Daily Archives: பிப்ரவரி 14th, 2011

பங்குச் சந்தையில் 25 “கறுப்பு ஆடுகள்’: விசாரணையில் பரபரப்பு தகவல்

பங்குச் சந்தையில் கடந்த சில மாதங்களாக பெரும்சரிவு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் கோடிக்கணக்காண பணம், பஸ்பமாக கரைந்து போய் உள்ளது. சந்தையில் செயற்கையாக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, பல புரோக்கர்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும், பெரும் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது, “செபி’யின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

பங்குச் சந்தையில், கடந்த சில மாதங்களாக அவ்வப் போது, திடீர் சரிவு ஏற்பட்டது. இது தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி நிறுவனத்தின் பங்குகள் உட்பட, 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.இந்த வீழ்ச்சிக்கு, சில புரோக்கர்களின் சதி வேலைதான் காரணம். இவர்கள், சந்தையில் செயற்கையான முறையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, கதிகலங்கச் செய்துள்ளனர்.சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் சந்தைக்கு சாதகமான சூழ்நிலை இருந்த சமயத்திலும், அதற்கு நேர் எதிராக சந்தையை இறக்கியும், வேறு காரணிகள் பாதகமாக இருக்கும்போது, சந்தையை உயர்த்தியும் குறிப்பிட்ட சில துறை பங்குகளை மட்டும் குறிவைத்து புரோக்கர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என, பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் (செபி) , அனில் அம்பானி உள்ளிட்டோர் புகார் அளித்தனர். கடந்த சில மாதங்களில், “சென்செக்ஸ்’ பட்டியலில் உள்ள பெரிய நிறுவனங்களின் பங்குகள் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் பெரும் அளவில் சரிவடைந்தன.இதில், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட பங்குகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டன. இந்த பங்குகளின் மதிப்பில் மட்டும், மூன்று லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.இதுகுறித்து ஆரம்பக்கட்ட விசாரணையை துவக்கிய செபிக்கு, சந்தையில் ஏற்றப்பட்ட சரிவு செயற்கையானது என முடிவுக்கு வந்தது. இதில், சில புரோக்கர்களும், பங்குச் சந்தை புரோக்கர் நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.மொத்தம், 25 நிறுவனங்கள், “கறுப்பு ஆடுகள்’ என கண்டறியப்பட்டுள்ளன. பங்கு வர்த்தகம் நடந்த காலத்தில் எந்தெந்த பங்குகள், பெரும் சரிவை சந்தித்தன என்பதை பட்டியலிட்டு, அது தொடர்பான வர்த்தக விவரங்களையும், எந்த எந்த நேரத்தில் அவைகள் விற்கப்பட்டன, வாங்கப்பட்டன, அதை வாங்கியது யார் என்பது போன்ற விவரங்கள் அனைத்தையும் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

இதை வைத்து விசாரணையை தீவிரப்படுத்த செபி முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம், பங்குச் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.தற்போது பல்வேறு ஊழல்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், பங்குச் சந்தையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதால், முதலீட்டாளர்கள் மத்தியில் பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தை மீது சிறு முதலீட்டாளர்கள் வைத்திருந்த அவநம்பிக்கையும் சரியானதே என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதனால், சிறுமுதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, இந்த விசாரணையில் தீவிரம் காட்டியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு செபி தள்ளப்பட்டுள்ளது.

மன அழுத்தம் நீங்க..

வாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும். ஏலக்காயை நசுக்கி, சும்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம். நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.

ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆமாம்! ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே திறக்கும்.

வெயிலில் அதிகம் அலைவதால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் உண்டாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்கு கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால், இந்த மயக்கம், தலைசுற்றல் உடனே நீங்கும்.

விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும்.

மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், “ஏலக்காய் டீ” குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து (ஒரு கப் டீக்கு இரண்டு ஏலக்காய் போதுமானது!) டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!

வாயுத் தொல்லையால் பொது இடங்களில் அவமானத்தைச் சந்திக்கிறவர்கள், கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.

குழந்தைகளுக்கு வாந்தி பிரச்சினை இருந்தால் பயப்படாமல் ஏலக்காயை மருந்தாகத் தரலாம். இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப்பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவுங்கள். இப்படி மூன்று வேளை செய்தால், வாந்தி உடனே நிற்கும்.

இவைகளை சாப்பிட்டு இருக்கிறீர்களா?-ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ்

கண்ணைக் கவரும் கலர்கலரான பெர்ரீஸ் பழவகைகளான ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் மற்றும் ரஸ்ப்பெரீஸ் ஆகியவை இயற்கையிலேயே இனிப்புச்சுவை கொண்டவை. அதோடு பார்வைக்கு அழகோடு தேகத்துக்கு சத்தும் தரும் இப்பழங்கள் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ள ஊட்டச்சத்து வகைகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் டாக்டர் பிரீத்தி விஜய் மற்றும் டாக்டர் ரீதிகா சமாட்டார் இருவரும் பட்டியலிடுகிறார்கள்.

ஸ்ட்ராபெரீஸின் நன்மைகள்:

ஒரு கப் ஆரஞ்சுப்பழ ஜூஸ் தரக்கூடிய 100 மில்லிகிராம் வைட்டமின் சி ஊட்டச்சத்து ஸ்ட்ராபெரீஸ் பழம் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ளது.

வைட்டமின் சி சத்து மட்டுமன்றி கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்தும் நிறைந்தவை. இம்னிட்டி எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கவை.

நமது உடலில் உள்ள கை.கால் தசைநார்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ள காலஜென், எலஸ்ட்டின் போன்ற நார்ச்சத்து புரோட்டீன்கள் மற்றும் ரெட்டிகுலின் எனப்படும் எலும்புமஜ்ஜை சிவப்பணுச் சக்தியை ஊக்குவிக்கும் ஊட்டச் சத்தாகத் திகழ்கிறது.

சாப்பாட்டிற்குப்பின் உண்ணும் பழவகைகளுள் இது முக்கியமானது. துண்டு துண்டாக நறுக்கிய ஸ்ட்ராபெரீஸ் பழங்களை ஒரு கப் செரிலாக்குடன் கலந்து எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிடலாம். இதன்மூலம் நமது உடலுக்கு 53 கலோரி வெப்பச்சக்தி கிடைக்கிறது!

புளூபெரிஸ்:

இதில் உள்ள வைட்டமின் சி சத்து மற்றும் தாது உப்புக்கள் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

பித்தப்பை கோளாறுகள் வராமல் காக்கிறது.

மூளைக்குச் செல்லும் ரத்த நரம்புத் தந்துகிகளில் `ஸ்ட்ரோக்’ எனப்படும் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

கண்களில் மஞ்சள் நிற கேட்ராக்ட் நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

பழங்களை மசியல் செய்து ஒரு கப் ஐஸ்கிரீமுடன் இணைத்துச் சுவைக்க, நமது உடலுக்கு 83 கலோரி வெப்பச்சத்தி கிடைக்கிறது!

நாம் உண்ணும் உணவு நன்கு ஜீரணமாகி குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்துடன் கலக்க உதவுகிறது.

ஈரல் பாதுகாப்பிற்கும் மற்றும் இருதயம் சம்பந்தமான நோய் வராமல் பாதுகாப்பதற்கும் துணை புரிகிறது.

ரையீரல்களை வலுவாக்கி வளமுறச் செய்கிறது.

மலட்டுத்தன்மை நீக்கி விந்து விருத்திக்குத் துணைபுரிகிறது.

உண்ணும் உணவின் புரோட்டீன் சத்தை நமது வயிற்றில் சுரக்கும் பெப்ஸின் என்னும் கஸ்ட்ரிக்ஜுஸ் பெப்டோனாக மாற்றுகிறது. பெப்டோனை சிறுகுடலில் சுரக்கும் ஜுஸ் அமினோஅசிடாக மாற்றி, அமினோஅசிட் புரோட்டீனாக ரத்தத்துடன் கலக்கச் செய்கிறது. இந்த புரோட்டீன் சிந்தஸிஸ் செயல்முறைக்கு இதன் பழச்சாறு பெரிதும் துணைசெய்கிறது.

ரத்தத்தில் குளுக்கோஸ் சத்துக் குறைவு ஏற்படாதவண்ணம் பாதுகாக்கிறது.

கூல்பெரீஸ்:

கூஸ்பெரீஸ் பழத்துண்டுகளை வெங்காயத் துண்டுகளுடன் வேக வைத்து சர்க்கரை சேர்த்து கூழாக்கி 100 கிராம் மீன் மற்றும் மாமிசக்கறி உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி வெப்பச்சக்தி கிடைக்கும்.

கண்பார்வை நன்றாகத் தெரிவதற்குப் பயன்படுகிறது. உடம்பில் உள்ள செல் அணுக்கள் மற்றும் ரடிக்கல் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தி வலுப்படுத்துகிறது.

உடலில் உள்ள செல் மெம்ரேனை சிதையாமல் பாதுகாக்கிறது.

புற்றுநோய் வராமலும், ஏற்கனவே புற்றுநோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் செல்கள் மேலும் பெருகிப் பரவாமலும் தடுக்கிறது.

உடம்பில் `டிமர்’ என்கிற புற்றுநோய்க்கட்டி ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இருதயம் சம்பந்தமான கார்டியோவஸ்குலார் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

என்றும் இளமையுடன் இருக்கச்செய்யும். பிணி மூப்பு வராமல் பாதுகாக்கும். உடல்வலி மற்றும் பிணி நிவாரணியான ஆஸ்ப்ரின் கலந்த சலிசைலிக் அசிட் குணம் மிகுந்தவை.

பழத்திலுள்ள சாலிசைலிக் அசிட் நமது இருதயத்திலிருந்து ரத்தத்தினை உடம்பின் பிற பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் ரத்தத் தமனிகள் தடித்து விடாமல் பாதுகாக்கும் குணம் கொண்டது!

தேசிய பிராட்பேண்ட் திட்டம்

தொலைபேசி (மொபைல் போன் உட்பட) தொடர்பு மிக வேகமாக வளர்ந்த அளவில் பாதி அளவு கூட, நம் நாட்டில் பிராட் பேண்ட் பயன்பாடு ஏற்படவில்லை. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கும், இன்றைய உலகில் மற்ற நாடுகளுடன் போட்டி இட்டு வெற்றி பெறவும் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால், அரசு பிராட்பேண்ட் பயன்பாட்டைத் தீவிரப்படுத்த, தேசிய பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை, சென்ற ஆண்டில் அறிவித்தது. பிராட்பேண்ட் இணைப்பு ஒரு கோடியே மூன்று லட்சமாக இருக்கையில், அதனை 16 கோடி வீடுகளுக்கு விஸ்தரிப்பதை இலக்காக அறிவித்தது. இதற்கான செலவு ரூ.60,000 கோடி என ட்ராய் (Telecom Regulatory Authority of India (TRAI)கணக்கிட்டுள்ளது. 6 கோடி வயர்லெஸ் பிராட்பேண்ட், 2.2 கோடி டி.எஸ்.எல். இணைப்பு, 7.8 கோடி கேபிள் இன்டர்நெட் இணைப்புகளை வரும் 2014 ஆம் ஆண்டிற்குள் தரும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஸ்டேட் ஆப்டிகல் பைபர் ஏஜென்சீஸ் State Optical Fiber Agencies அமைக்கப்படும். இவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். இவற்றை இணைக்கும் வகையில் தேசிய ஆப்டிகல் பைபர் ஏஜென்சி National Optical Fiber Agency (NOFA)ஒன்று மத்திய அரசின் அமைப்பின் கீழ் இயங்கும்.
நகரங்களில் 10 Mbps வேகத்தில் இணைய இணைப்பு தரப்படும். இதற்கான உரிமங்களை ரிலையன்ஸ் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இவை முறையே மும்பை மற்றும் குர்கவான் நகரங்களில் 4ஜி சேவையை சோதனை முறையில் வெற்றிகரமாக மேற்கொண்டன. இது வர்த்தக ரீதியில் 2012 ஆம் ஆண்டில் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் சென்றால், பிராட்பேண்ட் பெரும் அளவில் மக்களிடையே பரவத் தொடங்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

மகான்களும் அன்னங்களும்

மனிதன், தெய்வத்தை வழிபட வேண்டும். அந்த தெய்வத்தை, நமக்கு அறிமுகம் செய்பவர் ஆசார்யன்; அதாவது, குரு.
மகான்களின் குணம் என்னவென்றால், எல்லாரும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுவது தான். தர்மம் தழைக்க வேண்டும்; அதர்மம் அழிய வேண்டும். நல்லவன் வாழ வேண்டும்; தீயவன் திருந்த வேண்டும் என்று நினைப்பர். தீயவன் திருந்தினால், அவனும் நல்லவனாகி விடலாம். சாதாரண மனிதனுக்கும், மகான்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.
மகான்களின் பெருமைகளைப் பற்றி சொல்லும் போது, இவர்களை ஹம்சபட்சி அன்னப்பறவை) களுடன் ஒப்பிட்டனர். இவர்களை பரமஹம்சர்கள் என்றனர். சன்னியாசிகளை அன்னப்பறவையின் தன்மை கொண்டவர்கள் என்று கூறினர்.
அன்னத்தின் உடல் வெண்மை; இவர்களும் வெள்ளை மனம் படைத்தவர்கள். அன்னம், இமயத்தின் உச்சியில் உலவும்; இவர்களும் உயர்ந்தோர் உள்ளத்தில் உலாவுவர். அன்னம் மோகத்தை வெறுக்கும்; இவர்களும் சிற்றின்பத்தை வெறுப்பர். இரண்டு சிறகுகளுடன் வானத்தில் அன்னம் பறக்கும்; தரையிலும் நடை பயிலும். அது போல் இவர்களும், ஞானம், கர்மம் என்ற இரண்டு சிறப்புகளால் இறைவனுடனும், நம்முடனும் உறவு கொண்டாடுவர். அன்னத்தின் உடலில் நீர் ஒட்டாது; இவர்களிடம் உலக மாயப்பாசி ஒட்டாது. அன்னம் தாமரை இலையை புசிக்கும்; இவர்களும் சாத்வீக உணவையே ஒரு வேளை உண்பர். அன்னம், “க்வ… க்வ…’ என்று கத்தும். “க்வ’ என்றால், “எங்கே?’ என்று பொருள். மகான்களும், நல்ல சீடர்களை “எங்கே, எங்கே?’ என்று தேடுவர். அன்னம் வீட்டில் தங்காது; இவர்களும் தங்கள் குடும்பத்தினருடன் தங்க மாட்டார்கள். அன்னப்பறவைகளின் அலகும், கால்களும் சிவந்திருக்கும். உபதேசம் செய்து, செய்து இவர்களின் திருவாயும், அடியார்களின் இருப்பிடம் தேடிச் சென்று, சென்று இவர்களின் திருப்பாதங்களும் சிவந்திருக்கும். அன்னம், நீரையும், பாலையும் பிரித்து, பாலையே பருகும். இவர்களும் சாஸ்திரங்களின் சாரமான விஷயங்களையே கிரகித்துக் கொள்வர். இப்படி ஒரு உயர்ந்த உவமான, உவமேயம் சொல்லப்பட்டுள்ளது.
மக்கள் ஷேமமாக இருக்க வேண்டும், உலகம் ஷேமமாக இருக்க வேண்டும் என்பது தான் இவர்களது ஆசை. அதற்காகவே தவம், தியானம் எல்லாம் செய்கின்றனர். இப்படிப்பட்ட மகான்களை நாம் தேடிப் போய் ஆத்ம ஞானம் பெற வேண்டும்.
ஒரு மகான், எங்கே இருந்தாலும், அவரைத் தேடிச் சென்று, அவரது அருள் பெற வேண்டும்; அவரிடம் உபதேசம் பெற வேண்டும். மனித ஜென்மா கடைந்தேற இதுவே சிறந்த மார்க்கம். தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை மகான்கள். தேடி வந்தவர்களை புறக்கணிப்பதுமில்லை; அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்கள் உய்யும் மார்க்கத்தைச் சொல்லி அருள் செய்வர்.
“உனக்கு ஷேமம் ஏற்படும்…’ என்று மகான்கள் சொல்லி விட்டால், அது அப்படியே நடக்கும். இவர்களது வாக்கை பகவான் காப்பாற்றுகிறார்; பொய்யாகாது. நம்பிக்கையோடு சென்று நலம் பெற வேண்டும்! ***