Daily Archives: ஜூலை 26th, 2010

தமிழில் ஓர் இணைய தேடுதளம்

ஆங்கில இணைய தளங்களுக்கு இணையாக, அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம், தமிழில் தேடுதளம் ஒன்றினையும், தமிழ் இணைய தகவல் கோட்டையினையும் உருவாக்கித் தந்துள்ளது. இதனை அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கும் இணைய வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி யுள்ளது. இந்த தளத்தின் பெயர் சர்ச்கோ (Searchko). இதனை www.searchko.in என்ற முகவரியில் பெறலாம்.
இதுவரை ஆங்கில மொழியில் உள்ள தேடுதல் இணைய தளங்களையே நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்தி வருகிறோம். கூகுள் தளத்தில் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் தேடிப் பெறும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இப்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழில் ஒரு தேடல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஒலியியல் அமைப்பில் கீகளை அழுத்தி, தேடலுக்கான சொற்களை உருவாக்கித் தேடலாம். அல்லது இதில் தரப்பட்டுள்ள விசைப்பலகையை கிளிக் செய்து, அதன் மூலம் சொற்களை டைப் செய்தும் தேடலாம். (கீ போர்டு வழக்கமான கீ போர்டாக இல்லாமல் சற்று மாற்றாக உள்ளது. பழகிவிட்டால் சரியாகிவிடும்)
தேடல், மருத்துவம், இலக்கியம் எனப் பெரிய பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவையானததைத் தேர்ந்தெடுத்து நாம் தேடும் தகவல்களைப் பெறலாம். தினமலர் உள்பட மூன்று தமிழ் தினசரி செய்தித் தாள்களுக்கான டேப்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து செய்திகள் கிடைக்கின்றன.
இந்த தளத் தேடலில், இயற்கை மொழி ஆய்வில் பயன்படுத்தப்படும் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் ஏறத்தாழ ஒரு கோடி தமிழ் ஆவணங்கள் உள்ளன. இவற்றை ஒருமுகப்படுத்தி, தேடலுக்கு உட்படுத்தி, தேடல் தேவைகளை நிறைவேற்றுவதே இந்த தளத்தின் நோக்கம் என இதில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ÷ஷாபா கூறினார்.
ஆங்கிலம்–தமிழ் மற்றும் தமிழ்–ஆங்கிலம் அகராதிகள் தரப்பட்டுள்ளன. இந்த அகராதிகளில் ஏறத்தாழ 1.5 லட்சம் வேர்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திச் சொற்களுக்குப் பொருள் தேடிப் பெறலாம்.
இலக்கியப் பிரிவில் தமிழ் இலக்கியங்கள் உள்ள தளங்களின் பட்டியலைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தேடுதல் தளம் இன்னும் சோதனைப் பதிப்பு நிலையில் தான் உள்ளது. பிழை திருத்தி போன்றவை விரைவில் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
சரி, அது என்ன “சர்ச் கோ’ என்ற ஐயம் உங்களுக்கு வரலாம். இங்கு “”கோ” என்பது தமிழ்ச் சொல். அரசன் என்ற பொருளைத் தரும். தேடல் சாதனங்களில் இது ஒரு அரசனாக இயங்கும் என்று பொருள் தரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் கொண்டு வந்துள்ள இந்த முயற்சியை வரவேற்போம்.

யோகாவால் இளமையோடு வலம் வரும் 80 வயது இளைஞர் பயிற்சி

யோகா மற்றும் கட்டுப்பாடான உணவு பழக்க முறை காரணமாக தனக்கு வந்த ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோய்களை விரட்டி 80 வயதிலும் இளைஞர் போல் கிருஷ்ணகிரி சேர்ந்த முதியவர் வலம் வருகிறார்.கால சக்கரத்தின் வேகத்தில் இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் வேலைக்கு செல்வோர் தங்கள் கால்களில் சக்கரத்தை கட்டி கொண்டது போல் பரபரப்புடன் காலை முதல் இரவு வரையில் உள்ளனர். வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பணி சுமை முதல் பல்வேறு காரணங்களால் டென்ஷன் அடைந்து, வீட்டுக்கு திரும்பும் போது, ஓய்வை நாடி செல்கின்றனர்.

இந்த அவசரமான காலத்தில் உணவு பழக்கம் முதல் பல்வேறு பழக்க, வழக்கங்கள் இளைஞர்கள் கூட வயது முதியவர் போல் வலம் வரத்துவங்கி விட்டனர். பல்வேறு நோய்களும் நம்மை சுற்றி வரத்துவங்கி விட்டது.கிருஷ்ணகிரியில் 80 வயது முதியவர் தினம் யோகா, உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு பழக்க, வழக்கங்கள் மூலம் தனக்கு வந்த மிகப்பெரிய கேன்சர் நோயை  விரட்டி தற்போது, இளைஞர் போல் வலம் வருகின்றனர்.கிருஷ்ணகிரி சப்ஜெயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் பல்ராம் சிங் (80). வாட்ச் ரிப்பேர் கடை வைத்திருக்கிறார். இவர் தன் 25 வயது வயதில் யோகா செய்ய துவங்கினார். எந்த பணிகள் இருந்தாலும் தினம் யோகா செய்வதை நிறுத்தாமல் இன்று வரையில் தொடர்ந்து செய்து வருகிறார்.இவரது மனைவி பரிமளாபாய். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் ஒரு மகனும் உள்ளனர். மனைவி  ஐந்தாண்டுக்கு முன் இறந்து விட்டார். இவரது இரு மகள்களுக்கும் திருமணமாகி கணவர் வீட்டோடு உள்ளனர். மகன் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். தற்போது, கிருஷ்ணகிரியில் தனியாக வசித்து வரும் பல்ராம்சிங் தன்னம்பிக்கையோடு தனது வேலைகளை செய்து யாருக்கு இடையூறு இல்லாமல் இளைஞர் போல் வலம் வருகிறார்.

பல்ராம்சிங் கூறியதாவது:நான் 25 வயதில் இருந்து யோகா செய்து வருகின்றேன். யோகா மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை என் பயிற்சியின் மூலம் அறிந்து கொண்டேன், கடந்த 1992ம் ஆண்டு எனக்கு ஆஸ்துமா தாக்கியது. இதற்காக நான் மூச்சுபயிற்சி தினம் காலை, மாலையில் எடுத்தேன் ஆஸ்துமா குணமானது.கடந்த 2000ம் ஆண்டில் எனக்கு வயிற்றில் கேன்சர் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்த நிலையில், வயிற்றை சுருக்கும் யோகாசனங்கள், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடித்தேன். சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் கேன்சர் குறித்து பரிசோதனை செய்த போது, கேன்சர் குணமானது உறுதி செய்யப்பட்டது. தினம் காலையில் இரண்டு மணி நேரம் யோகாசனம் செய்து வருகிறேன். குறிப்பாக யோக நித்திரை, யாக பாத ஆசனம், சிரசாசனம், அஸ்வினி ருத்ராசனம், மயிலாசனம், கோமுக கூர்மாசனம், பத்மாசனம், சர்வாங்காசனம் ஆகிய ஆசனங்களை தவறாமல் செய்து வருகிறேன்.

வாரத்தில் இரு முறை 30 கி.மீ., சைக்களில் பயணம் செய்கிறேன்.இளைஞர்களுக்கு யோகா இலவசமாக கற்றுக்கொடுக்க நினைத்தாலும் கடுமையான யோகாசனங்களை செய்ய முடியாமல் பாதியில் இளைஞர்கள் நின்று விடுகினறனர். தற்போதுள்ள கால சூழ்நிலையில், பணி சுமை ஆகியவற்றை சமாளிக்க எந்த வயதினரும் யோகாசனம் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார். பலராம்சிங் காலையில் இரு இட்லி, மதியம் ஒரு கப் சாதம், இரவு இரண்டு சப்பாத்தி ஆகியவற்றை உணவு பழக்கமாக வைத்துள்ளார்.

டாக்டர்கள் கருத்து என்ன?கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல டாக்டர்கள் கூறுகையில்,”கேன்சர் நோய் மனிதனை தாக்கிவிட்டால் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். யோகாசனம் மூலம் கேன்சர் நோயை முற்றிலுமாக சரிசெய்ய முடியும் என்று கூற முடியாது. மருத்துவ துறையில் இது போன்று எப்போதாவது அதிசயங்கள் நிகழும்’ என்றார்.சென்னையை சேர்ந்த பிரபல யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் கூறியதாவது:கேன்சர் நோய் தாக்கியவர்கள் தொடர்ந்து யோகாசனம் செய்தால் நோயை முற்றிலும் சரி செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு அவர்கள் செய்யும் யோகாசனம் மட்டுமே கை கொடுக்காது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள், விரதம் இருப்பது போன்ற செயல்களும் கேன்சர் நோயை சரிசெய்ய உதவிகரமாக இருக்கும். மும்பையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தில் கேன்சர் நோய் வந்தவர்களை தங்க வைத்து அவர்களை யோகாசனம் செய்ய வைத்து நோயை குணப்படுத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர் . இதற்கு நோய் தாக்கியவர்களை கடுமையான உணவு பழக்க வழக்கம் மற்றும் விரதங்கள் இருக்க வைக்கின்றனர், என்றார்.

நன்றி-தினமலர்

கறுப்பு, மஞ்சள் டாக்சிக்கு, “டாட்டா!’

டாக்சி என்றாலே கீழே கறுப்பு, மேலே மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட அம்பாசி டர் கார்கள் தான் நினைவுக்கு வரும். எல்லா நகரங்களிலும் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து வரும் இந்த டாக்சிகளுக்கு, ஒரேயடியாக மூடு விழா நடத்த, டில்லி அரசு முடிவு செய்துள்ளது.
டில்லியில் கறுப்பு, மஞ்சள் டாக்சிகள் ஏராளமாக ஓடுகின்றன. விமான நிலையம், ரயில் நிலையங்களில் இவற்றை காணலாம். இப்போது இதற்கான கட்டணத்தை மிகவும் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் மிகக் குறைந்த கட்டணத்தில், சொகுசான கால் டாக்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
அடுத்த மூன்று, நான்கு மாதங்களுக்குள் ஆயிரம் கால் டாக்சிகளுக்கு அரசு அனுமதி வழங்க உள்ளது. பஞ்சாப், அரியானாவைச் சேர்ந்த சீக்கியர்களால் ஓட்டப்பட்டு வரும் டாக்சிகள், ஆட்டோக்கள் இனி கொஞ்சம், கொஞ்சமாக டில்லியில் காணாமல் போய் விடும்.

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள். மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.

பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல்

“பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள “தெர்மோஸ்பியர்’ அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 600 கி.மீ,. உயரம் கொண்ட பகுதி தெர்மோஸ்பியர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது.வளிமண்டலம் முடிந்து விண்வெளி ஆரம்பிக்கும் பகுதியில் தெர்மோஸ்பியர் அடுக்கு அமைந்துள்ளது.சூரியனிலிருந்து வரும் சுற்றுச்சூழலுக்கு தீங்கான கதிர்களை வடிகட்டி அனுப்புவதில் தெர்மோஸ்பியர் அடுக்கு பெரும்பங்கு வகிக்கிறது.சமீப காலமாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பு மற்றும் புறஊதாக்கதிர்களின் பாதிப்பால் தெர்மோஸ்பியர் அடுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.இதனால் பூமியின் தட்ப வெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடல்சார் ஆய்வுக்கழக விஞ்ஞானி ஜான் எம்மர்ட் வெளியிட்ட ஆய்வறிக்கை:பூமியின் வளிமண்டலத்தில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீரென கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எங்களது ஆய்வில் வளி மண்டல அழுத்தம் திடீரென முப்பது சதவீத அளவிற்கு குறைந்துள்ளது.தெர்மோஸ்பியர் அடுக்கு சூரியனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட  பகுதியாகும்.பூமியின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் தெர்மோஸ்பியர் அடுக்கில் பரவி விரிவடைகிறது.இதை தெர்மோஸ்பியர் அடுக்கு, பூமிக்கு வராமல் தடுக்கிறது. சூரியனிலிருந்து வரும் வெப்பத்தின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடந்த  2007 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை தெர்மோஸ்பியர் அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வளிமண்டலத்தை தாண்டி தெர்மோஸ்பியர் அடுக்கு வரை  பரவி விட்டது.

எனவே தெர்மோஸ்பியர் அடுக்கில் கார்பன் டை ஆக்சைடு குளிரூட்டியாக செயல்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த பாதிப்பிற்கு கார்பன் டை ஆக்சைடு வாயு மட்டும் காரணம் என கூற இயலாது.பிற காரணிகளும் தெர்மோஸ்பியர் அடுக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ஜான் எம்மர்ட் கூறினார்.

கரும்புள்ளிகள் நீங்க

சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற வீட்டில் சூடான நீரில் தோய்த்தெடுத்த டவலை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து எடுக்கவும்.
முகத்தின் மேல் உதடுகளுக்கு கீழ் இந்த சூடான டவலை வைத்தால் சரும துவாரங்கள் திறந்து உள்ளிருக்கும் அழுக்குகள் எளிதில் நீங்கும்.

முகத்திற்கு கோக்கனெட் பேக் முல்தானி மெட்டி, தேங்காய் பால் தலா 2 ஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக்காக போடவும். முல்தானி மெட்டி சருமத்தை இறுகச் செய்யும். தேங்காய் பால் சருமத்தி பட்டு போல் ஆக்கும். 20 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
அழகாக இருக்க அனைவருக்குமே ஆசைதான்! இயற்கையில் அழகாக இல்லாமல் போனால்கூட சில திருத்தங்களைச் செய்து கொண்டு அழகுடன் விளங்க முடியும் என்கிற காலம் இது. இப்படி அழகுப்படுத்தி கொள்ள தலை முதல் கால் வரை அழகு நிலையங்களில் என்னென்ன செய்கின்றனர் என்பதையும், இவற்றை வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிகளில் செய்து கொள்ளலாம் என்பதை பற்றியும் கூறுகிறேன்.
பழங்காலத்தில் பெண்மணிகள் எந்த அழகு நிலையங்களுக்கும் சென்றதில்லை. ஆற்றில் நீராடி ஆற்று மணலின் மிருதுவான பகுதியை உடலில் தேய்த்து வேண்டாத முடிகளை நீக்கிக் கொண்டனர். கஸ்தூரி மஞ்சள், வாசனைபொடி, நலங்குப் பொடி, துளசி, வேப்பிலை போன்ற இயற்கை மூலிகைகளைக் கொண்டு அழகைப் பாதுகாத்துக் கொண்டனர். சென்ற நூற்றாண்டுவரைகூட அநேகப் பெண்கள் திருமணத்தின் போது தான் அழகு நிலையத்திற்கே முதன் முறையாகச் சென்று வந்தனர்.
ஆனால் இந்நாளில் பதினைந்து வயதுப் பெண்கள் கூட உடலில் வளரும் அதிக முடியை நீக்கிக் கொள்ள அழகு நிலையங்களுக்கு வருகின்றனர். நடனம், நீச்சல், விளையாட்டுப் பயிற்சிகள் செய்பவர்களுக்கு இதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறு கவனமாக இருக்கும் பெண்கள் மணமாகி பிள்ளை பெற்றதும் உடலில் காட்டும் கவனத்தைக் குறைத்துக் கொள்கின்றனர். உடல் கட்டு குறையாமலிருக்க பயிற்சி செய்யத் தொடங்குகிறோம். இதேபோல் அழகும், பொலிவும் தொய்ந்து போகத் தொடங்கும் முகத்திற்கு பயிற்சி வேண்டாமா? இவ்வாறு முகத்திற்கு அளிக்கப்படும் பயிற்சியே ஃபேஷியல் என்றழைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளானாலும், வேலைக்குச் சென்று வருபவர்களானாலும் இருபத்து ஐந்து வயது முதல் ஃபேஷியல் செய்து கொள்ளத் தொடங்க வேண்டும். சூரிய வெப்பத்தினாலும் தூசியினாலும் பாதிக்கப்படும் முகத்தின் சருமத்தை மாதமொருமுறை பிளீச் செய்து ஃபேஷியல் செய்ய வேண்டியது அவசியம்.
ஃபேஷியலில் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வென்றிற்கும் விதவித பலன்கள் உள்ளன். பழங்களைக் கொண்டு செய்யும் ஃபேஷியல், உலர்ந்த பழங்களை கொண்டு செய்யும் ஃபேஷியல், ஹெர்பல் ஃபேஷியல், கால்வானிக் ஃபேஷியல், பேர்ல்ஃபேஷியல், கோல்டுஃபேஷியல், அரோமாஃபேஷியல் என பலவகை உண்டு.