Daily Archives: ஜூலை 23rd, 2010

இதமான `பின்’ இணைப்பு

முன்னழகிலும், பின்னழகிலும் எல்லா பெண்களும் கவனம் செலுத்துகிறார்கள். சற்று அழகு குறைந்திருப்பவர்களும் அதனை மேம்படுத்திக் கொள்ள ஆசைபடுகிறார்கள்.

பின்னழகை மேம்படுத்த நவீன `பம்பேடு’கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை ஆபரேஷன் செய்து பொருத்திக் கொள்ள வேடிய அவசியம் இல்லை. சாதாரணமாக உள்ளா டைகளுடன் சேர்த்து அணிந்து கொள்ளலாம்.

சீனாவில் தயாரிக்கபட்டு இங்கு இறக்குமதி செய்து விற்பனையாகிறது. மொத்த விற்பனைக் கடைகள், பெரிய ஷாப்பிங் சென்டர்களில் இவை கிடைக்கும். பஞ்சு மற்றும் சிலிகான் தகடுகள் என இருவகை பேடுகள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஒவ்வொருவரின் சரும நிறத்திற்கும் ஏற்ற வகையில் பல நிறங்களில் பேடுகள் கிடைக்கும். இடை மெலிந்த ஆண், பெண் இருபாலரும் அணியலாம். ஒரு பேடை 30 தடவை பயன்படுத்தலாம். பஞ்சு பேடு ஆயிரத்து 500 ருபாய்க்கும், சிலிகான் பேடு 2 ஆயிரம் ருபாய்க்கும் கிடைக்கிறது.

“பின்பகுதி என்பது மற்றவர்களை ஈர்க்க அல்ல. அதனை மேம்படுத்துவது எங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. என் காதலர்தான் இப்படி `பம்பேடு’ இருப்பதை என்னிடம் கூறி அணியச் சொன்னார். இப்போது என் பின்னழகு என்னை பெருமைபட வைக்கிறது” என்கிறார், மும்பை பெண் அனித்ரா.

உலர்ந்த சருமத்திற்கு சிகிச்சை

பொதுவாக பெண்களுக்கு முப்பதைந்து வயதிற்கு மேல் சருமம் வறண்டு காணப்படும். ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே முகம் வறண்டு விடலாம். இவர்களுக்கு கோக்கனெட் ஃபேஷியல் செய்தால் உடனே முகம் பளபளப்பாகி புத்துணர்ச்சி பெறும். இந்த எளிமையான சிகிச்சையை வீட்டிலேயே செய்யலாம். பரு மற்றும் எண்ணெய்ப் பசை முகம் உள்ளவர்கள் இந்த சிகிச்சை செய்யவேண்டாம்.

இளநீர் சிகிச்சை :
கோனெட் ஃபேஷியல் செய்வதற்கு முன்பு கொஞ்சம் இளநீரில் காட்டனை நனைத்து எடுத்து முகத்தை துடைக்க வேண்டும். அப்படி துடைக்கும் போது ஒரே பக்கமாக துடைக்காமல் மேல் கீழ் இடம், வலம்  என்று நான்கு பக்கங்களிலும் துடைத்து எடுக்க வேண்டும். அப்போதுதான் முகத்தில் உள்ள அழுக்கு முழுவதும் வெளியேறும். டூவீலரில் வெளியில் வேலைக்குச் செல்பவர்கள் தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை மட்டும் செய்தாலே போதும். முகம் பொலிவாக இருக்கும். முகத்திற்கு குளுமை கிடைக்கும். இது முழுக்க முழுக்க இயற்கை சிகிச்சை என்பதால் முகத்தில் அலர்ஜி, எரிச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படாது.

தேங்காய்ப் பால் சிகிச்சை
மைதா மாவு, தேங்காய்ப் பால் தாலா 2 ஸ்பூன்,  தேங்காய் துருவல் 1 ஸ்பூன் கலந்து முகத்தில் பேக்போல செய்து போடவும். பதினைந்து நிமிடம் ஊறிய பிறகு கையில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்து வட்ட வடிவில் முகத்தில் தேய்த்து எடுக்கவும். அப்படி எடுக்கும்போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படும். பின்பு வெதுவெதுப்பான நீரில் துடைத்து எடுக்கவும்.

திராட்சையின் அவசியம்!

எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் சத்தும் உள்ளது. இதனுடன், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. உடலை `ஸ்லிம்’ ஆக வைத்துக்கொள்ள `டயட்’டில் இருப்பவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம்.

பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

`ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் அதிகமாக காணப்படு கிறது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், ஆங்காங்கே ரத்தம் உறைவதை தடுப்பதிலும் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட திராட்சையை மதிய உணவுக்குப் பின் 200 மில்லி அளவுக்கு ஜூஸாக எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

வெப் கேமரா பயன்படுத்துவது எப்படி!

இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடைபெறுகிற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகிவருகிறது. இதனால் இதற்கு அடிப்படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. ஓராண்டிற்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள். அது லேப் டாப் ஆக இருந்தால் இப்போதெல்லாம் திரையின் மேலாக சிறிய அளவில் வெப் கேமரா இணைத்தே தரப்படுகிறது. வெப் கேமராவினைச் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.

எல்லாமே லைட்டிங் தான்:

வெப்கேமரா பயன்படுத்துவது என்பது ஜஸ்ட் லைக் போட்டோகிராபி போன்றதுதான். இங்கே நகரும் ஆப்ஜெக்ட்களைப் படம் பிடிக்கிறோம். எனவே போட்டோ எடுப்பதில் என்ன என்ன அம்சங்களை நாம் கடைப் பிடிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ, அவற்றையே இங்கும் நாம் பின்பற்ற வேண்டும். இதில் முக்கியமானது லைட்டிங். கேமராவின் எல்லையில் வரும் பொருட்கள் மற்றும் ஆட்கள் நல்ல ஒளியில் இருக்க வேண்டியது மிக அவசியம். இதனால் இவற்றின் இமேஜ் நல்ல ஒளியுடனும் துல்லிதமாகவும் இருக்கும். எனவே கம்ப்யூட்டர் முன் அமர்ந்து உங்களை வெப் கேமரா மூலம் படம் எடுப்பதாக இருந்தால் உங்கள் மீது ஒளி விழும் வகையில் சிறிய டேபிள் லைட் ஒன்றை மானிட்டர் அருகே உங்கள் மீது ஒளி விழும் வகையில் அமைப்பது நல்லது. இதிலும் கூட ஒளி நேரடியாக உங்கள் மீது விழாமல் வெளிச்சத்தின் பிரதிபலிப்பு உங்கள் மீது விழுந்தால் உங்களுக்கும் கூச்சம் இருக்காது. ஒளியும் சிறப்பான முறையில் அமையும்.

பேக்ரவுண்ட் லைட்:

உங்களுக்குப் பின்புலத்தில் இருக்கும் ஒளி எவ்வாறு அமைய வேண்டும் என்பதனையும் இங்கு கவனிக்க வேண்டும். உங்கள் மீது விழும் ஒளியைக் காட்டிலும் பின்புறத்தில் மிகவும் பிரகாசமாக ஒளி இருந்தால் கேமராவில் உங்களுடைய உருவம் தெளிவில்லாமல் பிசிறடித்த நிலையில் இருக்கும். எனவே உங்கள் முன்னால் இருக்கும் ஒளியைக் கூடுதலான நிலையிலும் பின்புற ஒளியை அதற்கும் குறைவானதாக அல்லது திரை வைத்து நீக்கப்பட்ட நிலையிலும் வைக்க வேண்டும்.

கேமரா அமரும் இடம்:

வெப் கேமரா பயன்பாட்டில் கேமரா அமரும் இடம் முக்கியமான அம்சமாகும். உங்கள் கண்களுக்கு இணையான இடத்தில் கேமரா இருப்பது சிறப்பாகும். இதனால் உங்கள் முகம் தெளிவாக வெளிப்படும். குறிப்பாக பிசினஸ் குறித்த வீடியோ கான்பரன்ஸில் நீங்கள் இருந்தால் இது உங்களைச் சிறப்பாக எடுத்துக் காட்டும். எனவே நேர் எதிரே இருக்கும் மானிட்டரில் கேமராவை உங்கள் முகத்திற்கு இணையான கோட்டில் வைத்திடவும். அதே நேரத்தில் வெப் கேமராவிற்கு மிக நெருக்கமாக நீங்கள் செல்லக் கூடாது.

மானிட்டர் செட்டிங்ஸ்:

வெப் கேமரா பயன்படுத்தும் போது உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டரை முறையாக செட்டிங் செய்திட வேன்டும். பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் ஆகிய இரு செட்டிங்குகளையும் கூடுமானவரையில் குறைத்தே அமைக்க வேண்டும். இதனால் மானிட்டரில் இருந்து வரும் ஒளி உங்கள் முகத்தில் அடிக்காமல் இருக்கும். வெப் கேமராவில் நீங்கள் பிடிக்கப்படுவதாக இருந்தால் வெள்ளை நிறத்தில் சட்டை அணிவது நல்லது. இதனால் நல்ல ஒயிட் பேலன்ஸ் கிடைக்கும். நீங்கள் எல்.சி.டி. மானிட்டர் பயன்படுத்துவதாக இருந்தால் மேலும் ஒரு கூடுதல் பாதுகாப்பினை மேற்கொள்ள வேண்டும். இவ்வகை மானிட்டரில் போலரைசிங் லைட் வெளிப்படும். இதன் குவியல் படுகையில் உங்கள் கண்களில் கண்ணாடி அணிந்திருந்தால் அது பிரதிபலிக்கப்படும். எனவே கேமரா லென்ஸ் முன்னால் ஒரு போலரைசிங் பில்டர் பொருத்துவது அவசியம்.

பதியும் முன் பொறுமை:

தொடர்ந்து உங்களைப் படம் பிடித்து பதிவதாகவோ அல்லது உடனுடக்குடன் அனுப்புவதாகவோ இருந்தால் பதியத் தொடங்குமுன் சில விநாடிகள் காத்திருக்கவும். ஏனென்றால் வெப் கேமராவிற்கு போகஸ் செய்து பெறும் படத்தை அட்ஜஸ்ட் செய்திட சிறிது நேரம் தேவை. எனவே பதியும் பட்டனை அழுத்திய பின்னரும் சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருந்து பின் உங்கள் பாடலை ஆடலை வைத்துக் கொள்ளுங்கள்.

ஆடியோ பைல்கள்:

வெப் கேமரா பயன்படுத்துகையில் உங்கள் குரலுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் வெப் கேமராவில் உள்ள மைக்ரோ போனைச் சார்ந்து இருக்க வேண்டாம். கிளிப் ஆன் மைக் அல்லது ஹெட்செட் மைக்ரோ போனைப் பயன்படுத்தவும். ஏனென்றால் வெப் கேமராவில் உள்ள மைக்ரோ போனால் தெளிவாக ஒலியைப் பதிவுசெய்திட இயலாது.

மேலே சொன்ன டிப்ஸ்களுடன் தொடர்ந்து கேமரா பயன்படுத்துகையில் கிடைக்கும் அனுபவத்தினையும் இøணைத்து உங்கள் கற்பனையுடன் வெப் கேமராவினைப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பான ஒரு கேமரா மேனாக / பெண்ணாக நீங்கள் உருவாகலாம்.