Monthly Archives: ஜூலை, 2010

சர்க்கரையை குறைக்கும் “மகாகனி’

இன்று உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய். மனித உறுப்புக்களின் செயல்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, இறுதியில் மரணத்தில் தள்ளும் தன்மை கொண்டது இந்த நோய். சித்த வைத்தியத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்துகள் உள்ளன. வெந்தயம், சுண்டை, பாகல், வேம்பு, நிலவேம்பு போன்ற பல மூலிகைகள் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை. இந்த வகையில், மகாகனி மூலிகையும் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள அடர்ந்த பசுமை காடுகளில் இந்த அரிய மூலிகை காணப்படுகிறது. மிக, மிக கசப்பு மற்றும் துவர்ப்பு தன்மை கொண்ட மகாகனியின் பட்டை, உலர்ந்த பழத்தோல் ஆகியவை “தேன்காய்’ என்ற பெயரில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த விற்பனை செய்யப்படுகின்றன. இதிலுள்ள பேராக்மலின் லிமனாய்டுகள் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. மகாகனியின் பட்டை, பழத்தோல் ஆகியவற்றை 10 கிராம் அளவில் எடுத்து, 500 மி.லி., நீரில் போட்டு, கொதிக்க வைக்க வேண்டும்.  அது, 125 மி.லி., அளவிற்கு சுண்டிய பின், தொடர்ந்து குடித்து வர சர்க்கரை அளவு குறையும். மகாகனி பட்டையை இடித்து, பொடித்து, சலித்து 500 மி.கி., அளவிற்கு தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்போ, பின்போ சாப்பிட்டு நீர் அருந்தலாம். மருந்துகள் உட்கொள்ளும் போது சர்க்கரை அளவு மிக குறைந்து, குறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாகனி ஒரு மாமருந்து.

கோல்டன் ஃபேஷியல்

இம்முறையில் ஃபேஷில் செய்வதால் சூரிய வெப்பத்தினால் சரும நிறம் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுக்கள், சுருக்கங்கள் நீக்கப்படம்  சரியான பிரஷர் பாயிண்டுகளை ஒரு கைதேர்ந்த அழகு நிபுணரின் உதவியுடன் அழுத்தி மசாஜ் செய்வது அவசியம்.
இதில் முதலில் நேரோபேக் எனப்படும் ஷாதானியம், முட்டை, பன்னீர் முதலியவற்றின் கலவை முகத்தில் பத்து நிமிடங்களுக்குத்
தடவப்படுகிறது. பிறகு அதன் மேல் பால் தெளித்து மெதுவாகத் தேய்த்து வேண்டாத தோல் பகுதிகள் நீக்கப்படுகின்றன. பிறகு தண்ணீரால்  முகத்தைத் துடைத்து ‘கோல்ட்’ க்ரீம் மற்றும் பால் சேர்த்து தடவப்படுகிறது. சரியான பிரஷர் பாயிண்டுகளில் லிம்ஃப்பாடிக் மசாஜ் என்ற  முறையில் மசாஜ் செய்யப்படும்.
பிறகு சாதாரண முறையில் நாற்பத்து ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீக்கப்படுகின்றன. பிறகு
‘கோல்ட்ஜெல்’ தடவி, கால்வானிக் மெஷின் மூலம் பாஸிட்டிவில் (+ve) ஐந்து நிமிடமும் நெகடிவில் (-ve)  ஐந்து நிமிடமும் வைத்து மசாஜ்  செய்யப்படும். பிறகு முகத்தினை துடைத்து ‘கோல்ட் பாக்’ தடவி கண்களைச் சுற்றி ஷாவீட்(Shaweed) என்ற லோஷனை தடவ வேண்டும்.
கண்களின் மேல் குளிர்ச்சியான பஞ்சு வைக்க வேண்டும். பிறகு அதை துடைத்துவிட்டு  ஷா பேஸ் (Sha ba‡e)  என்ற க்ரீம் தடவப்படும்.
இதுவே கோல்டன் ஃபேஷியல்.

தலைமுடி பிரச்னையை தீர்க்கலாம் எளிதில்

ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு தலைமுடி முக்கிய காரணமாக அமைகிறது. பழங்கால முரல் ஓவியங்களில் வரையப்பட்ட பெண்கள், தாமரை போன்ற கண்களையும், நீண்ட கூந்தலையும் பெற்றிருப்பர். ஆண்களுக்கு அப்போதே வழுக்கை விழுந்திருக்க வேண்டுமென தோன்றுகிறது; அந்த ஓவியங்களில் உள்ள ஆண்கள், தலைப்பாகையுடன் தான் தோற்றமளிப்பர்!

இப்போது அந்த நிலை மாறி வருகிறது. பெண்கள், மிகக் குறைந்த நீளமுடையதாக தலைமுடியை வெட்டிக் கொள்கின்றனர். வழுக்கை தலை உடைய ஆண்கள், தலையை மறைப்பது இல்லை. “டிவி’ மற்றும் திரைப்படங்களில் தோன்றும் ஆண் களும், பெண் களும், தலை நிறைய முடியுடன் தான் உள்ளனர்.  ஆனால், அது உண்மையா? சவுரி,  இணைப்புத் தலைமுடி, விக், கம்ப்யூட்டரில் மாற்றப்பட்ட உருவங்கள் என, பலவும் செயற்கையானவையாகவே  உள்ளன. ஆண்கள், பெண்கள், ஏன்… குழந்தைகளுக்குக் கூட தலைமுடி உதிர்வதால், இதைத் தடுக்க மருந்துகள் உள்ளன  எனக் கூறி, அதற்கான சந்தை தான் விரிவடைந்துள்ளது. முடி வளர்வதும், உதிர்வதும் சுழற்சி முறையில் ஏற்படுவதே. இரண்டு முதல் ஆறு ஆண்டுகள் வரை முடி வளரும்; பின், மூன்று மாதங்கள், வளர்வது நிற்கும். வளர்வது நின்றதும், முடி உதிரும். அதன் பின், மீண்டும் வளரும். எனவே, தலையில் எப்போதும், 10 சதவீத முடி கொட்டிக் கொண்டே இருக்கும். 80 முதல் 90 சதவீத முடி வளர்ந்து கொண்டே இருக்கும்.  நாள் ஒன்றுக்கு, 75 முதல் 100 முடி வரை உதிர்வது, சாதாரண நிலையே. உதிரும் வேர்க் காலிலிருந்தே மீண்டும் புதிய முடி முளைக்கும். மீண்டும் அதற்கான சுழற்சியைத் துவங்கி விடும். ஒரு மாதத்தில் ஒன்றரை அங்குலம் வரை முடி வளரும். வயது ஏற, ஏற முடி வளர்வது குறையும்; வேர்க் கால்களின் எண்ணிக்கையும் குறையும்.  நாள் ஒன்றுக்கு 150 முடிகளுக்கும் மேல் உதிர்ந்தால், மருத்துவரீதியான கோளாறு ஏற்பட்டுள்ளதென்று கொள்ளலாம். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு எவ்வளவு முடி கொட்டுகிறதென்பது, அவருக்கு மட்டுமே தெரியும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். டாக்டரிடம் காண்பித்தும், அவர் சரியாகக் கணிக்கவில்லை என்று கூறக் கூடாது. பெண்கள், கூந்தலை, “கிளிப்’புகள் மூலம் இறுக்குவது, மிகவும் இறுக்கமாக பின்னுவது ஆகியவற்றால், முடி உதிரும். சத்தான உணவு சாப்பிடாமையும் முடி உதிர்தலுக்குக் காரணமாகிறது. துரித உணவு, ரெடிமேட் உணவுகளைச் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான புரோட்டீன், வைட்டமின், தாதுப் பொருட்களான இரும்பு, துத்தநாக, சுண்ணாம்புச் சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
ஹார்மோன் கோளாறும், முடி உதிர்தலுக்குக் காரணமாகிறது. இந்தக் கோளாறால், தலையிலிருக்கும் மீதி முடியும், வலுவிழந்து, களையிழந்து போகும். தைராய்டு, கல்லீரல் ஆகியவற்றில் பிரச்னை, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டெரோன், ஆண்ட்ரோஜென் ஆகியவை அபரிமிதமாகச் சுரப்பதும் காரணமாக அமையலாம்.
ஆண்ட்ரோஜென் சுரப்பது அதிகரித்தால், ஆண்களுக்கு, வழுக்கை விழும். பெண்கள் உடலிலும் ஆண்ட்ரோஜென் அதிகரித்தால், ஆண்கள் போல வழுக்கை விழும். படபடப்பு, மாத விலக்கு, கருத்தரிப்பு, பால் ஊட்டும் காலம், மெனோபாஸ், பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் ஆகிய காரணங்களால், ஹார்மோன் சுரப்பதில் மாறுபாடு ஏற்படும்.

“அலோபீசியா அரேட்டா’ (திட்டு திட்டாக முடி உதிர்வது) என்ற பாதிப்பு ஏற்படும் போது, அளவுக்கு அதிகமாக முடி உதிரும். தலையில் ஆங்காங்கே, வட்ட வடிவமாக, முற்றிலும் முடி கொட்டிய நிலை இது. முடி சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனையில் மட்டுமே இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாதிப்பு, “அலோபீசியா டோட்டாலிஸ்’ (முடி முற்றிலும் உதிர்தல்) என்ற நிலையை, அதாவது தலையில் ஒரு முடி கூட இல்லாமல், முற்றிலும் உதிர்ந்து விட்டால், இதற்கு எடுக்கப்படும் சிகிச்சை, வெற்றிகரமாக அமைவதில்லை. புற்று நோயாளிகள் எடுத்துக் கொள்ளும், “கீமோதெரபி’ சிகிச்சையின் போதும், முடி உதிரும். சிகிச்சை முடிந்ததும், தலைமுடி தானாகவே வளரத் துவங்கி விடும். ரேடியோ கதிர்கள்படுவதோ, காயத்தால் தழும்பு ஏற்பட்டாலோ, அந்த இடங்களில் முடி மீண்டும் வளராது. பரம்பரை வழுக்கை ஏற்படுவதும் இயல்பு தான். தலைமுடி மீண்டும் வளராது என்ற நிலையை எட்டியவர்கள், இருக்கும் முடியைத் தக்க வைத்துக் கொள்ள சில நடைமுறைகளைப் பின்பற்றலாம். முடியை நல்ல முறையில் பராமரிக்க, பொதுவாகவே சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
* வாரத்திற்கு இரு முறை, தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். விரல்களால், முடியின் வேர்க்கால்களில் எண்ணெயை நன்கு தடவ வேண்டும். நகங்களால் தேய்க்கக் கூடாது. எந்த விதமான ஷாம்பூவோ, ரெடிமேடு சிகைக்காய் பவுடர்களோ தலைக்குத் தேய்த்துக் குளிக்கக் கூடாது. சுத்தமான சிகைக்காயை, பூந்திக்காயுடன் சேர்த்து அரைத்து வைத்து, அதையே தலைக்கு உபயோகப்படுத்த வேண்டும். ஷாம்பூவிலும், மற்ற பவுடர்களிலும், அதிக நுரை வருவதற்காக ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இது முடியின் தன்மையையே மாற்றி விடும்.
* தலைமுடியைச் சுருட்டிக் கொள்ள ஆசைப்பட்டு, பார்லரில் ரசாயன சிகிச்சை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் தலைமுடியை இறுக்கமாகப் பின்னிக் கொண்டால், மறு நாள் காலை அழகான சுருட்டை முடியைக் காணலாம்.
* தலை உலர்த்தும் கருவியை, முடி மீது நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது. தலையை ஒரு துண்டால் மூடிக் கொண்டு, கருவியிலிருந்து வெளிவரும் சூடு, துண்டில் பட்டு, அந்தச் சூட்டில் தலைமுடி காயும் வகையில், கருவியைப் பயன்படுத்த வேண்டும்.
* சத்தான உணவு சாப்பிட வேண்டும். நாள் ஒன்றுக்கு 6 கிராம் அளவில் உடலுக்கு புரோட்டீன் சத்து தேவை. இது தவிர, இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, சுண்ணாம்புச் சத்து அடங்கிய உணவு வகைகளையும் சாப்பிட வேண்டும்.
* “மினாக்சிடில்’ என்ற மருந்தை தலையில் தினமும் இரண்டு வேளை தடவினால், ஆறு மாதத்தில் முன்னேற்றம் காணலாம். “பைனாஸ்டிரைடு’ என்ற மாத்திரை உள்ளது. இந்த மாத்திரை சாப்பிட்டால், ஆண்களுக்கு முடி உதிரக் காரணமாக இருக்கும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்பட்டு, சீக்கிரம் வழுக்கை ஏற்படாமல் பாதுகாக்கலாம். எக்காரணம் கொண்டும், பெண்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது.
* “ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்’ செய்து கொள்ளலாம். முடி மாற்று அறுவை சிகிச்சை என்று இதற்கு பெயர். பிளாஸ்டிக் சர்ஜன் இதைச் செய்வார். ஆனால், இந்தச் சிகிச்சைக்கு கட்டணமும் அதிகம்; அதிக நேரமும் எடுக்கும். தலைமுடி முற்றிலும் உதிர்ந்து விட்டவர்கள், இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

நன்றி- தினமலர்

ஃபேஷியல்

பேர்ல் ஃபேஷியல் :
மிகவும் கறுப்பான நிறம் உள்ளவர்களுக்கு இம்முறை நல்ல பலன் தரும். இதற்கு ‘கோல்டன் ஃபேஷியல்’ அளவிற்குச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. யாவரும் செய்து கொள்ளலாம். குறிப்பாக அதிக எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் செய்து கொள்வது நல்லது.

கால்வானிக் ஃபேஷியல்
உலர்ந்த கருமம் மற்றும் பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு இம்முறையில் ஃபேஷியல் செய்வது நல்லது. மிஷினின் உதவியுடன் மசாஜ் செய்யப்படும் இம்முறையில் கறுப்புத் திட்டுக்கள், டபுள்ஸ்கின், தொங்கும் கழுத்துச்சதை முதலியவை நீங்கும்.

அரோமா ஃபேஷியல்
வயதான பெண்மணிகள், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், தூக்கம் வராமல் வேதனைப்படுபவர்கள், தலைவலியினால் அவதிப்படுபவர்கள் முதலியோருக்கு இம்முறை ஃபேஷியல் மிகவும் உகந்ததாகும். அரோமாபாக் தொங்கிய சதையைத் தூக்கி நிறுத்த உதவும். இதில் பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள் மனத்தை ரம்மியப்படுத்தி நோயினால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கிறது

வேர்டில் ஆபீஸ் அசிஸ்டன்ட்

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் புரோகிராம்களில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் பலரும் இதனைக் கவனமாகப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு தாளில் பேப்பர் கிளிப் ஒன்று கண்ணாடி மாட்டிக் கொண்டு நீங்கள் தரும் கட்டளைக்காகக் காத்திருக்கும். இதுதான் ஆபீஸ் அசிஸ்டண்ட். ஆபீஸ் புரோகிராம் செயல்பாடு குறித்து ஏதேனும் உதவி வேண்டும் எனில் இதனைக் கிளிக் செய்து வரும் விண்டோவின் கட்டத்தில் உங்களுடைய சந்தேகத்தை அல்லது கேள்வியை டைப் செய்து தேடச் சொல்லலாம். உதவிக் குறிப்புகளும் வரிசையாகக் கிடைக்கும்.
சில வேளைகளில் இந்த ஆபீஸ் அசிஸ்டண்ட் மீது ஒரு பல்ப் ஒன்று எரிந்தபடி இருக்கும். இந்த எரியும் பல்ப் மீது கிளிக் செய்தால் உடனே உங்களுக்கு ஒரு டிப்ஸ் எனப்படும் உதவிக் குறிப்பு கிடைக்கும். இதைப் படித்தவுடன், அந்த மாதிரி ஆபீஸ் அசிஸ்டண்ட் என் ஆபீஸ் தொகுப்பில் பார்த்ததில்லையே; சிலரோ அசிஸ்டண்ட் வருகிறான்; ஆனால் லைட் எரிந்ததில்லையே என முணுமுணுக்கலாம். அப்படியானால் அவ்வாறு உங்கள் ஆபீஸ் தொகுப்பினை செட் செய்திருக்கிறீர்கள் என்று பொருள். இந்த விளக்கை எரிய விட கீழ்க்காணும் வழிகளின் படி செயல்படவும். முதலில் ஆபீஸ் அசிஸ்டண்ட்டை எப்போதும் திரையில் வைத்துக் கொள்ள Help மெனு பகுதியில் கிளிக் செய்து, வரும் மெனுவில் Show the Office Assistant என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது திரையில் கண்ணாடி மாட்டிய பேப்பர் கிளிப் வடிவத்தில் ஆபீஸ் அசிஸ்டண்ட் கிடைப்பான். இனி அந்த அசிஸ்டண்ட் மீது கிளிக் செய்தால் ஆபீஸ் அசிஸ்டண்ட் மெனு கிடைக்கும். இதில் Options என்ற பகுதியைப் பார்த்தால் அதில் Show Tips about என்ற பிரிவில் ஐந்து வகையான உதவிக் குறிப்புகள் உங்களுக்குத் தருவதற்காகப் பட்டியலிடப் பட்டிருப்பதனைப் பார்க்கலாம். எந்த வகையெல்லாம் வேண்டுமோ அந்த பகுதியில் உள்ள சிறிய கட்டங்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இப்படி ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் ஆபீஸ் அசிஸ்டண்ட்டும் நீங்களும் உதவி வழங்குவது குறித்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டு விட்டீர்கள் என்று சொல்லலாம். இனி இவனை நீங்கள் நாடும் போதெல்லாம் உங்களுக்கான உதவிக் குறிப்புகள் தோன்றும். அதனைப் பின்பற்றலாம்; அல்லது ஒதுக்கி விடலாம்.
இந்த பேப்பர் கிளிப் அசிஸ்டண்ட் பார்க்க சரியில்லையே; இதனை வேறு வடிவத்தில் கொடுத்திருக்கக் கூடாதா? என்று எண்ணுகிறீர்களா? அதற்கும் சாய்ஸ் இருக்கிறது. Options என்ற பகுதிக்கு அருகே Gallery என்ற பகுதி இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் அதில் எட்டு வடிவங்கள் தரப்பட்டுள்ள பகுதி கிடைக்கும். அதிலேயே ஒவ்வொன்றின் பெயர்களும் அவற்றைப் பெறும் விருப்பக் கட்டங்களும் இருக்கும். Next என்பதைக் கிளிக் செய்து கொண்டு போனால் இவை ஒவ்வொன்றாகக் கிடைக்கும். இவற்றில் உயிர் உள்ள ஜீவராசியாக ஐந்து உள்ளன. பேப்பர் கிளிப் வடிவில் கண்ணாடி மாட்டிக் கொண்டிருப்பவன் பெயர் Clippit. புள்ளி ஒன்றுக்கு கண்ணாடி மாட்டி தாவும் ஜீவனுக்கு பெயர் The Dot. சிறிய ஆந்தையாக உள்ள அசிஸ்டண்ட் பெயர் F1. எம்.எஸ். ஆபீஸ் இலச்சினையும் ஒரு வடிவாக உள்ளது இது Office Logo என அழைக்கப்படுகிறது. சர்க்கஸ் கோமாளி வடிவில் மந்திரவாதியாக ஒரு அசிஸ்டண்ட் வருவான்; அவன் பெயர் Merlin. சுற்றும் உலக உருண்டையாக வரும் அசிஸ்டண்ட் Mother Nature என அழைக்கப்படுகிறது. சிறிய பூனைக் குட்டியாக வந்து காட்சி அளிக்கும் அசிஸ்டண்ட் ஃடிணடுண் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூனை இருக்கும் போது நாய்க்குட்டி இருக்க வேண்டாமா? செல்ல நாயாக வந்து வாலை ஆட்டி உதவி அளிக்கும் அசிஸ்டண்ட்டின் செல்லப் பெயர் Rocky ஆகும். இவற்றில் உங்களுக்குப் பிடித்ததனைப் பெற்று ஆபீஸ் புரோகிராம்களில் இயங்க விடலாம். தேவையானபடி மாற்றிக் கொள்ளலாம். சில அசிஸ்டண்ட்களைத் தேர்ந்தெடுத்து அமைத்திடக் கட்டளை கொடுக்கையில் அவை கிடைக்காமல் போகலாம். அப்போது The selected Assistant Character is not available. This feature is not currently installed. Would you like to install it now? என செய்தி கிடைக்கும். கவலையேபடாமல் Yes என்று கொடுக்கவும். சில நொடிகளில் நீங்கள் தேர்ந்தெடுத்த அசிஸ்டண்ட் இன்ஸ்டால் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். ஆபீஸ் புரோகிராம்களில் தோற்றம் தரும். ஆபீஸில் பணிபுரிபவர்கள் பணி நேரத்தில் உறங்காமலா இருப்பார்கள்? இந்த அசிஸ்டண்ட்களும் அப்படித்தான். சில வேளைகளில் எந்த சலனமும் இன்றி தூங்குவார்கள். அப்போது அவர்கள் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Animate என்பதனைக் கிளிக் செய்திடவும். அப்போது இந்த ஜீவன்கள் செய்திடும் சேட்டையில் நமக்கு சிரிப்பும் வரும்.
ஆபீஸ் அசிஸ்டண்ட்டுடன் சிறிது கவனமாகவே இருக்க வேண்டும். சில வேளைகளில் அதற்குக் கோபமும் வரும். அசிஸ்டண்ட்டைப் பெற Help மெனு சென்று Show the Office Assistant என்பதனைக் கிளிக் செய்தால் நமக்கு ஆபீஸ் அசிஸ்டண்ட் கிடைப்பான். அப்போது Help மெனுவில் Hide the Office Assistant என்று அப்பிரிவு மாறி இருக்கும். நீங்கள் அசிஸ்டண்ட்டைத் துரத்த எண்ணி அடிக்கடி இதனை மறைத்தும் தோன்றும் படியும் செய்தால் உடனே ஆபீஸ் அசிஸ்டண்ட் கோபித்துக் கொண்டு நீங்கள் பலமுறை மறைத்துவிட்டீர்கள். என்னை ஒரேயடியாக மறைத்து விடுங்களேன். செய்து விடவா? அல்லது இப்போதைக்கு மட்டும் மறைந்து கொள்ளவா? என்று கேட்கும். நீங்கள் உங்களுக்குப் பிடித்தபடி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மனைவிக்கு துரோகம் செய்யாதீர் -ஆன்மிகம்

மனைவி என்ற ஸ்தானம், தியாகத்தின் அடையாளம். பெருமையுடைய இந்த உறவுக்கு, துரோகம் செய்யும் ஆண்கள் பூமியில் இருக்கின்றனர். இவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக, சங்கரன்கோவில் எனும் திருத்தலத்தில் வழிபட்ட ஒரு பெண்ணின் கதையைக் கேளுங்கள். இங்குள்ள சங்கரநாராயண சுவாமி கோவில், ஆடித்தபசு விழாவுக்கு பிரபலமானது. சிவபெருமானையும், நாராயணனையும் ஒரே வடிவில் தரிசிக்க வேண்டுமென விரும்பினாள் பார்வதி. இதற்காக, பூலோகம் வந்து, ஒரு புன்னைவனத்தில் தவம் செய்தாள். தேவலோகப் பெண்கள் பசுக்களாகப் பிறந்து, அவளுக்கு உதவி வந்தனர். “ஆ’ எனப்படும் பசுக்களை உடமையாகக் கொண்ட இவளுக்கு, “ஆவுடையம்மாள்’ என்றும், “கோ’ எனும் பசுக்களை உடையவள் என்பதால், “கோமதி’ என்றும் அழைக்கப்பட்டாள். சிவநாராயணர் அவளது தவத்தை ஏற்று, ஒன்றுபட்ட வடிவில், “சங்கரநாராயணன்’ எனும் பெயரில் காட்சி தந்தனர். பின்னர்,  லிங்க வடிவில் இவ்வூரில் தங்கினார் சிவன். அவருக்கு, “சங்கரலிங்கம்’ என்று பெயர் ஏற்பட்டது. தவத்தை, “தபஸ்’ என்பர்; எனவே, இங்கு நடக்கும் விழா, “தபசு’ ஆனது.
பூர்வகாலத்தில் தக்கணை எனும் பெண், தன் தந்தை விண்டுசருமனுடன் வசித்து வந்தாள். இந்தப் பெண்ணை காசியில் வசித்த சத்தியகீர்த்தி என்பவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். வீட்டோடு மருமகனாக இருக்க, சத்தியகீர்த்தி சம்மதித்தான்; ஆனால், ஒரே மாதத்தில் அவன் இறந்து விட்டான்.
பூர்வஜென்மத்தில் ஒரு பெண் எப்படி நடக்கிறாளோ, அதைப் பொறுத்தே மறுபிறவியில் வாழ்க்கை அமையும். முற்பிறப்பில், தக்கணை ஒரு ஆணாகப் பிறந்திருந்தாள். கவிதையில் வல்ல அந்த ஆண்மகனுக்கு, திருமணமாகி இருந்தது; ஆனால், மனைவியைக் கைவிட்டு, பிற பெண்களிடம் தொடர்பு கொண்டிருந்தான். எனவே, அவனது மனைவி, தீராத வயிற்றெரிச்சலுடன் இறந்துவிட்டாள். அது, அவனை சும்மா விடவில்லை. மறுபிறப்பில் தக்கணையாகப் பிறந்து, இளவயதிலேயே விதவையாகும்படி ஆகி விட்டது. அதே போல சத்தியகீர்த்தியும் முற்பிறப்பில் கொலைகாரனாக இருந்தான். ஒரு தேவனும், அவனது மனைவியும் சந்தர்ப்பவசத்தால் முயல்களாகப் பிறந்து, பூமியில் வசித்தனர். அவை மகிழ்ச்சியாக இருந்த வேளையில், மாமிசத்திற்கு ஆசைப்பட்டு, ஆண் முயலைக் கொன்று விட்டான். பெண் முயல் சுயவடிவம் பெற்று, அவனுக்கு சாபம் விட்டது. அதனால், அவனும் கல்யாணமான புதிதிலேயே இறந்துவிட்டான். கணவனை இழந்த தக்கணை, ஆறுதலுக்காக பல தீர்த்தங்களில் நீராடினாள். கடைசியாக அவள் வந்த தலம் சங்கரன்கோவில். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தவத்தைத் துவங்கினாள். அந்த தவத்தை மெச்சிய சிவபெருமான், அவள் முன்தோன்றி, “உனக்கு இன்னும் ஏழு பிறப்பு இருக்கிறது. பிறவிக்கு ஒரு பிள்ளையைப் பெற்று, ஏழு பிறவி நீங்கிய பிறகே உனக்கு கைலாச பதவி அளிக்க முடியும்!’ என்றார். கடவுள் தரிசனம் கிடைத்த பிறகும், பிறவிகள் தொடருமா என அவள் கேட்டதற்கு, “ஆம் மகளே… நீ ஒரு பிறப்பில் உன் மனைவிக்கு செய்த துரோகம், ஏழுபிறப்பும் தொடரும். இந்த துரோகத்துக்கு பரிகாரமே கிடையாது. இருப்பினும், இப்பிறப்பில் செய்துள்ள தவத்தால் ஏழு பிறப்புக்கு பிறகு உனக்கு கைலாயத்தில் இடம் உண்டு!’ என்றார். பார்த்தீர்களா… மனைவிக்கு துரோகம் செய்தததால் வந்த வினையை! சங்கரன்கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி, மனைவியுடன் மட்டும் வாழ உறுதியெடுத்து வாருங்கள்.

எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பார்முலாக்களைத் தொடர்ந்து பயன்படுத்த….

எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பல வேளைகளில் நாம் பார்முலாக்களை உருவாக்குகிறோம். இந்த பார்முலாக்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் இருக்கும். ஒவ்வொருமுறையும் இவற்றை மனதில் கொண்டு அமைக்கும்போது சில தவறுகள் ஏற்படலாம். ஒருமுறைதான் நன்றாக அமைத்துவிட்டோமே, அவற்றை சேவ் செய்து எந்த நேரமும் பயன்படுத்தும் வகையில் வழியில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். துரதிர்ஷ்டவசமாக, எக்ஸெல் தொகுப்பில் அந்த வசதி இல்லை. ஆனால் வேறு சில வழிகளில் இதனை நாம் மேற்கொள்ளலாம். நோட்பேடில் ஒரு டெக்ஸ்ட் டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து அதில் இவ்வாறு அமைக்கப்படும் முக்கிய பார்முலாக்களை சேவ் செய்து வைத்துப் பின்னர் தேவைப்படுகையில், டாகுமெண்ட் டைத் திறந்து காப்பி செய்து பயன்படுத்தலாம். இந்த வகையில் ஓரளவிற்கு ஒரே மாதிரியாக அமைக்கப்பட்ட பார்முலாக்களைக் கையாள்கையில் அவற்றைத் தவறுதலாகக் காப்பி செய்து பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். இன்னொரு வழியும் உள்ளது. இந்த பார்முலாக்களுக்கு, அவற்றை அடையாளம் காணும் வகையிலான பெயர்களைச் சூட்டலாம். அதற்கான வழிகளைக் காணலாம்.
1.வழக்கம்போல உங்கள் பார்முலாவினை அமைக்கவும்.
2. பார்முலா உள்ள செல்லை செலக்ட் செய்திடவும். எப்2 அழுத்தவும். இப்போது எக்ஸெல் எடிட் முறைக்கு வரும்.
3. ஷிப்ட் கீயை அழுத்தி, கர்சரை நகர்த்தி முழு பார்முலாவினைத் தேர்ந்தெடுக்கவும். பார்முலாவின் முதலில் உள்ள = அடையாளம் முதற் கொண்டு தேர்ந்தெடுக்கவும்.
4. முழுவதும் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் கண்ட்ரோல்+சி அழுத்தி காப்பி செய்திடவும். இப்போது கிளிப் போர்டுக்கு பார்முலா சென்றுவிடும்.
5. அடுத்து எஸ்கேப் கீயினை அழுத்தவும். இப்போது எடிட் முறையிலிருந்து வெளியேறி இருப்பீர்கள். செல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
6. அடுத்து Insert மெனு செல்லவும். அங்கே Name என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Define என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் Define Name என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
7. ஒர்க்புக் பாக்ஸில் Names என்பதில், இந்த குறிப்பிட்ட பார்முலாவிற்கான பெயரை டைப் செய்திடவும்.
8. அடுத்து இந்த டயலாக் பாக்ஸில் கீழாக உள்ள,  Refers To பாக்ஸில் என்ன உள்ளதோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கண்ட்ரோல்+வி கீகளை அழுத்தவும். இப்போது செல்லுக்கான ரெபரன்ஸில், கிளிப்போர்டில் உள்ள பார்முலா அமைக்கப்படும்.
9. இந்த பார்முலாவில் டாலர் அடையாளம் எதுவும் இல்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அப்படி எதுவும் இருந்தால், அதனைத் தேர்ந்தெடுத்து நீக்கவும். (அவை கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற வகையில் உள்ள பார்முலாக்களுக்கு இந்த வழி சரியாக இருக்காது.)
10. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி எப்போதெல்லாம் இந்த பார்முலாவினைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களோ, = அடையாளம் ஏற்படுத்தி, இந்த பெயரினை மேலே 7ல் கொடுத்த பெயரினை டைப் செய்திடவும். செல்லில் பெயர் காட்டப்பட்டாலும், இந்த பெயருக்கு எந்த பார்முலா அமைக்கப்பட்டுள்ளதோ, அது ஒர்க்ஷீட் கணக்கிடுகையில் பயன்படுத்தப்படும். இந்த பார்முலாவினை ஒர்க்ஷீட்டின் எந்த செல்லிலும், அதற்கான பெயரைக் கொண்டு பயன்படுத்தலாம்.


நோட்டு புத்தகமான பெண்ணின் தோல் !

மிக அபூர்வமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் ஒரு பெண். இவர் உடலின் மேல் உள்ள தோலில், எதை வேண்டுமானாலும் எழுதலாம். அந்த எழுத்துக்கள் அப்படியே இருக்கும்.
சீனாவில் வசிக்கும் 50 வயதான பெண்ணின் பெயர் ஹூவாங் ஜியாங்ஜி. “காகித பெண்’ என இவரை, இந்த பகுதி மக்கள் அழைக்கின்றனர். இவர் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை, தனியாக பேப்பரில் எழுத மாட்டார். தன் உடலிலேயே நகத்தால் எழுதுவார்; அந்த எழுத்துக்கள் அப்படியே இருக்கும். சீனாவில் பிரபலமான தோல் மருத்துவர்கள், இப்போது இந்த பெண் நிலையை குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். “இந்த பெண்ணின் தோலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் எந்த அபாயமும் இல்லை. இது ஒருவகை அலர்ஜிதான். இவரைப்போல் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விபரங்கள் எதுவும் இல்லை. காரணம் இது மிகவும் அபூர்வ நோய்…’ என, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.-

மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு

“நேற்று இரவு விருந்துக்கு வந்து விட்டு போனார்; இன்று காலை அவர் திடீர் மரணம்’ என்று செய்தி வருகிறது. இதைக் கேட்டு உறவினர்கள் கதறுகின்றனர்; நண்பர்கள் அங்கலாய்க்கின்றனர்; பெரிய தலைவரென்றால், நாடே பேசுகிறது.
உதாரணம்: பெருந்தலைவர் காமராஜ், மதிய உணவு உண்டு, சிறிது ஓய்வுக்காக படுக்க போனவர், எழுந்து வரவில்லை.
திடீர் மரணம் என்றால், மாரடைப்பு தான். மாரடைப்பு என்றால் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளமான, கரோனரி ரத்த நாள முழு அடைப்பு. கரோனரி ஆஞ்சியோகிராமில் அடைப்பு இல்லாதவர், திடீர் மரணமடைகிறார். ஏன்?
ரத்த நாளத்தில் உட்சுவர், நடுசுவர், வெளிச்சுவர் உண்டு. உட்சுவர் கண்ணாடி போன்று, ஒரே ஒரு அடுக்கை கொண்டதால், சிறிய பிரச்னையானாலும் எளிதில் பாதிப்படைகிறது. நடுசுவர், தசைகளால் ஆனது. இது சுருங்கி விரியும் தன்மை கொண்டது. வெளிச்சுவர் இரண்டு சுவர்களை தாங்கி கொண்டுள்ளது. ரப்பர் போல சுருங்கி விரியும் தன்மை கொண்டது ரத்த குழாய். ரத்தத்தில் அதிகமாகவுள்ள கெட்ட கொழுப் புகளான எல்.டி.எல்., – வி.எல்.டி.எல்., – டி.ஜி.எல்., இவை அதிகமாக இருந்து, நல்ல கொழுப்பான எச்.டி.எல்., குறைவாக இருந் தாலும், அதிகமாக சர்க்கரை இருந்தாலும் ரத்தத்தின் நீர் தன்மை குறைந்து, ரத்தம் கெட்டியாக இருக்கும்.
இதனால் ரத்த ஓட்டம் குறைகிறது. கெட்டக் கொழுப்பு, ரத்த நாளத்தின் உட்சுவர் மீது படர்ந்து இருக்கும். சில நேரங்களில் இது கட்டியாக வளர்ந்து, அடைப்பை உண்டாக்கும். இது ஒரு வகை அடைப்பு. மற்றொரு வகையில், ரத்த நாளத்தின் உட்சுவரில் விரிசல் ஏற்பட்டு, அந்த விரிசலில் கெட்டக் கொழுப்பு, நடு சுவருக்கும், உட்சுவருக்கும் இடையில் சேர்ந்து விடும். இந்த அடைப்பு இ.சி.ஜி., டிரெட் மில், எக்கோ கார்டியே கிராம், ஆஞ்சியோ கிராம் முதலிய பரிசோதனைகளால் கூட கண்டறிய முடியாது. தற்கொலை படை, வெடிகுண்டுகளை உடலில் கட்டி, நாட்டில் செல்வாக்குமிக்க, புகழ் பெற்ற தலைவர்களைக் கொன்று, தானும் சிதறி அழிவதோடு இல்லாமல், ஒன்றுமறியாத மக்களையும் கொன்று அழிக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜிவின் மரணத்தை யாரும் மறக்க முடியாது. மே 21, 1991 அன்று நடந்த சம்பவத்தில், அவரது சிதறிய உடலை, சென்னை ஜி.எச்., சவ அறையில் பார்த்து, நான் கதறி அழுதேன்.
இப்போது நாமெல்லாம் நம் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு அலைகிறோம். எப்படி?
நமது உடலிலுள்ள ரத்த நாளத்தின் உட் சுவரில், கெட்டக் கொழுப்புகளான டி.ஜி.எல்., – எல்.டி.எல்., – வி.எல்.டி.எல்., போன்றவைகள் படர்ந்து விடும். இவை நாளடைவில் அதிகமாகச் சேர்ந்து, அடைப்பாக மாறும்.
அடைப்பு பெரிதாகி, நாளத்தின் விட்டத்தை அடைக்கும். இதை  “அதெரோமேட்டஸ் பிளேக்’ என்பர். இது, கெட்டியாக இருக்கும்.  பால், தயிர் வைத்த பாத்திரத்தின் சுவரில் படர்ந்து இருப்பது போல, இவை இருக்கும். இது ஒரு வகை. இது ஆஞ்சியோ கிராமில் தெரியும்.
இந்த வகை அடைப்பிற்கு உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் அல்லது பை-பாஸ் செய்து கொள்ளலாம். 90 சதவீதம் கீழுள்ள அடைப்பிற்கு திட்டமிட்டு வைத்தியம் பார்க்கலாம்.
அடுத்த வகை, மென்மையான, “வல்னரபுள் பிளேக்!’ ஆனால், இது பயங்கரமானது. ரத்த நாளத்தில் உட்சுவரில் விரிசில் ஏற்படும் போது, கெட்டக் கொழுப்புகள், விரிசல் மூலமாக உள்ளே சென்று, நாளடைவில் பலூன் போல விரிவடைகிறது. இது எந்த நேரத்திலும், பலூன் போலவே வெடித்து விடும்.
உடலில் எங்காவது காயம் ஏற்பட்டால் சிறிது ரத்தம் வெளியேறி, பின் உறைந்து நின்று விடுகிறது அல்லவா? ரத்தத்திலுள்ள தட்டை அணுக்கள் எனப்படும், “பிளேட்லெட்’ தான் இதற்கு காரணம்.
பலூன் கட்டி, உட்சுவருக்கும் நடுசுவருக்கும் இடையில் இருப்பதால், கட்டி வெடித்த பின், ரத்தம் சிறிது வெளியேறி, பின் உறைகிறது. உறைந்த பகுதி ரத்த நாளத்தை அடைத்து, இதயத்தை செயலிழக்க செய்து, திடீர் மரணத்தை ஏற்படுத்துகிறது. இது தான் ஆங்கிலத்தில், “சடன் கார்டியாக் டெத்’ எனப்படுகிறது. இந்த பலூன் வகை, “பிளேக்’கை, ஆஞ்சியோகிராமில் கண்டுபிடிக்க முடியாது. இதயத்திற்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம், ஐந்து மடங்கு வரை விரிவடைந்து, இதயத்திற்கு ரத்தம் கொடுக்கும். அதிக வேலை, உடற்பயிற்சி, படி ஏறுவது, மன உளைச்சல், அலைச்சல் ஆகியவற்றின் போது, இதயத்திற்கு அதிக ரத்தம் தேவைப்படும்.
அப்போது, ரத்த நாளம் அதிகளவில் விரிவடைந்து கொடுக்க நேரிடும். விரியும் தன்மையில் கோளாறு ஏற்பட்டால், மார்பு வலி வரும்.
இந்த வகையான மார்பு வலி தான், பெண்களுக்கு 90 சதவீதம் இருக்கும். இதை ஆங்கிலத்தில், “பிரின்ஸ்மட்டல் அல்லது ஸ்பாஸ்டிக் ஆஞ்சைனா’ என அழைப்பர். இது சில நேரங்களில் ஆபத்தாக முடியும்.
இந்த இரண்டும் தான், நாம் உடலில் கட்டிக் கொண்டு அலையும் மனித வெடிகுண்டுகள். இப்போது புரிகிறதா…
மனித வெடிகுண்டின் வரலாறு
ரத்த நாளத்திலுள்ள உட்சுவர், வழவழப்பாக இருக்கும். இதனால், ரத்தத்திலுள்ள தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள் சுவரில் ஒட்டாமல், ரத்தம் ஓடிக் கொண்டே இருக்கும். எதுவும் ஒட்டாது. இந்த வழுவழுப்புத் தன்மை, குழந்தை பருவத்திலிருந்து 22 வயது வரை நன்றாக இருக்கும். அதன் பிறகு இது குறைந்து விடுகிறது.
நம் 25வது வயதிலிருந்து வழுவழுப்புத் தன்மை குறைந்து, கெட்டக் கொழுப்பு படர ஆரம் பிக்கும். அதிக எடை, தினமும் மாமிசம், புகை, மது, உடல் உழைப்பு இல்லாமை, இவைகளால் கொழுப்பு படரத் துவங்கி விடுகிறது.  இந்த கொழுப்பு கட்டியாக வளர்ந்து, முழு அடைப்பாக மாறி விடுகிறது.
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அதிக கொலஸ்டிரால் என்று பல காரணங்கள், “சாப்ட் பிளேக்’ கட்டிகளை வெடிக்கச் செய்து விடும்.
மனித வெடிகுண்டை செயலிழக்கச் செய்வது எப்படி?
இந்த மனித வெடிகுண்டுகள், “வெடிக் காமல்’  செயலிழக்க செய்வது எப்படி? ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்து, உடற்பயிற்சி தினமும் செய்து வர வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும்.
“ஸ்டேட்டின்’ என்ற, கொலஸ்டிரால் குறையும் மருந்தை தினமும் உட்கொள்ள வேண்டும். இது ரத்த நாளத்தின் உட்சுவரில் படிந்துள்ள கெட்டக் கொழுப்பை குறைக்கிறது. மேலும், இந்த கொழுப்பு கட்டியையும் குறைக்கிறது. ஆஸ்பரின் அல்லது சூப்பர் ஆஸ்பரின் இரண்டும், ரத்தம் உறைவதைத் தடுத்து, திடீர் மரணத்தை தடுத்து விடும். இது உயிர் காக்கும் அபூர்வ மருந்து.
மார்பு வலி ஏற்பட்ட உடன், மருத்துவமனை செல்ல வேண்டும். “எமர்ஜென்சி ஆஞ்சியோகிராம்’ செய்து, அடைபட்ட ரத்த குழாயை திறந்து, “ஸ்டென்ட்’ வைத்து, ரத்த ஓட்டத்தை சரி செய்ய வேண்டும். இந்த மாரடைப்பை கண்டறிய, கூகீOகஏ கூ பரிசோதனை செய்து, அடைப்பு இல்லையா என அறிய முடியும்.
மார்பு வலி, மாரடைப்பை, வாயுக்கோளாறு என்று கருதி அசட்டையாக இருந்து விடாமல், இ.சி.ஜி., டிராப் டி, எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
மனித வெடிகுண்டு உருவாகாமல் தடுப்பது எப்படி?
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கெட்டக் கொழுப்பு இவைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, வெறும் வயிற்று சர்க்கரை, உணவுக்குப் பின் சர்க்கரை மட்டும் போதாது. ஏஆஅ1ஞி என்ற, மூன்று மாத சர்க்கரையின் அளவு தான் மிகவும் முக்கியம். புகைப் பிடித்தால், நிகோட்டின் என்ற நச்சுப் பொருள், உடலிலுள்ள ரத்தக் குழாயை பாதிக்கிறது.
மன உளைச்சல், மன அழுத்தமில்லாமல் இருக்க வேண்டும். உடல் எடை , இடுப்பு அளவு அதிகமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும், மனித வெடிகுண்டு என்ற, “வல்னரபுள் பிளேக்’ உருவாகக் காரணமாகும் மூலப் பொருட்கள். இது ஏற்படாமல் வாழ்வதே, மனிதனின் முக்கிய கடமை!

200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்

மீடியாக்கள் எனது பெயரை நூற்றுக்கு 200 சதவீதம் “டேமேஜ்’ ெய்து விட்டனர்,” என்று சாமியார் நித்யானந்தா கூறினார்.

“அஹிம்சை, அன்பு, அமைதி’ என்ற தலைப்பில் சாமியார் நித்யானந்தாவின் ஆன்மிக உரையில் கூறியதாவது:குரு பூர்ணிமா என்பது சிஷ்யர்கள், குருவுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியாகும். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த நேரத்தில், அஹிம்சை வழியிலும், அன்பாலும் வென்ற எனது சிஷ்யர்களுக்கு நான் செய்யும் மரியாதையாக கருதுகிறேன். ராம்நகர் சிறையில் இருந்த போது, அங்கிருந்த மற்ற கைதிகள், என்னிடம் ஆசி பெற்றனர். அதில் ஒரு கைதி, எனக்கு விரைவில் ஜாமீன் கிடைக்க ஆசி கேட்டார். எனக்கே ஜாமீன் கிடைக்காமல் தான், இங்கே இருக்கிறேன், என்றேன் (சிரிப்பொலி).இருந்த போதும், அந்த பக்தரை வாழ்த்தினேன். ஒரு வாரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இங்கு வந்து, உங்களிடம் ஆசி பெற்றதால் தான், ஜாமீன் கிடைத்தது.

உங்களை கடவுளாக கருதுவேன், என்று கூறினார்.மீடியா ரிப்போர்ட்டர்கள் என்னை பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டனர். பல்வேறு வார பத்திரிகைகள், எனது பெயருக்கு முன்பும், பின்பும் எனக்கு பல்வேறு பட்டப்பெயர்களை வைத்தனர். சில பத்திரிகைகள் நித்யானந்தா என்ற பெயரை “நித்தி’ என்று அழைத்தனர். அதற்கெல்லாம் கவலைப்பட வில்லை. நான் ஒரு ரிப்போர்ட்டரிடம், இவ்வாறு என்னை பற்றி அவதூறான செய்திகளை வெளியிடுகிறீர்களே, ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர், நாங்கள் தினமும் நான்கைந்து பரபரப்பான செய்திகளை கொடுத்தால் தான், மாத சம்பளமே கிடைக்கும் என்றனர். அவர்களின் நிலைமை அப்படி.மீடியாக்கள் எனது பெயரை நூற்றுக்கு 200 சதவீதம் “டேமேஜ்’ செய்துவிட்டனர். போலீஸார், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் பலர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். சிறையில் மற்ற கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்தேன்.இவ்வாறு ஒன்றரை மணி நேரம் அவர் சொற்பொழிவாற்றினார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், நிருபர்களிடம் சாமியார் நித்யானந்தா பேசினார்.
அப்போது நமது நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
கேள்வி: பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?
பதில்: விரைவில் சந்திக்கிறேன். என்னை பற்றி அவதூறாக பேசிய செய்திகளை சந்திக்க நான் தயாராக இல்லை. என்னை மனிதனாக நினைத்த, உங்களை போன்ற  பத்திரிகையாளர்களை சந்திக்க தயாராக உள்ளேன். எனது செயலாளரிடம், நீங்கள் அனுமதி பெற்று வாருங்கள். நான் பேட்டி கொடுக்கிறேன்.

அப்போது ஒரு வார பத்திரிகையாளர், எங்கள் பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்க வேண்டும் என்றார்.அப்போது சாமியார், அந்த குறிப்பிட்ட வார பத்திரிகை பெயரை சொல்லி, உங்கள் வார பத்திரிகையில், என்னை மிகவும் கீழ்தரமாக, மட்டமாக எழுதினீர்கள். சாமியார் என்றால் என்ன? அவனுக்கு எந்த ஆசையும் இருக்க கூடாதா? என்று கேட்டார். நான் செய்யாத தவறுகளை ஏன் எழுதினீர்கள். உங்கள் எடிட்டரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்று கோபமாக கூறினார். என்னை மதித்தவர்களை நான் மதிப்பேன் என்றார்.

தங்கப் பல்லக்கில் நித்யானந்தா பவனி :நித்யானந்தா தியான பீடத்தில் குரு பவுர்ணமி விழாவை ஒட்டி, தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கில் சாமியார் நித்யானந்தா இரண்டரை மணி நேரம் பவனி வந்தார். குழந்தைகள், பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி வீசினார்.குரு பவுர்ணமி விழாவை முன்னிட்டு, பிடதி நித்யானந்தா தியான பீடத்தில் நேற்று காலை 5 மணிக்கு சாமியார் நித்யானந்தா, வழக்கமாக நடத்தும் பஞ்ச தபசு பூஜையை நடத்தினார்.பின், தெப்பக்குளத்திலுள்ள 101 அடி உயர வைத்திய சரோவர் லிங்கத்திற்கு 100 குடம் பால், 100 குடம் சந்தனம், 100 குடம் விபூதி, 100 குடம் மஞ்சள், 100 குடம் அபிஷேக பொடி என அபிஷேகம் செய்தார். அதே நேரத்தில், தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள 1,008 லிங்கத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. அங்கிருந்த பக்தர்கள், “ஓம் நமசிவாயா, ஓம் நமசிவாயா’ என்று கூறினர்.

அதையடுத்து, குளத்தில் இறங்கி குளித்தார். பின், பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடினர். பின்,  600 ஆண்டு பாரம்பரியம் மிக்க ஆலமரம் அருகே சென்றார். அங்கிருந்த தங்க முலாம் பூசிய பல்லக்கில் ஏறி, ஆலமரத்தை சுற்றி பவனி வந்தார். பின், ஆசிரம வளாகம் முழுவதும் பவனி வந்தார்.கூடியிருந்த பக்தர்களுக்கு, குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி வீசினார். சில பெண்கள் பக்தி பரவசத்தில், தன்னையும் மறந்து, நித்யானந்தா பாட்டுக்கு மயங்கியபடி பாடி, ஆடிக் கொண்டே வந்தனர்.இரண்டரை மணி நேர பல்லக்கு ஊர்வலத்திற்கு பின், சாமியாருக்கு, சிஷ்யர்கள் பாதபூஜை செய்தனர். சாமியாருக்கு பஞ்ச ஆரத்தி எடுத்தனர்.

நித்யானந்தா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து  விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் பேசினார். பின், சாமியார் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களில் பெரும்பாலானோர், பல ஆண்டுகளாக வந்து செல்வதாக தெரிவித்தனர். 25 சதவீதம் பேர் புதுமுகங்களாக காணப்பட்டனர். அவர்களிடம் கேட்ட போது, “”இந்த சாமியார் பற்றியும், ஆசிரமம் பற்றியும் பல செய்திகளை பத்திரிகைகளில் படித்தோம்.  எனவே இங்கு என்ன நடக்கிறது என பார்க்கலாம் என வந்தோம்,” என்றனர்.

நிகழ்ச்சியில்  கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்பினர் கலந்து கொண்டனர். நடிகை மாளவிகா, தனது கணவர் அவினாஷ், குழந்தையுடன் பங்கு பெற்று சாமியாரிடம் ஆசி பெற்றார். அவருக்கு, சாமியார் ஆப்பிள் வழங்கினார்.

நன்றி – தினமலர்