Daily Archives: ஜூலை 3rd, 2010

பெற்றோருக்கு பக்குவமான 10 டிப்ஸ்

எல்லாக் குழந்தையும் நல்ல குழந்தைதான்…

விரல் சப்புவது என்பது குழந்தைகளின் தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது. அப்படி விரல் சப்பினால் குழந்தையின் பல் உயர்ந்துவிடும் என்று பயப்படும் பெற்றோர், அக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

சமீபத்தில் நடத்தபட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து இழுத்துவிடுவதாக கூறினார்கள். அதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர், குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில் கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். 9.6 சதவீதம் பேர் விரல் சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிபிட்டுள்ளனர்.

மீதமுள்ள 13.3 சதவீதம் பேர்தான், விரல் சப்புவது குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.

ஒரு குழந்தையிடம் விரல் சப்பும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், படிபடியாக அதில் இருந்து அதை விடுபட வைத்துவிடலாம். அதுவரை பெற்றோர்தான் கம்பை தூக்காமல் இருக்க வேண்டும், குழந்தையை அடிக்க!

பொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் முளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுபுது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை சரியாக ஹேண்டில் செய்வது அவசியமாகிறது.
பெற்றோருக்கு பக்குவமான 10 டிப்ஸ் :

1. ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கிக்கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிபட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.

2. அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக `மெய்ன்டெய்ன்’ செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.

3. முன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.

4. அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. `பாக்கெட் மணி’ கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.

5. குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.

6. குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் `வாக்கிங்’ அழைத்துச் செல்வதும் அவசியம்.

7. குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, `இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்’ என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதைம் `டேக் இட் ஈஸி’யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

8. பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு? – இந்த முன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

9. குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.

10. கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயபடுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.

மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு – இந்த முன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான்!

விபத்துகள் அதிகரிப்பு: பயணத்துக்கே பயம்…!

கவலையின்றி விமானத்தில் பறந்ததெல்லாம் பழைய காலமாகி விடுமோ என்று தோன்றுகிறது. விமான விபத்துகள், விபத் திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது குறித்து வரும் செய்திகள் அடிக்கடி பறப்பவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.

உலகெங்கும் விமான போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், விபத்துகளின் எணிக்கையும் அதிகரிக்குமா?

தற்போதையை நிலை பற்றி மனோதத்துவ நிபுணர் அஞ்சலி கூறுகையில், “ஏற்கனவே விமானத்தில் பறப்பதற்கு பயம் (`பிளையிங் போபியா’) உள்ளவர்களுக்கு அது மேலும் மோசமாகும். முன்பு எந்தக் கவலைமின்றி பயணம் செய்தவர்களும் கூட தற்போது சிந்திக்கத் தொடங்குவார்கள். சமீபத்திய விமான, ரெயில் விபத்துகளுக்கு பிறகு, இனியும் தாங்கள் வயதாகித்தான் இறப்போம் என்று சொல்ல முடியாது, பயணத்தின்போது `முடிவு’ தேடி வரலாம் என்று மக்கள் நினைக்கத் தொடங்கியிருப்பார்கள்” என்கிறார்.

இது ஏதோ அஞ்சலி மிகைபடுத்திக்கூறும் விஷயமில்லை என்பது, அவர் அடுத்துச் சொல்வதை படித்தால் புரியும்-

“ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி என்னிடம் வந்து, `எனது தொழில் பாதித்தாலும் பரவாயில்லை, இனி நான் விமான பயணம் செய்யவே மாட்டேன்’ என்றார். விமான நிலையம் வரை போய்விட்டு விமானத்தில் ஏறாமல் திரும்பி வந்தவர்களையும் நான் அறிவேன்!”

இதற்கெல்லாம் அந்த மனோதத்துவ நிபுணர் கூறும் தீர்வு-

“விமானத்தில் பயணம் செய்வோர், விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்ததும் அமைதியாக பிரார்த்தனை செய்யுங்கள், கொஞ்சம் குளிர்பானம் பருகுங்கள், கண்களை முடி உங்கள் முச்சில் கவனம் செலுத்துங்கள், ஒரு மிட்டாயை மெல்லுங்கள்… இவை எல்லாமே பலன் தரும்!”

நீண்டதூர பயணத்தின்போது ஏதாவது ஒன்றில் கவனத்தைத் திருப்பிவிட்டால் பிரச்சினை இல்லை என்கிறார் கொய்னா மித்ரா.

“நான் எப்போதும் எனது `ஐ-பாடை’ எடுத்துச் செல்வேன். படம் பார்பேன் அல்லது படிப்பேன். இபடி மனதை எதிலாவது செலுத்துவேன். இசையும் எனக்குக் கை கொடுக்கும். பயணத்தின்போது எந்த மாதிரியான பாடல்களைக் கேட்பது என்று நான் ஒரு பட்டியலே வைத்திருக்கிறேன். அதில் இதமான ஆங்கில பாடல்கள் முதல் துள்ளல் இசை பாடல்கள் வரை அடங்கும்” என்று கூறுகிறார் கொய்னா.

மற்றொரு நடிகையான கிம் சர்மா, விமான பயணத்தின்போது கட்டாயம் புத்தகத்தை எடுத்துச் செல்வேன் என்கிறார்.

“நான் அதிலேயே முழ்கி போய்விடுவேன். விமானம் `டேக் ஆப்’ ஆகும் ஏற்படும் பயத்தைத் தவிர்க்க நான் `சுடோகு’ புதிரில் ஆழ்ந்துவிடுவேன்” என்று புன்னகைக்கிறார் கிம் சர்மா.

பில்லியர்ட்ஸ் சாம்பியன் பங்கஜ் அத்வானி, “நான் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதால் நிறைய விமான பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே நான் விமானத்தில் தூங்க பழகிக் கொண்டேன். காரணம் போட்டியின்போது `பிரெஷ்’சாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். நீண்டதூர பயணம் என்றால் `லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருக்கும் பாடல்கள் எனக்கு பயண கஷ்டத்தைத் தெரியாமல் வைத்திருக்கும்” என்று தனது சமாளிப்பு விதம் பற்றிக் கூறுகிறார்.

கம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்

நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator) என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம். http://www.montpellierinformatique.com/predator/en/index.php?n=Main. DownloadFree என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பிரிடேட்டர் புரோகிராமின் ஸிப் பைலை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் இதனை விரித்து, உங்கள் சி ட்ரைவில் இதனைப் பதிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.பி. ட்ரைவில் இதனைப் பதிய வேண்டாம். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான்.

இனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும்.

கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்து செல்லலாமே என நாம் நினைக்கலாம். விண்டோஸ் கீ + எல் கீயை அழுத்தினால், லாக் செய்திடலாமே என்ற எண்ணம் ஓடலாம். இதனையும் பயன்படுத்தலாம். இங்கு நீங்கள் மீண்டும் இயக்க பாஸ்வேர்டினை டைப் செய்திட வேண்டும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், தொல்லைதான். ஆனால் பிரிடேட்டர் ஒரு சாவி போலவே செயல்படுகிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கினை கம்ப்யூட்டர் வீட்டின் சாவி போலப் பயன்படுத்தலாம்.