Daily Archives: ஜூலை 15th, 2010

படங்களில் எழுத்துக்களைப் பதிக்கலாம்- எப்படி!

போட்டோ மற்றும் படங்களில் எப்படி எழுத்துக்களுடன் கூடிய சொற்களை அமைப்பது என்று பல வாசகர்கள் அடிக்கடி கேட்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள், படங்களை வேர்ட் ஆவணங்களில் பதிக்கையில், அதன் மீது சொற்களுடன் பதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், போட்டோ ஷாப் தொகுப்பு, எளிதான வழிகளைத் தருகிறது.  போட்டோ ஷாப் தொகுப்பிற்குப் பதிலாக, அதன் அண்மைக் கால புதிய தொகுப்புகளையும் பயன்படுத்தலாம்.  அத்தொகுப்புகளில் அதற்கான  வழிகளை இங்கு காணலாம்.
படங்கள் அல்லது போட்டோக்களில் சொற்களை அமைக்க நமக்கு கற்பனைத் திறனும், போட்டோஷாப் தொகுப்பும் தான் தேவை. இங்கு எப்படி படங்களில் அவற்றை அமைத்து, நம் கற்பனைத் திறனுக்கு ஒரு வடிவம் கொடுப்பது எனப் பார்க்கலாம்.  இதன் மூலம் படங்களை வாழ்த்து அட்டைகளாகவும், இலச்சினை களாகவும், போஸ்டர்களாகவும், போட்டோக்களை நிறுவனத் தகவல் குறிப்புகளுடன் இணைக்கும் வகையிலும் அமைக்கலாம். எனவே முதலில் இதற்கேற்ற போட்டோக்கள், படங்கள் அல்லது கார்ட்டூன் படங்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர்1. அடோப் போட்டோஷாப்  அல்லது சார்ந்த தொகுப்பைத் திறக்கவும். பின் அதன் பைல் மெனு வழியாகக் குறிப்பிட்ட பட பைலைத் திறக்கவும். 2. டூல் பாரில் டெக்ஸ்ட் டூலைனித் தேர்ந்தெடுக்கவும். இது மிக எளிது. டூல்பாரில் கூ என்ற எழுத்தின் மீது கிளிக் செய்தால் போதும்.
3. அடுத்து, இந்த டூல்பாரில் கீழாக அமைக்கப்பட்டுள்ள மேல் இரண்டு சதுரங்களில் கிளிக் செய்திடவும். இதில் மேலாக உள்ள சதுரக் கட்டம் முன்புற வண்ணத்தைக் குறிக்கிறது. இது உங்கள் எழுத்தின் வண்ணமாக இருக்கும். படத்தின் வண்ணம், டெக்ஸ்ட் அமைய இருக்கும் இடத்தில் உள்ள வண்ணம் ஆகியவற்றை அனுசரித்து, எழுத்துக்களுக்கான வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக்  செய்திடவும்.
4. படத்தில் எந்த இடத்தில், நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைத்திட வேண்டுமோ, அந்த இடத்தில் கிளிக் செய்திடவும். இப்போது டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்படும்.
5. இங்கு எழுத்து வகை, ஸ்டைல், அளவு மற்றும் அலைன்மென்ட் ஆகியவற்றை அதன் பட்டியல்களில் இருந்து தேர்ந்தெடுக்கவும். பின்னர் டயலாக் பாக்ஸில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பிய டெக்ஸ்ட்டை அமைக்கவும். முழுவதும் டெக்ஸ்ட் அமைத்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
6. அடுத்து, டெக்ஸ்ட் ஏரியா மீது மவுஸின் இடது பட்டனை அழுத்திப் பிடித்துக் கொள்ளவும். டெக்ஸ்ட்டின் சுற்றுப்புற பார்டர் லைன், நகரும் எறும்புகள் போலத் தோற்றமளிக்கும். மவுஸைப் பிடித்தவாறே இந்த டெக்ஸ்ட் கட்டத்தினை நகர்த்தி, விரும்பும் இடத்தில் கொண்டு சென்று வைக்கவும். டெக்ஸ்ட்டில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமானால், கர்சரை நகர்த்தி அமைக்கலாம். முழுவதும் நீக்க வேண்டும் எனில், பைல் மெனுவில் கிளியர் தேர்ந்தெடுத்து என்டர் செய்திடலாம். ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்கள் எனில், அவற்றைத் தேர்ந்தெடுத்து, டெலீட் பட்டன் அழுத்தலாம்.
7.   டெக்ஸ்ட் அமைக்கும் வேலை முடிந்த பின்னர், பைல் மெனுவில் சேவ் அல்லது சேவ் அஸ் தேர்ந்தெடுத்து, புதிய பெயர் கொடுத்து பதிந்து கொள்ளவும்.
சில டிப்ஸ் தரட்டுமா!
முதலில் கூறியபடி, படத்திலிருந்து டெக்ஸ்ட் மாறுபட்டு இருக்கும் வகையில், அதன் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் பின்னணி நிறம் டார்க்காக இருந்தால், மென்மையான வண்ணத்தில் டெக்ஸ்ட்டை அமைக்கவும். மிதமான வண்ணத்தில் படம் இருந்தால், டார்க் கலரில் எழுத்துக்களை அமைக்கவும்.
டெக்ஸ்ட் அமைத்த பின்னர், முற்றிலும் வேறு பெயரில் பட பைலை சேவ் செய்திடவும். இதன் மூலம், ஒரிஜினல் படத்தினை காப்பாற்றி வைத்துக் கொள்ளலாம்.
அடோப் போட்டோஷாப் தொகுப்பு தரும் Vertical Alignment Option –ஐப் பயன்படுத்தி, டெக்ஸ்ட்டை நெட்டு வாக்கில் அமைக்கலாம்.
இணையத்தில் உள்ள கிளிப் ஆர்ட் அல்லது வேறு படங்களைப் பயன்படுத்தி, அதில் டெக்ஸ்ட் இணைத்து, வர்த்தகரீதியாக  அதனைப் பயன்படுத்தத் திட்டமிட்டால், அந்த இணைய தளத்தின் நிர்வாகிக்கு அஞ்சல் அனுப்பி அனுமதியினைப் பெற்றுக் கொள்ளவும்.  போட்டோ ஷாப் அல்லது வேறு பிக்சர் எடிட்டர் தொகுப்பில், டெக்ஸ்ட்டை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதி உண்டு; அதனைப் படத்தின் மீது மிதக்க விடலாம். அல்லது ஒரே இடத்தில் நிலைக்க வைக்கலாம். உங்கள் டெக்ஸ்ட்டுக்கு முப்பரிமாண நிலையையும் தரலாம்.
உங்கள் கற்பனைத் திறனுடன் டெக்ஸ்ட் அமைத்து அவற்றை ரசித்து மகிழுங்கள். உங்களுடைய, அல்லது இல்லத்தில் நடக்க இருக்கும் திருமண அழைப்பிதழைக்கூட, வடிவமைத்து மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி வைக்கலாம்.

பருவைக் கிள்ளாதே!

வெயில் காலம் என்றால் எண்ணெய் பசைத்தோல் கொண்டவர்களுக்கு சோதனையான ஒரு காலகட்டம். அவர்கள் என்னென்ன விதத்தில் கவனம் எடுத்துக் கொண்டால் தோலை நன்றாக பராமரிக்க முடியும் என்பதை கூறுகிறேன்.ஏற்கெனவே முகம் எண்ணெய்ப் பசைத் தன்மை உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் இன்னும் அதிகம் எண்ணெய் வழியும். காரணம்வெயிலின் சூ டு அதிகரிக்க, அதிகரிக்க எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. சோப்புக்கு பதில் முகத்தை சுத்தப்படுத்த தயிர் உபயோகிக்கலாம் என்று (பனி சீஸனுக்காக) நாம் யோசித்திருந்தோம். ஆனால் இந்த வெயில் சீஸனில் முகத்துக்கு எந்த காரணம் கொண்டும் தயிர் உபயோகிக்கக் கூடாது. காரணம் தயிரில் எண்ணெய் தன்மை அதிகம். ஏற்கனவே எண்ணெய் வழியும் முகத்தில் தயிர் தடவினால் இன்னும் அல்லவா மோசமாகப் போய்விடும்?

தயிரின் ஆடையை எடுத்துவிட்டு தண்ணீர் ஊற்றி மோராக்கிக் கொண்டு அதை வைத்து முகத்தை சுத்தப்பத்தலாம். அல்லது பாலில் இரண்டு சொட்டு எலுமிச்சை ஜூஸ் விட்டும் முகத்தை சுத்தப்படுத்தலாம். (தயிரோடு ஒப்பிட்டால் பாலில் எண்ணெய்ப் பிசு பிசுப்புத் தன்மை கம்மி).

நேரம் கிடைக்கும்போது முகத்துகு கீழ்கண்ட ஃபேஸ்பேக் போடுவதும் முகத்தின் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் குறைக்க உதவும். வெள்ளரிக்காயை கழுவிவிட்டு பொடிப்பொடியாக நன்றாக துருவிக் கொள்ளுங்கள். படுத்த நிலையில் அந்த துருவலை எடுத்து முகத்தில் புருவம் தவிர எல்லா இடங்களிலும் வருமாறு பரப்பி வைத்தபடி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே படுத்திருங்கள். அப்புறம் முகம் கழுவிக் கொள்ளலாம். முகம் குளிர்ச்சியாக இருக்க உடம்பும் குளிர்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். அதனால் வெளிலில் கிளம்பும்முன் ஒரு டம்ளர் மோரோ, எலுமிச்சை அல்லது தக்காளி ஜூஸோ குடித்துவிட்டுப் போங்கள். மேலே கூறிய ஃபேஸ்பேக்கில் வெள்ளரிக்குப் பதில் தர்பூசணியைகூட உபயோகிக்கலாம் அல்லது தக்காளியை வெட்டி அப்படியே முகத்தில் வைத்து நன்றாக மசாஜ் செய்துவிட்டு அது காய்ந்தபின் கழுவிக் கொள்ளலாம்.தக்காளியை முகத்தில் தேய்க்கும்போது ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். பருக்கள் இருந்தால் எந்தக் காரணம் கொண்டு முகத்தில் பருக்கள் இன்னும் நிறையத்தான் வரும். கல்லூரி படிக்கும் வயதில்தான் பருக்கள் அதிகமாக வருகின்றன. காரணம் அந்த வயதில் எண்ணெய் பசைசுரப்பிகள் முழு வீச்சில் சுரப்பதுதான். தவிர அந்த வயதில் ஏற்டும் ஹார்மோன் பிரச்சினைகளும் இதற்குக் காரணம். எப்படி பருக்களைச் சரிப்படுத்துவது? இரவு சாப்பிட்டபின் புதினாவை அரைத்து பருக்கள் இருக்கும் இடங்களின் மேல் மட்டும் தடவிக்கொள்ளுங்கள். இரவு அப்படியே தூங்கிவிடுங்கள். இப்படி செய்வதால் பரு அமுங்கி அப்படியே காய்ந்து போய்விடும்(காய்ந்து போய்விட்டதா என்று பருவைக் கிள்ளியெல்லாம் பார்ததுவிடாதீர்கள். எரித்து சாம்பலாக்கிய பின்னால்கூட சாம்பலிந்து ஃபீனிக்ஸ் பறவை திரும்ப உயிர்பெற்று வருமாம். அது மாதிரி பருக்களும் திரும்ப வந்து தொலைக்கும்) முகப்பருவை நீக்க மஞ்சள், வேப்பிலை அரைத்து குளிப்பதற்கு அரைமணி முன்பு முகத்தில் பூசலாம். சந்தனம், தேன் இரண்டையும் கலந்து குளிப்பதற்கு முன் முகத்தில் பூசி ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம். இதனால் முகப்பருக்கள் நீங்கும்.முகப்பரு உள்ளவர்கள் தினமும் எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். முகப்பரு உள்ளவர்கள் இனிப்பு உண்பதை தவிர்க்க வேண்டும். தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். சந்தன தைலத்தை முகப்பருவின் மேல் தடவினால் முகப்பரு பழுத்து உடையும்.
முகப்பரு வராமலிருக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்:

முகத்தில் பாலாடைகளை பூசிக்கொண்டு அரை மணிநேரம் கழித்து முகத்தை சுத்தமாக கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் ஒரு மாதம் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும, புதுப்பொலிவுடனும் காணப்படும். முகப்பரு வருவதும் தடுக்கப்படும்.

இளஞ்சூடாக உள்ள வெந்நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின் சுத்தமாக முகத்தை துணியைக் கொண்டு துடைக்க வேண்டும்.பிறகு ஆலிவ் எண்ணெயை முகத்தில் பூசிக் கொண்டு இரண்டொரு நிமிடம் நன்றாக ஊற வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் (ஐஸ் வாட்டராகஇருந்தாலும் பரவாயில்லை) முகத்தை கழுவி துடைத்து விடவும். இப்படி தொடர்ந்து செய்தால் முகப்பரு வருவது தடுக்கப்படும். கசகசாவை எலுமிச்சம் பழச்சாறுவிட்டு மை போல அரைத்து அடிக்கடி முகப்பருவின் மேல் தடவி வந்தால் பருக்கள் மறைந்து முகம் அழகு பெறும்.

முகம் ஜொலிக்கணுமா?

முகத்தை மசாஜ் செய்ய நீங்கள் பார்லருக்குத் தான் போக வேண்டும் என்பதில்லை.

வீட்டிலேயே செய்த கொள்ளலாம். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும்,ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்துகு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்யுங்கள்.
பஞ்சில் கிலென்சிஸ் மிக் அல்லது தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள்

பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் (Brand) நரிஸிங் க்ரீம் கிடைக்கிறது. உங்களுக்கு பொருந்தும் க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய்போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நரிஷிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக்கொள்ளுங்கள். கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்றுஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுகி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். மசாஜ் செய்து முடித்ததும் ஒரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். (சதை மேல் நோக்கி அழுத்துபடி தட்ட வேண்டும்.) பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளுங்கள். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பால் நரிஷிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும். எல்லாம் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு நொறுநொறுப்பான பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடஙகள் வரை கரகரப்பாக தேய்க்க வேண்டு. பின் மூக்கின் ஓரங்களில்  இருக்கும் பிளாக் ஹெட்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்களை நீக்கும் முயற்சி வேண்டாம் வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும். அதற்கு அழகுக் கலை நிபுணரைத்தான் அணுக வேண்டும். மேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும்.  முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது. எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள். பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். சருமம் மினுமினுப்பதைக் கண்டு பூரித்துப் போவீர்கள்.