Advertisements

Monthly Archives: ஒக்ரோபர், 2010

முகவாத நோய்க்கு சித்த மருத்துவம்

குளிர் காலத்தில் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் ஆகியவை ஏற்படுவது சகஜம். ஆனால் எவ்வித தடுப்பும் இல்லாமல் பனியில், குளிரில் இருப்பவர்களுக்கு முகவாதம் என்னும் நோய் தாக்குகிறது. காது, மூக்கு வழியே செல்லும் குளிர் காற்று முகத்துக்கு செல்லும் ரத்தநாளங்களை தாக்குவதால் முகம் கோணலாகும்! ஏழாவது முக நரம்பு பாதிப்பினால் இந்த பாதிப்பு உண்டாகிறது.

இதற்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஒரு காரணம். இந்த நோய்க்கு `பெல்ஸ் பாஸ்சி’- முகவாதம் என்று பெயர். ஆண்களைவிட பெண்களை இந்த நோய் அதிகம் தாக்கும்!

பிறவியிலேயே அல்லது குளிர்காலத் தாக்குதலால் முகம் கோணல் ஆகும்போது அதை சித்த மருத்துவத்தில் முழுமையாக குணப்படுத்த மருந்துகள் உள்ளன.

* மாவிலங்கு மரப்பட்டை – 20 கிராம்
* மூக்கிரட்டைப் பட்டை வேர் – 20 கிராம்
* வெள்ளைச் சாரணை வேர் – 20 கிராம்

ஆகிய மூன்றையும் நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் `நண்டுகல் பற்பம்’ சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும்.

அதேபோல், சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை `தோள்பட்டை உறைவு’. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பற்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.

– டாக்டர் சோமசுந்தரம், சென்னை.

Advertisements

வேர்டில் படுக்கைக் கோடுகள்

வேர்ட் தொகுப்பில், ஆவணங்களில் படுக்கைக் கோடுகள் தயாரிப்பதற்கு, எந்த கீகளைச் சிலமுறை அழுத்தினால் போதும், கோடுகள் தயாராகிவிடும் என இந்த பிரிவில் எழுதி இருக்கிறோம். மீண்டும் அவற்றை இங்கு நினைவு படுத்தலாம்.
1. மூன்று முறை ஹைபன் கீ அழுத்தி என்டர் செய்தால், அழுத்தமில்லாத நீள கோடு கிடைக்கும்.
2. மூன்று முறை அண்டர் ஸ்கோர் எனப்படும் 0க்கு அடுத்த கீயினை அழுத்தி, என்டர் செய்தால், சற்று அழுத்தமான நீளக் கோடு கிடைக்கும்.
3. மூன்று ஆஸ்டெரிஸ்க் ( ஷிப்ட்+3 எண்ணுக்கான கீ ) கீ அழுத்தி என்டர் தட்டினால், புள்ளிகள் வைத்த கோடு கிடைக்கும்.
4. டில்டே (கீ போர்டில் முதல் கீ ஷிப்ட் கீயுடன்) மூன்று முறை அழுத்தி என்டர் அழுத்த, நெளிவு கோடு கிடைக்கும்.
5. ஈக்குவல் என்னும் சமம் என்பதற்கான கீ (பேக் ஸ்பேஸ் கீக்கு முந்தைய கீ, ஷிப்ட் கீயுடன்) மூன்று முறை அழுத்தி, என்டர் அழுத்த, சிறிய அளவிலான இரட்டைக் கோடு கிடைக்கும்.
இது போல கோடுகள் அமைவது, வேர்ட் தொகுப்பில் மாறா நிலையில் நமக்குத் தரப்பட்டுள்ளது.  ஆனால் ஒரு சிலருக்கு இந்த கோடு, தானாக அமைவது பிடிக்காது.
ஏனென்றால், சிறிய அளவில் ஏழே ஏழு ஹைபன்களை அடுத்து அடுத்து போட விரும்பினால், போட முடியாது. அது வேர்டால், தானாக முழு நீளக் கோடாக மாற்றிவிடும்.
அப்படியானல் என்ன செய்திடலாம்? வேர்ட் தொகுப்பில் இதனை நிறுத்துவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. வேர்ட் 2003 தொகுப்பில்:
டூல்ஸ் மெனுவிலிருந்து ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும்.  கிடைக்கும் விண்டோவில் AutoFormat As You Type  என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக் கவும். பின்னர் Apply As You Type என்ற பிரிவில் Border Lines  என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
2. வேர்ட் 2007:
முதலில் ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Word Options  என்பதில் கிளிக் செய்திடுக. அதன்பின் AutoCorrect Options   என்ற பிரிவில், AutoCorrect Options என்பதில் கிளிக் ஏற்படுத்தவும்.
பின்னர் AutoFormat As You Type என்ற டேப்பில், Apply As You Type   என்ற பிரிவில் Border Lines என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
3. வேர்ட் 2010 தொகுப்பில்:
File  டேப்பில் Help என்பதன் கீழ் Options   என்பதில் கிளிக் செய்திடவும்.
இதன் பின், கிடைக்கும் பிரிவுகளில், இடது பக்கம் கிடைக்கும் பிரிவுகளில், Proofing   என்பதில் கிளிக் செய்திடவும். அதன்பின் AutoCorrect Options  என்ற பிரிவில், AutoCorrect Options   என்பதில் கிளிக் ஏற்படுத்தவும்.
பின்னர் AutoFormat As You Type என்ற டேப்பில், Apply As You Type  என்ற பிரிவில் Border Lines  என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும்.  பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டாகுமெண்ட்டில்  வெப் டெக்ஸ்ட் ஒட்ட
இணைய தளத்திலிருந்து டெக்ஸ்ட் எடுத்து வேர்டில் ஒட்டுகையில் நமக்குத் தேவையில்லாத பார்மட்டிங், பாண்ட் மற்றும் டெக்ஸ்ட் அருகே உள்ள சிறிய விளம்பரக் கட்டங்கள் ஆகியவையும் ஒட்டப்படும். இது பல வேளைகளில் எரிச்சல் தரும் விஷயம் ஆகும். ஏனென்றால் நாம் டெக்ஸ்ட் மட்டும் வைத்துக் கொள்ள விருப்பப்பட்டால் தேவையற்ற இந்த அனைத்து சங்கதிகளையும் ஒவ்வொன்றாக நீக்க வேண்டியுள்ளது. இதனால் காலம் விரயமாகிறது. இதற்குப் பதிலாக Edit   மெனு சென்று அதில் Paste Special  என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து  மீண்டும் அதில் Unformatted Text  கிளிக் செய்து அதன் பின் வெப் சைட்டிலிருந்து காப்பி செய்ததை பேஸ்ட் செய்தால் நீங்கள் திட்டமிடுகிற மாதிரி வெறும் டெக்ஸ்ட் மட்டும் நமக்குக் கிடைக்கும்.

ஆட்டமும்… அறுசுவை உணவும்…(குஜராத்)

அழகான நடனங்கள் ஆடுவதும், அறுசுவை உணவுகள் உண்பதும் குஜராத்தி பெண்களுக்கு பிடித்தமான விஷயங்கள். குழந்தைப் பருவத்திலே பாரம்பரிய நடனங்களை கற்றுக்கொள்ளும் இவர்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த நடனங்களை ஆடிக்கொண்டே வளர்ந்து வருகிறார்கள். நடனமும் வளர்கிறது. அவர்களும் வளர்கிறார்கள். நடனத்தை அவர்கள் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடிவதில்லை.

வண்ணங்கள் நிறைந்ததாக இருக்கும் அவர்கள் வாழ்க்கையின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதத்தில், அவர்கள் நடனத்திற்காக உடுத்தும் உடைகள் இருக்கின்றன. அத்தனை வண்ணங்கள்… வடிவங்கள்.. வேலைப்பாடுகள்! “குஜராத்தை சேர்ந்த நாங்கள் நடனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நடனம் ஆடி மகிழ்வது எங்களுக்கு புத்துணர்ச்சியையும், புதிய சக்தியையும் தருகிறது. அதுவே ஆன்மிக நடனம் என்றால் நாங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேஇல்லை. அது எங்கள் ஆத்மாவையே குஷிப்படுத்துகிறது…” -என்கிறார், குஜராத் மங்கை பாருல்பட்.

இவர்கள் ஆடும் ஆட்டங்களில் குறிப்பிடத்தக்கது தாண்டியா நடனம். இந்த நடனத்திற்கான உடையை பார்க்கும்போது, `என்ன விலை அழகே..?’ என்று கேட்கத் தோன்றுகிறது. அத்தனை நேர்த்தி அந்த `சனியா சோளி’ என்ற உடையில்! இது மூன்று பிரிவான உடைகளைக்கொண்டது. அதில் கையால் உருவாக்கப்பட்ட எம்ப்ராய்டரிங், கண்ணாடி வேலைப்பாடுகள், சோழிகள் மற்றும் மணிகளைக்கொண்ட அலங் கார இணைப்புகள் நிறைய உள்ளன.

சனியா என்பது நீளமான ஸ்கர்ட். மடிப்புகளைக் கொண்டது. 9 மீட்டர் துணிகளாலான வேலைப்பாடுகள் இருக்கும். நடனம் ஆடும்போது குடைபோல அழகாக விரிந்து, அலை அலையாய் பறந்து வரும். பார்வையாளர்களையும் ஈர்க்கும். இதற்கான சோளி, இடுப்புவரை நீளமானது. ஒரு சனியா சோளி உடை 25 விதமான பொருட்களை இணைத்து அழகு படுத்தப்படுகின்றன. அதனால் இதில் இருக்கும் வேலைப்பாடுகள் அதிகம். ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் வரை இதன் விலை உள்ளது. இவர்கள் தேர்ந்தெடுக்கும் உடைகள் நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு போன்ற பளிச் நிறங்களாக இருக்கின்றன.

நவராத்திரி விழா இவர்களுக்கு கொண்டாட்டம், கோலாகலம் நிறைந்தது. விழாவின் இரண்டு மாதங்களுக்கு முன்பே சென்னையில் வசிக்கும் குஜராத்தியர்கள், அங்குள்ள உறவினர்கள் மூலம் இந்த நடன உடைகளை வாங்குகிறார்கள். விலை உயர்வாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆடையைத்தான் நவராத்திரி தாண்டியா நடனத்திற்காக வாங்குகிறார்கள்.

சென்னையில் நடந்த தாண்டியா நடனத்தில் குஜராத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள். வெளிநாட்டு பெண்களும் கலந்துகொண்டு நவராத்திரி தீபாராதனை வழிபாட்டிலும், நடனத்திலும் பங்குபெற்று ஆடி மகிழ்ந்தனர். இந்த விழா ஏற்பாட்டை `ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ்’ மற்றும் சத்யன்பட், பாருல்பட் இணைந்து செய்திருந்தனர்.

மூன்று மணிநேரம் தொடர்ச்சியாக விதவிதமாக நடந்த நடனத்திற்குப் பிறகு 35 விதமான உணவுகளை அவர்கள் சுவைத்து மகிழ்ந்தனர். அனைத்தும் குஜராத் மாநிலத்து சுவை நிறைந்த உணவுவகைகள்.

அந்த உணவுகளில் என்ன விசேஷம்?

கமான்: இட்லிக்கு பெயர்போனது தமிழ்நாடு. கமான் என்பது குஜராத்தி இட்லி. கடலை மாவில், தயிர் கலந்து அற்புதமான தயார் ஆக்கி, ஆவியில் வேகவைத்து சுவைக்கத் தருகிறார்கள். இதற்கு நான்கைந்து வகை சட்டினிகளை சேர்த்துக்கொடுத்து சப்புக்கொட்டி சாப்பிடவைக்கிறார்கள். பாஜீரா: தமிழக உணவு விடுதிகளில் வழங்கப்படும் பொங்கலைப் போன்ற குஜராத்தி பொங்கல் இது. கம்பு கிச்சடி என்றும் சொல்லலாம். கம்பு, பருப்பு, நெய், வெல்லம் போன்றவை கலந்து இதை சுவையாக தயாரித்து வழங்கினார்கள்.

பாத்ரா: கொலகேசியா இலையை மையமாகவைத்து தயாரிக்கப்படும் சுவைமிகுந்த உணவு இது. இந்த இலைகளை சுத்தம்செய்து, அதில் இருக்கும் நரம்புகளை நீக்கவேண்டும். கடலை மாவு, புளி, உப்பு, மஞ்சள்தூள், மிளகுதூள், மசாலாதூள், வெல்லம், ஓமம், எள் போன்றவைகளை நன்றாக அரைத்து இலைமேல் பூசவேண்டும். இன்னொரு இலையிலும் அதுபோல் பூசி, இரண்டையும் ஒன்றாக சேர்க்கவேண்டும். அவைகளை சுருட்டி, வேகவைத்தெடுத்து நறுக்கி எண்ணையில் வறுத்து சுவைக்கவேண்டும்.

குஜராத்தில் புகழ்பெற்ற சுவீட் வகைகளையும் விதவிதமாக கொடுத்து சுவைக்கச் செய்தார்கள். தற்போது சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அவர்களுக்காகவும் விசேஷ உணவுகளை தயாரித்து வழங்கினார்கள்.

கலையையும், ஆன்மிகத்தையும் வளர்க்கும் தாண்டியா நடனமும், சுவை மிகுந்த அதற்கு பிந்தைய விருந்துகளும் தமிழக மக்களாலும் ரசித்து, ருசித்து வரவேற்கப்படுகிறது.

வைரஸ் பாதிப்பா ? கம்ப்யூட்டரை ஒதுக்கி வை

பாட்நெட்(Botnet) என்னும் வைரஸ் புரோகிராமினை, அடக்கித் தடுப்பது பெரிய வேலையாய் உள்ளது. இந்த வகை வைரஸ்கள் தாக்கும் வழிகள் பலவாய் அமைந்துள்ளன. எனவே இதனை எதிர்க்கும் புதிய வழி ஒன்று குறித்து மைக்ரோசாப்ட் எண்ணி வருகிறது.
இந்த பாட்நெட் வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ஸ்காட் சார்னி, இதற்கான மாற்று வழியினை அறிவித்துள்ளார். பாட்நெட் பாதித்த கம்ப்யூட்டர்களை, இணைய இணைப்பில் இருந்து ஒதுக்கி வைத்திடும் வழிகளை ஆய்வு செய்து வருகிறார். இவருடைய திட்டப்படி, ஒவ்வொரு கம்ப்யூட் டரும் இணைய இணைப்பில் இருக் கையில் சோதனை செய்யப்பட்டு ஒரு “”ஹெல்த் சர்டிபிகேட்”  வழங்கப்படும்.  முதலில் ஒரு  கம்ப்யூட்டர் அனைத்து பேட்ச் பைல்களாலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா, அதன் வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு அப்டேட் செய்யப்பட்டு சரியாக இயங்குகிறதா என்று அறியப்படும். பின் வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை நடத்தப்படும்.  பாட்நெட் வைரஸ் இருப்பின் உடனே, அந்த கம்ப்யூட்டர், ஆன்லைனிலேயே, குவாரண்டைன் எனப்படும் நோய் தடுப்பு பிரிப்பு கூடத்திற்கு ஒதுக்கப்படும்.
இது இறுதி நடவடிக்கையாகத்தான் இருக்கும். இதனால், இந்த கம்ப்யூட்டரிலிருந்து, இணையத்தில் இணைந்திருக்கும் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு, இந்த வகை வைரஸ்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்.   இந்த திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு வரும் என்று இவர் எதிர்பார்க்கிறார். வைரஸ்கள் அதிகம் பெருகி வரும் இந்நாளில், ஒருவர் செய்யாத குற்றத்திற்கு இணைய தடுப்பு தண்டனை என்பது அதிகம் என்று எதிர்ப்பு வரலாம். இருப்பினும் இவர் தன்னுடைய திட்டத்தினையும் நியாயப் படுத்துகிறார். எப்படி அம்மை போன்ற தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு ஊசி போடாதவர்கள், அந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு இதே நோய்களைத் தர முடியுமோ அது போலத்தான் தடுப்புமுறைகளை மேற்கொள்ளாத, வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களும்  உள்ளன.  எனவே நோயாளிகளை பாதுகாப்பு தடுப்பு மையங்களில் வைப்பது போல, கம்ப்யூட்டர்களையும் ஒதுக்கி வைப்பதில் தவறில்லை என்கிறார்.  அமெரிக்காவில் சில இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள், இது போன்ற திட்டங்களை இப்போதும் அமல்படுத்தித்தான் வருகின்றன. இருப்பினும், உலகம் முழுமையும் என்கிற போது, இதனை அமல்படுத்துவதில் தடைகள் ஏறபடலாம்.   இந்த திட்டம் முழுமையாக அறிவிக்கப்படும்போதுதான், எதிர்ப்பு குறித்து நாம் அறியலாம்.

ஆண் பெண் நேசம் புனிதமானது

* ஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும் புவது மோகத்தால் அல்ல. அது ரகசிய உறவுக்கான அழைப்பும் அல்ல. உண்மையில் பெரும்பாலான ஆண் கள் பெண்களிடம் நல்ல நட்பு பாராட்டவே விரும்பு கிறார்கள். பிரச்சினைக்குரிய பெண்களின் பிடியில் இருந்து விலகியிருக்கவும் விரும்புகிறார்கள்!

* மேக்கப் இல்லாத இயற்கையழகே பெண்களுக்கு முழு அழகு! பெரும்பாலான ஆண்கள் பெண்களின் மேக்கப் தோற்றத்தை விரும்புவது இல்லை. அவர்களின் இயற்கை அழகையே ஆண்கள் அதிகம் ரசிக்கிறார்கள். அதுபோல அழகில் கர்வம் கொண்டவர்களையும் ஆண்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆடம்பரமான மேக்கப் இல்லாமல் எளிமையான இயற்கையழகுடன் இருந்தால் நீங்கள் விரும்பும் ஆண்களின் மனதில் இடம் பிடிக்கலாம்.

* பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த ஆண் நண்பர்களுடன் வெளியில் போகும்போது தோழிகள் யாரா வது தென்பட்டால் உடனே அளவுக்கு மீறி பயந்து வெட்கி தலைகுனிந்து விடக்கூடாது. பல்லைக்காட்டி சிரித்துக் கொண்டு வானத்திற்கும் பூமிக்குமாக தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கவும் கூடாது. இவை உங்களை மிகுந்த பயம் கொண்டவராகவும், பக்குவமற்றவராகவும் காட்டிவிடும்.

* உங்களுடன் நெருங்கிப் பழகும் ஆண்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பது பற்றி அறிய அவர்களே மிகுந்த ஆவலுடன் காணப்படுவர்.

நீங்கள் உங்கள் ஆண் நண்பர்களோடு பழகும்போது அவர்களின் புதிய முடியலங்காரம் அழகாகத் தோன்றி னால், `அழகா இருக்குங்க…’ என்று உடனே வெளிப் படையாகச் சொல்லிடுங்க. அதேமாதிரி அவர்கள் போட்டி ருக்கும் `டிரெஸ்’ அழகா இல்லைன்னாலும், `நல்லா இல்லைங்க..’ என்று சொல்லி விடலாம். அது உங்க ஆண் நண்பர் உங்களை புரிந்து கொள்ள உதவும்!

* எப்பப் பார்த்தாலும் முகத்தை `உம்’ முன்னு வைச்சுக்கிட்டு சிடுமூஞ்சியா இருக்காதீங்க! பெண்க ளுக்கு மாதம் ஒருமுறை வரும் `அந்த சில நாட்களில்’ உங்களுக்கு உள்ள உடல் கஷ்டமும் உள்ளக் குமைச்சலும் ஆண்களுக்குத் தெரிஞ்சது தான்! அதையே சாக்காக வைத்துக்கொண்டு எப்பப்பார்த்தாலும் முகத்தை உம்முன்னு வைச்சுக்கிட்டு சிடுமூஞ்சியா இருக்கக்கூடாது. ஏன்னா, உங்களோட இந்த `உம்மணாமூஞ்சி’ ஆண்களுக்கு அறவே பிடிக்காது.

* `நாம குண்டா இருக்கோமே, நம்மை ஆண்கள் விரும்புவாங்களா?’ன்னு நீங்க கவலைப்பட வேண்டாம்.

எந்த ஒரு பையனும் தான் நெருங்கிப் பழகுற பெண் குண்டா இருந்தா, அதை அந்த பொண்ணு கிட்ட `நீ ரொம்ப குண்டா இருக்கே…’ என்று குறை சொன்னதே இல்லைங்க..! எனவே, பெண் பிள்ளைகளே நீங்க குண்டா இருந்தா அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லைங்க. உங்க மனசையும், அன்பையும்தான் ஆண் பிள்ளைங்க எதிர்பார்க்கிறாங்க!

* உங்கள் தோழிகளுடன் பொது இடத்தில் அமர்ந்திருக்கும்போது மற்றவர்கள் கவனத்தைக் கவரும் விதமாக அளவுக்கு மீறி சிரித்துக் கொண் டோ அல்லது குசுகுசுவென பேசிக்கொண்டோ இருந்தால் நீங்கள் இன்னும் பள்ளி செல்லும் சிறுபிள்ளையாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை ஆண்களுக்கு வெளிப்படுத்தி விடும். மேலும் நீங்கள் உறுதியற்ற மனநிலை கொண்டவர் என்பதையும் வெட்டவெளிச்சமாக்கி விடும். இந்த மாதிரியான பெண்களை ஒருபோதும் ஆண்கள் விரும்புவதில்லை.

* உங்களிடம் இருக்கும் நல்ல குணங்களை மட்டுமே ஆண்கள் அதிகம் விரும்புறாங்க என்பதை மனதில் கொள்ளுங்க..! உங்கள் புற அழகில் ஈர்ப்பு ஏற்பட்டாலும் அது அவர்களை விரும்ப வைக்காது. அதிக அளவில் காதல் விளையாட்டில் ஈடுபட்டு ஆண்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சிட்டும் பெண்ணாகத் தோன்றாமல் அடக்கமும், அமைதியும் நிறைந்த பெண்ணாகப் பவனி வருவதைத்தான் அதிகமான ஆண்கள் விரும்புறாங்க!

* காதல் உணர்வுடன் உங்களுடன் ஒருவர் பழகினால், இழுத்தடிக்காமல் `அவரைப் பிடிக்கிறதா? இல்லையா?’ என்பதை உடனே நேரடியாகச் சொல்லிடுங்க. நீங்கள் ஒரு வரை விரும்பிக் கொண்டே பிடிக்காததுபோல் ரொம்பநாள் பாசாங்கு பண்ணினீங் கன்னா அவர் உங்களை விட்டு விட்டு வேறுபெண்ணை விரும்பிப் போகும்நிலை ஏற்படு முங்க. பிறகு நீங்க கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லீங்க…! பிடிச்சிருந்தா, பிடிச்சி ருக்குன்னு பளிச்சுன்னு சொல்லிடுங்க!

இந்த விஷயங்களை தெளிவா மனசுல உள்வாங்கிக்கிட்டு நீங்க ஆண்களிடம் பழகினால் அதிக சிக்கலில் மாட்டிக்கொள்ள மாட்டீங்க…!

பெண்களுக்கான `பிங்க் மாதம்’-மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு

அக்டோபர் மாதத்திற்கு “பிங்க் மாதம்” என்று பெயரிட்டு, மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மாதமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. அது தொடர்பான கட்டுரை.

“புற்றுநோய்” என்று பெயர் வரக் காரணம் என்ன?

– எறும்பின் புற்று அடிப்பாகம் பெரிதாகவும், மேல் பாகம் கூர்மையாகவும், பல கிளைகளாக பரவியும் காணப்படும். அதன் ஓரங்களும் சீராக இருக்காது. புற்று நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உடல்பாகமும் அதுபோல் தெரிவதால் அதற்கு புற்றுநோய் என்று பெயரிட்டுவிட்டார்கள். ஆங்கிலத்தில் “கேன்சர்” என்று சொல்வார்கள். கேன்சர் என்ற வார்த்தை “கேன்கர்” என்ற சொல்லிருந்து வந்தது. கேன்கர் என்றால் நண்டு. நண்டின் உடல் நடுவிலும், அதன் கால்கள் பல கிளைகளாக ஓரங்களிலும் தெரிவதுபோல் புற்றுநோயின் பாதிப்பும் தெரிவதால், கேன்சர் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். யாருக்கும், உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். மார்பக புற்றுநோய், உலகில் இரண்டாவது பெரும் நோயாக குறிப்பிடப்படுகிறது.

புற்று நோய் ஏன் வருகிறது?

மனிதனின் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும் பொழுதோ அல்லது தேய்மானம் அடையும் பொழுதோ, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரையில்தான், மறுபடியும் பெருகும். இதை தீர்மானிப்பது ஒவ்வொரு செல்லிலும் உள்ள “நூக்லியஸ்” என்ற உயிர் பொருள். இது குறிப்பிட்ட அளவை விட மிக அதிகமான எண்ணிக்கையில், பெருகினால் புற்றுநோய் தோன்றும்.

மார்பக புற்று நோய், மார்பில் உள்ள பால் சுரப்பிகளில் ஏற்படலாம். பால்வரும் குழாய்களிலும் ஏற்படலாம். இந்த குழாய்கள் எல்லாம் சேர்ந்து மொட்டு மாதிரி தோன்றும் மார்பகக் காம்புகளிலும் வரலாம். ஒவ்வொரு பால் சுரப்பியையும் இணைக்கும் கொழுப்பு திசுக்களிலோ அல்லது மற்ற திசுக்களிலோகூட வரலாம்.

மார்பக புற்று நோய் மார்பில் மட்டும் இருப்பதில்லை. அவை அங்கிருந்து பரவி கீழே உள்ள நெஞ்சுக்கூட்டின் திசுக்களில் பரவும். அக்குள்களில் உள்ள நெறிக்கட்டிகளிலோ, இன்னொரு மார்பகத்திலோகூட பரவும். ரத்தத்தின் வழியாக எந்த உறுப்புகளுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். குறிப்பாக மூளை, சிறுநீரகங்கள் அதிகமாக தாக்கப்படுகின்றன. மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

பல காரணங்களை சொல்லலாம். பொதுவாக இது உடலில் உள்ள மரபணுக்களால்தான் (எக்ஙூக்ஞ்கூஷ ஊஹஷஞ்ச்சு) வருகிறது. 5 முதல் 10 விழுக்காடு தாய், தந்தையிடமிருந்து வரலாம். ஆதஇஅ-1 ஆதஇஅ-2 என்று இரண்டு மரபணுக்களை கண்டுபிடித்துள்ளனர். இது தாயிடமிருந்தோ அல்லது தந்தையிடமிருந்தோ வரலாம். ஒருவருடைய ரத்த சொந்தங்கள் யாருக்கேனும் மார்பக புற்று நோய் இருந்தால், அவருடைய அடுத்த தலைமுறை நபர்களுக்கும் இது வருவதற்கான வாய்ப்பு அதிகம். மது அருந்தும் மங்கையர்களையும், மாதவிடாய் நின்ற பிறகு உடல் பருமனாகிறவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்கும். உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் “ஈஸ்ட்ரோஜன்” என்ற வேதிப் பொருளை சுரக்கின்றன. மாதவிடாய் நிலைத்துப்போகும் `மெனோபாஸ்’ காலத்தை பெண் அடைந்த பின்பு, உடலில் அதிகமாக இருக்கும் ஈஸ்ட்ரோஜன், மார்பக புற்று நோயை தோற்றுவிக்கலாம். புகை பிடித்தல், ஈஸ்ட்ரோஜன் அதிகமாக உள்ள மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவது, தவறான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, மன அழுத்தம், மன உளைச்சல், ஆகியவைகளும் மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்களாக அறியப்படுகின்றன.

உணவு வகைகளில் இன்னமும் தீர்மானமாகச் சொல்லப்படவில்லை என்றாலும் கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சி, கொழுப்பு நிறைந்த பால், ஐஸ்கிரீம், பாலாடை கட்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வரலாம். சிறு வயதில் பூப்படைதல், மிகவும் தாமதமாக மெனோபாஸ் காலகட்டத்தை அடைதல் போன்றவையும் நோய்க் காரணங்களாக சொல்லப்படுகின்றன.

எந்த வயதில் இந்த நோய் அதிகம் தாக்கும்?

30 வயதிலிருந்து 39 வயது வரை 233 பேர்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வரலாம்.

40 வயதிலிருந்து 49 வயது வரை 69 பேர்களில் ஒருவருக்கும், 50 வயதிலிருந்து 59 வயது வரை 38 பேர்களில் ஒருவருக்கும், 60 வயதிலிருந்து 69 வயது வரை 27 பேர்களில் ஒருவருக்கும் மார்பக புற்று நோய் வரலாம். இதன் அறிகுறி என்ன?

முதலாவதாக தென்படுவது மார்பகத்தில் கட்டி. ஆரம்ப நாட்களில் வலி இல்லாமலும், அந்த கட்டியினுடைய ஓரங்கள் சீராக இல்லாமலும் இருக்கும். ஆனால் பல சமயங்களில் தொட்டாலோ அல்லது அழுத்தினாலோ வலி ஏற்படுகின்ற கட்டியாகத்தான் இது வருகிறது. மார்பகத் தோலில் எரிச்சல் அல்லது நமைச்சல் அல்லது ஆரஞ்சு பழத்தோலில் இருப்பது போன்ற புள்ளி புள்ளியாக குழிகள், மார்பக காம்புகளில் வலி, வீக்கம், காம்பை சுற்றியுள்ள தோலில் சுருக்கம், நமைச்சலுடன் கூடிய தேமல் போன்ற தோற்றம் எல்லாம் அறிகுறிகள். மார்பகக் காம்புகள் உள்ளிழுக்கப்பட்ட நிலை, சுரப்பிகள் வழியாக ரத்தமோ அல்லது திரவமோ கசிவது, அக்குகளில் நெறிக்கட்டிகள் வீங்கியிருப்பது போன்றவைகளும் அறிகுறிகள்தான்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த பின்னர் பெண்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்யவேண்டும். ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரின் பரிந்துரைப்படி `மாமோகிராம்’ முறையில் மார்பகத்தை படம்பிடித்து சோதித்துப் பார்க்க வேண்டும். கட்டிகள் இருப்பின் கட்டியை ஊசி மூலம் துளைத்து அதை பரிசோதிக்க வேண்டும். மார்பக காம்பிலிருந்து கசியும் திரவத்தை ஆராய்ந்து புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்றும் கவனிக்க வேண்டும்.

மார்பக புற்றுநோய்க்கான தீர்வு என்ன?

வருமுன் காப்பது எளிது! வந்த பின்னர் மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது!

சிலருக்கு எளிமையான கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்தால் போதுமானது. சிலருக்கு மார்பகத்தை நீக்கிவிடுவார்கள். கூடவே கீழே உள்ள தசையையும், அக்குகளில் உள்ள நெறிக் கட்டிகளையும் சேர்த்து அப்புறப்படுத்துவார்கள். சிலருக்கு கதிர்வீச்சு வைத்தியம் தேவைப்படும். நோயை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மருந்து, மாத்திரைகள், ஊசிகள் தேவைப்படலாம். பல வைத்திய முறைகளில் குணப்படுத்தலாம். ஆனால் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை பார்க்க வேண்டும்.

இந்த நோய் வராமலே தடுக்க முடியுமா?

உடற்பயிற்சி தினமும் செய்தால் இந்த நோய் வரும் வாய்ப்பு குறையும். ஒரு நாளைக்கு 45 முதல் 60 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்பவர்களை பொதுவாக மார்பக புற்று நோய் தாக்குவதில்லை. கேரட், பீட்ரூட், தக்காளி, பூசணி, பரங்கிக்காய், ப்ராக்கோலி, கீரை வகைகளில் “கரடினாய்ட்ஸ்” என்ற வேதிப் பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய் வருவதை தடுக்கின்றது.

சிவப்பு திராட்சை, பெர்ரி, பீச், ஆப்பிள், வாழைப்பழம் (குறிப்பாக செவ்வாழை) போன்றவைகளை தினமும் சாப்பிடுபவர்களை மார்பக புற்றுநோய் தாக்கும்தன்மை குறைவு.

பிங்க் மாதமாகிய இந்த அக்டோபரில் ஒவ்வொரு பெண்ணும் `உடல் சுத்தம், மன சுத்தத்தோடு வாழ்வேன். உடற்பயிற்சி செய்வேன். நல்ல உணவுப் பழக்கத்தை மேற்கொள்வேன்’ என்ற உறுதிமொழியை எடுத்து, அதை கடைபிடித்தால் மார்பக புற்றுநோயின்றி வாழலாம். விளக்கம்: டாக்டர் அருணா ராமகிருஷ்ணன் (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ நிபுணர்) சென்னை – 41.

***

நோயின் பல நிலைகள்
நிலை `0′: புற்றுநோய் பால் குழாய்களில் மட்டும் இருக்கும். மார்பக திசுக்களில் பரவி இருக்காது.

நிலை 1: புற்றுநோய் 2 செ.மீ. அல்லது குறைவாக இருக்கும். மார்பகங்களில் மட்டும் இருக்கும். சிலருக்கு மார்பகங்களில் இருக்காது. அக்குகளில் உள்ள நெறிக்கட்டிகளில் இருக்கும்.

நிலை 2- அ புற்றுநோய் 2 செ.மீ., அளவில் அக்குளில் உள்ள நெறிக்கட்டிகளுடன் சேர்ந்து இருக்கும்.

நிலை 2- ஆ புற்று நோய் கட்டி 5 செ.மீ.க்கு பெரிதாகியிருக்கும். ஆனால் மற்ற இடங்களுக்கு பரவாமல் மார்பகத்தில் மட்டும் இருக்கும்.

நிலை 3- அ கட்டியின் அளவு பெரிதாக இருக்கும். எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.

நிலை 3- ஆ புற்று நோய் மார்பு எலும்பிற்கும் பரவி இருக்கும்.

நிலை 3- இ புற்று நோய் காலர் எலும்பின் கீழ் உள்ள நெறிக்கட்டிகளை தாக்கியிருக்கும்.

நிலை 4: புற்று நோய் மற்ற பாகங்களுக்கும், மற்ற உறுப்புகளுக்கும் பரவி இருக்கும்.

கூகுளில் என்ன புதிது ?

சாப்ட்வேர், ப்ளக் இன், பிரவுசர், அப்டேட், இன்னும் என்னனென்னவோ கம்ப்யூட்டர்  பயன்பாட்டிற்கான சாதனங்களை, அவ்வப்போது கூகுள் தந்து கொண்டிருக்கிறது. புதிதாக என்ன தந்து கொண்டிருக்கிறது என்று அறிய, நாம் பல பிரிவுகளுக்குச் சென்று தேட வேண்டியதில்லை. கூகுள் தன் தளத்தில் இதற்கென Google New   என்று ஒரு லிங்க் தந்துள்ளது.  இதில் கிளிக் செய்தால், http:/www.google.com/newproducts/ என்ற முகவரியில் உள்ள தளம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்படுகிறோம்.  இங்கு கூகுள் தந்துள்ள பல புதிய வசதிகளைக் காணலாம். இவை கூகுள் அண்மையில் தந்துள்ள கூகுள் இண்ஸ்டன்ட் என்னும் பெரிய விஷயமாகவும் இருக்கலாம். அல்லது பழைய வசதிகளுக்கான அப்டேட் ப்ளக் இன்களாகவும் இருக்கலாம். இதில் பல நமக்குத் தெரியாத வசதிகளாகவும் இருக்கலாம்.   வரிசையாகக் கட்டங்களில், ஒரு நாளுக்கு முன், இரண்டு நாட்களுக்கு முன்  என கூகுள் தந்த புதிய வசதிகள் கட்டம் கட்டப்பட்டு தரப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளையும் காண ஒரு கீழ்விரி மெனு ஒன்று பட்டியலாகத் தரப்பட்டுள்ளது. மேலும் நமக்கு ஆர்வம் உள்ள பிரிவுகளுக்கு எனவும் ஒரு கட்டம் தரப்பட்டுள்ளது. இதில் வர்த்தகம், கல்வி, பொழுது போக்கு எனப் பல பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகவும் நாம் தேடிப் பார்க்கலாம். இப்படியே பல பக்கங்கள் தரப்பட்டுள்ளன.
ஆனால், இந்த தளத்தின் சிறப்பு, புதிய விஷயங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான். கிட்டத்தட்ட, இது கூகுள் அக்கவுண்ட்ஸ் பக்கம் போலத்தான். இங்கு சென்றால், உங்களின் இமெயில் அக்கவுண்ட்டில் என்ன என்ன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டீர்களோ, அவை அனைத்தும் பட்டியலிடப்பட்டுக் கிடைக்கும்.
இருப்பினும் கூகுள் தந்துள்ள சில புதிய வசதிகள் சிலவற்றை இங்கு காண்போம். கூகுள் மிக புத்திசாலித்தனமாக ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் முகவரி Google Image Labeler (http://images.google.com/imagelabeler/) இங்கு சென்றால், கேம்ஸ் போல ஒரு செயல்பாடு கிடைக்கிறது. உங்களுக்கு ஒரு கூட்டாளியை கூகுள் கண்டறிந்து தரும்.அவருடன்  இமேஜ்களுக்கு பெயர் சூட்டும் விளையாட்டினை விளையாட வேண்டும். கூகுள் தேடுதளம் கண்டறியும் இமேஜ்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும்.உடன் உங்கள் கூட்டாளி அதனை ஏற்க வேண்டும். ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு பாய்ண்ட். இப்படியே தொடர்ந்து விளையாடலாம்.   கூகுள் தளத்திற்கு, அதன் இமேஜ்களுக்குப் பெயர் கிடைக்கிறது. அதே நேரத்தில், இதற்கென எந்த செலவும் அதற்கு ஏற்படப் போவதில்லை. இதில் நிறையப் பேர் உற்சாகத்துடன் கலந்துகொள்கின்றனர். அடுத்ததாக கூகுள் பேக் மேன். பேக்மேன் என்ற பிரபலமான கேம்ஸ் (Pacman )அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் ஆனதற்காக, சென்ற மே மாதம், கூகுள் தன் தளத்தில் இந்த விளையாட்டினை அளித்தது. லட்சக்கணக்கான பேர், தங்களின் வேலைக்கு இடையே இதில் விளையாடி மகிழ்ந்தனர். சிலர் தங்களின் வேலையில் கவனம் செலுத்தாமல், விளையாண்டு கொண்டே இருந்தனர். பின்னர், சில நாட்கள் கழித்து, இந்த கேம் நீக்கப்பட்டது.
ஆனால் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இதனைத் தனித் தளத்தில் தந்துள்ளது கூகுள். அதன் முகவரி http://www.google.com/pacman/. இந்த தளம் சென்றால், இந்த கேம் விளையாடி மகிழலாம். இந்த கேம் கீழாக, கூகுள் தேடுதளமும் கிடைக்கிறது.
அடுத்து கூகுள் லேப்ஸ் (GoogleLabs) என்ற தளத்தைக் கூறலாம். இங்கு கூகுள் தளத்தின் புதிய இலக்குகள், தொழில் நுட்பம், அதன் சோதனைச் சாலையிலிருந்து புதியதாக என்ன வந்துள்ளது என்று அறியலாம். இதன் தளம் http:/www.googlelabs.com. இதுவே நமக்கு கூகுள் தரும் புதிய வசதிகளுக்கான நுழைவு வாயிலாகவும் அமைகிறது.

உடல் உறுப்புகள் – சருமம்

இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை.  அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது.  இதையே சித்தர்கள்  அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.  பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் உடலோடு தொடர்பு கொண்டவை.  அத்தகைய உடலை பேணி பாதுகாத்தால் தான் நீண்ட ஆரோக்கியததைப் பெற முடியும்.

மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் மிகவும் இன்றியமையாததாகும்.  அவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடல் முழுமையாக பாதிப்படையும்.

இத்தகைய உறுப்புகளில் தோல் அதாவது சருமமும் ஒன்று.  மனித உடலின் மிகப் பெரிய உறுப்பும் தோல்தான்.  அத்தகைய தோல் உடலின் உள்ளே உள்ள தசைகள், எலும்பு, இதயம், நுரையீரல்  போன்ற அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கிறது.

உடலுக்குள்  எந்தவிதமான அன்னியப் பொருட்களும்  உட்புகாதபடி பாதுகாக்கிறது.  புறச் சூழ்நிலைக்கேற்ப உடலின் வெப்பநிலையை சீராக்குகிறது. சருமம்தான் ஒருவனுக்கு புற அழகைக் கொடுக்கிறது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த தோலை 3 உட்பிரிவாகப் பிரிக்கின்றனர்.

1. மேற்புறத்தோல்

2. நடுத்தோல்

3. உட்புறத் தோல்

மேற்புறத் தோல்

நாம் கண்களால் பார்க்கும் வெளிப்பகுதி இதுதான்.  இதன் மேல் ஏதேனும் ஒரு பொருள் பட்டால் உடனே மூளைக்கு தகவல் அனுப்பி, கைகளை அந்தப் பகுதிக்கு கொண்டுவரும் தூண்டல் சக்தியைக் கொண்டது.  வெளிப்புறம் நுண்ணிய பொருள்கள் ஏதும் நுழைய விடாமல் தடுக்கிறது.  இதன் மேல்புறத்தில் பலகோடி துளைகள் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளன.  இதன் வழியாகத்தான் வியர்வை வெளிவரும்.

வெளிப்புறத் தோலில் பல கோடி செல்கள் உள்ளன.  இவற்றின் மேற்பகுதியில் நிமிடத்திற்கு 30,000 முதல் 40,000 செல்கள் இறந்து உதிர்கின்றன.  ஆனால் அதற்கேற்றார்போல் அடிப்பகுதியிலிருந்து புதிய செல்கள் மேல்நோக்கி வருகின்றன.  இதனால் இப்பகுதி மிகுந்த பாதுகாவலனாக வேலை செய்கிறது.  உதிரும் செல்களின் அளவு வருடத்திற்கு 4 கிலோ அளவு இருக்கும்.

மேலும் இதிலுள்ள மெலானின் என்ற நிறமிகள் சருமத்திற்கு நிறத்தைக் கொடுக்கின்றன.  இந்த நிறமிகள் குறைந்தால் உடல் சிவந்து காணப்படும்.  இந்த மெலானின் நிறமிகள் சூரிய வெளிச்சத்திலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது.  தோலில் உருவாகும் புற்றுநோயைத் தடுக்கிறது.

வெளிப்புறத் தோல் பகுதிதான் பல வகையான புறச் சூழ்நிலைக் கிருமிகளால் அலர்ஜியுறுகின்றன.  இதனால் மேல்பகுதியில் வெண்புள்ளிகள், படர்தாமரை, தேமல் போன்ற வியாதிகளின் வெளிப்பாடு தெரிய வருகிறது.

இப்பகுதியை தினமும் சுத்தம் செய்வது நல்லது.  தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும்.  மென்மையான சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.  அதிக குளிர், அதிக சூடு உள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது, அதன் தாக்கம் நேரடியாக சருமத்தைத் தாக்கா வண்ணம் ஆடைகளை  பயன்படுத்துவது நல்லது.

இரசாயனக் கலப்படம் மிகுந்த பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து இயற்கைப் பொருள்களை உபயோகிப்பது மிகவும் சிறந்தது.

நடுத்தோல்

இது கண்களுக்குத் தெரியாத பகுதியாகும்.  இதில்தான் உணர்வு நரம்புகள் முடிவடைகின்றன.  இரத்த நாளங்கள் உள்ளன.  எண்ணெய் சுரப்பி, வியர்வை சுரப்பிகள் அமைந்துள்ளன.

வெளிப்புறத் தோலில் மற்ற பொருட்கள் படுவதை இங்குள்ள உணர்வு நரம்புகள் அனிச்சை செயல் மூலம் மூளைக்கு உடனே தகவலை அனுப்புகிறது.  உடனே கைகள் அங்கு செல்ல மூளை உத்தரவிடுகிறது. இந்த நிகழ்வுகள் நொடியில் நிகழ்ந்து விடுகிறது.

இப்பகுதியில்தான் இரத்த நாளங்கள் மென்மையாகவும் சிறு சிறு நாளங்களாகவும் பிண்ணிப் பிணைந்துள்ளன.  இவற்றின் முக்கியப் பணி இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதுடன் வெளியேற்ற வேண்டிய கழிவுகளையும் வியர்வைத் துளை வழியாக வெளித்தள்ளுகிறது.

வெளிப்புறத் தோலில் ஏற்படும் பாதிப்புகளை உடனே சரிசெய்யும் பணியை நடுத்தோல் பகுதி சிறப்பாக செயல்படுத்தும்.  இந்தப் பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் உள்ளன.  இதனை சிபாசியஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவர்.  இது உற்பத்தி செய்யும் எண்ணெய் சீபம் என்று அழைக்கப்படுகிறது.  இது உடல் உற்பத்தி செய்யும் இயற்கை எண்ணெய் ஆகும்.  இந்த எண்ணெயால் தோல் பகுதி சுருங்கி விரிவதற்கு ஏதுவாக அமைகிறது. இது உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறாதபடி தடுக்கிறது.  இது நன்கு உற்பத்தியானால் தோல் நீரை உள்வாங்காது.

வியர்வைச் சுரப்பிகளில் சுரக்கும் வியர்வையுடன் இந்த எண்ணெயும் சேர்ந்து வெளியேறுகிறது.  இதனுடன் அசுத்த நீர்களும் வெளியேறும்.

உட்புறத் தோல்

இது தோலின் அடிப்பகுதியாகும்.  இப்பகுதி கொழுப்பு நிறைந்த பகுதியாகும்.  இப்பகுதி, தோலில் ஏற்படும் புற மாற்றங்களுக்கு தகுந்து மாறும் தன்மை கொண்டது.  உடலின் வெப்பநிலை, குளிர் போன்ற திடீரென்று ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உடலின் தன்மையை மாற்றி பாதுகாக்கும்.

இப்பகுதியில்தான்  மயிர்க்கால்கள் உற்பத்தி ஆகின்றன.  மயிர்க்கால்கள் வெளிவருகின்றன.  உள்ளங்கை, உள்ளங்கால், உதடுப்பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் முடி வளரும்.  இப்பகுதி அடிப்பகுதியாக இருப்பதால் உணவு மாறுபாட்டால் உண்டாகும் பாதிப்புகளால் இப்பகுதியும் பாதிக்கப்படும்.

பொதுவாக வெளிப்புறத்தில் குளிர் மற்றும் அதிக சூட்டுக்குத் தகுந்தவாறு உடலின் உள்புற பகுதியை மாற்ற தோலில் உள்ள இரத்த நாளங்கள் வியர்வை சுரப்பிகள் வேகமாக செயல்பட்டு உடலில் வெப்ப சமநிலையை ஏற்படுத்தும்.

உடலின் வெப்பநிலையை 98.60ஊ ஆக இருக்க வேண்டும்.  அதாவது 370  செல்சியஸ் இருக்க வேண்டும்.  இதில் மாற்றம் உண்டானால் உணர்வு நாளங்கள் மூளைக்கு செய்தியை அனுப்பி அங்குள்ள  ஹைபோதாலமஸ்  என்ற பகுதியைத் தூண்டி அவை உடலின் வெப்ப நிலையை இரத்த நாளங்களுக்கு செய்திகளை அனுப்பி உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை கொடுக்கிறது.  இதனால் கை, கால் முகம் சில சமயங்களில் சிவந்து காணப்படும்.

இதுபோல் உடல் சூடு அதிகமானால் அவை வியர்வை சுரப்பிகளைத் தூண்டி அதன்மூலம் வியர்வையும், உஷ்ணத்தையும் வெளியேற்றுகிறது.

சருமத்தைப் பாதிக்கும் நோய்கள்

சிரங்கு, படை, கரப்பான், அக்கி, தொழுநோய் அலர்ஜி போன்றவை சருமத்தைப் பாதிக்கும் நோய்களாகும்.

சருமத்தைப் பாதுகாக்க

· தினமும் இருவேளை குளிக்க வேண்டும்.  சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.

· இறுக்கமான ஆடைகள் மற்றும் ஈரமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

· உடலில் உள்ள வியர்வை நன்கு வெளியேறும் வகையில் உடற்பயிற்சி செய்வது நல்லது.

· உச்சி வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.  அப்படி அலைய நேரிட்டால் அதிக நீர் அருந்துவது அவசியம். மென்மையான பருத்தியினால் ஆன ஆடைகளை அணிய வேண்டும்.

· வாசனை திரவியங்கள் சில சமயங்களில் ஒவ்வாமையை உண்டுபண்ணும்.  முடிந்தவரை இயற்கை வாசனைப் பொருட்களை உபயோகிப்பது நல்லது.

· வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.  இதனால் சருமம் பளபளப்பதுடன், உடலின் உள்உறுப்புகள் பலப்படும்.

· அதிக மன அழுத்தம், கோபம் முதலியவற்றை தவிர்க்கவேண்டும்.

உடலின் உள்ளே உள்ள உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது, சருமத்தின் வழியேதான் வெளிப் படும்.  இதனால் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் அவசியம்.

கடவுளை வணங்கும் முறை

கடவுளை வணங்குவதை வெறும் சம்பிரதாயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏதோ கோவிலுக்கு போனோம். சாமியைக் கும்பிட்டோம் என்று கடமையாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை உள்ளது. கோவிலுக்குச் சென்று கும்பிடுவதில் அப்படி என்ன ஒழுங்குமுறை உள்ளது என்று பார்ப்போமா…?

* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.

* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.

* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.

* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.

நீரிழிவை கட்டுப்படுத்தும் பசுவின் சிறுநீர்!

பசுவின் சிறுநீருக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக பண்டைய காலத்திலிருந்தே கூறப்படுகின்றன. மனித சிறுநீரைக் கூட சிலர் குடித்து மருத்துவ குணம் இருப்பதாக கூறுவது உண்டு என்றாலும் அது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பசுவின் சிறுநீர், ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கிராமப் புறங்களில் இன்றைக்கும் பல்வேறு சமய சடங்குகளில் பசுவின் சிறுநீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது நீரிழிவு நோயை எதிர்த்து போராடும் சில மூலக்கூறுகள் பசுவின் சிறுநீரில் இருப்பதாகவும், அவற்றைக் கொண்டு நீரிழிவு நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்றும் தெரிய வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வரும் ஆய்வில், நீரிழிவு நோயை குணப்படுத்தும் திறன் பசுவின் சிறுநீருக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.

பசுவின் சிறுநீரில் மொத்தம் 360 மூலக்கூறுகள் உள்ளதை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அவற்றில் இன்சுலின் அளவை அதிகரித்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறு எது என்பதையும் கண்டறிந்து அதன் செயல்பாடுகளை ஆய்வு நடத்தி வருகின்றனர்