ஆம்புலன்ஸ்

1809-ம் ஆண்டு நடைபெற்ற போரில், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர் பிரெஞ்சுக்காரர்கள். நடக்க முடிந்தவர்கள், ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்ல முடிந்தவர்களை போர்க்களத்திற்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து முதலுதவி அளித்தனர். பிரெஞ்சு மொழியில் `நடத்தல்’ என்பதற்கான சொல் ஆம்புலேர் ((Ambulare). அதற்கு இணை யான ஆங்கிலச்சொல் (Amble) என்பதாகும்.

1942-ம் ஆண்டுகளில் `உதவி வேண்டுவோருக்கான புகலிடம்’ என்ற பொருளில் ஹாஸ்பிடல் என்ற சொல் வழங்கி வந்தது. `உதவி வேண்டுவோர் நடந்தோ அல்லது சுமக்கபட்டோ சென்றடையும் இடம்’ என்பதே ஆம்புலன்ஸ் என்பதன் நேரடியான மொழிபெயரப்பாகும்.

19-ம் நுற்றாண்டின் இடைக்காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில், காயமடைந்த வீரர்கள் குதிரைகளால் இழுக்கபட்ட வாகனங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். அந்த வாகனங்கள் `ஆம்புலன்ஸ்’ என்று அழைக்கபட்டன. தமிழில் இதை `அவசர ஊர்தி’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இதன் முலம் பாதிக்கபட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், ஏராளமான உயிர்கள் காப்பாற்றபடுகின்றன.

%d bloggers like this: