Daily Archives: ஜூலை 31st, 2010

கேளுங்க…காது கொடுத்துக் கேளுங்க!(காது கோளாறு)

“நான் சொல்வதை காது கொடுத்துக் கேட்கிறானா?” பிரச்சினைகள் வரும்போது இளைஞர்களை பார்த்து பெரியவர்கள் கூறும் வார்த்தை இது. உலகில் கேட்பதில்தான் அதிக ஞானம் பெறமுடியும். வள்ளுவரும் `செவிச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்று கூறி இருக்கிறார்.

கண்கள் மனிதனுக்கு 80 சதவீத அறிதலைத் தருகிறதாம். ஆனால் கண்ணிருந்தும், காது இல்லாவிட்டால் நமக்கு உலகத் தொடர்பே அற்றுபோகும். ஆமாம், எல்லாமே பேசாத உலகமாகத்தான் தெரியும். ஒரு நிமிடம் காதை பொத்தி பாருங்கள், உண்மை புரியும். கேட்க முடியாவிட்டால் பேச்சும் வராது தெரிமா? ஒலி `டெசிபல்’ என்ற அலகால் அளக்கபடுகிறது. மனிதனால் 20 முதல் 2,000 ஹெர்ட்ஸ் அலைநீளம் உள்ள ஒலியைக் கேட்க முடியும். டெசிபல் அளவில் 80 டெசிபல் ஒலியை ஆபத்தில்லாமல் கேட்கலாம். அதிக ஒலி உள்பட பல்வேறு காரணங்களால் காது கேட்பதில் கோளாறு ஏற்படும்.

சிலருக்கு பிறவியிலேயே காது கேட்காமல் போவதும் உண்டு. இதற்கு கர்ப்பிணி உண்ணும் மாத்திரையும் ஒரு காரணமாக இருக்கிறது. மற்றபடி பாரம்பரியம் காரணமாக இருக்கலாம்.

காதில் அழுக்கு சேருவது, செவிப்பறையில் ஓட்டை விழுவது, எலும்புகளில் அரிப்பு ஏற்படுவது என வேறு சில காரணங்களும் காது கேட்கும் திறனை பாதிக்கும். வெளிக்காது, நடுக்காது, உள்காது என 3 பகுதிகளாக காதை பிரிக்கிறார்கள். நடுக்காதில் இருக்கும் செவிப்பறை மற்றும் எலும்புகள் கேள்திறனில் முக்கியபங்கு வகிக்கிறது. உள்காதில் ஒலியுணர் நரம்புகளும், அதற்கு துணைபுரியும் திரவங்களும் இருக்கின்றன. பெரும்பாலான காது பாதிபுகளுக்கு சிகிச்சைகள் இருக்கின்றன. முக்கிய நரம்புகள் பாதிக்கபட்டால்கூட வேறு நரம்புகளில் இருந்து பிரித்தெடுத்து புது நரம்பு வளர்த்து பொருத்தும் அளவுக்கு மருத்துவதொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. முக்கு, தொண்டை, தாடையில் ஏற்படும் பாதிப்புகள் கூட காதில் பிரச்சினையை உருவாக்கலாம். இது முளையின் தவறால் நடக்கிறது. காது நரம்புகள் முளைக்கு அருகில் இருப்பதாலும், மற்ற நரம்புகளுடன் தொடர்பு இருப்பதாலும் முளையின் தகவல்கள் இடம்மாறி வருவதால் காது பாதிப்பதாக உணரப்படுகிறது.

காதில் எறும்பு அல்லது பூச்சி புகுந்துவிட்டால் உடனே காது குடையக்கூடாது. வெளிச்சம் வரும் திசையில் காதைத் திருப்பினாலே பூச்சிகள் வெளியேறிவிடும். இல்லாவிட்டால் சிறிது தண்ணீர் அல்லது எண்ணையை காதில் விடவேண்டும். இது பலன்தராவிட்டால் டாக்டரைஅணுக வேண்டும். சீழ் வடிவது காதுகேட்கும் திறனை பாதிக்கும். இது ஊட்டச்சத்து குறைவு, காது மாசடைவதால் வரக்கூடியதாகும். துர்நாற்றம் வீசாமல் வரும் சீழ் ஆபத்தில்லாதது. நாற்றம் அதிகமாக இருக்கும் சீழ் கேட்டல் திறனை பாதிக்கும்.

இதனால் நடுக்காதில் சதை வளர ஆரம்பிக்கும். இதை கவனிக்காமல் விட்டால் காது மொத்தமாக கேட்காமல் போய்விடும். இந்த பாதிப்பு `கொலஸ்டியட்டோமா’ எனபடுகிறது. ஆபரேஷன் செய்தாலும் (சிலவேளைகளில்) காதுகேட்கும் திறன் திரும்புமா? என்பது சந்தேகம்தான். குரும்பி எடுக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குச்சி, பின், சாவி, பென்சில், பேப்பர், பட்ஸ் என கையில் கிடைப்பதை வைத்து குரும்பியை எடுக்கிறார்கள். உண்மையில் குரும்பி இருப்பது காதுக்கு அவசியமானது. அது காதை பாதுகாக்கும். அதிகமான குரும்பி தானாகவே வெளியேறிவிடும்.

பட்ஸ் உபயோகிபது குரும்பியை உள்ளே தள்ளத்தான் செய்யும். சொட்டுமருந்து, அல்லது தேங்காய் எண்ணை முலம் குரும்பியை வெளியில் எடுக்கலாம். சிறு கல், பாசி போன்ற பொருட்கள் காதில் விழுந்தால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது. காதில் ஈரத்தன்மை இருந்தால் தானாகவே பூஞ்சை வளர ஆரம்பித்துவிடும். இதனால் காது அடைக்கும், சீழ் வடியும். இதுபோன்ற பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காட்ட வேண்டும். சுயமாக சொட்டுமருந்து வாங்கி பயன்படுத்தக்கூடாது.

எண்ணைவிடுவது, சொட்டுமருந்து விடுவதெல்லாம் பூஞ்சையை வளர்க்கும் உரம்போலத்தான் செயல்படும். இதை தடுக்க பூஞ்சையை சுத்தம் செய்துவிட்டு பூஞ்சைக்கு எதிரான சொட்டுமருந்தை பயன்படுத்த வேண்டும். பூஞ்சை ஒருமுறை வந்தால் மீண்டும் வளரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். கேட்கும் வேலையை மட்டும் காது செய்வதில்லை. உடல் வெப்பநிலையை சமநிலைபடுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. காது, முக்கு, தொண்டை முன்றும் நெருங்கிய தொடர்பு உடையவை. காது கேட்பதில் தொடைக்கு பங்கு உண்டு.

மனிதர்களைவிட விலங்குகள் காதை நுட்பமாக பயன்படுத்துகின்றன. பூகம்பம் முதலான இயற்கைச் சீற்றங்களையும் முன்கூட்டியே அவை கண்டுகொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மன்னர்கள் காலத்தில் மனிதர்களும் பூமியில் காதை வைத்து எதிரியின் படை எவ்வளவு தூரத்தில் வருகிறது, எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று கணித்தார்களாம். கா து பிரச்சினைகளுக்கு உடலில் அணிந்து கொள்ளும் வகையிலான `காது கேட்டல் உதவி உபகரணங்கள்’ கிடைக்கின்றன. இதில் சிலவற்றை சட்டை பையில் வைத்துக்கொள்ளலாம். இந்த வகைக் கருவிகள் பின்விளைவு ஏற்படுத்துவதில்லை. காதுகேட்கும் திறன் பெருமளவு பாதிக்கபட்டவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற கருவிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

மிகச்சிறிய கருவிகள் பல உள்ளன. பி.டி.இ. கருவி (காதின் பின்னால் அணிவது), ஐ.டி.இ. கருவி (காதுக்குள் பொருத்திவிடுவது), ஐ.டி.சி. கருவி (உட்காதில் பொருத்துவது), சி.ஐ.சி. கருவி (கண்ணுக்கே தெரியாத ஆழத்தில் பொருத்துவது) ஆகியவை குறிபிடத்தக்கவை. இப்போதெல்லாம் எங்கும் சத்தம் அதிகமாக இருக்கிறது. இது காதுகளை வெகுவாக பாதிக்கும். ரெயில் இயங்கும் டெசிபல் அளவுக்கு மேல் ஒலிவரும் இடங்களில் காதுபாதுகாப்புக் கருவி இல்லாமல் பணி செய்யக்கூடாது.

காதில் பஞ்சுவைத்துக் கொள்வது ஓரளவு பாதுகாப்பு தரலாம். 140 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள சத்தத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் கேட்கக்கூடாது. அதிக ஒலிகள் காதை மட்டும் பாதிக்காமல் மனபாதிப்புகளையும் உருவாக்கும். வயிற்றில் புண், அஜீரணம் போன்ற கோளாறுகளையும் ஏற்படுத்தலாம். பார்வையும், கருவையும்கூட பாதிக்கும்.

ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?


1. அதிக எண்ணெய்ப் பசை உள்ளவர்கள்.
2. முகப்பரு அதிகம் உள்ளவர்கள்.
3. மூக்கில், காதில் அறுவை சிகிச்சை செய்தவர்கள்.
4. முகத்தில் வெட்டுக்காயம் உள்ளவர்கள்.
5. தீக்காயம் முகத்தில் ஏற்பட்டவர்கள்.

இனி வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
உலர்ந்த சருமத்தினர் புருவத்திற்கு விளக்கெண்ணெய் தடவவும். உதட்டின் மேல் ‘வாஸலின்’ அல்லது கிளிசரின் தடவவும். பால், ஓட்ஸ், பாதாம் எண்ணெய் சிறு துளிகள், ஆலிவ் எண்ணெய் சிறு துளிகள் கலந்து போட்டு சில நிமிடங்கள் ஊறிய பிறகு முகத்தை கழுவிக் கொள்ளலாம்

மைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்

உங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பின் மூலம் தொழில் ரீதியான ஓர் இணைய தளம், தளப் பெயர், இமெயில் வசதி மற்றும் அதனைத் தாங்கி இயக்கும் வசதி என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் பெறலாம். இவை அனைத்துமே இலவசம் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று.  இதனைப் பெற நீங்கள் முதலில் அணுக வேண்டிய தள முகவரி http://officelive.com/enus/. தளத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள “Create a Free Website” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். உடன் இதில் பதிவு (Sign In) செய்திட செய்தி கிடைக்கும். அனைத்தும் பதிவு செய்து உறுதியானவுடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் மெயின் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு தான் உங்களுக்குத் தேவையான இமெயில் வசதி, தளப் பெயர், தள வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறலாம். நீங்களே உங்கள் தளத்தினை வடிவமைக்கலாம். அதற்கான டூல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இங்கு சென்று இந்த டூல்களைப் பற்றித் தெரிந்த பின்பே, இணையதளம் ஒன்றினை வடிவமைப்பது எவ்வளவு எளிது என்று அறிந்து கொள்ளலாம்.
“Design Site” லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இரண்டு விண்டோக்கள் திறக்கப்படும். ஒரு விண்டோவில் வெப்சைட் மேனேஜர் பக்கம் கிடைக்கிறது. இன்னொன்றில் வெப் டிசைன் டூல்கள் தரப்படுகின்றன. இதற்குக் கீழாக ஹோம் பேஜ் ஒன்று தரப்பட்டு நீங்கள் எடிட் செய்வதற்கு ரெடியாக இருக்கும். அதிலேயே உங்கள் தளத்திற்கான “About Us” மற்றும் “Contact Us” தயாராக இருப்பதனைக் காணலாம். இதன் பின்னர், அதில் தரப்பட்டுள்ள எளிதான யூசர் இன்டர்பேஸ் மூலம் தளத்தினை வடிவமைக்கலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் தரும் ஷேர் பாய்ண்ட் பயன்படுத்தியவர்களுக்கு இது இன்னும் எளிதாகத் தோன்றும்.
தளத்தின் ஹெடர் டெக்ஸ்ட்டை விரும்பியபடி மாற்றலாம். அதற்கான பாப் அப் விண்டோக்கள் அடுத்தடுத்து கிடைக்கின்றன. டெக்ஸ்ட்டை நமக்கேற்ற வகையில் பார்மட் செய்திடலாம். இதில் நம் இலச்சினையைச் சேர்த்து அமைக்கலாம். எளிதான டூல்களும், வழி நடத்தும் குறிப்புகளும் இணைந்து நம் இணைய பக்கத்தினை எளிதாக உருவாக்க உதவுகின்றன. மேலும் இது இலவசம் என்பது கூடுதல் சிறப்பாகும். எதற்கும் ஒருமுறை சென்று பார்த்து பயன்படுத்திப் பாருக்கள்.