Monthly Archives: ஓகஸ்ட், 2010

“காதல் மாறிபோச்சு…” – 3 தலைமுறைகளின் வித்தியாசமான பார்வை

ஆதாம்- ஏவாள் காலத்திலே தொடங்கிவிட்டது, காதல். இன்றைய இளைய தலைமுறையினரின் காதலை பெரியவர்கள் “இது காதலே இல்லையென்று” முகம் சுளித்து மறுக்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் “பெரியவர்கள் கால மாற்றத்தை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்” என்கிறது, இளம் பட்டாளம்.

உண்மையில் காதல் மாறி இருக்கிறதா? 3 தலைமுறையினரின் கருத்தை அறிய ஒரு ஏற்பாடு செய்தோம்.

60 வயதைக் கடந்த பெண், 45 வயதை நெருங்கிய தாய், 20 வயதை தொடும் இளம் பெண் 3 பேரும் ஆண்- பெண் நட்பு, உறவு பற்றி விவாதிக்கிறார்கள்…

60 வயது :- “எங்கள் பெற்றோர் என்னை ஆண்களும், பெண்களும் படிக்கும் கோ-எஜூகேசன் பள்ளிக்குத்தான் அனுப்பினார்கள். ஆனாலும் ஆண்களுடன் பேசக்கூடாது என்று தடுத்தார்கள். நாங்களும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் சென்று வந்தோம். ஆண்களை பார்த்து புன்னகை செய்வது, ஓரபார்வையை வீசுவது கூட கட்டுபடுத்தபட்டிருந்தது.”

45 வயது :- “நான் கல்லூரி செல்லும் போதுதான் கட்டுபாடுகள் விதிக்கபட் டிருந்தது. எனக்கு ஆண் நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் எந்தவித பார்ட்டியிலும் அவர்களுடன் கலந்து கொண்டதில்லை. விழாக்களில் கலந்து கொண்டால்கூட அவர்கள் தனி அறையிலும், நாங்கள் தனி அறை யிலும்தான் தங்கினோம். தோழிகளின் பிறந்த நாள் விழாவுக்குக்கூட என் அம்மா, உறவு பையனை என்னுடன் அனுப்பி விடுவார்”

20 வயது :- “இளைஞர்களுடன் வெளியில் சுற்றுவதற்கு அனுமதியில்லை தான். இயற்கை ஆண்களுடன் நட்பை உருவாக்கவும், அவர்களுடன் சுற்றுவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குகிறது. `பாய் பிரண்டு’கள் வைத்திருக்க எனக்குத் தடையில்லை.”

60 வயது :- “எனக்கு திருமணம் நிச்சயிக்கபட்டதும், அவரோடு வெளியில் சென்றுவர ஆசைபட்டேன். ஆனால் எல்லாவற்றையும் திருமணத்திற்கு அப்புறம் வைத்துக்கொள்ளும்படி கூறிவிட்டார்கள். இதனால் நானும் அவரும் கவலை அடைந்தோம். ஒரு வழியாக அம்மாவை சமாதானம் செய்து அவரை பார்க்க அனுமதி வாங்கினேன். 9 மாதம் காதலித்தோம். ஒன்றாக சுற்றினோம், சினிமாவுக்கும் போனோம். ஆனால் ஒருபோதும் அவருடன் இரவில் தங்கியதில்லை.”

45 வயது :- “நான் என் திருமண நிச்சயத்திற்கு பிறகுதான் அவரோடு முதன் முதலாக கிளப்பிற்கு சென்றேன். அதற்கு முன்பு சூரியன் மறைந்த பிறகு வெளியே செல்ல அனுமதிக்கபட்டதில்லை. கல்லூரியில் என்னை பலர் காதலிப்பதாகச் சொன்னார்கள். நான் அதற்கெல்லாம் இடம் தரவில்லை.”

20 வயது :- “இன்றைய காலத்தில் பலதரபட்ட காதல், கல்யாண முறைகள் நிலவுகிறது. ஒவ்வொருவரும் விதவிதமான எண்ணங்களோடு சுற்றித் திரிகிறார்கள். நான் எனது ஆண் நபர்களுடன் வெளியில் செல்வதை என் அம்மா தடுப்பது இல்லை. தனியாகவோ, குழுவாகவோ எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் எங்கே போகிறோம், எப்போது திரும்பி வருவேன் என்பதை அம்மாவிடம் சொல்லி விடுவேன். இது பலவித சிக்கல்களில் இருந்து எனக்கு பாதுகாப்பளிக்கிறது.”

60 வயது :- “நான் எனது சகோதரனின் நண்பரைத்தான் திருமணம் செய்து கொண்டேன். நான் திருமணத்திற்கு முன்பு அவரை ஒரே ஒருமுறைதான் பார்த்திருந்தேன். அவருடன் பேசியது கிடையாது. அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரை விரும்பத் தொடங்கினேன். எனது தந்தை அவரை திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தார்.”

45 வயது :- “நான் ஆண்களால் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் யாராலும் பாதிக்கபடவில்லை. எனது கணவரின் குடும்பத்தை சிறுவயதிலிருந்தே தெரியும். அவர்கள் என் பெற்றோரை போலவே ஒழுக்க நடவடிக்கையில் கண்டிப்பானவர்கள். எனது கணவர் என்னைவிட 7 வயது மூத்தவர். என் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொண்டேன்.”

20 வயது :- “நான் காதலித்து திருமணம் செய்வதையே விரும்புகிறேன். நிறைய பழகாமல் ஒருவரை பற்றி திருமணத்திற்கு முன்பு புரிந்து கொள்ள முடியாது என்பது என் எண்ணம்.”

60 வயது:- “திருமணத்திற்கு முன்பே ஒரு முறை திடீரென்று அவர் என்னைத் தொட்டுவிட்டார். நான் உணர்ச்சியால் சிலிர்த்து போனேன். திருமணம் நிச்சயமானதும் முத்தம் கொடுத்துக் கொண்டோம். திருமணத்திற்கு பிறகுதான் உறவு வைத்துக் கொண்டோம். அந்த முதல் உறவு மிகவும் இனிமையான அனுபவம். அவரை நான் மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன்.”

45 வயது:- “நான் அவர்களை போல் அல்ல. எனக்கு நிச்சயம் முடிந்ததும் முத்தமிடுவதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. நெருக்கமாகத்தான் இருந்தோம். ஆனால் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு 18 வயது தான் ஆகி இருந்தது. அவரும், நானும் பயத்துடன்தான் இருந்தோம். தேனிலவில்தான் ஒன்றாய் கலந்தோம்.”

20 வயது:- “டி.வி.யை ஆன் செய்தால் எல்லா இடங்களிலும் செக்ஸ் ஊடுருவி இருப்பதை பார்க்க முடிகிறது. அதை எனது அம்மா, தாத்தா பாட்டி பார்க்கும் கண்ணோட்டத்தில் நான் பார்பதில்லை. திருமணத்திற்கு முந்தைய உறவு என்பது அவமானகரமானதல்ல. இதை பற்றி ஒருசிலர் வெளிபடையாக பேசிக்கொள்கிறார்கள். சிலர் நெருங்கியவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் அதுபற்றி வாய்திறப்பதே இல்லை.”

நன்றி-தினத்தந்தி

குழந்தைக்கு வாந்தி

சாப்பிட்ட உணவுப் பொருள்கள், வயிற்றுக்குள் இருந்து வாய் வழியாக வெளிவருவதுதான் வாந்தி. பல காரணங்களால் வாந்தி வரும். அவற்றில் சில உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை.
காரணங்கள்
அண்மையில் பிறந்த குழந்தைகள்
1. குடல் பாகம் இல்லாதிருத்தல்
2. குடல் இடம் மாற்றம்
3. வால்வுலஸ்
4. ரத்தத்தில் நோய்க் கிருமிகள்
5. மூளைக்காய்ச்சல்
6. மூச்சுத் திணறல்
7. மூளையின் நீர் அதிகமாதல்
8-. தவறான முறையில் பால் புகட்டுதல்

ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்
1. தவறான முறையில் பால் புகட்டுதல்
2. அதிகப் பால் கொடுத்தல்
3. பிறப்பிலேயே குடல் வீங்கி அடைத்துக் கொள்ளுதல்
4. பேதி
5. மூளையில் கிருமிகள் தாக்கம்
6. மூளையில் ரத்தக்கட்டு
7. மூளையில் நீர் அதிகமாதல்
8. மாட்டுப்பால் அலர்ஜி
சிறுவர்கள்
1. மனநிலை பாதிப்பு
2. சிறுநீரில் கிருமி
3. மஞ்சள் காமாலை
4. நீரிழிவு நோய்
5. நிமோனியா காய்ச்சல்
6. குடல் அடைப்பு
7. மூளையில் ஏற்படும் ரத்தக் கட்டி
8. மூளைப் புற்றுநோய்
சிகிச்சை
நிறைய குழந்தைகள் சாதாரணமாகவே சிறு சிறு காரணங்களுக்காக வாந்தி எடுப்பார்கள். அதனால் பயப்பட வேண்டாம். சர்க்கரை & உப்புக் கரைசலை ORS கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் போதும். சில குழந்தைகள் வாந்தி எடுத்தாலும், அவற்றின் உடல் எடை மற்றும் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்குச் சிகிச்சை தேவையில்லை.
அடிக்கடி வாந்தியோ, தொடர் வாந்தியோ இருந்தால், அவற்றுடன் வேறு நோய்கள் ஏதாவது இருந்தாலும், குழந்தையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து சாயான சிகிச்சை அளிக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் தாமாகவே சிகிச்சை அளிக்கவோ, வீட்டில் இரக்கும் மருந்துகளைக் கொடுக்கவே கூடாது. அதனால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கான மலிவு விலை `லேப்டாப்’!(விலை ரூ. 1500)

மாணவர்களுக்கான மலிவு விலை `லேப்டாப்’பை சமீபத்தில் அறிமுகம் செய்தார் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் கபில் சிபல். சாதாரண செல்போனை விடவும் மலிவானது என்பதுதான் இதன் சிறப்பு.

இந்த தொடுதிரை `லேப் டாப்’பின் விலை ரூ. 1500. குறைவான மெமரி, வேகம் கொண்டிருக்கிற இந்த மடிக்கணினி, மற்றபடி வழக்கமான `லேப்டாப்’பின் அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது.

இது, `லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை’ கொண்டிருக்கிறது. `மல்டி மீடியா கன்டென்ட் விவருடன்’, `ஓபன் ஆபீஸ்’, `சைலேப்’ போன்ற வசதிகளும் உள்ளன. இதன் `மீடியா பிளேயரால்’ மீடியா பைல்களை `பிளே’ செய்ய முடியும்.

“நாங்கள் புதிய திருப்பத்தை உருவாக்கியிருக்கிறோம். தற்போது சந்தையைக் கைப்பற்றவும் தயாராயிருக்கிறோம். இப்போது இந்த `லேப்டாப்’பின் விலை 1500 ரூபாய் என்றாலும், இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்” என்று மகிழ்ச்சிச் செய்தி கூறுகிறார் கபில் சிபல்.

முதல் கட்டமாக, கல்லூரி மாணவர்களுக்கு இம்மாதிரியான 10 லட்சம் `லேப்டாப்’களைத் தயாரிக்க உத்தரவிட அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதை எவ்வாறு விநியோகிப்பது என்று அரசு முடிவு செய்யாததால் மாணவர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

கடந்த பிப்ரவரியில் திருப்பதியில் வெளியிடப்பட்ட 500 ரூபாய் `லேப் டாப்’பின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும் இது. முந்தைய `லேப்டாப்’பின் விலை, தயாரிப்பு நிலையிலேயே கிடுகிடுவென்று அதிகரித்துவிட்டதால் அது சந்தைக்கு வராமலே தோல்வியடைந்தது.

இம்மாதிரியான `லேப்டாப்’பை உருவாக்குவதில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாட்டின் பல்வேறு ஐ.ஐ.டி.க்கள் முயற்சியில் ஈடுபட்டு வந்தன. அவை குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றன.

கடுமையான முயற்சிக்குப் பின் இந்த `லேப்டாப்’பின் விலை இந்த அளவுக்கு மலிவாக்கப்பட்டிருக்கிறது. அரசின் 50 சதவீத மானியமும் உதவி செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கடைகளுக்கு வந்துவிடும் இந்த `லேப்டாப்’.

சிரிப்பு-சிறப்பு

மழலையின் புன்னகையில் மயங்காதவர்களே இல்லை. குமரியின் புன்னகையை ரசிக்காதவர்கள் இல்லை. மனிதர்களை சிரிக்கும் விலங்கு என்பார்கள். ஆனால் அவனோ சிரிக்காத விலங்காக மாறிக்கொண்டிருக்கிறான்.

இயந்திரகதியில் இயங்கும் இன்றைய மனிதர்களில் பலர் சிரிப்பை தொலைத்து விட்டார்கள். அதனால் மனிதர்கள் என்ற சிறப்பை இழந்து நோயாளியாகி விட்டார்கள். சிரிக்காமல் மனஅழுத்தம் ஏற்பட்டவர்களுக்கு சிரிப்பு சிகிச்சை அளித்து குணப்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது.

***

புன்னகையால் கவலையை மறக்கலாம். `சிரிக்கத் தெரிந்தவனுக்கு முதலில் போணியாகும்’ என்பது வியாபாரிகளின் வழக்குமொழி. உங்களிடம் எத்தனையோ நல்ல பண்புகள் இருந்தாலும் பார்த்து, பழகியவர்களுக்கு மட்டுமே அது தெரியும். ஆனால் புன்னகையை முகத்தில் தவழ விட்டு பாருங்கள், ஒவ்வொருவரையும் உங்களைத் திரும்பி பார்க்க வைக்கும். கோபமும், சிடுசிடுப்பும் மற்றவர்களை ஒதுங்கிச் செல்ல வைக்கும். சிரிப்பு மட்டுமே மற்றவர்களை ஈர்த்து புது உறவுகளை பெற்றுத் தரும்.

***

எப்போதாவது நீங்கள் கவலையாக இருந்தால் உடனே புன்னகையை முகத்திற்கு கொண்டு வாருங்கள். இது கொஞ்சம் கடினமான காரியம் தான். அந்தநேரத்தில் ஏதாவது நகைச்சுவை துணுக்குகளை படிங்கள். நகைச்சுவை அடங்கிய சி.டி. இருந்தால் போட்டு பாருங்கள். அந்த இறுக்கமான சூழல் நொடி பொழுதில் மாறிவிடும். உடனே மனதில் மகிழ்ச்சி பொங்கும். அது முகத்தில் பரவி முகமும் மலரும். சூழலும் மாறும். கவலையே மனிதனை முடக்கும் எதிரியாகும். சிரிப்பே கவலையை வீழ்த்தும் மருந்தாகும்.

***

சிரிப்புக்கு சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சிபடுத்தும் தன்மை உண்டு. பலர் இருக்கும் இடத்தில் ஒருவர் லேசாக சிரிக்கத் தொடங்கினால் அது மற்றவர்கள் மனநிலையையும் மாற்றி அந்த இடத்தையே கலகலப்பாக்கி விடும். சுபவிழா நடைபெறும் இடங்களில் நகைச்சுவைடன் பேசுபவர்களைச் சுற்றி கூட்டம் கூடி அரட்டை அடிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்தானே. சிரிப்பிற்கு கிடைக்கும் முன்னுரிமை இதுதான். சிரிக்கும் மனிதன் மகிழ்ச்சியை சுமந்து கொண்டு திரிகிறான். அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சி பகிர்ந்து அளிக்கபடுகிறது.

***

எந்திரகதியான வாழ்க்கை பலருக்கும் மனஅழுத்தத்தை உண்டாக்கிவிடுகிறது. `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அதனால் மனஇறுக்கமும் முகத்தில் பிரதிபலிக்கும். ஆனால் சிரிப்பது கவலையை குறைக்கும். அடக்கி வைக்கபட்ட கஷ்டங்களை வெளித்தள்ளும் சூழலை உருவாக்கும். இதனால் மன அழுத்தம் காணாமல் போகும். கவலைகள் வந்தால் சிரிக்க நேரம் ஒதுக்குங்கள். பிறகு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்.

***

நமது உடலை நோய்தாக்காத வண்ணம் பாதுகாப்பது நோய் எதிர்ப்பு சக்தி. உடல் ஓய்வாகவும், தளர்வாகவும் இருக்கும்போது நோய்த் தடுப்பு மண்டலம் திறம்பட செயல்படும்.

சிரிப்பதால் உடல் புத்துணர்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் சுறுசுறுப்பாக செயல்படும். எப்போதும் புன்னகைடன் இருப்பவர்களை நோய் அண்டவே அஞ்சும்.

***

புன்னகைக்கு ரத்தஅழுத்தத்தை குறைக்கும் சிறப்பு உண்டு. உங்களிடம் ரத்த அழுத்தமானி இருந்தால் இதை நீங்களே பரிசோதித்து பார்க்கலாம்.

சாதாரண நேரத்திற்கும், சிரிக்கும் நேரத்திற்கும் இடையில் உள்ள ரத்த அழுத்த வேறுபாட்டை பார்த்தால் சிரிப்பு எந்த அளவில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது என்பதை அறிந்து வியந்து போவீர்கள். சிரிப்பானது ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளை கட்டுபடுத்துகிறது.

***

சிரிப்பது மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. `என்டார்பின்’ என்னும் ரசாயனம் மூளையின் துருதுரு செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது. சிரிக்கும்போது இந்த ரசாயனம் அதிகமாக உற்பத்தியாவதால் மூளையும் துரிதமாக செயல்படுகிறது.

காயங்களால் ஏற்படும் வேதனையை குறைப்பது, பல்வேறு காரணங்களால் ஏற்படும் வலியை குறைப்பதிலும் சிரிப்பு துணை புரிகிறது. நரம்புகளின் தகவல் கடத்தும் திறனையும் சிரிப்பு தூண்டுகிறது. குறிப்பாக தூக்கம் மற்றும் நினைவுத்திறனைத் தூண்டுவதில் பங்கு வகிக்கிறது.

***

புன்னகைடன் இருப்பவர்கள் நம்பிக்கை மிக்கவராக திகழ்கிறார்கள். இது அவர்கள் முன்னேற துணைபுரிகிறது. நீங்கள் பலர் கூடும் இடத்தில் புன்னகைடன் தோன்றினால் உங்களுடன் பலரும் மனமுவந்து பழக விரும்புவார்கள். நல்லவிதமாகவும் கவனிப்பார்கள்.

கூட்டங்களில் புன்னகை தவழ பேசிபாருங்கள். உங்கள் பேச்சுக்கு தனி ரசிகர்கூட்டம் உருவாகும். எப்போதும் முன்னுரிமையும், வரவேற்பும் கிடைக்கும்.

***

நேர்மறை எண்ணங்கள் வாழ்வில் பாதி வெற்றிக்குச் சமம். சிரிப்பானது எப்போதும் நேர்மறை எண்ணங்களையே தோற்றுவிக்கும். நீங்கள் வேண்டுமானால் சோதித்து பாருங்கள். புன்னகையுடன் இருக்கும்போது எதிர்மறை சிந்தனைகள் தோன்றாது. சிரிப்பை இழந்தால் தானாகவே எதிர்மறை எண்ணம் வந்துவிடும்.

சிரிக்கும்போது மகிழ்ச்சியை உணர்கிறோம். சிரித்தால்தான் `வாழ்வே வசந்தமானது’ என்ற எண்ணம் தோன்றும். எனவே சிரித்து வாழுங்கள். பிறரையும் சிரிக்க வைத்து வாழுங்கள்!

கற்பக விருட்சத்தின் மகிமை -ஆன்மிகம்

`கேட்டதை எல்லாம் கொடுக்குமாம்…கற்பக விருட்சம்’ என்று சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். வேண்டியதை எல்லாம் தந்து அருள்பவள் சக்தி தேவி. அம்பிகையைப் போலவே கேட்டதைத் தந்து அருளும் மரம் தான் இந்த கற்பக விருட்சம். தெய்வ அற்புதம் நிறைந்தது.

பாற்கடலில் உள்ள அமுதத்தை எடுப்பதற்காக தேவர்கள் அனைவரும் சேர்ந்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மகாமேருவை மத்தாகவும் பயன்படுத்தி, ஆழமாகக் கடைந்து கொண்டிருந்த போது, அந்த அற்புதம் நடந்தது. அப்போது பாற்கடலில் இருந்து 16 வகையான பொருட்கள் விதவிதமாக வெளிவந்து கொண்டிருந்தன. அப்படி தோன்றிய பொருட்களில் வலம்புரிச்சங்கையும், சாளக்ராமத்தையும் மகாவிஷ்ணு தன் கையில் எடுத்துக் கொண்டார்.

திரவியங்கள், பொன், மாணிக்கம், சிந்தாமணிகள் என்று பல பொருட்களும் வெளிவந்தன. அவை, ஒவ்வொன்றும், ஒவ்வொரு திசைக்குச் சென்று விட்டன. தொடர்ந்து, பச்சை நிறத்தில் மரக்கிளை போல பாசிக்கற்றைகள் பின்னியது போல ஒரு உருவம் அழகாக நீரில் மிதந்து வந்தது. அந்த மரம் போன்ற உருவத்தின் நடுவில் ரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு தேவி பொற்காசுகளை இரைப்பது போன்று மகாலட்சுமியை போன்ற அழகுடன் நின்று கொண்டிருந்தாள். அந்த மரம் குபேரதிசையான வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியது. அதைக் கண்டு முனிவர்கள் வியந்தனர். அவர்கள் அதைப் பார்த்த உடன், “ஆகா…கற்பக விருட்சம்..! ஆகா…கற்பக விருட்சம்..!” என்று இரண்டு கைகளையும், கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிட்டனர். தேவர்களோ அமிர்தத்தை மட்டுமே எதிர்பார்த்தபடி இருந்ததால் இதைக் கவனிக்காமல் இருந்தனர்.

பச்சை நிறம் பூசிய இரண்டு தேன்கூடுகள் இணைந்தது போன்று தெய்வ சக்திகள் நிறைந்து இருந்தது இந்த மரம். தெய்வ சக்திகள் நிறைந்த இந்த மரம் கேட்டதைத் தரும் சக்தியுடையது. இதன் உள்ளே இருக்கும் தேவிக்கு ஸ்வர்ணவர்ஷிணி என்று பெயர். இவள் பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமிக்குச் சமமானவள். இவள் அள்ளி அள்ளிக் கொடுப்பதில் நிகரற்றவள் என்று கற்பக விருட்ச தியான சுலோகம் கூறுகிறது. கற்பகத் தருவை அதில் உறைந்திருக்கும் தேவியை முறைப்படி பூஜித்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

கண்ணா வா ! – செப்., 1 – கிருஷ்ண ஜெயந்தி!

உலகில் தர்மம் குலையும் வேளையில், அதைப் பாதுகாக்க, பகவான் மானிட அவதாரம் எடுத்து வருவார். அந்த வகையில், திருமால் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம். மதுராபுரியை ஆட்சி செய்தவர் உக்கிரசேனன். இவரது மகன் கம்சன். தம்பி தேவன். அமைச்சர் வசுதேவர். இவரது மூத்த மனைவி ரோகிணி, கோகுலத்தில் வசித்தாள். தேவனுக்கு தேவகி என்ற மகள் இருந்தாள். இவளை வசுதேவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர். இவரது நண்பர் நந்தகோபன் கோகுலத்தில் வசித்தார். இவரது மனைவி யசோதை.
தர்மத்துக்குப் புறம்பாக பல அநியாயங்கள் செய்த கம்சனை அழிக்கும்படி, பிரம்மாவிடம் முறையிட்டாள் பூமாதேவி. திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநிறுத்துவார் என,  அவருக்கு வாக்குறுதி அளித்தார் பிரம்மா. இதனிடையே, தேவகியின் எட்டாவது பிள்ளையால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அறிந்த கம்சன், அவளைக் கொல்ல முயன்றான். வசுதேவர் இதைத்தடுத்து, தனக்கு பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதன்படி தேவகி, வசுதேவரைச் சிறையிலடைத்த கம்சன், அவர்களுக்குப் பிறந்த ஆறு பிள்ளைகளைக் கொன்றான். ஏழாவதாக கருவுற்றதும், திருமால், மாயை என்ற பெண்ணைப் படைத்து, “தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும்!’ என்றார்.
அதன்படியே, மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக பேச்சு எழுந்தது; கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை ரோகிணியின் வயிற்றில் பிறந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற, திருமால் அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று அவளுக்கு கிருஷ்ணர் பிறந்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே எடுத்து வந்து கம்சனிடம் ஒப்படைக்கும்படி பகவானே சொல்லி விட்டார்.
அதன்படி வசுதேவர் கோகுலத்தில் வசித்த யசோதையின் அருகில் தன் பிள்ளை கிருஷ்ணனை கிடத்திவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது. அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து, எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, “துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது. உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்!’ என்று சொல்லி மறைந்தது. பின்னர், கிருஷ்ணன் வளர்ந்து கம்சனைக் கொன்றார்.
கிருஷ்ண ஜெயந்தி என்றால், நெய்யில் செய்த பண்டங்கள், வெண்ணெய், சீடை என்றெல்லாம் செய்ய வேண்டுமே… அவரது பாதங்களை மாவரிசி கொண்டு தரையில் பதிக்க வேண்டுமே.. என்றெல்லாம் கவலை கொள்ளத் தேவையில்லை. கிருஷ்ணர் கருணாமூர்த்தி. ஒரு ஊரில் கிருஷ்ணஜெயந்தி ஊர்வலம் நடந்தது. சுவாமி பவனி வந்தார். மக்கள் பழம், தேங்காய், பண்டங்கள் என சுவாமிக்கு சமர்ப்பித்தனர். ஒரு பக்தரிடம் எதுவுமே இல்லை. ஆனாலும், திடமான மனது இருந்தது. அவர் வீட்டு வாசலுக்கு சுவாமி வந்தார். “பக்தனே… நீ எதுவுமே எனக்கு தரவில்லையா?’ என்றார். “கிருஷ்ணா… அவர்கள் கொடுத்த பூ, பழம், தேங்காய் எல்லாம் உன்னிடமே இருக்கிறது. உன்னிடத்தில் என்ன இல்லையோ அதைக் கொடுத்தால் தானே எனக்கு திருப்தி…’ என்றாராம் பக்தர்.
“என்னிடத்தில் என்ன இல்லை என நீ நினைக்கிறாய்?’ என கிருஷ்ணர், பதிலுக்கு கேட்க, “கிருஷ்ணா… கோகுலத்து கோபிகள் உன் மனதைத் திருடிக் கொண்டனர். எனவே, இப்போது உன்னிடம் மனசு இல்லை; எனவே, என் மனதை உனக்குத் தருகிறேன்…’ என்றார். பகவான் உருகிப் போய் விட்டாராம். நெருப்பில் உருகும் நெய்ப்பண்டத்தை விட, உள்ளம் உருகிய பக்தியை, கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுப்போமே!

கம்ப்யூட்டர் மெமரி’க்கு உதவும் மரப் புரதம்!

கம்ப்யூட்டரின் `நினைவகம்’ எனப்படும் `மெமரி’யை அதிகரிக்க ஒரு மரத்தின் புரதம் உதவப் போகிறது என்றால் ஆச்சரியமாயில்லை?

ஆம், `போப்லார்’ மரத்தில் இருந்து கிடைக்கும் புரத மூலக்கூறுகளையும், சிலிக்கா நானோ பார்ட்டிக்கிள்களால் ஆன மெமரி யூனிட்களையும் ஒன்று சேர்க்கும்போது, கம்ப்யூட்டர்களின் மெமரி திறன் பெருமளவு அதிகரிக்கிறது என்று ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள், கம்ப்யூட்டருக்கான `மெமரி’ பகுதியைக் குறைத்தும், அதன் திறனை அதிகரித்தும் காட்டியுள்ளனர்.

இது, இப்போதைய முறைக்கு மாற்றாக அமையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது மெமரி திறனை அதிகரிக்க முயலும்போது உற்பத்திச் செலவும் அதிகமாகிறது.

சிலிக்கான் நானோ பார்ட்டிக்கிளுடன் `போப்லார்’ மரத்தின் புரதத்தைச் சேர்ப்பதற்கு ஜெருசலேம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மரபணுப் பொறியியலையும் பயன்படுத்தி
இருக்கின்றனர்.

மெமரி திறனை அதிகரிப்பதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது என்று ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் டேன்னி போரத்தும், அவரது மாணவர் இஸார் மெடல்ஸியும் விளக்கிக் காட்டியுள்ளனர்.

இந்த வெற்றியானது, கம்ப்யூட்டர்களின் நடப்பு மெமரி அளவைக் கூட்டும் அதேநேரம், அது பிடித்துக்கொள்ளும் இடத்தை வெகுவாகக் குறைக்கும். எனவே இது வர்த்தக
ரீதியாக வெற்றி பெறும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சதையே இல்லாத பெண் !

வயது 50, இரண்டு குழந்தைகளுக்கு தாய். இப்படிப்பட்ட பெண், தோற்றத்தில் எப்படி இருப்பார்? நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கு அந்த பெண் இல்லை. எட்டு வயது பெண் குழந்தை அணிய வேண்டிய ஆடையைத்தான் அந்த பெண் அணிகிறார். அவர் எடையோ வெறும் 37 கிலோ தான். உடலில் சதையே இல்லாமல் எலும்பும், தோலுமாக உள்ள இந்த அதிசயப் பெண் பிரிட்டனில் வசிக்கிறார். இவர் பெயர் கரோல்.
கரோலினின் கணவர் ஸ்டீவன்; வயது 50. இவர் ஒரு பெயின்டர். கரோலுக்கு உடலில் எந்த நோயும் இல்லை. எல்லா பெண்களையும் போல் நன்றாக சாப்பிடுகிறார். மிகவும் சத்துள்ள உணவு வகைகளை வெளுத்துக் கட்டும் இவருக்கு உடலின் எடை மட்டும் அதிகரிப்பதே இல்லை. உடலில் எங்கும் கொழுப்பு தேங்குவதே கிடையாது. சதை போடாததால் எலும்பும், தோலுமாக காட்சியளிக்கிறார்.
கரோல் அணியும் ஷூ சைஸ் 2. அதாவது பள்ளி குழந்தைகள் அணியும் ஷூ தான் இவருக்கு பொருத்தமாக இருக்கிறது. இடுப்பு சுற்றளவு 22 அங்குலம். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை இவர் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். எனினும், இவர் உடலில் கொழுப்பு மட்டும் சேர்வதே கிடையாது.
பிறந்த போது மிகவும் ஆரோக்கியமாக, கொழு கொழு குழந்தையாகத் தான்  இருந்தார். 4வது வயதிலேயே இவர் உடலில் மாற்றம் தெரிய ஆரம்பித்து விட்டது. 15வது வயதில்  டாக்டர்களை பார்த்தார். அவர் உடலை சோதித்த டாக்டர்கள், “எந்த நோயும் இல்லை. ஆனால், திருமணம் ஆகி குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. உடல் நொறுங்கிப்போகும் நிலையில் உள்ளது…’ என்றனர். எனினும் ஸ்டீவனை திருமணம் செய்து, மார்க், நீல் என இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தார்.
சதை வளர்ச்சி குறைபாடு பிரச்னையால் கரோல் பாதிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் அபூர்வமான நோய். உலகில் இரண்டே பேர் தான் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பெண் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் பெயர் லிஸ்சி வேலாஸ்கியூஸ். இவர் எடை வெறும் 24 கிலோ தான்.
இது பற்றி கரோல் கூறியதாவது:
அமெரிக்காவிலும் என்னைப் போல் ஒரு பெண் இருக்கிறார் என, படித்த பின்னர் தான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது. துணிச்சலான பெண்ணிற்கு இருக்கும் இதயம் எனக்கு உள்ளது. எனக்கு மிகவும் நல்ல கணவர் கிடைத்துள்ளார். அதுவே எனக்கு சக்தியை கொடுக்கிறது. மக்கள் என்னை வினோதமாக பார்க்கின்றனர். அதனால், அவர்கள் கண்களில் படாமல் இருந்தேன். இனி, அப்படி இருக்க மாட்டேன். என் தோற்றத்திற்கு நான் காரணம் அல்ல. எனவே, இனியும் மறைந்து வாழ மாட்டேன். —  இவ்வாறு துணிச்சலாக கூறினார்.
எந்த சூழ்நிலையையும் எதிர்த்து வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் கரோல்.

மூச்சுக்காற்றே மூலதனம்

காலையில் முழித்த முகம் சரியில்லை! எடுத்த காரியம் எதுவும் நடக்கவில்லை! என்று அலுத்துக் கொள்வோர்களும், இன்றைக்குக் கழுதை முகத்தில் முழித்திருப்பான் போலிருக்கிறது! அதிர்ஷ்டக்காரன், அவனுக்கு அடித்தது, யோகம் என்று வியந்துபோவோரும் இருக்கின்றார்கள்.
ஆனால், காலையில் தூங்கி எழும்போதே அன்றைய தினம் எப்படி இருக்கும்! எப்படி இருந்தால் தனக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து செயல்படுபவர்கள் குறைவு.
நாம் நமது மூக்கின் வழியாக விடுகின்ற மூச்சுக்காற்று நம்மை ஆக்குகின்றது. நம்மை ஆள்கின்றது. நம்மை வழி நடத்துகின்றது.
நம்மைப் பற்றியும் நம் உடம்பைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யும் மணியாக மூக்கையும் மூச்சையும் குறிப்பிடலாம்.
படுக்கையிலிருந்து எழ வேண்டிய நேரம் அதிகாலை 4.00 மணி. 4.00 மணி என்பது மிகவும் முக்கியமான நேரமாகும். அதிகாலை 4.00 மணிக்கு எந்த நாசிப்பக்கமாக மூச்சு வெளிவருகிறது என்பதைக் கவனித்தால், அன்றைய பொழுதில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மூக்கிலிருந்து வெளிவருகின்ற மூச்சு முறையாக இல்லாமல் தாறுமாறாக இருக்குமேயானால், மதங்கொண்ட யானையைப் போல் தாறுமாறாக நடந்து இன்பங்களை இழந்து துன்பங்களைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும்.
ஒவ்வொரு நாளும் நாம் விடுகின்ற மூச்சு, மூக்கின் இரண்டு நாசிகளில் ஒரு பக்க நாசியில் வெளி வர வேண்டும்.
மூக்கில் விடுகின்ற மூச்சுக்காற்று முறையாக வெளிவர முதலில் இடது பக்கத்து நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து வலது பக்க நாசி வழியாக வெளியிட வேண்டும். அடுத்து, வலது பக்க நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து இடது பக்கத்து நாசி வழியாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு, காலையிலும் மாலையிலும் 21 முறை செய்து பழக வேண்டும். அவ்வாறு செய்தால், மூக்கிலும் மூச்சுக் குழாயிலும் நுரையீரலிலும் உள்ள அடைப்புகளும், சளியும் வெளியேறிவிடும். அதன் பின் மூச்சுவிடுவது இயல்பாக இருக்கும்.
அடுத்ததாக, அதிகாலையில் விழித்தெழுந்து மூக்கில் எந்த நாசி வழியாக மூச்சுக்காற்று வெளியே வருகிறது என்று பார்க்க வேண்டும்.
அதிகாலையில் எந்தப்பக்கத்து நாசி வழியாக மூச்சுக் காற்று வெளிவருகிறது என்பதைக் கொண்டு, அன்றைய தினம் நமது உடம்பு எவ்வாறு இருக்கும் என்பதை முன்னரே அறிந்து கொள்ளலாம்.
வலது நாசி என்பது சூரிய கலை.
இடது நாசி என்பது சந்திர கலை.
ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு அன்றைய பொழுதின் உடல் நலம் தொடங்குகிறது. அன்றைய பொழுதின் உடல் நடத்தை அதிகாலையிலேயே கண்டறிந்து கொண்டு, அதற்கு வேண்டிய மாற்ற நடவடிக்கைகளைச் செய்து கொண்டால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல, அதிகாலையிலேயே முடிந்துவிடும்.
எப்படியென்றால், வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய இம்மூன்று நாள்களில் அதிகாலை நான்கு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய இம்மூன்று நாள்களில் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.
வார நாள்கள் எனில் வியாழக்கிழமை மிகவும் முக்கியமான நாளாகும். மற்ற ஆறு நாள்களைப்போல வியாழக்கிழமையில் மூச்சு விட முடியாது.
வியாழக்கிழமை அன்று பௌர்ணமியாக இருந்தால், அதிகாலை நான்கு மணிக்கு இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
வியாழக்கிழமை அன்று அமாவாசையாக இருந்தால் இடது நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
இவை இரண்டும் இல்லாமல் வளர்பிறையாக இருந்தால் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
தேய்பிறையாக இருந்தால் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.
மேலே கூறியது கூறியவாறு மூச்சு வெளிவந்து கொண்டிருந்தால் அந்த ஏழு நாள்களும் உடல் நலமும் மன நலமும் சீறாக இருக்கும். எவ்விதமான நோய்நொடிகளும் அண்டாமல் இருக்கும்.
அதற்கு மாறாக, நடந்தால் என்ன நடக்கும் என்பதைக் காண்பதற்கு முன் ஒரு சிறிய இடைவேளை.
ஞாயிறு அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், தலைவலி, சளி, இருமல், ஈளை, மூச்சடைப்பு நோய்கள் உருவாகும்.
திங்கள் அன்று காலையில் இடது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவந்தால், ஜலதோசம், ஆஸ்துமா, தும்மல் நோய்கள் உண்டாகும்.
செவ்வாய் அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூசு வெளிவந்தால், காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், பித்த மயக்கம் ஆகியவை ஏற்படும்.
புதன் அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், உடல் வலி, கைகால் குடைச்சல், மூட்டுவலி, நீரேற்றம், தலைக்குத்தல் போன்ற நோய்கள் உருவாகும்.
வியாழக்கிழமை நாளில் பௌர்ணமி, அமாவாசை, வளர்பிறை, தேய்பிறை ஆகியவை இருந்தால், முறையே இடது நாசி, வலது நாசி, இடது நாசி, வலது நாசி ஆகிய நாசி வழியாக மூச்சு வெளிவரவேண்டும். அதற்கு மாறாக வெளிவந்தால், அடி வயிற்றில் நோயுண்டாகும். பெண்களுக்குக் கருப்பைக் கோளாறு ஏற்படும். மலட்டுத் தன்மை உருவாகும். இல்லற உறவு கசந்து போகும்.
வெள்ளி அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், கண் வலி வரும். கண் நோய் உண்டாகும். பார்வை குறையும்.
சனி அன்று காலையில் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், குளிர் கரம், சரும நோய், குட்டம் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.
மூக்கின் வழியாக வருகின்ற மூச்சுக்காற்று தடம் மாறி நடந்தால் உடல்நலம் மட்டுந்தான் பாதிக்கும் என்றில்லை. மன நலமும் பாதிக்கும். மன நலத்தில் ஏற்படுகின்ற பாதிப்பினால், உற்றார் உறவினர்களுடன் பழகும் பழக்கங்களும் பாதிக்கும். அதனால், உறவு முறிவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
வார நாள்களில் விடுகின்ற மூச்சுக்காற்று தடம்மாறினால் உடல் நலத்தில் குறைபாடுகளும் நோய்களும் உருவாகி, அவற்றின் ஆதிக்கத்தினால் உடல் நலம் பாதிக்கும். உறவும் தொழிலும் உடன்படாமல் எதிர்மறையாகச் செயல்படும். கசப்பும் இழப்பும் வாழக்கையைத் தடம் புரளச் செய்துவிடும்.
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமானது மூச்சுக்காற்று. அது, நாள்தோறும் விடியற்காலையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கொண்டு அன்றைய பொழுதின் ஆரோக்கியத்தை, மன வளத்தை அறிந்து கொள்ளலாம்.
மூச்சுக்காற்று எந்த நாசியில் இயங்குகிறது என்பதைக் கண்டறிந்து அன்றைய பொழுது எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வது மட்டும் உடல் நலத்தைப் பேணுவது ஆகாது.
தீங்கும் தீமையும் வரப்போகிறது என்றறிந்து கொண்டு வருவது வரட்டும்! ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்! என்றிருப்பது அறிவுடமையுமாகாது.
எந்தச் செயலுக்கும் ஒரு மாற்று இருப்பதைப் போல, எல்லாவற்றுக்கும் தீர்வு என்பது இருக்கும் என்பதை உணர்ந்து அந்தத் தீர்வு என்ன என்று அறிய முற்பட வேண்டும்.
மூச்சுக்காற்று அதன் இயல்புக்கு மாறாக நடக்கத்தொடங்கும் போதே அதனை மாற்றுவதற்கான தீர்வைச் செய்து முறையாக இயங்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தீங்கும் தீமையும் நீர்த்துப் போகும்.
கிழமைக்கு ஏற்றவாறு நாசியின் வலப்புறமோ அல்லது இடப்புறமோ இயங்குகின்ற மூச்சானது, சுமார் ஒரு மணி நேரம் வரை இயங்கிவிட்டு அடுத்த நாசிக்கு மாறிவிடும்.
அதிகாலை நான்கு மணி என்பது அன்றையப் பொழுதின் தொடக்க நேரம் என்று முன்னரே சொன்னோம். அந்த நேரத்தைக்குறிப்பிடவே ‘வைகறை துயில் எழு’ என்று கூறப்பட்டுள்ளது.
சூரியகலை சூரியனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது வெப்பமானது. சந்திரகலை சந்திரனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது குளிர்ச்சியானது. குளிர்ச்சியும் வெப்பமும் உடலுக்குத் தேவை என்பதால் அவை இரண்டும் மாறி மாறி இயங்கி உலைப் பாதுகாக்கின்றன.
வெப்பம் மிகுந்தாலும் நோயாகும். குளிர்ச்சி மிகுந்தாலும் நோயாகும். அவை இரண்டும் சம அளவில் இயங்கிக் கொண்டிருந்தால், அல்லது இயங்கச் செய்து கொண்டிருந்தால் நோய் என்னும் பேச்சுக்கே இடமில்லை.
அதிகாலையில் எழுந்திருந்த காலைக்கடன்களை முடித்து விட்டு, முகத்தைச் சுத்தம் செய்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், நாசிக்குக் கீழே கையை வைத்து எந்த நாசியின் வழியாக மூச்சுக்காற்று வந்து போகிறது என்பதைச் சோதிக்க வேண்டும்.
அதன் பிறகு, அன்றைய கிழமை என்ன, அக்கிழமையன்று எந்த நாசியின் வழியாக மூச்சு இயங்க வேண்டும் என்றறிந்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு வலப்புற நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்க வேண்டும். அன்றைக்கு அதிகாலையில் வலப்புறத்தில் இயங்கினால் தோஷமில்லை. மாறாக இடப்புறமாக இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்ய வேண்டும்?
போர்வை, சமுக்காளம் போன்ற துணியைத் தரையில் விரித்துக் கொண்டு, அதன் மீது பத்ம ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பத்மாசனம் போட முடியாவிட்டால் சுகாசனம் போட்டு அமர்ந்து கொள்ளலாம்.
சுகாசனம் என்பது சாப்பிடும்போது உட்காருவதுபோல் உட்கார்வது. அவ்வாறு உட்கார்ந்து கொண்டு வலது கையின் கட்டை விரல் மோதிர விரல் ஆகிய இரண்ட மட்டும் நீட்டிக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் உட்புறமாக மடக்கிக் கொண்டு, கட்டை விரலை வலப்புற நாசியிலும் மோதிர விரலை இடப்புற நாசியிலும் மூக்கைச் சிந்தும்போது வைப்பது போல் வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது, கட்டை விரலால் வலப்புற நாசியை அமுக்கி மூச்சு வராமல் அடைத்துக் கொண்டு இடப்புறத்து நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளுக்குள் இழுக்க வேண்டும். அவ்வாறு இழுக்கும் நேரம் அரை நிமிடம் என்று வைத்துக் கொள்வோம்.
மூச்சை இழுத்தவுடன் மோதிர விரலால் இடப்புறத்து நாசியை அடைத்துக் கொண்டு, கட்டை விரலை எடுத்து விட்டு, வலப்புற நாசி வழியாகக் காற்றை வெளியே விட வேண்டும். மூச்சை வெளியே விடும்போது, இடப்புறமாக மூச்சை இழுக்கும்போது ஆகும் நேரம் அரை நிமிடத்தைப் போல இரண்டு மடங்கு நேரம் (ஒரு நிமிடம்) மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.
அடுத்து, வலப்புற நாசி வழியாக மூச்சை வெளியே விட்டதும், அந்த நாசியின் வழியாகவே மூச்சை அரை நிமிட நேரம் அளவுக்கு உள்ளே இழுக்க வேண்டும்.
காற்று உள்ளே சென்ற வலப்புற நாசியைக் கட்டை விரலால் அடைத்துக் கொண்டு, இடப்புறத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மோதிர விரலைத் தளர்த்திக் கொண்டு ஒரு நிமிட நேரம் அளவுக்கு உள்ளே சென்ற காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும்.
இவ்வாறு, வலப்புறமும் இடப்புறமும் மாறி மாறி விட வேண்டும். வலது புறத்திலும் இடது புறத்திலும் மூச்சு விடுவது ஒன்று எனக் கணக்கிட்டு, இருபத்தொரு முறை விட வேண்டும்.
அவ்வாறு செய்த பின்பு, சிறிது நேர ஓய்வுக்குப் பின்பு நாசியைச் சோதிக்க வேண்டும். அப்போது, இயல்பாக வரவேண்டிய வலது புறத்து நாசி வழியாக மூச்சு வர வேண்டும்- அப்போதும் இடது புறத்து வழியாகவே மூச்சு வந்து கொண்டிருந்தால், கவலைப்படவேண்டாம்.
விரித்து வைத்துள்ள துணியின் மீது, தெற்கில் தலையை வைத்துப் படுத்துக் கொள்ளலாம். இடது கையை மடக்கி தலைக்கு வைத்துக் கொள்ளலாம். உள்ளங்களையில் காதைவைத்து படுத்துக் கொள்ளவும். இடது காலை மடக்கி வலது காலை நீட்டிக் கொள்ளவும். வலது கை வலது தொடையில் இருக்குமாறு நீட்டிக் கொண்டு, பத்துப் பதினைந்து நிமிடங்கள் படுத்திருந்தால், மூச்சு இடது கலையிலிருந்து மாறி வலதுக்கு வந்துவிடும்.
மேலும் மற்றொரு முறை சுவர் ஓரமாக நின்று கொண்டு இடது காலைத் தூக்கி வலது கால் தொடை மீது வைத்துக் கொள்ளவும். கை இரண்டையும் ஒன்றாகச்¢சேர்த்து கும்பிடுவதுபோல வைத்துக் கொண்டு, கையைத் தலைக்கு மேலே நீட்டிக் கொள்ளவும். இதற்கு நின்ற பாத ஆசனம் என்று பெயர். இந்த ஆசனத்தில் ஐந்து நிமிடம் நின்றால் மூச்சு இடகலையிலிருந்து வலதுக்கு மாறிவிடும்.
இவ்வாறு கலையை மாற்றிக்கொண்டால், அன்றைய பொழுது ஆனந்தமாக இருக்கும்.
கால் மேல் கால்:
ஒரு சிலர் எந்த இடத்தில் அமர்ந்தாலும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
பெரியவர்கள் முன்னிலையில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமரக் கூடாது! அது மரியாதைக் குறைவு என்றெல்லாம் கூறப்பட்டாலும், யார் எதைச் சொன்னாலும் நான் அப்படித்தான் உட்காருவேன் என்று, உட்காருவோரும் இருக்கின்றார்கள்.
வலது காலின் பெரு விரலிலிருந்து சூரிய கலையும், இடது காலின் பெருவிரலில் இருந்து சந்திர கலையும் தொடங்குகிறது என்பதால், வலது காலைச் சூரியனாகவும் இடது காலைச் சந்திரனாகவும் கருதலாம்.
உட்காரும் போது வலது கால் இடது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சூரிய ஆற்றல் மிகும். இடது கால் வலது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சந்திர ஆற்றல் மிகும்.
எப்போதும் வலது காலை இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இடது காலை வலது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் சாந்தமானவர்களாக இருப்பார்கள்.
இருக்கையில் அமரும் போது அப்படி அமரலாம். தரையில் அமரும் போது என்ன செய்யலாம்?
தரையில் அமரும் போதும் முதலில் இடது காலை மடக்கிக் கொள்ளவும். அடுத்து வலது காலைத்தூக்கி இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டால் சூரிய ஆற்றல் கிடைக்கும்.

சித்த மருத்துவ மருந்துகளில் தேனின் பங்கு

சித்த மருத்துவ மருந்துகளில் ஆணி வேராக உபயோகப்படும் பொருள் தேன் ஆகும்.  தேனின் தனிச்சிறப்பே நாள்பட்ட நிலையிலும் கெட்டுப் போகாத தன்மையே.

தேனின் நன்மைகள் பல.  அது நாம் அனைவரும் அறிந்ததே.  ஆனால் சித்த மருந்துகளில் இதன் பயன்பாடு என்பது சிறப்பானது.  ஏனென்றால் தேனோடு சேர்க்கப்படும் மருந்துகளை கெட்டுப் போகாமல் காக்கும் தன்மை கொண்டது.

சித்த மருந்துகள் தயாரிக்கும் காலம் தொட்டு அதாவது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தேனைப் பற்றி கூறப்பட்டுவரும் கருத்துக்கள் அனைத்தும் நவீன ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.  அதாவது தேன் நாள்பட்ட நிலையிலும் கெட்டுப்போவது  அரிது என்ற கருத்து.

இதற்கான காரணங்கள்

· தேனில் நீர்த்தன்மை மிக மிக குறைவு.  இதில் நீர்த்தன்மை  0.6% தான் உள்ளது

· தேனில் நீர்த்தன்மை குறைவாக இருப்பதால், அதில் பாக்டீரியாக்கள், அல்லது பூஞ்சைகள் வளர இயலாது.  இவைகள் வளருவதற்கு நீர்த்தன்மை குறைந்தது 0.7% அல்லது 0.9 % இருக்க வேண்டும்.  இக்கிருமிகள் பாதிக்ககாததால் தேன் கெடாமல் வெகுநாட்கள் பாதுகாக்கப்படுகிறது.

· தேனின் அடர்த்தி அதிகம்.  அதாவது 83% அடர்த்தி மிக்கது.  70% புரக்டோஸ், குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகள் உள்ளது.

· பூக்களில் உள்ள தேனை, தேனீ பருகி, இடைவிடாத இறகு துடிப்பினால் அதில் உள்ள நீர்த்தன்மை வற்றப்பட்ட தேனை  உண்ணும் போது உடலில் சுரக்கும் திரவத்தினாலும் அடர்வு மிகுந்த தேனாக தேன் கூட்டில் சேர்த்து வைக்கப் படுகிறது.

நெக்டரானது தேனாக தேனீக்களால் மாற்றம் அடையும்போது ஆண்டி மைக்ரோபியல் பொருளாக ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு உற்பத்தியாகிறது.  இதன் காரணமாகவும் தேன் கெடாமல் வெகுநாட்கள் காக்கப்படுகிறது.

· அடர்வுத் தன்மை மிகுந்த தேனானது எந்தவித பாக்டீரியா, பூஞ்சைக் கிருமிகளையும் வளர விடாது.

· தேனானது அமிலத்தன்மை கொண்டது.  அதாவது இதனுடைய ணீஏ  3.2 – 4.5

தேனில் முக்கிய உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் உள்ளன. இதனாலும் நாள்பட கெட்டுப்போகாத தன்மையாலும் சித்த, ஆயுர்வேத மருந்து செய்முறைகளில்  தேன் முக்கிய பங்காற்றுகிறது.