமண்டலங்கள் செம்பினால் ஆனவை என்பது குறிப்பிடத்தது.
இயற்கையாகவே செம்பினாலான பாத்திரங்களில் நீர் வைத்திருந்தால், நீரிலுள்ள தீய நுண்ணுயிர்கள்  அழிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், ரத்தத்திலுள்ள பித்த நோய்கள், சந்தி, கபம், பிலீகம், மந்தம், வெண்மேகம், அழலை, சூதக நோய், புண், பிரந்தி, சுவாசநோய்கள், கிருமி தாதுநட்டம், கண் நோய் ஆகியவை நீங்கிவிடும் என்பது தெரிகிறது.
உலக நல நிறுவனம் (கீபிளி) குடிநீரைப் பற்றிக்கூறும் செய்தியில், குடிநீரில் கோலிஃபோர்ம் பாக்டீரியா உள்ள நீரைப் பருகினால் டைபாஃய்ட் சுரமும், வயிற்றுப் போக்கு நோய்களும் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் கோலிஃபார்ம் பாக்டிரியா முற்றிலும் அழிந்துவிடுகிறது.

ஹைபன்களும் டேஷ்களும்

வேர்டில் நமக்குப் பலவகை சிறு இடைக்கோடுகள் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் ஹைபன், டேஷ்  (Predator) என இவற்றை அழைக்கின்றோம். இவற்றிலும் சில வகைகள் இருக்கின்றன. வேர்ட் தொகுப்பினைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் கூட, இந்த வேறுபாட்டினை உணராமல், தேவைப்படும் கோடு இல்லாமல், எதனை வேண்டுமானாலும் பயன்படுத்தி வருகின்றனர். இவை குறித்து இங்கு காணலாம். வேர்ட் நமக்கு மூன்று வகையான ஹைபன்களையும், இரண்டு வகையான டேஷ் கோடுகளையும் தருகிறது. இவற்றில் உள்ள வேறுபாட்டினை அறிந்து கொண்டால், இவை அனைத்தையும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.


1. வழக்கமான ஹைபன்  (Regular Hyphens):  இவற்றை வழக்கமான ஹைபன் கீயினை அழுத்திப் பெறலாம். கீ போர்டில் சைபருக்கு அடுத்து வலது பக்கத்தில் இருக்கும். இதனைச் சிலர் தவறுதலாக டேஷ் கீயாக எண்ணிப் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலத்தில் காம்பவுண்ட் வேர்ட்ஸ்  (Compound Words) என்று சொல்கின்ற சொற்களை அமைக்கையில் இதனைப் பயன்படுத்த வேண்டும். (எடுத்துக் காட்டு  mixup)  இது போன்ற கூட்டுச் சொல் அமைப்பு, ஒரு வரியின் இறுதியில் வந்துவிட்டால், இரண்டாவது சொல் அடுத்த வரிக்குச் சென்று விடும். முதல் சொல்லும் ஹைபனும் முதல் வரியிலேயே இருக்கும்.


2. சிறப்பு ஹைபன் (Optional Hyphen): இவற்றை நாம் சில சிறப்பு இடங்களில் மட்டுமே பயன்படுத்துவோம். எடுத்துக் காட்டாக, ஒரு ஆங்கிலச் சொல் எப்படிப் பிரித்து எழுதப்பட வேண்டும் எனக் காட்ட வேண்டுமென்றால், சொல்லின் இடையே, எழுத்துக்களின் ஊடே இதனைப் பயன்படுத்தலாம். இந்த ஹைபனைப் பெற கண்ட்ரோல் + வழக்கமான ஹைபன் கீயினை அழுத்த வேண்டும். ஹைபனேஷன் டூல், வேர்டில் இயக்கப்பட்டால் தான் இந்த கீகளுக்கான ஹைபன் கிடைக்கும். இந்த ஹைபனேஷன் டூல் இயக்கப்பட்டிருந்தால், சொற்கள் வலது ஓரத்தில் அமைகையில் பிரிக்கப்பட்டால், அங்கே ஹைபன் தானாக அமையும். நாமாக இந்த ஹைபனை, வரி ஓரத்தில் அமைத்தால் தான் அது அச்சில் அச்சிடப்படும்.

3. சொற்கள் இணைந்தே இருக்க ஹைபன்  (Non breaking Hyphens): C¢u øí£øÚ Ctrl+Shift+(Ctrl+Shift and the hyphen key) அழுத்தி அமைக்கலாம். ஹைபனோடு ஒரு சொல்லை அமைக்கிறீர்கள். அது வரியின் ஓரத்தில் வருகையில் சொற்கள் பிரிக்கப்பட்டு முதல் சொல் ஹைபனுடன் முதல் வரியிலும், அடுத்த சொல் அடுத்த வரியிலும் இருந்தால், ஹைபன் அமைத்து காம்பவுண்ட் சொல் அமைத்ததற்கான பயனே கிடைக்காமல் போய்விடும் அல்லவா? இதற்காக இந்த ஹைபன் பயன்படுகிறது. இந்த ஹைபனை அமைத்துவிட்டால், ஹைபனுக்கு இரண்டு பக்கமும் இருக்கும் சொல் மற்றும் ஹைபன் ஒரு தொகுதியாகக் கருதப்பட வேண்டும் என வேர்ட் தொகுப்பிற்கு நாம், இந்த ஹைபன் மூலம் சொல்கிறோம். எனவே இந்த ஹைபன் மூலம் அமைத்த காம்பவுண்ட் சொல், வரியின் ஓரத்தில் கிடைக்கையில், பிரிக்கப்படாமல் அடுத்த வரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முதல் வரி சொற்கள் சரி செய்யப்படும். இந்த வசதி எஸ்.டி.டி. கோடுடன் தொலைபேசி எண்களை அமைக்கையில் நமக்குப் பயன்படுகிறது.

4. என் டேஷ்  (En dash): இது ஒரு டைப்பிங் டேஷ். என்  (n) என்ற கேரக்டர் அளவில் இருப்பதனால், இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இது பொதுவாக எண்களின் ரேஞ்ச் குறிக்கையில் பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக் காட்டு 3–7. இந்த டேஷ் அடையாளம் பயன்படுத்த கண்ட்ரோல் + நியூமெரிக் கீ பேடில் உள்ள மைனஸ் கீயினை இணைத்து அழுத்த வேண்டும். அல்லது ஆல்ட் கீ+ நியூமெரிக் கீ பேடில் 0150 என்ற எண்ணுடன் அமைக்க வேண்டும். தேவைப்பட்டால், வேர்ட் இவ்வாறு அமைக்கும் எண்ணை என் டேஷுக்குப் பின் பிரிக்கும். முன்பாகப் பிரிக்காது. அதாவது என் டேஷ் தனக்கு முன் உள்ள எண்ணோடு இணைந்தே இருக்கும்.

5. எம் டேஷ் (Em dash): இந்த டேஷ்  “m” எழுத்து அளவில் இருப்பதால், இந்த பெயர் தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவு, ஒவ்வொரு வகை எழுத்திற்கும் வித்தியாசப்படும். வழக்கமாக என் டேஷ் போல இரண்டு பங்கு அளவில் இது அமைக்கப்படும். இதனை வாக்கியங்களில் பயன்படுத்துகிறோம். வாக்கியம் ஒன்றில் ஒரு பொருள் குறித்து எழுதிய பின்னர், அடுத்து வரும் வாக்கியத்தில் முற்றிலும் மாறுபட்ட, அல்லது வேறுபாடான பொருள் இருப்பின், இந்த டேஷைப் பயன்படுத்தலாம். வேர்டில் ஹைபனைத் தொடர்ந்து இருமுறை பயன்படுத்தினால், தானாகவே எம் டேஷ் அமைக்கப்படும். நாமாக வேறு முறையில் அமைக்க வேண்டும் என விரும்பினால், கண்ட்ரோல் + ஆல்ட்+நியூமெரிக் கீ பேடில் மைனஸ் கீயினை அழுத்த வேண்டும். அல்லது மாற்றாக, ஆல்ட் கீயினை அழுத்திக் கொண்டு நியூமெரிக் கீ பேடில் 0151 அமைக்க வேண்டும். மேலே என் டேஷ் சார்ந்து குறிப்பிட்டது போல, வேர்ட் டேஷுக்கு அடுத்த இடத்தில் தான், இதில் சேர்க்கப்பட்டுள்ள சொற்களைப் பிரிக்கும். எம் டேஷ் எப்போதும் அதற்கு முன் உள்ள சொல்லுடனேயே தங்கும்.

மேலே தரப்பட்டுள்ள டேஷ் அமைக்கும் முறைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். மாற்றி அமைத்தால், நாம் எதிர்பார்க்கும் விளைவுகளுக்குப் பதிலாக, வேறு விளைவுகள் ஏற்படலாம்.

இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள்

இதய நலம் பற்றிப் பேசும்போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
நமது உடல் நலமும், மனநலமும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவின் தன்மை மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை அமைந்துள்ளது. எனவேதான் ஆங்கிலத்தில் You are what you eat என்று சொல்வார்கள். அதாவது நீ சாப்பிடும் உணவின் தன்மைத்தான் நீ யார் என்று தீர்மானிக்கிறது என்று பொருள்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைச் சர்க்கரைப் பொருள்கள் புரதம், கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புகள் என பலவகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இனி விளக்கமாகப் பார்க்கலாம்.
கொழுப்புச் சத்து
கொழுப்புச் சத்து என்பது நீரில் கரையும் இயல்புடையது. அதே சமயம் ஆல்கஹால், ஈதல் போன்றவற்றிலும் கரையக் கூடியது.
கொழுப்புச் சத்துகள்தான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. எனவேதான் கொழுப்புச் சத்தை ஆற்றலின் பெட்டகம் (Store house of energy)  என்று சொல்கிறார்கள். ஒரு கிராம் கொழுப்புச் சத்தானது 9 கலோரிகள் வெப்ப ஆற்றலைத் தருகிறது.
நமது ஒரு நாளைக்கான கொழுப்புச் சத்து தேவையானது நம் வயது, உடல் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தினசரி ஒரு தனி மனிதனுக்கான மொத்தக் கலோரிகள் தேவையில் 10 முதல் 15 சதவீதம், கொழுப்புச் சத்துகளில் இருந்து கிடைக்க வேண்டும். தனி மனிதனின் அன்றாட உணவில் கொலஸ்ட்ராலின் அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாகக் கொழுப்புப் பொருள்களை நம் அன்றாட உணவில் சேர்ப்பதால் நமது இதயம் பாதிக்கப்படுவது பற்றியும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாவது பற்றியும் ஏற்கெனவே பார்த்தோம். ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவங்கள் சேர்வதன் மூலமாக மூளைக்குப் போகும் ரத்தத்தின் அளவு குறைந்து ஸ்ட்ரோக் (Stroke) போன்ற ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
கொழுப்பு வகை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது மூன்று அம்சங்களைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த வகையான கொழுப்பு முதலில் தேவைதானா என்பதை யோசிக்க வேண்டும். நாம் சாப்பிடப்போகும் கொழுப்பின் தன்மையைப் பார்க்க வேண்டும். இறுதியாகக நாம் சாப்பிடப் போகும் கொழுப்பின் அளவை கவனிக்க வேண்டும்.
தினசரி உணவில் கொழுப்பு வகை உணவுகளைச் சேர்க்கும்போது, செறிவற்ற கொழுப்பையும், செறிவுற்ற கொழுப்பையும் 2: 1 பங்கு என்ற விகிதத்தில் பயன்படுத்துவது நல்லது.
அன்றாட உணவில் செறிவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், வனஸ்பதி, பாமாயில், முட்டை மஞ்சள் கரு, பால், பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது உங்கள் இதய நலனைப் பாதிக்காத வகையில் மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.

வனஸ்பதி
தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் அணுக்களைச் செயற்கையாகச் செலுத்தி, அவற்றைச் செயற்கையாக உறையவைத்து உருவாக்கப்படும் கெட்டியான எண்ணெய் வகைதான் வனஸ்பதி. இவ்வாறு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் Trans fat எனப்படும். நம் நாட்டில் இதன் விலை குறைவாக இருப்பதால் சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வனஸ்பதியை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
அண்மையில், வனஸ்பதிக்கும், இதய நோய்க்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்த உணவியல் வல்லுநர்களும், இதய மருத்துவர்களும், செறிவுற்ற கொழுப்பைவிட மிக அதிக அளவில் இதயத் தமனிகளைச் சிதைக்கும் ஆற்றல் வனஸ்பதிக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர்.
எனவே உலகெங்கும் வனஸ்பதியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்க ஒரு இயக்கத்தையே தொடங்கியுள்ளார்கள். இதய நலத்தைக் காக்க விரும்புபவர்களும், ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களும், அன்றாட உணவில் டிரான்ஸ் கொழுப்பு வகையில் வருகிற வனஸ்பதியைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது இதயத்தக்கு நல்லது.

`உன்னைவிட உன் தங்கச்சி அழகு..’ மனைவியிடம் இப்படி சொல்லலாமா?

வார்த்தைகளால் ஒருவரை மகிழ்ச்சிபடுத்தவோ, வருத்தபடுத்தவோ முடியும். ஓர் உறவை மலரச் செய்யவோ, கருகச் செய்யவோ இயலும். `ஆண்களும் தன்மையான வார்த்தைகளும்’ என்பது அபூர்வமான கூட்டணி. அதிலும் கணவன்மார்கள் மனைவியிடம் சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டால் சிக்கல்தான்.

எனவே, கணவன்மார்களுக்கு உதவும் விதமாக, அவர்கள் மனைவியிடம் கூறக் கூடாத வார்த்தைகள் இங்கே…

`உன்னோட ரசனை மகா மட்டம்’

`எப்படித்தான் இப்படி ஒரு ரசனையை வளர்த்துக்கிட்டியோ?’ என்று ஒருபோதும் கூறாதீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் அப்படிச் சொல்லும்போது லேசாக முகம் சுளிப்பவர், பின்னர் `பளீரென்று’ திருப்பி அடிக்கத் தொடங்குவார். மனைவி `சீரியல்’ பார்பது பிடிக்கவில்லையா? சத்தமில்லாமல் அடுத்த அறைக்கு நகர்ந்து விடுங்கள்.

` ரொம்ப குண்டாஆயிட்டே’

எந்த பெண்ணும் தான் குண்டாகி விட்டதா கக் கூறப்படுவதை விரும்ப மாட்டார். மனைவி உடம்பு குண்டாகிக் கொண்டிருந்தாலும் அதை `ஒல்லியாகக் காண வேண்டியது’ உங்கள் பொறுப்பு.

`உனக்கு சமைக்கவே தெரியல’

உங்கள் அம்மாவின் கைபக்குவமே தனிதான். அவர் சாதாரணமாக புளி காய்ச்சினாலும் ஊரையே வாசனை தூக்கும்தான். ஆனால் உங்கள் இல்லத்தரசியின் சமையலைத்தான் இனி ஆயூசுக்கும் சாப்பிட்டாக வேண்டும். எனவே பாராட்டாவிட்டாலும், குறை சொல்லாமல் இருப்பது உத்தமம்.

`உங்க குடும்பத்தில எல்லாருமே இப்படித்தானா?’

நாசுக்காக அதிருப்தியை வெளிபடுத்தும் மாமனார், மாமியார், நீங்கள் அணிகிற ஆடை முதற்கொண்டு உரிமையோடு எடுத்து பயன்படுத்துகிற மைத்துனன் என்று உங்களின் மனைவி வீட்டார் ஓர் இனிய (?) இம்சை. அதற்காக, `உங்க வீட்டுல எல்லாருமே இப்படித்தானா?’ என்றோ, `உங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாருமே `வித்தியாசமா’ இருக் கீங்களே!’ என்றோ கடுப்பாய் `கமெண்ட்’ அடிக்காதீர்கள்.

`உன்னை விட உன் தங்கச்சி…’

`உன்னைவிட உன் தங்கச்சி அழகு, புத்திசாலித்தனம் எல்லாத்திலயும் ஒரு படி மேலே…’ என்று சொல்லித் தொலைக்காதீர்கள். (ஜாலியாக பேசுகிற பாணியில் `உண்மையை’க் கூற நினைத்தாலும்!) சில ஆசைகளை மனசுக்குள்ளே போட்டு பூட்டிக்கொள்வது, குடும்பத்தில் கலவரம் வெடிக்காமல் இருக்க உதவும்.

` எங்க அம்மா மாதிரியே இருக்கே’

பாராட்டுவதாக நனைத்துக் கொண்டு கூட, ` எங்க அம்மா மாதிரியே இருக்கே’ என்று கூறிவிடாதீர்கள். அது சுயமாக சூனியம் வைத்துக்கொள்வது மாதிரி. போயும் போயும் `மாமியாருடனா’ ஒப்பிடுவது?

`அச்சு அசலாக அவளை மாதிரியே …’

என்னதான் நீங்கள் உங்கள் பழைய காதலியை (இருந்தால்!) பற்றி பக்குவமாக மறைத்துவந்தாலும், `அவளை பற்றிக் கூறு… கூறு…’ என்று உள்ளுக்குள் இருந்து ஒரு சாத்தான் கூக்குரலிட்டுக்கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு பலவீனமான தருணத்தில், `நீ அப்படியே அந்த சுதா மாதிரியே இருக்கே…’ என்று உளறிவிட்டால்,
கண்ணிவெடி பரப்புக்குள் கால் வைத்தவன் கதைதான்.