Daily Archives: ஜூலை 17th, 2010

வருமான வரிக் கணக்குச் செலுத்தத் தயாரா?

தனிநபர்கள், கூட்டுக் குடும்பங்களும், நிறுவனம் அல்லாதோரும் தங்களின் வருமான வரிக் கணக்கைச் செலுத்துவதற்கான கடைசித் தேதியான ஜூலை 31 நெருங்குகிறது. எனவே ஒவ்வொருவரும் அது தொடர்பான ஆவணங்களைத் திரட்ட வேண்டிய, வரி ஆலோசகர்களிடம் தேவையான ஆலோசனைகளைப் பெற வேண்டிய நேரம் இது.

2009- 2010-ம் நிதியாண்டுக்கு, சம்பளம் அல்லது ஓய்வூதியம் மூலம் வருமானம் பெறும் தனிநபர் வரிசெலுத்துவோர், ஒரு சொந்த வீடு உடையவர்கள் மற்றும் பிற வழிகளில் வருவாய் உள்ளவர்கள் தங்களின் வருமான வரிக் கணக்கை `ஐடிஆர்- 1′ (சரள்- II படிவம்) மூலம் செலுத்த வேண்டும்.

முதலீட்டு வருவாய்கள் அல்லது ஒன்றுக்கு மேல் வீடு சொந்தமாக உள்ள சம்பளதாரர்கள் `ஐடிஆர்- 2′ மூலம் வருமான வரிக் கணக்கைச் செலுத்த வேண்டும்.

நீங்கள் ஒரு `சார்ட்டட் அக்கவுண்டன்ட்’ துணையுடனோ, வருமான வரித் துறையின் இணையதளம் (www.incometaxindiafiling.gov.in) மூலமாகவோ, வருமான வரிக் கணக்குச் செலுத்த உதவும் வேறு இணையதளங்கள் மூலமாகவோ, வருமான வரிக் கணக்குப் படிவத்தை நிரப்பும் விதத்தை அறியலாம்.

தற்போது வருமான வரிக் கணக்கை மின் வழியில் (`ஈ பைலிங்’) செலுத்துவதற்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றி விரிவான விவரத்தை வருமான வரித் துறையின் இணையதளத்தில் காணலாம்.

65 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான வருமான வரி விலக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். 65 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான வருமான வரி விலக்கு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.

பொதுவாக, வருமான வரி செலுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ…

1. உங்களுக்கான வருமான வழியைப் பார்த்து, எந்த மாதிரியான வரி செலுத்துபவர் நீங்கள் என்று அறியுங்கள்.

2. பட்டியலில் உள்ள வருமான வரி செலுத்துவோர் வகையைப் பார்த்து, அதற்கேற்ற படிவத்தைத் தேர்வு செய்யுங்கள்.

3. படிவத்தை நிரப்பும் முன் அதை முழுமையாக, கவனமாகப் படியுங்கள்.

4. கறுப்பு மை பேனா அல்லது படிவத்தில் குறிப்பிடப்பட்ட நிற மை பேனாவைப் பயன்படுத்துங்கள்.

5. எழுதிய ஒன்றின் மீதே திருத்தி எழுதுவது கூடாது.

6. உங்களின் கல்விச் சான்றிதழ்களில் உள்ளபடி உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை நிரப்புங்கள்.

7. அங்கீகரிக்கப்பட்ட நபரின் கையெழுத்தை (அதற்கான பட்டியலைப் பார்க்கவும்) அதற்குரிய இடத்தில் இடச் செய்யவும்.

8. உங்களின் சொந்த PAN/ TAN/ GIR எண்ணைப் பயன்படுத்தவும்.

9. உங்களின் சரியான நிலையைத் தெரிவிக்க சரியான `ஆப்ஷன்கள்’, `கோடு’-ஐ பயன்படுத்தவும்.

10. எந்த ஆண்டுக்கு வருமான வரிக் கணக்குச் செலுத்தப்படுகிறது என்பது படிவத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். வருமான வரிக் கணக்கு ஆண்டு என்பது வரி செலுத்த வேண்டிய கடந்த நிதி ஆண்டாகும்.

11. உங்களின் அனைத்து வருமான வழிகளையும், வருமானத் தொகையையும் தெளிவாகவும், சரியாகவும் குறிப்பிடுங்கள்.

12. வருமான வரித் தள்ளுபடி, வரி விலக்குப் பெறுவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணையுங்கள்.

13. தவறான தகவல்கள் எதையும் படிவத்தில் நிரப்பாதீர்கள்.

14. படிவத்தை நிரப்பியதும் நீங்கள் நிரப்பிய தகவல்கள் அனைத்தும் சரியா, அதற்குரிய இடத்தில்தான் நிரப்பப்பட்டிருக்கிறதா என்று ஒருமுறை சரிபாருங்கள்.

15. வருமான வரி அலுவலகத்துக்குச் சென்று, குறிப்பிட்ட வருமான வரிக் கணக்கீட்டு அலுவலரிடம் உங்கள் படிவத்தைச் சமர்ப்பியுங்கள்.

முகப்பரு அற்ற வழுவழுப்பான முகத்தை பெற

பாசிப்பருப்பு 1 கிலோ, கஸ்தூரி மஞ்சள் 50 கிராம், சந்தனம் சிறிது ஆகிய மூன்றையும் நன்கு வெயிலில் காய வைத்து மாவாக அரைத்து தினமும் குளிப்பதற்கு அரை மணிமுன்  டீஸ்பூன் அளவு எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி அது காய்ந்ததும் நன்கு தேய்த்து குளித்து விடவும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்யப் பலன் தெரிய ஆரம்பிக்கும் ஆனால் முகத்தில் சோப்பு போடக்கூடாது.
வேப்பிலைப்பொடி, துளசிப்பொடி, புதினாப்பொடி தலா ஒரு … டீஸ்பூனும் முல்தாணிமெட்டி இரண்டு ஸ்பூனும் எடுத்துக் கொள்ளவும்.
மிதமான சூடு உள்ள தண்ணீரில் அவற்றை கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.
சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து அதில் சமஅளவு நீரைக் கலந்து முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
இரண்டு ஸ்பூன் ஓமவல்லி இலைச்சாறுடன் ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வரவும். விரைவில் பருத்தொல்லை நீங்கும்.
சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவினால் பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
தலா ஒரு ஸ்பூன் அறுகம்புல் பொடியும், குப்பை மேனி இலைப்பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம்.
பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும். 100 மில்லி நல்லெண்ணெயோடு 15 கிராம் மிளகுப்பொடி சேர்த்து சூடாக்கி முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.

பணத்தை சேமிப்பது எப்படி?

பணம் பத்தும் செய்யும். பணத்தை சேமிக்க விரும்பினால் நீங்களும் சில காரியங்கள் செய்ய வேண்டும்.

இளமையில் ஓடியாடி வேலை பார்க்கிறார்கள். வயதாகி ஓய்ந்து போகும் வேளையில் வயிற்றுபாட்டைத் தள்ளக்கூட வழியில்லாமல் போகிறார்கள் பலர். காரணம் எங்கேயோ செல்வத்தை கோட்டை விட்டிருக்கிறோம் என்பதுதான். குருவி சேர்பதுபோல கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தாலும், அவ்வப்போது வாழ்வில் வரும் காலச் சுனாமி அத்தனையையும் கரைத்து காலியாக்கி விட்டுச் செல்கிறது. எஞ்சியதில் கூழோ, கஞ்சியோ பார்த்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. இந்த வேதனையை தவிர்க்க இன்றே சேமிக்க ஆரம்பிக்கலாமே…!   சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம் தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.

முதலில் நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கவனித்து தவிர்க்க வேண்டியதை தவிருங்கள். பிறகு தானாக செல்வம் பெருகத் தொடங்கும். செல்போன் அழைப்புகளை தேவையான நேரத்தில் மட்டும் பேசுங்கள். கண்டிப்பாக குறிபிட்ட தொகை மிஞ்சும். ஒரு நாளில் பலமுறை காபி குடிப்பவராக இருந்தால் பிளாஸ்க்கில் எடுத்துச் சென்று பயன்படுத்துங்கள்.   சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை சேமிப்பது நல்ல வழி. வாரம் தோறும் அல்லது மாதம் தோறும் சிறு தொகையை சேமிப்புக் கணக்கில் போடலாம். அது `சிறுதுளி பெருவெள்ளம்’ எனும் பொன்மொழிக்கேற்ப பெருகி வளரும்.

சேமிப்பு பழக்கத்தை கடைபிடிப்பதன் முலம் உங்களின் நோக்கம் எளிமையாக நிறைவேறும். அது மேலும் சேமிக்கும் ஆவலைத் தூண்டும். முதலில் சேமிக்க பழகுவது கொஞ்சம் கடினமான காரியம். எனவே காலத்தை ஒத்திபோடாமல் அந்த சிந்தனை தோன்றிய இக்கணமே சேமிப்பை ஆரம்பிங்கள்.   வீட்டுச் செலவுக் கணக்கை எழுதுங்கள். பணத்தைச் சேமிக்க இதைவிட சிறந்த வழியில்லை. பணம் வரும் வழியும், போகும் வழியும் தெரிந்தால்தான் `பணம் எப்படித்தான் காலியாகுதோ’ என்று புலம்பும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.

பணம் வீணாகும் வழியை செலவுக் கணக்கு முலம் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். சேமிக்க முடியாமல் போனதற்கான காரணத்தையும் கண்டறிந்து விடலாம். பின்னாளில் நீங்கள் மனநிம்மதிடன் வாழ, இப்போதே நீங்கள் வீட்டுச் செலவை எழுத வேண்டும். நேற்று வரை இந்த பழக்கம் இல்லாதிருந்த இன்றிலிருந்தாவது வரவு செலவை குறிக்க பழகுங்கள்.   வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே. அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, உங்கள் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கபடும்.

வாழ்வெனும் போர்க்களத்தில் திடீர் பணத் தேவைகள் உங்களை சூழ்நிலைக் கைதியாக்கலாம். அப்போது மற்றவர்களை எதிர்பார்த்து மதில்மேல் பூனையாக தவிக்கும் நிலைமையை இது தடுக்கும். மொத்தமாக வாங்கிய சமையல் பொருட்களையும் தேவைக்கு ஏற்ப பக்குவமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்கக் கூடாது.   ஏமாறாமல் இருப்பதுவும் சேமிப்பு வழிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் சலுகை அறிவிப்புகள் வருவதை பார்க்கலாம். ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம், 50 சதவீதம் தள்ளுபடி என்று கவர்ச்சி அறிவிப்புகள் வருகின்றன. இவையெல்லாம் வியாபார தந்திரம் தான்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் உங்கள் சிந்தனை மழுங்கடிக்கபடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.ஆழமாக சிந்தித்து பார்த்தால் உண்மை விலை, தள்ளுபடி விலையை விடக் குறைவாக இருக்கும்.   பழமையில் பெருமை காண விரும்பினால் புதுமையாக பணம் சேமிக்கலாம். ஆமாம், ஏற்கனவே பயன்படுத்தபட்ட பொருட்களை செகட் ஹேண்டாக வாங்குவது பணத்தை மிச்சம் பிடிக்கும் சிறந்த வழியாகும்.

வாங்கிய ஓராண்டு காலத்திற்குள்ளாக புதிய காரின் விலை முன்றில் ஒரு பங்கு குறைந்து விடுகிறது. தரமும் தாழ்ந்து போவதில்லை. அப்படி இருக்கும்போது இரண்டாம் தரமாக வாங்கி பயன்படுத்துவதில் என்ன பிழையிருக்கிறது? போதிய அளவு சோதனை செய்து பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நமக்குத்தானே லாபம். எலக்ட்ரானிக் சாதனங்களையும், வீட்டு உபயோக பொருட்களையும் கூட இந்த இரண்டாம் பட்டியலில் சேர்க்கலாம்.   மேற்படிப்பை தொடர்கிறவர்கள் தங்கள் பொருளாதார நிலையை உத்தேசித்து புதிய புத்தகங்களை விலைக்கு வாங்கி படிப்பதை விட, பொதுநுலகத்தை பயன்படுத்தினால் செலவு கட்டுபடும். ஆனால் அத்தியாவசியம் என்னும் புத்தகங்களை மட்டும் விலை கொடுத்து சொந்தமாக வாங்கி விடுவது நல்லது.

டீ, காபி செலவு, நொறுக்குத் தீனி, ரெஸ்டாரண்ட் உணவுகள் போன்றவற்றின் செலவுக் கணக்கை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு முறை அவற்றை சொந்த தயாரிப்பில் உபயோகித்தால் எவ்வளவாகிறது என்பதையும் கணக்கு போட்டு பாருங்கள். இரண்டு நிலைக்கும் செலவில் எவ்வளவு வித்தியாசம் என்பது உங்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். அதோடு வீட்டு உபயோகம் என்பது நுறு சதவீத ஆரோக்கியமான விஷயமும் கூட.   வீணாக்காமல் பயன்படுத்துவதும் ஒரு சேமிப்புதான். நாம் வாழ்க்கை முழுவதும் நுகர்வோராகவே இருக்கிறோம். மற்றவைகளை அனுபவிப்பதன் முலமே நமது வாழ்க்கை நகர்கிறது. வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். சிலவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும். இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த முன்றையும் சரியாகச் செய்வதுதான் உண்மையான சேமிப்பாகும்.

மின்விளக்கு, விசிறி, ஏ.சி. போன்ற சாதனங்களை தேவைக்கேற்ப குறைவாக பயன்படுத்துவதன் முலம் நிறைய சேமிக்கலாம். மற்றவர்களுக்காக பகட்டாக காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருட்களை வாங்காமல் இருந்தால், அதுவும் சேமிப்புதான்.

பூமியின் மைய பகுதியில் என்ன இருக்கும்?

பூமியின் மையபகுதியை நோக்கிச் செல்லும்போது அழுத்தம் அதிகரிக்குமா? குறையுமா? வெப்பமாக இருக்குமா? குளிர்ச்சியாக இருக்குமா? பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் காற்றின் அழுத்தம் மட்டுமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், பூமிக்கு உள்ளே அந்த இடத்தின் மேலுள்ள பாறைகளின் அழுத்தமும், காற் றின் அழுத்தமும் சேர்ந்திருக்கும்தானே! இதனால் தான் சுரங்கத்தின் உள்ளே கூட அழுத்தம் அதிக மாக உள்ளது. பூமியின் மையபகுதியை நோக்கி செல்லச் செல்ல அழுத்தமும் அதிகரிக்கிறது; வெப்ப மும் அதிகரிக்கிறது. பூமியின் மையபகுதி வெப்ப குழம்பாக இருப்பது தான் இதுபோன்ற வெப்பத் துக்குக் காரணம்.

பெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது தான் பூமியின் உட்பரப்பு. அதன் உட்பகுதி திட பொருளாகவும், வெளிபகுதி திரவமாகவும் இருக்கும் என்று கருதபடுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் மேல் ஓடு குளிர்ந்து உறைந்து போய் விட்டது. அதுதான் நாம் இப்போது பார்க்கும் பாறைகள், குன்றுகள் மற்றும் மலைகள்.

பூமியின் உள்ளகத்தைச் சுற்றி சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பருமன் உள்ள `மாடில்’ எனும் அடுக்கு உள்ளது. இந்த அடுக்கின் பலம் குன்றிய சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்படும். அந்த விரிசல்களில் அவ்வப்போது பீறிட்டு எழும் நெருப்பு பிழம்புகள் தான் `எரிமலைகள்’.

ஸ்பைவேர் – ஆட்வேர் தடுப்பது எப்படி ?

கணினி பயன்படுத்துபவர்களை பயமுறுத்தும் விஷயங்கள் பட்டியலில், அதிகம் கவலைக்குள்ளாக்குவது ஸ்பைவேர், ஆட்வேர், மால்வேர் எனக் குறிப்பிடப் படும் தொகுப்புகளே.  இவை இன்டர்நெட் வழியாக, கம்ப்யூட்டர் உள்ளே வருவது நிச்சயமாகிவிட்ட ஒரு உண்மையாகும். ஆனால், இவை உள்ளே உள்ளனவா என்று தெரியாமலேயே நாம் இவை குறித்து அச்சம் கொண்டிருப்பது தான், கூடுதல் கவலையையும் வேதனையையும் அளிக்கிறது.  எந்த விஷயமானாலும், இன்டர்நெட் வழி தான் என்று ஆகிவிட்ட நிலையில், இது போன்ற ஆபத்துக் களிலிருந்து கூடுமானவரை பாதுகாப்பதற்குரிய வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அவை குறித்து இங்கு சுருக்கமாகக் காணலாம்.
1. ஸ்பைவேர் தடுப்பு: நீங்கள் ஏற்கனவே இதனைச் செய்திராவிட்டால், உடனே மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு இதுவாகும். உடனடியாக ஸ்பைவேர் தடுப்பு புரோகிராம்   (spyware blocker) ஒன்றை நிறுவுங்கள். இங்கு குறிப்பிடப்படுவது ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அல்ல. ஸ்பைவேர் என்பது வைரஸ் அல்ல. பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், ஸ்பைவேர் புரோகிராம்களைத் தடுப்பதில்லை. எனவே தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தாலும், ஸ்பைவேர்களைத் தடுக்கும் புரோகிராம்களையும் நாம் இன்ஸ்டால் செய்திட வேண்டும். செக்யூரிட்டி சூட்  (Security Suite) என்று சொல்லபடுகிற தொகுப்புகளில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர் புரோகிராம் மற்றும் பயர்வால் சேர்ந்தே கிடைக்கின்றன. ஆனால் இந்தவகை தொகுப்பு புரோகிராமினால், உங்கள் கம்ப்யூட்டர் இயக்கம் மெதுவாகிறது என்றால், தனித்தனியே ஒவ்வொரு தடுப்பிற்கும்,தனி புரோகிராமினை நிறுவலாம்.


2. பயர்வால்: மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே பயர்வால் தடுப்பு ஒன்றினைத் தருவது ஒரு நல்ல முயற்சியாகும். ஆனால், கூடுதல் வசதிகள் கொண்ட, சிறப்பாகச் செயல்படும் பயர் வால்கள் சில உள்ளன.  அவற்றைப் பயன்படுத்தலாம். ஒரு பயர்வால், உங்கள் கம்ப்யூட்டருக்குள் உங்கள் அனுமதி இன்றி, அல்லது உங்களுக்குத் தெரியாமலேயே நுழையும் எதனையும், அது ஸ்பைவேர், வைரஸ், மால்வேர், ஹேக்கர் போன்ற எதுவாக இருந்தாலும், அவற்றைத் தடுக்கிறது. பயர்வால் செட்டிங்ஸ் சில வேளைகளில் குழப்புவது போல் இருக்கும். எனவே தெளிவடைந்த பின்னரே, அதனை அமைத்துப் பயன்படுத்த வேண்டும். பயர்வால் அமைத்த பின்னர், அவை சரியாக உள்ளனவா என்று அறிய நீங்கள் Hackerwatch.org/ Malwarehelp.org என்ற இரண்டு தளங்களின் உதவியை நாடலாம்.


3. அப்டேட், அப்டேட்: உங்களுடைய செக்யூரிட்டி சாப்ட்வேர் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டால் தான், திடீர் திடீரென உருவாக்கப்பட்டு வரும் கெடுதல் அளிக்கும் புரோகிராம்களைத் தடுக்கலாம். விண்டோஸ் அப்டேட்ஸ், செக்யூரிட்டி அப்டேட்ஸ், பேட்ச்சஸ், டெபனிஷன்ஸ், உங்களுடைய பயர்வால், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர் புரோகிராம் ஆகிய அனைத்தும் அப்டேட் செய்யப்பட்டதாகவே இருக்க வேண்டும்.


4. பாதுகாப்பான இன்டர்நெட் பயணம்: இன்டர்நெட் பிரவுஸ் செய்வது, இப்போதெல்லாம் ஊர்ந்து, பறந்து, பாய்ந்து செல்லும் ஜீவராசிகள் வாழும் காட்டின் நடுவே  நடந்து செல்வது போல ஆகிவிட்டது. எந்த நேரத்தில் எந்த வைரஸ் அல்லது மால்வேர் வந்து நம்மைத் தாக்கும் என்று நமக்குத் தெரியாது. சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், நாம் இவற்றைத் தடுக்கலாம். இணைய தளங்களில் எந்த லிங்க்கிலும் கிளிக் செய்திட வேண்டாம். 25 நாளில் 25 கிலோ எடை குறைய, இங்கே கிளிக் செய்திடுக என்று உங்களைத் தூண்டும் வாசகம் இருக்கும். அதிலிருந்து ஓடிவிடுங்கள். பிரபலமான சினிமா நடிகை குறித்த சுவராஸ்யமான தகவல் குறித்து அறிவிப்பு இருக்கும். அலட்சியப்படுத்துங்கள். பாப் அப் விண்டோ எழுந்து வருகிறதா? அதில் இது போன்ற செய்தி உள்ளது. உடனே அதில் உள்ள எக்ஸ் அடையாளத்தில் கிளிக் செய்து, அதனை மூட முயற்சிக்காதீர்கள். அதில் கிளிக் செய்தால் கூட, அது ஆக்டோபஸ் போல உங்களை இழுத்துக் கொண்டு நாசப்படுத்தும். அதுதானே அப்போதைக்கு ஆக்டிவ் விண்டோ. எனவே ஆல்ட்+ எப்4 அழுத்துங்கள். அது உடனே மூடப்படும்.
இதே போலத்தான் இமெயில் செய்திகள் கொண்டு வரும் லிங்க்குகளும். எதனையும் தொட வேண்டாம். அதில் உங்கள் கர்சரைக் கொண்டு சென்றாலே, அது உங்களை இழுத்துச் செல்ல இருக்கும் தளத்தின் முகவரி காட்டப்படும். அதனைப் பார்த்தே, அந்த தளம் உண்மையானதா என்று தெரியவரும்.


5. புரோகிராம் இன்ஸ்டலேஷன்: பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் குறித்துத் தெரிந்து கொண்டு, அவற்றை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்கிறோம். அவற்றை இன்ஸ்டால் செய்திடும் முன், அதில் தரப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் படித்துவிடுங்கள். சில சிறிய அளவான எழுத்துக்களில், உங்கள்  பெர்சனல் தகவல்களைத் திருடுவதற்கான தகவல் இருக்கும்.


6. யூசர் ஐ.டி. திருட்டு: நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடுவது, இப்போது மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே யூசர் நேம் கூடுமானவரை குழப்பமானதாகவே இருக்கட்டும். அதே போல பாஸ்வேர்டுகளும், யாரும் எளிதில் கணிக்க முடியாததாக இருக்கட்டும்.
நல்ல ஸ்பைவேர் தடுக்கும் புரோகிராம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், பயர்வால், சரியான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட், அடிக்கடி அப்டேட்டிங் ஆகிய வற்றைக் கடைப்பிடித்தால், நம் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு பாதுகாப்பானது என்ற நல்ல நம்பிக்கையுடன் செயல்படலாம்.

நரகத் தீவு!

நரகத் தீவு!

பேய் பங்களா, 13-ம் நம்பர் வீடு என்பது போன்ற மர்ம மாளிகைகளின் கதைகள் மக்களிடம் நிறைய உலவும். பல்வேறு திரைபடங்களும் அந்த பீதியை மையமாக வைத்து வெளிவந்து திகிலை அதிகரிக்கும்.

நிஜமாகவே உலகம் முழுவதும் மிக அதிகமான மக்களை பீதி அடையச் செய்த சில இடங்கள் இருக்கின்றன. அங்கே நடக்கும் மர்ம உயிரிழப்புகள், உண்மை விளங்கா சம்பவங்கள் அருகில் வசிப்பவர்களை பயத்தில் பதற வைத்து வயிற்றைக் கலக்கும். கேட்டாலும், பார்த்தாலும் குலைநடுங்க வைக்கும் உலகின் அதிபயங்கர இடங்களைத் தெரிந்துகொள்ளலாம்…

பலி கொடுக்காததால் பலிவாங்குகிறது…

`மாக் சிலாட்’! சாத்தானின் பங்களா இது. அயர்லாந்து நாட்டில் இருக்கிறது. ஆரம்பத்தில் வழிபாட்டுத் தலமாகத்தான் இருந்தது. ஒருநாள் `எனக்கு ரத்தபலி வேண்டும்’ என்று மர்ம குரல் கேட்டதாம். மக்கள் அதிர்ந்துபோய் அன்றோடு வழிபாடு செய்வதை நிறுத்தினர்.

அதன்பிறகு `சாத்தானின்’ சேட்டைகள் ஆரம்பிக்க. அந்த பகுதியே ரணகளமானது. அடிக்கடி மர்ம மரணங்கள் நடந்தது. அங்குள்ள தரை பகுதியில் முத்தக்குறிகள் காணப்படும். மணலை நுகர்ந்து பார்த்தால் ரத்தவாடையும், பிணவாடையும் வீசும். இதனால் பீதி அடைந்த மக்கள் மறந்தும் கூட அந்தபக்கம் போவதில்லை.

கிரேபையர் கல்லறை

பழிவாங்கும் ஆவி…

ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் உள்ள `கிரேபையர் பைக் கிரேவ்’ என்ற சுடுகாடு இன்றளவும் பலரையும் திகிலூட்டி வருகிறது. பொதுவாகவே சுடுகாடு என்றால் மக்களுக்கு கொஞ்சம் அச்சம் வரும். சுடுகாடு பற்றி மக்கள் பேசும் கற்பனைக் கதைகள் யாவும் இங்கே நிஜமாக நடபதால் ஊரே மிரண்டுதான் கிடக்கிறது.

இந்த சுடுகாட்டு பகுதியில் திடீர் திடீரென்று குளிர்ந்த காற்றும், பிணம் எரியாதபோதும் திடீர் பிணவாடையும் வீசுமாம். அத்துடன் சமாதியில் இருந்து கூச்சல் சத்தமும் கேட்கிறதாம். சிலநேரங்களில் கண்ணாடி நொறுங்குவதுபோன்ற சத்தம் கேட்குமாம். நெருங்கிச் சென்றுபார்த்தால் கண்ணாடித் துண்டுகளும் காணப்படும்.

இப்படி நடப்பதால் இங்குள்ளவர்கள் இருட்டியபிறகு வெளியில் எட்டிக்கூட பார்பது கிடையாது. அதுமட்டுமில்லாமல் அடிக்கடி வீடுகள் இருக்கும் பகுதிக்குள்ளும் பேய்கள் வந்துவிடுமாம். ஜார்ஜ் மெக்கன்சி என்பவரின் கல்லறையில் ரத்தக்காட்டேறி குடியிருப்பதாக பலரும் நம்புகிறார்கள். இவர் மேலதிகாரியை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டபட்டு சித்திரவதை செய்து கொல்லபட்டார். அதற்கு பழிக்குபழி வாங்குவதற்காக ஆவியாக அலைவதாக மக்கள் கூறுகிறார்கள்.

மர்மத் தீவு

பலிவாங்கும் மர்மத் தீவு இது. அழகாக இருக்கிறதே என்று கப்பல், படகில் வருபவர்கள் அங்கே ஒதுங்கினால் பிணமாவது நிச்சயம். இன்னும் கூட மாதம்தோறும் மர்மமான முறையில் பலர் பலியாகிறார்கள். இந்தத் தீவு, பசிபிக் கடலில் சாமோயான் தீவு மற்றும் ஹவாய்யன் தீவுகளுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. `பால்மைரா’ என்பது இந்தத் தீவின் பெயராகும். ஆனால் மர்ம மரணங்கள் ஏராளமாக நடப்பதால் இது `நரகத்தீவு’ என்றே அழைக்கபடுகிறது.

இரண்டாம் உலகபோரின்போது கடல் வழியாக வந்த அமெரிக்க கப்பல்படையினர் பலர் இந்தத்தீவில் முகாமிட்டபோது மர்மமான முறையில் இறந்து போனார்கள். மயான அமைதியும், எப்போதும் இருக்கும் இருண்ட சூழலும் `நரகத் தீவு’ என்ற பெயருக்கு சரியாக பொருந்துவதோடு அனைவருக்குள்ளும் பீ(பே)தியைக் கிளப்பி வருகிறது.

வொயிட் சேபல்

செத்த பின்னும் மிரட்டும் மன்னன்

ஹிட்லரைபோல பிறரை கொடுமை செய்வதில் இன்பம் காணும் மன்னன் டிராகுலா. ருமேனியா நாட்டைச் சேர்ந்த 6-ம் டிராகுலா மன்னன் சித்ரவதை செய்வதில் பெயர்பெற்றவன். கூர்மையான ஊசிகளால் உடலை துளைபோடுவது கைதிகளுக்கு இவன் விரும்பிக் கொடுக்கும் தண்டனையாகும். கைதியின் உடலில் ஏராளமான இடங்களில் துளைபோடுவதால் கைதி துடிதுடித்து இறப்பதை டிராகுலா மகிழ்ச்சி பொங்க ரசிப்பான். ஒரு முறை துருக்கி நாட்டிற்கு எதிரான போரில் டிராகுலா சிறைபிடிக்கபட்டான். அவனை மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றபோது குதிரையில் இருந்து தவறிவிழுந்து இறந்து விட்டான்.

அவனது சித்ரவதை பங்களா பீதியின் நினைவுச்சின்னமாக இன்றும் நிலைத்து நின்று அவனது கொடூரத்தை நினைவுபடுத்தி வருகிறது.

கொலை நடக்கும் கலையரங்கம்

கைதிகளின் மரணதடனையை நிறைவேற்றும் கொலையரங்கம் இது. அந்தக் கலையரங்கில் ஆயிரக் கணக்கானவர்கள் கூடி இருப்பார்கள். நடுவில் உள்ள மேடையில் இரு கைதிகளை மோதவிடுவார்கள். இருவரில் ஒருவர் இறக்கும் வரை சண்டை தொடரும். சில வேளைகளில் சிங்கம், புலியுடன் கைதிகளை மோதவிடுவார்கள். இத்தாலி நாட்டில் உள்ளது இந்தக் கொலையரங்கம். இத்தாலி கொலோசியம் என்றால் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஏராளமானவர்கள் பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

டிராகுலா பங்களா

சாராவின் ரகசிய மாளிகை

சாரா வின்செஸ்டர் ஒரு இளம்பெண். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்தாள். அவள் ஒரு பங்களாவைக் கட்டி வந்தாள். இவளது குழந்தைகள் சிறுவயதிலேயே நோய்வாய்பட்டு இறந்துவிட்டன. சோதனைமேல் சோதனை வந்ததால் ஒரு பாதிரியாரைச் சந்தித்தாள்.

அந்த பாதிரியார், “உனக்கு சாபக்கேடு இருக்கிறது. உன் கணவர் போர்க்கருவிகள் செய்து கொடுத்ததால் இரண்டாம் உலகபோரில் ஏராளமானவர்கள் கொல்லபட்டனர். அவர்களின் ஆத்மாக்கள் உன் குடும்பத்தை பழி வாங்குகின்றன. அதுதான் உன் குழந்தைகள் இறக்கக் காரணம். அந்த ஆத்மாக்கள்தான் உன் பங்களாவில் வசிக்கின்றன.  அந்த பங்களாவை ஆவிகளுக்கு வசதியாகக் கட்டு. கட்டுவதை இடையில் நிறுத்தினால் இறந்துபோவாய்” என்றார்.

இதை நம்பிய சாரா, தனது பங்களா முழுவதும் நுற்றுக்கணக்கான ஜன்னல்கள், நுற்றுக்கணக்கான கதவுகளும் வைத்துக் கட்டினாள். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவும் ஆத்மாக்களின் கோபம் என்று எண்ணிய அவள் மேலும் ஜன்னல், கதவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தாள். பங்களா கட்டி முடிக்கும் முன்பே சாரா இறந்துவிட்டாள்.

இன்றளவும் இது சுற்றுலா பயணிகளை திகைக்கவும், ஆச்சரியபடவும் வைக்கும் மாளிகையாகத் திகழ்கிறது. இந்த பங்களாவில் எத்தனை ஜன்னல்கள், கதவுகள் இருக்கின்றன என்று (சாதாரணமாக) எண்ணிச் சொல்வது முடியாத காரியமாகும்.

சாரா மாளிகை

மர்மக் கொலைகளின் தாய்வீடு

கிழக்கு லண்டனில் `வொயிட்சேபல்’ என்ற ஒரு கட்டிட வளாகம் இருக்கிறது. ஒரு வழிபாட்டுத் தலம்போல காணபடும் இந்த பகுதி, உலகில் அதிக குற்றம் நடைபெறும் ஒரு பகுதியாக இருக்கிறது. இங்கே 19-ம் நுற்றாண்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் மர்மமான முறையில் கற்பழிக்கபட்டு கொல்லபட்டு உள்ளனர். சிலர் கொடூரமான ஆயுதத்தால் உடல் வெட்டி பிளக்கபட்ட நிலையில் இறந்திருக்கிறார்கள். இப்பகுதியில் வினோத ஆத்மாக்கள், கொடூர ஆயுதங்களுடன் அலைவதாக நம்பபடுகிறது.

ஹிட்லரை பழிவாங்க…

போலந்து நாட்டில் ஜெர்மன் சர்வாதிகாரியான ஹிட்லரின் கைதிகள் சித்ரவதை முகாம் இருக்கிறது. `ஆஸ்விட்ச்-பிர்க்கெனா கான்சென்ட்ரேசன் கேம்’ என்ற இந்த முகாமில் லட்சக்கணக்கான யூதர்கள் கொடுமை செய்யபட்டு கொல்லபட்டனர். இங்கு இறந்தவர்களின் ஆத்மாக்களெல்லாம் பழி வாங்கும் எண்ணத்தில் திரிவதாக கூறுகிறார்கள். இதேபோல் சீனாவில் `மஞ்சூரியா’ என்ற இடத்தில் உள்ள மற்றொரு நாசி கைதிகள் முகாமிலும் 21/2 லட்சம் பேர் ஹிட்லரின் வெறிக் குணத்துக்கு பலியானார்கள்.

இங்கு நினைவுச் சின்னம்போல அடுக்கி வைக்கபட்டிருக்கும் மண்டை ஓடுகளை பார்த்தால் இன்றும் பார்பவர்கள் மனதுக்குள் கிலி ஏற்படுகிறது.