Daily Archives: ஜூலை 12th, 2010

விண்வெளி சுற்றுலா கட்டணம் ரூ.90 லட்சம் !

இதுவரை, இந்த பூமி உருண்டைக்குள் உள்ள நாடுகளுக்கு மட்டுமே சுற்றுலா சென்று வந்த மனித இனம், அடுத்த கட்டமாக விண்வெளியிலும் சுற்றுலா செல்லப் போகிறது. பூமிக்கு வெளியில், விண்வெளியில், புவி ஈர்ப்பு விசை இல்லா பிரபஞ்சத்தில், சுற்றுலா செல்லும் ஒரு திட்டத்தை, அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
கலிபோர்னியாவின், “வெர்ஜின் காலாக்டிக்ஸ்’ என்ற நிறுவனம், விண்வெளி சுற்றுலா திட்டம் என்ற பெயரில் பயணிகளை விண்ணிற்கு  அழைத்துச் செல்ல, நிர்வாக இயக்குனர், ஏற்பாடுகள் செய்து வருகிறது.  இதற்கான ராக்கெட்டை வடிவமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம், அடுத்த ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் தயாரிப்பு நிறைவடையும்  என்று அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம், ஒரு முறைக்கு ஆறு பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல முடியும். இரண்டு விமானிகள் விண் ஓடத்தை இயக்குவர். நான்கு இன்ஜின்கள் விண் ஓடத்தை செலுத்தும்.  விண்வெளி ஓடம் மற்றும் மதர்ஷிப் எனப்படும் தாய் கப்பல் என இரண்டு பிரிவாக விண்வெளி சுற்றுலாவிற்கான ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக தனியார் நிறுவனம் ஒன்றின் ராக்கெட் தொழில் நுட்பம் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் சுற்றுலா  விண் ஓடம் சிறப்பாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்த நிறுவனத்தின் வெர்ஜின், காலக்டிக் கூறியதாவது: “எங்களின் விண் ஓட திட்ட முதற்கட்ட சோதனையில், விண்வெளி ஓடத்தை  45 ஆயிரம் அடி உயரத்திற்கு தாய் கப்பல் மூலம் அனுப்பும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. செயல்பாட்டில் வரும் போது 50 ஆயிரம் அடி வரைக்கும் விண்வெளி ஓடத்தை  தாய் கப்பல் மூலம் கொண்டு செல்ல முடியும். பின், தாய் கப்பலில் இருந்து விண்வெளி ஓடம் பிரிந்து, விண்வெளியில் ஒரு இன்ஜின் கொண்ட ராக்கெட் மூலம் சஞ்சரிக்கும்.
அப்போது, அதில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் புவிஈர்ப்பு விசை இல்லாமல் விண்வெளியில் மிதக்கும் அனுபவத்தை பெறுவர்.  தூரத்தில் இருந்து பூமியையும், பிரபஞ்சத்தையும் நேரில் பார்க்கும் அற்புத  அனுபவமும் அவர்களுக்கு கிடைக்கும். மேலும், பூமியின் புவிஈர்ப்பு விசையை கிழித்துக் கொண்டு ராக்கெட் விண்ணில் ஏறும் அனுபவத்தையும், விண்வெளியில் இருந்து மீண்டும் பூமிக்குள் நுழையும் திகிலான பயணத்தையும்,  இந்த சுற்றுலா மூலம் பயணிகள் பெறுவர்.
எங்களின் இந்த விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கு உலகம் முழுவதில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் 2012ல் செயல்படுத்தப்பட உள்ள விண்வெளி சுற்றுலா திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இதுவரை 300 பேர் முன்பதிவு செய்துள்ளனர். விண்வெளி சுற்றுலாவிற்கான கட்டணமாக, 90 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ப்ரவுசர் ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ்

நாம் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களும், மேம்போக்காகத் தெரிவதைக் காட்டிலும், கூடுதலாகவே பல வசதிகளை நமக்குத் தருவதாய் அமைந்துள்ளன. நீங்கள் பயர்பாக்ஸ் நண்பராகவோ, அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பக்தராகவோ, குரோம் பிரவுசரின் தீவிர ரசிகராகவோ இருக்கலாம். அனைத்து பிரவுசர்களும் இந்த கூடுதல் வசதிகளைத் தருவதாகவே அமைந்துள்ளன.  இங்கு அதற்கான டிப்ஸ்கள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்து வது உங்கள் கைகளில்தான் இருக்கின்றன. இந்த டிப்ஸ்களில் அறிமுகப்படுத்தப்படும் பல ஆட் ஆன் புரோகிராம்களும் இலவசமாகவும், எளிதில் பயன்படுத்தும் தன்மை கொண்டதாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பயர்பாக்ஸ் ரசிகர்களுக்கு மட்டும்:

1.ஜிமெயிலைச் சிறப்பாக்க: ஜிமெயில் பயன்பாட்டில் நமக்குச் சில கூடுதல் வசதிகளைத் தர  Better Gmail2 என்னும் சிறிய தொகுப்பு கிடைக்கிறது.  https://addons.mozilla.org/enUS/firefox/addon/6076/)


இதில் சில ஸ்கிரிப்ட்களும், ஆட் அன் தொகுப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஜிமெயில் பட்டியலில், உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், அந்த மெயில் ஹைலைட் செய்யப்படும். இதனால், நெருக்கமாக உள்ள அந்த பட்டியலில், உங்கள் கர்சர் எங்கு நிற்கிறது என்று தெளிவாகத் தெரியும். கூடுதலாக நீங்கள் இன்னும் படிக்காத மெயில்கள் எத்தனை என்ற கணக்கு காட்டப்படும். மெயிலுடன் இணைக்கப் பட்டுள்ள பைல்களின் பெயர்களும் காட்டப்படும். இதன் முன் தொகுப்பான் ஜிமெயில்1, குரோம் பிரவுசருக்காக வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டது.


2.படிவத்தில் உள்ள டெக்ஸ்ட்டைக் காப்பாற்ற:  சில படிவங்களில் தகவல்களை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.  திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகிறது. நிச்சயமாக நிரப்பியது அனைத்தும் நினைவில் இருக்காது. மீண்டும் சரியாக பழையபடி தர முடியுமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாக இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் நமக்கு உதவ லேசரஸ் பயர்பாக்ஸ் ஆட் ஆன்  (Lazarus Firefox addon) QøhUQÓx. https://addons.mozilla.org/enUS/firefox/addon/6984/) கிடைக்கிறது.
இதே போல இன்னொரு ஆட் ஆன் தொகுப்பு ஒன்று நாம் டெக்ஸ்ட்டை இணையப் பக்கங்களிலிருந்து காப்பி செய்திடுகையில் உதவுகிறது. இதன் பெயர் Copy Plain Text ஆகும். இந்த ஆட் ஆன் நாம் காப்பி செய்திடுகையில், டெக்ஸ்ட்டுடன் வரும், தேவையற்ற பார்மட்டிங் வகைகளை நீக்கி, டெக்ஸ்ட் மட்டும் தருகிறது.
அனைத்து பிரவுசர்களுக்கும்:


எட்டு கீகளை அழுத்தாதே: இணைய தளம் ஒன்றின் முகவரிகளை அட்ரஸ் பாரில் அமைக்கையில், எட்டு கீகளை இனி அழுத்தத் தேவையில்லை. . “www.” or “.com” ஆகிய கீகளை பெரும்பாலான இணைய முகவரிகளில் அமைக்கத் தேவையில்லை.  அந்த தளத்தின் தனிப் பெயர் மட்டும் அமைத்தால் போதும். எடுத்துக்காட்டாக dinamalar என மட்டும் அமைத்துப் பின் கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும். உங்களுடைய பிரவுசர் “www.” மற்றும்  “.com” ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளும்.  இதே போல மற்ற வற்றில் முடியும் தளங்களின் பெயர்களை அமைக்கவும் சுருக்கு வழிகள் உள்ளன.   www” and “.net” என அமைய ஷிப்ட் + என்டர் தட்டவும். அடுத்து “தீதீதீ” ச்ணஞீ “.ணிணூஞ்” என அமைய கண்ட்ரோல்+ஷிப்ட்+ என்டர் தட்டவும்.  ஏதேனும் இன்னொரு இணைய தளத்திற்கான லிங்க்கினை, ஒரு இணையதளம் தருமானால், அதில் ஸ்குரோல் வீலினால் தட்டவும். உடன் அந்த தளம், இன்னொரு டேப்பில் திறக்கப்படும்.  பெரும்பாலான இணையப் பக்கங்களில் அச்சில் வரக்கூடிய பக்கம் எப்படி உள்ளது என்று காட்டவும், அச்சில் நல்ல முறையில் வரவும்   http://www.printwhatyoulike.com/ ”” வழங்கப்படுகிறது. இதனை எளிதாகப் பெற  http://www.printwhatyoulike.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று உங்களுக்குத் தேவையான பக்கங்களை அச்சில் எப்படி இருக்கும் என்று பார்த்து, அச்சிற்குத் தரவும்.


முழுப்பக்க ஸ்கிரீன் ஷாட்: இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை. ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது.  Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு,  Talon குரோம் பிரவுசருக்கு என்ற  ரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. கூகுள் சென்று இவை இருக்கும் தளம் அறிந்து   ண்லோட் செய்து பயன்படுத்தவும்.


பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தாவிட்டாலும், சிலவற்றை அதிலிருந்து தான் பெற முடியும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் தான் உருவாக்கிய விண்டோஸில் இருந்து கொண்டு மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்துகிறாயா! இது வேண்டுமென்றால், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குச் செல் எனச் சொல்கிறது. சில வேளைகளில், குறிப்பிட்ட இணைய தளம், அது உங்களின் தளமாகவே இருக்கலாம், எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் செயல்படுகிறது என நீங்கள் அறிய விரும்பலாம்.  அந்த வேளையில், பயர்பாக்ஸ் பிரவுசரிலிருந்து வெளியேறி, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைக் கிளிக் செய்து, பின் உங்கள் வேலையைத் தொடர வேண்டியதில்லை. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரிலேயே, ஒரு டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை வைத்துக் கொள்ளலாம். இந்த டேப்பில் கிளிக் செய்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விரிந்து, உங்கள் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும். இவை  IE Tab for Firefox, IE tab for Chrome என அழைக்கப்படுகின்றன.
நீங்கள் பயன்படுத்தும், ஒவ்வொரு பிரவுசரிலும், ஒவ்வொரு கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரிலும் பல புக்மார்க்குகளை வைத்திருக்கிறீர்களா! இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க முடிவதில்லையா! உங்களுக்காகவே, எக்ஸ் மார்க்ஸ்   (XMarks)என்ற ஒரு ஆட் ஆன் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், அனைத்து பிரவுசர்களிலும் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் உள்ள புக்மார்க்குகளை, இது தேடி எடுத்து இணைத்துத் தந்துவிடும்.


தளத்தின் நம்பிக்கை தன்மை: இன்டர்நெட் தரும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எந்த தளத்தில் நம்மை ஏமாற்றும் வழிகள் உள்ளன என்று நம்மால் அறிய முடிவதில்லை. ஒரு தளத்தின் நம்பிக்கைத் தன்மையை நமக்குக் காட்டும் ஒரு ஆட் ஆன் தொகுப்பு  Web of Trust ஆகும். இது இணைய தளங்களில் நீங்கள் மேற்கொள்ளும் சுற்றுலாவினைப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. நீங்கள் செல்ல இருக்கும் தளம் எத்தனை பேர்களால் பார்க்கப்படுகிறது, இதனை உருவாக்கியவரின் நம்பகத்தன்மை, குழந்தைகள் பார்க்கும் தன்மையுடையதா என்ற தகவல்களைத் தருகிறது.


குரோம் மற்றும் கூகுள் தொகுப்புகளுக்கு: அவுட்லுக் தொகுப்பிலிருந்து ஜிமெயிலுக்கு மாறியவரா நீங்கள்? புதிதாக வந்துள்ள மெசேஜ்களை, அவுட்லுக் காட்டியது போல ஜிமெயில் காட்டவில்லை என்ற குறை உங்களுக்கு உள்ளதா?  கூகுள் மெயில் செக்கர் ப்ளஸ்  (Google Mail Checker Plus) இன்ஸ்டால் செய்து இந்த குறையை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். இது நீங்கள் புதிய செய்தி பெறுகையில், ஒலி எழுப்பும். புதிய செய்திகளுக்கான சப்ஜெக்ட் வரியினைக் காட்டும். இந்த செய்தியில் ஏதேனும் மெயில் டு லிங்க் இருந்து, நீங்கள் அதில் கிளிக் செய்தால், உடன் புதிய விண்டோ ஒன்றைத் திறக்கும்.
உங்கள் கூகுள் காலண்டரை அடிக்கடி திறந்து பார்க்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? புதிய பக்கம் எதனையும் திறக்காமல், புதிய டேப் எதன் பக்கமும் செல்லாமல், காலண்டரைப் பார்க்க டே ஹைக்கர்  (Day Hiker) என்னும் ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.


பிரவுசரிலேயே யு–ட்யூப் தேட: யு–ட்யூப் தளத்தில் ஏதேனும் தேட வேண்டும் என்றால், மீண்டும் நீங்கள் ஒருமுறை  “www.youtube.com” என டைப் செய்து, அந்த தளம் சென்று தேட வேண்டியதில்லை.  You Tube Search என்னும் ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து கொண்டால், உங்கள் பிரவுசர் விண்டோ விலிருந்தவாறே, தேடலை மேற்கொள்ளலாம்.


வேகமாக வெளியேறுங்கள்: சில வேளைகளில் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திடுகையில் முகவரியை அமைத்து என்டர் தட்டியவுடன் பாதி தளம் இறங்கிய நிலையில் அப்படியே திரையில் காட்டப்படும் காட்சி உறைந்து போய் நிற்கும். காரணமும் நமக்குக் காட்டப்பட மாட்டாது. இந்த சிக்கலிலிருந்து விடுதலை பெற ஒரு சிறந்த வழி எஸ்கேப் கீயை அழுத்துவதுதான்.  அழுத்தியவுடன் தளம் இறங்குவது நிறுத்தப்படும். அதன்பின் நீங்கள் வேறு தளத்திற்கான முகவரியை அமைத்து அந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்குவதைப் பார்க்கலாம். அல்லது முதலில் இறங்க மறுத்த அதே தளத்தினை மீண்டும் காட்டுமாறு முயற்சிக்கலாம். இந்த எஸ்கேப் கீ இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் இந்த பணியை மேற்கொள்கிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம்  (Operating System): கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் சாதனங்களையும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்களையும் இயக்கிக் கண்ட்ரோல் செய்திடும் சிஸ்டம்.

கண்ணைச் சுற்றிக் கருவளையம்

இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது. ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது. கடைசியில் இது வயதான எல்லோருக்குமே கண்கூடாகக் காட்சியளிக்கிறது. இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான ‘பிக்மெண்டேஷன்’ காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை. இருப்பினும் சிலர் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.
கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்டக £ரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும். உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.
அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்£ல் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.
வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.
படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவக்£ள், நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.

1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.
2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.
2. வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.
4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.
5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.
6. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.
7. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.
8. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.

இன்சுலின் கண்டுபிடித்தது எப்படி?!

தற்போது உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு.

இன்சுலின் கண்டுபிடிப்புக்கு முன்பு, எந்த மருத்துவ ஆய்வும் நீரிழிவுக்கு தீர்வு சொல்ல முடியாத நிலையில், பிரெட்ரிக் கிராண்ட் பேண்டிங் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிச்சர்ட் மேக்லியோட் ஆகிய இருவரும், தங்களது தீவிர முயற்சியால் இன்சுலினைக் கண்டுபிடித்தனர்.

இதில் ஒருவரான பேண்டிங்-ஐ சின்ன வயதிலேயே நீரிழிவு நோய் தாக்கியது. 1916-ம் ஆண்டில் இந்த நோய்க்கு எந்த தீர்வும் கண்டுபிடிக்காத நிலையில் பேண்டிங் திணறினார்.

உடலுக்குள் செலுத்தப்படும் புது கணைய நீரானது நோயாளியின் உடலிலேயே சுரந்து கொண்டிருக்கும் பழைய கணைய நீரோடு இணைந்து செயல் பட்டால் பிரச்சினை இல்லை என்ற தேடுதலோடு பல மருத்துவ ஏடுகளை புரட்டினார்.

பல விஞ்ஞானிகளோடு ஆலோசித்தார். அப்போது பேண்டிங்குக்கு வரப்பிரசாதமாய் ஒரு கட்டுரை கிடைத்தது.

அதில் சில புதிய விஷயங்கள் கிடைத்தன. மேலும் நீரிழிவு நோய் குறித்த ஆழ்ந்த ஆய்வுகளையும், கட்டுரை விளக்கங்களையும் அளித்து வந்த மேக்லியோட்டின் அறிமுகம் கிட்டியது.

இருவரும் இணைந்து தீவிரமான ஆராய்ச்சி மேற்கொண்டனர். பேண்டிங் தடுமாறும்போதெல்லாம் தூக்கிவிட்ட மேக்லியோட்டின் துணையோடு, 1922-ம் ஆண்டில் கற்பனைப் பொருளாக இல்லாது நிஜத்தில் உருவானது இன்சுலின்!

ஆரம்ப காலத்தில் கணைய சுரப்பிகளில் நார் கட்டி செய்யப்படும் சிகிச்சைக்குப் பிறகு வெளியிலிருந்து இன்சுலின் ஏற்றப்பட்டு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டாலும் பிற்காலத்தில் மருத்துவ உலகில் நடந்த பெரும் ஆராய்ச்சிகள் நார் கட்டும் சிக்கலிலிருந்து விடுதலை பெற்றுத் தந்துள்ளன.

ஆனால் அதற்கு பின் ஏற்பட்ட அத்தனை முன்னேற்றங்களும் இன்சுலீன் எனும் அஸ்திவாரத்தின் மீது தான் நின்று கொண்டிருக்கின்றன.

இன்சுலின் கண்டுபிடித்திருக்காவிட்டால் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முன்னேற்றங்கள் நடந்திருக்காது. இத்தகைய அற்புத கண்டுபிடிப்புக்காக பேண்டிங் மற்றும் மேக்லியோட் இருவருக்கும் 1923-ம் ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கற்ப மூலிகை வேப்பிலை

உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி படைத்தவை தான் கற்ப மூலிகைகள்.

நரை, திரை, மூப்பு என்ற மூன்றையும் அணுகவிடாமல் தடுக்கும் குணம் கற்ப மூலிகைகளுக்கு உண்டு.

இந்த இதழில் வேப்பிலை என்னும் கற்ப மூலிகையைப் பற்றி அறிந்துகொள்வோம்.

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு.  இதனை சக்தி என்றே அழைக்கின்றனர்.  சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது.  மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின்  இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர்.  அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்திருப் போரும் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட் டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில்  வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.  கீழ்கண்ட மருத்துவக் குணங்கள் வேப்பிலையில் நிறைந்துள்ளது.

1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory)

2.  வீக்க உருக்கி (anti inflammatory)

3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic)

4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer)

5. மலேரியா போக்கி (Anti malarial)

6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal)

7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial)

8. வைரஸ் அகற்றி (Anti viral)

9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant)

10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous)

வேப்பிலையில்  நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.  இதில் Azadirachtia, nimbidiol, nimbidin  போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன.

வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர்.  வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு.  சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

வேப்பிலையை பயன்படுத்தும் முறை

* புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

* வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

* வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

வேப்பிலையின் பொதுவான பயன்கள்

* வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

* சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

* சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

* வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

* வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால்  சாதாரண சளி இருமல் குறையும்.

* வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்

விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது.  இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.
அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்

சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும்.  இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.  காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு.  கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு.  இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு.  இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர்.

பிரச்னை தீர வேண்டுமா ?(ஆன்மீகம் )

மனித வாழ்க்கை பல பிரச்னைகள் நிறைந்தது. இரவு நேரம் வந்ததும், இன்று என்னென்ன செய்தோம், எதெல்லாம் விட்டுப் போயிற்று, எதெல்லாம் நினைத்தபடி நடந்தது, எதெல்லாம் நினைத்தபடி நடக்கவில்லை என்று சிந்திக்கிறான் மனிதன்; மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போடுகிறான்.

அவைகளில் எதெல்லாம் நடக்குமோ தெரியாது. இப்படி பல பிரச்னைகளில் சிக்கி, என்ன செய்வது என்று தெரியாத ஒரு சிலர், “ஹூம்… எப்படியோ நடக்கட்டும். பகவான் விட்ட வழி…’ என்று சொல்லி, பொறுப்பை பகவானிடம் ஒப்படைத்து விடுவர். நம்மை நம்பியுள்ள பக்தனின் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறான் பகவான்; அதற்கு, சில வழிமுறைகளை சந்தர்ப்பங்களாக ஏற்படுத்துகிறான். பிரச்னைகள் தீர வழி வைக்கிறான். இதுதான் பகவான் விட்ட வழி என்கின்றனர்.
நம்பினவர்களுக்கு வழி செய்தும் கொடுக்கிறான்; தவறான வழியில் போகிறவனை தடுத்தும் நிறுத்துகிறான் பகவான். வழி தெரியாதவர்களுக்கு வழியும் காட்டுகிறான்; திக்கு திசை தெரியாமல் விழிப்பவர்களுக்கு, வேறு உருவில் வந்து, வழிகாட்டியாக அழைத்துச் செல்கிறான். சேரவேண்டிய இடம் வந்ததும் மறைந்து விடுகிறான்.
ஹரதத்தர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். அவர் இருக்குமிடத்திலிருந்து சில மைல் தூரத்தில் இருந்த சிவன் கோவிலுக்கு, தினமும் போவது வழக்கம். ஒருநாள் மாலை, கோவிலுக்கு புறப்பட்ட போது, இடி, மின்னலுடன் காற்றும், மழையுமாக இருந்தது. அதில், கோவிலுக்கு போகும் வழியை தவற விட்டு விட்டார். எந்த வழியில் போவது என்று தெரியாமல், தடுமாறிக் கொண்டிருந்தார்.
அந்த சமயம், ஒரு இடையன் அங்கு வந்தான். “ஐயா… நீங்கள் கோவிலுக்கா போக வேண்டும்?’ என்று கேட்டான். “ஆமாம்! ஆனால், வழி தெரியவில்லை…’ என்றார் தத்தர். “சரி… நானும் அங்கே தான் போகிறேன்; என்னோடு வாருங்கள்…’ என்றான் அவன். இருவரும் கோவில் வரை சென்றனர்.  அந்த இடம் வந்ததும், வழிகாட்டியாக வந்த இடையன் மறைந்து விட்டான். இவர் சுற்றும், முற்றும் தேடிப் பார்த்தார்; ஆளைக் காணவில்லை. அப்போது தான் அவருக்குப் புரிந்தது… வழிகாட்டியாக வந்தது இடையன் அல்ல; சாட்சாத் பரமேஸ்வரன் தான் என்று. கோவிலுக்குள் போய் பகவானை தரிசித்து, பலவாறு துதித்தார்.

பகவான் வழிகாட்டியாக வந்தார். சரி… ஆனால், ஏன் சுய உருவில் வராமல், இடையனாக வந்தார்? அதுதான் ரகசியம். “பகவான் எப்படி இருப்பார்!’ என்று, மனதால் நினைக்கும்போது தான், பக்தி செய்ய முடியும்.  பரமேஸ்வரனே புலித்தோல், மண்டையோடு, நெருப்பு சட்டி, சூலம் எல்லாவற்றோடும் இவன் எதிரில் தோன்றினால் என்ன ஆகும்? ஆள் அலறி அடித்து ஓட்டமாக ஓடி விடுவான். பகவான் நேரில் வந்ததற்கு, பயன் எதுவும் இருக்காது. அதனால், மனித உருவில் வந்து, வழிகாட்டிவிட்டுப் போய் விடுகிறார். அந்தக் காலத்தில், பகவான் நேரில் தரிசனம் கொடுத்தார்; வரம் கொடுத்தார் என்றெல்லாம் புராணங்களில் உள்ளது. ஆனால், இந்தக் காலத்தில் அதெல்லாம் சரிப்பட்டு வராது. பகவான், இப்போதெல்லாம் நேரில் வர மாட்டார். மனித உருவில் வந்து, நல்வழி காட்டி விட்டுப் போய் விடுகிறார்.