Daily Archives: ஜூலை 11th, 2010

குரங்கு மாமிசம், இந்தோனேசியாவில் விற்பனை !மிக அரிய உயிரினமாக கருதப்படும் சிங்கவால் குரங்குகளின் (லங்கூர்) மாமிசத்தை, இந்தோனேசிய நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்தோனேசியாவில் ஜாவா தீவில் பலூரன் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் தான் இந்த அரிய வகை குரங்குகள் அதிகம் வசிக்கின்றன. மெல்ல அழிந்து வரும் இந்த குரங்குகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சிலர், இந்த குரங்குளை வேட்டையாடி பிடிக்கின்றனர். பிறகு, அதை துண்டு, துண்டாக வெட்டி, மாமிசமாக விற்கின்றனர். சமீபத்தில் இந்த குரங்கு மாமிசத்தை விற்ற சிலரைகைது செய்தனர்  இந்தோனேசிய போலீசார். அவர்களிடம் இருந்து குரங்கு மாமிச துண்டுகள், துப்பாக்கிகள், லங்கூர் குரங்குகளை கைப்பற்றினர். “ஆடு, மாடு, கோழி, பன்றி மாமிசங்களின் விலை அதிகமாக உள்ளது. எனவே, குரங்குகளை வேட்டையாடி, மாமிசமாக விற்கிறோம்; அதற்கு, நல்ல கிராக்கியும் உள்ளது!’ என்கின்றனர் பிடிபட்டவர்கள். குரங்கு மாமிசத்தில் இருந்து, “பக்சோ’ என்ற சூப் தயாரிக்கப்படுகிறது. இந்தோனேசிய மக்களின் மிகவும் விருப்பமான சூப் இதுதான். உடல் ஆரோக்கியத்திற்கும், ஆண்மைக்கும் இந்த சூப் மிகவும் நல்லது என நம்புகின்றனர். காட்டு விலங்குகளை வேட்டையாடினால், ஐந்து ஆண்டு வரை சிறைத் தண்டனை உண்டு என்கிறது இந்தோனேசிய சட்டம்; ஆனால், இந்த சட்டத்தை யாரும் மதிப்பதே இல்லை. போலீசாரும் எப்போதாவது வழக்கு போடுவதோடு சரி. எனவே, குரங்கு வேட்டை இங்கு மிக அமோகமாக உள்ளது. இப்படியே போனால், லங்கூர் குரங்குகளை மிருக காட்சி சாலையில் கூட பார்க்க முடியாது.

எலிகளை விழுங்கும் செடி கண்டுபிடிப்பு !

மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை, விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த செடியின் இலைகள், உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
செடி, கொடிகள் அடங்கிய தாவரங்கள் சுத்தமான சைவம்தான். அவைகளுக்கு உணவே, சூரிய ஒளி, தண்ணீர், உரங்கள் தான். அதுவும் வேர்கள், இலைகள் மூலம் உணவை கிரகித்துக் கொள்ளும். ஆனால், அசைவ உணவை சாப்பிடும் தாவரம் பற்றிய தகவல் இப்போது தான் வெளியே வந்துள்ளது.
பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ராபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப் பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போதுதான், இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்த போதுதான், இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இது குறித்து மெக்பெர்சன் கூறியதாவது:
இந்த கண்டுபிடிப்பு மிக, மிக முக்கியமானது. 21ம் நூற்றாண்டு வரை, இப்படி ஒரு தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான். இயற்கை உலகின் அதிசயம், அழகைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள மிகவும் பாடுபட்டவர் சர்.டேவிட் அட்டன்பரோ. எனவே, அவர் பெயரிலேயே இந்த தாவரத்தை அழைக்க முடிவு செய்துள்ளோம். இனி, இந்த தாவரம், “நேபன்தஸ் அட்டன்பரோகி’ என அழைக்கப்படும். இந்த தாவரம் சிவப்பு, பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம் வரை வளரும். விக்டோரிய மலை சரிவுகளில் பெரும் புதர்களுக்கு மத்தியில் மட்டுமே இந்த செடி வளர்கிறது.
இந்த செடியின் இலைகள் தான், அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் எலி போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது. இலையில் சுரக்கும் ஒருவித வழுவழுப்பான என்சைம்களில் இருந்து எலிகள் தப்ப முடியாது. பின்னர், அந்த என்சைம்களே எலிகளை கொன்று விடுகிறது. எலிகள் மட்டுமல்ல, பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம் கபளீகரம் செய்து விடும். தாவர இயலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது.
— இவ்வாறு மெக்பெர்சன் கூறினார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழக தாவர இயல் முன்னாள் பேராசிரியர் இவர். 2007 முதல் இந்த தாவரம் பற்றி ஆராய்ச்சிகளை மேற் கொண்டுள்ளார். தன் ஆராய்ச்சியில், மாமிச தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டுபிடித்த பின்னர், சமீபத்தில் இந்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்தார்

“வயாக்ரா தேவையில்லை’ என்கிறார் 78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா

பிரிட்டனை சேர்ந்த 78 வயது தாத்தா ஒருவர், குழந்தை பெற்றெடுத்து, இதற்கு முன்பு நிகழ்ந்த சாதனையை முறியடித்துள்ளார். “இதற்காக நான் வயாக்ரா பயன்படுத்தவில்லை’ என்று அவர் கூறுகிறார்.

பிரிட்டனை சேர்ந்தவர் ரேமண்ட் கால்வெர்ட் (78). இவருக்கும், சார்லெட் கால்வெர்ட் (25) என்ற பெண்ணுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இப்போது ரேமண்ட், பிரிட்டனின் “ஓல்டு’ அப்பா என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு, டென்னிஸ் எலாம் (76) என்பவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். சார்லெட்டின் அம்மாவுடன் 3 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பின் தான், சார்லெட்டிடம் ரேமண்ட் காதல் வயப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரேமண்ட் கூறியதாவது: உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டம் செய்தவன் நானாக தான் இருக்க முடியும். இந்த குழந்தையை திட்டமிட்டே பெற்றேன். இதற்காக நான் வயாக்ரா போன்று எதுவும் பயன்படுத்தவில்லை. சார்லெட்டை நான் முதன் முதலாக பார்த்த போது அவளுக்கு வயது 16. அவள் விடுமுறை காலங்களில் எங்கள் வீட்டுக்கு வந்து,  என்னுடனும், என் குழந்தைகளுடனும் பொழுதை கழிப்பாள். நாளாக நாளாகத்தான் எங்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது தெரிய வந்தது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். காதலிக்க ஆரம்பித்த காலத்தில், என் குழந்தைகளுக்கு தெரியாமல் நான் அவளை முத்தமிடுவேன். இவ்வாறு ரேமண்ட் கூறினார். சார்லெட் கூறுகையில், “கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதை நிறுத்தியவுடனேயே நான் கருத்தரித்து விட்டேன். ஒரு வயதானவருடன் வாழப் போகிறோமென்பது, எனக்கு சற்று ஆச்சரிய மாகத்தான் இருந்தது’ என்று தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு எஸ் – இந்தியாவுக்கு நோ சொல்லும் “டோவ்’ நிறுவனம்(போபால் விஷவாயு )

போபால் விஷவாயு வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பு தனக்கில்லை என்று கைவிரித்து விட்ட “டோவ்’ நிறுவனம், அமெரிக்காவில் அதே யூனியன் கார்பைடு நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கச் சம்மதித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் அமைத்திருந்த தொழிற்சாலையில் இருந்து கசிந்த விஷவாயுவால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்து, லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாயினர்.இந்நிலையில், 2001ல் யூனியன் கம்பெனியை அமெரிக்காவைச் சேர்ந்த “டோவ்’ நிறுவனம் வாங்கியது. போபால் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, “டோவ்’ தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை,  அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

இச்சூழலில், 1940-50ம் ஆண்டுகளில்  அமெரிக்காவில், யூனியன் கார்பைடு நிறுவனம்  தயாரித்த கல்நார் எனப்படும் “ஆஸ்பெஸ்டாஸ்’ உற்பத்தியால் அங்குள்ள மக்களுக்கு, நுரையீரல், தொண்டை, குரல்வளை புற்றுநோய்கள், நுரையீரல் சேதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாயின.கடந்த 1991ல் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி, “ஆஸ்பெஸ்டாஸ்’ பாதிப்பால், 2015 ல் இரண்டு லட்சத்து 65 ஆயிரம் பேர் உடல்நலம் பாதிக்கப்படுவர் என்று கணக்கிட்டுள்ளது.இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 75 ஆயிரத்து 30 வழக்குகள் பதிவாயின. இவற்றில், யூனியன் கார்பைடின் துணை நிறுவனமான, “ஆம்செம் பிராடக்ட்ஸ்’ நிறுவனத்துக்கு எதிரான, 24 ஆயிரத்து 146 வழக்குகளும் உண்டு. இவை போக, தனிநபர்கள் சார்பில் பதிவான 50 ஆயிரம் வழக்குகளில், 2009ல் ஒன்பதாயிரம் வழக்குகளில்  “டோவ்’ நிறுவனம் இழப்பீடு வழங்கி முடித்துள்ளது.இழப்பீட்டுக்காக  நாலாயிரம் கோடி ரூபாயை “டோவ்’ நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இதில் 23 சதவீத நிதி ஏற்கனவே நிலுவையில் இருக்கும் இழப்பீட்டு கோரிக்கைகளுக்காகவும், மீதி 77 சதவீத நிதி, எதிர்காலப் பாதுகாப்புக்கான  வைப்புநிதியாகவும் பயன்படுத்தப்படும்.இதுவரை 7,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ள “டோவ்,’ வழக்குகளுக்காக மட்டும் 3,000 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

தனது துணை நிறுவனமான யூனியன் மற்றும் ஆம்செம் நிறுவனங்களுக்கும் சேர்த்து, அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், எதிர்காலப் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கவும் முன்வந்துள்ள, “டோவ்’ நிறுவனம், இந்தியாவில் மட்டும் தன் துணை நிறுவனமான யூனியன் கார்பைடு கம்பெனிக்கான இழப்பீடு வழங்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயல்கிறது.

இதுகுறித்து போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டு வழக்குத் தொடுத்துள்ள என்.டி.ஜெய்பிரகாஷ் என்பவர் கூறுகையில்,”1992ல் யூனியன் கார்பைடு நிறுவனம் தலைமறைவாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் மீது மத்திய அரசால் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. எல்லா குற்றவியல் வழக்குகளையும் போல இவ்வழக்கிலும் யூனியன் கம்பெனியை வாங்கிய “டோவ்’ நிறுவனத்துக்குத்தான் யூனியன் கம்பெனியின் இழப்பீடு வழங்குவது உட்பட அத்தனைப் பொறுப்புகளும் சேரும்’ என்று தெரிவித்தார்.

முகச் சுருக்கம் நீங்க

முகச் சுருக்கம் நீங்க காரட் உதவுகிறது. முதலில் ஆலிவ் எண்ணெயினால் முகத்தை மஸாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தைக் கழுவாமல் ஒரு காரட் சாற்றுடன் கடலைமாவு இரண்டு ஸ்பூன் கலந்து பூசி அரைமணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் தெரியும்.
முட்டையை உடைத்து, அதனுடன் சில துணி எலுமிச்சை சாற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை சுருக்கம் விழுந்துள்ள பகுதிகள் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி உலர விடுங்கள். பிறகு கழுவி விடுங்கள்.
அடுத்து நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து பசைபோல் அதைச் செய்து தடவிக் கொள்ளுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு நன்றாக கழுவிவிடுங்கள். சுருக்கங்கள் விழுவது தள்ளிப்போகும்.
பசும்பாலில் சிறிதளவு கிளிசரின் கலந்து இரவில் படுக்கச் செல்லும்முன் முகத்தில் மேல்நோக்கி மென்மையாக மஸாஜ் செய்து பின் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறைந்துவிடும்.
ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் 1 ஸ்பூன் காரட் சாறு கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவி 15 நிமிடங்கள் நன்றாக உலர விடவும். நன்றாக உலர்ந்தது பஞ்சை வெதுவெதுப்பான நீரில் நனைத்துத் துடைக்கவும். தினமும் ஒரு முறை இவ்வாறு செய்துவர மெல்லிய முகச் சுருக்கங்கள் மறையும்.
கிளிசரினுடன் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
ஒரு கனிந்த வாழைப்பழத்துடன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி ஒரு மணிநேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். தினமும் தொடர்ந்து இம்மாதிரி செய்துவர முகச் சுருக்கங்கள் நீங்குவதோடு முகம் மென்மையாகும்.
ஒரு டீஸ்பூன் முட்டைக்கோஸ் சாறுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் உலரவிடவும். நன்றாக உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தாலும் முகச்சுருக்கம் நீங்கும்.
முகச்சுருக்கம் நீங்க பார்லர்களில் செய்யப்படும் டைட்டனிக் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். ஆக்ஸிஜன் கலந்த நைட் க்ரீமை வாங்கித் தினமும் தூங்கப் போவதற்கு முன் தடவிக் கொள்ளலாம்.
1 டீஸ்பூன் தக்காளி சாறு, 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, சில சொட்டுகள் எலுமிச்சை சாறு, பால் சிறிதுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவிட்டு கழுவ, மாசுமறுவற்ற முகத்துடன் நிறமும் முகத்திற்கு கூடுதலாகும்.
சருமம் மிருதுவாக ஆக தக்காளி சாறுடன் சிறிது பீட்ரூட் சாறு எலுமிச்சை சாறு சேர்த்து தடவவும்.
முகப்பருக்கள் மறைய 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் (பன்னீர்). கற்பூர லோஷன்  டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் தண்ணீரில் கழுவி வரவும். ஒரு வாரத்திற்கு இரண்டுமுறை செய்யவும்.
முகத்தில் கருந்திட்டுக்கள் மறைய…
முகத்திற்கு போடும் பீளிச்சிங் பவுடர் & 2 டீஸ்பூன், ஹைட்ரஜன் பெராக்ஸைட் & 2 டீஸ்பூன், கிளிசரின் & 3 சொட்டு, ரோஸ்வாட்டர் & 5 சொட்டு, அமோனியா & 6 சொட்டு.
மேலே கூறிய பொருள்களில் அமோனியா தவிர எல்லாவற்றையும் ஒரு கண்ணாடி கப்பில் கலந்து கடைசியாக அமோனியா கலந்து கருந்திட்டுக்கள் இருக்கும் இடங்களில் தடவி (கண்கள் அருகில் தடவ வேண்டாம்) 20 நிமிடம் ஊறவிட்டு ஐஸ் தண்ணீரில் கழுவவும்.
ஒரு தேக்கரண்டி கசகசாவை தண்ணீருடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி  மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் ‘பளிச்’ என்று இருக்கும்.
வெள்ளரிக்காயை மிக்ஸியில் அடித்து அதை முகத்தில் தடவி  மணி நேரம் அல்லது 1 மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
புதினா இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவைகளை வெந்நீரில் கலந்து வாரத்துகு 2 முறைகள் முகத்தில் ஆவி பிடித்தால் முகம் வசீகரமாக இருக்கும்.
இரவில் படுக்கும் முன்பு பாலாடையை மஞ்சள் கலந்து முகத்தில் தடவி விட்டு 1 மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் மிகவும் வனப்புடன் இருக்கும்.
இரவில் படுக்கும் முன் முகத்திற்கு வெண்ணெய் தடவலாம். பகலிலும் தடவலாம். ஆனால் தடவிய பிறகு வெய்யிலில் போகக்கூடாது.
எலுமிச்சை சாற்றில் பாசிப்பயற்றுமாவு கலந்து முகத்தில் தடவி வைத்து 1 மணி நேரம் கழித்த கழுவினால் முகம் நிறம் பெறும்.
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றையும் பக்குவம் செய்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால் என்றும் இளமை உணர்வுடன் இருக்கலாம்.
தினமும் தேகப்பயிற்சி செய்வதும், அளவான உணவு உட்கொள்வதும் இளமையாக இருக்க உதவுகிறது.
ஒரு டம்ளர் தேங்காய் எண்ணெய், 1 டம்ளர் தேங்காய்ப்பால், 2 கஸ்தூரி மஞ்சள்(தூளாக்கியது) கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் முகம், உடம்பில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்தவின் பாசிப்பயறு மாவினால் தேய்த்துக் குளித்தால் நல்ல நிறமாகிவிடும்.
அதிகமாக மனத்தில் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு முகச் சுருக்கம் அதிக அளவில் உண்டாகும்.
எப்போதும் இனிமையான சிந்தனைகள் இருந்தால் முகம் அழகாக இருக்கும். முகச்சுருக்கம் மறைந்துவிடும்.
முக அழகிற்கும் தோலின் பராமரிப்பிற்கும் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது பழச்சாறு குடிக்க வேணடும். பப்பாளி, வெள்ளரிக்காய் அரைத்து முகத்தில் பூசிக் கொள்வது நல்லது.
தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கவும், முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் தக்காளிச் சாற்றை முகத்தில் தடவ வேண்டும்.
குப்பை மேனி இலை, மஞ்சள், வேப்பிலை ஆகிய மூன்றையும் அரைத்து முகத்தில் தடவி வைத்து சிறிது நேரம் ஊற வைத்தபின் கழுவினால் முகத்தில் உள்ள முடி உதிர்ந்து விடும்.
தக்காளிச்சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் சமபங்கு எடுத்து கலந்து முகத்தில் முடி இருக்கும் இடத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்துக் கழுவினால் முடியின் நிறம் மாறி தோல் நிறத்தில் வந்துவிடும். நாளடைவில் இந்த முடியும் மறைந்துவிடும்.
மஞ்சள்பொடி, கடலைமாவு, பன்னீர் ஆகிய கலவையைக் குழைத்து முகத்தில் தடவி அழத்தத் தேய்க்க வேண்டும். இதுபோல் அடிக்கடி செய்து வந்தால் முகத்தில் உள்ள முடி அறவே நீங்கிவிடும்.
முகத்தை முதலில் வெந்நீரில் கழுவிய பின் உடனே குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு பாசிப்பயற்றுமாவில் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து முகத்தில் தடவி   மணிநேரம் ஊறுவைத்துக் கழுவினால் பருக்கள் மறைந்துவிடும்.
ஒரு தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் நன்றாகக் கலக்கி, முகத்தில் தேய்த்து  மணி நேரம் கழித்து கழுவினால் முகப்பரு மறையும்.
கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு(முழு பயறு), சீயக்காய், வேப்பிலை இவற்றை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கால் கிலோ, கால் கிலோவாக அரைத்து சோப்புக்குப் பதில் இவற்றை பயன்படுத்துங்கள். மேனி பொலிவுறும். தோல் வியாதிகள் அண்டாது. அதிகமாக அரைத்து வைத்தால் மாவில் பூச்சிகள் வந்துவிடும்.
முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக உடையவர்கள் எலுமிச்சம் பழச்சாறு, ஒரு ஸ்பூன் தேன், கடலை மாவு கலந்த பேஸ்டை உபயோகிக்கலாம்.
நாள் முழுவதும் நம் முகத்தில் மேக்கப் இருப்பது நல்லது அல்ல. முகம் சிறிது நேரமாவது இயற்கை காற்றை சுவாசிக்குமாறு விடவேண்டும். அதுவே முகம் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க பன்னீரில் சிறிதளவு கிளிசரின் கலந்து முகத்தில் தினசரி தடவி வரவேண்டும். தொடர்ந்து இப்படி செய்தால் சுருக்கம் மறைந்துவிடும்.
ஒவ்வொருநாளும் காலை வெறும் வயிற்றில் எலுமிச்சம் பழச்சாறு வெந்நீரில் பிழிந்து சாப்பிட்டு வந்தால் சரும எழில் நன்கு பிரகாசமானதாக இருக்கும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்துள்ள காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட வேண்டும் இதனால் முகமும் பொலிவு பெறும்.
சில பெண்களுக்கு முகத்தில் ரோமங்கள் காணப்படும். இது பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். தேவையில்லாத இடத்தில் உள்ள ரோமங்களை நீக்க தேய்த்து குளிக்க உதவும் மஞ்சளை பூசி வந்தால் ரோமங்கள் அகன்றுவிடும்.
வெள்ளைத்தேன் மெழுகு (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) கொதிக்கும் நீரில் போட்டு அது உருகியதும் அதனுடன் பாதாம் எண்ணெய் ரோஸ் வாட்டர் கலந்தால் அற்புதமான க்ளென்ஸிங் க்ரீம் தயார். இதை முகத்தில் பூசிவர அழுக்கு, தூசி, எண்ணெய்ப் பசை நீங்கி அழகு மிளிரும்.
ஆரஞ்சுத்தோல், புதினா இலை, துளசி இலை எல்லாமே கைப்பிடி அளவு எடுத்து, சுத்தம் செய்து நிழலில் காய வைத்து, பொடியாக அரைக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் பன்னீர் விட்டு குழைத்த முகத்திற்கு பேக் போல் போட்டு வந்தால் தனி பளபளப்பு கிடைக்கும்.
ஓட்சை ஊற வைத்து கையால் மசித்து முகத்தில் தடவிக் கொண்டு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ, முகம் பளிச் பளிச் ஆகிவிடும்.
எலுமிச்சம் பழச்சாறு, பப்பாளி மற்றும் அன்னாசிப் பழச்சாறு இவை மூன்றுக்கும் சருமத்தோலை பளபளபாக்கும் தன்மை உண்டு. இச்சாறுகளை முகத்தில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் ஊறியபின் முகத்தைக் கழுவிவிட்டால் முகம் பளபளப்புடன் திகழும்.
வெய்யிலில் அலைந்து திரிபவர்கள் முகம் கறுத்து விடும். இந்தக் கருமையை போக்க எளிய வழி வெள்ளரிச்சாறு, தக்காளி ஜூஸ் இரண்டையும் புளித்த தயிரில் கலந்து கருமை படர்ந்துள்ள இடத்தில் பூசுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.
பச்சைப் பயற்றை அரைத்து மாவாக்கி அதனுடன் சலித்து எடுத்த கோதுமைத் தவிட்டைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும்போது அதைத் தேய்த்துக் குளித்தால் தோலில் இருக்கிற கரும்புள்ளிகள் மாறித்தோல் பளபளவென்று ஜொலிக்கும்.
புளித்தண்ணீரில் 2 சொட்டு தேன் கலந்து முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடங்களுக்கு பிறகு பயத்தம் மாவை தடவிக் கொண்டு முகத்தை அலம்பி உலர்ந்த டவலினால் துடைத்துவிட்டால் முகம் பளபளக்கும்.
வெள்ளரிக்காய் வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும். அவ்விலையை எடுத்து முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கொள்ளவும். முக ஈரம் காய்ந்த பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவவும்.
வெயிலில் சென்றுவிட்டு வந்தால் தோலின் நிறம் கறுத்துக் காணப்படும். இந்த கருமையை போக்க பார்லியை நன்கு பொடி (பௌடர்) செய்து கொள்ளவும். சிறிது பொடியுடன் எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து கிரீம் பதத்திற்குக் குழைக்கவும். இந்த குழைவை வெயிலில் கறுத்த இடங்களில் தடவி, பதினைந்து நிமிடங்கள் ஊறவிடவும். ஊறுகின்ற தருணத்தில் நாமே கை, முகம் போன்ற வெயில் பட்டஇடங்களைத் தேய்த்துக் கொள்ளலாம். பின்பு சோப்பு அல்லாமல் பயற்றம் மாவு அல்லது கடலைமாவு கொண்டு குளிர்ந்த நீரால் கழுவலாம்.
வெள்ளரிச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு இரண்டையும் சமபங்கு எடுத்துக் கொண்டு சிறிது கஸ்தூரி மஞ்சளுடன் குழைத்தக் கொள்ளவும். இந்தக் கூழை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் ஊற விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். கழுவும் பொழுது இரண்டு கைகளாலும் முகத்தை நீரால் அடித்துக் கழுவவும். இம்முறையினால் சருமம் மிருதுவாக இருக்கும். மேலும் பரு வராது. கரும்புள்ளிகள் இருக்காது.
முல்தானிமெட்டி அல்லது சந்தனப்பொடியை பன்னீருடன் குழைக்கவும். இந்தக்கூழை முகத்தில் தடவி நன்கு காயவிடவும். காய்ந்தவுடன் சருமம் ‘வரவர’ என்று இருக்கும். அப்படிக் காயும் சமயத்தில் பேசவோ, சிரிக்கவோ, முகத்தைக் கோணல் செய்து கொள்ளவோ கூடாது. ஏனெனில், தோலின் அசைவுகளுக்கேற்ப சருமத்தில் சுருக்கங்கள் விழ வாய்ப்பு உண்டு. நன்கு காயந்தபின், குளிர்ந்த நீர் கொண்டு இரு கைகளாலும் அடித்துக் கழுவவும்.
வெள்ளரிக்காய் சாறு ஒரு தேக்கரண்டி, தக்காளி சாறு ஒரு தேக்கரண்டி, காரட் சாறு ஒரு தேக்கரண்டி, தயிர் ஒரு தேக்கரண்டி, கடலைமாவு ஒரு தேக்கரண்டி சேர்த்து குழைத்துப் பூசி வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
சுமார் 20 ரோஜாப்பூ இதழ்களை மோர், எலுமிச்சைச்சாறு கலவையில் சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து பிறகு 4 பாதாம் பருப்பை எடுத்து அத்துடன் சேர்த்து அரைத்து பேரெக்ஸ் (திணீக்ஷீமீஜ்) கால் தேக்கரண்டி, கிளிசரின் அரை தேக்கரண்டி கலந்து முகம், கை கால்களில் தேய்த்து வந்தால் முகம் வெண்மை நிறமடையும். இது ஒரு மைல்ட் பிளீச்சிங் முறையாகும்.
ஆரஞ்சுத் தோல்களைக் காய வைத்து நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். இந்தப் பொடியில், ஒரு ஸ்பூன் கடலைமாவு ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு ஸ்பூன்  சேர்த்து பன்னீர் விட்டு குழைத்து முகத்திற்கு மாஸ்க் போல் வாரம் ஒரு முறை பூசி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் முகத்திற்கு புதுப்பொலிவு கிடைக்கும்.
பாதாம் பருப்பு ஒன்றுடன் ஒரு ஸ்பூன்  தேன் கலந்து மையாக அரைத்து முகம், கழுத்தில் பூசி ஊறவைத்துக் குளிக்கலாம்.
ஒரு ஸ்பூன் ஓட்மீல், 1 டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, 1 டீஸ்பூன் அரிசிமாவு, 2 டீஸ்பூன் ஆரஞ்சுச்சாறு கலந்து முகத்தில் தேய்த்து வரலாம்.
எலுமிச்சைச்சாறு, மஞ்சள்பொடி கலவையை தினந்தோறும் குளிப்பதற்கு முன் முகம், கழுத்து, கைகளில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
50 கிராம் வெங்காயச்சாறு, 125 கிராம் ரோஸ்வாட்டர், இரண்டு சொட்டு வாசனைத் திரவியம், 25 கிராம் பாதாம் எண்ணெய், 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எல்லாவற்றையும் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு முகம், கழுத்து கைகளில் தேய்த்து குளிக்கலாம். கழுத்தில் தோன்றும் கோடுகளைப் போக்கும்.
தூய்மையான சந்தனம், கடுக்காய் 4 அல்லது கசகசா இரண்டு டேபிஸ்ஸ்பூன், பாதாம் பருப்பு இவைகளால் தயாரித்த கலவையின் ஃபேஸ் பேக்ஆக பயன்படுத்தலாம்.
கடைகளில் ஃபேஸ் மாஸ்க் பொடி விற்கும். அதை வாங்கி ஒரு ஸ்பூன்  மாஸ்க் பொடியில் சிறிது வெள்ளரி, காரட், தயிர் சேர்த்துக் குழைத்து பூசி 20 நிமிடங்கள் ஊறினதும் கழுவிவந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். வாரத்திற்கு ஒருமுறை செய்தால்போதும்.
வெள்ளரிச்சாறு, புதினாச்சாறு கலந்து முகம், கைகளில் தேயத்து வரலாம்.
குளிர்க்காலத்தில் படுக்கும் முன் முகத்தில் மாயிஸ் சரைஸர் (விஷீவீstuக்ஷீவீsமீக்ஷீ) பூசுவது நல்லது.
முட்டைக்கோஸ், முள்ளங்கிச் சாறுகளும் முகத்தை பளிச்சென்றதாக்க உதவும்.
வெளியில் கிளம்பும் முன் ஒரு பத்து நிமிடம் தயிரில் வீட்&ஜாம் அல்லது ஓட்மீல் கலந்து சுழல் வட்டமாகத் தேய்த்து பத்துநிமிடம் கழித்து கழுவி விட்டு மேக்அப் போட்டால் முகம் அழுக்கு நீங்க பளிச் என்று இருக்கும்.
தோலின் நிறம்  அதிகரிக்க வாரத்தில் ஏதேனும் ஒருநாள் மட்டும் எதுவும் சாப்பிடாமல் இரண்டு டம்ளர் தேன் சேர்த்த எலுமிச்சைச்சாறு, ஒரு டம்ளர் பச்சைக் காய்களின் சாறு, இரண்டு டம்ளர் மோர், ஒரு இளநீர் இவற்றை மட்டும் பருக வேண்டும்.
நிறம் மட்டாக இருப்பவர்கள் தெடர்ந்து ப்யூட்டி பார்லரிங் ஃபேசியல் செய்து கொண்டால் பளிச்சென்ற நிறம் கிடைக்கும்.
தினமும் இரவு படுக்கும் முன் ‘க்ளென்ஸர்’ உபயோகித்து முகத்தை சுத்தம் செய்துவிட்டு முகத்தில் லேசாக ‘மாயிஸ்சரைஸர்’ தடவிக்கொண்டு படுப்பது நல்லது.
தயிரில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூளைக் கலந்து முகத்தில் நன்றாகத் தேய்த்து பதினைந்து நிமிடம் ஊறவைத்து முகத்தைக் கழுவி விடுங்கள்.
பிரிட்ஜ் இருந்தால் இளநீர் சிறிது ஸ்டாக் செய்து சிறிது இளநீர், பால், சந்தனம் கலந்து குழைத்து தேய்த்த 20 நிமிடம் ஊறியதும் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
முள்ளங்கி, கேரட் சாற்றினைத் தேய்த்து ஊற வைத்தால் வந்தால் முகம் ப்ளீச் செய்யப்பட்டது போல் நிறமாக மாறும்.
பசும்பாலில் சில துளிகள் கிளசரின் கலந்து தேய்த்து ஊறினதும் பாசிப்பருப்புப் பொடி கொண்டு தேய்த்து முகம் கழுவி வரலாம்.
சில துளிகள் தேனுடன் பாலாடை சேர்த்து மெல்ல மேல் நோக்கித் தேய்த்து வரலாம்.
புதினாச் சாற்றையும் முட்டைக்கோஸ் சாற்றையும் கலந்து அதில் சிறிது கடலைமாவைக் குழைத்துப் பூசி குளித்து வரலாம்.
இரவு படுக்கும் முன் கடுகெண்ணெய், ஆலிவ் ஆயில் இரண்டையும் சம அளவு கலந்து உள்ளங்கையல் ஊற்றி (ஒரு ஸ்பூன் அளவு) இரண்டு கைகளாலும் முகம், கழுத்தில் தேய்த்து காலையில் கடலை மாவு, பயத்தம் மாவு கலந்து தேய்த்துக் கழுவலாம்.
முடிந்தவரை பச்சையாக காரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், வெள்ளரி, தக்காளி சாப்பிடுங்கள். கீரை, பழங்கள் சாப்பிடுங்கள். சீனி சேர்க்காத எலுமிச்சைச் சாறு குடியுங்கள்.
வாரம் ஒருமுறை ஆலிவ் ஆயில் அல்லது சிறிது பாலேடு எடுத்து முகத்தில் மென்மையாக சுழல் வட்டமாகத் தேய்த்து, 10 நிமிடம் ஊறின பின் ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து முகத்தை அதில் காட்டி ஆவிபிடித்தபின் ஏதேனும் ஒரு ஹெர்பல் பேஸ் பேக்கினை குழைத்து முகம், கழுத்தில் பூசி 20 நிமிடம் ஆனதும் முகம் கழுவி விட்டால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சித்தர்கள் குறிப்பிடும் `ஆலயம்’

சித்தர்கள் நமது உடலையும், அதிலுள்ள ஆதாரங்களையும் மனதில் கொண்டு தான் ஆலயத்திற்கு வடிவம் கொடுத்துள்ளளனர்.

அது எப்படி என்று கேட்கிறீர்களா?

நமது இதயம் மூலஸ்தானம் என்று குறிப்பிடுகின்றனர். நமது உடலை அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்த மயகோசம் என்று 5 பிரகாரங்களாக பிரித்துள்ளனர். இவற்றில் உடலை அன்னமயகோசமாகவும், பல வினைகள் அடங்கிய உடலை பிராணமய கோசமாகவும், அறிவு சொரூபமானதை மனோமயகோசமாகவும், அறிவுப்பொறியுடன் கூடியதை விஞ்ஞானமயகோசமாகவும், நிறைந்த இன்பம் தருவதை ஆனந்த மயகோசமாகவும் கூறுகின்றனர்.

அறிவின் மூலம் அறிவுப் பொறியைத் தட்டி திறக்க வேண்டும். இதைக் கொண்டு பல வினைகள் அடங்கிய மாயையான உடலை அந்த வினைகளில் இருந்து நீக்கிவிட வேண்டும். பின்பு கடவுளை அடைந்தால் நீங்காத நிறைந்த இன்பத்தை பெறலாம் என்பதே இந்த ஐந்து பிரகாரங்கள் உணர்த்தும் உண்மை. இவை ஒவ்வொன்றையும் நாம் முறையாக கடக்கும்போது பஞ்சமாபாதகங்களை ஒவ்வொன்றாக விட்டு நீங்கி விடுதலை பெற்று விடலாம்.

நம் உடலில் இருக்கும் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாதகம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை முறையே கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், அபிஷேக மண்டபம், அலங்கார மண்டபம், சபா மண்டபம் என்று 6 மண்டபங்களாக வடிவமைத்துள்ளனர்.

ஆக்ஞை என்பது கடவுளை குறிக்கிறது. அன்பு என்பது அறியப்படும் பொருள். நமது உடலில் உள்ள முதுகுத்தண்டுதான் கொடிமரம். கடவுளைக் காணச் செல்லும் முன்பு நமது ஆணவம், தீய எண்ணங்கள் அனைத்தையும் பலி கொடுத்துவிட்டு, அகத்தூய்மை, புறத்தூய்மையுடன் தான் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பலிபீடம் அமைத்துள்ளனர்.