Daily Archives: ஜூலை 8th, 2010

வீடியோ பார்மட்கள்

உங்களிடன் ஒரு எம்பி3 ஆடியோ பைல் இருந்தால், அநேகமாக அனைத்து ஆடியோ  பிளேயரும் அதனை இயக்கும். அதே போல ஜேபெக் வடிவில் உள்ள பட பைலை எந்த பிக்சர் வியூவர் பைலும் இயக்கிக் காட்டும்.
ஆனால் . avi, .mpeg, , போன்ற வீடியோ பைல் இருந்தால், அனைத்து வீடியோ பிளேயரும் அவற்றை இயக்கும் என்று உறுதியாகக் கூற இயலாது. இன்னும் சொல்லப் போனால், இவை எல்லாம் வீடியோ பார்மட் இல்லை. டேட்டாவினை மற்ற பார்மட்களில் கொண்டுள்ளன என்று சொல்லலாம். இந்த பைல் வகைகள் எல்லாம், ஆடியோவினை ஒரு பார்மட்டிலும், வீடியோவினை இன்னொரு பார்மட்டிலும் (கோடெக்) கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, ஒரு ஏ.வி.ஐ.பைல்  (.avi),), மோஷன் ஜேபெக் வீடியோ  மற்றும் பி.சி.எம்.  டியோ பார்மட்களைக் கொண்டிருக்கலாம். இன்னொரு பைலில் எக்ஸ்விட் எம்பெக் 4 வீடியோ பார்மட்டும்  IMAADPCM பார்மட்டில் ஆடியோவும் இருக்கலாம். வேடிக்கையாக ருக்கிறதா? மேலும் படியுங்கள்.
இதனால் தான் ஒரு .avi பைல், விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கப்படலாம். இன்னொரு பிளேயர், பைலில் உள்ள ஆடியோவினை மட்டும் இயக்கும்; வீடியோ கிடைக்காது; அல்லது மாற்றாகவும் இருக்கலாம். சில பிளேயர்  ஒரு பைலில் உள்ள எதனையும் இயக்காமல் இருக்கலாம்.
ஒரு வீடியோ பைல் எந்த வகை கோடெக் பார்மட்டினைக் கொண்டுள்ளது என்பதனை எப்படி அறிவது? வெளிப்படையான ஒரு வழி உள்ளது. பைலின் மேலாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து, கிடைக்கும் விண்டோவில் டீடெய்ல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுத்து பார்ப்பது. இங்கே, வீடியோவின் நீளம், ரெசல்யூசன், வீடியோ மற்றும் ஆடியோ பிட் ரேட் ஆகிய தகவல் கிடைக்கும். ஆனால் மிக முக்கியமான கோடெக் குறித்த தகவல் இருக்காது அல்லது கிடைக்காது. இந்த தகவல் தானே, ஒரு வீடியோ பிளேயரை இயக்க தேவையானது. பின் ஏன் மைக்ரோசாப்ட் சிஸ்டம் அதனைக் காட்ட மறுக்கிறது? கண்ணா மூச்சி விளையாட்டு ஏன்?
எப்படியோ? விண்டோஸ் வீடியோ பைலுக்கான கோடெக் குறித்து வாய் திறக்க மறுக்கிறது என்பதால், நமக்கு இதனை அறிய ஒரு தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவையாய் உள்ளது.  நான் அறிந்த வகையில் ஒரு சிறந்த புரோகிராம் AVI Codec என்பதாகும். இது மிக எளிமையானது மட்டுமின்றி இலவசமானதும் கூட. இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்த பின்னர், எந்த பார்மட்டில் உள்ள வீடியோ பைலிலும், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று,   அதன் மீது ரைட் கிளிக் செய்து AVIcodec: detailed informationஎன்பதனைத் தேர்ந்தெடுத்து, அதனை புரோகி ராமிற்குள் லோட் செய்திடும்படி செய்திடலாம். ஏற்கனவே ஏதேனும் கோடெக் புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தால், இது பலனளிக்காது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட பைலை, புரோகிராமிற்குள் ட்ராப் செய்து கொண்டு வரலாம்.
இவற்றையும் மீறி கூடுதல் கோடெக் பைல் தேவை எனில்,  , WindowS Essentials Codec Pack தொகுப்பினை டவுண்லோட் செய்திட வேண்டும்.

அழகு குறிப்புகள்

கோடைக் காலம் முடிந்துவிட்டது.  ஆனால் வெயிலின் கோரப் பிடி இன்னும் குறையவில்லை,  வரும் காலத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.  இதனால் சருமம் வறட்சி காணும்.  இக்காலங்களில் தலையில்  எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும்.  வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

முகக்கறுப்பு மாற

பாதாம் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு விட்டு குழைத்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி இவற்றை நிழலில் உலர்த்தி தனித்தனியாக பொடியாக்கி அதில் சம அளவு எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகக்கறுப்பு மாறும்.

பப்பாளி பழச்சாறு எடுத்து அதை காய்ச்சாத பசும் பால் விட்டு அல்லது தயிர் விட்டு  குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள முகச் சுருக்கம், கருமை நீங்கும்.

நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் சிறிதளவு மைதா மாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் கருமை மாறி பளபளப்பாக இருக்கும்.

முகப்பரு மாற

புதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மாறுவதுடன்  முகம் பளபளக்கும்.

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சிவப்பு சந்தனக் கட்டையை நீரில் உரைத்து  முகத்தில் பூசி காலையில் கழுவி வர முகப்பரு, பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், தழும்புகள் மாறும்.

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் புதினா சாறு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒற்றடம் கொடுத்தால் முகம் பளபளக்கும்.

சருமம் மெருகேற

வறட்சியான சருமம் கொண்ட பெண்கள் தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் கலந்து அதில் பயிற்றம் மாவு சேர்த்து சருமம் எங்கும் பூசி 20 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் குளித்து வந்தால் சரும வறட்சி நீங்கி சருமம் மெருகேறும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடித்து அதில் பால் சேர்த்து நன்கு குழைத்து மேனி எங்கும் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் சருமம் பளபளக்கும்.

முகச் சுருக்கம் நீங்க

பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகச் சுருக்கம் நீங்கும்.

கணையம்

மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாதது.

இந்த இதழில் கணையம் (Pancreas)  எவ்வாறு இன்றியமையாதது என்பதைப் பார்ப்போம்.

ஜீரண உறுப்புகளில் கணையம் முக்கிய இடத்தைப் பெறுகிறது.  கணையம் என்பது கல்லீரல் போல ஒரு சுரப்பி.  கணையம் என்ஸைம்களையும் ஹார்மோன்களையும் ஒருங்கே தயாரிக்கக்கூடிய ஒரு சகலகலா வல்ல சுரப்பி.

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் என்னும் திரவத்தை சுரந்து நம்மைக் காக்கும் ஒரு சுரப்பிதான் (gland) கணையம்.

கணையம் இருக்கும் இடம்

கணையம் வயிற்றுப் பகுதியில் (abdomen) கல்லீரலுக்கு சற்று கீழே, முதுகுப் பக்கத்தோடு ஒட்டியதுபோல் இருக்கிறது.  12-15 செ.மீ. நீளத்துக்குக் குறுக்காக படுக்கைவாட்டில் இருக்கிறது.  இதனுடைய சராசரி எடை 85 கிராம்.

கணையத்தில் உள்ள இருவகையான சுரப்பிகள்

1. எக்ஸோக்ரைன் சுரப்பி (நாளச் சுரப்பிகள்)

-இவை என்ஸைம்களை சுரக்கக்கூடியவை

2. எண்டோக்ரைன் சுரப்பி (நாளமில்லா சுப்பிகள்)

–  இவை ஹார்மோன்களை சுரக்கக்கூடியவை.

கணையத்தின் செயல்பாடு

கணையத்துக்குள் நிறைய சின்னச்சின்ன பகுதிகள் இருக்கின்றன.  அவற்றுக்கு அல்வியோலை (alveoli) என்று பெயர்.  ஒவ்வொன்றும் நிறைய அணுக்களைக் கொண்டது.  இவைகளே பான்கிரியாடிக் அணுக்கள்.  இவை ஒவ்வொன்றிலிருந்தும் சுரக்கப்படும் திரவம் சிறு குழாய்கள் பலவற்றின் மூலம் பான்கிரியாடிக் நாளத்தை வந்தடைகிறது.  இந்த பான்கிரியாடிக் நாளம்தான் சிறுகுடலான டியோடினத்திற்குள் நுழைகிறது.  அங்கு ஏற்கனவே வந்து சேர்ந்துள்ள பித்த நாளத்துடன் இணைந்து குடல் பகுதியில் அணுக்களில் இருந்து சுரக்கப்படும் திரவத்தை விடுகிறது.  இந்த திரவத்திற்கு ‘பான்கிரியாடிக் ஜுஸ்’ என்று பெயர்.

இதில்

மால்டேஸ் (Maltase)

– மாவுச்சத்தை செரிக்கும் என்ஸைம்,

ட்ரிப்ஸின் (Trypsin)

-புரதச்சத்தை செரிக்கும் என்ஸைம்

லைப்பேஸ்  (Lipase)

– கொழுப்புச் சத்தை செரிக்கும் என்ஸைம்கள் உள்ளன.

நாம் சாப்பிடும் உணவில் உள்ள முக்கியமான பொருட்கள்

புரதம், கொழுப்பு, மாவுப்பொருள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நீர்.  இவற்றில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், நீர் ஆகியவை நேரடியாக உடலுக்குள் உறிஞ்சப்பட்டு விடும்.  ஆனால் மற்ற உணவுப் பொருட்கள் வாயினுள் போடப்பட்டு உடனே நன்கு அரைக்கப்பட்டு உணவுக் குழாய் வழியாக இரைப்பை (stomach) மற்றும் சிறுகுடலுக்கு செல்கிறது.  வாயிலேயே உமிழ் நீரிலுள்ள என்ஸைம்களால் புரதம், கொழுப்பு, மாவுப் பொருட்கள் சிறிதளவு ஜீரணம் ஆகிறது.  பின் இரைப்பையில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மூலம் உணவு கூழ் பக்குவமடைகிறது.  பின்  பித்த நீரினால் கொழுப்புப் பொருள் பக்குவமடைகிறது.  இதன் பிறகும் உணவில் உள்ள பலவித பொருட்கள் ஜீரணிக்கப்பட வேண்டும்.  இந்த நிகழ்வு தான் பான்கிரியாடிக் என்ஸைம்களால் நடைபெறுகிறது.  பின் இவை சிறுகுடலுக்கு தள்ளப்பட்டு அங்கு அனைத்து என்ஸைம்களும் சேர்ந்து உணவை செரிக்கச் செய்து பின் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது.  நல்ல ஜீரணத்திற்கு பான்கிரியாடிக் என்ஸைம்கள் மிகவும் தேவைப் படுகின்றன.

கணையத்தின் சிறு பகுதிகள் தான் அல்வியோலை.  இவற்றுக்கு நடுவே சின்னச்சின்ன திட்டுகளாக சில அணுக்கள் உள்ளன.  அல்வியோலைகளுக்கு நடுவே சிறு சிறு தீவுகளைப் போல இந்த அணுக்கள் காட்சி அளிப்பதால் இதற்கு கணையத் தீவுகள் (pancreatic islets) என்று பெயர்.  1869ம் ஆண்டு லாங்கர்ஹான்ஸ் என்பவர் தான் கணையத்தில் உள்ள இந்த தீவு அணுக்களைப் பற்றி விளக்கமளித்தார்.

அதனாலேயே இவைகளை லாங்கர்ஹான்ஸ் தீவுகள் என்று அழைக்கிறோம்.  இவற்றில் உள்ள அணுக்கள் இரண்டு விதமானவை.

1. ஆல்ஃபா  உயிர் அணுக்கள் (alpha cells)

2. பீட்டா உயிர் அணுக்கள் (Beta cells)

ஆல்பா  உயிர் அணுக்கள் குளுக்ககான்

(glucagon) என்னும் ஹார்மோனை சுரக்கிறது.  இது இன்சுலினுக்கு நேர் எதிரான செயல்பாடு கொண்ட ஒரு ஹார்மோன்.

பீட்டா உயிர்  அணுக்கள் இன்சுலினைச் சுரக்கின்றன.  இன்சுலின் தான் ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தி சரியான விகிதத்தில் வைத்திருக்கும்.  இன்சுலின் குறைந்தால் ரத்த குளுக்கோஸ் அளவு ஏறும்.  இதைத்தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை வியாதி என்கிறோம்.
இன்சுலின் செயல்பாடு

பீட்டா  உயிர்  அணுக்களால் சுரக்கப்படும் இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களிலும் பயன்படுத்த வைக்கிறது.  இந்த உயிர் அணுக்களால் சுரக்கப்படும் இன்சுலின் அளவு குறைவதாலும், அல்லது பான்கிரியாடைட்டிஸ் அதாவது பான்கிரியாட் அழற்சி ஏற்படுவதாலும், அதிக பருமன் உள்ளவர்களுக்கும் மேற்கூறப்பட்ட இன்சுலின் செயல்பாடு சீராக இருக்காது.  அதனாலேயே நீரிழிவு நோய் அவர்களை ஆட்கொள்ளும்.  இது நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

சமச்சீரான உணவுகளை சரியான நேரத்தில் உண்பது, எடை அதிகம் கொண்டவர்கள் எடையைக் குறைப்பது போன்றவைகளை பின்பற்றினால் மட்டுமே நீரிழிவு என்ற நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

கணையம் மிகவும் மிருதுவான ஒரு உறுப்பு.  தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு கணையம் பாதிக்கக்கூடும்.  அக்கியூட் பான்கிரியாடைட்டிஸ் (Acute pancreatitis) என்பது மது அருந்துபவர்களுக்கு வரக்கூடிய நோய்.   சில சமயங்களில் அழற்சியினாலும் இது வரலாம்.  ஆனால் இந்த நோயினால் உடனடி மரணம் ஏற்படும் அபாயம் உண்டு.  அதனால் உங்கள் கணையத்தைப் பாதுகாக்க மது அருந்துவதைத் தவிருங்கள்.  மற்ற கண்ட கண்ட எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிடுவதைத் தவிருங்கள்.

“என்னை போல் 1,000 மகன்கள்’ : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்

“நான் தூரத்தில் இருக்கிறேன் என்று நினைக்காதே. என்னை போல் இந்த பூமியில் 1,000 மகன்கள் வீரத்தாயான உனக்கு இருக்கின்றனர்’ என்று கடைசியாக பேசியிருக்கிறார், நக்சல் தாக்குதலில் பலியான துணை தளபதி ஒருவர்.

சமீபத்தில், சத்திஸ்கர் மாநிலம் நாராயண்பூரில், நக்சல்கள் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்திய தாக்குதலின் போது 26 பேர் பலியாயினர். அவர்களில் துணை தளபதி ஜதின் குலாதி (27) என்பவரும் உண்டு. சம்பவம் நடப்பதற்கு இரு நாட்கள் முன்பு, தன் தாயார் உமா குலாதியிடம் போனில் பேசியிருக்கிறார் ஜதின். அசாம் மாநிலம் சில்சாரில் 42 நாட்கள் பயிற்சி முடித்து சத்திஸ்கருக்கு அப்போது தான் வந்திருக்கிறார். உமா குலாதி கூறியதாவது: டேராடூனில் படித்து கொண்டிருக்கும் போதே, பாதுகாப்பு படை வீரனாக வர வேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். “ஒரு நாள் நான் ராணுவ வீரனாவேன். நீயும் அப்பாவும் பெருமைப்படும்படியாக செயலாற்றுவேன்’ என்பான். இப்போது அவனை பற்றி பெருமைப்படுகிறோம். ஆனால் அவனை இழந்து விட்டோம். நாராயண்பூருக்கு வந்தவுடன் போனில் என்னை கூப்பிட்டான். உற்சாகமாக குரல் எழுப்பினான். நக்சலைட்களுக்கு எதிரான போரில் சேர்ந்ததற்காக மகிழ்ச்சியடைவதாக சொன்னான். அவனுக்கு பயமே கிடையாது. அவனது வீரமும், உறுதியும் தான் அவனை இந்த வேலையை தேர்ந்தெடுக்க வைத்தன. அவனது அதிகாரிகள் வீரத்துடன் போரிட்டு, நக்சலைட்டுகளுக்கு சரியான பதிலடி கொடுத்தான். இவ்வாறு உமா தெரிவித்தார்.

விமானத்தில் மகப்பேறு : குழந்தையை கழிப்பறையில் தவிக்க விட்ட மருத்துவ மாணவி

துர்க்மேனிஸ்தான் நாட்டில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவி, அங்கிருந்து இந்தியா திரும்பும் வழியில் விமானத்திலேயே குழந்தையை பெற்றெடுத்து, அந்தக் குழந்தையை கழிப்பறையில் மறைத்து வைத்து விட்டு விமானத்தில் இருந்து இறங்கிச் சென்றார். அவரை போலீசார் கைது செய்தனர். துர்க்மேனிஸ்தான் நாட்டில் மருத்துவம் பயின்று வருகிறார் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமன்தீப் கவுர் மான். இவர் துர்க்மேனிஸ்தானில் இருந்து விமானத்தில் பஞ்சாபுக்கு வந்தார். விமானத்தின் கழிப்பறைக்குச் சென்று அங்கு குழந்தையை ஈன்றெடுத்த அமன்தீப், குழந்தையை அங்கு மறைத்து வைத்து விட்டு , சக பயணிகளுடன் வந்து விமானத்தில் அமர்ந்து கொண்டார். பின்னர் அடிக்கடி கழிப்பறைக்குச் சென்று திரும்பினார் அமன்தீப். சக பயணிகள் சிலர் அமன்தீப்புக்கு ஏதும் உதவி‌ வேண்டுமா என்று கூட விசாரித்துள்ளனர். விமானம் ராஜாசான்சி விமான நிலையத்தை அடைந்ததும் அமன்தீப் அவசராமக வெளியேற முயன்றார். விமானத்தில் குழந்தை இருந்ததை பார்த்த சிப்பந்திகள் உடனடியாக ஏர்போர்ட் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மற்ற பயணிகள் அமன்தீ்ப குறித்து சந்தேகத்தை கிளப்பியதால், போலீசார் அவரை கைது செய்தனர். முதலில் உண்மையை ஒப்புக் கொள்ள மறுத்து அமன்தீப் பின்னர் கண்ணீர் மல்க அது தனது குழந்தை தான் என ஒப்புக் கொண்டார். இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ மாணவி விமானத்திலேயே குழந்தையை பெற்று அதை மறைக்க முயன்ற சம்பவம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில சாஃப்ட்வேர் ரகசியங்கள்

உங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பல சாப்ட்வேர் தொகுப்புகளில், பல சொல்லப்படாத சுருக்கு வழிகள் தரப்பட்டுள்ளன. அது பிரவுசராக இருந்தாலும், அப்ளிகேஷன் தொகுப்புகளாக இருந்தாலும், அவற்றில் நாம் அறியாத, அடிக்கடி பயன்படுத்தாத, பல வழிகள் மறைந்துள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவது நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அதிகமாக்கும்.

விண்டோஸ் கீ: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் அதி வேகத்தில் இயங்கினாலும், சில கீகளைப் பயன்படுத்தி, இன்னும் அதனைக் கூடுதல் வேகத்தில் இயக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பயன்படுத்தி, செயல்பாடுகளை மேற்கொண்டு பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.
சிஸ்டம் தகவல்கள் அறிய: உங்களுடைய சிஸ்டம் குறித்த தகவல்களை உடனே அறிய, Windows மற்றும் Pause கீகளை அழுத்துங்கள். உடன் சிஸ்டம் குறித்த சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்.


டாஸ்க்பார் அப்ளிகேஷன்ஸ்: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும்  அப்ளி கேஷன் தொகுப்புகளை, டாஸ்க்பாரில் போட்டு வைக்கவும். இதனால் ஒரு மவுஸ் கிளிக்கிலேயே, அப்ளிகேஷன்களை இயக்க நிலையில் பெறலாம். இதனால் பல மவுஸ் கிளிக்குகள் மிச்சமாகும். டாஸ்க் பாரில் போட்டு வைத்த பின், விண்டோஸ் கீயுடன் ஏதேனும் ஒரு எண்ணுக்கான கீயினை இணைத்து அழுத்தவும். இப்போது, டாஸ்க் பாரில் அந்த எண்ணுக்குரிய இடத்தில் எந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அந்த புரோகிராம் இயக்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.  ஒரு புரஜக்டரை இணைக்கும் போதோ, அல்லது உங்களுடைய லேப்டாப் கம்ப்யூட்டரை, வெளியே உள்ள ஒரு டிஸ்பிளே சாதனத்துடன் இணைத்துக் காட்டவிரும்பும்போதோ, விண்டோஸ் கீயுடன் ப்பி  (Windows+P) கீகளை அழுத்தவும்.
ஏதேனும் ஒரு அப்ளிகேஷனை இயக்கநிலைக்குக் கொண்டு வர, விண்டோஸ் கீ அழுத்தி, அதில் உள்ள ரன் பாக்ஸில், அதற்கான கட்டளைப் (பெரும்பாலும் அதன் சுருக்கப்பெயர்) பெயரைத் தந்தால் போதும்.

ரன் டயலாக் பாக்ஸைப் பெற விண்டோஸ் + ஆர் கீயினை அழுத்தவும்.

தானாக அப்டேட்: விண்டோஸ் அப்டேட் வசதியைப் பயன்படுத்துகையில், அது உங்கள் கம்ப்யூட்டரை உடனடியாக ரீஸ்டார்ட் செய்திடக் கட்டாயப்படுத்தும். அப்போதுதான், அப்டேட் செய்யப்பட்ட வசதிகள், உங்களுக்குக் கிடைக்கும். அப்போது, நீங்கள் சேவ் செய்யப்படாத வேலை ஏதேனும் மேற்கொண்டிருந் தால், அது வீணாகும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, கண்ட்ரோல் பேனலில்,   Windows Update  திறக்கவும். இதில் Change Settings என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில்  Download updates but let me choose whether to install them  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டருக்குச் செல்ல, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, பின் அந்த போல்டர் இருக்கும் டைரக்டரி சென்று,  அந்த போல்டரை மவுஸால் தேடி, கிளிக் செய்து பெறுகிறீர்களா? அதற்குப் பதிலாக, விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக அந்த போல்டரைத் திறந்த நிலையில் இருந்தால், நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? அப்படியும் செட் செய்திடலாம். உங்களுடைய டாஸ்க் பாரில் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்பதில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் என்பதனத் தேர்ந்தெ டுக்கவும். இதில் உள்ள டார்கெட் பீல்டில்,  ‘%windir%\explorer.exe’என்ற இடத்தில் ஒரு ஸ்பேஸ் விட்டு பைலுக்கான பாத் அமைக்கவும். அது ‘%windir%\explorer.exe C:\Users\yourusername\  என அமையலாம். இவ்வாறு அமைத்த பின்னர், விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக நீங்கள் விரும்பும் போல்டரைத் திறந்து,நீங்கள் வேலை செய்திடத் தயாராகக் காட்டும்.

போல்டர் வியூ: எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப் படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து  Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின்  Folder and search options  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.   இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (ஈஞுஞூச்தடூt) போல்டராக அமைந்துவிடும்.
டச்பேட்: இது குறித்து சென்ற இதழில் குறிப்புகள் தரப்பட்டன. லேப்டாப் பயன்படுத்து பவர்கள், தாங்கள் கீ போர்டில் வேலை செய்திடுகையில், டச் பேடில் விரல்களோ, உள்ளங்கையோ பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறித் தொந்தரவு தரும். இதனை நீக்க டச் பிரீஸ்  (Touch Freeze)  என்ற சிறிய புரேகிர õமினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.


யு.எஸ்.பி. கார்ட் விலக்கல்: யு.எஸ்.பி. போர்ட்டில், பல சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறோம். பிளாஷ் ட்ரைவ், டேட்டா கார்ட், கேமரா போன்ற அனைத்தும் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் இன்று வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவற்றை போர்ட்டிலிருந்து, மீள விலக்கும்போது அதற்கான Safely Remove Hardwareஐகானைக் கிளிக் செய்து மெசேஜ் கிடைத்த பின்னரே எடுக்க வேண்டியுள்ளது. பொறுமை இன்றி, எடுக்கும்போது, சிஸ்டம் அந்த சாதனத்தின் ட்ரைவில் ஏதேனும் எழுதிக் கொண்டிருந்தால், பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, விரைவில் ட்ரைவ் மற்றும் பிற சாதனங்களை விலக்க ஒரு தீர்வு உள்ளது. இதற்கான செட்டிங்ஸில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.  விண்டோஸ் எக்ஸ்புளோரரில் மெமரி கார்டிற்கான ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் (Properties) ) தேர்ந்தெடுக்கவும். இப்போது காட்டப்படும் விண்டோவில் ஹார்ட்வேர்  (Hardware)  என்னும் டேப்பில் கிளிக் செய்து   இங்கு  மெமரி கார்ட் ரீடரைத் தேர்ந்தெடுக்கவும். இங்கும் உள்ள மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties)தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் பாலிசீஸ்  (Policies)டேப்பில் கிளிக் செய்திடவும். பாலிசீஸ் காட்டப்படும் முன் சேஞ்ச் செட்டிங்ஸ்  Change Settings) பட்டனைக் கிளிக் செய்திட வேண்டி இருக்கலாம். இனி உள்ள விண்டோவில்  Download updates but let me choose whether to install themஎன்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும். இனி Safely Remove Hardware உங்களுக்குத் தேவை இருக்காது.

மீண்டும் குயிக் லாஞ்ச் பார்: விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் அறிமுகப் படுத்தினாலும், பழைய சில பயனுள்ள விஷயங்களை விட்டுவிட்டது. அதில் ஒன்று குயிக் லாஞ்ச் பார். அதிர்ஷ்டவசமாக, இதனை மீண்டும் இதில் கொண்டு வருவது மிக எளிதான ஒரு வழியாக உள்ளது. டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில்  Lock the taskbar என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின் மீண்டும் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில்  New toolbarஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் %appdata%\Microsoft\Internet Explorer\Quick Launchஎன்ற பைல் பாத் என்பதற்கான இடத்தில்  டைப் செய்திடவும். பின்னர் இதில் வலது பக்கம் உள்ள அம்புக் குறி பட்டனில் கிளிக் செய்து, அந்த போல்டருக்குச் செல்லவும்.குயிக் லாஞ்ச் மீண்டும் செயல்பாட்டிற்குக் கிடைக்கும்.
“”கவனத்திற்கு”  இணையத்தில்
ஸ்பேஸ் பார்   (Spacebar) – இணைய தளத்தில் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம்
ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (ShiftSpacebar)– இணைய தளத்தில் ஒரு பக்கம் மேலாகச் செல்லலாம்.
கண்ட்ரோல் + எப்  (Ctrl+F)  : சொல்ல் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க பயன்படும் விண்டோ திறக்கப்படும்.
ஆல்ட்+என் (AltN) இணைய தளத்தில் கண்ட்ரோல் + எப் அழுத்தி சொல் தேடுகையில் அந்த சொல்லின் அடுத்த நிகழ்வினைக் காண
கண்ட்ரோல்+டி (Ctrl+D) : புக்மார்க் பக்கத்திற்குச் செல்லலாம்
கண்ட்ரோல் + ட்டி (Ctrl+T) : புதிய டேப் திறக்கப்படும்
கண்ட்ரோல் + கே (Ctrl+K): சர்ச் பாக்ஸுக்குச் செல்ல
கண்ட்ரோல் +எல்  (Ctrl+L): அட்ரஸ் பாக்ஸுக்குக் கர்சரைக் கொண்டு செல்ல
கண்ட்ரோல் + (Ctrl+ +) : டெக்ஸ்ட் அளவை அதிகரிக்க
கண்ட்ரோல் + – (Ctrl+ –): டெக்ஸ்ட் அளவினைக் குறைக்க
கண்ட்ரோல் + டபிள்யூ (Ctrl+ W)டேபினை மூட G¨ 5 (F5)  : பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மீண்டும் லோட் ஆகும்.
ஆல்ட் + ஹோம் (AltHome): ஹோம் பேஜ் செல்லலாம்.
“”கவனத்திற்கு”
குயிக் லாஞ்ச் (Quick Launch) டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன் படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.