வேர்ட் டிப்ஸ்-தேடல் கட்டத்தில் கேரக்டர்

தேடல் கட்டத்தில் கேரக்டர்
வேர்ட் தொகுப்பில் சொற்களைத் தேடி அறிய Find and Replace என்ற கட்டம் நமக்குத் துணை புரிகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட சொல் எங்குள்ளது என்று அறிந்து, அதற்கேற்ப நாம் விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ளலாம். இதே போல கேரக்டர் மூலமும் நாம் நம் தேடல்களை மேற்கொள்ளலாம். இங்கு கேரக்டர் என்று சொல்லப்படுவது ASCII அல்லது ANSI கேரக்டராகும். இதனை எப்படி அமைத்துத் தேடுவது என்று பார்க்கலாம்.
இந்த வகை தேடலுக்கு முன் நீங்கள் என்ன வகையான கேரக்டரைத் தேட விரும்புகிறீர்களோ, அதன் ஆஸ்கி அல்லது ஆன்ஸி மதிப்பினை அறிந்து வைத்திருக்க வேண்டும். இங்கு எடுத்துக் காட்டிற்கு ‘a’ என்ற கேரக்டரைத் தேடும் வழியைப் பார்க்கலாம்.
1. Edit மெனுவில் Find கிளிக் செய்திடவும். அல்லது Ctrl+F கிளிக் செய்திடவும்.
2. இனி Find What என்ற பாக்ஸில், எந்த கேரக்டரைத் தேடி அறிய வேண்டுமோ அதன் ஆஸ்க்கி மதிப்பை அமைக்கவும். ஆஸ்க்கி கேரக்டரைக் கண்டறிய, ஒரு கேரட் (carat (^)) அடையாளத்தை முதலில் அமைத்துப் பின் கேரக்டருக்கான மூன்று இலக்கங்களைத் தரவும். எடுத்துக் காட்டாக, ‘a’ என்ற எழுத்திற்கு ^065 என அமைக்க வேண்டும்.
3. தேடலை வரையறை செய்திட மற்றவற்றை இணைக்க வேண்டுமாயின் இணைக்கலாம்.
4. அடுத்து Find Next என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது அடுத்து ‘a’ உள்ள இடத்தில் கர்சர் சென்று நிற்பதைக் காணலாம்.
ஆன்ஸி கேரக்டர் எனில் கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
இந்த கேரக்டரை அமைக்கையில் கேரட் அடையாளம் அமைத்துப் பின்னர், ஒரு சைபரைச் சேர்க்க வேண்டும். அதன் பின்னர், ஆன்ஸி மதிப்பை அமைக்க வேண்டும் . பின்னர் முன்பு கூறியது போல வரையறைகளை அமைக்க வேண்டுமாயின் அமைத்து, இயக்க வேண்டும்.
வேர்டில் ஆட்டோமேடிக் சேவ்
வேர்ட் தொகுப்பு நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களைத் தானாகவே சேவ் செய்திடும் வசதி கொண்டது. இதனை நாம் செட் செய்திட வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாகவே டாகுமெண்ட்களை சேவ் செய்திடும்படி அமைக்கலாம். தொகுப்பில் இந்த கால அவகாசம் 10 நிமிடங்களாக செட் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது. இதனை நாம் அவசியம் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பத்து நிமிட காலத்தில் நாம் நிறைய செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம், வைரஸ் தன் வேலையைக் காட்டி பைலை ஹேங் ஆகச் செய்யலாம். நம் மின்சார சப்ளை மற்றும் யு.பி.எஸ். காலை வாரலாம். எனவே பாதுகாப்பு நடவடிக்கையாக டாகுமென்ட் சேவ் செய்திடும் நேரத்தைக் குறைப்பதுடன் ஆட்டோ பேக் அப் பைல் காப்பி செய்திடும் வசதியையும் இயக்கி வைக்கலாம்.
முதலில் Tools மெனுவில் இருந்து Options கட்டளையைப் பெறவும். இதில் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Save பிரிவைப் பெறவும். அதில் “Always create backup copy” என்பதற்கு எதிரே டிக் அடித்து பேக்கப் காப்பி எடுத்து வைக்கும் இயக்கத்தை முடுக்கிவிடவும். ஒரிஜினல் டாகுமெண்ட்டின் பேக் அப் காப்பி ஒன்று .wbk என்ற துணைப் பெயருடன் பைலாக பதியப்படும். ஒரிஜினல் டாகுமெண்ட்டுக்குப் பிரச்னை ஏற்பட்டு கிடைக்காத பட்சத்தில் இதனைத் துணைப் பெயர் மாற்றி வைத்துக் கொள்ளலாம். இறுதியாக சேவ் செய்த இடத்திலிருந்து டாகுமென்ட் கிடைக்கும். அடுத்து “Save AutoRecover info every” என்ற இடத்தில் கிளிக் செய்து கட்டத்தில் எத்தனை நிமிடங்கள் என்பதனையும் தேர்ந்தெடுத்து ஓகே தந்து வெளியேறவும். எத்தனை நிமிடங்கள் தந்திருக் கிறோமோ அத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை டாகுமெண்ட் தானாகவே சேவ் செய்யப்படும்.

%d bloggers like this: