Daily Archives: ஜூலை 16th, 2010

கண்ணீர்க் கால்வாய்!

சிலர் அழுதால்… கண்ணீர் ஆறாக ஓடும். அவ்வளவு கண்ணீர் உடலுக்குள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா…

கண்ணீர் தினமும் உற்பத்தியாகிறது. ஆனால் தினமும் வெளியேறுவதில்லை. அது கண்களை சுத்தபடுத்துகிறது. எஞ்சிய கண்ணீர் எங்கே செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? முக்குதான் கண்ணீர் செல்லும் கால்வாயாகும். சாதாரண நேரங்களில் குறைந்த அளவில் கண்ணீர் முக்கின் வழியாக வழிந்து ஆவியாகி விடுவதால் தெரிவதில்லை. துக்க வீட்டில் பெண்கள் அழும்போது அடிக்கடி முக்கை பிடித்துக் கொள்வதை பார்த்திருக்கலாம். அப்போது முக்கின் வழியாக வருவது கண்ணீரின் ஒரு பகுதிதான். கண்களுக்கு முக்குடன் இணைப்பு துவாரங்கள் இருக்கின்றன. இது கண்ணீரோடை போல செயல்படுகிறது.

வேர்ட் பேக் அப் வழிகள்

கம்ப்யூட்டரில் நாம் அதிகம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நாம் உருவாக்கிய ஆவணங்கள் மீண்டும் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. நாம் என்ன திருத்தங்களை மேற்கொண்டோம் என்பது நினைவில் இருப்பதில்லை. அப்போதுதான், அடடா! இதற்கான இறுதி நிமிட பேக் அப் பைல் இருந்தால் நல்லது அல்லவா! என்று எண்ணுகிறோம். வேர்ட் இதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. நாம் தான் அதனை செட் செய்திட வேண்டும். அவை குறித்து இங்கு காணலாம்.
வேர்ட் தொகுப்பு இரண்டு வகையான பேக் அப் பைல் காப்பிகளை உருவாக்க வழி தருகிறது. முதலாவது பேக் அப், நீங்கள் குறிப்பிட்ட பைலில் ஏதேனும் மாற்றங்களை உருவாக்கும் முன் அமைக்கப்படுவது. இன்னொன்று குறிப்பிட்ட காலத்தில் ஏற்படுத்தப்படும் பேக் அப் காப்பி.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007 தொகுப்பு வைத்திருப்பவர்கள் ஆபீஸ் பட்டன் அழுத்திப் பின்னர், வேர்ட் ஆப்ஷன்ஸ் செல்லவும். வேர்ட் 2010, ரிப்பனில் பைல் டேப் காட்டும். அதில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும்.)
2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் உள்ள  Advanced என்பதனைக் கிளிக் செய்திடவும்.
3. கீழாக உள்ள  Save பிரிவிற்குச் செல்லவும்.இதில்  Always Create Backup Copy என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
4. நீங்கள் விருப்பப்பட்டால்  Allow Background Saves என்ற பெட்டியிலும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தலாம்.
5. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.  இங்கு ஏற்படும் பேக் அப் காப்பி, நாம் திறக்கும் டாகுமெண்ட் பைலை எடிட் செய்வதற்கு முன் ஏற்படுத்தப்படும்  ஒரு காப்பி. இந்த பேக் அப் பைலின் துணைப் பெயர் மட்டும்  WBK என மாறும்.  அதாவது வேர்ட் இங்கே அந்த பைலுக்கு வேறு பெயரினைச் சூட்டிப் பத்திரமாக வைத்துக் கொள்கிறது. இந்த பைலை வேறு ஒரு இடத்தில் சேவ் செய்து வைத்துக் கொள்ளுமாறு செட் செய்திட முடியாது. டாகுமெண்ட் பைலுடன் இந்த பேக் அப் பைலும் ஒரே டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும். நீங்கள் டாகுமெண்ட்டை எடிட் செய்து சேவ் செய்திடுகையில், இறுதியாக மேற்கொள்ளப் பட்ட திருத்தத்துடன் பைல் சேவ் செய்யப்படும். அதற்கு முந்தைய நிலையில் இருந்த பைல், பேக் அப்பாக வைத்துக் கொள்ளப்படும்.  எனவே எத்தனை முறை நீங்கள் ஒரு பைலை சேவ்  செய்தாலும், இறுதி வடிவத்தில் ஒரு ஒரிஜினல் பைலும், இறுதி திருத்தத்திற்கு முற்பட்ட பேக் அப் பைல் என இரண்டு பைல்கள் மட்டுமே அந்த டாகுமெண்ட்டிற்கு இருக்கும்.
இன்னொரு வகையான ஆட்டோமேடிக் பேக் அப் பைலை நாம் உருவாக்கலாம். நாமாகவே, இவ்வளவு நிமிடங்களுக்குள் டாகுமெண்ட் டினை சேவ் செய்திடும்படி அமைக்கலாம். நாமாக, பைலை அவ்வப்போது சேவ் செய்திட மறந்துவிட்டால், பைல் தானாகவே சேவ் செய்திடப்படும். இது சேவ் செய்யப்படுவதனை நாம் உணர மாட்டோம். வேர்ட் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகி முடக்கப்படுகையில், தானாக சேவ் செய்யப்பட்ட பைல் நமக்குக் கிடைக்கும். அடுத்த முறை வேர்ட் தொகுப்பினை நாம் திறக்கையில்,  “Recovered” என்ற தலைப்பில் இறுதியாக சேவ் செய்யப்பட்ட பைல்கள் நமக்குக் கிடைக்கும்.  இந்த ஆட்டோ ரெகவர்  (AutoRecover) பேக் அப் வழியை நாமாக செட் செய்துவிடலாம்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007 தொகுப்பு வைத்திருப்பவர்கள் ஆபீஸ் பட்டன் அழுத்திப் பின்னர், வேர்ட் ஆப்ஷன்ஸ் செல்லவும். வேர்ட் 2010, ரிப்பனில் பைல் டேப் காட்டும். அதில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும்.)
2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் உள்ள   Save என்பதனைக் கிளிக் செய்திடவும்.
3. Save AutoRecover Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. வேர்ட் சேவ் செய்வதற்கான நீங்கள் விரும்பும் கால இடைவெளியை இங்கு அமைக்கவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை இங்கு அமைக்கலாம்.
5. நீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்து பவராக இருந்தால்,  Keep the Last Auto Recovered File If I Close Without Saving என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
6. மீண்டும், நீங்கள் விருப்பப்பட்டால், இந்த ஆட்டோ ரெகவர் பைல்களுக்கு, ஏற்கனவே வேர்ட் மாறாத நிலையில் வைத்திருக்கும், டைரக்டரி இடத்தை மாற்றி, நீங்கள் விரும்பும் டைரக்டரியை அமைக்கலாம்.
7. மாற்றங்களை ஏற்படுத்திய பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
உங்களுக்கு ஒரு எண்ணம் வரலாம். ஆவணங்களை நாம் உருவாக்குகையில், நாமாக அவ்வப்போது சேவ் செய்து விட்டால், இந்தப் பிரச்னை வராதே என்று நீங்கள் எண்ணலாம். இந்த எண்ணம் சரிதான். ஆனால் எத்தனை பேர் அடிக்கடி சேவ் செய்கிறோம். ஆவணத்தை உருவாக்கும் பணியில், நம் சிந்தனைப் போக்கிற்குத்தான் முதல் இடம் தருவோம். சேவ் செய்திட மறந்து போவோம். அல்லது நீண்ட கால இடைவெளியில், 15 நிமிடத்திற்கு ஒரு முறை, சேவ் செய்திடுவோம். மேலும் கம்ப்யூட்டர் இந்த வேலைகளை நமக்கென செய்திட முடியும் என்கிற போது, அதனை வேலை வாங்குவது தானே நல்லது. பேக் அப் பைல் இருந்தால், வேர்ட் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, பேக் அப் பைல்களைக் கொண்டு சரி செய்துவிடலாம்.

மகளிர் மருத்துவம் -சூதக வலி

பெண்கள் தான் நாட்டின் கண்கள்.  பெண்களின் நலமே குடும்பத்தின் நலம்.  இதனால்தான் பெண்களை தெய்வமாகப் போற்றி வந்தனர் நம் முன்னோர்கள்.

இயற்கையாக பெண்களுக்கு சில உபாதைகள் ஏற்படும்.  இக்காலக்கட்டங்களில் பெண்கள் தங்கள் உடலை பேணி பராமரித்தால் நோய்கள் ஏதும் அணுகாது.  பெண்கள் ஆரோக்கியமாக  இருந்தால்தான் அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

பெண்களுக்கு உண்டாகும் இன்னல்களில் சூதக வலியும் ஒன்று.   அதைப் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம்.

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றை இறுக்கிச் சுருக்குவதுபோல் தோன்றும்.  இந்த வேதனையால் மனதை எதிலும் நாட்டம் கொள்ள முடியாமலும், அன்றாட வேலைகளைக் கூட சரியாகச் செய்ய முடியாமலும் அவதிப்படுத்தும்.  இதையே சூதக வலி என்கின்றனர்.

இந்த சூதக வலி திருமணமான இளம் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.  திருமணமாகாத பெண்களையும் பாதிப்பதுண்டு. அதுபோல் பூப்பெய்தும் பருவம் உள்ள பெண்களுக்கு  அடிவயிற்றிலும், முதுகிலும் இந்த வலி அதிகமாக ஏற்படும்.  சில சமயங்களில் வாந்தி, குமட்டல் வயிற்றுப் பொருமல் போன்றவை தொடர்ந்து உண்டாகும்.

இக்காலங்களில் இவர்கள் அதிகம் மன அழுத்தம் கொள்வார்கள்.  எதிலும் நாட்டம் கொள்ள மாட்டார்கள்.  அடிக்கடி சோர்வுற்றுக் காணப்படுவார்கள்.  மற்றவரிடம் பேசும்போது எரிந்து விழுவார்கள்.    சில நேரங்களில் வேதனையில் அழக்கூடச் செய்வார்கள்.  வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் இதனை ஒரு கொடிய நோயாகவே கருதுகின்றனர்.  இதனால் சில பெண்கள் திருமணம் செய்துகொள்ளக் கூட தயங்குவார்கள்.  திருமணமான சில பெண்கள் கருத்தரிப்பதில் விருப்பம் இல்லாமல் இருப்பார்கள்.

சூதக வலியானது முதல்நிலை சூதக வலி, இரண்டாம் நிலை சூதக வலி  என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

முதல் நிலை சூதக வலி

இவ்வகை வலி எந்த ஒரு நோய் நிலைக்கும் உட்பட்டதாக இருக்காது.  பூப்புக் காலங்களில் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களாலும், வேதியல் மாற்றங்களாலும் உண்டாகலாம்.  இது மாதிரியான சூதக வலி பெரும்பாலும் பதினெட்டு முதல் இருபத்தி ஐந்து வயது வரை உள்ள மகளிருக்கே அதிகம் காணப்படும்.

இரண்டாம் நிலை சூதக வலி

இரண்டாம் நிலை சூதக வலியானது ஏதேனும் கூபக (ணீஞுடூதிடிண்) நோயினைத் தொடர்ந்து  ஏற்பட்டதாக இருக்கும்.

கருப்பையில் கழலைக் கட்டிகள், கருப்பையின் சளிச்சவ்வு பாதிப்படைந்த நிலை, சினைப்பை தாபிதம், சினைப்பை உள்கவச தாபிதம், கருப்பை இரண்டாக பிளவுபட்ட நிலை, கருப்பையின் தசை வலுவிழந்த நிலை, கருப்பை தாபிதம், பெரும்பாடு போன்ற நோய் நிலைகளில் சூதக வலி உண்டாகும்.

எனவே, சூதக வலி உண்டான ஆரம்ப காலத்திலேயே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்.  நோய்க்கு தக்க மருத்துவத்தை ஆரம்பத்திலேயே மேற்கொண்டால் தீவிர நிலைகளில் இருந்து தப்பிவிடலாம்.

இறுகிச் சுருக்கும் வலி

மாதவிடாய் காலங்களில் முதல் மற்றும் இரண்டாம் நாளில் இவ்வகை வலி தோன்றும்.  அடிவயிற்றில் சுருக் சுருக் என்று வலி தோன்றும்.  சில நேரங்களில் வலியானது தொடைகளுக்கும் பரவுவதுண்டு.

கஞ்சித சூதக வலி

இதில் மாதவிடாய் தோன்றும் பத்து நாட்களுக்கு முன்பே சூதக வலி உண்டாகும்.    இவ்வகை வலி கருப்பை நோய் தொற்றுகளாலும், கருப்பை கட்டிகள், கருப்பை உள்கவச  தாபிதம் போன்ற நோய் நிலைகளில் பெரும்பாலும் உண்டாகலாம்.

சளிச்சவ்வு சூதக வலி

இவ்வகையில் அடிவயிற்றில் மிகுந்த வலி தோன்றும்.  தலைவலி, மனச்சோர்வு கூட தொடர்ந்தாற் போல் ஏற்படும்.  முதலில் வலி ஏற்படும் பின்பு பூப்புக் கசிவு உண்டாகும்.  சளிச்சவ்வானது கட்டி கட்டியாக வெளியாகும்.  இந்நிலையில் மகளிர்க்கு உண்டாகும் வலியானது சிறு அளவிலும் தாங்கமுடியாததாக இருக்கும்.

குறிகுணங்கள்

சூதக வலியானது பெண்களில் எழுபது சதவீதம் பதின் பருவத்திலும் (கூஞுஞுண ச்ஞ்ஞு), முப்பது முதல் ஐம்பது சதவீதம் மற்ற வயது பெண்களுக்கும் உண்டாகும்.  இந்த வலியானது அநேகருக்கு தாங்கக்கூடிய அளவில் இருக்கும்.  எனினும் ஐந்து முதல் பதினைந்து சதவீதம் உள்ள பெண்களுக்கே அன்றாட வேலைகளைச்  செய்ய முடியாத நிலை உண்டாகலாம்.

புரோஸ்டோ கிளான்டின் என்னும் சுரப்பானது குருதியில் அதிகம் கலப்பதால்  இவ்வகை சூதக வலி உண்டாகும்.  இந்த வலியைத் தொடர்ந்து குமட்டல், வாந்தி, அடிமுதுகில் வலி, தலைச்சுற்றல், மயக்கம், மனச் சோர்வு அடைதல் போன்றவை உண்டாகும்.

பெரும்பாலும் பூப்பு அடைந்த 6 முதல் 12 மாதங்களுக்கு  தொண்ணூறு சதவீதம் பெண்களுக்கு சூதக வலி உண்டாகும்.  பின்பு நாட்பட்ட நிலையில் தானே குணமாவதும் உண்டு.

கணிப்பு

இகூ ஸ்கேன் , Mகீஐ ஸ்கேன், பெல்விக் சோனோகிராபி, ஹிஸ்டிரோஸ்கோபி, லேப்ரோஸ் கோபி, சோனோ சேல்பிங்கோ கிராபி போன்ற முறைகளால் கருப்பையின் நோய் நிலையைக் கண்டு அறியலாம்.

மருத்துவம்

சூதக வலியின் ஆரம்ப கட்டத்தில் கீழ்க்கண்ட மருந்துகளைப் பயன்படுத்தலாம்.  உளுந்து களி செய்து அடிக்கடி உண்டு வந்தால் இடுப்பு எலும்புகள் நன்கு வலுப்பெறும்.

கற்றாழை லேகியத்தை 5 கிராம் அளவு மூன்று மாதங்கள் தொடர்ந்து உண்டு வந்தால் கருப்பையின் அழுக்கு வெளியேறி கருப்பை நன்கு வலுவடையும்.

மாதுளை மணப்பாகு உண்டு வரலாம்.  இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

முருங்கைக் கீரை, அத்திப் பிஞ்சு, பேரீச்சம் பழம், திராட்சை, கரிசாலைக் கீரை, பனங்கற்கண்டு, இலந்தை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.