Daily Archives: பிப்ரவரி 4th, 2011

மிகப் பழமையான ஒயின் தயாரிப்பிடம்!

அர்மீனியா நாட்டின் தெற்குப் பகுதியில், உலகிலேயே மிகவும் பழமையான ஒயின் தயாரிப்பிடத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இங்கு கிடைத்த பொருட்களை உயிர்வேதித் தொழில்ட்பத்தின்படி ஆய்வு செய்ததில் அந்த இடம் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரியவந்திருக்கிறது.

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்சின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த அகழாய்வை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உதவியவர்களில் ஒருவரான கிரிகோரி அரேஷியான், “உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மது தயாரிப்பு இடங்களிலேயே இதுதான் மிகவும் பழமையானதாகும்” என்று கூறியிருக்கிறார். இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட மது தயாரிப்புக் கூடங்களை விட இது ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.

இது ஒரு குகைக் கல்லறைப் பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கு, இறந்தவர்களுக்கான சடங்குகளை மேற்கொள்வதற்காக குறைந்த அளவில் ஒயின் தயாரிக்கும் வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இல்லாவிட்டால், மது தயாரிப்பு வசதி இன்னும் பெரியதாக இருந்திருக்கும் என்கின்றனர் அவர்கள்.

குறிப்பிட்ட மது தயாரிப்பு இடத்துக்கு அருகில் திராட்சைத் தோட்டங்களும் அமைந்திருந்தது `கார்பன் டேட்டிங்’ முறையில் உறுதியாகியிருக்கிறது. கி.பி. 4000 ஆண்டுவாக்கில் அவை காணப்பட்டிருக்க வேண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கால்களால் திராட்சைப் பழங்களை மிதித்து ஒயின் தயாரிக்கும் முறை இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. அதே முறைதான் குறிப்பிட்ட இப்பகுதியிலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வு நிபுணர்கள் கூறியிருப்பது ஆச்சரியமூட்டும் விஷயம்.

வருமான வரியை மிச்சம் பிடிக்கும் வழிகள்!

புத்தாண்டு பிறந்ததுமே பலருக்கும் பலவிதமான சிந்தனை ஓடியிருக்கும். சிலருக்கோ, நிதியாண்டு முடிவதற்கு முன் எப்படி வருமான வரியை மிச்சம்பிடிக்கத் திட்டமிடலாம் என்ற எண்ணம் ஆக்கிரமித்திருக்கும். வருமான வரி 8 சி மற்றும் 80 சி.சி.எப். பிரிவின் கீழ், ஓராண்டுக்கு ரூ. 1.20 லட்சம் வரை நீங்கள் வருமான வரித் தள்படியுடன் முதலீடு செய்யலாம். அது மட்டுமல்ல, சில செலவுகளுக்கும் உங்களுக்கு வருமான வரிவிலக்குக் கிடைக்கும். வரிவிலக்குப் பெற உங்களுக்கு உதவும் பட்டியல் இதோ…

ஈ.பி.எப்.

ஏன் இதில் முதலீடு செய்ய வேண்டும்?: சம்பளத்தில் இருந்து கட்டாயமாகக் கழிக்கப்படும் இது நல்ல ஒரு சேமிப்பாக உயர்ந்து வரும்.

`ரிட்டர்ன்’: 8.5$

உடனடியாகப் பணம் பெறும் வாய்ப்பு: மிகவும் குறைவு. பெரிய செலவுக்கு, ஒரே ஒருமுறை பகுதியாக ஒரு தொகையைப் பெறலாம்.

வரிவிதிப்பு: நீங்கள் ஓய்வின்போது பெறும் ஈ.பி.எப். தொகைக்கு முழு வரிவிலக்கு உண்டு.

பி.பி.எப்., தேசிய சேமிப்புப் பத்திரங்கள் (என்.எஸ்.சி), ஐந்தாண்டு `பிக்சட் டெபாசிட்கள்’

முதலீட்டுக்கான காரணம்: `ரிஸ்க்’ எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் இதன்மூலம் உத்தரவாதமான `ரிட்டர்ன்’ பெறலாம்.

`ரிட்டர்ன்’: 8- 9$

உடனடியாகப் பணம் பெறும் வாய்ப்பு: குறைவு. 6 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பணத்தைத் திரும்ப எடுக்கலாம்.

வரிவிதிப்பு: பி.பி.எப்.புக்கு வருமான வரி கிடையாது. ஆனால் என்.எஸ்.சி., `பிக்சட் டெபாசிட்’டுக்கு வரி உண்டு.    மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்

முதலீட்டுக்கான காரணம்: மூத்த குடிமக்களுக்குச் சிறந்த வரி சேமிப்பு வாய்ப்பு.

`ரிட்டர்ன்’: 9$

உடனடியாகப் பணம் பெறும் வாய்ப்பு: குறைவு. காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது.

வரிவிதிப்பு: வரி விதிக்கப்படக்கூடியது.

எண்டோமென்ட் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் காப்பீடு

முதலீட்டுக்கான காரணம்: வரியை மிச்சம் பிடிப்பதற்கோ, ஆயுள் காப்பீடு பெறுவதற்கோ சரியான வழியல்ல.

`ரிட்டர்ன்’: 5- 6$

உடனடியாகப் பணம் பெறும் வாய்ப்பு: குறைவு. காப்பீட்டுப் பத்திரத்தில் இருந்து கடன் பெறலாம்.

வரிவிதிப்பு: வரியில்லாத வருவாய்.

புதிய ஓய்வூதியத் திட்டம்

முதலீட்டுக்கான காரணம்: பங்குச் சந்தைக்கான வாய்ப்பு உண்டு.

`ரிட்டர்ன்’: 7-12$

உடனடியாகப் பணம் பெறும் வாய்ப்பு: மிகவும் குறைவு. ஓய்வுக்கு முன் பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

வரிவிதிப்பு: ஓய்வுக்குப் பின் வரியின்றி பணத்தைப் பெறலாம்.

ஓய்வூதியத் திட்டங்கள்

முதலீட்டுக்கான காரணம்: பங்கு முதலீட்டு வாய்ப்பு உண்டு. ஆனால் அதிகக் கட்டணங்களைக் கவனிக்க வேண்டும்.

`ரிட்டர்ன்’: 7-10$

உடனடியாகப் பணம் பெறும் வாய்ப்பு: குறைவு. பகுதித் தொகைகளாகத் திரும்பப் பெறலாம்.

வரிவிதிப்பு: வருமான வரியின்றிப் பெறும் வாய்ப்பு.

`லிப்கள்’

முதலீட்டுக்கான காரணம்: ஆயுள் காப்பீட்டையும் அளிக்கின்றன. ஆனால் அதிகமான கட்டணங்களைக் கவனியுங்கள்.

`ரிட்டர்ன்’: 6-12$

உடனடியாகப் பணம் பெறும் வாய்ப்பு: மிதமானது. பகுதியாகத் திரும்பப் பெறலாம்.

வரிவிதிப்பு: வரியற்ற வருவாய்.

ஈ.எல்.எஸ்.எஸ்.

முதலீட்டுக்கான காரணம்: எல்லா முதலீட்டு வாய்ப்புகளையும் விட அதிக ரிட்டர்ன் அளிக்கும் திறன் உள்ளது.

`ரிட்டர்ன்’: முழுமையாகச் சந்தை சார்ந்தது.

உடனடியாகப் பணம் பெறும் வாய்ப்பு: மிதமானது. 3 ஆண்டுகளுக்கு `லாக் இன்’ காலம்.

வரிவிதிப்பு: வரியற்ற வருவாய்.

உள்கட்டமைப்பு பாண்டுகள்

முதலீட்டுக்கான காரணம்: 80 சி.சி.எப். பிரிவின் கீழ் கூடுதல் வரித் தள்ளுபடி பெறலாம்.

`ரிட்டர்ன்’: 7-8$

உடனடியாகப் பணம் பெறும் வாய்ப்பு: குறைவு. 5 முதல் 7 ஆண்டுகளுக்கு `லாக் இன்’ காலம்.

வரிவிதிப்பு: வட்டி வருவாய்க்கு வரி உண்டு.

அந்த வழிகளில் எவ்வளவு பணம் முதலீடு செய்வது? ஓராண்டுக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் ஏற்கனவே எவ்வளவு முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பதைப் பார்த்து ஓராண்டுக்கு மீதத் தொகைக்கு முதலீடு செய்யுங்கள்.

வருமான வரி 80 சி பிரிவின் கீழ் 1 லட்சமும், 80 சி.சி.எப். பிரிவின் கீழ் 20 ஆயிரமும் வரிவிலக்குப் பெறலாம். சரி, நீங்கள் செய்யும் எந்தெந்தச் செலவுகளுக்கு வருமான வரிவிலக்குக் கிடைக்கும் என்று பார்க்கலாம்…    1. பள்ளிக் கட்டணங்கள்

வரிவிலக்குக் கிடைக்கும் தொகை: இரண்டு குழந்தைகளுக்குச் செலுத்தும் பள்ளிக் கட்டணங்களுக்கு.

அளவு: ரூ. 1 லட்சம் வரை.

தகவல்: ஒரே கல்விக் கட்டணச் செலவுக்காக பெற்றோர் இருவரும் வருமான வரித் தள்ளுபடி கோர முடியாது.

2. வீட்டுக் கடன்

வரிவிலக்குக் கிடைக்கும் தொகை: குறிப்பிட்ட நிதியாண்டில் வீட்டுக் கடன் அடிப்படைத் தொகையில் செலுத்தியிருக்கும் தவணை. அளவு: ரூ. 1 லட்சம் வரை

தகவல்: அதிக தவணைத் தொகை செலுத்துவோருக்கு நல்ல வசதி.

3. வீட்டுக் கடன் வட்டி

வரிவிலக்குக் கிடைக்கும் தொகை: வீட்டுக் கடன் வட்டிக்காகச் செலுத்திய தொகைக்கு பிரிவு 24 (பி)யின் கீழ் வரிவிலக்குக் கிடைக்கும். அளவு: ரூ. 1.5 லட்சம் வரை

4. மருத்துவக் காப்பீடு

வரிவிலக்குக் கிடைக்கும் தொகை: கணக்கைச் சமர்ப்பிப்பவர் தனக்கும், குடும்பத்தினருக்கும், பெற்றோருக்கும் செலுத்திய பிரீமியத்துக்கு பிரிவு 80 டி-யின் கீழ் வரிவிலக்குப் பெறலாம். அளவு: கணக்குச் சமர்பிப்பவருக்கும், குடும்பத்தினருக்கும் சேர்த்து ரூ. 15 ஆயிரம்.

தகவல்: பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு பிரீமியம் செலுத்தினால் கூடுதலாக ரூ. 15 ஆயிரம் வரிவிலக்குக் கிடைக்கும். அவர்கள் மூத்த குடிமக்களாக இருந்தால் வரிவிலக்குத் தொகை ரூ. 20 ஆயிரம்.

3 நிமிடங்களில் தேர்வு!-காதல்

`பார்த்த முதல் பார்வையிலேயே காதல் பிறந்துவிட்டது’ என்பதை நம்பாமல் கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் 3 நிமிடங்களில் தங்களுக்குச் சரியான ஆண்களைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

ஒரு பெண், மூன்றே நிமிடங்களில் ஓர் ஆணின் தோற்றம், உடல் கட்டுமானம், ஆடை அணியும் ரசனை, மணம், வார்த்தை உச்சரிப்பு, மொழித் திறன் ஆகியவற்றை அளவிட்டு விடுகிறாளாம்.

பெண் தனது தோழிகளுடன் குறிப்பிட்ட ஆண் எப்படி உரையாடுகிறான், அவன் வெற்றிகரமானவனா, லட்சியம் மிக்கவனா என்றும் குறுகிய நேரத்துக்குள் கணித்து விடுகிறாளாம்.    ஒரு நபர் தனக்குப் பொருத்தமானவரா, இல்லையா என்று தீர்மானிப்பதற்கு 180 நொடிகள் போதும் என்று பெண்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஓர் ஆணைப் பற்றிய தனது முதல் அபிப்பிராயத்தை பெண்கள் மாற்றிக்கொள்வதும் அரிது என்று தெரியவந்திருக்கிறது. தங்களின் கணிப்பும், தீர்ப்பும் சரியாகத்தான் இருக்கும் என்பது பெண்களின் உறுதியான எண்ணம்.

மூவாயிரம் பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட பென் கே, “ஆண்களுடன் பழகுவதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் உள்ளுணர்வை நம்புகிறார்கள். அது ஏதோ வெகு ஆழத்திலிருந்து வருவது போலத் தோன்றுகிறது. ஒரு மாயாஜாலம் போல அது பெரும்பாலும் சரியாகவும் இருக்கிறது. ஆனால் பெண்கள் மிக விரைவாக முடிவெடுப்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். ஆண் ஒருவனுடன் சேர்ந்து ஒரு பானம் பருகி முடிப்பதற்குள்ளாகவே அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமாக இருப்பானா, இல்லையா என்று பெண் முடிவு செய்துவிடுவது உண்மையிலேயே வியப்பான ஒன்றுதான்!” என்கிறார் திகைப்பாக.

அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?

சிஸ்டம் டிப்ஸ்-விரும்பும் போல்டரில் திறக்க

விரும்பும் போல்டரில் திறக்க
ஆபீஸ் புரோகிராம்களில், நீங்கள் பைல் ஒன்றைத் திறக்க தேவைப்படுகையில், File>>Open அழுத்து கிறீர்கள். அப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸின் இடது பக்கம், பைல்கள் உள்ள போல்டர்கள் சில காட்டப்படும். அதன்பின் நாம் நமக்கு வேண்டிய போல்டர் சென்று, அதனைத் திறந்து பைலைத் திறப்போம். மை டாகுமெண்ட்ஸ் இல்லாமல் வேறு ஒரு போல்டரில் பைல்களை வைத்து, அதனையே நீங்கள் எப்போதும் திறந்து பைல்களைப் பெறுகிறீர்கள் என்றால், File>>Open அழுத்துகையில் அந்த போல்டரை யே திறக்கும்படி அமைத்துக் கொள்ளலாம். இதற்கு முதலில், ஆபீஸ் புரோகிராம்களில் ஒன்றில், File>>Open அழுத்தி Open டயலாக் பாக்ஸ் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் விரும்பும் போல்டர் விண்டோவில் இருக்கும்படி தேர்ந்தெடுக்கவும். இந்த நிலையில், அந்த விண்டோவின் வலது மூலைக்குச் செல்லுங்கள். அங்கு “Tools” என்ற பிரிவில் கீழ் நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும். கிடைக்கும் மெனுவில் “Add to my Places (or Favorites) “ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி அழுத்துகையில் அந்த போல்டரே திறக்கப்படும். இதனை வேறு ஒரு போல்டருக்கு மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். அல்லது நீக்க விரும்பினால், இடது பக்க பிரிவு சென்று, அந்த போல்டர் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், remove என்பதைத் தேர்ந்தெடுத்தால் போதும்.
ஜிமெயில் வந்துள்ளதா! மணி அடிக்கும்
இணையப் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்கள் மிகக் குறைவு. இவர்களின் வசதிக்காக வந்துள்ளது ஜிமெயில் பீபர் (Gmail Peeper) என்னும் ஆட் ஆன் தொகுப்பு. உங்களுக்கு ஜிமெயில் வந்தால், பிரவுசர் திறக்கப்படாமலேயே உங்களுக்கு மெயில் வந்துள்ளது என்று சொல்லும் இந்த புரோகிராம். பாதுகாப்பான ஆர்.எஸ்.எஸ். பீட் ஒன்றைப் பயன்படுத்தி, ஜிமெயில் சர்வரிலிருந்து உங்கள் மெயில் அக்கவுண்ட்டிற்கு, புதிய மெசேஜ் வந்துள்ளதா என்று பார்த்து, உங்களுக்கு அறிவிக்கும். இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து மிக அமைதியாக இந்தப் பணியை மேற்கொள்ளும். இது செயல்பட எடுத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் திறனும் மிகவும் கொஞ்சம் தான். இதனை இலவசமாக http://gmailpeeper.co.cc என்ற தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் தொகுப்புகளில் இது இயங்குகிறது.
தானாக, அமைதியாக சிஸ்டம் ட்ரேயில் இருந்து கொண்டு இயங்குகிறது. படிக்காத மெயில்களைக் கணக்கெடுத்து எத்தனை என்று சொல்கிறது. மிக வேகமாகவும் எளிதாகவும் லாக் இன் செய்திட உதவுகிறது. மெயில் உள்ளது என்பதனை ஒலியோடு அறிவிக்கிறது. எத்தனை நிமிட இடைவெளியில் மெயில்களைச் சோதனை செய்திட வேண்டும் என்பதனை செட் செய்து கொள்ளலாம். இது ஓர் இலவச புரோகிராம். இதில் கம்ப்யூட்டரின் இயக்கத்தினை முடக்கும் கெடுதல் புரோகிராம்கள் (Malware, adware and spyware) எதுவும் ஒட்டி வருவதில்லை.
நான்கு மொழிகளில் இது கிடைக்கிறது. இந்த தளத்தில், இதனை உங்கள் மொழியில் செயல்பட வைத்திட உங்களுக்கு விருப்பம் என்றால், தள நிர்வாகியைத் தொடர்பு கொள்ளச் சொல்லி அறிவிப்பு உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ப்ராபர்ட்டீஸ் அறிந்து கொள்ள
ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது பைலின் ப்ராபர்ட்டீஸ் அறிந்து கொள்ள வேண்டுமா? அதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது. அதன் ஐகானை அணுகுங்கள். ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு அதன் மீது இரு முறை கிளிக் செய்திடுங்கள். உடனே அதன் ப்ராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். பின் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.