‘பளிச்’ முகத்துகு பலவித மாஸ்க்

ஃபேஸ் மாஸ்க் முகத்திற்கு மிகவும் நல்லது. அது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தின் துவராங்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கிறது. அழுக்குகளை நீக்கி முகத்தை மிருதுவாக்கிறது.
மாஸ்கில் இறுகும் தன்மையுடைய செட்டிங் மாஸ்க்(கடலைமாவு, முல்தானி மெட்டி மாஸ்க்),  இளகும் தன்மையுடைய நான்செட்டிங்க மாஸ்க் (கத்தாழை மாஸ்க்) என்ற இரு வகைகள்
உள்ளன. செட்டிங் மாஸ்க்கை 20 வயதிற்கு மேல் உள்ளவர்கள்தான் பயன்படுத்த வேண்டும்.
அதற்கு கிழ் உள்ளவர்கள் நான்செட்டிங்க மாஸ்கை உபயோகிக்கவும்.

யார் யார் ஃபேஸ் மாஸ்க் செய்து கொள்ளலாம்?
1. எண்ணெய்ப் பசை முகம் உள்ளவர்கள்.
2. டயட்டில் இருந்து திடீரென்று இளைத்தவர்களுக்கு முகம் தொங்கிப்போய் காணப்படும்.
அவர்களுக்கு ஃபேஸ் மாஸ்க் மிகவும் நல்லது.
3. உடல் நலம் சரியில்லாமல் சருமம் சோர்ந்து காணப்படுபவர்கள்.
4. அதிக வெயில், அதிக குளிரான இடங்களில் வசிப்பவர்களுக்கு மாஸ்க் ரொம் உபயோகமாக  இருக்கும்.
அக்கி, படை, சொரி போன்ற சரும நோய் இருப்பவர்கள் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தகூடாது.

%d bloggers like this: