Daily Archives: பிப்ரவரி 22nd, 2011

அறிவை குறைக்கும் நொறுக்குத் தீனி: ஆய்வில் தகவல்

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), “ஜங்க் புட்’ குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.”ஜங்க் புட்’ எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா., ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்.கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது. நான்கு வயதுக்குக் குறைந்த நாலாயிரம் குழந்தைகளிடம் அவர்களின் நுண்ணறிவுத் திறன் ஆய்வு செய்யப்பட்டது.அவர்கள் உண்ணும் நொறுக்குத் தீனிகளுக்கு ஏற்ப, நுண்ணறிவுத் திறன் குறைவது கண்டறியப்பட்டது. சராசரியாக, 1.67 சதவீதம் இயல்பு நிலையில் இருந்து குறைவது தெரியவந்தது. இந்த இழப்பை சரி செய்ய முடியாது என்றும் ஆய்வு கூறுகிறது.
இதுகுறித்து நார்த்ஸ்டோன் கூறியதாவது:பிரிட்டனில் குழந்தைகள், மோசமான உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகளவில் உள்ள உணவுகளை மட்டுமே பெருமளவில் உண்பதால், எட்டரை வயதில் அவர்களின் நுண்ணறிவுத் திறனில் பெரும் குறைபாடு நிகழ்கிறது.ஆனால், ஆரோக்கியமான உணவு முறை, நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கிறது. இந்த வயதில், நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளைக் கொடுத்தால் அவர்களின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.இவ்வாறு நார்த்ஸ்டோன் தெரிவித்தார்.

பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல… ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.

சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும்.

பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ப்யூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.

பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள் இருக்கின்றன?

சாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என்று எக்கச்சக்க நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.

ஞாபகம் இருக்கட்டும், பாடி ஸ்பிரே வேறு… பெர்ஃப்யூம் வேறு!

பாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது. அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான்.

வேறு எப்படித்தான் இந்த பெர்ஃப்யூமைப் பயன்படுத்துவது?

சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.

கவனத்தில் வையுங்கள்:

சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.

சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.

எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.

பெர்ஃப்யூமை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும்?

நம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களான அக்குள், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் கழுத்து முடியிலோ செயினிலோ, படாதவாறுதான் அடித்துக் கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு மிகவும் பிடித்த பாடி ஸ்பிரே எது தெரியுமா?

Axe

பெண்களின் ஃபேவரைட்?

ஜோவன் வொய்ட் மஸ்க்

மேக்ஸி  ப்ளூ லேடி

மருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம். தலைவலி : நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு! அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது. மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு: ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது. மலச்சிக்கல் : மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் : உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது. காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. – டாக்டர் ஜெ.ஜெயலட்சுமி