Daily Archives: ஜூலை 30th, 2010

முத்து பெரும் சொத்து…

அழகிய ஆபரணங்களில் முத்துக்கு முக்கிய இடமுண்டு. தங்க நகைகளை போலவே முத்துக்களை விரும்பி அணிபவர்கள் ஏராளம். இந்தியர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே முத்து நகை அணிந்து வந்துள்ளனர்.

இதோ முத்துக்களை பாதுகாக்கும் முத்தான வழிகள்…

* முத்துக்கள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும்.

* தங்க நகை அல்லது மற்ற ஆபரணங்களோடு முத்து நகைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி வைத்தால் முத்துக்களில் கீறல் விழும்.

* காற்று புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டாம்.

* சென்ட், ஸ்பிரே மற்றும் வாசனைத் திரவியம், பொருட்களுடன் முத்து மாலைகளை வைக்கக்கூடாது. ஏனெனில் ரசாயனங்கள் முத்துக்களின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

* முத்துமாலையை அணிவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.

* காகிதம் மற்றும் சாயம் போகும் துணியில் முத்துநகைகளை பொதிந்து வைக்கக்கூடாது. இவற்றை பயன்படுத்தி முத்து நகைகளை துடைக்கவும் கூடாது.

* அமிலங்கள், ரசாயன பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.

* நகைகளை கைகளால் எடுப்பதற்கு பதில் ஹேர்பின், குச்சிகளைக் கொண்டு இழுக்கவோ, தரையில் உரசியபடி இழுபதையோ தவிர்க்க வேண்டும்.

* நகை பெட்டியில் துணிமெத்தையில் முத்துநகைகளை வைத்து பயன்படுத்துவதே சரியான முறை.

—————————
மருத்துவ குணங்கள்

* முத்துக்களை ஆண்கள்- பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து அணிந்தால் உடலில் உரசி கரையும். அப்போது உடல் சூடு தணியும் என்று மருத்துவ நுல்கள் கூறுகின்றன.

* முத்தில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து உள்ளது. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்துகளில் முத்து பயன்படுத்தபடுகிறது. முத்துக்களை பல்வேறு மூலிகைச் சாறுகளால் பாடம் செய்து பொடியாக்கி பல்வேறு மருந்துகள் தயாரிக்கபடுகிறது.

* அழகு சாதனங்கள், பற்பசைகள் தயாரிக்க முத்து பயன்படுகிறது.

* நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், இழுப்பு, தலைவலி போன்ற நோய்களை கட்டுபடுத்துவதில் முத்து முக்கிய இடம் வகிக்கிறது.

—————————

* சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடபொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது. குவாட்ருலா, நீனியோ, மார்கரிட்டேனோ போன்ற கடல்வாழ் மெல்லுடலி உயிரினங்களே முத்துக்களை உருவாக்கும் சிப்பிகளாகும்.

* பத்து நிறங்களில் முத்துக்கள் கிடைக்கிறது. பொதுவாக இளம்சிவப்பு அல்லது காபி நிறங்களில் முத்துக்கள் கிடைக்கின்றன. அந்தமான் தீவுகளில் கருப்பு நிற முத்துக்கள் கிடைக்கின்றன.

* ஜப்பானில் செயற்கை முத்துக்கள் விளைவிக்க படுகிறது. மிமிமாட்டோ என்ற ஜப்பானியர் செயற்கை முத்துக்களின் தந்தை எனபடுகிறார். இவர் 1893-ம் ஆண்டு முதல்முறையாக செயற்கை முத்தை வளர்த்து சாதனை படைத்தார்.

* இந்தியாவில் மும்பை நகரில் அதிக முத்துநகைகள் விற்பனையாகிறது. ராஜஸ்தான் மக்கள் முத்து நகைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். தமிழகத் தில் முத்துக்கு சிறப்பு பெற்ற நகரம் தூத்துக்குடியாகும்.

பழவகை ஃபேஷியல்

பழவகை ஃபேஷியல்
எண்ணெய்ப் பசை அதிகமுள்ள முகத்தினருக்கு இவ்வகை ஃபேஷியல் மிகவும் ஏற்றது. முழுக்க முழுக்க இயற்கையான பழங்களின் உதவியுடன் செய்வதால் நல்ல பலனைத் தரும். சாத்துக்குடி பழசரத்துடன் பால் சேர்த்து முகத்தில் தடவி முகம் நன்றாகச் சுத்தப்படுத்தப்படும். பிறகு பாலையும் ஓட்ஸையும் சேர்த்து முகம் நன்றாக தேய்க்கப்படும் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆப்பிள் மற்றும் பப்பாளியின் கலவையின் உதவியுடன் மஸாஜ் செய்த பிறகு வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன் ஆகியவற்றின் கலவை முகத்திற்கு ‘பேக்’ காக போடப்படும். பிறகு முகத்தை சுத்தப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க அழகும் பொலிவும் ஆகும்.

உலர்ந்த பலவகை ஃபேஷியல்

இம்முறையில் ஆரஞ்சு பழரசத்துடன் பால் சேர்த்து முகம் சுத்தப்படுத்தப்பட்ட பிறகு பாலுடன் வீட் ஜெம் சேர்த்து முகம் தேய்க்கப்படும். பிறகு ஆப்ரிகாட், பாதம், வேர்க்கடலை, வால்நட் ஆகியவற்றைப் பாலில் ஊறவைத்து அரைத்துப் பால் எடுத்து அதைக் கொண்டு மசாஜ் செய்யப்படும். பிறகு பேரீச்சை, அத்திப்பழம், பிஸ்தா, பதாம் முதலியவற்றை அரைத்து ‘பாக்’காகப் போடப்படும்.
உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இம்முறையில் ஃபேஷியல் செய்யப்படுவதால் எண்ணெய்ப் பசை முகத்தில் சேர்க்கப்பட்டு முகம் பளபளப்பாக்கப்படுகிறது. அதோடு சருமத்தை நல்ல முறையில் பாதுகாக்கிறது

மேற்கூறியபடி உள்ள பலவகை ஃபேஷியல்களைச் செய்து கொள்வதால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
1. மனம் பெரிதளவில் ஓய்வு பெறுகிறது.
2. நரம்பு மண்டலம் ஒழுங்காக வேலை செய்யும்.
3. முகத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
4.  முகத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
5. உலர்ந்த சருமம் சீராகும்.
6. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் நீங்கும்.

ஆயிரம் மடங்கு வேகத்தில் இன்டர்நெட்

கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முதல் இடம் பெற்றுப் பெயர் பெற்றது அமெரிக்காவில் இயங்கும் எம்.ஐ.டி. கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம். இங்குள்ள ஆய்வாளர்கள் அண்மையில் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இன்டர்நெட் செயல்படும் வேகத்தினை 100 முதல் 1,000 மடங்கு வரை அதிகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான வழி முறை, இன்டர்நெட் போக்குவரத்தினைக் கையாளும் ரௌட்டர்களில் தான் ஏற்படுத்தப்படும் என்று இந்த ஆய்வை வழி நடத்தும் வின்சென்ட் சான் கூறியுள்ளார். ரௌட்டர்களில் உள்ளே அமையும் மின் அலைகளை, அதிவேக ஆப்டிகல் அலைகளாக மாற்றினால் இந்த வேகம் கிடைக்கும் என்று சொல்கிறார்.100 மடங்கு வேகத்தில் செயல்படுகையில், தற்போது 100 எம்பி பைல் அனுப்பும் நேரத்தில், 10 ஜிபி பைல் ஒன்றை அனுப்ப முடியும்.
கூடுதல் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்கள் உருவாகி வருகின்றன. நாம் உருவாக்கும் பைல்களின் (முப்பரி மாண காட்சிகள், ஆன்லை னில் விளையாட்டுக்கள், அதிவேக நிதி பரிமாற்றங்கள் என) அளவும் அதிகமாகி வருகிறது. இதனால் பைல்களை அனுப்புவதிலும், பெறுவதிலும் மக்கள் வேகத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த வளர்ச்சி ஏற்படுகையில், இன்டர்நெட் வேகமாகச் செயல்பட வில்லை என்றால், பல இடங்களில் இது முடங்கி நிற்கும் நிலை ஏற்படும். எனவே இதற்கான தீர்வினைக் கண்டுபிடிக்க வேண்டும். தீர்வு ஆப்டிகல் பைபர்களில் தான் அடங்கியுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.
இப்போதும் இன்டர்நெட் போக்குவரத்தில் ஆப்டிகல் பைபர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அதிக தொலைவு உள்ள தூரங்களில், கண்டம் விட்டு கண்டம் செல்லும் இடங்களில் கூட, பயன்படுத்தப் படுகின்றன. இவை எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் தகவல்களைக் கையாளும் விதத்தைக் காட்டிலும், அதிகத் திறனுடன் கையாள்கின்றன. ஆனால் ஆப்டிகல் சிக்னல்களைக் கையாள்வது சற்று சிக்கலான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, ஒரு ரௌட்டர் தனக்கு வெவ்வேறு திசைகளிலிருந்து ஆப்டிகல் சிக்னல்களைப் பெற்றுக் கையாள்கையில், சிக்கல்களைப் பெறுகிறது. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, இன்டர்நெட்டில் உள்ள ரௌட்டர்கள், ஆப்டிகல் சிக்னல்களைப் பெற்று, அவற்றை எலக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றுகின்றன. இதன் மூலம் அவற்றைக் கையாளும் நேரம் வரும்வரை, அந்த சிக்னல்கள் மெமரியில் பத்திரமாக வைக்கப் படுகின்றன. பின்னர் அனுப்பபடும் நிலை வருகையில், இந்த எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் மீண்டும் ஆப்டிகல் சிக்னல்களாக மாற்றி அனுப்பப்படுகின்றன.
இந்த செயல்பாட்டில் நேரமும் திறனும் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வின்சென்ட் சான் தலைமையில் இயங்கும் ஆராய்ச்சியாளர் குழு இந்த மாறுதலுக்கான தேவையை நீக்கும் தீர்வைக் கண்டறிந்துள்ளது.
இந்த விஞ்ஞானிகள் குழு “flow switching” என்ற வழிமுறையை இதற்கென உருவாக்கி உள்ளனர்.
இதன் மூலம் நெட்வொர்க்குகளுக்கிடையே அதிக அளவில் டேட்டா பரிமாறிக் கொள்ளப்படுகையில், எடுத்துக்காட்டாக மதுரையில் உள்ள ஒரு சர்வர் அமெரிக்காவில் உள்ள ஒரு சர்வருக்குப் பெரிய அளவில் டேட்டாவினை அனுப்புகையில், இதற்கு மட்டும் எனச் சில வழி செயல்முறைகளை அமைத்துக் கொள்கிறது. இந்த வழிமுறைகளில் செயல்படுகையில், ஒரு வழியில் கிடைக்கும் சிக்னல்களை மட்டுமே ரௌட்டர்கள் பெற்று, இன்னொரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே அனுப்புகிறது. பல்வேறு திசை களிலிருந்து ஆப்டிகல் சிக்னல்கள் வரும் வாய்ப்பு இல்லை என்பதால், இவற்றை எலக்ட்ரிக்கல் சிக்னல்களாக மாற்றி மெமரியில் வைத்திடும் கட்டாயத் தேவை இங்கு ஏற்படாது. இதனால் இன்டர்நெட் போக்குவரத்து வேகம் 100 மடங்கு பெருகும். அந்நிலை ஏற்படுகையில் இன்டர் நெட் பயன்பாடு பல திசைகளில் வெகு வேகமாக விரிவடையும். இது மனித வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் அதற்கு முன் இந்த ஆராய்ச்சியில் பல நிலைகளை நாம் தாண்ட வேண்டியுள்ளது.

அதிர்ச்சிட்டும் `ஆசைகள்’

வயது குறைந்தவர்களுடன் தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்பவர்கள் `பெடோபிலியா’ எனபடுவார்கள். 8 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இந்தத் தொல்லைக்கு உள்ளாக்கபடுகிறார்கள்.

பெண்கள் எல்லாத்துறையிலும் ஆண்களுக்கு நிகராக கால்பதித்து விட்டார்கள். கிராமபுறங்களில்கூட பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடப்ப தில்லை. அருகில் உள்ள சிறுநகரங்களுக்கு வேலைக்குச் சென்று குடும்பத் திற்காக வருமானம் ஈட்டுகிறார்கள்.

இதனால் பணிக்குச் செல்வோர், பள்ளிக்குச் செல்வோர், பயணமாகச் செல்பவர்கள் என எல்லோரும் ஒரே நேரத்தில் பயணிப்பதால் வாகனங்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அந்த வேளையில் நெருக்கடியை பயன்படுத்தி ஆண்கள், பெண்களை உரசுகிறார்கள். துணிந்தவர்கள் சில்மிஷம் செய்கிறார்கள். இடையில் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் பெண்களின் நிலையை விளக்க வார்த்தைகள் இல்லை. இதற்கு என்ன காரணம்?

ஆணும் பெண்ணும் திருமணவயதில் திருமணம் முலம் இணைவது இயல்பு. வாய்ப்புகளை உருவாக்கியும், நெருக்கடி போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தியும் சில்மிஷத்தில் ஈடுபடுவது பாலியல் வக்கிரம்.

பாலியலில் இப்படி வழக்கத்துக்கு மாறான முறையில் ஒரு நபருக்கு தூண்டுதல் ஏற்படுவதை `பாராபிலியா’ என்று கூறுவார்கள்.

உறவின்போது சிலருக்கு கிளர்ச்சியூட்டும் வார்த்தைகள் (கொச்சையாக) பேசபிடிக்கும், கேட்கபிடிக்கும். சிலருக்கு கடிக்கபடுவதும், அடிக்கபடுவதும், கீறப்படுவதும் பிடிக்கும். சிலருக்கு எதிர்பாலினத்தவர் ஆடைகளைக் கழற்றும்போது அருகில் இருந்து பார்க்க பிடிக்கும். இதெல்லாம் இயல்பானதாகத் தோன்றினாலும், தகுந்த வாயப்புகள் அமையாதபோது அவர்களும் பாராபிலியாக்களாக மாறிவிடுவார்கள். இவர்கள்தான் விதவிதமான காம சேஷ்டைகளில் ஈடுபடுபவர்கள்.

கூட்ட நெரிசலில் சில ஆண்கள் பெண்களிடம் நெருக்கமாக நிற்பார்கள். சூழ்நிலைக்கேற்ப தங்களுடைய உடலை பெண்களின் உடம்பில் தேய்த்து சுகம் பெறுவார்கள். இது `புரோட்டிரிசம்’ எனப்படுகிறது. இவர்கள் பேருந்துகள், ரெயில், சுரங்கபாதை, சந்தை என கூட்டம் அதிகமுள்ள இடங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

சிலருக்கு உயிரற்ற பொருட்களை பார்த்தாலும் உணர்வு தூண்டபடும். அப்படி உணர்வு தூண்டும் பொருட்களை அவர்கள் சேகரித்து வைத்திருபார்கள். இதற்காக பொருட்களை திருடுவதும் உண்டு. இது `பெடிசிசம்’ என்று கூறப்படுகிறது.

இத்தகைய பாதிப்பிற்குரிய சிலர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகளை சேகரித்து வைத்திருப்பார்கள். சிலர் யாரிடம் திருடினோம் என்று பெயர் கூட குறித்து வைத்திருபார்கள். இன்னும் சிலர் உயிரற்ற பொருட்களான ஓவியம், புகைபடத்தை பார்த்தாலும் கிளர்ச்சி அடைவார்கள்.

சிலர் ஆணாக இருந்து கொண்டு பெண்போல செயல்படுவதில் இன்பம் காணுவார்கள். இதை `டிரான்ஸ் வெஸ்டிசம்’ என்பார்கள். இவர்கள் பெண்போல உடை அணிந்து கொள்வார்கள், நடைபோடுவார்கள். திருமணமான பிறகுகூட இதை அவர்களால் நிறுத்த முடியாது.

நிர்வாண படங்களை பார்த்து ரசிப்பது `வோவேயரிசம்’ என்று அழைக்கபடுகிறது. இவர்கள் படங்களை பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் வாழ்விலும் மற்றவர்களை ஒளிந்திருந்து ரசிப்பதை விரும்புவார்கள்.

சிலர் தங்கள் உடலை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்று விரும்புவார்கள். இது `எக்ஸ்பிசினிசம்’ என்று அழைக்கபடுகிறது. இது பெரும்பாலும் ஆண்களிடையே காணப்படும் பழக்கமாகும். இது ஒருவகை மனநோய். மாடலிங்கில் இருக்கும் ஒரு சில பெண்கள் தங்கள் உடலை அளவுக்கு அதிகமாக வெளிபடுத்துவதும் இந்த வகை மனநோய் தான்.

தொலைபேசியில் தொந்தரவு செய்வது சிலருக்கு வாடிக்கை. இதில் 3 வகை உள்ளனர். சிலர் தன்னை பற்றியும், தான் இன்பம் காண்பதை பற்றியும் விவரிப்பார்கள். சிலர் எதிர்முனையில் இருப்பவரை மிரட்டுவார்கள். முன்றாவது வகையில் பேசுகிறவர், எதிராளியின் அந்தரங்க விஷயங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில் காய் நகர்த்துவார்கள்.

அடுத்தவருக்கு வலி உண்டாக்கி ரசிக்கும் பழக்கமும் சிலருக்கு இருக்கும். இது `சேடிசம்’ எனபடுகிறது. இந்த பாதிப்பு உடையவர்களை `சேடிஸ்ட்’ என்று அழைபார்கள். சிலர் தனக்குத்தானே துன்புறுத்தி வலியை உருவாக்கிக் கொள்வார்கள். இது `மாசோசிசம்’ என்று கூறபடுகிறது. இவர்களில் சிலர் தங்களுக்கு இணங்குபவர்களிடம் மட்டும் இப்படி நடந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். சிலர் கற்பழிப்பு, சித்ரவதை, கொலை என கொடூரமாக நடபவர்களாகவும் இருப்பார்கள்.

வயது குறைந்தவர்களுடன் தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்பவர்கள் `பெடோபிலியா’ எனபடுவார்கள். 8 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இந்தத் தொல்லைக்கு உள்ளாக்கபடுகிறார்கள். இதில் சிறுமிகளுக்கு அறிமுகமில்லாதவர்கள் இனிப்பு வகைகளை வாங்கிக் கொடுத்து துன்புறுத்துவது 10 சதவீதமும், குழந்தையின் உறவுக்காரர் இப்படி சேட்டை செய்வது 15 சதவீதமும் நடப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் புகார்கள் வெளிவராததால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்பது கணிப்பு. இதில் எந்தவகை பாதிப்பு கொண்டவர்களுக்கும் இப்போது சிகிச்சை இருக்கிறது. சிகிச்சை முலம் அவர்கள் தங்களை சரி செய்து கொள்ள முடியும்.

நன்றி-தினத்தந்தி