Daily Archives: ஜூலை 20th, 2010

இந்த வார இணையதளம் – போட்டோ எடுக்கக் கற்றுக்கொடுங்கள்

டிஜிட்டல் கேமராக்கள் வந்த பின்னர், சிறுவர்கள் கூட இப்போது போட்டோ எடுக்கத் தொடங்கிவிட்டனர். எனவே இவர்களுக்குச் சிறந்த முறையில் போட்டோ எடுப்பது குறித்துக் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிறுவர்கள் மட்டுமின்றி, தொழில் ரீதியாக இல்லாமல் போட்டோ எடுக்கும் அனைவருக்கும் நல்ல வகையில் போட்டோ எடுப்பது குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. இதற்கான தளம் ஒன்று இணையத்தில் உள்ளது. இதன் முகவரி http://www.betterphoto.com/photography-for-kids.asp இந்த தளத்தில் நுழைந்தவுடன் மிக எளிய முறையில் டிப்ஸ்கள் தரப்படுவதனைக் காணலாம். பல வகையான போட்டோக்களைக் காட்டியே, இளைஞர்களுக்கு போட்டோ எடுப்பது குறித்த தகவல்கள் மனதில் பதிய வைக்கப்படுகின்றன. குறிப்புகள் அதிகமாக தொழில் நுட்ப ரீதியாக இல்லாமல், எளிமையாக இருப்பதுவும் இவற்றின் சிறப்பாகும். வேடிக்கையான போட்டோக்களை எப்படி எடுப்பது என்று காட்டுவதன் மூலம், பார்ப்பவர்களின் ஆர்வம் தூண்டப்பட்டு, தகவல்கள் தரப்படுவது இந்த தளத்தின் இன்னொரு சிறப்பாகும். கேள்வி பதில் பகுதியில் சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படும் சந்தேகங்கள் அனைத்தும் தெளிவாக்கப் படுகின்றன. நீங்கள் போட்டோ எடுப்பது குறித்து அறிய விரும்பவில்லை என்றாலும், இதில் உள்ள ஆர்வம் ஊட்டும் தகவல்களுக் காகவும், சிறப்பாக எடுக்கப் பட்ட போட்டோக்களுக்கா கவும், இந்த தளத்தினைப் பார்வையிடலாம்.

அதிக தொலைவில் இருக்கும் பொருள்

கிசார் என்பது, நம் அண்டவெளியில் இருக்கும் மிக அடர்த்தியான, ஆனால் மிக அதிக தூரத்தில் இருக்கும் ஒரு பொருள். அதிலிருந்து நமக்கு ஔ வருகிறது. ஏறத்தாழ 100 கோடி ஔ வருடங்களுக்கு அப்பால் இருந்து இந்த ஔ வருகிறது. அவ்வளவு தூரத்தில் இருந்தாலும், மிகபிரகாசமான ஒளியாக இருக்கிறது.

தொலைநோக்கி முலமாக கிசாரை பார்க்கும்போது, மிக அருகில் இருக்கும் ஔ குறைந்த நட்சத்திரம் போலத் தோன்றும். ஆனால், எவ்வளவு தூரத்தில் இருக்
கிறது என்பதைக் கணக்கிட்டு அறியும்போது, இது அதிகமான ஔ பொருந்தியதாக இருக்கும் எனத் தெரிகிறது.

இன்னும் சொல்ல போனால், பால்வீதி மண்டலத்தில் உள்ள எல்லா நட்சத்திரங் களின் மொத்த பிரகாசத்தைவிட, இதனு டைய பிரகாசம் அதிகமாக இருக்கிறதாம். கிசி ஸ்டெல்லார் ரேடியோ சோர்சஸ் என்பதன் சுருக்கமே `கிசார்’ என்பதாகும்.

கிசார் ஏன் ஏராளமான ஆராய்ச்சியாளர் களை ஈர்த்துள்ளது என்றால், நீண்ட தொலைவில் இருந்தாலும், அதிக பிரகாசத்துடன் விளங்குகிறது. ஆகவே இங்கு என்ன நடக்கிறது என்பதை பூமியில் இருந்து கொண்டு ஆராய்வதில் பல நன்மைகள் உள்ளன.

இது ஏறத்தாழ சில 100 கோடி ஔ ஆண்டுகளுக்குத் தள்ளியுள்ள நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியாகும். கிசாரை பார்பது என்பது, இந்த அண்டமானது சில 100 கோடி வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ, அதை இப்போது பார்பதற்கு ஒப்பாகும். அதாவது, இறந்த காலத்தைத் திரும்பி பார்பதற்கு ஒப்பாகும்.

எனவே, இதை பார்க்கும்போது மகா வெடிப்பிற்கு பிறகு நிகழ்ந்த அபூர்வமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா மவுஸ் ஏன் ? எதற்காக ?

கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ்தான். சிறிய அம்புக்குறி போன்ற கர்சரை மானிட்டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல்படுத்துகிறோம்.   இவற்றில் இடது பட்டன்   அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இதனை அழுத்திக் கிளிக் செய்வதனையே ஆங்கிலத்தில் ‘leftclicking’ எனக் கூறுகின்றனர்.  ஏதாவது ஒரு பைல் அல்லது இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றால் மவுஸின் அம்புக் குறி முனையை பைல் பெயர் அல்லது செயல்படுத்தும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று இந்த இடது பட்டனை இருமுறை கிளிக் செய்தால் உடனே பைல் இயக்கத்திற்கு வந்துவிடும்.  இதே போல ஒரு விண்டோவினை மூட, சிறியதாக்க இந்த மவுஸின் முனையை அதற்கான இடத்தில் கொண்டு சென்று அழுத்தினால் போதும்.  ஒரு முறை கிளிக் செய்து அப்படியே பட்டனை விடாமல் மவுஸை இழுத்தால் நாம் தேர்ந்தெடுத்த பைல் அல்லது டெக்ஸ்ட் அப்படியே இழுபடும். அதனை நாம் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சென்று பட்டனை அழுத்துவதிலிருந்து எடுத்துவிட்டால் அந்த பைல் அல்லது டெக்ஸ்ட் விட்ட இடத்தில் அமர்ந்துவிடும்.  டெக்ஸ்ட் உள்ள டாகுமெண்ட்டில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று எந்த இடத்தில் விடுகிறோமோ அந்த இடத்தில் நீங்கள் டைப் செய்யத் தொடங்கலாம்.
வலது புறத்தில் உள்ள பட்டன் பொதுவாக சிறிய மெனு ஒன்றைக் கொண்டு வர உதவுகிறது. குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் படங்களில் மாற்றங்கள் செய்திட அவற்றைத் தேர்ந்தெடுத்தபின் அதில் மவுஸின் கர்சரை வைத்து வலது பட்டனை அழுத்தினால் அதற்கேற்ற மெனு கிடைக்கும். அதில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான பிரிவுகள் கிடைக்கும். அதில் எந்த பிரிவைச் செயல்படுத்த வேண்டுமோ அதில் கர்சரை வைத்து இடது கிளிக் செய்தால் போதும். இத்தகைய மெனுக்களில் நாம் செயல்படுத்த சில பொதுவான கட்டளைகள் கிடைக்கும்.

அவை: – Open: டபுள் கிளிக் செய்து செயல்படுத்தும் பணியினை இந்த பிரிவில் கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம்;   தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது படத்தை நீக்குவதற்கு;

Copy: : இதில் கிளிக் செய்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள் காப்பி ஆகும். பின் அதனை எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக் கொள்ளலாம். 

Create Shortcut: குறிப்பிட்ட புரோகிராம் அல்லது பைலுக்கான குறுக்கு வழி ஒன்றை அமைத்திட இது உதவும். இதனை உருவாக்கிவிட்டால் அப்போது கிடைக்கும் ஐகானில் கிளிக் செய்து அதற்கான புரோகிராமை இயக்கலாம்; பைலை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். 

Delete: நிரந்தரமாக நீக்கிட

Rename: பைல் அல்லது புரோகிராமிற்குப் புதிய பெயர் தர  மற்றும் 

Properties: பைல் அல்லது புரோகிராம் குறித்த அதன் தன்மைகளை அறிய இது உதவுகிறது. மவுஸின் நடுவே சிறிய உருளை ஒன்று இருப்பதைப் பார்ப்பீர்கள்.  டெக்ஸ்ட்டில் நாம் மேலும் கீழும் செல்ல இது உதவும். என்டர் அழுத்தி நாம் கீழே செல்லுவோம். அல்லது ஆரோ கீகளை அழுத்தி மேலே செல்வோம். அந்த வேலையை எளிதாக மேற்கொள்ள இந்த வீல் உதவுகிறது.

பண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்

சாதனை செய்யும் ஆசையில், இளைய சமுதாயம், மனரீதியிலும், உடல்ரீதியிலும் பாதிக்கப்படுவதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

நம் நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், வேலைவாய்ப்பும் பெருகி விட்டது. ஒரு டிகிரிப் படிப்பு முடித்தாலே,  கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது.
சாதிக்க துடிக்கும் ஆவலுடன், இளைஞர்கள், கால நேரம் பாராது உழைக்கின்றனர். இதனால்,  மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.  முதுமைக்குரிய உடல் பாதிப்புகள், அவர்களுக்கு நடுத்தர வயதிலேயே ஏற்படுகிறது.

பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் அதிகாரியாக வேலைபார்க்கும் சதீஷ் என்பவர் கூறியதாவது:நான் கடந்த ஏழு ஆண்டுகளாக, இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் திறமையால் பல பணி உயர்வுகளையும், எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சிய சம்பளத்தையும் பெற்றேன்.பணி நிமித்தமாக,  பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருகிறேன். எனக்கு தற்போது 32 வயதாகிறது. ஆனால் நான், அந்திம காலத்தை நெருங்கிவிட்டது போல உணர்கிறேன். பணிச்சுமையால் மன ரீதியிலும்,உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். வாழ்க்கையில் மாற்றத்தை விரும்புகிறேன். எனவே வேலையை விட்டுவிட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு சதீஷ் கூறினார்.

இதே போன்று, பெரும்பாலான இளைஞர்கள், பணிச்சுமையால் மன அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து விமான்ஸ் மருத்துவமனை மனோதத்துவ நிபுணர் சமீர் பரிகார் கூறியதாவது: கைநிறைய காசு சம்பாதிக்கும் ஆசையில், இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சேர்கின்றனர். தொடர்ந்து திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், வேலைப்பளு, நிச்சயமற்ற பணிச் சூழல் ஆகியவற்றால், குறுகிய காலத்தில் அவர்கள் மன அழுத்த நோய்க்கு ஆட்படுகின்றனர்.தற்போதைய வாழ்க்கை சூழலில்  இளைஞர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. வசதியான வாழ்க்கை அமைய, 32  வயதுக்குள், அள வுக்கு அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.  குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தைவிட, அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் அவர்கள், மன அழுத்த நோய்க்கு ஆட்படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.தற்போதைய வாழ்க்கை முறையில், எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது. அதை  அடைவதற்கு இளைய சமுதாயத்தினர், அதிக “ரிஸ்க்’குகளை எடுக்கின்றனர். இதனால் அவர்கள் இளம் வயதிலேயே முதுமையை உணர்கின்றனர். இவ்வாறு சமீர் கூறினார்.

“மன அழுத்த நோயை தவிர்க்க, தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அலுவலகத்திற்கும் இடையில் சமநிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்; வாழ்க்கையில் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரும் பழக்கத்தை விட்டொழித்து சுமூகமாக அணுக பழகி கொண்டால், மன அழுத்த நோய் நம்மை அண்டாது’ என, நிபுணர்கள் தீர்வு கூறுகின்றன

கர்ப்பகால மார்பக பராமரிப்பு…

கருவுற்ற பெண் தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் அல்லது ஏற்கனவே இருந்த நோய்கள், அவற்றின் பாதிப்புகள் போன்றவற்றை முதலிலே அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்திருந்தால், அதுபற்றிய விவரங்களை டாக்டரிடம் தெரிவிக்க வேண்டும். இதயநோய்கள், சிறுநீரகக்கோளாறு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, மரபு நோய்கள், காசநோய், பிற நோய்களின் பாதிப்புகள், முற்காலக் கருச்சிதைவு, கருக்கலைப்பு, குறைபிரசவம், ஆயுதங்கள் உதவியுடன் மேற்கொண்ட மகபேறு, `சிசேரியன்’ எனப்படும் அறுவை சிகிச்சை முலம் மகபேற்றினை நிறைவு செய்திருப்பது, ஏற்கனவே ரத்தம் செலுத்தியிருப்பது போன்றவை பற்றிய விவரங்களும் தெரிவிக்கபட வேண்டும். இவைகளால் பிரசவத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். முதலிலே டாக்டரிடம் இவைகளை தெரிவித்தால் சிக்கல்கள் ஏற்படாது. குள்ளமானவர்களுக்கும், கால்கள், இடுப்பு போன்ற பகுதிகளில் குறைபாடுகள், ஊனங்கள், இளம்பிள்ளை வாதம் போன்ற பாதிப்பு கொண்டவர்கள் முதலில் இருந்தே நன்றாக கவனிக்கத் தகுந்தவர்கள். இடுப்பு மற்றும் பிறப்பு வழிபாதைகளில் அமைந்த எலும்புகள் குறுகலாகவும், சிறியதாகவும் இருந்தால் பிரசவத்தில் சிக்கல் எற்படக்கூடும் என்பதை முதலிலே உணர்ந்து கொள்ள வேண்டும். மார்புக் காம்புகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அவற்றில் புண், வெடிப்பு, மார்பகக்கட்டி போன்றவை இருந்தால் மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தையின் தாய், தந்தையரின் ரத்தபிரிவுகளை தெரிந்திருக்க வேண்டும். ஜன்னி, வலிப்பு நோய் வராமலிருக்க முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கை எடுக்கவேடும். ரத்த அழுத்த நிலைகள் சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் இருப்பின், உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்கள் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரத்து 800 கலோரி வரை உணவு சாப்பிட வேண்டும். குறிப்பாக, நான்காவது மாதத்திலிருந்து மகபேறு காலம் வரையும், அதைத் தொடர்ந்தும் அதிக அளவிலான சத்தான உணவு வகைகள் சாப்பிட வேண்டும்.

நன்றி-தினதந்தி

வாயில்லா ஜீவன்களுக்காக-ஆன்மிகம்

மனிதன் முதல் புழு, பூச்சி வரையில் உள்ள சகல ஜீவராசிகளும், ஏதோ ஒரு காரணமாக பிறக்க நேரிடுகிறது என்பர். அப்படி பிறவி எடுத்த ஜீவன்களில், மனிதர் மட்டுமே அறிவு பெற்றவர்களாகவுமிருந்து நற்கதியடையவே விரும்புவர்; இதர ஜீவன்களுக்கு, இப்படியொரு எண்ணம் ஏற்பட வழியில்லை. அதிக பாவம் செய்த இப்படிப்பட்ட ஜீவன்கள் கர்ம வினைப்படி, பல ஜென்மமெடுத்து வினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமாம்.
ஏதோ அபூர்வமாக ஒரு சில ஜீவன்கள்… யானை, கோழி, சிலந்தி போன்றவை, ஏதோ ஒரு மகானின் அருள் பெற்றோ, புண்ணிய தீர்த்தங்களின் சம்பந்தத்தாலோ நற்கதி அடைந்ததாக புராணங்களிலும், சரித்திரங்களிலும் காண்கிறோம். இப்படிச் செய்தால் நமக்கு நற்கதி கிடைக்கும் என்று நம்பி, சில காரியங்களைச் செய்கிறோம்.
ஒரு மகான் இருந்தாராம். அவருக்கு ரொம்பவும் இளகிய மனசு. சிறு ஜீவன்களிடம் அன்பும், இரக்கமும் உள்ளவர். சாப்பிடும்போது எதிரில் எது வந்தாலும், அதற்கும் சிறிது போடுவார். “பாவம்… அதுவும் ஒரு ஜீவன் தானே…சாப்பிடட்டும்!’ என்பார்.
ஏதாவது ஒரு ஜீவன், நாயோ, பூனையோ, ஆடோ, மாடோ விபத்தில் அடிபட்டு இறக்க நேரிடுவதைப் பார்த்தால், ரொம்பவும் வேதனைப்படுவார்… “பகவானே… இதற்கு நல்ல கதியை கொடுப்பா!’ என்று பிரார்த்திப்பார். இதென்னடா பைத்தியக்காரத்தனம் என்று, மற்றவர் எண்ணலாம்.
ஆனால், அவர்,  “ஐயா… இந்த ஜீவனுக்கு நல்ல கதியைக் கொடு…’ என்று  நாம் மனமாற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இந்த ஜீவனுக்கு மரண காலத்தில் பகவான் நாமாவைச் சொல்லவோ, எண்ணவோ முடியாது. இந்த ஜீவனின் மரண காலத்திலாவது, நாம் பகவானிடம் இதற்கு நல்ல கதியைக் கொடு என்று பிரார்த்திக்கலாமே!
“நம்முடைய பிரார்த்தனையை ஏற்று, பகவான் அதற்கு நற்கதியளித்தால் அளிக்கட்டுமே! ஒரு ஜீவன் நற்கதியடையும்படி செய்த புண்ணியமாவது கிடைக்கட்டும். புண்ணியம் இல்லாவிட்டாலும் ஒரு ஜீவன் நற்கதி பெறட்டுமே!’ என்பார்.
இப்படி துன்பப்படும் ஜீவன்கள் எதைக் கண்டாலும் அவர் பிரார்த்திப்பது வழக்கம். மனிதர்களில் எத்தனை பேர் இப்படி, பிற ஜீவன்களுக்காகப் பிரார்த்திக்கின்றனர். ரொம்ப, ரொம்ப அபூர்வம். நல்ல உள்ளம் கொண்ட ஓரிரு நல்லவர்களே உள்ளனர் எனலாம். அவர்களிடம் தான் இந்த குணம் உண்டு!