Daily Archives: பிப்ரவரி 21st, 2011

விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன?புரியாமல் மக்கள் குழப்பம்

இந்தியாவின் முதன்மையான தொழில் விவசாயம். நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பொருள்களுக்கான தேவையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது.உணவுப் பொருள்களின் விலை உயர்வு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. விலைவாசி உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது.

உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து வருவது, பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றம், முன்பேர வர்த்தகம் மற்றும் தேவையில்லா ஏற்றுமதி போன்றவற்றால் தான் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.உணவு தானியங்கள் உற்பத்தி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பல மடங்கு குறைவாகவே உள்ளது. இந்தியாவில், ஒரு எக்டரில் நெல் உற்பத்தி, 2.20 டன் என்ற அளவில் தான் உள்ளது. அதேசமயம், ஜப்பான் நாட்டில் ஒரு எக்டரில், 6.50 டன்னும், சீனாவில் 6.70 டன்னும், எகிப்தில் 7.50 டன்னும், இஸ்ரேலில் 5.50 டன் என்ற அளவிலும் நெல் உற்பத்தியாகிறது, இத்தனைக்கும் மேலே குறிப்பிட்டுள்ள நாடுகள் அனைத்தும், முழு அளவில் விவசாயத்தை மேற்கொள்ளும் நாடுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், அங்கு மேற்கொள்ளப்படும் நவீன தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கு அந்நாட்டு அரசு தரும் ஆலோசனைகளால் தான் அந்நாடுகளால் அதிக உற்பத்தி செய்ய முடிகிறது.தமிழகத்தைப் பொறுத்தமட்டில், 6.21 கோடி டன் அளவுக்கு உணவு தானியங்களுக்கான தேவைப்பாடு உள்ளது. ஆனால், இங்கு 5.69 கோடி டன்னுக்கு தான் உற்பத்தி உள்ளது. தமிழகத்தில் 51 லட்சம் எக்டர் நிலத்தில் 19 லட்சம் எக்டரில் தான் பயிர் செய்யப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் சார்ந்திருந்த விவசாய தொழிலை விட்டு, வெளியேறி உள்ளனர் என்பது வருந்தத்தக்க செய்தியாகும். இந்தியாவில், 2.30 லட்சம் எக்டரில் 1.05 கோடி டன் அளவுக்கு பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, போதியளவிற்கு இல்லாததால், ஆண்டுதோறும் 30 லட்சம் டன் அளவுக்கு பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. பருப்பு வகைகளை தொடர்ந்து இறக்குமதி செய்வதால், அதன் விலை நிலையில்லாமல் உள்ளது. 118 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், 2001ம் ஆண்டுக்குப் பிறகு வேளாண் உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளது. பெட்ரோலிய பொருள்கள் விலையும், உயர்ந்து கொண்டே போகிறது.

மத்திய அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக, அந்நிறுவனங்களே பெட்ரோலின் விலையை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்கியது. இதனால், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இழப்பு என்று கூறிக் கொள்ளும், இந்நிறுவனங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசுக்கு கலால், சுங்கம், பங்கு ஈவு தொகை மீதான மற்றும் சேவை வரிகள் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.இதே காலத்தில், மாநில அரசுகளுக்கு, மதிப்பு கூட்டு வரி (ஙஅகூ) மற்றும் “சர்ஜார்ஜ்’ எனப்படும் கூடுதல் வரி முதலியவற்றின் மூலம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி ரூபாயை வழங்கியுள்ளன.

இந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு, 23 ஆயிரத்து 325 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், இந்நிறுவனங்களால் மத்திய அரசுக்கு 1லட்சத்து 11 ஆயிரத்து 779 கோடி ரூபாயும், மாநில அரசுகளுக்கு 72 ஆயிரத்து 89 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. இதே காலத்தில், 1 லட்சத்து 26 ஆயிரத்து 288 கோடி ரூபாயை இந்நிறுவனங்கள், தங்கள் ஆண்டறிக்கையில் வருவாயாக காட்டியுள்ளன.

நாம் ஒவ்வொருவரும், ஒரு லிட்டர் பெட்ரோல் போடும் போது, மொத்த தொகையில் 50 சதவீத தொகையை வரியாக செலுத்துகிறோம். பெட்ரோலிய பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்தாலே, உணவு பொருள்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்தலாம். “ஆன்-லைன்’ எனப்படும் முன்பேர வர்த்தகத்தில், நம் நாட்டில் 23 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் உணவு தானியங்கள் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிறுவனங்கள், பொருள்களை கையில் வைக்காமலேயே வியாபாரத்தில் ஈடுபடுகின்றன. இவை நிர்ணயிக்கும் விலையைத் தான் வியாபாரிகள் ஏற்க வேண்டும். இந்த முன்பேர வர்த்தக சந்தைகள் வாயிலாக, மத்திய அரசுக்கு சேவை வரி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

சென்ற டிசம்பர் வரை இச்சந்தைகளில், 95 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், இதில் தனியாவைச் சேர்த்ததன் விளைவாக, 40 ரூபாய்க்கு விற்ற தனியா தற்போது 50 ரூபாயாக அதிகரித்துள்ளது. முன்பேர வர்த்தகத்தில் சர்க்கரை இருந்த போது, இதன் விலை கடுமையாக உயர்ந்தது. பிறகு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் விலை சரிவடைந்தது. இந்நிலையில், மீண்டும் சர்க்கரையை இதில் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில், டில்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், இந்த ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து உணவு தானியங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாக, தேவையில்லாத ஏற்றுமதிக்கு அரசு விதித்த தடையை, குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது நீட்டிக்க வேண்டும். நம் நாட்டில், விளையும் உணவு தானியங்கள், இங்குள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தான் ஏற்றுமதி செய்ய வேண்டும். சமீப காலமாக, அரசு உணவு தானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், உணவு பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.இதற்கு சிறந்த உதாரணமாக, வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம். உள்நாட்டில் உற்பத்தி குறைந்து போன நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால், இதன் விலை கடுமையாக உயர்ந்தது. வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இதன் உற்பத்தி அதிகரித்ததால், இதன் விலை மிகவும் சரிவடைந்தது. இதையடுத்து, இதன் மீதான ஏற்றுமதி தடை மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதியை பொறுத்தமட்டில் அரசு தெளிவான கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.இதுபோன்ற காரணங்களால் தான், உணவு பொருள்களின் விலை உள்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதற்கான தீர்வு குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலர் கே.மோகன் ராஜ் கூறியதாவது:உணவு தானியங்களை ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். “ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்குவதைப் போல, விலைவாசி உயர்வை எதிர்த்தும் போராட வேண்டும். அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த குழுக்களை அமைக்கும் போது, அதில் பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் ஆகியோரையும் இடம்பெறச் செய்ய வேண்டும். பெட்ரோலிய நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் அனுமதியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், உள்நாட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகே, உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் பொருள்களின் விலையையும், எடையையும் மூன்று மாதங்களுக்கு உயர்த்தாமல் இருக்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்தாலே, விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரலாம்.இவ்வாறு மோகன்ராஜ் தெரிவித்தார்.

உடல் அழகுக்கு தேவையான ரகசியம்

சிவப்பு அழகு வேண்டுமா? என்று கேட்டு, எத்தனையோ வகையான கிரீம்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன! உடற்பயிற்சியே செய்யாமல், நொறுக்குத் தீனிகளையும் கைவிடாமல், உடல் எடை குறையும் என்றுகூறி விதவிதமான மாத்திரைகள் தைலங்கள் விற்பனை யாகின்றன! எப்போதும் ஒலி ஒளிபரப்பாகும் அழகு குறிப்புகளைப் பார்த்து, அதை அரைகுறையாக கடைபிடித்து உலக அழகி ஐஸ்வர்யாராய் போல் ஆக வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.

அப்படி ஆசைப்படுகிறவர்களுக்கு தம் உடலில் இருக்கும் ஒரு பிரதான உறுப்பே அழகு, ஆரோக்கியத்தின் ஊற்று என்பது தெரியுமா?! மனித உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. மனித உடலில் இருக்கும் பஞ்ச பூதங்கள் பிரபஞ்ச சக்தியிலிருந்து தனக்கு தேவையான பஞ்ச பூத சக்தியை வாங்கி உடலை புத்துணர்ச்சி யுடன் வைத்துக் கொள்கின்றன. எப்படி யென்றால்ஞ் நம் தோலுக்கடியில் மிக துல்லியமான பாதை ஒன்று உள்ளது. இதை உயிர்ச்சக்தி பாதை என்று கூறுவார்கள். இதன் வழியேதான் பஞ்ச பூத சக்தி ஊடுருவி சென்று உறுப்புகளைச் சேரும். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தில் மட்டுமே இந்த உயிர் சக்தி பிரதான மாய் செல்லும்.

உதாரணமாக நுரையீரலுக்கு அதிகாலை 3  to5 மணி, மண்ணீரலுக்கு காலை 9.11 மணி. இப்படி ஒவ்வொரு உறுப்புக் கும் குறிப்பிட்ட நேரம் வகைசெய்யப்பட்டிருக் கிறது. நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கான செரிமான செயலாக்கம் வயிற்றில் மட்டுமே நடைபெறுவதில்லை. செரிமான செயலாக்கம் ஆரம்பிக்கும் இடம் வாய். வாயில் உள்ள உமிழ்நீர்தான் செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. உமிழ்நீரில் இருக்கும் நுண்கிருமிகள் உணவில் கலந்து செரிமான வேலையை துவங்கும். மனிதனின் உடல் பஞ்சபூத கலவை என்பதுபோல நாக்கிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன.

இதனால் மிக நிதானமாக நாக்கின் எல்லா பகுதியிலும் உணவுபடும்படி முழுக்கவனம் செலுத்தி மென்று உண்ணுதல் வேண்டும். ஒவ்வொரு பஞ்சபூதமும் ஒரு சுவையோடு தொடர்பு உடையது. நெருப்பு கசப்பு சுவையுடனும், மண் இனிப்பு சுவையுடனும், காற்று – துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடனும், நீர் உப்பு சுவையுடனும், ஆகாயம் – புளிப்பு சுவையுடனும் தொடர்புடையது. இவைகளை நாம் புரிந்து கொண்டு சாப்பிட பழகிக் கொண்டால் குறைவாக சாப்பிட்டாலே நம் உடலுக்கு போதுமான சக்தி கிடைத்துவிடும். உதாரணமாக 4 இட்லி சாப்பிடுபவர் களுக்கு 2 இட்லியே போதுமானதாக இருக்கும்.

அழகையும், ஆரோக்கியத்தையும் விரும்புகிறவர்கள் காலை உணவை 7 7.30க்குள் மேலே சொன்ன முறைப்படி நிதானமாக, மென்று சாப்பிட வேண்டும். சமைக்காத உணவு கள், பழங்கள், காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் ஊறவைத்த பருப்பு வகைகள் போன்றவைகளை காலை உணவில் சேர்க்கவேண்டும். பருப்பு வகைகளை நன்றாக அலசி முதல் நாள் இரவே மண் சட்டியில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் 7 மணிக்கு அந்த தண்ணீரை பருகிய பின்பு ஒவ்வொன்றாக கடித்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்? வயிறு பிரபஞ்சத்திலிருந்து சக்தியை காலை 7 முதல் 9 மணிவரை பெறுகிறது. அதனால் 7 மணிக்கு ஆரம்பித்து நிதானமாக 7.30க்குள் காலை உணவை மென்று முடிக்க வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் பருக வேண்டும். பின்பு 7.45லிருந்து காலை 11 மணி வரை தண்ணீர் கூட பருகக்கூடாது. ஏனென்றால் மண்ணீரல் சக்தியை உள்வாங்கும் நேரம் காலை 9.11 வரை. இது மிக அளப்பரிய சக்தியாகும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி அதற்கு முழுமையாக கிடைக்க, அந்த நேரத்தில் எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும். மண்ணீரல் பஞ்சபூதத்தில் மண்ணை சார்ந்தது. மண்ணீரல் சக்தியை பெற்று உடலில் சேமித்தால் அது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். அப்படி நச்சுக்கள் வெளியேறும்போது நம் தோல் அதற்குரிய மினுமினுப்பை பெறும்.

அழகு தானாக வரும். இதை பின்பற்றினால் 6 மாதத்திற்குள் உடலில் நல்ல மாற்றங்கள் நிகழும். மண்ணீரலின் சக்தி உடலுக்குள் பல விதங்களில் பயன்படும். ஒரு சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மண்ணீரல் உடலுக்கு தேவையான சக்தியை மாற்றி கொடுக்கும். இதைதான் சித்தர்களும், முனிவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் முதலில் மண்ணீரலின் சக்தியை சேமித்து பின் வருடக்கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்போது மண்ணீரல்தான் தேவையான சக்தியை உடலுக்கு அளித்துக்கொண்டே இருக்கும். அது மட்டுமல்லாமல் நம் உடலில் பிற உறுப்புகள் தொய்வடையும்போது மண்ணீரல் தன் சக்தியை அதற்கு தேவையான சக்தியாக மாற்றிக் கொடுக்கும்.

உதாரணமாக சிறுநீரகம் பஞ்ச பூதங்களில் நீரை சார்ந்தது. சிறு நீரக செயல்பாடு குறையும்போது மண்ணீரல் அதற்கு தேவையான நீர் சக்தியாக மாறி உதவும். மதிய உணவை 12 மணிக்குள்ளும், இரவு உணவை 78 மணிக்கும் சாப்பிட வேண்டும். மென்று சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து தண்ணீர் பருக வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும். சாதாரணமாக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது நல்லது. இவ்வாறு செய் தால் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணலாம்.

குளூக்கோமா ஏற்படுவதற்கு மரபணுக்களும் காரணம் !

குளூகோமா என்பது, கண்களில் அழுத்தம் காரணமாக, “ஆப்டிக் நரம்பு’ பாதிக்கப்படுவதாகும். இதில், நரம்பு விரிவடைவதுடன், கண் பார்வை திறனும் குறையும். குளூகோமாவில் கண்களின் அழுத்தம் அதிகமாக இருக்கும். சாதாரணமாக இருக்கும் கண்களில் அழுத்தம் 11 முதல் 21 ட்ட்ஏஞ் வரை இருக்கும். ஆனால், குளூகோமா வந்துவிட்டால், கண் அழுத்தம் அதிகம் ஏறும்.
கண் பார்வை குறைவதால் கண் வலி, ஒரு பகுதியில் பார்வை மங்குதல் ஆகிய பிரச்னைகள் வரும். கண் வலியுடன் சிவப்பாக மாறுதலும் வரலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகிய உடல் பிரச்னைகள் உடையோருக்கு, குளூகோமா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரும்பாலும் 50 வயது மேல் உள்ளவர்களுக்கு வரும்.
கண்களில் ஏற்படும் பிரச்னைக்கு, “ஸ்டிராய்டு’ மருந்து அதிகமாக பயன்படுத்தினாலும், குளூகோமா வரலாம். பெற்றோருக்கோ அல்லது சகோதரர்களுக்கோ குளூகோமா இருந்தால், பரம்பரை நோயாகவும் இது வரும். முதலில் கண் பார்வை குறைபாடு இருக்காமல், கண்களில் அழுத்தம் மட்டும் அதிகம் இருக்கலாம். மேலும், நரம்பின் சில பகுதிகள் செயல்பாட்டை இழக்கும். இதன் காரணமாக, பார்வை மெதுவாக குறைய துவங்கும்.
நரம்பின் எல்லா பகுதியும் செயல்பாட்டை இழக்கும் நிலையில், கண் பார்வை முழுவதுமாக குறையும். எனவே, இதை முதலிலேயே கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இப்பிரச்னைகள் யாருக்கு இருந்தாலும், அவர்கள் கண் பார்வை, கண் அழுத்தம், நரம்பு பகுதி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், கண்களின், “ஆப்டிக்’ நரம்பின் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து குளூகோமா இருக்கிறதா என்று தீர்மானிப்பர்.
கண் அழுத்தம் இருந்தால், சொட்டு மருந்துகள் மூலம் முதல் நிலையிலேயே சரி செய்யலாம். சொட்டு மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்படும். குளூகோமாவின் ஒரு வகையில், லேசர் சிகிச்சையும் தரப்படும்.
குளூகோமா நோயை முதலிலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற வேண்டும். முற்றிய நிலையில் சிகிச்சை செய்தாலும் பலன் முழுவதுமாக கிடைப்பதில்லை. இதற்கு, “ஆப்டிக்’ நரம்பின் தன்மையே காரணம். ஒருமுறை, “ஆப்டிக்’ நரம்பின் பகுதி செயல் இழந்து விட்டால், அது மீண்டும் சரி செய்யப்பட முடிவதில்லை. எனவே, முதல் நிலை குளூகோமா சிகிச்சை பெரிதும் உதவும். குளூகோமா அறுவை சிகிச்சை, 15 முதல் 20 நிமிடங்களில் முடிந்து விடும். மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. இருப்பினும், சொட்டு மருந்துகளும், மாத்திரையும் சரியாக பின்பற்ற வேண்டும். நோயின் தன்மையை பொறுத்து, ஒரு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை குளூகோமா நிபுணர்களிடம் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைக்கும் குளூகோமா நோய் வரலாம். இதை, “கன்ஜெனிடல் குளூகோமா’ என்பர். கண்களின் கருவிழி பெரிதாக இருக்கும். கண்களும் பெரிதாக இருக்கும். கருவிழியில் வெள்ளை நிறம் படிதல், நீர் வடிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படும்.
இவ்வாறு இருந்தால், குழந்தையை அருகில் உள்ள கண் மருத்துவமனையில் உடனே காண்பிக்க வேண்டும். சிறுவயதில் குளூகோமா பிரச்னை வந்தால், அது பார்வையை அதிவேகத்தில் பாதிக்கும். சரியான கண் அழுத்தம் உள்ளவர்களுக்கும், குளூகோமா வரலாம். இதை, “நார்மல் டென்ஷன் குளூகோமா’ என்பர். இதற்கும் சிகிச்சைப் பெற வேண்டும்.
இப்போதுள்ள நவீன ஓ.சி.டி., – ஸ்வாப், பில்டி டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் கண்களின், “ஆப்டிக் நரம்பு’ எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனைகள் ஓ.பி.டி., முறையில் செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் சிகிச்சை வேலை செய்கிறதா, இல்லையா என்பதை கண்டறியவும் இதை பயன்படுத்தலாம். குளூகோமா நோய் முதலிலேயே அறியவும், இந்த வகை பரிசோதனைகள் பயன்படும். குளூகோமா நோய் முழுமையாக வருமுன், பரிசோதனை செய்து சிகிச்சையை துவங்க, இந்த வகை பரிசோதனை முறைகள் உறுதுணையாக இருக்கின்றன.
– டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை
தொடர்புக்கு: 044-28112811