Daily Archives: பிப்ரவரி 5th, 2011

சீனாவின் பழமையும்… கட்டுப்பாடுகளும்..!

இன்றைக்கு உலக நாடுகளில் வல்லரசாக முன்னணியில் இருப்பது சீனா. இது பழமையும், பாரம்பரியமும் உள்ளடக்கிய நாடு. தற்போது தொழில்ட்பத்தில் முன்னேறியிருந்தாலும், பாரம்பரியத்தை இவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. கலாச்சாரத்தை இன்றைக்கும் கட்டிக்காக்கும் சீனாவில் தற்போதைய நிலை…

* சீனாவில் உள்ள பள்ளிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இங்குள்ள பாலர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எப்போதும் கைகளை பின்னால் கட்டியவாறு உட்கார வேண்டும். சேட்டை செய்யும் குழந்தைகளின் கைகளை பின்னால் கயிறு வைத்து கட்டிவிடுவார்கள்! குழந்தைகள் சேட்டை செய்யாமல் இருப்பதற்குத்தான் இந்த ஏற்பாடாம்!

* சீனாவில் பெண்கள் பலர் உதட்டுக்கு லிப்டிஸ்க் மற்றும், கண் புருவத்திற்கு மையோ, முகத்திற்கு பவுடர் மற்றும் நகத்திற்கு பாலிஷ் எதுவும் உபயோகப்படுத்த மாட்டார்கள். இது அந்நாட்டின் எழுதப்படாத கட்டுப்பாடு! ஆனாலும் சிலர் மீறுவது உண்டு.    * சீனாவில் பெண்கள் தற்போது பழைய கூந்தல் அலங்காரத்தில் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். நவ நாகரீகப் பெண்களும் பழைய கூந்தல் அலங்காரத்தில் தலைமுடியை மாற்றிக் கொள்கின்றனர்.

* இங்கு ஜனத் தொகை அதிகம். எப்படி என்றால்… இந்த நாட்டில் இருக்கும் மக்கள் ஒருவர் மீது ஒருவராக ஏறி நின்றால் தரையில் இருந்து மூன்று முறை சந்திரனை அடையலாம்!

* சீனாவிலும் பெண் குழந்தை பிறப்பதை பெரும்பாலும் விரும்புவதில்லை. சீனப் பெண்கள் ஆண் குழந்தை பிறப்பதையே விரும்புகிறார்கள். அதை கவுரவமாக கருதுகிறார்கள். பெண் குழந்தை பிறந்தால், பெற்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சியும், மனக்கவலையும் அதிகரித்து ரத்தப்போக்கு மற்றும் விஷக்காய்ச்சல் ஏற்படுகிறது. * சீனர்கள் வெற்றிலையை ஒரு புனிதமாகக் கருதுகின்றனர். இவர்கள் எப்போதும் இடக்கையால் வெற்றியை தொடுவதில்லை!

* சீனாவில் நூறு வயதைத் தாண்டியவர்கள் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்!

* அந்த காலத்தில் சைக்கிள், கைக் கடிகாரம் மற்றும் தையல் மிஷின் ஆகிய மூன்றும் யாரிடம் உள்ளதோ அவரை மட்டுமே திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார்கள் சீனப் பெண்கள். அந்த அளவுக்கு சீன மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தோடு ஒன்றிவிட்ட சைக்கிள்களுக்கு தடை போட்டிருக்கிறது சீன அரசாங்கம். * சீனாவில் இரவு பத்து மணி முதல் அதிகாலை 5 மணிவரை எந்தப் பகுதியிலும் ஹாரன் ஒலி எழுப்பக்கூடாது என்று சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது.

யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர்

இன்றைய நிலையில் பாடல் ஒன்றை ரசித்துக் கேட்க வேண்டும் என்றால், யு-ட்யூப் தளத்தில் தேடிக் கேட்பதுதான் சரியான வழியாக உள்ளது. பலர், படம் பார்ப்பதைக் காட்டிலும், பாடல்களைக் கேட்டு ரசிக்க யு-ட்யூப் தளத்தினைப் பயன்படுத்துகின்றனர். புதிய பாடல்கள் மட்டுமின்றி, பழைய, மிகப் பழைய பாடல்களைக் கூட, ரசிகர்கள் அதில் போட்டு வைத்துள்ளனர். டில்லியில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி (வயது 58) ஒருவர், தனக்கு ஜெயகாந்தன் எழுதிய “”தென்னங்கீற்று சோலையிலே” என்ற பாடல் வேண்டும் எனக் கேட்டார். அதனைத் தேடி அலைகையில் அப்படி ஒரு பாடல் இருப்பதே பலருக்கு அப்போதுதான் தெரிய வந்தது. பல இசைப் பாடல் சேர்த்து வைத்திடும் பல இடங்களில் தேடி கிடைக்காமல், யு-ட்யூப் தளத்தில் தேடியபோது, அருமையான அந்த பாடல் கிடைத்தது. பி.பி. சீனிவாஸ் மற்றும் ஜானகி அவர்களின் (1960) காந்தர்வக் குரலில், பாடலின் வரிகளுடன் கூடிய வீடியோ கிளிப் இசைத்தது.
சரி, விஷயத்திற்கு வருவோம். இப்படி பாடலைக் கேட்க, யு-ட்யூப் தளம் சென்று பைலை இயக்கிப் பாடலைக் கேட்கும் சிரமத்தைக் கூட தேவை இல்லாமல் செய்திடும் ஆட் ஆன் மியூசிக் பிளேயர் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டு பயர்பாக்ஸ் பிரவுசரில் இருந்து கொண்டே இயக்கலாம். ஆடியோ பிளேயர் போல பல பிளே லிஸ்ட்டுகளை அமைத்து, இயக்கி , திருத்தி, இணைத்து, நீக்கி பாடல்களை ரசிக்கலாம். யு-ட்யூப் பைல்களில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனு மூலம், பிளே லிஸ்ட்டில் இணைக்கும் ஆப்ஷனைப் பெறலாம். இதில் இன்னும் பல மியூசிக் கண்ட்ரோல்களும் தரப்பட்டுள்ளன. ஒரு சில கண்ட்ரோல்களை பலர் விரும்ப மாட்டார்கள் என்றாலும், சில குறிப்பிடத்தக்கவை. பிளே லிஸ்ட்டைக் கலக்கிப் பார்க்கலாம்; ஒரு பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து கேட்கும் வகையில், திருப்பி திருப்பிப் பாடவைக்கலாம். வீடியோவினைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். திரை ரெசல்யூசனை மாற்றலாம். திரை முழுவதும் அமைத்துக் கேட்கலாம். இந்த மியூசிக் பிளேயர் தனி விண்டோவில் பிரவுசருக்குச் சிக்கல் இன்றி காட்டப்படுகிறது.
இதனை இன்ஸ்டால் செய்திட விரும்புபவர்கள், தரவிறக்கம் செய்திட, செல்ல வேண்டிய இணைய தள முகவரி:

https://addons.mozilla.org/en-US/firefox/addon/youtube-music-player/

கோடை நோய்கள் தீர்க்கும் கவுமாரியம்மன்

தேனி மாவட்டம் வீரபாண்டி என்னும் ஊரில் பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.    பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோவிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்கிறார்கள்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா புகழ்பெற்றது. இந்த விழாவின்போது, இங்குள்ள முல்லை ஆற்றின் கரையில் உள்ள சேற்றை உடல் முழுக்க பூசிக் கொண்டு வந்து கவுமாரியம்மனை வழிபடும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவது சிறப்புமிக்கது. தேனியில் இருந்து வீரபாண்டி செல்ல பஸ் வசதி உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்களில் இருந்து கம்பம், குமுளி செல்லும் புறநகர் பஸ்கள் அனைத்தும் வீரபாண்டி வழியாகவே செல்கின்றன.