முத்து பெரும் சொத்து…

அழகிய ஆபரணங்களில் முத்துக்கு முக்கிய இடமுண்டு. தங்க நகைகளை போலவே முத்துக்களை விரும்பி அணிபவர்கள் ஏராளம். இந்தியர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே முத்து நகை அணிந்து வந்துள்ளனர்.

இதோ முத்துக்களை பாதுகாக்கும் முத்தான வழிகள்…

* முத்துக்கள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும்.

* தங்க நகை அல்லது மற்ற ஆபரணங்களோடு முத்து நகைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி வைத்தால் முத்துக்களில் கீறல் விழும்.

* காற்று புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டாம்.

* சென்ட், ஸ்பிரே மற்றும் வாசனைத் திரவியம், பொருட்களுடன் முத்து மாலைகளை வைக்கக்கூடாது. ஏனெனில் ரசாயனங்கள் முத்துக்களின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

* முத்துமாலையை அணிவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.

* காகிதம் மற்றும் சாயம் போகும் துணியில் முத்துநகைகளை பொதிந்து வைக்கக்கூடாது. இவற்றை பயன்படுத்தி முத்து நகைகளை துடைக்கவும் கூடாது.

* அமிலங்கள், ரசாயன பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.

* நகைகளை கைகளால் எடுப்பதற்கு பதில் ஹேர்பின், குச்சிகளைக் கொண்டு இழுக்கவோ, தரையில் உரசியபடி இழுபதையோ தவிர்க்க வேண்டும்.

* நகை பெட்டியில் துணிமெத்தையில் முத்துநகைகளை வைத்து பயன்படுத்துவதே சரியான முறை.

—————————
மருத்துவ குணங்கள்

* முத்துக்களை ஆண்கள்- பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து அணிந்தால் உடலில் உரசி கரையும். அப்போது உடல் சூடு தணியும் என்று மருத்துவ நுல்கள் கூறுகின்றன.

* முத்தில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து உள்ளது. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்துகளில் முத்து பயன்படுத்தபடுகிறது. முத்துக்களை பல்வேறு மூலிகைச் சாறுகளால் பாடம் செய்து பொடியாக்கி பல்வேறு மருந்துகள் தயாரிக்கபடுகிறது.

* அழகு சாதனங்கள், பற்பசைகள் தயாரிக்க முத்து பயன்படுகிறது.

* நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், இழுப்பு, தலைவலி போன்ற நோய்களை கட்டுபடுத்துவதில் முத்து முக்கிய இடம் வகிக்கிறது.

—————————

* சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடபொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது. குவாட்ருலா, நீனியோ, மார்கரிட்டேனோ போன்ற கடல்வாழ் மெல்லுடலி உயிரினங்களே முத்துக்களை உருவாக்கும் சிப்பிகளாகும்.

* பத்து நிறங்களில் முத்துக்கள் கிடைக்கிறது. பொதுவாக இளம்சிவப்பு அல்லது காபி நிறங்களில் முத்துக்கள் கிடைக்கின்றன. அந்தமான் தீவுகளில் கருப்பு நிற முத்துக்கள் கிடைக்கின்றன.

* ஜப்பானில் செயற்கை முத்துக்கள் விளைவிக்க படுகிறது. மிமிமாட்டோ என்ற ஜப்பானியர் செயற்கை முத்துக்களின் தந்தை எனபடுகிறார். இவர் 1893-ம் ஆண்டு முதல்முறையாக செயற்கை முத்தை வளர்த்து சாதனை படைத்தார்.

* இந்தியாவில் மும்பை நகரில் அதிக முத்துநகைகள் விற்பனையாகிறது. ராஜஸ்தான் மக்கள் முத்து நகைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். தமிழகத் தில் முத்துக்கு சிறப்பு பெற்ற நகரம் தூத்துக்குடியாகும்.

%d bloggers like this: